• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

karuppan - short story

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
Hi Friends,
One of my old short story. Read and share your views. :) :) :) :) :)

இது ஒரு கற்பனை... :) :) :)

கருப்பன்

அன்று அக்டோபர் 2.

காலையில் தலை குளித்து பூக்களை சூடிக் கொண்டாள் செல்லம்மா. புது உடை அணிந்திருந்தாள். சற்று நிறம் குறைவாக இருந்தாலும் அழகாய் இருந்தாள்.

"செல்லம்மா… செல்லம்மா… ஆத்தாடி என்னா ஷோக்கா இருக்க? அக்டோபர் இரண்டானால் ஒரே தூள் தான். என்ன விசேஷம்?” என்று கேட்டாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

"உனக்குத் தெரியாததா அக்கா? நமக்குப் பிறந்த நாள், கல்யாண நாள் எல்லாம் ஏது? காந்தி ஜெயந்தி தான் ஒரே விசேஷம்” என்று சிரித்தமுகமாக கூறினாள் செல்லம்மா.

"அதென்னடி விசேஷம்? நீ அவரைக் கண்ணால பார்த்ததுண்டா ?" என்று சுவரில் சாய்ந்து நின்றபடி கேட்டாள் அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி.

"அப்பால குந்து க்கா, ஏன் நின்னுட்டு இருக்க? ", என்று அங்கிருந்த திண்டை காட்டியபடி கூறினாள் செல்லம்மா.

"இன்னக்கி மட்டும் தான் அக்கா அந்த டாஸ்மாக் மூடி இருக்கும்." என்று இன்முகமாகக் கூறினாள் செல்லம்மா.

அங்கு அமர்ந்திருந்தான் கருப்பன். பெயருக்கு ஏற்றார் போல் கருப்பாய் இருந்தான். அவன் நகங்கள் அழுக்கு தோய்ந்திருந்தன.கண்களை உருட்டிக் கொண்டு காதுகளை தீட்டிக் கொண்டு அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தான் .

"இந்த ஒரு நாள் தான், அவுக குடிக்காம வீட்டுக்கு வருவாக. மத்த நாளெல்லாம் குடிச்சிட்டு மட்டையாக்கிருவாக ... அவர் நல்ல மனுஷன் தான் அக்கா.", என்று செல்லமா தன் கணவனை பற்றி உயர்வாகக் கூற, “அது சரி!. நம்மள மாதிரி உசிரெல்லாம் நல்ல மனுஷன்னு சொல்லித் தான் காலத்தை ஓட்டனும்...." என்று சலிப்பாக கூறினாள் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

“அட லொள்ள பார்....” என சிலாகித்துக் கொண்டாள் செல்லம்மா.

"அப்படினா நல்ல சாப்பாடுன்னு சொல்லு.” என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி ஆர்வமாகக் கேட்க, “ஆமா க்கா, இன்னக்கி கறியும் சோறும். தினமும் கூழும் கஞ்சியும் சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு.” என்று செல்லமா கூற, இன்றைய உணவின் பேச்சு கருப்பனுக்கு ஆனந்தத்தை அளித்தது .

"இன்னக்கி அவுக சோலிய முடிச்சிட்டு சீக்கிரம் வந்திருவாக .” என்று வீட்டு வேலையைப் பார்த்தபடி செல்லமா கூற, "சரி சரி நீ உன் சோலிய முடி. நான் கிளம்பறேன்." என்று கூறிக்கொண்டு கிளம்பினாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

"ஏய் கருப்பா! சாயந்திரம் நாங்க சினிமா, பீச் போறோம், வீட்டைப் பத்திரமா பாத்துக்கோ” என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தாள் செல்லம்மா.

அன்றைய பொழுது செல்லம்மாவின் இனிய நாட்களுள் ஒரு நாளாக பதிவாகியது.

அக்டோபர் 3:

தன் கண்களை உருட்டிக் கொண்டு செல்லம்மாவை சுற்றிச் சுற்றி வந்தான் கருப்பன். செல்லம்மாவின் வேதனையை அவள் முகம் காட்டியது.

'இன்று குடித்து விட்டு வருவான். இதற்கு விடிவே கிடையாதா?' அவள் மனம் ஏங்கியது.

“செல்லம்மா என்ன யோசனை? “என்று வினவினாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி .

"அக்கா அந்த ரமெஷ் பையன் கைல, கால்ல விழுந்தாவது டாஸ்மாக் திறக்க வேண்டாமுன்னு கெஞ்சனும்.", என்று செல்லமா சோர்வாகக் கூறினாள்.

ரமேஷ் டாஸ்மாக் திறக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது தான் கருப்பனுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது.

தன் நான்கு கால்களால் பாய்ந்தோடினான். அவன் வால் வேகமாக ஆடியது. டாஸ்மாக் நோக்கி ஓடினான். நேராக ரமேஷ் மீது பாய்ந்தான். ரமேஷை நகங்களால் பிறாண்டினான்.

