• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay......Episode 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 20.

ஃபோனில் பேசிக்கொண்டிருந்த அம்மாவைக் கண்டதும் தான் நிம்மதியானது அனிதாவுக்கு. அன்று என்னவோ அம்மாவின் முகம் தெளிந்து காணப்பட்டது. ஏன் கொஞ்சம் பிரகாசமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

"அம்மா! என்ன விஷயம்? அந்த ஆளு விலகிட்டானா?" என்று கேட்ட மகளைக் கண்டதும் ஃபோனை சட்டென கட் செய்தாள்.

"இல்ல கண்ணம்மா! நமக்கும் உதவி செய்ய ஆட்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சது. அதனால தெம்பு வந்திரிச்சு. இனிமே உனக்கு நல்ல காலம் தான்" என்று திருஷ்டி கழிப்பது போல முகத்தை வழித்தாள்.

"என்னம்மா சொல்ற? போலீஸ்ல சொல்லிட்டியா?"

"இல்ல! அதை விட பெரிய உதவியா கெடச்சிருக்கு. இத்தனை நாள் அவங்க அருமை எனக்குத் தெரியாம இருந்தது. ஒரு சூடு பட்டப்புறம் தான் மனுஷங்களை தரம் பிரிச்சுப் பார்க்கக் கத்துக்கிட்டேன்,. ஆனா கண்மணி அதுக்கு உன் வழ்க்கையை பணயம் வெச்சுட்டேனேம்மா" என்று கலங்கினாள் அம்மா.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றிருந்த மகளை நோக்கிக் கனிவான புன்னகை சிந்திய தாய் விளக்கினாள்.

"கண்ணு! எனக்கு தூரத்து சொந்தம் சொக்கலிங்கம் அண்ணன். அவரு காலமாயிட்டாலும் அவர் மகன் வந்து என்னைப் பார்த்தான். நான் தப்பா நெனச்சுக்கிட்டு அவனை விரட்டி அடிச்சுட்டேன். ஆனா அவனே நம்ம நிலைமையைத் தெரிஞ்சுக்கிட்டு உதவி செய்யறேன்னு சொல்லிட்டான். "என்றாள்.

எரிச்சல் பட்டாள் மகள்.

"ஏம்மா? அதிகமா பழக்கமே இல்ல! அவர் கிட்டப் போயி என்னைப் பத்தி சொல்லி...? என்னம்மா இதெல்லாம்?" என்று அவள் கேட்க கேட்கவே வாசற்கதவை பெரிதாக யாரோ தட்டும் சத்தம் கேட்க முகமெல்லாம் சிரிப்பானது தாய்க்கு. அவரு தான் வந்திருக்கான்னு நினைக்கறேன் என்று கதவை விரியத்திறந்தவள் ஆ என அலறி விட்டாள்.

வாசலை அடைத்துக்கொண்டு மூன்று ரவுடிகள் அவர்களுடன் முழு போதையில் ஆனந்தன் சரசம்மாளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவை உள்பக்கமாக பூட்டினார்கள். பயத்தில் வெளுத்த முகங்களோடு நின்றிருந்த மனைவியின் அருகில் வந்தான் ஆனந்தன்.

ஒரு வக்கிரமான இளிப்போடு தன்னை நெருங்கிய ஆனந்தனைப் பார்த்ததும் பயத்தில் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன ஆனிதாவுக்கு. ஆனால் சரசம்மா சும்மா இல்லை. சமையலறைக்கு ஓடிப்போய் பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு மகளை மறைத்தாற் போல நின்று கொண்டாள். சிரித்தபடியே அவளது கைகளை அப்படியே பிடித்தான் ரவுடிகளில் ஒருவன். கையைத் திருக வலியில் முகம் கோணி கத்தி கீழே விழுந்தது.

