• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 33-prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
33

பிரகாஷ் சொன்னது போல் ரதி வெண்பாவிடம் விஷயத்தை சொல்லிவிட தான் நினைத்தாள்.பல தடவை அவள் எண்ணிற்கு முயன்றும் , எடுக்கப்படவில்லை.
வெண்பாவுக்கு இப்போது இருந்த மனநிலையில், மறுபடியும் ரதியிடம் பேச விருப்பமில்லை!எல்லா விஷயங்களையும் கடந்து போய்விட மாட்டோமா என்ற எண்ணம் துளிர்க்க ஆரம்பித்திருந்தது! ரதியின் எண்ணிலிருந்து பல நாட்களாய் தொடர்ந்து அழைப்பு வர, அவள் எண்ணை பிளாக் செய்துவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்களானாள்.
வெண்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து பல எண்களில் இருந்து அவளுக்கு மாற்றி மாற்றி தொடர்பு கொள்ள, புதிய எண் எதையுமே வெண்பா எடுத்தாளில்லை.என்ன செய்வது என்று புலப்படாததால் அந்த விஷயத்தை தள்ளி போட்டாள் ரதி. தவறிழைக்கையில் அது இத்தனை பெரிய காரியமாய் தெரியவில்லை. இப்போது செய்த தப்பை திருத்துவதற்கு தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது!இதே யோசனையில் இருந்தவளுக்கு தூக்கம் அறவே இல்லை. அதனால் அன்று காலையில் நேரத்துக்கு எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்திருந்தாள்.அன்று அவள் செய்திருந்த உணவில் அசந்து போனான் பிரகாஷ்.தேங்காய் பால் சாதம்,அதனுடன் ஒரு பன்னீர் கிரேவி,குடைமிளகாய் போட்டு ஒரு கறி!அவளிடம் தன் ஆசையை சொன்னதிலிருந்து, தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு கொண்டு வர ஆரம்பித்திருந்தான்.கூட உள்ளவர்கள் எப்படி என்று கேட்க, எப்போதும் போல் பதில் சொல்லாமல் சிரித்து சமாளித்தான். இன்னும் ஆபிஸில் ஒருவருக்கும் தெரியாது, இவனுக்கும் ரதிக்கும் திருமணம் ஆன சங்கதி!
விழியன் பணி முடித்து வீடு வந்து சேர, ரேணுகா அவசரமாய் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தாள்.வெண்பாவுக்கு இப்போது ஆறாவது மாதம் தொடங்கி விட்டிருந்தது.
“எங்கே மா, இந்த நேரத்தில்?”
“இங்க பக்கத்து வீடு வரை போயிட்டு வரேன்.அவ மேல தான் இருக்கா.இரண்டு பேரும் சீக்கிரமா டிபன் சாப்பிடுங்க.” என்றுவிட்டு நிற்காமல் ஓடினாள் ரேணுகா!
கிட்சனில் போய் என்ன சமையல் என்று எட்டி பார்க்க எல்லாம் அவன் மனைவிக்கு பிடித்த வகையறாக்கள்.
‘வர வர இந்த அம்மா என்னை கவனிக்கவே மாட்றாங்க. எப்போ பார்த்தாலும் காய்கறி பொங்கல், உப்மான்னு!’
அறைக்கு போக, வெண்பா கஷ்டப்பட்டு , எட்ட முடியாத தன் கால் விரல்களுக்கு ‘நெயில் பாலிஷ்’ போட்டுக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் அறைவாசலில் இருந்தவன் அவள் படும் அவஸ்தையை பார்த்தபடி இருந்தான். அவளின் பெரிய வயிறு தட்ட ,முழுதாய் குனிய முடியவில்லை. எல்லா பக்கமும் கால்களை நகர்த்தி போட முயற்சித்தாலும், மிகவும் சிரமம்பட்டு கொண்டிருந்தாள்.அவளை நெருங்கியவன்,
“வெண்பா, அதை கொடு நான் போட்டு விடுறேன்”நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
“வேண்டாம், இப்ப தானே வந்தீங்க!இருக்கட்டும்”
“குடுறீ ” அவள் கையிலிருந்ததை அனைத்தையும் வாங்கியவன் அவள் கால் மாட்டில் அமர்ந்து கொண்டு,அவள் கால்களை எடுத்து அவன் மடியில் வைத்தான்.
“விழியன் உங்க டிரஸ்ஸில் கரை ஆகிட போகுது.வேண்டாம்.அப்புறம் போகாது”
அவள் சொன்னது எதுவும் அவள் காதில் விழவில்லை.
பொறுமையாய் ஒவ்வொரு விரலையும் பிடித்து அந்த நகப்பூச்சை போட்டு விட வெண்பா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவனை என்ன தான் செய்வது? நம்புவதா வேண்டாமா?’எப்போதும் தோன்றும் அதே சந்தேகம், இப்போதும் எட்டி பார்த்தது!போட்டு முடித்து அவன் இவளை பார்க்க, அவனை இன்னமும் வைத்த கண் வாங்காமல் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தின் முன் சொடுக்கு போடும் வரைக்கும் நினைவுக்கு திரும்பவில்லை அவள்.
