• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

how was the epi 4 and 5?

  • boring

  • ok

  • interesting


Results are only viewable after voting.

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
5.கதை ஒன்று ஆரம்பம்

விழியனின் டைரியில்…

“என்ன பேசுற? நான் உன்னை அப்படி நினைக்கலை” என்க

மறுபடியும் "ஐ லவ் யூ. ஐ ஜஸ்ட் காண்ட் லிவ் வித்தவுட் யூ” என்றவள் மீண்டும் என்னை நெருங்க,

“போதும்! சும்மா ஏதாவது உளராதே” என்றபடி என் பணியை தொடர்ந்தேன்.

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவள் என் பக்கமே நின்று என்னை பார்வையால் துளைக்க என்னால் அதற்கும் மேல் பணியில் கவனம் செலுத்த இயலவில்லை!
—————————-

அன்று வீடு படு பரபரப்பாக இருந்தது! காலையிலிருந்து ஆளாளுக்கு வேலைகளை இழுத்து போட்டு செய்தனர்.இவனை நிம்மதியாக தூங்க விட்ட ரேணுகா மதியத்துக்கு மேல், அதை செய் இதை செய் என்று ஒரே தொல்லை!
“மா சாயங்காலம் ஆறு மணிக்கு மேல தானே ஃபங்ஷன்?இப்பவே என்ன அவசரம்?”
கேள்வி கேட்க மட்டுமே முடிந்தது!
“இலக்கியன் பாரு தனியா என்னவெல்லாம் செய்றான்னு , நீயும் கொஞ்சம் போய் ஒத்தாசை பண்ணு… வண்டி ஓட்றதுக்காவது கூட போ”
“என்ன பேசுறீங்க நீங்க , நான் இந்த வீட்டு மாப்பிள்ளை!”
அவன் அன்னை கையால் ஒரு அடி வாங்கிக் கொண்டு எழுந்தான்.
“மாப்பிள்ளைன்ன என்ன இரண்டு கொம்பா முளைச்சிருக்கு?போங்குறேன்!”
ஒரு டிஷர்ட் மாட்டிக் கொண்டு வெளிவந்தவனின் கண்கள் வெண்பாவை தேடின! அவளா, சும்மாவே ஒளிவாள் இப்போது கேட்கவே வேண்டாம். ‘இன்னிக்கி சாய்ந்திரம் இருக்கு டீ உனக்கு!’ தனக்குத்தானே சில திட்டங்கள் தயாரானது!

பெரிய லிஸ்டும் பையுமாய் கிளம்பிய இலக்கியனிடமிருந்து வண்டி சாவியை வாங்கிக் கொண்டவன்,
“நான் கார் எடுக்கிறேன்,வா!”என்று முன்னே நடந்தான்.

ஏகப்பட்ட நெரிசலில் வண்டியை லாவகமாய் செலுத்தி ,வேண்டிய இடங்களில் இலக்கியனுக்கு பைகளை சுமக்கவும் உதவினான்.
“நீங்க வரலைன்ன ரொம்ப திணறி போயிறுப்பேன் மாமா. ஒரு ஆம்பிளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பிளைக்கு தான் தெரியும்” வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான் இலக்கியன்!
அவன் செய்கையில் சிரித்தாலும் , விழியன் அதன் பின் அவனின் படிப்பு, எதிர்கால திட்டங்களை பற்றிய அரட்டையை ஆரம்பித்தான்.பேச்சின் ஊடே அவர்களின் வேலையும் ஒழுங்கே நடந்தது!

இலக்கியனுக்கு விழியன் ஆதர்ஷ நாயகன். சின்ன வயதிலிருந்து அவனிடம் அவன் தந்தை சபாபதி , விழியனை பற்றி புகழ்ந்ததால் கூட இருக்கலாம்! இருவரும் தங்களுக்கு பொதுவான பிடித்தமான விஷயங்களை பேசி முடிக்கவும் இப்போது பேச்சு வெண்பாவிடம் வந்து நின்றது!
“உன் அக்கா என்ன டா மாப்பிள்ளை கண்டுக்கவே மாட்றா?”
அவர்கள் அரட்டையில் அவன் உரிமையுடன் இலக்கியனை வினவ, அவனோ நகைத்தபடி,

“வேலைக்கு போகணும்னு ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சா.லீவுக்கு கூட வீட்டுக்கு வருவதில்லை.அத்தனை அக்கறை படிப்பு மேல.இப்போ வேலையும் கிடைச்சு அவ சேர வேண்டிய நேரத்தில் அப்பா இப்படி செய்றதில் அவளுக்கு ரொம்ப வருத்தம் மாமா.”
“ம்ம்..புரியுது! ஆனா நானும் என்ன தான் செய்திட முடியும் ? எங்க அம்மா மட்டும் என்னைக் கேட்டு தான் இந்த முடிவு எடுத்தாங்களா?”

