• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
31

அன்பு இல்லத்தில் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்த ஆரம்பித்தாள் ரதி! அந்த சூழ்நிலையில் அவள் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. கிடைத்த கிழிந்த துணியை கூட மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்கின்றனர் அங்கிருப்பவர்கள். ஒரு நாள் , ஒரு வேளை அறுசுவை உணவு கிடைத்தாலும் அதனை இறைவனுக்கு நன்றி சொல்லி ஏற்றுக் கொண்டனர். அதையெல்லாம் பார்க்கையில் ரதிக்கு தான் செய்த காரியத்தின் அபத்தம் புரிய ஆரம்பித்தது.கிடைக்காத ஒருவனுக்காக இத்தனை கீழ்தனமாய் தான் போயிருக்கலாமா என்றும் தோன்ற ஆரம்பித்தது!
அவளின் இந்த புதிய நினைப்பை வலுவாக்குவது போல் அடிக்கடி அந்த மங்கா வேறு இவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.இவள் பக்கம் இருந்து தன் சக்காலத்தியை சபிப்பதை முழு நேர வேலையாய் செய்து கொண்டிருந்தாள்.ஒரு நாள் தாங்க மாட்டாது ரதி,
“அவங்களை பத்தி பேசாதீங்க மங்கா, ஆக வேண்டிய காரியத்தை பாருங்க.எனக்கு இதை பத்தி கேட்க பிடிக்கலை” என்றுவிட்டாள் காட்டமாய்.
அதன் பிறகே அந்த பேச்சில் இருந்து தப்பிக்க முடிந்தது!
அடுத்த நாள் அலுவலகம் கிளம்புகையில் மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. ரதி தன் ‘கேப் டிரைவருக்கு’ பல முறை போன் செய்து பார்த்துவிட்டாள்.இத்தனை நேரமும் எடுத்து இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன் என்றவன், இப்போது போனை எடுக்கவே இல்லை...
சமையத்தில் இப்படி எதையாவது செய்திடுவாங்க!’
என்ன செய்வது என்று தெரியவில்லை.கீழே போய் கார் பார்க்கிங்கில் நின்று கொண்டாள். ஆட்டோ ஏதாவது வந்தால் பிடித்துக் கொள்ளலாம் என்று!
பிரகாஷ் தன் காரை எடுக்க அங்கு வந்தான். ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சுவார்த்தை ஒன்றும் இல்லை, இருவருக்குமிடையே! ஆபிஸில் வேலை விஷயம் பேசுவார்கள் தான், ஆனால் வீட்டில் பேச்சுவார்த்தை இல்லாத உறவினர்களை போல் நடந்து கொள்வர் இருவருமே!
அவள் அவளின் அறை தவிர்த்து சமையலறையில் சில நேரம் இருப்பாள் , அவ்வளவே! பிராகாஷ் அவ்வீட்டின் ஹாலில் முழு நேரமும் இருப்பான், தூங்க மட்டும் அவன் அறை. அதுவும் மேட்ச் எதுவும் இருந்துவிட்டால், ஹாலிலேயே அவனது ஜாகை மாறிப்போகும்! வீட்டுச் சாவியிலிருந்து , சமையல் எல்லாம் தனிதனி! இவளாவது சமைப்பாள் , அவன் காபி போடுவதோடு சரி! அவள் சமைத்தாலும் அவனுக்கு அவள் மூலம் எதுவும் கிடைத்ததில்லை.அந்த சமையலின் வாசனை மட்டுமே நுகர முடியும்! ஒரே ஆபிஸ் என்றாலும் இவனுடன் அவள் போவது கிடையாது! ஒரே வீட்டிருந்து ஒரே ஆபிஸிற்கு இரண்டு பேர் வெவ்வேறு வாகனத்தில் !இப்படி எல்லாம் செய்தால் சென்னை போக்குவரத்து நெரிசல் என்றைக்கு தான் குறையும் ! இதற்கெல்லாம் முடிவு கட்டத்தானோ என்னவோ அன்று ரதிக்கு வாகனம் கிடைக்காமல் போனது! ஆட்டோ எதுவும் வரவில்லை!ரோட்டை பார்த்தபடி அவள் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்தவன்,
“ஆபிஸுக்கு தானே ரதி?” என்றான்.
“ஆமாம்”
“என் கூட வாயேன் ! நானும் அங்க தான் போறேன்!”
