• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
hi makkale, neram kidaitha kaaranathaal epi seekkiram pottuten.. eppadi irukkunu comments la sollunga. nandri.

27

விழியன் இங்கு நடந்த பிரச்சனைகள் எதையுமே அறியாமல், வெண்பாவை காண ஆவலோடு வீடு வந்து சேர்ந்தான்.அவளிடம் பேசியே பல நாட்கள் இருக்கும், மிக மிக அரிதாய் அவன் கேட்கும் கேள்விக்கு பதில் அனுப்புவாள் வாட்ஸ் ஆப்பில்.அது மாத்திரமே!
வீடு வந்து சேர்ந்தவன் அவளை காணாது தன் அன்னையிடம் கேட்க , மகனிடம் நடந்த விஷயங்களை சொன்னாள் ரேணுகா. செய்வதறியாது சோபாவில் தொப்பென்று அமர்ந்து விட்டான்.விடிந்து விட்டிருந்தது தாய் மகனின் பேச்சு தொடர்ந்ததில்.
“எப்படி மா அவளை நீ போக விட்ட?”
“டேய் கேட்டதையே எத்தனை முறை கேட்பே நீ? போறவளை கையை பிடிச்சா தடுக்க முடியும்?சொல்ல சொல்ல கேட்காம கிளம்பிட்டா”
அவனுக்கு பொட்டுத் தூக்கமில்லை, அசதி எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை!
மகனின் மன உளைச்சலை பார்க்க பெற்ற தாய்க்கு எப்படி இருந்ததாம்?
காலை ஏழறை ஆகும் வரை குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் எழுந்தால், அவற்றை ஏற்கும் மனப்பான்மையில்லாமல், தவிர்க்க முயன்றால் திருமணம் முறியும். ஏதேதோ சிந்தனை தோன்றி அவனை குழப்பியது.நீண்ட யோசனைக்குப் பின்னர் தன் மாமன் வீட்டுக்கு அழைக்க, சபாபதி தான் எடுத்தார்…
இவனின் நலம் விசாரித்தவர்,மேலும் என்ன கேட்க என்பது போல் யோசிக்க,
“வெண்பா முழிச்சிட்டாளா, அவ கிட்ட பேச முடியுமா மாமா?”
“ஆமா விழியா, இங்க தான் இருக்கா…கொஞ்சம் லைனில் இரு”
நீண்ட நேரமாய் காத்திருந்தான், அவர் மகளை ஏதோ அதட்டுவது போல் கேட்டது ,சற்று தெளிவில்லாத குரலில்! அதன் பின் வந்து போனை எடுத்த வெண்பா ஹலோ என்க,
“என்னதான் டீ உன் பிரச்சனை?வீட்டை விட்டு ஏன் போனே?நான் இன்னிக்கி வருவேன்னு தெரியும் தானே? என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டியா?”
பயங்கரமாய் சத்தம் போட்டான்!
“விழியன் இனி உன் கூட என்னால் இருக்க முடியாது! பொய் சொல்றதே தப்பு, அப்படி சொல்லி நீ என்னை மட்டும் இல்லை,இன்னும் நிறைய பேரை ஏமாத்தியிருக்க!”
அவள் பக்கத்தில் சபாபதி, “வெண்பா…” என்று அதிரும் குரலில் கூறியது வேறு கேட்டது.இரவிலிருந்து இவளை பற்றிய சிந்தனையில் இவள் பேசியதற்கான காரண காரியங்கள் எதுவும் அவனுக்கு புலப்படவில்லை.
சந்தேகத்திற்கு விஷயமில்லாதபொழுது, சந்தேகத்தைக் கிளப்பும்படி நடப்பது அறியாமை. ஒருமுறை சந்தேகம் எழுந்தால், பிறகு அது போகாது.
‘இவள் என்னை சந்தேகப்படுகிறாளா?’
“யாரை ஏமாத்தினேன்?”
“என்னையும் , ரதியையும்”
“அவளை ஏமாத்தினேன்னு உனக்கு யார் சொன்னா?”
“நீங்க அதை சொல்லலை தானே, அப்புறம் என்ன கேள்வி?”
“வெண்பா என்னை கோவப்படுத்தாதே! நான் அன்னைக்கு சொன்னது தான், என் வாழ்க்கையில் உன்னை தவிர யாரும் இருந்ததில்லை. அது தான் உண்மை அதை நீ நம்பித்தான் ஆகணும்!”
பதில் பேசாமல் நேரம் கடத்தினாள்.
“வெண்பா , எதுனாலும் இங்க நம்ம வீட்டில் வந்து பேசு, அங்க இருந்து சண்டை போட்டுகிட்டு மாமா மனசை கஷ்டபடுத்தாதே! ஏற்கனவே அவங்களுக்கு நிறைய பிரச்சனை!”
“முடியாது விழியன். உன் வேலையை மட்டும் பார். இனி என் கிட்ட பேசாதே. வைக்கிறேன்” அவன் அடுத்த வார்த்தை பேசும் முன் போனை வைத்துவிட்டாள்.


