• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen...! Epi - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்...

மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன ரொம்ப லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... இன்னைக்கு இந்தர் - ரதி காதல் பார்ப்போம்... மனதை மயிலிறகால் வருடும் காதல் அவர்களோடது... வாருங்க படிப்போம்... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...

காதல் – 14

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித் தனி…

காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி…

கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி

காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி...

அந்தக் குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில் இந்தருக்காய் காத்திருந்தாள் ரதி. அவள் இந்தியா வந்த பிறகு, இப்பொழுது தான் முதல் முறையாக அவனைப் பார்க்க வருகிறாள். கோபத்தில் இருந்தவளை, அவனின் ஒரே அழைப்புச் சமாதானப்படுத்துவதாக இருந்தது.

என்ன தான் கோபத்தில் சுற்றினாலும், அவனுக்கு மெசேஜ் தட்டி விடுவாள். இந்தர் ஒரு மெசேஜுக்கு கூடப் பதிலளிக்கவில்லை... கடந்த ஒரு வாரமாக அந்த மெசேஜ் கூட நிறுத்திவிட்டாள். அவன் மேல் அத்தனை கோபம் இருந்தது.

துபாயில் தனது, வேலையை முடித்துக் கொண்டு நேற்று தான் இந்தர் வந்திருந்தான். வந்ததும் அவளுக்குத் தான் அழைத்தான். துபாயில் இருக்கும் பொழுது பெரும்பாலும், இந்தர் வேறு ஒரு நம்பர் தான் பயன்படுத்துவான். இங்குள்ளதை ஸ்விச் ஆஃப் செய்து விடுவான். அதனால் தான் கெளதம் அழைப்பு அவனுக்கு எட்டவே இல்லை.

பிளைட் விட்டு இறங்கி நேராகச் சத்தியநாதன் வீட்டுக்கு தான் வந்திருந்தான். கொஞ்ச நேரம் மதியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் வந்ததிலிருந்து அவளின் கேள்வி முழுவதும் கௌதமை பற்றித் தான் இருந்தது. யோசனையோடு அவளின் கேள்விக்குப் பதில் கூறிக் கொண்டு இருந்தான்.

“அவன் எங்கிருக்கிறான் இந்தர்”

“யாருடா?”

“உன் நண்பன் என்று ஒருவன் தாலி கட்டுனானே அவன் தான்”

“இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற?”

“சொல்லு”

அவள் முகத்தையே பார்த்திருந்தான் இந்தர். “தெரியல, ஆனா, சென்னையில் தான் இருக்கிறான். துபாய் வேலையை விட்டுவிட்டான். வேற என்ன வேலை செய்யுறான்னு தெரியல, ஒரே ஒரு நாள் தான் சிக்னலில் அவனைப் பார்த்தேன் அதன் பிறகு பார்க்கவில்லை...”

“சரி” என்றவள் தன் அறைக்கு எழுந்து சென்றாள். அவள் என்ன நினைக்கிறாள் என்றே அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால், அவள் என்ன முடிவெடுத்தாலும் அவள் வீட்டில் எல்லாரும் அவளுக்கு மட்டுமே துணை! அவனைப் பற்றி விசாரித்தாளே ஒழிய, அவன் எப்படி இருப்பான்...’ இப்படி எதுவும் கேட்காமல் செல்லும் அவளையே பார்த்தவன் தன் அறைக்கு எழுந்து சென்றான்.

மதி சொல்லாமல் கௌதமிடம் பேச இந்தர் விரும்பவில்லை. அதிலும் கௌதம் சிறு வயது காதல் தெரியுமாதலால், அவளிடம் அதிகம் அவனைப் பற்றி பேசாமல் இருந்தான் இந்தர்.

ஆனால் இன்று மதியே அவனை பற்றி விசாரிக்க இப்பொழுது அவளாக அவனைப் பற்றிக் கேட்க ‘சீக்கிரம் ரதியையும், கௌதமையும் பார்க்க வேண்டும்’ மனதில் எண்ணிக் கொண்டான்.