விழியன் காட்டிய பாசத்தில், காதலில் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கூட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தாள் வெண்பா.அதை பல சந்தர்பங்களில் விழியன் புரிந்து கொண்டாலும்,
‘துரு பிடிச்ச அந்த மூளையையும் கொஞ்சம் உபயோகிச்சா நல்லா இருக்கும் டி’அடிக்கடி தன் மனதில் புலம்பி கொள்வான்.இப்போது அவள் செயலுக்கு பின்,
“வர வர ரொம்ப அழகா ஆகிட்டே இருக்கே வெண்பா.பெண் தாய்மை அடையுறப்போ அவங்க அழகின் உச்சியில் இருப்பாளாம்! அது உண்மை தான் போல”அவளிடம் பதிலில்லை. தலை குனிந்திருந்ததால்!என்ன நினைக்கிறாள் என்பதும் தெரியவில்லை.
‘ரொம்ப ஓவரா தான் போறே நீ! இன்னைக்கு செய்தவரைக்கும் போதும்’ என்று அவன் மனசாட்சி குரல் கொடுக்க,
“சாப்பிட போலாம் வெண்பா பசிக்கிது” என்றபடி வெளியேறி விட்டான்.
சபாபதி அடிக்கடி தன் தங்கையிடம் பேசி வெண்பாவின் நலனை விசாரித்துக் கொள்வார். மகள் செய்துவிட்ட காரியம் அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது.எப்படி சரி செய்ய போகிறார்கள் இவர்கள் பிரச்சனையை என்ற சந்தேகம் எப்போதும் நெருடிக் கொண்டிருந்தது. ஆனாலும் விழியன் மேல் ஒரு நம்பிக்கை.சரி செய்துவிடுவான் சீக்கிரத்தில் என்ற எண்ணம்.அது இப்போது வரை தவறவும் இல்லை.
அன்றும் ரேணுகாவுக்கு போன் செய்திருந்தவர்,
“வளைகாப்பு செய்ய நாள் பார்த்திடலாமா மா, அடுத்த மாசம் வச்சிகிட்டா, அப்படியே வெண்பாவை திருச்சிக்கு அழைச்சிட்டு வந்திடுவேன்”
“சரி அண்ணே. விழியன் கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லட்டா?”
“அப்படியே ஆகட்டும் ரேணுகா! வெண்பா நல்லா இருக்கா தானே”
“ஆமா நல்லா இருக்கா! நீங்களும் அண்ணியும் வாங்களேன் அவளை பார்க்க!”
“இருக்கட்டும் ரேணுகா, அதான் அடுத்த மாசம் இங்க வந்திட போறாளே, பிறகென்ன.சரி மா நீ பேசிட்டு சொல்லு”
அன்று மாலை வீடு வந்த விழியன் அவசரமாய் பெங்களூர் போக வேண்டும் என்று கிளம்பினான்.ரேணுகா அவனிடம் சொன்ன விஷயத்தை கேட்க கூட இஷ்டமில்லாதவன் போல் இருந்தது அவனின் செய்கை!
“என்ன டா நான் கேட்டுகிட்டே இருக்கேன், ஒண்ணும் சொல்லாம இருக்கே”
பெட்டியில் இரண்டு நாட்களுக்கான துணிகளை எடுத்து வைத்துவிட்டு திரும்பியவன்,
“கட்டாயம் அவ திருச்சி போகணுமா மா? இங்கே சென்னையிலேயே பிரசவம் வச்சிக்கலாமே!”
அவன் சொன்னது வெண்பாவுக்கும் கேட்டது, கிட்சனில் தானிருந்தாள்.
“அதெல்லாம் முடியாது விழியா, அவ அம்மா அப்பாவுக்கு பொண்ணை வச்சு பார்க்கணும்னு ஆசை இருக்காதா?”
“அவங்களையும் இங்க வர சொல்லுங்க”
“இல்லாத வழக்கமெல்லாம் சொல்லாதே! வேணும்னா நீயே போன் செஞ்சு மாமா கிட்ட பேசிக்கோ!”
“சரி மா… நான் கிளம்புறேன்.அவசர வேலை, வர இரண்டு நாள் ஆகும்.அவளை பார்த்துகோங்க”
அவள் பக்கம் போனவன்,
“வெண்பா காலையில் தனியா நடக்க போக வேண்டாம். , பத்திரமா இரு”
ரேணுகா இருப்பதையும் சட்டை செய்யாது அவள் வயிற்று பக்கம் குனிந்தவன்,
“அப்பா ஊருக்கு போயிட்டு வரேன் குட்டி.அம்மாவை படுத்தாம பத்திரமா இருப்பீங்களாம்.பை”
வெண்பாவுக்கு இவன் தொல்லைகள் பழகி விட்டிருந்தது, தினமும் இரவில் இதே கூத்து தானே. பேசுகிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு எல்லா சேட்டைகளும் செய்து கொண்டு தான் இருக்கிறான்.ஆனால் மகனின் அளப்பரையை இப்போது தாங்க முடியாத ரேணுகா வெளியில் போய் காத்திருக்க ஆரம்பித்து விட்டாள்.அன்னை அங்கில்லை என்பதை உறுதிப்படுத்தியவன் முதலில் அவள் வயிற்றிலும் , பின் திகைத்து பார்த்த தன் மனைவியின் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்துவிட்டு புறப்பட்டான்.
 
anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
போகிறவனை பார்த்துக் கொண்டு நின்றாள் வெண்பா!
மதிய உணவு இடைவெளியில் ரதியை தேடி பிரகாஷ் அவள் கேபின் வர,அவள் இன்னமும் வேலையில் மூழ்கி இருந்தாள். அவளதும் தனி கேபின் தான்.கூட எவரும் இல்லை.உள்ளே வந்தவன்,
“இன்னிக்கி லன்ச் பிரமாதம் ரதி” என்று எல்லாம் பல்லையும் காட்டிக் கொண்டு சொல்ல ரதிக்கும் அவனின் புன்னகை தொற்றிக் கொண்டது! சாப்பாடு ராமனோ என்று நினைக்கும் அளவிற்கு எப்போதும் அவளுடன் அதை பற்றியே பேசினான். சமைப்பது மூலம் பெண் ஆணின் மனதை இடம் பிடிப்பதை போல, அவள் செய்ததை அடிக்கடி பாராட்டுவதின் மூலம், பிரகாஷ் அவளுக்கு நெருக்கமாகிவிட்டிருந்தான்.நடப்பதை நம்பத் தான் முடியவில்லை அவளுக்குமே. ஆனாலும் சந்தோஷமாய் இருந்தது. அவள் அன்புக்காகவும் ஏங்கும் ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறதே!
“தான்க்ஸ் பிரகாஷ்”
“சாரி என்னால் இன்னிக்கு எதுவும் ஹெல்ப் பண்ண முடியலை.நான் நைட் தூங்குறப்போ மணி இரண்டு”
“ம்ம் தெரியும் பிரகாஷ்”
“இன்னிக்கு சாயங்காலம் என் கூட வெளியே வரியா ரதி?”
நீண்ட இடைவெளிக்கு பிறகு அழைக்கிறான்.மறுக்க மனமில்லை.
“எங்கே பிரகாஷ்”
“சொல்றேன். பீ ரெடி , ஆறு மணிக்கு கார் கிட்ட வந்திடு.பை”
பிரகாஷ் அழைத்துக் கொண்டு சென்ற இடம் ஒரு பிரபலமான நகைக்கடை.
“இங்க எதுக்கு பிரகாஷ்?”
அவளிடம் புன்னகை முகமாய் ‘சொல்றேன்’ என்றவன்,
“டைமண்ட் செக்‌ஷன் எங்கே?” கடையின் சேல்ஸ் ஆளிடம் கேட்டறிந்து அவளை அழைத்துக் கொண்டு போனான்.
அவன் தேர்ந்தெடுத்து தனியே வைத்த ஒவ்வொரு வைர வளையல்களையும் ரதியின் எதிர்பை மீறி அவள் கையில் போட்டு பார்த்தான்.முடிவாய் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு காருக்கு வர மணி ஒன்பதை தாண்டி விட்டிலிருந்தது.
காரினுள் ஏறியவன் , அவள் கரங்களை பற்றி அந்த புதிய வளையல்களை மாட்டி விட எப்படி உணர்ந்தாள் என்று சத்தியமாய் புரியவில்லை, ரதிக்கு!
“எதுக்கு பிரகாஷ் திடீர்னு இதெல்லாம்?”
அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை .அவள் கண்களில் இப்போது தெரிந்த மாற்றம் அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் செய்தது!
பற்றியிருந்த கையை அவன் இன்னும் விடவில்லை! கேள்விக்கும் பதிலில்லை.என்னவென்பதை போல் அவள் பார்க்க,
“நான் கேட்டேன்னு எனக்காக நீ மெனக்கிட்டு சமைச்சு தரியே,அதுக்கு ஒரு சின்ன கிப்ட்”
சின்னதாய் தன் கணவனிடம் ஒரு புன்னகை பூத்தவள்,
“எனக்கு என் அப்பாவை தவிர யாரும் இதெல்லாம் வாங்கித் தந்ததில்லை பிரகாஷ். ரொம்ப நல்லா இருக்கு!தான்க்ஸ்”
அவளை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான், புதியதாய் பார்ப்பது போல்.அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல்,
“போலாம் பிரகாஷ் லேட் ஆகிடிச்சு” ரதி சொன்ன பிறகே வண்டியை கிளப்பினான் , இன்னும் ஒரு காரியம் பாக்கியிருக்கிறது என்ற எண்ணத்தில்!

