• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இவள் அவனிடமிருந்து விலக நினைக்க, அசைய கூட முடியவில்லை.
“என்ன ஆச்சு வெண்பா?” என்று அவன் பதற அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். தலை பாரமாய் தோன்றியது.அவள் நிதானத்திற்கு வரும் வரை அவள் தோளை பற்றியிருந்தவன்,
“வெண்பா என் மேல உள்ள கோபத்தில் உடம்பை கவனிக்காம விடாதே! பார்க்கவே என்னவோ வித்தியாசமா தெரியுறே!”
அவன் கரிசனம் உள்ளுக்குள் இதமாய் இருந்தாலும், வெளியே தன் எரிச்சல் முகத்தை காட்டிக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து விலகி நின்றவள் இன்னமும் தடுமாற,
“வெண்பா உனக்கு என்ன பண்ணுது? வா டாக்டர் கிட்ட போகலாம்”
அவளுக்கு என்னென்னவோ உடல் உபாதைகள் இருந்தது தான்.ஆனால் இந்த மயக்கம் இன்றைக்கு தான். “வா மா ஹாஸ்பிட்டல் போலாம்”
‘இவன் மூலம் போவதா!’
“வேண்டாம்”என்று திரும்பியவளை தன் இரு கைகளில் ஏந்தியவன் அவள் எதிர்ப்பை சட்டை செய்யாது தன் காருக்கு தூக்கிச் சென்றான்.
“விழியன் அடாவடி செய்யாதே.என்னை கீழே விடு.சொல்றதை கேளு. எனக்கு என்னவோ போல இருக்கு…”அவள் சொன்னதை எதுவும் அவன் கேட்கவில்லை. வீட்டின் ஹால் வழியே அவன் அவளை தூக்கிக் கொண்டு போக தன் குடும்பத்தினரின் பார்வையை சந்திக்க தயங்கி கண்களை மூடிக் கொண்டாள் வெண்பா.
அவளை தன் காரின் முன் சீட்டில் அமர வைத்தவன், தன் பக்கம் வந்த ரேணுகாவிடம்,
“அம்மா அவளை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போறேன்.இப்போ வந்திடுறேன்” “டேய் விழியா அவளுக்கு என்ன டா? என்ன டா செய்தே அவளை?சொல்லிட்டு போ”
“நான் ஒண்ணும் செய்யலை மா!எனக்கும் என்னன்னு தெரியலை.வந்து சொல்றேன்”
கார் சீறிப் பாய்ந்தது.
அதிரடியாய் வந்தான். என்ன பேசினார்களோ தெரியாது , ஆனால் இப்போது மகளை தூக்கிக் கொண்டு போகிறானே என்று தோன்றியது தான் பெண்ணை பெற்றவர்களுக்கு. காரில் அவன் போகும் போது போன் செய்து விஷயம் என்னவென்று கேட்டனர், அவன் அவள் மயங்கிவிட்டாள் என்று சொல்ல, எந்த மருத்துவமனைக்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னதே சபாபதி தான்.
டோக்கன் எடுத்துக்கொண்டு காத்திருக்க, சிஸ்டர் வந்து சில சம்பிரதாய கேள்விகளை கேட்டாள். அந்த கேள்விக் கணைகளில் திணறிப் போனாள் வெண்பா. இவன் முன்பு வைத்து என்னவெல்லாம் கேட்கிறாள். அவளின் கடமை கூட வெண்பாவுக்கு தவறாக பட்டது.
“உங்க எல்.எம்.பி என்ன” என்று அடுத்த கேள்வி பாய, அப்போது தான் அவளுக்கும் உறைத்தது !
இருந்த குழப்பத்தில் இதை பற்றி யோசிக்க கூட இல்லை.
அவள் முழிப்பதை பார்த்தவன் “சிஸ்டர் நீங்க அடுத்த பேஷண்டுக்கு முடிச்சிட்டு வாங்களேன்” என்று அனுப்பி வைத்தவன்,
“எல்.எம்.பி ன என்னன்னு தெரியுமா தெரியாதா?” என்றான்.
