• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai valaiyaay.....Episode 22.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 22.

கதிரவனின் குரல் காதிலேயே விழவில்லை. அவளது மனம் சுழற்காற்றில் அகப்பட்ட துரும்பு போல அலை பாய்ந்தது.

"சொல்லுங்க" என்றான் மீண்டும். "வந்து..வந்து..." என இழுத்தாள். அதை அலட்சியம் செய்து தொடர்ந்தான்.

"எனக்கு வர வெள்ளிக்கிழமை கல்யாணம் அனிதா. வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுக்க அவகாசம் இல்ல. தவறா நினைக்காதீங்க. கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்" என்றான். தலையில் இடி இறங்கியிருந்தால் கூட இப்படி இருந்திருக்காது. விறைத்துப் போய் அமர்ந்திருந்தாள். ஹலோ ஹலோ என கூறி விட்டு கட் செய்தான் அவன். அனிதாவின் காதுகளில் ஞொய் என்ற ஓசை கேட்டது. தலை சுற்றி மயக்கமாக வந்தது.

"அம்மா! கதிருக்குக் கல்யாணமாம்" என்றாள் குரலில் அத்தனை அழுகை. அவளை வியப்பாய்ப் பார்த்தாள் அன்னை.

"அதனால என்னம்மா? நீ ஏன் ஒரு மாதிரி இருக்கேன்னு புரியலியே?" என்ற தாயை கண்ணோடு கண் பார்க்கக் கூட முடியாமல் தலை கவிழ்ந்தாள். நெஞ்சின் பாரம் கண்களில் வந்தது. அதைத் தாயார் பார்த்து விடாமல் இருக்க நேராக தன் அறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டாள்.

இனி என்ன? என்ற கேள்வி பூதாகாரமாக அவளைத் தாக்கியது. கிணற்றில் விழுந்தும் தான் பிழைத்தது நிச்சயம் கதிரவனுக்காகத்தான் என்று அவளது அடி மனதில் ஓடிக்கொண்டிருந்த நம்பிக்கைக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே மணமான தன்னை அவன் எப்படி விரும்புவான்? அழகு, படிப்பு செல்வம் என எல்லாம் இருக்கிறது கதிரிடம். நான் தான் ஏமாந்து நிற்கிறேன். கதிரை நிரந்தரமாக இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் ஓடிய போது தான் அவனைத் தானும் உளமாற நேசித்திருக்கிறோம் என்ற உண்மை புலனாக விக்கித்துப் போனாள் அவள். இனி என்ன செய்து என்ன? என்று யோசிக்கும் போது தனக்கு ஒரு திருமண ஏற்பாடு அன்னை செய்வதைத் தடுத்தாக வேண்டும் என்ற வேகம் தோன்றியது. ஒரு முறை கதிரவனை மறுத்ததற்கு கிடைத்த தண்டனையே இனி ஏழு ஜென்மங்களுக்கும் போதும். மறுபடியும் அதே தவறை செய்ய அவள் விரும்பவில்லை. நிச்சயம் இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. என்னால் இன்னொரு போலி வாழ்க்கை வாழ முடியாது. தீர்மானித்து எழுந்தாள்.

ஹாலில் அம்மா மகிழ்ச்சியோடு யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் அப்புறம் பேசலாம் என சொல்லி விட்டு குறிப்பாக நோக்கினாள்.

"என்ன அனிக்கண்ணு? ஏன் ஒரு மாதிரி இருக்க? தலையை வலிக்குதாடா?" என்றாள் கரிசனமாக. அம்மாவின் அன்பு நெஞ்சைத்தொட்ட போதும் தன் தீர்மானத்தை அவள் விடவில்லை.

"அம்மா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்." என்றாள் கத்தலாக. அம்மா சிரித்தாள். அதுவே ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

"என்னம்மா சிரிக்குற? நான் சொல்றது சீரியஸ்மா. என்னால இன்னொரு போலி வாழ்க்கை வாழ முடியாது. ஒரு தரம் நான் ஏமாந்தது போதும். திருப்பியும் நான் நான் ஏமாற மாட்டேன்" என்றாள் மீண்டும்.