கணவனும், மனைவியும் அடிப்படையில் ‘ரைவல்’ போல் போட்டியிடும் மனப்பான்மையுள்ளவர்கள். இப்போது வெண்பா விழியனுக்குள் ‘நான் என்ன உன் கிட்ட இறங்கி போகணுமா?’ என்ற போட்டி ஆரம்பமானது.
வெண்பா அவனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள். தமிழ் , சபாபதி, ரேணுகா இவளின் முடிவை கேட்டு அதிர்ந்தனர். அவர்களிடம் ரதி பற்றி எதையும் சொல்லவில்லை. அவன் பொய் உரைத்துவிட்டான் என்பதை மட்டும் கிளிப்பிள்ளை போல் திரும்ப திரும்ப சொன்னாள்.அத்தனை வேண்டுதல் கனவுகள் ஆசையில் திருமணம் செய்து வைத்தனர்…எல்லாம் இதற்கு தானா?இப்படி ஒரு அவசர புத்திக்காரியா தாங்கள் பெற்று வளர்த்த மகள் என்று நொந்து போயினர் சபாபதி, சரஸ்வதி தம்பதியினர்.


விழியன் வெண்பாவின் முடிவை கேட்டு சுக்குநூறானான். அடிப்படையாய் கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பிக்கை கூட தன்னிடம் இவளுக்கு இல்லையா? அத்தனை கீழ்தனமான ஆளாய் தன்னை எண்ணி விட்டாளா? அவன் அவள்மீது உயிராய் இருக்க இவள் இத்தனை வீம்பு காட்டியது ஆண்மகன் அவனின் கோபத்தையும் ஏகத்துக்கு கிளப்பி விட்டிருந்தது.
பிரகாஷ் அவனை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் ஒரு சாட்சியாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்!அவன் நினைத்தால் ரதியை வேறு எங்காவது அனுப்பி வைத்திருக்கலாம்.ஆனால் அந்த சுகந்திரத்தையும் கொடுத்து அவளை மேலும் கெட்டவளாக ஆக்கும் வாய்ப்பை தர அவனுக்கு இஷ்டமில்லை. அதற்காகவே அவளை அவன் கூட வைத்திருந்தான்! சாரதியின் கண்காணிப்பால் அது சாத்தியமும் ஆகியிருந்தது.
கம்பெனியில் வெண்பாவுக்கு ஏற்கனவே பல நாள் விடுமுறை எடுக்கும் அவகாசம் தந்தாயிற்று, இப்போது இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வேலைக்கு போகாமல் விட்டது அவளின் உத்தியோகத்துக்கே உளை வைத்தது!அவள் இருக்கும் அந்த புரொபேஷன் பீரியடில் இது சாத்தியமில்லாததால், வேலை பறிபோனது. தான் நேசித்த இரு விஷயங்களையும் தன்னின் முட்டாள்தனத்தால் இழந்துவிட்டாள்!
தப்பு செய்கிறோமோ என்ற மெலிதான சந்தேகம் ஒரு புறம் அவளுக்கு தோன்றியிருந்தாலும் இன்னொரு பக்கம் விழியன் சொல்வதை முழுமனதாய் நம்பி அவனுடன் தன் வாழ்க்கையை கொண்டு செல்லும் பக்குவமும் அவளுக்கு இல்லை!வெளியே தன்னை தைரியசாலி போல் காட்டிக் கொண்டாலும், அவளுக்கு மனதில் அதீத துக்கம். வெளிப்புற தோற்றத்தில் அக்கறை சிறிதும் இல்லாமல் இருந்தாள்.உடலை கவனிக்கவில்லை. எடை கூடிவிட்டது போல் தோன்றியது.