அவனை முறைத்தவள், “நானும் படிச்சவ தான் விழியன், ஓவரா போறே நீ”
அவள் முறைப்பில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“சரி அப்போ சொல்லு”
யோசிக்க ஆரம்பித்தாள்.ஒன்றுமே புலப்படவில்லை.
அவன் போனில் மூழ்கியிருந்தான். இங்க நான் ஒருத்தி குழம்பிட்டு இருக்கேன், இவன் என்னடான்ன…அவள் நினைத்து முடிக்கவில்லை.
“இந்த போட்டோ பார், அன்னைக்கு சாயங்காலம் வெளியே போயிட்டு வந்ததும் வயிறு வலின்னு கஷ்டப்பட்டியே. அது தானே?”
அவன் காட்டியது லண்டனில் வைத்து எடுத்த போட்டோ!ஆமாம் அவன் சொன்னதே தான்!எதையெல்லாம் நியாபகம் வைத்திருக்கிறான்!அவளே மறந்துவிட்டதை அவன் நியாபகம் வைத்திருந்தான்.
“அன்னைக்கு தான் கடைசியா?”
தயக்கத்துடன் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.
“வீட்டில் டெஸ்ட் செஞ்சு பார்த்தியா?”
அவன் கேட்பது அவளுக்கும் புரிந்தது. ஆனால் வாயை திறக்கவில்லை. “கேட்குறேனில்ல!”
அதற்குள் அவர்களிடம் வந்த சிஸ்டர், அதே கேள்வியை திரும்ப கேட்க,
விழியன் பதில் சொன்னான். சிஸ்டர் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த பின் அகன்றாள், ஒரு சின்ன சிரிப்பினூடே! அதன் பின் டெஸ்ட் ஸ்கேன் எல்லாம் முடித்து , கர்ப்பம் என்பதை உறுதிசெய்தார் டாக்டர்!
விழியன் இன்று காலை இருந்த மனநிலைக்கும் இப்போதைக்கும் சமந்தமே இல்லை. ஓரளவுக்கு இதுதான் விஷயம் என்று யூகித்திருந்தாலும், இப்போது மருத்துவர் மூலம் அதை கேட்டதும் மனம் துள்ளல் போட்டுக் கொண்டிருந்தது! டாக்டர் விஷயத்தை சொன்ன பின் திரும்பி தன் மனைவியின் முகத்தை ஆவளாய் பார்க்க அப்படியே அமர்ந்திருந்தாள் ஒரு துறவியை போல்.
அவர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டி,
“நீ காருக்கு போ வெண்பா, இதையெல்லாம் வாங்கிட்டு வந்திடுறேன்”
அவன் வரும் வரை காரில் அமர்ந்திருந்தவள் தன் வயிற்றை தடவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து தான் வாங்கி வந்திருந்த மிட்டாயில் ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான். முதலில் வாயை திறக்காமல் இருந்தவள் பின் அவன் ஏக்க பார்வையை பார்த்து எதிர்பில்லாமல் வாங்கிக் கொண்டாள்…
“ஐயம் சோ ஹாப்பி வெண்பா, நமக்குன்னு ஒரு குட்டி ஜீவன் வர போகுது” அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட எந்த ரியாக்‌ஷனும் இல்லை வெண்பாவிடம். அவனுக்கு அவள் ஒதுக்கம் புரிந்தாலும், இப்போது அவன் அடைந்த இந்த சந்தோஷத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை…
வீட்டில் போய் விஷயத்தை சொல்ல அனைவருக்கும் மகிழ்ச்சி. சரஸ்வதி மகளுக்கு திருஷ்டி கழித்தாள். தமிழ் தங்கைக்கு பழச்சாறு கொண்டு வந்து தர, பொற்பாவை சித்தியின் பக்கம் அமர்ந்து கொண்டு ஸ்கேன் போட்டோக்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
தன் குடும்பத்தினர் அனைவரின் சந்தோஷமும் வெண்பாவின் மனநிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்த தான் செய்தது. ஆனால்,
‘என் பிரச்சனை இன்னும் அப்படியே தானே இருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டாள்.
Ada loosu ponnae
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top