"அனிதா! நீ என்ன சொல்ற? போலி வாழ்க்கைன்னா நீ ஆனந்தனோட வாழ்ந்தது போலி வாழ்க்கையா? அப்படீன்னா உன் மனசுல இருந்தது யாரு? இப்ப எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? " என்றாள் அம்மா சீரியசாக.

வார்த்தைகள் வர மறுத்தன. தோண்டையை ஏதோ அடைத்தது. வலியோடு பேசினாள்.

"அம்மா! நான் மனசுல கதிரை நெனச்சுக்கிட்டு இருக்கேன்னு இப்பத்தான் எனக்கே புரிஞ்சது" என்றாள் அழுகையோடு. அவளருகில் வந்த தாய் தலையைத் தடவிக்கொடுத்தாள்.

"இப்ப என்ன செய்யலாம் சொல்லு! நான் போய் அவரைப் பார்த்து பேசட்டுமா?"

"இல்லம்மா காலம் கடந்து போச்சு. அவருக்கு வர வெள்ளிக்கிழமை கல்யாணமாம். என்னால நெனச்சுக் கூடப் பார்க்க முடியலையே? நான் என்ன செய்வேன்?" என்றாள் அரற்றலோடு.

"அப்ப நீ அவரை முன்னாலேயே விரும்பினியா கண்ணம்மா?" என்றாள் சற்றே உரத்த குரலில்.

"ஆமாம் ஆமாம். எத்தனை தடவை நான் சொல்ல? எப்பவும் நான் லேட்டாவே தான் வரேன். எனக்கு குடுப்பினையே இல்லையாம்மா? என்னை ஏன்மா பெத்த? " என்றாள் அழுகையோடு. கண்கள் மூடி தாயின் தோளில் சாய்ந்தாள்.

"எனக்காகத்தான் உன்னைப் பெத்தாங்க அனிதா" என்ற ஆழ்ந்த குரல் கேட்டு சிலிர்த்து நிமிர்ந்தாள். கைகளை விரித்தபடி நின்று கொண்டிருந்தான் கதிரவன். கொஞ்சமும் யோசியாமல் விரித்த அவன் கைகளைத் தாண்டி தோளில் தஞ்சம் புகுந்தாள். அடைத்து வைத்திருந்த காதல், சோகம் எல்லாம் ஒன்று சேர அழுது தீர்த்தாள். அவள் அழுது ஓயட்டும் என இதமாகத் தடவிக்கொடுத்தபடி நின்றிருந்தான் கதிரவன். எதையோ வென்று விட்ட பாவனை அவன் முகத்தில். இங்கிதமறிந்து சரசம்மாள் வேறு ஒரு அறைக்குப் போய் விட்டாள். ஒரு வழியாக முகத்தை நிமிர்த்தி கலங்கிய விழிகளால் அவனைப் பார்த்தாள்.

"நீங்க ..நீங்க..உங்களுக்கு.."

"ஆமா நான் தான் எனக்குத்தான் கல்யாணம் வெள்ளிக்கிழமை அதுவும் உன் கூட" என்றான் சிரித்தபடி. அந்த கணத்தில் எல்லாமே விளங்கியது அவளுக்கு. அம்மா சொன்ன மாமன் மகன் இவன் தான். தனக்கு பாதுக்காப்பாக இரு ஆட்களை நியமித்ததும் இவன் தான். ஜெயந்தியும் அவளது கணவரும் நிச்சயம் கதிருக்குத் தெரிந்தவர்கள். ஒரு வேளை உறவினர்களாகக் கூட இருக்கலாம். அப்படியானால் ஏன் என்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை? அம்மா கூட?"

காதலியின் கண்களின் கேள்வியைப் புரிந்து கொண்ட கதிர் சிரித்தான்.

"ஐ ஆம் சோ சாரி கண்ணம்மா. உன்னைக் காப்பாத்த நான் ஒரு நாடகம் ஆடத்தான் வேண்டியிருந்தது. காரணம் என் நண்பனின் கம்பெனி என்பதால் நீ வேலைக்குச் சேரவே மாட்டாய் என நினைத்து இத்தனையும் செய்தேன்" என்றான். ஆக அது அவன் நண்பனின் கம்பெனி தானா?