‘அடுத்த வாரத்தில் இருந்து சென்னை ஆஃபிஸ் செல்லவேண்டும்’ எண்ணியவன், தனது அலைப்பேசியை எடுத்து, இங்குள்ள சிம்மை அதில் போட்டு ஆன் செய்ய, பல மெசேஜ் வந்து விழுந்து கொண்டிருந்தது.

எல்லாம் அவள், ரதி அனுப்பியிருந்த மெசேஜ், முப்பதுக்கும் மேற்பட்ட மெசேஜ்.

“எனக்கு உன்கிட்ட பேசணும் இந்தர்”

“ஏன் என்னை இப்படி அழவைக்கிற?”

“உன்னைப் பார்க்கணும் இந்தர்?”

“இன்னும் எத்தனை நாள் இப்படியே உன் அழைப்புக்கு காத்திருப்பது?”

இப்படிப் பல...

‘என்ன ஆச்சு இவளுக்கு’ எண்ணியவன் கடிகாரத்தைப் பார்க்க, நேரம் இரவு பத்து மணியை நெருங்கி விட்டிருந்தது.

தினமும் தூங்கும் முன் இந்தர் அழைப்பு, ‘வருகிறதா? நான் அழைக்கவா? மெசேஜ் செய்யவா?’ எனப் பல சிந்தனையுடன் போனைப் பார்த்தபடியே வெகு நேரம் விழித்து இருப்பாள் ரதி. அதே போல் இன்றும், ‘அவனுக்கு மெசேஜ் அனுப்பவா? வேண்டாமா?’ எனச் சிந்தித்துக் கொண்டிருக்க, ஒலித்தது அலைப்பேசி.

திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து முகத்தில் சின்னதாகப் புன்னகை அரும்பியது.

அழைப்பை ஏற்று “ஹலோ” என்றாள் ரதி.

அவள் குரல் அவன் காதில் விழுந்த அந்த நொடி வார்த்தையில் விவரிக்க முடியாத சிறு நிம்மதி பரவியது.

மறுமுனையில் அமைதி பரவ “ஹலோ இந்தர்” மென்மையாக அழைத்தாள்.

கைபேசியைக் கையில் வைத்தபடியே அப்படியே அமர்ந்திருந்தான் இந்தர். அவள் குரல் அவனுள் ஏதோ மாற்றம் உண்டாக்கியது இனியும் அவளைத் தனியே தவிக்க வைக்க அவன் மனம் விரும்பவில்லை போலும்,

“உன்கிட்ட பேசணும் ரதி” தயக்கமாகக் கேட்டான். அவளை இத்தனை நாள் தவிக்க விட்டது, மனத்தை உறுத்தியது.

“பேசு அதற்குத் தான் காத்திருக்கேன் இந்தர்”

“நாளைக்கு நான் சொல்லும் காபி ஷாப் வா” ஷாப் பெயர் கூறியவன், சிறிது நேரம் பேசி அழைப்பை நிறுத்தினான். மனம் மிகவும் லேசாகி இருந்தது.

ரதி மனமோ என்றும் இல்லாத உற்சாகத்தில் குதித்தது . முகத்தில் புன்னகை தோன்ற இனிய கனவுடன் தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

அறைக்கு வந்த மதிக்கு ஏதேதோ நினைவுகள். அவளின் மனம் கவர்ந்த கிச்சாவும், தாலி கட்டியவனும் ஒன்று என அறிந்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை...

அவளுக்கு நன்கு தெரியும், தன்னைத் தினமும் பார்க்கும், பேசும் எவரோ தான் என் மனதில் இருப்பவன்? ஆனால் யார் என்று தான் தெரியவில்லை... இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்று யாரையும் கற்பனை செய்து பார்க்கும் மன தைரியம் இன்னும் வரவில்லை.