யோசித்து பார்த்தாள் . இப்படி கொட்டும் மழையில் வேறு வழியில்லை.அவனுடன் வண்டியில் அமர்ந்து கொண்டாள். இவர்கள் கிளம்பும் நேரம் வெளியே கிளம்பிய தன் அபார்ட்மெண்ட் வாசிகள் இருவரையும் தன் காரில் அமர்த்திக் கொண்டான்.
மற்றவர்களுடன் சாதாரணமாய் பேசிக் கொண்டே வந்தான்.
அவர்கள் இறங்கிய பின்பு ரதி பிரகாஷிடம் எந்த பேச்சும் இல்லை. இருவரும் தங்கள் யோசனையில் மூழ்கியபடி ஆபிஸ் வந்து சேர்ந்தனர். பிரகாஷின் நல்ல குணங்கள் பலது அவள் கண்ணில் இப்போது பட ஆரம்பித்தது. அதில் இந்த உதவி செய்கிற குணமும் சேர்ந்துக் கொண்டது.தனக்கும் இப்போது அவன் செய்து கொண்டிருப்பது உதவியே என்பது அவளது மூளைக்கு உறைத்தது! விழியன் விஷயத்தை அவளே அவமானமாய் நினைக்கும் போது அவன் எப்படி சாதாரணமாய் அதை கடந்தான் என்பது அவளுக்கு ஆச்சரியமே!விழியன் அவளை அழைத்ததும் அவன் தன் பையை எடுத்துக் கொண்டு வைத்தது ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது!
ரேணுகாவுக்கு ஆற்றாமையால் விளைந்த கோபம். சமைக்கும் போது எந்த எண்ணத்தில் இருக்கிறோமோ அதுவே , அந்த உணர்வலைகளே சமைக்கும் பதார்த்தங்களில் கலந்து அதை உட்கொள்ளுபவர்களுக்கு பரவுமாம்.ரேணுகாவுக்கு அதில் நம்பிக்கை அதிகம். அதனால் எப்போதானாலும் சமையல் கூடத்தில் ஏதாவது பக்தி பாடலோ, மந்திரங்களோ கேட்ட படி இருப்பாள்.இன்று எதுவுமே அவளுக்கு கை கொடுக்கவில்லை.தான் செய்வது சரியில்லை என்று தோன்ற அடுப்பை அணைத்துவிட்டு வெளியேறிவிட்டாள். சரஸ்வதி இங்கு இருந்தவரைக்கும் பரவாயில்லை, இப்போது அவளும் போய் மறுபடியும் அந்த பழைய தனிமை நிலை வந்துவிட்டது ரேணுகாவுக்கு. அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத அந்த தனிமை. அதனுடன் சேர்ந்து வெண்பா மீது இருந்த ஆத்திரமும்.
பூஜை அறைக்கு சென்றவள் , அங்கு அமர்ந்த படி தன் வேண்டுதலை தொடர்ந்தாள்.குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிய நொடி, சரஸ்வதி அழுதது தான் கண் முன்னே வந்தது!
“இப்படி ஒரு பொண்ணை வளர்த்து வச்சியிருக்கேனே!”
“ஏன் அண்ணி என்ன ஆச்சு இப்ப, அதான் எல்லாம் சரி ஆகிட்டே!”
“இந்த குழந்தையால் தான் இங்க திரும்ப வந்தேன். என்னால் விழியனை மன்னிக்கவே முடியாதுன்னு சொல்றா மா”
“!!”
“எத்தனையோ முறை அவ அப்பா விழியன் மூலம் கேட்ட விஷயத்தை சொல்லிட்டேன், நம்ப மாட்டேங்கிறாளே! பிள்ளைதாட்சியா இருக்கிறப்ப அவ மனநிலை அந்த குழந்தைக்கு எத்தனை முக்கியம்! இப்படி செய்றாளே!”
அப்போதும் ரேணுகா அடைந்த அதிர்ச்சி மாறவில்லை.
ஆனால் அதை தன் அண்ணியிடம் காட்டாமல்.
“சீக்கிரமா சரி ஆகிடுவா. வெண்பாவை பத்தி கவலை படாதீங்க.நான் பத்திரமா பார்த்துக்குறேன். நீங்க ஊருக்கு போய் அண்ணனை பாருங்க. எல்லாம் கெட்ட நேரம்…இதுவும் கடந்து போகும்” என்று சமாதானம் செய்தாள். தன் அண்ணி தன் மனதை ஒரு நாளும் நோகடித்தது இல்லை. அதையே தானும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரேணுகாவுக்கு!