"ஏ கிழவி! நான் சொல்றதை மட்டும் செய்தியானா உனக்கு நல்லது. இதோ ஸ்டாம்பு பேப்பர் கொண்டு வந்திருக்கேன். அதுல கையெழுத்துப் போடு. இல்லைன்னா என்ன நடக்கும் தெரியுமா?" என சொல்லி விட்டு ரவுடிகள் மூவரையும் பர்த்து விட்டு அப்படியே அனிதாவையும் பார்த்து இளித்தான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுக்கம் பரவ இருட்டிக்கொண்டு வந்த கண்களை சமாளித்து நின்றாள் அனிதா.

"பாவி! நீ நல்லாவே இருக்க மாட்டே! அனிதாவுக்கு நீ தாலி கட்டியிருக்கேன்னு நெனப்பாவது இருக்கா? இந்த ஸ்டாம்பு பேப்பர்ல என்ன எழுதியிருக்கே?"

"பெருசா எதுவும் எழுதல்ல! நீங்க எங்கிட்ட வாங்குன கடனுக்காக இந்த வீடு அப்புறம் நகைங்க, உன்னோட பி எஃப் பணம் இது எல்லாத்தையும் என் பேருக்கு எழுதிக்கொடுத்துட்டா மாதிரி எழுதியிருக்கேன் அவ்வளவு தான். "என்றான் கோரமாக.

அனிதாவுக்கு சுய நினைவு வர பொங்கி எழுந்தாள் அவள்.

"எல்லாத்தையும் உனக்கு ஏன் நாங்க கொடுக்கணும்? உன்னைக் கட்டிக்கிட்ட பாவத்துக்கு நிறையக் குடுத்தாச்சு. பேசாம போயிரு. இல்லை போலீசுக்கு ஃபோன் செய்வேன்" என்றாள் தைரியம் அத்தனையு திரட்டி.

பெரிதாக சிரித்தான் ஆனந்தன்.

"பூனைக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டே நீ இப்படித் துள்ளுறியே? இங்க இருந்து போலீஸ் ஸ்டேஷன் 6 கிமீ. நீ ஃபோன் பண்ணி அவங்க ஜீப் எடுத்துட்டு வரதுக்கு எப்படியும் முக்கா மணி நேரமாவது ஆயிடும். அந்த நேரம் போதாதாடா உங்களுக்கு?" என்று ரவுடிகளைப் பார்த்து வக்கிரமாகக் கேட்கவும் தளர்ந்தே போனாள் அனிதா. சரசம்மாளோ ஓவென அலறினாள்.

"ஐயையோ! என் மகளை எதுவும் செஞ்சிடாதேப்பா! நான் இப்பவே கையெழுத்துப் போட்டுத்தரேன். " என்று கதறினாள்.

"அம்மா! எல்லாத்தையும் குடுத்துட்டா நீ எப்படிம்மா வாழுவே? என்னைப் பத்திக் கவலைப்படாதேம்மா. நீ எழுதிக்குடுத்தப்புறமும் இவன் என்னை சும்மா விடுவான்னு நினைக்கறியா நீ? அதனால தயவு செஞ்சு கையெழுத்தை மட்டும் போடாதே" என்றாள். அவளது குரலில் அசாதாரண அமைதி. எதையோ தீர்மனித்து விட்ட தொனி. ஓடி வந்து மகளை அணைத்துக்கொண்டாள் அன்னை.

"அனிக்கண்ணு! எனக்கு பயம்மா இருக்கு! நீ ஏதோ தீர்மானம் செஞ்சுட்டே! ஆனா அது நல்லது இல்லைன்னு எனக்கு படுது. அனிக்கண்ணு. நமக்கு இந்த வீடு பணம் நகை இதெல்லாம் பெரிசு இல்லடா! நீ நல்லா இருக்கணும். அது தான் வேணும். எழுதிக்குடுத்துடலாம்டா! " என்று அழுதாள். ஆனால் அனிதாவோ கற்சிலை போல அசையாமல் நின்றிருந்தாள்.

"என்ன? அம்மாவும் மகளும் நாடகம் போடுறீங்க? ஏ கிழவி உன் மக கிட்ட சொல்லு! எல்லாத்தையும் எழுதிக்கொடுத்துட்டா நான் என் வழியைப் பார்த்துக்கிட்டுப் போயிருவேன். இல்லைன்னா...." என்று வக்கிரமாக சிரித்தான்.