“உங்க நிலைமை இதுவரை கொஞ்சம் தான் கஷ்டம் மாமா! ஆனா இனிமே ரொம்ப...உங்களை பார்க்க எனக்கே பாவமா இருக்கு!”
விளையாட்டாய் அவன் சொன்னாலும் அது தான் உண்மையாகும் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்!

இவர்கள் வெளியில் அரட்டையடித்துக் கொண்டிருக்க, நேற்றை விட இன்று இறுக்கம் சற்று தளர்ந்தவளாய் தன் வீட்டினிள் வளைய வந்தாள் வெண்பா! அவன் வீட்டில் இல்லை என்பது தெரிந்து!

இவள் தன் நீள கூந்தலை காய் வைக்கிறேன் என்று சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்து அவள் கையில் மெஹந்தி வைத்துவிட ஆழைத்தாள் அவள் அக்காள். இதை பொறுத்து கொள்ளாத பொற்பாவை தமிழுக்கும் அவளுக்கும் குறுக்கே புகுந்து,
“எனக்கு தான் பர்ஸ்ட் வைக்கணும்னு நேற்றே சொல்லியிருந்தேனே மா?” பாதி வைத்திருந்த வெண்பாவின் கையை நகர்த்தியவள் அவள் கையை நீட்ட,
‘எனக்கு வைக்க ஒரு கை வேண்டும், அவ்வளவே’ என்று தொடர்ந்தாள் தமிழ்!
“ஊர் பட்ட வாய் ! எப்படி தான் நீ அவளை சமாளிக்கிறியோ கா!”
“பாட்டி உன்னை சமாளிக்கிறாங்க, அதை மாதிரி தான், போவியா”
இம்முறை அக்காள் மகளை கட்டிக் கொண்டவள்,
“என்னை மாதிரியே பேசுது என் தங்கம்” என்று கொஞ்ச கூலாகி விட்டாள் அவளும்!

தமிழ்செல்விக்கு இரவு முழுவதும் வேலை. வெண்பாவின் பட்டு பிளவுசுக்கு ஆரி வேலைப்பாடு செய்தாள்.மயில் டிஸைனில் கண்களை பறிக்கும் வண்ணமிருந்தது.அதன் பின் அதை அழகாய் தைத்தும் முடித்தாயிற்று! எப்போது உறங்கினாள் என்று எவருக்கும் தெரியாது!

காலையிலிருந்து இப்போது வரை தங்கையை முழுவதுமாக கவனித்துக் கொண்டிருக்கிறாள். இவள் சில பொறுப்புகளை எடுத்துக் கொள்ள சரஸ்வதிக்கு அது வரையிலும் நிம்மதி!

வேலையில் மும்முரமாய் இருந்த தன் அன்னை தமிழிடம்,
“அப்பா எப்ப மா வருவாரு?”என்றாள் பொற்பாவை.
“வர மாதிரி தெரியலை!” என்றாள் வெண்பாவை பார்த்தபடி!

வெண்பாவுக்கு இதெல்லாம் தெரிந்த கதை தான்..ராம் மாமா எப்போதும் அப்படிதான்! இவர்கள் விட்டு விசேஷம் எதிலும் தலைக்காட்டிவிட மாட்டார்! திருமணத்துக்கு பின் தமிழ் நிலை கொஞ்சம் கஷ்டம்! அவளுக்கென்று இருப்பது பொற்பாவை மட்டுமே. மாமா எப்போது எப்படி மாறுவார் என்பது எவருக்கும் தெரியாது!
தன்னின் நிலை எப்படி இருக்க போகிறதோ?
விழியன் தன் பெற்றொரை எப்படி நடத்துவானோ? தாய்மாமன் என்ற மரியாதை இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,அவனை படிக்க வைத்ததே அவர் தானே!ஆனால் திருமணத்துக்கு பின் அனைத்து ஆண்களும் மாறிவிடுகிறார்களே!இவனும் அதை போல் ஆகிவிட்டால்?