இன்று இருந்த எரிச்சலில் இதெல்லாம் மனதில் ஓடி வெண்பாவை நாலு கேள்வி கேட்கலாம் போலிருந்தது! சாமியறையில் இருந்து அவள் வெளிவந்து அடுப்படிக்கு போக வெண்பா குளிர்சாதன பெட்டியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள்.தன் அத்தையை பார்த்ததும் எதுவும் சொல்லாமல் வெளியேற போனவளை,
“இந்தா டி, டேபிள் மேல சாப்பிட எல்லாம் இருக்கு, போய் சாப்பிடு போ! பட்டினி கிடந்து வயிற்று பிள்ளையை சிரமபடுத்தாதே!”
முகத்தை கோபமாய் வைத்துக் கொண்டு ரேணுகா சொல்ல,
“அத்தை உங்களுக்கு எனக்கும் என்ன பிரச்சனை, ஏன் என் கிட்ட கோபமா இருக்கீங்க?” என்றாள் ரேணுகா எதிர்பாரா விதமாய்!
“ஆமா டி, குட்டி பகை , ஆடு உறவாம்! என் பையனை நம்பாதவ கூட எனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு. பிள்ளை பிறக்கிற வரை தானே நம்ம சொந்தம் எல்லாம்!”
வெண்பா என்னதான் விழியன் வேண்டாம் என்றாலும் இப்போது ரேணுகா இப்படி சொல்லவும் பக்கென்று ஆனது!சாப்பிடத் தோன்றாமல், ஹாலில் டிவியை போட்டுவிட்டு அமர்ந்துக் கொண்டாள்.ரேணுகா என்ன நினைத்தாளோ,ஒரு தட்டில் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து மருமகளிடம் கொடுத்துவிட்டு,
“இதில் எதையும் மிச்சம் வைக்காம சாப்பிடணும்.பேரிச்சையும், கொஞ்சம் பாதாமும் வச்சியிருக்கேன், இதை முடிச்சிட்டு அதையும் எடுத்து சாப்பிடு. மனசை குழப்பிக்காதே! உன்னை மாதிரி குழப்பாவதியா என் பேரனையோ பேத்தியயோ ஆக்கிடாதே! உனக்கு புண்ணியமா போகும்.மனசை அமைதியா வச்சிக்கோ. நான் மார்கெட்டுக்கு போயிட்டு வரேன்” என்று வெளியேறிவிட்டாள்.போகின்ற அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.
விழியன் ஆபிஸிலிருந்து போன் செய்தான்.
“வெண்பா, சாப்பிட்டியா?மாத்திரை மறக்காம போட்டிடு”
அவள் சென்னை வந்ததிலிருந்து இன்று தான் அலுவலகம் சென்றிருக்கிறான். இத்தனை நாளும் அவனே நேரத்துக்கு மாத்திரையை இவள் கையில் கொண்டு வந்து தந்துவிடுவான். இப்போது அதையே போனில் சொல்ல,
“ம்ம்…சரி”என்றாள்.
“அம்மா கிட்ட போனை கொடு”
“அத்தை வெளியே போயிருக்காங்க”
“சரி, பத்திரமா இரு. ஏதாவது வேணுமின்ன போன் பண்ணு” என்று வைத்தான்.
இவள் அவர்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாலும், விழியன் அவன் நெஞ்சில் சுமக்கிறான். என்னதான் அவன் மேல் கோபம் இருந்தாலும் அவளுக்கு அவனின் தவிப்பு புரிய தான் செய்தது.ஆனால் அந்த விஷயம்? அவளுக்கு அதில் தன் குடும்பத்தினர் யார் பேச்சையும் நம்ப முடியவில்லை.அனைவருமே இவன் சொல்லை தான் திரும்ப சொல்கிறார்களே தவிர அவர்களுக்கு நேரிடையாக எதுவும் தெரியாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.தன் குடும்பத்தினரின் பாராமுகத்தை தாங்கிக் கொண்டவளுக்கு இப்போது ரேணுகாவின் கோபத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தன் ஆசை அத்தை ஆயிற்றே!
சாரதி சொன்னதை போல் அன்பு இல்லம் வராமல் அடுத்த வாரத்தில் பிரகாஷின் வீட்டுக்கு வந்துவிட்டார்.அவன் ஹாலில் அமர்ந்து ஒரு கையில் டிவி ரிமோட்டும் மற்றொரு பக்கம் லாப்டாப் சகிதம் அமர்ந்திருக்க, கதவை லேசாக தட்டிவிட்டு சட்டென்று உள்ளே நுழைந்துவிட்டார் மனிதர்.
