• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay.....Episode 17.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 17.

அன்னையும் மகளும் உறுதியாக நின்று வாழத்தான் நினைத்தனர். ஆனால் அது அத்தனை எளிதாக இல்லை. கருச்சிதைவு ஏற்பட்டதால் உண்டான பலவீனம் ஒரு புறம், தாய் கதிரவனை தவறாக நினைக்கிறாளே என்ற எண்ணம் ஒரு புறம், ஆனந்தன் இனி என்ன செய்வானோ? என்ற பயம் ஒரு புறம் என அலைக்கழிக்கப்பட்டாள் அனிதா. அன்றைக்கு மருத்துவமனைக்கு வந்து சென்ற பிறகு கதிரவன் வீட்டுக்கு வரவே இல்லை. ஒரே ஒரு நாள் தோலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததோடு சரி. பிறகு பேசவும் முயலவில்லை. இது ஒரு புறம் அனிதாவுக்கு நிம்மதியாக இருந்தாலும் ஒரு புறம் சற்றே வருத்தமாகவும் இருந்தது.

ஆனால் எதை நினைத்தும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க நேரம் இல்லாமல் ஓட வேண்டியது இருந்தது. முதலில் நல்ல வக்கீலாகப் பார்த்தார்கள். சரசுவின் தூரத்து சகோதரி முறை உமாதேவி, அவர்கள் நெல்லை கோர்ட்டில் வாதாடுகிறார்கள் பிரபலமானவர்கள் எனக் கேள்விப்பட்டிருந்தார்கள். அவளைக் கணடு பேச இருவரும் நெல்லை சென்றார்கள். உமாதேவி அழகாகப் பேசினர்கள். விவாகரத்து என்பது கடைசி உபாயமாக மட்டுமே இருக்க வேண்டும் தொட்டதற்கெல்லாம் ரத்து என்று நிற்கக் கூடாது என அவள் பேசியது அன்னைக்கும் மகளுக்கும் ஆறுதல் அளித்தது. காரணம் நல்ல அறிவுரை சொல்வார்கள் என்ற நம்பிக்கை இருவருக்குமே வந்தது.

தனது மண வாழ்க்கை முழுவதையும் சொன்னாள் அனிதா. அவளை மற்றொருவனோடு கோவா போகச் சொன்னான் என்று சொன்னதுமே கொந்தளித்து எழுந்து விட்டார்கள். "என்ன என்ன? உண்மையா? என்று கேட்டபோது அழுகையே வந்து விட்டது அனிதாவுக்கு தன் நிலையை நினைத்து.

"தயவு செஞ்சு உணர்ச்சி வசப்படாம நடந்ததைச் சொல்லு" என்று வக்கீல் காஎட்கவும், நிதானப்படுத்திக்கொண்டு அத்தனையும் சொன்னாள் அனிதா. எழுந்து நின்று குறுக்கும் நெடுக்கும் நடந்தார்கள் உமா தேவி.

"அனிதா! நீ ரொம்ப துனப்பட்டுட்ட! அந்த ஆள், அதான் ஆனந்தன் மனுஷனே இல்ல. ஆனாலும் நாம சட்ட பூர்வமாத்தான் அவன் மேல நடவடிக்கை எடுக்கணும். முதல்ல அவனுக்கு நோட்டீஸ் ஒண்ணு அனுப்புவோம்." என்றார்கள்.

"அதுல என்ன எழுதுவீங்க?"

"இந்த மாதிரி என்னுடைய கட்சிக்காரர் அனிதாவுக்கு உங்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. அதற்குக் காரணம் அவளை நீங்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாக்கியது தான். ஆகையால் இரு தரப்பும் சுய விருப்பப்படி விவாகரத்துச் செய்து கொள்ள சம்மதித்து கையெழுத்திட்டு அனுப்பவும் அப்படீன்னு இருக்கும்"

"ஒருவேளை ஆனந்தன் கையெழுத்துப் போடலைன்னா?"

"அப்படி இருக்க முடியாதும்மா. சட்ட பூர்வமா ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினா அதுல கையெழுத்துப் போடலைன்னா கோர்ட்டை அவமரியாதை செஞ்சா மாதிரி ஆயிரும். அவனுக்கு தண்டனை கொடுப்பாங்க. அவன் பதில் அனுப்பல்லேன்னா அவனுக்குத்தான் பிரச்சனை நமக்கு இல்ல" என்றார்கள்.