இந்தரிடம் கேட்டால், ஒரே நொடியில் அவனின் முகத்தைக் காட்டுவான் தான், ஆனால் அப்படி அவன் மூலமாக அவள் மனதை கவர்ந்தவனைக் காண மனம் இடம் தரவில்லையே?'

அவனே என் கண் முன் வரட்டும், நான் தான் உன் கிச்சானு அறிமுகமாகட்டும், அதுவரை யார் முகமும் பார்க்க வேண்டாம் என எண்ணியவள், அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில், மிகவும் அழகாகக் கிளம்பி மதி முன் வந்து நின்றான் இந்தர்.

“என்னடா இந்தர், கொக்கு இன்னைக்குச் சொக்கா போட்டு சொக்குது” கிண்டலடித்தபடி அவனைச் சுற்றி வந்தாள் அவள்.

“ஏன் மதிக்குட்டி, நான் நல்லா இல்லையா?” குனிந்து தன்னைப் பார்த்தபடியே வினவினான் அவன்.

“அதெல்லாம், நல்லா தான் இருக்க, எங்கே கிளம்பிட்ட காலம் காத்தாலே? ரதியை பார்க்க போறியா? முகமே மினுங்குது”

“பார்க்க போறேன் இல்ல, அழைச்சிட்டு வரப் போறேன்?” சிரிப்புடன் கூறினான்.

“வாரே... வா... இப்பவாச்சும், அவளைக் கண்ணுல காட்டணும்னு தோணுதே?”

“உனக்கு, அவ மேல கோபம் ஒன்னும் இல்லையே”

“எனக்கு என்ன கோபம்டா?”

“அதில்லைடா, அவ அண்ணன் தான்...” என ஆரம்பிக்க,

“எனக்கு உன் மேல சந்தேகமா இருந்திச்சு, என்னை வச்சு தான் ரதியை விட்டு விலகின அப்படித் தான? என் சந்தேகத்தை இன்னைக்கு நீ ப்ரூப் பண்ணிட்ட” கோபத்துடன் கடிந்தாள்.

“அதில்லை மதி... நீ இப்படி இருக்கும் போது, எப்படி அவங்க வீட்டுக்கு போறது?”

“என்னை ஏன்டா ரதி கூடச் சேர்க்கிற, ரதி உன்னைக் காதலிக்கிறா? ஆனா அவன் அண்ணன் என்னைக் காதலித்துத் தாலி கட்டலை, கட்டாயத்துக்குக் கட்டினான். ஆனா நீ பண்ணினது ரொம்பத் தப்பு இந்தர்” காட்டமாக வினவினாள்.

“சரி விடு, இனி அதைப் பற்றிப் பேசி பயனில்லை, ரதியை இனி தனியே விடமாட்டேன்”

“இப்போ தான் நீ என் அத்தான்” கன்னத்தைப் பிடித்து ஆட்ட,

“ஆஹா... மரியாதை கூடுதே?”

“உனக்கு யாருடா மரியாதை தந்தது... நான் ரதிக்காகத் தந்தேன்” கிண்டலடிக்க.

“போச்சுடா வீட்டுல இருந்த ஒரு டிக்கெட்டும் போச்சா”

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த நாகுவும், சத்தியநாதனும் “நான் உனக்கு இருக்கேன்டா” என வந்தனர்.

“க்கும்” முகத்தை வெட்டிக் கொண்டாள் மதி.

“சரி... சரி... சீக்கிரம் ரதியை அழைச்சிட்டு வா” கூற, மதியை பார்த்தபடியே கிளம்பினான் இந்தர்.

காபி ஷாப் விட்டு வெளியில் வந்தவர்கள் அந்த நடைபாதையில், கைகள் உரசியபடி மௌனமாக நடக்க அந்தக் கணத்தை இருவரும் மிகவும் ரசித்தனர்.

