• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen - Epi 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய்... ஹாய்.... எல்லாரும் எப்படி இருக்கீங்க...

காதல் சொல்ல வந்தேன்..! கதையின் முதல் காதல் போடுறேன்... படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... நிறை, குறை எதுனாலும் சொல்லுங்க... மீ வெயிட்டிங்... நன்றி டியர்ஸ்.......

காதல் – 1

தென்றல் வீசும் மழைக் காலம் இதுவோ!

மாலை மங்கும் நேரத்தில்...

மனதை மயக்கிய மழையாய்...

என்னையும் சேர்த்து நனைத்தாயோ!

மழை! இயற்கையின் அதிசயம்! குழந்தைகளின் குதூகலம்! என்னே அதிசயம் சென்னையில் காலையிலிருந்தே மழை! மழை எப்பொழுதுமே அழகு! அதிலும் மாலை நேரத்து தென்றலுடன் பொழியும் மழை இன்னும் பேரழகு!

மழையைப் பார்த்ததும் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்தவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு செல்லமாய் வருடி தாலாட்டிய அந்தச் சாரலில் ரசித்து... சிரித்து... நனைந்துக் கொண்டிருந்தாள்.

அது ஏனோ மழையைக் கண்டால் அவளுள் ஒரு குழந்தை மனம் உருவாகி விடும்... மழையில் நனைவது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அவள் ஊரில் இருக்கும் பொழுதெல்லாம் மழை வரும் நேரம் எங்கிருந்தாலும் மழையை நோக்கி ஓடி வரும் அவள் கால்கள்.

மழையில் நனைந்து கொண்டே அருகில் இருக்கும் எல்லார் வீட்டு மாடியில் பைப் வழியாகப் பொழியும் மழை நீரில் தன் தலையை வைத்துக்கொண்டிருப்பாள். அதிலிருந்து பொழியும் நீர் அவளை அத்தனை குதூகலப்படுத்தும்.

கைகளை அகல விரித்து வானத்தை நோக்கி, முகத்தை நீட்டி அந்த வான் மழையை ரசித்திருந்தாள் நம் கதையின் நாயகி சபர்மதி.

எம்.எஸ்சி (ஐடி) படிக்கபோகும் இளம் மங்கை. விவசாயத் தந்தைக்கும், பள்ளி ஆசிரியையான தாய்க்கும் பிறந்த செல்வமகள்.

கொள்ளை அழகை கடவுள் ஏன் ஒரே இடத்தில் கொட்டி படைத்திருக்கிறான் எனப் பலப் பெண்களே பொறாமைப்படும் பேரழகி.

சந்தன தேகம்... அப்படிச் சொல்வதை விட வெண்ணையில் குழைத்த சந்தன தேகம் என்று சொன்னால் மிகையாகாது. நீள் விழிகள்... மஸ்கராவின் உதவியுடன் வசீகரிக்கும் விழிகள். பார்ப்பவரை ஒரு நொடியேனும் கட்டி இழுத்து உறைய வைக்கும் கண்ணழகி.

அந்தக் கண்களைக் காணும் எவரையும், வசியம் செய்து கட்டியிழுக்கும் தன்மை அவள் கண்களுக்கு இருந்தது. சிரிக்கும் பொழுது வசீகரிக்கும் தன்மை அந்த தெற்றுபல்களுக்கு இருந்தது. அழகுக்கு மேலும் அழகூட்டுவதுப் அவள் கன்னத்து ஒற்றை திருஷ்டி மச்சம். அழகையும் மீறிய ஒரு கவர்ச்சி, கவர்ச்சியையும் மீறிய ஒரு வசீகரம், அதுவே அவளின் பிரதானம்.

இயற்கையாகவே சிவந்த இதழ்கள்... நொடிக்கொரு முறை அவளின் நாவு வெளியில் வந்து அவளின் இதழை ஈரம் செய்ய, மழையில் நனைந்திருக்கும் ரோஜா இதழை நினைவுப்படுத்தும், அதை நேரில் பார்க்கும் எவரும் பித்தாகிப் போவர்.