உம தேவியின் உதவியாளர் டைப் படித்துக்கொண்டு வந்த காகிதத்தில் அவர் சொன்னது போலவே எழுதப்பட்டிருக்க கனத்த மனத்துடன் கையெழுத்திட்டாள் அனிதா. சரசுவோ அழுதே விட்டாள்.

"ஏம்மா! எதுவும் சமாதானம் பேசலாமா?" என்றாள் சரசு மெல்ல.

"அறிவு இருக்கா உங்களுக்கு? இப்படி எத்தனை நாள் இளிச்ச வாயா இருக்கப் போறீங்க? உங்க மக கருவைக் கலைச்சிருக்கான், அவளை விபசாரம் செய்ய கட்டாயப் படுத்தியிருக்கான். அவன் கூட இவ எப்படி வாழ முடியும்?" என்றாள் பெண் புலியின் சீற்றத்தோடு. ஒரு அடிப்பட்ட பார்வையோடு மௌனமானாள் சரசு. பதில் வந்தால் தொலைபேசியில் தகவல் சொல்வதாக உமா தேவி சொல்லவே இருவரும் மீண்டும் ராஜபாளையம் வந்தனர். பழைய முதலாளியைப் போய்ப் பார்த்தாள் அனிதா. அவர் இல்லை பதிலாக வேறு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரித்த போது அந்தக் கம்பெனியை கதிரவன் வாங்கி விட்டதாகவும் குமரேசனை மேனேஜராகப் போட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. எப்படியும் இந்த இடத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு வந்தவளுக்கு மனம் நொந்தே விட்டது.

அம்மாவிடம் இதைச் சொன்ன போது "போனாப்போகுது போ! நம்ம ஊர்லயே வேற வேலை கிடைக்காமப் போகாது. முதல்லா நீ நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று விட்டாள். ஆனால் எந்த வருமானமும் இல்லாமல் அன்னைக்கு பாரமாக இருப்பது அனிதாவைக் குத்தியது. அதனால் தெரிந்த இடங்களில் வேலைக்குச் சொல்லி வைத்தாள். இவர்கள் திருநெல்வேலி சென்று வந்த மூன்றாம் நாள் சரசு பள்ளிக்குப் போயிருக்க வீட்டில் தனியாக இருந்தாள் அனிதா. அன்று காலையிலிருந்தே அவளுக்கு நெஞ்சு ஏனோ திக் திக என அடித்துக்கொண்டது. சரசு எப்போதும் மதிய உணவைக் கையில் எடுத்துப் போய் விடுவாள். ஆனால் மகள் வந்ததிலிருந்து மதியம் வீட்டுக்கு வந்து உண்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஏதேதோ பேசிக்கொண்டே தாயும் மகளும் உண்பது அவர்களுக்கு மனதுக்கு இதமாக இருந்தது என்பதோடு இருவரும் நன்றாக உண்டார்களா? என்பதை ஒருவரை ஒருவர் கண்காணித்தனர்.

அன்றும் அப்படித்தான் மதிய உணவை தயார் செய்து விட்டு டேபிளில் தட்டு நீர் என எல்லாம் எடுத்து வைத்து விட்டு அன்னையின் வரவுக்காகக் காத்திருந்தாள் அனிதா. கதவு தட்டும் சத்தம் கேட்க ஆவலோடு ஓடினாள். திறந்தவள் அதிர்ந்தாள். தலை கலைந்து விழிகள் சிவந்து நின்றிருந்தது ஆனந்தன். பகலிலேயே குடித்திருக்கிறான் என்பது தெரிந்தது. பயத்தில் கதவை மூடப் போனவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் பார்வை உணவு மேசையின் மேல் நிலைத்தது.