ஓசை இல்லாத அந்த மௌனங்கள் கூட மிக அழகாகத் தெரிந்தது இரு காதலர்களுக்கும். அவ்வபோது அவள் முகத்தைப் பார்த்தபடி நடந்தான் இந்தர். அவன் பார்வையைக் கண்டு தலையைக் குனிந்தபடி வந்தாள் ரதி.

‘தான் இவளை காணும் முன் வந்த கோபம் என்ன? இப்பொழுது தோன்றும் வெட்கம் என்ன?’ ரசனையாக எண்ணியவன், அவள் கைகளை வேண்டும் என்றே மெதுவாகத் தீண்டினான். கையை மெதுவாக விலக்கிக் கொண்டாள் மதி.

கார் அருகில் வர, அவளுக்கு முன் கதவை திறந்து விட்டான் இந்தர். மெளனமாகக் காரில் ஏற, அவளைத் தொடர்ந்து அவனும் ஏறிக் கொண்டான்.

அங்கே நிலவி கொண்டிருந்த மௌனத்தை, அவ்வப்போது அவளின் வளையல் சத்தம் கலைத்தது.

அவள் பக்கம் திரும்பாமல் வந்த பொழுதும், அவளின் வளையல் அவனைப் பார்க்க வைத்தது. அந்தச் சத்தம் அவனுள் ஊடுருவி விளையாடியது.

அவள் வளையல் சத்தம் மட்டும் இல்லாமல், அவன் அருகில் அமர்ந்திருக்கும் அவளின் தவிப்பும், தலையில் சூடி இருந்த மல்லிகை வாசமும் அவனைத் தாக்கியது.

அவளின் தவிப்பை மாற்றும் விதமாக, காரில் மெல்லிய பாடலை இசைக்க விட்டான் இந்தர். எப்பொழுதும் அவளை மாற்றும் அந்த இசைகூட அவளின், அவன் மேல் உள்ள தவிப்பை மாற்றவில்லை போலும், வளையல் ஓசை தொடர்ந்து கொண்டிருந்தது.

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்...

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...” மிக மெல்லிய குரலில் காரில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்தப் பாடல் வரிகள்.
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சட்டென அவனைப் பார்த்தாள் ரதி. இருவரும் அடிக்கடி ரசிக்கும் வரிகள். அந்த நொடியில் சரியாக ஒலித்தது, அவன் அலைப்பேசி. காரை மெதுவாக ஓரம் கட்டியபடியே பேசியை எடுத்துப் பார்த்தான்.

சின்னதாக ஏதோ யோசனை அவன் கண்களில் ஓடி மறைய, இதழ்களோ சிரிப்பில் மலர, அலைபேசியை அவளிடம் நீட்டினான்.

"இந்தா பேசு..."

"என்ன நானா...?"

“என்ன நீயா... ? நீயே தான்... பேசு... உனக்கு ரொம்ப வேண்டியவர்”

“எனக்கு வேண்டியவரா... யாரு மதியா?”

அவளை புன்னகையுடன் பார்த்தவன் "ரதி இல்லை... இது வேற... உனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர்?"

'யாரு' இன்னும் யோசனையாக அவனைப் பார்க்க,

“அட! பேசுடி பொண்டாட்டி” புன்னகையுடன் கூறியவன் “என்னை கேட்டா? நான் கார் ஓட்டிட்டு இருக்கேன்னு சொல்லு” அவளிடம் அலைபேசியைத் திணித்தான்.

அவன் புன்னகையிலும், அவனின் பொண்டாட்டி என்ற அழைப்பிலும் கொஞ்சம் மகிழ்ந்துப் போனாள் ரதி. அந்த நொடி அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் பஞ்சாய் பறந்து போனது தான் உண்மை.

(பொண்டாட்டி என்ற அழைப்பில் பல மாயம் உள்ளது போலும்)

புன்னகையுடன் கைபேசியை வாங்கியவள், அழைத்தது யார் எனப் பார்க்காமல், பேசியை அழுத்தி “ஹலோ... மிசஸ் இந்தர் ஹியர். யூ” என்றாள் உற்சாகத்துடன். அவனின் பொண்டாட்டி என்ற அழைப்பு கொடுத்த உற்சாகம்.