நன்றாக சென்று கொண்டிருந்த வெண்பா விழியன் வாழ்க்கையில் புயலை கிளப்பி விட்டவள் நிம்மதியாக பிரகாஷ் வீட்டில் இருந்தாள். முதலில் இருக்க விருப்பபடாதவள் போல் நடந்து கொண்டிருந்த ரதி, இப்போது அதை தன்னின் இருப்பிடம் போல் மாற்றிவிட்டாள். பிரகாஷுக்கு இதில் எந்த சங்கடமும் இல்லை. பலன்களே அதிகம்.வீட்டில் ஒரு பெண் இருந்தாளே அதற்குரிய பலன்கள் அமையும் தானே!
ஆனால் பேச்சுவார்த்தை அறவே இல்லை. அவள் செய்த காரியங்களை கண்டவனால் அவளை பழைய மாதிரி நினைக்க முடியவில்லை.அதிலும் வெண்பா வேலையை விட்டு சென்ற பின் பிரகாஷ் மிகவும் நொந்து போனான். ரதி பெண்ணே அல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அவன் வளர்ந்த ஆசிரமத்தில் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி போய் எத்தனை பேர் இருக்க,இவளானால் அடுத்தவர் வாழ்க்கையில் அதையெல்லாம் குலைப்பதற்கே இருக்கிறாள்! அந்த வெறுப்பு எண்ணம் தோன்றியதில் இருந்து, வாரக் கடைசியில் கூட அவன் வீட்டில் தங்குவது கிடையாது. ஆபிஸில் வேறு வழி இல்லை ரதியின் முகத்தில் விழித்து தான் ஆக வேண்டும். விட்டிலாவது அவளை பார்ப்பதை தவிர்க்க வாரம் தவறாமல் அவன் வளர்ந்த அந்த அநாதை இல்லத்துக்கு செல்ல ஆரம்பித்தான்.
எப்போதும் பிரகாஷ் அப்படி போவது தான். முன்பு மாதம் சில முறை போனவன் இப்போது ரதியினால் வாரம் இரண்டு முறை போக ஆரம்பித்தான்.அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறான்.அன்றும் அப்படி அவன் கிளம்பி கொண்டிருக்க, ஆபிஸில் இருந்து அவசர அழைப்பு. அவனை அந்த வேலைகள் இழுத்துக் கொள்ள, அதில் மூழ்கிவிட்டான்.
வீட்டு போன் விடாமல் ஒலித்த சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்த ரதி , கண்டது பிரகாஷ் தன் ஆபிஸ் காலில் பேசிக் கொண்டிருப்பதையும், இங்க போன் அலறிக் கொண்டிருந்ததையும் தான். அவள் போய் அதை எடுக்க,
“ஹலோ பிரகாஷ் இருக்காரா?”என்றது ஒரு சாந்தமான குரல்.
“அவர் இன்னொரு போனில் பேசிட்டு இருக்கார், நீங்க யார்”
“நான் அன்பு இல்லத்தில் இருந்து பேசுறேன். இன்னிக்கு இங்க வருவேன்னு சொல்லியிருந்தார், அதான் நியாபகப்படுத்த கூப்பிட்டேன்”
இவள் பேச்சின் ஊடே வந்து அவளிடம் போனை வாங்கியவன்,
“மதர் இன்னிக்கி என்னால் வர முடியாதுன்னு நினைக்கிறேன் , ஐயம் வெரி சாரி…வேற யாரையும் அனுப்ப முடியுமான்னு பார்க்குறேன்”


அதன் பின் அவன் பலருக்கு போன் செய்து கேட்டதையும், எவருக்குமே போக வசதிப்படாது என்று அவர்கள் சொன்னதையும் ஸ்பீக்கரின் மூலம் ரதியும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள்.