இவள் யோசனையில் மூழ்கியிருந்தாள், தமிழ் அந்நேரத்தில் பொற்பாவைக்கு போட்டு முடித்து இவளுக்கும் பாதி முடித்திருந்தாள்.
“இந்த டிஸைன் உனக்கு ஓகே வா பாரு வெண்பா”
இரண்டு முறை தங்கையை உலுக்கிய பிறகே அவள் நினைவுலகத்துக்கு வர,
“இன்னும் கல்யாணமே ஆகலை , அதுக்குள்ள கனவா?”
அக்காளின் நமுட்டுச் சிரிப்பில் அமைதியாகிவிட்டாள் வெண்பா

“என்ன டி! அமைதியாயிருக்க? விழியனை பிடிச்சிருக்கு தானே!” வெண்பாவின் புலம்பல்களால் எழுந்த கேள்வி இது!
இல்லை என்பது போல் தலையசைத்த தங்கையை ஆச்சரியமாக பார்த்து

“ என்ன டி சொல்றே? அவனுக்கு என்ன குறை?”
‘குறை இல்லை, கொழுப்பு நிறைய!’
மனதில் நினைத்ததை சொல்லவில்லை…மாறாக
“உனக்கு தெரியாது கா, அவன் சரியான திமிர் பிடிச்சவன்! எனக்கும் அவனுக்கும் செட்டே ஆகாது!இதை சொன்னா அப்பா ஒத்துக்க மாட்டார்!”

“அறிவில்லாம பேசாதே.எனக்கு விழியனை நல்லாத் தெரியும் . அத்தை வளர்ப்பு எப்படின்னு நான் கண்கூடா பார்த்திருக்கேன்!”
‘போச்சு இவளும் அவன் பக்கமா?எனக்குன்னு இந்த வீட்டில் யாருமில்லையா!? எல்லாரையும் வசியம் செஞ்சு வச்சிருக்கான்!’ அதற்கு மேல் இவளிடம் என்ன சொல்ல என்று அந்த பேச்சை விட்டாள்.

மாலை நிச்சய விழா,சம்பிரதாயமாக இல்லாமல், விமரிசையாகவே நடந்தது! சொந்தங்கள் சிலர் மட்டுமே வந்திருந்தாலும் பக்கத்து வீடு , நண்பர்கள் என்று அவர்கள் இல்லம் நிரம்பி விட்டது!

விழியன் அந்த சூழ்நிலையை வெகுவாய் ரசித்தான். இரண்டு காரணங்கள் இருந்தன அதில் ஒன்று, அவனே அன்றைய விழாவின் நாயகன்!
‘ம்ம்கும்! உனக்கு ரொம்ப தான் தலைக்கணம்!’
மற்றொன்று ,வெண்பாவை அவனுக்கு நேர் எதிரில் அமர வைத்திருந்தனர்.அவன் வாங்கி வந்திருந்த பட்டு புடவையில் வெகு அழகாய் இருந்தாள். சித்தர்களை போல் அங்கேயே தவம் இருக்க சொல்லியிருந்தால் கூட இருந்திருப்பான் போல! ஆடவில்லை அசையவில்லை... கண்ணை அவளிடமிருந்து பிரிக்க முடியவில்லை.
‘பக்கத்திலிருந்து பார்த்தால் இன்னும் நல்லா இருக்கும், அவன் நினைத்த மாத்திரத்தில்,
“விழியன் இங்க வந்து அவளுக்கு இந்த மோதிரத்தை போடு” என்றழைத்தாள் ரேணுகா!

அவள் விரலை பற்றி மோதிரத்தை அணிவித்தவன்,போட்டுவிட்ட பிறகும் பற்றியிருந்த அவள் கையை விடவில்லை.அத்தனை பேருக்கு மத்தியில் அவன் நீண்ட நேரமாய் இப்படி பற்றியிருக்க, வெண்பாவை வெட்கம் பிடுங்கித் தின்றது!