இந்தரே இதை எதிர் பார்க்கவில்லை போலும், ‘அடிப்பாவி’ என்னும் விதமாக வாயில் கையை வைத்தபடியே மெல்லிய சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.

எதிர் முனையில் இருந்தவருக்குச் சட்டெனப் புரை ஏறியது. அந்தக் குரலை உடனே அடையாளம் கண்டு கொண்டார். ‘அடடா... மகளே…’ மனதில் எண்ணிக் கொண்டார்.

வீட்டில் ரதி, கெளதம் இருவரின் முகத்தைப் பார்த்து, சீக்கிரமே அவரைப் பல முடிவுகளை எடுக்க வைத்தது. அது தான் ரதிக்குத் தெரியாமல் இந்தர் எண்ணை அவள் அலைபேசியில் இருந்து சுட்டார் மீசை.

ரதி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவனுக்கு அழைக்க எண்ணினார். இன்று ரதி அதிசயமாக வெளியில் சென்ற நேரம் பார்த்து இந்தருக்கு அழைத்தார். ஆனால், அவர் அழைப்பை ஏற்றது ரதியே... அத்தனை சந்தோசமாக இருந்தது அவருக்கு.

அவரின் அமைதியை கண்டு மீண்டும் அவளே பேசினாள் “ஹலோ... மிசஸ் இந்தர் ஹியர்...” என்றாள்.

மெல்ல சிரித்தபடியே அவளையே பார்த்திருந்தான் இந்தர்.

“நான் சென்னையில் இருந்து கருத்தபாண்டி பேசுறேன்” என்றது மறுமுனை.

தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு “அய்யோ... அப்... அப்பா... சொல்லுங்கப்பா” வாய் தந்தியடிக்க, கண்களோ அவனை முறைத்தது. விழுந்தடித்து சிரித்தான் இந்தர்.

“என்னம்மா நீ, மாப்பிள்ளை போன்ல பேசுற? நானே மாப்பிள்ளைக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு முன்னாடியே சொன்னேனே... அதுக்குள்ள நீயே கல்யாணம் பண்ணிட்டியேம்மா? அப்பாகிட்ட சொல்லவே இல்லையே... அப்பாக்கு கல்யாண சாப்பாடு கிடையாதாம்மா?” போலியாகக் கண்களைச் சிமிட்டிக் கொண்டார் அப்பா.

“ஐயோ அப்பா... அப்படி எல்லாம் இல்லப்பா... சும்மா... நா... நான் விளையாட்டுக்கு... அவர் கார் ஓட்டிட்டு இருக்காருப்பா” கண்களோ அவனையே முறைத்தது, 'பாவி மாட்டிவிட்டுடியே' அவரிடம் அவள் தட்டு தடுமாறி உரைப்பதற்குள், அவளிடம் போனை வாங்கி “ஹலோ அங்கிள்” என்றான் இந்தர். முன்னாடி இவர்களுக்குள் நல்ல பழக்கம் உண்டு.

கெளதம் இருமுறை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறான். கெளதம் கார் வாங்கும் பொழுது, ரசித்து, செலக்ட் செய்தது இந்தர் தான். அப்படி பட்ட நட்பு அவர்களுடையது.

“என்ன இந்தர்... நேத்து முழுக்க அழுதுட்டு இருந்த புள்ளையை என்ன பண்ணி வச்சிருக்க நீ, இன்னும் கொஞ்ச நாள் போனா எங்களை யாருன்னு தெரியாது போலவே?” கிண்டலாகக் கேட்டார் அவர்.