மழைக்கு இணையாகச் சந்தோசமாக ஜொலித்துக் கொண்டிருந்த தன் தேவதையை ரசித்துப் பார்த்திருந்தான் விஜயேந்தர்.

மழை நீரில் வெண்பாதம் நனைந்திருக்க, கால் கொலுசு சப்திக்க, மஞ்சள் நிற சுடிதார் அவளைத் தழுவியிருக்க, கருங்கூந்தல் இடையைத் தொட்டு அசைந்தாடி நீர் சொட்டிக்கொண்டிருக்க... காது சிமிக்கி அசைந்தாட மழையில் நனைந்துக் கொண்டிருந்தவளைப் புன்சிரிப்புடன் பார்த்தவன்,

“நனைஞ்சது போதும் மதி“ சிறிது நேரம் அவளை நனைய விட்ட விஜயேந்தர் கையில் டவலுடன் அவளை நோக்கி வந்தான்.

தன் முன் ஈரம் சொட்ட சொட்ட வந்து நின்றவளை ரசனையால் இதமாகக் கோதியவன் “உன்னைப் பார்த்தா யாராவது காலேஜ் பொண்ணுன்னு சொல்லுவாங்களா? ஸ்கூல் பொண்ணு மாதிரி இந்த ஆட்டம் போடுற“ அவளை அதட்டலாகக் கேலி செய்தான் அவன்.

“சும்மா என்னைக் கேலிபண்ணாத இந்தர்... யார் என்ன சொன்னா என்ன... நான் இப்படித் தான்! இப்படியே தான்! லல்லல்லா... வாழ்கையை அனுபவித்து வாழணும்டா“ ஆடியபடியே அவனிடமிருந்து டவலைப் பறித்தவள் தன் அறை நோக்கி சென்றாள்.

“ஏண்டி இப்படி இந்தச் சாயங்கால மழையில் நனையுற... உடம்புக்கு ஏதாவது ஆனா என்ன பண்ணுறது“ என்றபடி அவளின் பாட்டி அவளைக் கடிய,

“இந்த மழையால் எனக்கு ஒண்ணும் ஆகாது கிழவி“ அவரின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடினாள் மதி.

தன் அறைக்கு வந்தவள் தன் அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டாள். ‘தான் சிறு பெண்ணாகவா தெரிகிறோம்’ ஆழ்ந்து பார்த்தாள்...

அப்பொழுது கழுத்தில் கிடந்த தாலி கண்ணில் பட, அதைக் கைகளில் ஏந்திக் கொண்டவள் முகத்தில் அவளையும் அறி யாமல் புன்னகை கசிந்தது. தன் கணவன் இல்லை... தாலி கட்டியவன் யார் என்றே தெரியாமல் தாலியை சுமந்துகொண்டிருக்கிறாள். தன்னுடைய விந்தையான வாழ்க்கையை எண்ணி புன்னகைத்துக் கொண்டாள்.

வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசித்து... ரசித்து... வாழ்ந்துக் கொண்டிருக்கும் சபர்மதி, இந்த நொடி வரை அவள் கண்கள் கண்ணீரை பொழிந்ததில்லை... அவளின் வாழ்கையை எண்ணியும் கண்ணீரை பொழிந்ததில்லை.

வாழ்கையை அதன் போக்கில் சந்தோசமாக வாழ்பவள் அவள். இந்த நொடி வரை யாருக்காகவும், எதற்காகவும் அவள் கண்ணில் கண்ணீர் வந்ததில்லை, ‘தன் வாழ்க்கை இனி என்னாகுமோ?’ என்றும் வருந்தியதும் இல்லை.

“கெளதம்” தன் அறை வாசலில் நண்பன் அஷோக்கின் குரல் கேட்கவே, அடுத்த நொடி தன் அறைக்கதவை திறந்து அவனுக்கு வழி விட்டு நின்றான் கெளதம்.

