• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay........Episode 18.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 18.

ஆனந்தன் வந்து மிரட்டிச் சென்றதை வக்கீல் உமா தேவியிடம் சொன்னாள் அனிதா. அது கேசை மிகவும் பலவீனப்படுத்தும் என்ற அபிப்பிராயத்தில் இருந்தார்கள் உமா தேவி. கேசை கொஞ்சம் ஆறப்போடலாம் என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதிலிருந்து அனிதாவும் சரசம்மாளும் நிம்மதியற்றுப் போனார்கள். இரு பெண்பிள்ளைகள் என்ன செய்ய முடியும் என வெறுத்துப் போனாள் அம்மா. இந்த நிலையில் தான் ராஜபாளையத்தை விட்டு சற்றே தள்ளி இருக்கும் ஒரு கம்பெனியிலிருந்து நேர்முகத்தேர்வுக்கான மின்னனஞ்சல் வந்தது அனிதாவுக்கு. நல்ல கம்பெனி பொறுப்பான பதவி என இருக்கவே ஆச்சரியப்பட்டள் அம்மா.

"நீ இந்த கம்பெனிக்கு வேலைக்கு மனுப்போட்டிருக்கேன்னு சொல்லவே இல்லையே அனி?" என்றாள்.

"இல்லம்மா நான் மனுப்போடவே இல்ல! ஆனா நான் முன்னாடி வேலை பார்த்த ஆபீசுக்குப் போயி அங்க இருந்த மேனேஜர் கிட்ட வேலை கேட்டேன் அவர் சொல்லியிருப்பாரு போல தெரியுது" என்றாள்.

"உம் போயிட்டு வா! வேலை கெடச்சா நல்லது தான். உனக்கும் ஒரு மன மாற்றமா இருக்கும்" என்றாள். நாளை தான் நேர்காணல். தன்னை டீசெண்டாக அலங்கரித்துக்கொண்டு சான்றிதழ்களை சேகரித்துக்கொண்டு கிளம்பினாள். நகரத்திலிருந்து சற்றே தள்ளி இருப்பதால் பேருந்தில் தான் செல்ல வேண்டும். இப்போது விரைவாக போவது முக்கியம் என்பதால் ஆட்டோ பிடித்தாள். மிகப்பிரம்மாண்டமான ரெடிமேட் மற்றும் துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் அது. அங்கு சரக்குக் கொள்முதல் மற்றும் அனுப்புதல் பிரிவில் மேனேஜர் வேலைக்கான நேர்காணல் தான் அது. தன்னைப் போல பலரை எதிர்பார்த்துச் சென்ற அவளுக்கு ஏமாற்றம் தான். காரணம் அவளைத் தவிர அங்கு யாரும் நேர்காணலுக்காக வந்திருக்கவில்லை.

இதமான குளிர்பதன அறையில் நேர்காணல் நடந்தது. அவளது அனுபவம் வேலை செய்யும் முறை என பல கேள்விகள் கேட்டார் அந்த எம் டி. இளைஞராகக் காணப்பட்டான். . ஃபைலை மூடிவிட்டு பேசினான் அந்த இளைஞன்.

"இது பாரம்பரியமான நிறுவனம். எங்க தாத்தா காலத்துல இருந்து நடந்துக்கிட்டு வருது. இதுல கொள்முதலுக்கும் சப்ளைக்கும் சேர்த்து உங்களை மேனேஜராப் போட்டிருக்கேன். அதனால சரியா 10 மணிக்கு வந்துடணும். மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் உண்டு. கையில் எடுத்து வருவதானாலும் சரி தான் இல்லை இங்கேயே கேண்டீன் இருக்கிறது. டோக்கன் வாங்கிக்கொண்டு அங்கும் உண்ணலாம். சம்பளம் 35,000 தவிர ஊக்க போனஸ் உண்டு. வருமானவரியைப் பிடித்துக்கொண்டு தான் தருவோம். சனிக்கிழமையும் அரை நாள் உண்டு. ஞாயிறு விடுமுறை. இதற்கு சம்மதித்தால் இப்போதே ஆர்டரை வாங்கிக்கொள்ளலாம்" என்றான் அவன் ஆங்கிலத்தில்.

அவளை உற்றுப் பார்த்தவன் மேலும் தொடர்ந்தான்.