யாருமே கிடைக்காததால் , மெதுவாய் ரதியிடம்,
“உன்னால் அங்க போக முடியுமா ரதி, ஒரு இரண்டு மணிநேரம் தான்”
மறுப்பாய் தன் தலையசைத்தவள்,
“நான் ஏன் போகணும் பிரகாஷ் ? நீ தான் அங்க வளர்ந்த அநாதை…உனக்கு அங்க சேவை செய்ய வேண்டிய கட்டாயம். எனக்கு என்ன அப்படியா?”
சற்று நேரம் இறக்கமில்லாமல் பேசிய அந்த அழகிய முகத்தை பார்த்தவன்,
“இப்ப நீயும் அநாதை தான் ரதி, மறந்துட்டியா? நானும் உன் வாழ்க்கையில் இருக்க போறது இன்னும் கொஞ்ச நாள் தான்”
என்றுவிட்டு தன் லாப்டாப் இத்தியாதிகளை எடுத்துக் கொண்டு அவளை பார்க்கப் பிடிக்காதவன் போல வெளியேறிவிட்டான்.


அவன் சொன்ன வார்த்தையில் ரதி உடைந்து போனாள். அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது!
‘ஆமா பிரகாஷ் ! அது உண்மைதான்’
‘நானும் அங்க இருக்க வேண்டியவ தான்’
அவன் சொன்னது வலித்தாலும், அது உண்மை தானே?
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
எல்லாம் கொஞ்சம் நேரம் தான்…அழுகையை நிறுத்தியவள் விழியனை பற்றி எண்ணத்தை தன் மனதில் கொண்டு வந்தாள். அவனை நேரில் சந்தித்து விட முடிவெடுத்து அவன் இல்லம் கிளம்புகிறாள்.

அவன் வீட்டுக்கு இவள் சென்று அழைப்பு மணியை அடிக்க, தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தான்.ரேணுகா வீட்டில் இல்லை.
கதவு திறந்தவனை விழி அகல பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி. முன்னை விட களையாய் இருந்தான். திருமணத்தின் பின் மேலும் வசீகரமாகிவிட்டானோ?அவள் எண்ணப் போக்கை தடை செய்தன அவன் கேள்விகள்.
“யார் வேணும்?”தெரியாதவரிடம் கேட்பது போலவே கெட்டான்.
“நான் உன்னை பார்க்க தான் வந்தேன் விழியன்”
“உன்னை என் வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கவே நான் விருப்பலை, தயவுசெய்து போயிடு ரதி”
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமையம், காம்பவுண்ட் பக்கம் வந்த பக்கத்து வீட்டு பெண்மணி,
“ஊரில் இருந்து வந்துட்டியா விழியா? வெண்பா அவ அம்மா வீட்டுக்கு போயிருக்காளாமே, ஆமா யார் இது?”

அடுத்தவர் விஷயத்தை அறிந்து கொள்ள எத்தனை ஆர்வம் இந்த நாட்டில்?இருந்த எரிச்சலில் என்னவோ சொல்லி சமாளித்தவன், ரதியை அனுப்பிட எத்தனித்து,
“நீ கிளம்பு ரதி.நீ இதுவரை செய்து வைத்த பிரச்சனை எல்லாம் போதும்!”
சட்டென்று அவனை தாண்டி வீட்டினுள் நுழைந்துவிட்டாள். செய்வதறியாது அவன் அவளை பின் தொடர,சோபாவில் மையமாய் அமர்ந்தவள்,
“எத்தனை நேரம் நிற்கிறது? கால் எல்லாம் வலிக்கிது!” என்றாள்.
எள்ளும் கொள்ளும் வெடித்தது அவன் முகத்தில்!
“ரதி எதுக்கு இப்ப உள்ளே வந்தே? கிளம்பு முதல்ல”
“என் வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லு, நான் போறேன்”
அழையா விருந்தாளியாக வந்ததோடில்லாமல் கேள்வியும் கேட்டாள்.
“ஏன் டா உனக்கு என்னை பிடிக்கலை? நீயா தானே என் கிட்ட வந்து பழகின? எதுக்கு அத்தனை பாசம் காட்டின? அப்புறம் ஏன் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னே? உன்னால என் லைஃபே போச்சு தெரியுமா?”
விழியன் வாயடைத்து போனான்.
எல்லா தவறுகளையும் அவள் செய்துவிட்டு தன்னை இப்படி குற்றவாளி கூண்டில் நிறுத்துவாள் என்று நினைக்கவில்லை.
“ரதி, நான் உன்னை பிரண்டா மட்டும் தான் முதலில் இருந்தே நினைச்சேன். எனக்கு வெண்பா தான்னு என்னைக்கோ முடிவெடுத்திட்டேன். தயவுசெய்து புரிஞ்சிக்கோ. பழைய கதையை எல்லாம் பேசி நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் நீயே கெடுத்துக்காதே!”
அழ ஆரம்பித்தாள், அவளின் கடைசி ஆயுதம் அது!
“விழியன் என்னால உன்னை மறக்க முடியலை! வெண்பாவையும் உன்னையும் சேர்த்து பார்த்தா, எனக்கு…எனக்கு செத்திடலாம் போல இருக்கு”