"அவனுக்கும் சேர்த்து சாப்பாடு செஞ்சு வெச்சுக் காத்துக்கிட்டு இருக்கியா? நான் இடையில வந்து கெடுத்துட்டேனோ?" என்றான். மௌனமாக நின்றாள். ஏதேனும் ஆயுதம் கிடைக்குமா என கண்கள் தேடிய வண்ணம் இருந்தன. சமையற்கட்டில் இருந்த கறி வெட்டும் பெரிய கத்தி கண்ணில் பட்டது. எப்படியாவது அதை எடுத்து விட்டால் இவன் மிரண்டு ஓடி விடுவான். ஆனா அவனைக் கடந்தல்லவா போக வேன்டும் என்று சிந்தனை வசம் இருந்தாள் இளையவள்.

"என்னடி பேச மாட்டேங்குற? புருசனைப் பார்த்து பயமா?" என்றான் கேவலமாக சிரித்துக்கொண்டே.

"சீ! வாயை மூடு! புருசன்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?" என்றாள் சமையற்கட்டை நோக்கி நகர்ந்து கொண்டே.

"நான் ஆம்பிளையா இல்லியான்னு உனக்கு தெரியாது?" என்று சிரித்தபடி நெருங்கினான். அதற்குள் சமையற்கட்டுக்குள் நுழைந்த அனிதா கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டாள்.

"உன்னைப் பார்த்து பயந்து நடுங்கின அனிதா இல்ல நான் இப்ப! மரியாதையா நீ போறியா இல்ல ஒரே குத்தா குத்தட்டுமா?" என்றாள் சீற்றம் பொங்க. பூவினும் மெல்லிய தன் மனைவியின் ஆங்கார சொரூபத்தைக் கண்டு கொஞ்சம் பயந்து விட்டான் ஆனந்தன்.

"விளையாடாதே அனிதா! தவறிப்போய் பட்டுடிச்சுன்னா என்ன ஆகும் தெரியும் இல்ல?" என்றபடி ஹாலுக்குள் வந்து விட்டான். முதன் முதலாக தன்னைப் பார்த்து கணவன் பயப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட அனிதாவுக்கு கொஞ்சம் உற்சாகமாகக் கூட இருந்தது. கையில் கத்தியுடனே அவனைத் தொடர்ந்தாள்.

"எதுக்கு வந்த நீ இப்ப?" என்றாள்.

"என்னவோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கியே? அவ்வளவுக்கு திமிரா உங்களுக்கு? என்னை அறுத்து விட்டுட்டு உன்னை இன்னொருத்தனுக்கு கட்டிக்குடுக்க ஏற்பாடு பண்றாளா அந்தக் கிழவி?" என்றான் கண்களில் வஞ்சம் மின்ன.

தாயைப் பற்றி இழிவாகப் பேசியவுடன் கோபம் வந்தது அவளுக்கு.

"எங்கம்மாவைப் பத்திப் பேசக் கூட உனக்கு தகுதி இல்ல! நோட்டீசை ஒத்துக்கிட்டு விவாகரத்து குடுத்தா உன் மரியாதையை காப்பாத்திக்கலாம். இல்லேன்னா வக்கீலம்மா என்ன சொல்றாங்களோ தெரியாது" என்றாள்.

அந்த நேரத்தில் சரியாக உள்ளே நுழைந்தாள் சரசம்மாள். மகள் கையில் கத்தியுடன் கோபமாகப் பேசுவதையும், ஆனந்தனும் ஏதோ சொல்வதையும் கவனித்தவளுக்கு பயத்தில் வியர்த்து விட்டது.

"அனிக்கண்ணு! இவன் என்ன செஞ்சான்? எதுக்கு கையில கத்தி?" என்று படபடத்தாள். அனிதா பதில் பேசு முன்னர் முந்திக்கொண்டான் ஆனந்தன்.

"யேய் கிழவி! உன் மக விவாகரத்து வேணும்னு கேட்டிருக்கா! உங்களுக்கு என்ன தைரியம் இருக்கும்?" என்றான்.

பேசிய அவனை கையெடுத்துக்கும்பிட்டாள் சரசாம்மாள்.

"அப்பா! ஆனந்தா! தெரியாத்தனமா உன்னை நல்லவன்னு நம்பி என் மகளை கல்யாணம் செஞ்சு குடுத்தேன். அந்த பாவத்துக்கு நானும் என் மகளும் நிறைய அனுபவிச்சுட்டோம். இனியும் உன்னோட மல்லுக்கட்ட எங்களால முடியல்லப்பா! நீ விவகரத்து குடுத்துடு. அப்புறம் உன் வழிக்கே நாங்க வரல்ல" என்றாள்.