‘விடேன் டா’ மெதுவாய் உருவி பார்த்தாள், அவனின் பிடி சற்றும் தளரவில்லை. இவனின் செய்கையில் வந்திருந்த தோழிகள் எல்லாம் இவர்கள் இருவரையும் ஓட்ட ஆரம்பிக்க, வெண்பாவுக்கு மட்டுமே தர்மசங்கடம்!சற்று நேரம் இந்த நாடகம் தொடர்ந்தது.ரேணுகா அவன் பக்கம் வந்து காதில் எதையோ ஓத, சில நேரம் கழித்தே அவள் கையை விட்டான்.

அதன் பின் இருவரையும் வைத்து போட்டோ எடுத்தது தனி கதை. போட்டோகிராபரை இவனே செட் செய்திருப்பானோ என்று எண்ணிக் கொண்டாள் வெண்பா.அந்த அளவுக்கு அட்டூழியம் நடந்தது!
இவர்கள் இருவரையும் பல கோணங்களில் எடுக்கிறேன் என்று பாடாய் படுத்தினர்.

‘சரி எடுத்து தொலைங்கடா’ என்று இவள் விட்டாலும்
“மேடம் அவர் தோளில் கை போடுங்க, கொஞ்சம் கிட்ட நில்லுங்க, கையை பிடிங்க, தோளில் சாஞ்சிகோங்க!” என்று ஒரே தொல்லை.கேட்டால் கேண்டிட் ஷாட்டாம்!

விழியனை இவள் உதவிக்காக பார்த்தாலும், அவன் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பது போல் நின்று கொண்டான்!

எப்போதான் முடிப்பானுங்களோ என்ற அவளின் வேண்டுதலுக்கு பலனாய் சீக்கிரம் அந்த கொடுமையும் முடிவுக்கு வந்தது!
இவள் அந்த இடத்திலிருந்து கிளம்பும் சமயம் அவன் அவர்களிடம் சிரித்து பேசிக் கொண்டதை கண்டுக்கொண்டாள்.
‘இவன் வேலையே தான்!’

அன்றிரவு அவன் சென்னை கிளம்புவதாக இருந்தது!
“மா நீங்களும் கிளம்புங்களேன், சேர்ந்து போயிடலாம்!”
வெண்பாவையும் நினைத்து அவன் சொல்ல ரேணுகா,
“அவளுக்கு புதன்கிழமை சேர்ந்தா போதுமாம், நாங்க நாளைக்கு வரோம் நீ முன்னே போ”
“நானே இருந்து அழைச்சிட்டு போறேனே மா”
அவன் எண்ணத்தை புரிந்து கொண்டு ‘கல்தாணம் இப்ப வேணாம்னு சொன்னவன் இப்ப இப்படி அநியாயம் பண்றானே’ என்று அழுதது அந்த தாய் உள்ளம்!
“அதெல்லாம் வேண்டாம் விழியா. நாம என்ன செஞ்சாலும் தப்பு கண்டுபிடிக்க ஒரு கூட்டம் தயாரா இருக்கு. நாமளே அவங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் தர வேண்டாம்!”
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அதன்படி இவன் மட்டுமாய் கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற பின் சபாபதியை சமாளிப்பது ரேணுகாவுக்கு மற்றொரு பெரிய காரியமாய் போய்விட்டது.
எதற்காக நிச்சயம் செய்தோம் என்பதையே மறந்தவர் போல்
“கல்யாணத்துக்கு முன்னமே அவ எப்படி மா உன் வீட்டில் வந்து தங்க முடியும்? சரிவராது ரேணுகா” என்றார்
அவர் பேச்சில் கடுப்பானது வெண்பாவும் தான். காரணம் காட்டி நிச்சயம் செய்துவிட்டு, இப்போது வேலைக்கு போக வேண்டாம் என்பாரோ!
அங்கு நடந்த கூத்தை வேடிக்கை பார்க்க.ரேணுகா
“அண்ணே மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்காதீங்க! நான் வெண்பாவை கூப்பிட்டு போறேன், எங்க வீட்டிலிருந்து அவ வேலைக்கு போயிட்டு வருவா, அவ்வளவுதான்!”
யோசனையாய் இருந்தவர்,
“தமிழோட மாமியாருக்கு இதெல்லாம் தெரிஞ்சா சரிவராது மா…”
“அவங்க நீங்க என்ன செஞ்சாலும் குறை பேச தான் போறாங்க! அதுக்கெல்லாம் கவலைபடலாமா? விடுங்க! வெண்பா நீ போய் எல்லாம் எடுத்து வை”
அவள் தந்தையை பார்க்க அவரும் , “போ மா” என்று அரைமனதாய் அனுப்பினார்.அடுத்த நாள் கிளம்புவதற்கு ஆயுத்தமான ரேணுகாவை வேலை செய்ய விடாமல் பாடாய் படுத்தினான் விழியன்.