கெளதம் என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவனின் முழு பெயர் கெளதம் கிருஷ்ணா... நம் கதையின் நாயகன்... காலேஜ் ப்ரோபசர். பல மாணவர்களின் ஆசான்... காலேஜ் பெண்களின் நாயகன்.... திறமையானவன்... வாழ்கையைச் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன்.. அவனைப் பார்க்கவே அத்தனை அழகாக இருப்பான்.

அவன் பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன் சிரிப்புடன் மாணவர்களைப் பார்த்து “ரெடியா“ என்று கேட்கும் பொழுது அவன் கன்னத்தில் விழும் குழியைப் பார்க்கவே அவனின் மாணவர்கள் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள்...

அவன் கம்பெனியில் வேலை செய்த நாள் முதற்கொண்டு எங்கும் கெளதம் தான். பள்ளி, கல்லூரிகளிலும் அவன் கெளதம் தான்... ஆனால் தற்பொழுது அவன் வேலை செய்யும் கல்லூரியில் அவன் ஜி.கே. சார்.

“டேய் நேத்தே சொன்னேனே இன்னைக்குக் காலேஜ் பஸ்ட் டே, சீக்கிரமே போகணும், தயவு செய்து லேட் ஆக்காதேன்னு சொன்னேன், இன்னும் கிளம்பாமல் என்ன பண்ணிட்டு இருக்க”

அஷோக் பொரிந்து கொண்டே அறைக்குள் நுழைய, அதைக் கண்டு கொள்ளாமல், தன் தங்கையுடன் போனில் பேசிக் கொண்டிருந்தான். தங்கை என்றால் அத்தை பெண். அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணன். அசோக் தங்கை அவள் .

அஷோக், கௌதமின் நண்பனையும் தாண்டி அவனின் அத்தை மகன். ஒரே பள்ளி, ஒரே கல்லூரி. ஒரே கம்பெனியில் வேலை, தற்பொழுது கெளதம் அந்த வேலையை விட்டு புரொபசர் வேலைக்கு வர, அவனை வாலாகத் தொடர்ந்து அதே கல்லூரியில், அதே வேலையில், அவனும் காலெடுத்து வைத்தான்.
“டேய்”


“நீ எதுக்கும் கவலைப்படாதே தேவி. எல்லாம் ஒரு நாள் சரியாகும்... சீக்கிரம் படிப்பை முடித்து வா”

“நான் இங்க புலம்பிட்டே இருக்கேன், நீ அங்க உன் பாசப்பயிரை வளர்க்கிறியா? நான் இங்க புலம்புறது உனக்குக் காமெடியாவா இருக்கு?” என்றபடி போனை பறித்து “வைடி போனை” அவளிடம் கத்திவிட்டுப் போனை சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் அஷோக்.

“இருக்கிற அவசரம் புரியாமல், அங்க நின்று என்னடா புலம்பிட்டு இருக்க?” கெளதம் அவனிடம் திருப்பிச் சாட, அதிர்ந்து நின்றுவிட்டான் அஷோக்.

“டேய்” அதிர்வாக அழைக்க,

அதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, சாப்பாட்டு மேஜைக்கு அருகில் நின்ற தாயிடம் ஓடிவந்தவன் “மாம்... இன்னைக்கு என்ன சமையல்” கேட்டுக் கொண்டே மேஜை மேல் இருந்த பாத்திரத்தை திறந்துப் பார்த்தான் கௌதம்.

அவன் செயலில் அங்கு அமர்ந்திருந்த அவனின் தந்தை கருத்தபாண்டி அவனை எரிசலாகப் பார்த்தார்.

