• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karpunilai yathenil

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
வானவளும் என்னினமோ
பூசுகிறாளே அடர்ந்த அஞ்சனத்தை விழிகளிலே..

நிலவான் அவன் பவனி வர
உடல் முழுதும் நட்சத்திர அலங்காரம்..

வருவது நிலவுதான் என்ன காம கிரகணம் பிடித்த நிலவு..
வெற்று கருமேகமாய் நான்..

இதோ பவனிக்கான பந்தயம்
மறுபடியும் அஞ்சனம், நட்சத்திர அலங்காரம்..

என்னயிது இருள்வானில் ஒளிக்கீற்று?
கண்கூச நான்‌ உடல் கூசி ஒரு ஆணா!!!!? அதுவும் இங்கே??

பெர்முடா முக்கோணம் என்பது பழகியதே என்னை போன்றவருக்கு..
இன்றோ ஒரு முக்கோண காதல் அட இதுவும் இனிக்கிறதே..

தீண்டி குளிர்காய மட்டுமே தேகம் என்ற கூற்றை உடைத்து
சிறகறுந்த சிட்டுக்குருவிக்கு
கதை சொல்லும் படலம்..

உடலுக்கு காசு மனதுக்கு பாசம் இது தானே என் ஏக்கம்..
சிலரோ பணத்தோடு மையல் கொண்டு மனதினை விற்றனர்..

ஏழைக்கு ஒரு வேளை சோறு
இனிமையோ இனிமை
எனக்கும் அப்படியே உடல் ரணமில்லாமல், மனம் பேசும் நிமிடங்கள்..

யாரையோ வெருப்பேற்ற
விருப்பமில்லாமல் வந்த சூரியன்
வர்ணிக்கிறான் அவன் கடந்த வான வீதிகளை..

இருளோடு ஏன் நீ...
என்ன வார்த்தை இது
எனக்கான மனதை விரிக்க
எண்ணம் வெளியிட ஒரு ஓசோன் வெளியா??

ஆம் நானும் பருவம் தப்பிய மேகம்..
இருக்கம் கூடி கருமேகம் கூட்டத்தில் நானும் ஒருவள்
ஆயிரம் மின்னல்கள்
ஆயிரம் இடிகள்
மேகத்தின் வலிதனை யாருணர்ந்தார்?
மோகம் தீர்க்க இம் மேகம்..
மழை மட்டும் பொய்த்தது என் விழிகளில்..

வா என்னுடன் வீதிஉலா
பறவைக்கோர் விடுதலையா
விடுகதையா..

பணத்தோடு பங்கிட்ட பாகம் நான்
மனதோடு பயணிக்க இதோ வந்தான் நீலவானம்,
நானோ இருளுக்கு இறுகும் பழுப்பு மேகம்...

வெண்ணிற மணல் பரப்பு
விந்தையான மனகளிப்பு
நீரினால் சூழும் உலகில்
மொண்டு குடிக்க நீரில்லை..
சுற்றுலா தலத்தில் பத்தாண்டு
எனக்கென்னவோ இன்று புத்தாண்டு..
சுற்றிப்பார்க்க பலர் வந்தனர் என்னை மட்டும்

நாளொரு வண்ண சேலை
நாளொரு வண்ணம் காதல் சொல்லும் காளை

யானறிந்த பாடல்கள் மட்டும்
உடன் பிறப்பின் துணையோடு
கருப்பை பகிர்ந்தவனிடம்
கருத்தை பகிர் முடியாத கருப்பு பக்கம்...

கண்ணாடி உனை காட்டும் அதனாலே வெறுக்கிறேன் என் பிம்பம் காண
வெறுக்கிறேன் கண்ணாடியை
அவன் விழிக்கு விழும் திரையினை கண்டு,...

ஐந்து ஆறானால்
ஆனந்த ஊற்று..
வேகப்பயணம்
வேண்டிய பாதுகாப்பு
பறக்கிறேன் மேலே மேலே
தெளிவான வாழ்வினை தேடி
என் நிலையினை மறந்து...

அந்தோ சடாரென மோதிய என்
பழகிய மேகம்...
இடித்த தாக்கம் இடியாய் இறங்கியதே...
நீ வெறும் நகரும் மேகம்
கலைபவள்
கலைக்கபடுபவள்..
அவனோ நீல வானம்,
வானம் என்றும் மேலே
மேகம் என்றும் கீழே...