"இதைப்பாருங்க அனிதா. உங்களுக்கு சொந்தப் பிரச்சனை ஆயிரம் இருக்கலாம். ஆனா அதைக் காரணம் காட்டி லீவு எடுக்கக் கூடாது. அதோடு வேலையிலயும் சுணக்கம் வரக்கூடாது. அப்படி உங்களுக்கு ரொம்பப் பிரச்சனைன்னா ஜெயந்தி மேடத்து கிட்ட சொல்லுங்க. அவங்க உதவி செய்வாங்க" என்று முடித்தான்.

35,000 சம்பளம் தவிர ஊக்க போனஸ். மகிழ்ச்சியில் தலை சுற்றியது. ஆனால் தன் சொந்த விவகாரம் தெரிந்தவன் போலப் பேசுகிறாரே? ஒரு வேளை பழைய கம்பெனி மேனேஜர் சொல்லியிருக்கலாம் என நினைத்தவள் அவனை ஏறிட்டாள் அவனது பார்வை அவளை வெருட்டியது. அதைப் புரிந்து கொண்டானோ என்னவோ மணியை அழுத்தி ஜெயந்தி மேடத்தை வரச் சொல் என்றான். மாம்பழ நிறச் சேலையில் மற்றோரு மாம்பழம் போல வந்து நின்றாள் அவள்.

"அனிதா இவங்க தான் ஜெயந்தி. விற்பனை, கொள்முதல், சரக்கு அனுப்புதல் விற்பனை என எல்லாவற்றிற்கும் பொறுப்பு. ஜெனெரல் மேனேஜர். இவர்கள் கீழே தான் நீ வேலை செய்ய வேன்டும்" என்றான். மிகவும் இளையவளாக இருந்த ஜெயந்தியைப் பார்த்தாள். நல்ல அழகி என்றாலும் கண்ணில் கர்வம் இல்லை. மாறாக கருணை தெரிந்தது. ஏனோ அவளைப் பார்த்ததும் பழகத் தோன்றியது. இவள் கீழ் தானே வேலை செய்ய வேண்டும்? அப்படி ஏதாவது எம் டி வாலாட்டினால் இவளிடம் சொல்லி விடலாம்" எனத் தீர்மானித்து வேலையை ஒப்புக்கொண்டாள். பரஸ்பரம் அறிமுகம் முடிந்து அடுத்த வாரமே வேலையை ஒப்புக்கொள்ள வேண்டும் என சொல்லி விட்டு வீடு வந்த போது எதிர்காலத்தின் மேல ஒரு நம்பிக்கை வந்திருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை ஆனந்தன் வந்து போன பிறகு அவனிடமிருந்து ஃபோனும் வரவில்லை அவனும் வரவில்லை. எனவே விஷயத்தை மறந்து கொஞ்சம் நிம்மதியானாள் அனிதா. ஒப்புக்கொண்டது போல அடுத்த வாரம் திங்கட்கிழமையிலிருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். வீட்டு பக்கத்திலிருந்து பஸ் பிறகு வேலை முடிந்த பிறகு அங்கிருந்து பஸ் என வசதியாகவே இருந்தது. ஏற்கனவே வேலை செய்து பழகியவள் என்பதால் கஷ்டமாகவும் இல்லை. மெல்ல மெல்ல ஒரு வழக்கத்துக்கு வந்தாள். வீட்டிலிருந்து உணவு எடுத்துப் போவது, மாலை தேநீர் மட்டும் கேண்டீனில் என பழகி விட்டது அனிதாவுக்கு. அவள் வேலைக்குச் சேர்ந்து பத்து நாளில் முதல் தேதி வந்து விட்டது. வேலை செய்த நாட்களைக் கணக்கிட்டு சம்பளமும் கொடுத்து விட்டார்கள்.

மனதில் சந்தோஷம் பொங்க அம்மாவுக்கு முதலில் நல்ல சேலை வாங்க வேண்டும் என திட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது ஆனந்தன் ஃபோன் செய்தான். இத்தனை நாள் தனக்கு திருமணம் ஆனதையோ, அவன் கொடுமைகளையோ நினைத்தே பார்த்திராத அனிதாவுக்கு திக்கென்றது. எடுத்துப் பேசலாமா வேண்டாமா என திகைத்து பின் எடுத்தாள்.

"என்ன முடிவு செஞ்சீங்க?" என்றான் எடுத்த எடுப்பில்.

"எதுவும் முடிவு எடுக்கல்ல."