அவன் இல்லாமல் ஒரு மாதிரி தான் இருந்தது.ஆனாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ரகமாய் சுற்றிக்கொண்டிருந்தாள் வெண்பா.அடுத்த வரும் நாட்களை எப்படி தான் கழிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அவள் இருக்க,

“வெண்பா, ஊருக்கு போறியோ என்னவோ இன்னமும் தெரியலை.எதுவானாலும் உன் ரூமை சுத்தம் செஞ்சு கொடுத்திடு.இதை விட்டா அப்புறம் சமயம் கிடைக்குமான்னு தெரியாது.இன்னிக்கி வேலைக்கு ஒரு பெண்ணை வர சொல்லியிருக்கேன், பரணில் உள்ளதை எல்லாம் இறக்கி, தேவையில்லாததை தூக்கி போட்டு கொஞ்சம் ஒதுக்கி தந்திடு மா!”
“சரி அத்தை”
அதன்படி அன்று வந்த பெண்ணை வைத்து ரூமை தலைகீழாய் புரட்டினாள் . அவள் பரணிலிருந்து இறக்கி வைத்த எல்லா அட்டை பெட்டியையும் பார்த்து மலைத்து தான் போனாள். எப்படி இத்தனையும் முடிக்க என்பதாக!
“அக்கா நீங்க இதில் தேவையானதை மட்டும் எடுத்து வைங்க.நான் நாளைக்கு வந்து மேலே தூக்கி வச்சிடுறேன்”
எல்லா வற்றையும் அறையின் ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு போனாள் அந்த பெண். அறை முழுவதற்கும் பெட்டிகள் பரப்பி கிடந்தன.அந்த கூட்டத்தில் அமைதியாய் அடக்கமாய் தன்னிடம் ஒரு விஷயமும் இல்லை என்பது போல், வெண்பாவின் பார்வையில் விழும் சந்தர்பத்துக்காக காத்திருந்தது விழியனின் டைரி!