கமலாவோ, கணவரைக் கண்டு கொள்ளாமல், “உனக்குப் பிடித்த பொங்கலும், சாம்பாரும்டா... உட்காந்து சாப்பிடு. டேய் அஷோக் உன்னை வேற தனியா வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்கணுமா, நீயும் உட்காருடா” கமலா சொல்ல இருவரும் நாற்காலியில் அமர்ந்து ஆளுக்கொரு தட்டை எடுத்து தன் முன்னால் வைத்துக் கொள்ள, கமலா பரிமாற ஆரம்பித்தார்.

“அத்தை இந்த முந்திரி நெயில் வறுத்துப் போட்டீங்களா?” நாவில் எச்சில் ஊறக் கேட்டான் அஷோக்.

“டேய் அஷோக், எப்போ அவன் கல்யாணம் பண்ணுவான் கேளுடா?” மாமா கருத்தபாண்டியின் குரல் அவனைக் கலைக்க, வேகமாக கௌதமை பார்த்தான் அஷோக். இருக்கையில் இருந்து பட்டென்று எழுந்து கொண்டான் கெளதம்.

“நான் கிளம்புறேன்மா” கோபமாகத் தாயிடம் உரைத்தவன், தந்தையைத் திரும்பி கூடப் பார்க்காமல் திரும்பி நடந்தான்.
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
திரும்பி நடந்தவன் ஒரு நொடி நின்று பின்னால் திரும்பிப் பார்க்க, அப்பொழுது தான் சாம்பாரை கையில் ஊற்றி ருசி பார்த்த அஷோக், ஒரு கரண்டி நிறைய எடுத்துப் பொங்கலில் ஊற்றி, நாவில் எச்சில் ஊற பொங்கலில் கை வைக்கப் போனவன் கையைத் தடுத்து நிறுத்தினான் கெளதம்.

“டேய் வாடா... நானே கோபமா சாப்பிடாம போகிறேன், உனக்கு அப்படி ஒரு சாப்பாடு தேவையா? வாடா” கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியில் சென்றான்.

“கெளதம்.... சாப்ட்டுப் போ” தாயின் குரல் காதில் விழுந்தாலும், அதற்கு எந்தப் பதிலையும் தராமல், அஷோக்கையும் கையோடு இழுத்துச் சென்றான்.

அஷோக் திரும்பி பொங்கலைப் பார்க்க, சாம்பாரில் குளித்த பொங்கல் அவனைப் பார்த்துச் சிரித்தது.

“சாப்பிட உட்காந்த பிள்ளையை ஒரு வாய் கூடச் சாப்பிட விடாமல் இப்படிப் பேசிட்டீங்களே, உங்களுக்கே இது நல்லா இருக்கா?” சிறு கோபமாகக் கருத்தபாண்டி பக்கமாகத் திரும்பினார் கமலா.

“இந்த ஒரு வேளை சாப்பிடாமல் போனால் உன் பிள்ளைக்கு எதுவும் ஆகாது.” உரைத்தவர் “எனக்குச் சாப்பாடு போடு”

‘என் பிள்ளை பசியா இருக்கான் இவர்’ மனதில் புலம்பியவர், பேசாமல் அவருக்குத் தட்டை எடுத்து வைத்து, கௌதமுக்கும், அஷோக் - க்கும் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டை எடுத்து அவர் தட்டில் தட்ட,

“மெதுவா போடுடி சாப்பாடு கீழே விழுது பாரு” சிரிப்புடன் உரைக்க,

கோபத்துடன் அவரை முறைத்தவர், பேசாமல் தன் அறைக்குச் சென்றார்.

கோபத்துடன் செல்லும் மனைவியையே கவலையாகப் பார்த்திருந்தார் கருத்தப்பாண்டி ‘உன் மகன் ஒரு பொண்ணுக்குக் கழுத்தில் தாலியை கட்டி அப்படியே விட்டு வந்து, இங்கு அவன் சந்தோசமா இருக்கான், ஆனா அந்தப் பொண்ணு எப்படி இருக்கோ’ மனதில் புலம்பியவரை பொங்கல் அழைக்க, அதைக் கவனிக்க ஆரம்பித்தார்.