அவன் முடிக்கும் முன் ஒரு ரவுடி குறுக்கிட்டான்.

"யோவ் ஆனந்தா! பொண்ணு லட்டு மாதிரி இருக்கும் அதனால உங்களுக்கு காசா குடுக்க மாட்டேன்னு சொல்லித்தானே கூட்டிக்கிட்டு வந்த? இப்ப என்ன இப்படிச் சொல்ற?" என்றதும் அனிதாவுக்கு நம்பிக்கையின் கடைசி இழையும் அறுந்தது. தாயை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் முகம் தெளிவாக இருந்தது.

"அம்மா! நீ எனக்காக பட்ட துன்பமெல்லாம் போதும்! இனியாவது நீ உனக்காக வாழும்மா" எனச் சொல்லி விட்டு வேகமாக ஓடினாள். அப்படி அவள் செய்வதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ரவுடிகளும் ஆனந்தனும் சுதாரிப்பதற்லுள் அவள் பின்வாசற்கதவைத் திறந்து கொண்டு ஓடி விட்டாள். கிணற்றை நோக்கி ஓடியவள் யாரோ தன்னை நெருங்குவதை உணர்ந்ததும் அப்படியே குதித்து விட்டாள். கல் படியில் தலை இடிக்க நினைவிழந்தாள்.

மூச்சு முட்டுவது போல இருந்தது. அதே நேரம் ஏதேதோ வாசனை வருவது போலவும் இருந்ததும். ஆழ் நீலத்தில் கண்கள் வெளிச்சத்தைத் தேடின. தலையில் தாங்க முடியாத வலி. மீண்டும் நினைவிழந்தாள். நடு நடுவே யாரோ அவளை பூப்போலத் தூக்குவது போலவும், அன்பான கரங்கள் தலையை வருடுவது போலவும் தோன்றியது. ஏனோ கதிரவனின் முகம் வந்து போனது. அம்மாவின் கண்ணீர் முகம் வாட்டியது. எனக்கு என்ன ஆயிற்று? அந்தப் பாதகன் என்னை பிழைக்க வைத்து சித்திரவதை செய்கிறானா? ஆனால் அப்படி எதுவும் நடந்தது போலத் தெரியவில்லையே? ஆனால் ஏன் அம்மா அழுகிறாள்? இது யார் பக்கத்தில் ஜெயந்தி மேடம் போல அல்லவா இருக்கிறது? ஓ! அவர்கள் தான் என்னை காப்பாற்றினார்களோ? அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. அம்மா அழாதே! நான் பிழைத்து விட்டேன் என்று சொல்லத் துடித்தாள். ஆனால் உதடுகள் ஒத்துழைக்க மறுத்தன. வெல்வெட் நீலம் அவளை ஆக்கிரமிக்க மீண்டும் மயக்குத்துக்குள் போனாள்.

இப்படியே எத்தனை நாள்? அல்லது எத்தனை யுகம் இருந்தாள் என்பதைச் சொல்ல முடியவில்லை. ஒரு நாள் மெல்ல மெல்ல இமைகள் பிரிந்தன. தன்னைச் சுற்றிய நினைவு வந்தது. மென்மையான படுக்கையில் தான் படுத்திருப்பதும் பக்கத்திலே ஏதேதோ ட்யூப்கள் ஓடுவதும் தெரிய தான் ஒரு ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டாள். அசைய மறுத்த உதடுகளை மெல்ல அசைத்தாள்.

"அம்மா"

"கண்ணே! நீயா கூப்பிட்ட? திருச்செந்தூர் முருகன் நம்மைக் கைவிடலைம்மா! என் ராசாத்தி! நீ பிழைச்சுட்டேடி! முருகா! கந்தா! உன் கருணையே கருணை" என்று உணர்ச்சி வசப்பட்டாள் அம்மா.