இவளிடம் பேசி புரிய வைக்க முடியுமா?
“ரதி உனக்கு கஷ்டமா இருந்தாலும் நீ ஏத்துகிட்டு தான் ஆகணும்!எல்லா விஷயமும் நாம நினைக்கிறது போல நடக்கிறது கிடையாது.நான் உனக்கானவன் இல்லை. எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு.அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை.புரிஞ்சிக்கோ! ப்ளீஸ் இங்க இருந்து போ”
“முடியாது விழியன். இது தான் என் வீடு…நான் இங்க உன் கூட தான் இருப்பேன்!”

பொறுமையாக போனாள் ஆட்டம் காட்டுகிறார்கள், இவளும் அந்த வெண்பாவும்! கோபமாய் அவளை நெருங்கியவன் விட்டான் ஒரு அறை.அப்போதும் நகராமல் இருந்தவளை, கைப்பிடித்து அவன் தூக்க அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்.
திமிரி அவளை தன்னிடமிருந்து அவன் விலக்க, அதை அழகாய் தன் மொபைலில் பதிவு செய்து விட்டாள் அந்த நாடககாரி!
தான் நினைத்து வந்த வேலை முடிந்ததும்,
“என்னை விரட்டுறே இல்ல? நீ எப்படி வெண்பாவோட நிம்மதியா இருக்க போறேன்னு நான் பார்க்குறேன்”
“பாரு , நல்லா பார்.நான் அவளோட சந்தோஷமா இருக்க போறதை உன் ரெண்டு கண்ணால் நல்லா பாரு.. இப்ப மரியாதை கெடுறதுக்குள்ள வெளியே போயிடு…கெட் லாஸ்ட்”
அவளை தரதரவென்று கைபிடித்து வெளியே தள்ளியவன் , கதவை சாத்திவிட்டான்…ரதி தான் எடுத்த போட்டோவை வெண்பாவின் மொபைலுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தாள்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ரதி தான் எடுத்த போட்டோவை வெண்பாவின் மொபைலுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தாள்.
rathi ivalo cheapa behave panra............ venba enna seiya pora ithaiyum namba porala..........:unsure::unsure::unsure::unsure:nice epi sis:):):):):):)
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
விழியன் பாவம்
விழியன் உண்மையை சொல்லலாம் தானே
இனி வெண்பா படம் விவகாரத்து கேட்க போறளா
நான் நினைக்கிறேன் வெண்பா கர்ப்பம் தரித்து உள்ளதாக நிறை கூடுவதாக இருப்பதாக சொல்லி இருக்கிறீங்க
பிழையோ தெரியல
வெண்பா ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறாள்
 




Shangeetha ranjith

நாட்டாமை
Joined
Jan 20, 2018
Messages
38
Reaction score
47
Location
Mumbai
Penn puthi pinn puthi ennbathu,venba visaiyathil unmai ayiduchu......intha venba summavae aaduvaa ippo salangai ya Vera rathi katti viturukka...
.....aduthu Enna aagumo
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ரதிமீனா திருந்துவதற்கு எந்த அறிகுறியும்இல்லை,வெண்பா கர்பமாக உள்ளாரா,இப்போ இந்தப்படத்தை பார்த்ததும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கப்போகின்றாரே வெண்பா.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top