"ஓஹோ! சரி இப்ப நான் இன்னொரு ஆப்ஷன் குடுக்கறேன். நீ எனக்கு மாசா மாசம் பணம் தர வேண்டாம் மொத்தமாவும் வேண்டாம் ஆனா .."

அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு படபடத்தது. ஆனா..என்று இழுத்த போது பயத்தில் முடிச்சு விழுந்தது அவளுக்கு.

"ஆனா...இப்ப இருக்கற என் கடன் தொல்லையில இருந்து என்னை விடுவிக்கணும்."

"நீங்க கிட்டத்தட்ட 20 லட்ச ரூவா கடன் வெச்சிருக்கீங்க. அதை எப்படி எங்களால அடைக்க முடியும்?" என்றாள் மெல்லிய குரலில். அவளது அந்தப் பேச்சை ஜெயந்தி மேடம் உன்னிப்பாக கவனிப்பதாகப்பட்டது அவளுக்கு.

"அது எனக்கு தெரியாது. நீ பணம் குடுப்பியோ இல்லை அவனோட கோவா போவியோ அது உன் பிரச்சனை. ஆனா நான் கடன்ல இருந்து விடுபடுற வரைக்கும் உனக்கும் விடுதலை கிடைக்காது. புரிஞ்சதா? "

"உம்" என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.

"ஏண்டி இப்படி மெதுவாப் பேசுற?" என்று இரைந்தான். அவனது அந்தக் குரல் அமைதியாக இருந்த அந்த அறையில் தெளிவாகக் கேட்டது.

"சரி! நான் யோசிச்சு சொல்றேன்" என்று சொல்லி விட்டு வைத்தாள். கண்ணீரும் கோபமும் ஒன்றை ஒன்று விஞ்சியது. அங்கே அமர்ந்திருந்தால் தன்னை மீறி கதறி விடுவோம் என பயந்து பாத்ரூமுக்குள் சென்று கதவடைத்து மௌனமாக விம்மினாள். நிறைய நேரம் அப்படி இருக்க முடியாது. வேலைகள் காத்திருக்கின்றன என எண்ணி முகம் கழுவி தலை சீவி வெளியே வந்தாள்.

"ஏதும் பிரச்சனையா அனிதா?" என்றாள் ஜெயந்தி.

"இல்லை மேடம்" என்று சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்து விட்டாள். மாலை புறப்படத்தயாராகும் நேரம் ஜெயந்தி அழைத்தாள்.

"அனிதா! நம்ம நிறுவனத்துல எல்லாரும் ஒரு குடும்பமாத்தான் பழகுறோம். போன வாரம் நம்ம கேஷியர் வீட்டுல அவர் மகளை ஏதோ ஒரு ரவுடி மிரட்டினான்னு பயந்துக்கிட்டு இருந்தாரு. அதை அவர் எங்கிட்ட சொன்னதும் நாம கம்பெனி மூலமா போலீசுக்கு பிரஷர் குடுத்து பிரச்சனையை சுமுகமா முடிச்சுட்டோம். அதே மாதிரி உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எங்கிட்ட தைரியமா சொல்லு. என்னால முடிஞ்ச உதவியை செய்யறேன்" என்றாள்.

"உதவி தேவைன்னா கட்டாயமா சொல்றேன் மேடம். " என்று நிறுத்திக்கொண்டாள். அம்மாவுக்கு சேலை எடுக்க வேண்டும் தனக்கு புதிதாக சில கவரிங் தோடுகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நேரே வீட்டுக்குப் போனாள். அங்கே அமர்ந்து காப்பியை அருந்திக்கொண்டிருந்தான் ஆனந்தன்.

"நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?"என்றாள் ஆத்திரமாக.

"நீ வேலைக்குப் போறியாமே? உங்கம்மா சொன்னாங்க! ஆனா எங்கேன்னு சொல்ல மாட்டங்குறாங்க. எங்கே வேலைக்குப் போற? என்ன சம்பளம்?" என்றான்.

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? இப்ப எதுக்கு வந்தீங்க? நான் தான் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன் இல்ல?" என்றாள்.

தாயின் பக்கம் திரும்பி "நீ எதுக்கு இந்த ஆளுக்கு காப்பி பலகாரம் குடுக்குற? இவன் நமக்கு செஞ்சதெல்லாம் மறந்து போச்சா?" என்றாள் காரமாக.

மௌனம் காத்தாள் பெரியவள்.