அனிதாவுக்கு நன்றாக நினைவு வந்து அவள் பேச மேலும் இரு தினங்கள் ஆயின. இப்போது தலை வலி குறைந்திருந்தது. கண்களைக் கட்டும் இருட்டு இல்லை. நினைவுக்குழப்பங்கள் இல்லை. தெளிவாக இருந்தது. சரளமாகவும் பேச முடிந்தது.

"அம்மா! என்னை காப்பாத்துன ஜெயந்தி மேடம் எங்கே? அன்னைக்கு என்ன நடந்தது? விவரமாச் சொல்லும்மா" என்றாள் மகள்.

அன்பாக பார்த்து விட்டு. மகளை மெல்ல உட்கார வைத்தாள். முதுகுக்கு வாகாக இரு தலையணைகளைக் கொடுத்து விட்டு அதில் சாய வைத்தாள்.

"முருகன் அருளால நாம எல்லா கஷ்டத்துல இருந்தும் விடுபட்டுட்டோம் அனிக்கண்ணு. கவலைப்படாம ரெஸ்ட் எடு" என்றாள் கனிந்த குரலில்.

"அம்மா! பிளீஸ்! அன்னைக்கு நடந்ததை சொல்லும்மா! என்னால இதுக்கு மேல தாங்க முடியாது" எனவும் சவுகரியமாக அமர்ந்து கொண்டு விவரிக்கலானாள் பெரியவள்.

"நீ நல்லா ஆயிட்டே! நாளைக்கே வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு டாக்டர் சொன்னதால இந்த விஷயத்தைச் சொல்றேன்" என ஆரம்பித்தாள்.

கதவைத் திறந்து கொண்டு அனிதா ஓடிய போது ஏற்கனவே சரம்மாளின் அண்ணன் மகன் அவனது ஆட்களுடன் அங்கே இருந்திருக்கிறான். அவர்கள் உள்ளே வர எத்தனித்த அதே நேரம் கதவை படீரெனத் திறந்து கொண்டு அனிதா வரவே சற்றே செயலிழந்து போனார்களாம். அவர்கள் சுதாரிப்பதற்குள் அனிதா கிணற்றுள் விழுந்து விடவே மாமன் மகனே கிணற்றில் குதித்துக் காப்பாற்றினானாம். அவனுடன் வந்தவர்கள் போலீஸ் என்பதால் உடனே ஆனந்தனையும் அவனுடன் வந்த அடியாட்களையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்களாம். தலையில் அடிப்பட்டிருந்த அனிதாவை தோளிலேயே தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தவனும் அதே மாமன் மகன் தானாம். ரத்தம் நிறைய வெளியேறி இருந்ததால் கொஞ்சம் கவலைக்கிடமாக இருந்ததாம். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கண் விழிக்காத நிலையில் நாலாம் நாள் தான் சற்றே உணர்வு வரப் பேசினளாம். அது வரையில் ஆஸ்பத்திரியே கதி என்று இருந்த மாமன் மகன் பிறகு தான் வீட்டுக்குப் போனானாம். அனிதாவின் அலுவலகத்திலிருந்து ஜெயந்தி மேடம் அவள் கணவனோடு வந்து பார்த்து விட்டுப் போனார்களாம். இன்னும் சிலரும் இன்று வருவதாகக் கூறியிருக்கிறார்களாம்.

அம்மா சொல்லி முடித்ததும் கண்களில் நீர் துளிர்த்தது அனிதாவுக்கு. எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறாள். நினைக்கவே உடல் சிலிர்த்தது. நல்லவேளை அந்த மாமன் மகன் வரவில்லையென்றால் என் கதி என்ன ஆகியிருக்கும்? நான் இல்லாமல் அம்மா என்ன செய்திருப்பாள்? பாவம் அம்மா! அப்பாவை இழந்த போது என்னைக் கண்டு ஆறுதல் அடைந்தாள். ஆனால் நானும் இல்லையென்றால் என்ன செய்வாள்?" என்று யோசித்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top