“ஐயோ! ராமா!” என ரமேஷ் அலறினான். கருப்பனின் கோர பற்கள் ரமேஷை அச்சுறுத்தின. ரமேஷ் வீட்டை நோக்கி ஓடினான். கதவை மூடினான். தோட்டத்தில் இருந்து கற்களை எடுத்து கருப்பன் மீது ஜன்னல் வழியாக அடித்தான். கருப்பன் உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

அன்று ரமேஷ் பயந்து கொண்டு கடையை திறக்க வில்லை. அக்டோபர் 3 ஆம் தேதியும், டாஸ்மாக் மூடி இருந்ததால் சுற்றுப்புறத்தில் இருந்த மக்கள் அங்கு நிலவிய அமைதியில் ஆச்சரியப்பட்டனர்.

செல்லம்மாவும் ஆனந்தம் அடைந்தாள்.

அக்டோபர் 4:

அரசாங்கத்திற்குப் புகார் கொடுத்து tasamc திறக்க முயற்சி செய்தான் ரமேஷ். ரமேஷுடன் இன்னும் இருவர் வந்தனர். ரமேஷ் அவர்களோடு சேர்ந்து கடையைத் திறந்திருந்தான். கருப்பன் புதிதாக வந்தவர்களைத் தாக்கினான். ரமேஷ் கல் எறிய, "லொள்… லொள்… லொள்…" எனக் குரைத்துக்கொண்டு கருப்பன் ஓடினான் .

“ஒரு நாய் நம் வேலையைக் கெடுப்பதா?” என முனங்கிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

அவன் வேலைப் போய் விடுமோ என்ற பயம் அவனுக்கு.

சிறிது நேரத்தில் கருப்பன் பல நாய்களுடன் அங்கு வந்து மூவரையும் தாக்கியது. கடைக்குள் புகுந்து பாட்டிலை உருட்டி நொறுக்கியது. கருப்பனைக் கட்டு படுத்த முடியவில்லை.

அந்நேரம் அங்கு வந்த செல்லம்மாவின் கணவன் இதைக் கண்டு ஆத்திரம் அடைந்தான். மிக விரைவாக வீட்டை அடைந்தான். "செல்லம்மா, இங்க என்னத்துக்கு குந்திக்குனு இருக்க?", என்று செல்லமாவின் கணவன் அவளைப் பார்த்து கத்தினான்.

"யோவ்! கொஞ்சம் கம்னு கட ... இன்னாதுக்கு இப்படி கத்தற?" என்று செல்லமா சிடுசிடுத்தாள்.

“உன் செல்லப் பிராணி, டாஸ்மாக் கடையில் செய்ற காரியத்தை அங்க போய் பாரு.” என்று அவன் கோபமாக கூற, செல்லம்மா டாஸ்மாக் கிற்கு விரைந்து ஓடினாள்.

செல்லம்மாவை கண்ட கருப்பன், அவள் காலடியில் அமைதியாகப் படுத்தது.

“என்னம்மா திமிரா? நாயை வைத்து மிரட்டுகிறாயா? “என்று ரமேஷ் வினவ, “என்னய்யா? எங்க ஏரியா பொம்பளை கிட்ட வம்பு பண்றியா?”என அவன் மீது சீறி எழுந்தனர் அங்கிருந்த பெண்கள்.

அங்குக் கைகலப்பு எழ, பெண்களும் பொது மக்களும் போராட்டத்தில் இறங்கினர். கடையை மூடி விட்டு அரசாங்கத்திற்கு மனு அனுப்பினான் ரமேஷ். வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் ரமேஷை விரட்டி விரட்டித் துரத்தியது கருப்பன். கருப்பனுக்கு தேவை அவனுடைய எஜமானியின் சந்தோசம்.

ஏனோ, ரமேஷிற்கு மனம் உறுத்தியது. 'கருப்பனுக்கு தன் எஜமானியின் மீது இருக்கும் அக்கறை ஏன் தனக்கு சக மனிதர்களிடம் இல்லை' என்று யோசித்தான்.

செல்லம்மாவை அழைத்துத் தான் பிழைத்துக் கொள்ள வேறு வேலையைத் தேடிக்கொள்வதாக கூறினான். 'இது உனக்காக மட்டும் எடுத்த முடிவில்லை . சமுதாயத்திற்காகவும் தான் . கருப்பன் கற்பித்து கொடுத்த பாடம்' எனச் சிரித்தான் ரமேஷ்.

ஆனால் தான் சென்றாலும், அரசு வேறு யாரை வைத்தாவது டாஸ்மாகை திறக்கும் எனக் கூறினான் ரமேஷ்.

கருப்பன் வாழும் பகுதியில் டாஸ்மாக் தற்காலிகமாக மூடப்பட்டது.

எஜமானியின் தற்காலிக நிம்மதியை நிரந்தர நிம்மதியாக மாற்ற அந்த நான்கு கால் பிராணி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

கருப்பன் தன் எஜமானியின் நிம்மதிக்காகச் சிந்திக்க தொடங்கி விட்டது.

நாம் நம் சமுதாயத்தின் நலத்திற்காகச் சிந்திக்கலாமே!

சிந்திப்போம்!

நல்ல மாற்றத்தை எதிர் பார்ப்போம்!
---- அகிலா கண்ணன்

 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அருமையான , அவசியமான கருத்து.வாழ்த்துகள்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நம் நாட்டில் பல செல்லம்மாக்கள், அனைவருக்கும் தேவை கருப்பன்....
கருப்பன் எடுத்த முடிவை செல்லம்மாக்கள் எடுத்தால் மிக்க மகிழ்ச்சி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top