“ரதி உன்கிட்ட சொல்லி எத்தனை நாள் ஆச்சு! இன்னுமா நீ வெண்பா கிட்ட பேசுறே?”
பாத்திரங்களை இவன் தேய்த்து தர அவன் அதை கழுவி பக்கத்திலிருந்த கூடையில் போட்டபடி கேட்டான்.கொஞ்சம் கோபமாய் கேட்டது போல் பட்டது ரதிக்கு!
“நிறைய தடவை முயற்சி செய்தேன் பிரகாஷ் , அவ எடுக்கவேயில்லை”
“இந்த இரண்டு மாசமாவா?”
“ஆமாம்” என்றாள் சிறிது யோசித்து,
“இல்லை நான் அந்த முயற்சியை கைவிட்டு சில வாரங்கள் இருக்கும்”
அமைதியாயிருந்தான்.
“என்னை நம்பு பிரகாஷ்.நான் நிஜமாவே வெண்பா கிட்ட பேசிடணும்னு தான் நினைக்கிறேன்”. தன் பங்கு வேலைகளை முடித்தவன் கிட்சனில் இருந்து வெளியேறும் முன்னர்,ரதியின் பின்பக்கமாய் நெருங்கி நின்று,
“என்னால் இனியும் காத்திருக்க முடியாது ரதி!”அவன் மூச்சு காற்று பின் கழுத்தில் பட்டதில் சிலிர்த்து போய் அவன் புறம் திரும்பினாள்.அவன் சொல்ல வந்ததன் அர்த்தம் தெளிவாய் புரியவில்லை! அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்! அவள் சந்தேகத்துக்கு விடைதருவது போல் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ,
“குட்நைட்” என்றபடி போய்விட்டான்.
ரதி அவ்விடத்தை விட்டு ஆடாமல் அசையாமல் திகைப்பில் அழ்ந்து கொண்டு நின்றிருந்தது சில பல நிமிடங்கள்!

இருவரும் இப்போது அலுவலகம் போவது ஒரே வாகனத்தில் தான். அன்று பணி முடிந்ததும் கிளம்பியவர்கள் சென்றது அவர்கள் வீடு செல்லும் வழியில்லை. விழியன் வீட்டின் முன் வண்டி நிற்கவும் தான், ரதிக்கும் பிரகாஷின் எண்ணம் புரிந்தது!
“நீ காரில் இரு , நான் போன் செய்ததும் உள்ளே வா”
இறங்கி வீட்டினுள் போனவன் ரேணுகாவையும், வெண்பாவையும் சந்தித்து பேச ஆரம்பித்தான்.
“என் மனைவியும் உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க வெண்பா, இங்க கூப்பிடலாமா?” பேசிக்கொண்டிருந்தவன் எதேச்சையாய் இப்படி கேட்க,
‘இவருக்கு கல்யாணம் ஆகிட்டா?ஆபிஸ்ல யாருமே சொன்னதில்லையே’
யோசித்தவள்,
“ஓ கட்டாயம் கூப்பிடுங்க பிரகாஷ்” என்றாள்.ரேணுகாவும் அங்கு தானிருந்தாள்!
அவன் ரதியை போனில் அழைத்து, “உள்ளே வா” என்க,
வீட்டினுள் வந்தவளை கண்டு அதிர்ந்தனர், வெண்பாவும் ரேணுகாவும்.
‘இவளா?’
“தம்பி இவளா உங்க பொண்டாட்டி?”ரேணுகா தாங்கமாட்டாமல் கேட்டுவிட்டாள்.
“ஆமா மா”
ரதிக்கு வெண்பாவை நிமிர்ந்து பார்க்கவே அவமானமாய் இருந்தது. அவள் அருகில் சென்றவள் அவள் கையை பற்றிக் கொள்ள, வெண்பா அதை உறுவிக் கொண்டாள்.இவள் குரலை கூட கேட்க கூடாது என்று நினைத்தால் , நேரில் வந்துவிட்டாளே என்றிருந்தது வெண்பாவுக்கு. விழியனை பற்றி இன்னமும் என்ன சொல்வாளோ என்ற பதற்றம் வேறு!ரேணுகாவுக்கு ரதியை பார்த்ததும் என்னென்னவோ ஏசிவிட தோன்றியது.ஆனால் பிரகாஷை கண்டு அமைதி காத்துக் கொண்டாள்.
‘பார்த்தா நல்ல பையன் மாதிரி தெரியுறான் , அவன் மனசை எதுக்கு நோகடிக்கணும்!’ என்று எண்ணம் அவளுக்கு.

“என்னை மன்னிச்சிடு வெண்பா. விழியன் மேல் எந்த தப்பும் இல்லை.தவறு செய்ததது எல்லாம் நான் தான். அவன் என்னை ஒரு பிரண்டா மட்டுமெ தான் நினைச்சு பழகினான்.”
அழுதாள் ரதி. பிரகாஷ் ஆதரவாய் அவள் தோளை தட்டி கொண்டு நிற்க,
ரதியின் பேச்சை கேட்டு அதிர்ந்து நின்றாள் வெண்பா!
‘என்ன டி சொல்றே?’
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

ரதி சொன்னால் தான் வெண்பா நம்புவளா
 
Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Nice update dear.. Rathi sollum munnave dairy padichiroalo
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top