தனக்காக அவன் போன் செய்யவில்லை என்பது தெரியாதவளா என்ன?
“மா..நான் பஸ் ஸ்டேண்ட் வரவா உங்களை கூப்பிட?”
“ஆபிஸ் லீழ் போட்டு வீட்டில் இருக்கவா மா?”
“எந்த ரூமை வெண்பாவுக்கு ஒதுக்கி தரணும்?”
“காய்கறி என்னவெல்லாம் வாங்கி வைக்கட்டும்?”
ரேணுகாவுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது..!

“தம்பி நான் இதுநாள் வரை எப்படி செஞ்சேனோ அதே போல் பார்த்துக்குறேன்.நீ கவலை படாதே!”
“மா நான் என்ன சொல்ல வரேன்ன..”
“நீ சொன்ன வரைக்கும் போதும். போனை வை..வேலையிருக்கு டா மகனே!”

திட்டமிட்டபடி அவர்கள் கிளம்ப , சிங்கார சென்னை வெண்பாவை அன்புடன் வரவேற்றது! அதை விட மேலான அன்புடன் வீட்டில் ஒருவன் காத்திருப்பது அவளுக்கு தெரியாதே!
ஆட்டோவில் வந்து வீட்டு முன் இறங்கினார்கள்.கேட்டை திறந்த ரேணுகா,
“அவன் தினமும் எட்டு மணிக்கு மேல தான் வருவான் வெண்பா” சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசல் கதவை திறந்தான் அவளின் மைந்தன்!

அத்தனை புன்முகம்.தன் மகனை ஒரு நாளும் இப்படி கண்டதில்லை ரேணுகா!
‘எல்லாம் யாருக்காக?! நீ நடத்து டா!’
“என்ன விழியா அதுக்குள்ள வந்துட்டே?பைக்கை கூட காணலையே!”
“சரிவீஸ்க்கு போயிருக்கு மா. வா வெண்பா!” வரவேற்றான்!
உள்ளே வந்தவர்களுக்கு காபி எல்லாம் அவன் போட்டு கொண்டு வர, ரேணுகா அதை குடிக்கவில்லை என்றால் மயக்கம் போட்டிருப்பாள்.
“நீ காபி போடுவேன்னு எனக்கு இப்ப தான் டா தெரியும்!”
அசடுவழித்தபடி அவர்களின் எதிரில் அமர்ந்தான்!
“புதன்கிழமை ஆபிஸில் பெர்மிஷன் போட்டிருக்கென். நானே உன்னை உன் புது கம்பெனியில் விட்டிடுறேன்!” அவளை பேச வைக்க அவன் சொல்ல
“நானே போயிடுவேன்.உங்களுக்கு ஏன் சிரமம்!”
அவன் பதிலளிக்குமுன்
“அது என்ன மா அப்படி சொல்லிட்டே! அவன் ஜென்ம பலனே அதுதானே!” என்றபடி ரேணுகா போகிற போக்கில் சொல்லிவிட்டு போக, வெண்பாவுக்கு பிடிக்காதவனை கேலி செய்த விளைவில் எழுந்துவிட்டது சிரிப்பு.அதை அடக்க வெகு சிரமமாயிற்று!

சிரித்தவளை சற்று நேரம் ரசித்த விழியனுக்கு அன்றிரவு உறக்கம் வரவில்லை.இதே வீட்டில் வெண்பாவும் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை சந்தோஷம் கொள்ள வைத்தது! நீண்ட போராட்டத்துக்கு பிறகே நித்திரையில் ஆழ்ந்தான்!
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
very nice epi.... candid shot eduka correct panitana... paiyan vevaram dhan...
 




rathisrini

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
141
Reaction score
380
Location
Chennai
very nice ud.. pavam vizhiyan ithanai asai vechirukan.. anal venba avanai virumba villaye
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
very nice epi.... candid shot eduka correct panitana... paiyan vevaram dhan...
hi hi..enna vevarama irundhalum venba kitta onnum mudiyalai.. nandri thendral
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top