ஆறாத தவிப்புடன் ஆறாம் நாள்
விடியல்
விடியல் என்றும் இனி இல்லை இம்மேகத்துக்கு...
தவிப்பாய் பார்த்த வானத்திடம்
மேகம் கூறியது நகர்கிறேன் என
சூரியன் மறைந்த வானமாய் ஆனது அம்முகம்..

வா மணபந்தல் காண என தூது..
நானா அங்கா, அங்கமாய் அவையில் என்னை பூட்டி நிற்க
தெரியாத சாவி நான்
சுழற்றுவார் பலர்
திறந்தவன் ஒருவனே..
அயினும் வரமறுக்கிறேன்
பூட்டை விட்டு...
காரணம் செல்லரித்த சாவி நான்..

பிரியாவிடை..
வானம் தேடி வரும் இம்மேகம் என்னும் கூற்றோடு..

நகர்கிறேன் இதோ முதலிலிருந்தா?
இருளாஞ்சனம் பூசி
நட்சத்திர அலங்காரம் தரித்த மேகம்...

ஏனோ ஏனோ வேண்டுவதெல்லாம் நீல நிற மேகம்..
மோகம் கொண்டு வந்து அணைக்க வந்த கரிய மேகத்தை
எதிர்தேன் இன்று ஏன்‌ ஏன்
ஆசையா கடந்து வந்த வானம் காண...

உழல்கிறேன் உழல்கிறேன் புயலின் மேகமென..
ஒருவேளை
மெய் தீண்டாத வானமானதாலா?
மெய்யான ஒரு உருவம் கொண்டதாலா?
மெய்தனை மெய் உணர்ந்து கொள்ளாததாலா?

வந்துவிட்டேன் வானத்திடம்
என்ன சொல்லி அழைப்பேன்?
நான் அறிந்தது அந்த நீல வானமட்டும்..
அதை கொண்டு தூது விடவா?!!
நான் யார் வானத்துக்கு?
இப்பாவி மேகம் தான் யாதுறைக்கும்...

வான் தேடிய மேகம்
மெல்ல வந்தது வானம்
மேகமோ அர்ப்பணிக்க எண்ணி
துள்ளி குதிக்க
கருமேகம் நகர்ந்தது நினைவடுக்கில்
மெய் கருத்தினை கூறியதால்
நீலம் தோய்த்ததே வானம்
அம்மா எரிகிறது உஷ்ணத்தால்..
சிதறியதோ மேக மனம்..
புதிதா என்ன?

வன்மையாய் மெய் தீண்டிய நீல வானம்..
போதும் உடைந்து விட்டேன்
பொழிந்துவிட்டேன் நான் பாரம் தாங்கிய மழைதனை
ஓஓஓஓஓஓ என்று மழைநீர்
என்னுளிருந்து...
வதங்கியது வானம்
வாழ்வளிக்குமா மேகம்...

மேகத்தின் தவிப்போ கடந்து கடத்தி போன கருமேகங்களின் கரைதனில்
வானமோ அடி முட்டாள் மேகமே இது தானா?
நீயோ ஒருமுறை தான்
கருமேகமானாய்
நானோ தரித்தேன் ரெட்டை வேடம்
நீலவானத்துக்கும் கருமைஉண்டு..
கருமை தீட்டல்ல
கருமை தவறல்ல
நீ விரும்பி சுமக்காத போது..

இதோ மேகத்தை சுருட்டி கலந்தது வானம்...
வெண்மேகமாய் பவனி வரும் வானம்..

மேகங்கள் நகர்கின்றன..
நாம் மட்டும் துவள்வதேனோ?
மேகத்துக்கும் வாழ தாகமுண்டு என்றணர்ந்த வானம் போல்...
பல மேகங்கள் நல் வானம் கலந்தால்..
ஆனந்த மாரி பொழியாதோ
அகம் தான் மலராதோ?..
இப்போதுறையுங்களேன் கற்புநிலையாதெனில்??!!!!
 




Last edited:

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
வெகுநாள் கடந்து புனைந்த கவி நான் விரும்பிய கதைக்கு?
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அப்புக்குட்டி சூப்பர்டா ரொம்ப நாட்களுக்கு பிறகு உனது கவிதை நம் தளத்தில்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Lovely Review Aparna
Mudiyum pothu konjam manasu kanathu pochuda
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top