எகத்தாளமாக சிரித்தான் அவன்.

"ஹாஹா! விவாகரத்துக் குடுத்துட்டா அப்புறம் நான் சோத்துக்கு என்ன பண்றது? சம்பாத்திச்சுப் போடுற பொண்டாட்டியை விட முடியுமா?" என்றான்.

"ஏம்ப்பா! அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?" என்றாள் சரசு டீச்சர் அப்பாவியாக. ஆனால் அவன் எதற்கு அடி போடுகிறான் என்பதை அனிதா புரிந்து கொண்டு விட்டாள். அது அவன் வாயிலிருந்தே வரட்டும் என பேசாமல் நின்றாள்.

"அப்படிக் கேளுங்க அத்த! நான் சுகமா வாழ்ந்து பழகிட்டேன். என்னால வேலை செய்ய முடியாது. அதனால அனிதா மாசா மாசம் 35,000 ரூவா எனக்கு கொடுக்கட்டும். அதை வெச்சு நான் வாழ்ந்திருக்கறேன். அப்படி இல்லேன்னா மொத்தமா 60 மட்சம் குடுத்துடுங்க. என்ன சொல்றீங்க?" என்றான்.

ஓரு அடி முன்னால் வந்தாள் அனிதா.

"தூ! வெக்கங்கெட்டவனே! ஒரு காசு கூட உனக்கு குடுக்க முடியாது என்ன செய்வ?" என்றாள் ஆத்திரமாக.

"நீ இப்படித்தான் சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். அதுக்கு நான் பதில் ரெடியா வெச்சிருக்கேன். நல்லா கேட்டுக்குங்க நான் விவாகரத்து குடுக்க மாட்டேன். போதுமா?" என்றான். வெறுப்பாக சிரித்தாள் அனிதா.

"உன்னால வேற என்ன செய்ய முடியும்? விவகரத்துல உனக்கு இஷ்டமில்லேன்னாலும் என்னால வக்கீலை வெச்சு வாதாடி விவாகரத்து வாங்க முடியும். அதை மனசுல வெச்சிக்கோ. உன்னைப் பத்தி பெரிய கடை அண்ணாச்சியில இருந்து நிறைய பேரு ஏமாத்துக்காரன்னு தான் சொல்லுவாங்க. தெரியுமா?" என்றாள்.

"என் கூட ஆறு மாசமா குடும்பம் நடத்தியும் என் புத்திசாலித்தனத்தைப் பத்தி நீ புரிஞ்சுக்கலையே? முதல்ல நான் அப்படியே மாறிட்டேன்னு எல்லாரையும் நம்ப வைப்பேன். அண்ணாச்சி கால்ல விழுந்து மன்னிப்புக் கேப்பேன். ஒழுங்கா அவர் சொல்ற வேலையை செய்வேன். மனம் திருந்தி உன்னோட வாழ ஆசைப்படுறேன்னு எல்லாரையும் நம்ப வைப்பேன்." என்றான்.

இப்படியும் ஒரு மனிதனா என்பது போல அவனைப் பார்த்திருந்தனர் இரு பெண்களும். அவன் தொடர்ந்தான்.

"நான் நல்லா விசாரிச்சுட்டேன். விவாகரத்து வழக்கு நேர குடும்ப கோர்ட்டுக்குப் போகாது. முதல்ல கவுன்சிலிங்க் நாம அட்டெண்ட் செய்யணும். அந்த ஆளு கிட்ட நான் என் மனைவியை ரொம்ப டீப்பா லவ் பண்றேன். ஏதோ தெரியாம தப்பு செஞ்சிட்டேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க. அவளை நல்லபடியே வெச்சுக் காப்பாத்தறேன்னு அழுவேன் கெஞ்சுவேன். அவரே என்னைப் பார்த்து இரக்கப்பட்டு உன்னோட சேர்த்து வெச்சிருவாரு. எப்படி என் கூட மறுபடியும் வாழ இஷ்டமா?" என்றான் என்றான் விஷமமாக.

உடலில் கம்பளிப் பூச்சி ஊர்வதைப் போலிருக்க திகைத்து நின்றாள் அனிதா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top