"ஏன் ஜெயந்தியும் செந்திலும் கணவன் மனைவின்னு முன்னாடியே அவங்க சொல்லல்ல?"

"எம் டிக்கு மனைவின்னா நீ உன்னோட பிரச்சனையை அவங்க கிட்ட சொல்லியிருக்க மாட்டியே கண்ணம்மா. உன் பிரச்சனை என்னான்னு தெரிஞ்சா தானே என்னால உன்னை அந்த சிக்கல்ல இருந்து விடுவிக்க முடியும்?" என்றான் கனிவாக. அவனோடு ஒண்டிக்கொண்டாள் அனிதா. மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள். உலகத்தில் எதுவும் அவர்களைப் பிரிக்க முடியாது எனத் தோன்றியது. "அம்மா" என்றாள் சுருக்கமாக.

காதலியை அருகமர்த்தி தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளது தோளில் கை போட்டபடி பேசினான் கதிரவன். நான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன் அப்பத்தான் உனக்குப் புரியும். அவன் தோளில் தலை சாய்த்தவாறே கேட்டாள் இனியவள்.

"ஆனந்தனால உனக்குப் பிரச்சனைன்னு நீயே வந்து சொன்னபிறகும் என்னால சும்மா இருக்க முடியல்ல அனி! அதனால எப்படியாவது உன்னை என் கண்காணிப்புல கொண்டு வரணும்னு தீவிரமா யோசிச்சு செந்திலும் நானும் திட்டம் போட்டு உன்னை வேலைக்குச் சேர்த்தோம். ஜெயத்தியும் ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்க மூலமா தான் உன்னை அந்த கயவன் மிரட்டுறான்னு தெரிஞ்சு துணைக்கு ஆளனுப்பினேன். அப்படியும் ஏமாற இருந்தேன் கண்ணம்மா" என்று அவன் சொன்ன போது அவனது உடல் இறுகியது. அணைப்பின் இறுக்கம் அவன் மனதை உணர்த்தியது. மெல்ல திரும்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள். "இதுக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கலாம் கண்ணம்மா" என அணைத்துக்கொண்டான்.

"உம் சொல்லுங்க" என ஊக்கினாள் அனிதா.

"அந்த அக்கிரமக்காரன் வந்துட்டான்னு எனக்கு என் ஆட்கள் தகவல் தெரிவிச்சாங்க. ஆனா அவங்க கதவை உட்பக்கமா பூட்டுவாங்கன்னு நானே எதிர்பார்க்கல்ல. அதனால பின்பக்கமா வந்தேன். அதுக்கு முன்னாலேயே ஜெயந்தி உங்கம்மாவை சந்திச்சு என் விருப்பத்தையும் அவங்க செஞ்ச தவறையும் எடுத்துச் சொன்னதுல உங்கம்மா என் பக்கம் வந்துட்டாங்க. தன்னால பாழான மகளோட வாழ்க்கையை தானே திருத்தணும்னு அவங்க நெனச்சது தான் அவங்க உயர்ந்த குணத்தைக் காட்டுச்சு." என்றான். உயிருக்கு உயிரானவன் வாயால் தன் தாயின் நற்குணங்களைக் கேட்ட மகள் மகிழ்ந்தாள். அவன் தொடர்ந்தான்.

"நீ கதவைத் திறந்து ஓடி வந்ததும் என் உயிரே எங்கிட்ட திரும்பி வந்த மாதிரி இருந்தது அனி. ஆனா என்னைக் கூட கவனிக்காமல் நீ கிணத்துல குதிச்சே பாரு அந்த கணம் இனி என் வாழ்க்கையில நான் நெனச்சுக்கூடப் பார்க்க முடியாது" என்று அவளை இறுக அணைத்தான். "அப்படியானால் பின் கதவைத் திறந்ததும் தன்னை நெருங்கியவன் கதிர் தானா? அதைக் கூடவா கவனியாமலா கிணற்றில் விழுந்தேன்? என நினைத்துக்கொண்டாள். அந்த அணைப்பின் இறுக்கமும் அவனது உடலின் விறைப்பும் அவன் எத்தனை தூரம் மன வேதனை அனுபவித்திருக்கிறான் என்பதைக் காட்டின. தன்னையறியாமல் அவனோடு ஒண்டிக்கொண்டாள்.