சாரதியின் கண்கள் வீட்டை நொடியில் அலசிவிட்டது. பிராகாஷின் டேபிளின் முன் அவன் கடையில் வாங்கியிருந்த உணவு பார்சல்கள். வீடு அன்று அவர் முன்பு பார்த்தது போல் இல்லை. சமையலறை அவர் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரவாயில்லை. மற்ற இடமெல்லாம் குப்பையாக இருந்தது. இவர் போய் சில நிமிடங்களுக்கு பிறகே பிரகாஷ் ரதியின் கதவை தட்ட அவள் வெளியே வந்தாள்.இப்போது தான் தூங்கி எழுந்திருப்பாள் போல.பிரகாஷை அங்கு பார்த்தவள்,
“என்ன பிரகாஷ்? நிம்மதியா தூங்க விட மாட்டியா” என்று எரிந்து விழ,
‘நிம்மதி பத்தி நீ பேசுறியா?’ அவனுக்கும் கோபம் தான்.பல்லை கடித்தபடி,
“உன் சாரதி மாமா வந்திருக்காங்க” என்றான்.
‘ஐயோ இவரா?’அடித்து பிடித்து முகம் கழுவி, தலையை அழகாய் வாரிவிட்டு வந்தாள்.
“வாங்க மாமா, என்ன திடீர்னு? ஒரு போன் கூட இல்லை”மனதில் அத்தனை கோபம். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாரே என்று!
“போன வாரம் வர முடியாம போச்சு மா.அதான் உங்களை பார்த்திட்டு போகலாம்னு.நல்லா இருக்கியா ரதி?”
“நல்லா இருக்கேன்.இருங்க காபி கொண்டு வரேன்”போனவள் அவருக்கு தயாரித்து கொண்டு வந்தாள்.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
“பிரகாஷுக்கும் கொடு மா”என்றார் அதை வாங்கியபடி.
அவனை கேள்வியாக பார்த்தாள், வேண்டுமா என்றபடி.கிடைத்த வாய்பை விடாமல் அவனும் ஆமாம் என்க, அவன் கையிலும் சுடசுட ஒரு காபி வந்தது. அவன் மனைவி இத்தனை நாளில் அவனுக்கு கொடுத்த அந்த முதல் காபி,
அத்தனை சுவையாக இருந்தது. சாரதியிடம் பேசியபடி அவன் அதை முடிக்க,
“என்ன டிபன் செஞ்சே ரதி இன்னிக்கு? ஏன் வீடெல்லாம் இப்படி இருக்கு? உனக்கு முடியலைன்ன வேலைக்கு ஆள் வைக்க வேண்டியது தானே?”
பிரகாஷும் ரதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“வந்து…ஆள் கிடைக்கலை மாமா”
“அதெப்படி இத்தனை பெரிய அபார்ட்மெண்டில் கிடைக்காம போகும்?நான் போய் என்னென்னு பார்க்குறேன். நீ டிபன் செய்” என்றபடி போனவரின் பின்னாடி ஓடினான் பிரகாஷ்.
இவரை வச்சிகிட்டு ஒண்ணும் பண்ண முடியாது. நொந்தபடி சமையல் வேலைகளை ஆரம்பித்தாள் அவள்.
போனவர் அந்த பிளாக்கின் கீழ் வரவே ஒரு அம்மாள் தென்பட்டார்.வீட்டு வேலைகளை முடித்து விட்டு போய்க்கொண்டிருந்தார்.அவளை பேசி பிரகாஷ் வீட்டுக்கு அழைத்து வந்தார்.இருவரும் திரும்ப வரவும், ரதி பிரகாஷிடம் ஒரு லிஸ்டை கொடுத்து இதெல்லாம் வேண்டும் என்று கடைக்கு அனுப்பினாள்.
‘என்ன இதெல்லாம் புதுசா இருக்கு?’
கையிலிருந்த காகிதத்தையும் ரதியையும் அவன் மாறி மாறி பார்க்க,
‘என்ன பண்றது? அவர் முன்னாடி நடிச்சு தான் ஆகணும்.வாங்கிட்டு வா சீக்கிரம்’
இருவரின் மனதில் ஓடிய எண்ணங்கள் இவை!