கெளதம் தினம் தினம் மனதில் அழுவதை அவர் எங்கே அறியப்போகிறார்?

காருக்குள் ஏறிய கெளதம், கார் கதவை அறைந்து சாத்த, டிரைவர் இருக்கையில் அமர்ந்தான் அஷோக்.

“டேய் ரொம்பப் பசிக்குது, ஏதாவது சாபிட்டுட்டு” அவன் இழுக்க, கெளதம் பார்த்த பார்வையில் வாயை கப்பென இறுக மூடிக் கொண்டான்.

“வாயை மூடினால் போதுமா? வயிறு சத்தம் போடுதுடா?” வாயில் கையை வைத்துக் கொண்டே அஷோக் புலம்ப,

கதவை திறந்து வெளியில் வந்த கெளதம், டிரைவர் பக்கம் இருந்த கதவை திறந்து, அஷோக்கை பிடித்துப் பக்கத்துக்குச் சீட்டுக்கு தள்ளி விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

“எனக்குப் பசிக்கவே இல்லைடா... பசி சுத்தமா போச்சு” புலம்பியவாறே காரைக் கிளப்பினான் கெளதம்.

‘உனக்கு பசிக்கலன்னா, எனக்கு பசிக்காதா? ஆண்டவா! எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது’ அஷோக் - க்கு சாப்பாட்டு மேஜை மேல் இருந்த சாம்பாரில் குளித்த பொங்கல் கண் முன்னால் வந்து பெல்லி டான்ஸ் ஆட, மனதில் புலம்பினான்.

கெளதம் தன் மணிக்கட்டை திரும்பிப் பார்க்க, காலேஜ் – க்கு டைம் ஆக இன்னும் சரியா பத்து நிமிடம் இருக்க, தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஆழ மூச்செடுத்தான்.

மனம் முழுவதும் ஒரு மாதிரி எரிச்சல், அருவருப்பு கிளம்பியது. ‘யாருக்கோ பார்த்த பெண்ணுக்கு தாலி கட்டி, சிறு வயதில் மனதில் ரசித்த தேவதையைத் தொலைத்து, ‘சை... என்ன வாழ்க்கைடா... எதுவும் வேண்டாம் எங்காவது ஓடி விடுவோமா’ என்ற வெறிக் கிளம்பியது.

மெதுவாகத் திரும்பி பார்த்த அஷோக் அவனைப் பாவமாகப் பார்த்தான். ‘கருத்தப்பாண்டி திருமணத்தைப் பற்றிப் பேச்செடுத்தாலே கெளதம் தன் நிலையை இழந்து விடுகிறான்’ என்ன செய்வது யோசனையாக அவனைப் பார்த்திருந்தான்.

‘இப்பொழுது மனம் அமைதியடைவது போல் தெரியவில்லை, இதே நிலையில் மாணவர்கள் முன் நிற்க முடியாது’ எண்ணியவன் காரைக் கடற்கரை நோக்கித் திருப்பினான்.

‘காலேஜ் செல்லாமல் இவன் எங்குச் செல்கிறான்’ யோசனையாக அவனைப் பார்த்தான் அஷோக்.

அஷோக் பார்வையைக் கண்டும் காணாமல் இருந்த கெளதம், காரை கடற்கரையில் நிறுத்தி, அதிலிருந்து இறங்கி கடலை நோக்கி நடந்தான்.

கௌதமை பார்த்த அஷோக் ‘இன்று காலேஜ் செல்ல முடியாது’ எண்ணியவாறே, அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

Next Epi Friday........
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஓ...இந்த தடவை காதல் சொல்ல வந்து இருக்கிறயா சாந்தினி. படிச்சிட்டு வந்து சொல்லுறேன், எப்படி காதலை சொல்லியிருக்கிற என்று...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "காதல்
சொல்ல வந்தேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷாந்தினிதாஸ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top