அவன் தொடர்ந்தான். உன்னைக் கிணறிலிருந்து தூக்கினால் தலையில் அடிபட்டு ரத்தக்காயம். என்ன செய்வேன் நான்? ஓடினேன் தூக்கிக் கொண்டு. நீ கண் விழிக்காமல் கிடந்த அந்த மூன்று நாட்களும் எனக்கு நரகம் இல்லை இல்லை அதை விட மோசம்." என்று இறுக அணைத்து இதழில் இதழ் பதித்தான். கிறக்கமாக நின்றவளைப் பர்த்து மீண்டும் கன்னத்தில் இதழ் பதித்தான்.

"ஆனா..அம்மா நீங்க தான் என்னைக் காப்பாத்துனீங்கன்னு ஏன் சொல்லல்ல? ஏன் மாமன் மகன்னு பொய் சொன்னாங்க?"

"அது முழுக்க முழ்க்க பொய் இல்லைஅனி. என் அப்பா உங்கம்மாவுக்கு தூரத்து உறவு முறையில் அண்ணன். அதை ஒரு ஃபோட்டோ மூலம் அறிந்து கொண்டார்கள். அதிலிருந்து நான் உன் மாமன் மகன் ஆகி விட்டேன்" என்று சிரித்தான்.

"ம்க்கும் அத்தையும் மருமகனும் சேர்ந்து கொண்டு நாடகத்தை நடத்தினீர்கள் இல்லையா?"

"அப்படி இல்லை கண்ணம்மா. என்னை மணப்பதில் நீ எவ்வளவு உறுதியாக இருக்கிறாய்? உண்மையிலேயே நீ என்னை விரும்புகிறாயா இல்லையா? இது போன்ற விஷயங்களை நான் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் ஒரு கட்டாயக் கல்யாணம் என நீ நினைக்கக் கூடாது இல்லையா? அதனால் தான் உன் வாயிலிருந்து வரும் வரை நான் பொறுமை காத்தேன்.

சட்டென விலகி அமர்ந்தாள். அவளது முகத்தில் இறுக்கம். தவித்துப் போனான் கதிர். "என்ன அனிதா?" என்றான் பரிதவிக்கும் குரலில்.

"கதிர் நான்..நான் வந்து இது எனக்கு இரண்டாவது.." அவள் முடிக்கும் முன்னர் தனது கரத்தால் மெல்லிய இதழை மூடினான்.

"இனி ஒரு நாளும் அப்படி நினைக்காதே . நீ எப்போதும் என் தேவதை தான். பவித்திரம் சற்றும் குறையாத என் தேவதை. கடந்த ஆறு மாதங்களில் நடந்தது அத்தனையும் கெட்ட கனவு. இனி நாம் வாழப் போவது தான் காவியம்" என்றான். இவனது காதலுக்கும் அன்புக்கும் ஈடே இல்லையே? இவனை நான் அடைய என்ன தவம் செய்தேன்? என எண்ணி அவனது தோளில் சாய்ந்தாள் பாவை. அவனது கரம் மெல்ல அவளைத் தழுவியது. பூங்காற்று இருவரையும் தாலாட்டியது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியாது. சரம்மாள் வந்து கனைத்தார்கள். அவசரமாக விலகினாள் மகள்.

"அனிக்கண்ணு. இன்னைக்கு புதன் கிழமை. நாளை ஒரு நாள் பொறுத்துக்கோ. வெள்ளிக்கிழமை தாலி ஏறியதும் நான் உங்க நடுவுல வரவே மாட்டேன்" என்றதும் இருவரும் சிரித்த மகிழ்ச்சி சிரிப்பில் தாயின் உள்ளம் நிறைந்தது. அனிதா என்னும் கொடி சரியான மரம் தேடி படர்ந்து விட்டது. அவர்கள் வாழ்வும் வளமும் இனி காவியமாகும். இனி எந்நாளும் அனிதாவுக்கு திருநாளே!
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
சரசு டீச்சர் இப்போ தான்
உறுப்படியா முடிவு எடுத்து விட்டார்
கதிரவன் அருமை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top