• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay.....Episode 16.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 16.

இருவருமே பெண்கள். அதிலும் பயந்த சுபாவம் உள்ளவர்கள். அதனால் தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைத்து தான் சொகுசாக வாழலாம் என ஆனந்தன் போட்ட கணக்கு சரசு டீச்சரின் விவாகரத்து என்ற வார்த்தையில் தூள்தூளானது. ஆனாலும் தன் பிடியை விட அவனுக்கு மனம் இல்லை. மிரட்டுவது என முடிவெடுத்தான்.

"ஓ! ஆத்தாளும் மகளும் என்னை வெட்டி விடுறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா? என்னைத் தள்ளி வெச்சுட்டு உன் மகளை அவனுக்கு நீயே அனுப்பி வெச்சு காசு சம்பாதிக்கலாம்னு பார்க்கிறியா? " என்றான்.

அதற்கு மேல் தாங்க முடியாமல் பக்கத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்தாள் சரசு.

"நாயே! உன்னை மனுசன்னு மதிச்சுப் பேசுனதால தானே நீ இப்படி சொல்ற? மரியாதையா போ! இல்லை போலீசைக் கூப்பிடுவேன். " என்றாள். அவள் கையில் இருந்த ஆயுதம், நின்றிருந்த கோலம் எல்லாம் பயமுறுத்தியதோ என்னவோ எழுந்தான் ஆனந்தன்.

"யேய்! இதைப் பருங்கடி! எங்கிட்ட இருந்து அத்தனை சீக்கிரம் தப்பிக்க முடியாது. விவாகரத்து நோட்டீஸ் வந்ததுன்னா உன் பொண்ணு விபசாரம் செஞ்சா அதை நான் தடுத்தேன் அதான் விவாகரத்துக் கேக்குறாங்கன்னு சொல்லுவேன். அப்பவும் மானம் உங்களுக்குத்தான் போகும். "

அவனது அந்த வார்த்தைகள் பயத்தைக் கிளப்ப சற்றே யோசித்தாள் சரசு. அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அனிதாவை நெருங்கினான் அவன்.

"அனிக்கண்ணு! உன்னைத் தொட்டு எத்தனை நாளாச்சு? இப்படி சிலை மாதிரி இருக்கியே?" என்றான் விஷமாக. பயத்தில் இறுகிய உடலும் குமட்டலுமாக நின்றிருந்த மகளை ஏறிட்டாள் அன்னை. தாய்க்கோழியின் வீரம் வர கையிலிருந்த துடைப்பத்தால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

"பச்சை உடம்போட வந்திருக்கா உனக்கு இப்பவுமா அவ வேணுமா? ஈவு இரக்கம் இல்லாம நீ அவளை என்ன பாடு படுத்தியிருப்ப? வாங்கிக்கோ இன்னும் நாலு வாங்கிடா நாயே! என்று அடிக்க அடிக்க அவன் வாசலை நோக்கி ஓடினான் அந்தக் கயவன்.

"ஏ கிழவி! உங்களை நான் சும்மா விட்டுட்டேன்னு நினைக்காதே! அடிப்பட்ட பாம்பு. வஞ்சம் வெக்காம விடாது. உன் மகளைக் கொல்லாமல் கொல்ல எனக்குத்தெரியும்டி" என்று கத்தி விட்டு ஓடினான்.

அது வரையில் இருந்த தைரியம் ஆற்றல் எல்லாம் கை விட்டுப் போக அப்படியே அமர்ந்தாள் சரசு டீச்சர்.

"ஐயையோ! உன் தலையில நானே மண்ணை வாரிப்போட்டுட்டேனே கண்ணு! இப்ப நான் என்ன பண்ணுவேன்? உன்னை எப்படிக் காப்பாத்தப் போறேன்? " என்று மெல்ல அரற்றினாள் தாய்.

"கவலைப்படாதேம்மா! அப்பா தெய்வமா இருந்து காப்பாத்துவாரு. அழாதேம்மா" என்று கலங்கிய குரலில் தேற்றினாள் மகள் .

"நாம என்னடி செய்ய அனி? இத்தனை நாள் நாம அக்கம் பக்கத்துக் காதுல விழாம குடும்பம் நடத்திட்டோம். இப்ப நம்ம வீட்டுக் கதையை நாலு பேரு நாலு விதமாப் பேசும்படியா ஆயிட்டுதே? அந்த நாயி வாசல்ல வெச்சுக் கத்திட்டுப் போறானே? நம்ம மானம் போச்சே" என்றாள்.

"அவன் உன்னை நிம்மதியா வாழ விட மாட்டான் கண்ணு! ஒத்தைப் பொம்பளை நானு. என்னால அவனை எத்தனை தூரம் எதிர்க்க முடியும்? பயம்மா இருக்கும்மா. பேசாம ஏதாவது மருந்தைக் குடிச்சுட்டு நிம்மதியாப் போயிருவோமா?" என்றாள் அன்னை.

திடுக்கிட்டாள் மகள்.

"அம்மா! உன்னை நான் இந்த நிலைக்கா கொண்டு வந்து விட்டுட்டேன்? தப்பு என் மேலயும் இருக்கு. நான் இன்னும் கொஞ்சம் தைரியமா இருந்திருக்கணும். பயந்து பயந்து தான் இந்த நிலை. இனிமே நான் பயப்பட மாட்டேன். நாம ரெண்டு பேர் இருகோம். அவன் ஒருத்தன் தான். பார்த்துருவோம் ஒரு கை. நீ கண்ணைத் தொடை" என்றாள் அனிதா உறுதியான குரலில்.

சரசுவுக்குமே அனிதாவின் வார்த்தைகள் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். கண்களைத் துடைத்தவள் நிமிர்ந்தாள்.

"சே! என்ன வார்த்தை பேசிட்டேன். என்னை மன்னிச்சுக்கடி கண்ணு! இனிமே அப்படிப் பேச மாட்டேன்" என்றாள். முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டனர் இரு பெண்களும். ஒருவருக்கொருவர் தேற்றிக் கொண்டனர். என்ன ஆனாலும் சரி இனி உறுதியைக் கைவிடக் கூடாது எனத் தீர்மானித்துக்கொண்டனர். ஆனந்தன் ஒரு தெரு நாய். அவனைக் கண்டு பயந்தால் நம்மை விரட்டும். எதிர்த்து நின்றால் அது பயந்து ஓடும் என முடிவு செய்து கொண்டனர். ஆனாலும் மனதை அரித்த கவலையை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள வில்லை. மதிய உணவு உண்பார் இல்லாமல் கிடந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top