"முதல்ல நீயும் காப்பி பலகாரம் சாப்பிடு அனிக்கண்ணு. அப்புறமா பேசுவோம்" என்றான் இளித்துக்கொண்டே. பற்றி எரிந்த கோபத்தை தணித்துக்கொண்டு அமர்ந்தாள்.

"என்ன பேசணும் இப்ப? சொல்லுங்க, ஃபோன்ல மிரட்டுனது போதாதுன்னு இப்ப நேர்ல வந்துடீங்களா?" என்றாள். அனிதாவின் தாய் கேள்விக்குறியோடு மகளை நோக்கினாள்.

"அனிக்கண்ணு! நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட! நான் உன்னோட சேர்ந்து வாழத்தான் விரும்பறேன். ஏன்னா எனக்கு உன்னை அந்த அளவு பிடிக்கும். அதுவும் இப்ப உனக்கு சம்பளம் 40,000 மாமே?" என்றான் வழிந்தபடி.

"இதைப் பாருங்க எனக்கு அத்தனை சம்பளம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை உங்க கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல. எதுக்கு வந்தீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல"

"இதைப் பாரு அனிதா! நான் தெளிவா சொல்லிடறேன். நடந்ததை மறந்துடு. நான் தென்காசியை விட்டு உங்க வீட்டோடயே வந்துடறேன். பிசினஸ் ஏதாவது செய்யறேன். உங்களுக்கு பாதுகாப்பா இருக்கேன். இதை விட ஒரு புருஷன் என்ன செய்ய முடியும்?" என்றான்.

சரசு பொங்கி எழுந்தாள். கையை உயரத்தூக்கி கும்பிட்டாள்.

"அப்பா சாமி! நீ வரவே வேண்டாம். உன்னோட வாழ்ந்து என் மக பட்ட துன்பமெல்லாம் போதும். அவளை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு."

"என்ன அத்தை நீங்க? எந்த வழிக்கும் ஒத்து வர மாட்டேன்னா என்ன செய்ய? ஒண்ணு எனக்கு 60 லட்ச ரூவா குடுங்க இல்லை என் கடனை எல்லாம் மொத்தமா அடைங்க அதுவும் முடியாதுன்னா உங்க மகளோட வாழறேன். இதைத்தவிர உங்களுக்கு வேற வழியில்ல"

"ரெண்டுமே குடுக்கல்லைன்னா என்ன செய்வீங்க?"

சட்டென எழுந்தான் ஆனந்தன்.

"என்னடி விளையாடுறீங்க? நான் யாரு தெரியுமா? எனக்கு எத்தனை அடியாள் இருக்காங்கன்னு தெரியுமா? உங்க வீட்டை நாஸ்தி பண்ணிடுவேன். அனிக்கண்ணு நீ வேலைக்குப் போயிட்டு பஸ்ல தானே வர? உன்னை ஆளை வெச்சு தூக்க எனக்கு எத்தனை நேரம் ஆகும்? யார் கூடவோ கோவாவுக்கே போயிட்டு வரச் சொல்றவன் வேற என்னென்ன செய்யச் சொல்லுவேன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா? மரியாதையா பணத்துக்கு ஏற்பாடு செய்ங்க. இல்ல விவாகரத்து நோட்டீசை வாபஸ் வாங்குங்க. உங்களுக்கு இன்னும் பத்தே நாள் தான் டயம். இல்லைன்னா நான் என் வேலையைக் காட்டுவேன்" என்று மிரட்டி விட்டு நாற்காலியை எட்டி உதைத்து விட்டு வெளியேறினான்.

அவன் உதைத்த நாற்காலி அனிதாவின் கணுக்காலில் மோதி நிற்க வலி ஒரு புறம் அவன் மிரட்டல் ஒரு புறம் என வாட்டி வதைக்க செய்வதறியாது நின்றாள் அனிதா.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
உண்மையில் எனக்கு ஆனந்தன் மேல் உள்ள கோபத்தைவிட அனிதா மற்றும் அவள் டீச்சரம்மா மேல்தான் கோபம் அதிகம் வருகிறது.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அனிதா இனிமேலாவது தைரியமாக முடிவு எடுப்பாளா
 




Sahanama

மண்டலாதிபதி
Joined
Apr 18, 2018
Messages
171
Reaction score
321
Location
Bangalore
உண்மையில் எனக்கு ஆனந்தன் மேல் உள்ள கோபத்தைவிட அனிதா மற்றும் அவள் டீச்சரம்மா மேல்தான் கோபம் அதிகம் வருகிறது.
Correct
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top