மலர்ந்து சிரித்தான் இந்தர் “அது எப்படி அங்கிள் உங்களை மறப்போம்... நீங்க எங்க குலசாமி... எம்பொண்ணுக்கு நீங்க தான் பேர் வேற வைக்கணும். என் பொண்டாட்டியை முறைப்படி நீங்க தான் எனக்கு கை பிடிச்சு தரணும்”

“என்ன மாப்பிள்ளை அந்தளவுக்கு போயாச்சா?”

“ஹா... ஹா... அங்கிள்” சிரித்தான் இந்தர்.

அவன் முகத்தையே பார்த்திருந்தாள் ரதி. அவன் முகம் அப்படி ஒரு புன்னகையில் இருந்தது.

“அப்படியே கௌதம்கும் கல்யாணத்தை முடிச்சா, எனக்கு நிம்மதியா இருக்கும் இந்தர்”

“கொஞ்ச நாள் டைம் குடுங்க அங்கிள்... மதிக்கிட்டையும், கௌதம்கிட்டையும் பேசிட்டு, நான் அவளை அங்குக் கொண்டு விடுகிறேன்” எனக் கூறினான்.

“நீ அவகிட்ட எதுவும் பேசவேண்டாம் இந்தர். கெளதம் எல்லாமே பேசிட்டான்” என்றவர் கெளதம் விளையாட்டைக் கூறினார்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டான். ‘என்ன கௌதம் விரும்பிய பொண்ணு என்னோட மதிக்குட்டியா’ அவனால் நம்ப முடியவில்லை. ஆனாலும், இன்னும் அவனோட விளையாட்டுப் போகலியா, இதுக்கு எல்லாம் மதி வச்சுச் செய்யப் போறா, அதுக்குத் தான் அவனைப் பற்றி விசாரிக்கிறா போலவே, கௌதமை நேரில் பார்க்கும் நேரம் நிறையக் கலாட்டா நடக்கும் போலவே’ எண்ணியவன் சிரித்தபடியே அவரிடம் பேசி அழைப்பை நிறுத்தியவன், அவள் பக்கமாய்த் திரும்பினான்.

மீசை பேசியதைக் கேட்ட பிறகு கெளதம் மேல் இருந்த கோபம் கொஞ்சமாய்க் குறைத்தது. ஆனாலும், அவன் செய்ததை மனம் ஏற்க மறுத்தது. ‘எல்லாம் இனி மதி பார்த்துக் கொள்வாள்’ எண்ணியவன் ரதியைப் பார்த்தான்.

இமைக்க மறந்து அவனையே பருகிக் கொண்டிருந்த, அந்தக் கண்களை அவன் கண்கள் கவ்வி கொண்டன.

இருவரும் அப்படியே கரைந்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். அவன் விரல்கள் அவள் கையை மெல்ல வருடியபடி காரை மெதுவாக செலுத்தினான் இந்தர்.

அந்தப் பயணம் இருவருக்கும் மறக்க முடியாத பயணமாய் அமைந்தது.

வீட்டுக்கு சென்று அவளை அறிமுகப்படுத்த, “அண்ணி” என்றபடி மதியை அணைத்துக் கொண்டாள் ரதி.

அதன் பிறகு நேரம் இறக்கை கட்டிப் பறக்க, அவளை வீட்டில் விட்டு வந்தான் இந்தர். அடுத்த நாளே கெளதம் குடும்பத்துடன் மதி வீட்டின் முன் வந்து நின்றான். மதியை அவர்கள் வீட்டுக்கு முறைப்படி அழைத்து செல்ல...

கௌதமைக் கண்டவள் 'வாத்தியா?' என்றபடி அப்படியே திகைத்து நின்றாள். மனதில் கௌதம்கான கௌண்டிங் ஆரம்பித்தது.
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Gauthama vasama matinya. ini mathi unna vachu seyapora paru. Phone conversation starting engayo ketta mathiri irruku
:LOL::LOL::LOL: ஆமா.. மாட்டிக்கிட்டான் தான்... ... :LOL::LOL::LOL:ஹெல்மெட் மண்டையன்...
கிட்ட இருந்து கேட்டது ... ...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top