வேலையாள் வந்து வீட்டை அழகாய் பெருக்கி, துடைத்து விட , வீடு புது பொலிவாய் இருந்தது!அவள் கையில் பணம் தந்த சாரதி பதிவாய் அங்கு வந்து வேலை செய்து தரும்படி கூறிவிட்டு அவள் போன் நம்பரையும் பெற்றுக் கொண்டார்.இவர் ஒரு பக்கம் இவைகளை பார்க்க, இன்னொறு பக்கம் ரதி வீட்டுக்கு திரும்பிய பிரகாஷை அமர விடாமல், கிட்சனில் தனக்கு வேண்டிய வேலைகளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்!
கீரை சப்பாத்தி, காய்கறி குருமா, கூடவே சம்பா ரவை உப்மா எல்லாம் செய்து முடித்திருந்தாள் ரதி! சாப்பிடும் நேரத்தில் கூட, சாரதிக்கு மட்டும் அவள் எடுத்துக் கொண்டு வர, பிரகாஷுக்கும் என்று இழுத்து விட்டார் அவர்.
ரதி அவன் பதிலுக்கு காத்திருக்க,
“இல்லை நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டே” என்றான்!
“இப்ப தானே அவ சமைக்கிறா! நீங்க எப்படி சாப்பிட்டீங்க பிரகாஷ்?”
சாப்பாட்டு பார்சல்களை எல்லாம் பார்த்திருந்தாலும் தெரியாததை போல் கேட்டு வைத்தார்.
“இல்ல வீட்டில் மாவு தீர்ந்து போச்சு, அதான் இட்லி வாங்கினேன்”
“பாருங்க பிரகாஷ், நீங்க படிச்சவங்க.நல்ல வேலையில் இருக்கீங்க! ஆனா நான் ஒரு டாக்டர் அதான் சொல்றேன், அடிக்கடி வெளியே சாப்பிடாதீங்க! வீட்டில் பொண்டாட்டி இருக்கிறப்ப நீங்க ஏன் இப்படி அவஸ்தை படணும்? அவளும் பிஸின்றதால கொஞ்சம் கூட மாட உதவி செஞ்சீங்கன்ன போதுமே!”
என்னவென்று சொல்வான்? “சரிங்க” என்றதோடு முடித்துவிட்டான்.
ரதியிடம் சாரதிக்கு எந்த பேச்சும் இல்லை. பிரகாஷிடம் மட்டும் வேலை, அரசியல் எல்லாம் பேசிவிட்டு ஒரு வழியாக கிளம்பினார்.பிரகாஷ் அவரை பேருந்து நிலையில் இறக்கி விட உடன் வர, விடைபெரும் முன்,
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம் போட போறீங்க பிரகாஷ்?”என்றார்.
அவர் சொன்னதை மறுக்க நினைத்தவன், அவர் கண்களை சந்திக்கவும் வாயை மூடிக் கொண்டான். சற்று நேரம் இருவருக்கிடையில் பேச்சில்லை.அதன் பின் என்ன நினைத்தானோ நடத்ததை எல்லாம் மறைக்காமல் சொல்லிவிட்டான் அவரிடம்.
“அவ்வளவு உறுதியா இருந்தவ, இப்ப அடங்கிட்டாளா? என்னால் நம்ப முடியலை!”
“ஆமா சார், இப்ப அந்த பேச்சு எதுவும் இல்லை. ஆபிஸ் , வீடு அதை விட்டா அடிக்கடி அன்பு இல்லம் வருவா.வேலையிலும் முன்னாடி மாதிரி கிரியேட்டிவ்வா யோசிக்கிறா!”
“அதெல்லாம் விடுங்க, நீங்க என்ன நினைக்கிறீங்க ரதியை பத்தி? அவளை மனைவியா ஏத்துக்க உங்களுக்கு இன்னமும் விருப்பம் தானே?”
பதிலில்லை அவனிடம்!
அவரை யோசனையாக பார்த்தபடி நின்றான் பிரகாஷ்!
 




priyadurai

இணை அமைச்சர்
Joined
Feb 3, 2018
Messages
543
Reaction score
389
Location
mumbai
“ஆமா டி, குட்டி பகை , ஆடு உறவாம்! என் பையனை நம்பாதவ கூட எனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு. பிள்ளை பிறக்கிற வரை தானே நம்ம சொந்தம் எல்லாம்!”
sema renuka mam
iva innum tiruntha mattengura vizhiya romba tangada venbava
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb ud sis sarathi adikadi vantha rathiyidam matram viraiva varum:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:vizhiyan mela kobam aana renuka athai pesalaina varuthama venbaku............ :rolleyes::rolleyes::rolleyes:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top