• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen...! EPI - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரண்ட்ஸ்...

மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன ரொம்ப லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... இன்னைக்கு கெளதம் - மதி வாழ்க்கை எப்படி ஆரம்பம் ஆகுதுன்னு பாப்போம் வாருங்க... மதி கௌதமை விட்டாளா? இல்லை ஏதாவது பனிஷ் பண்ணுனாளானு பார்க்கலாம்? இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பிரெண்ட்ஸ்... குறுநாவல் போட்டிக்கு நானும் கலந்திருக்கேன்... "காதலில் சொதப்புவது எப்படி..?" இது தான் கதையோட டைட்டில். நமக்கு வார ஹீரோ எல்லாம் காதலில் சொதப்ப தான் செய்யுறாங்க... இவனும் அப்டி தான்...திங்கள் கிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நாள் வேற இல்ல... அதுவும் ஒரு ஜாலி கதை தான்.... அடுத்த வாரத்தில் இருந்து ரெண்டு கதையோட எபியும் தரலாம்னு இருக்கேன்...கொஞ்சம் முன்ன பின்ன வந்தா மன்னிச்சுக்கோங்க...


காதல் – 15

உன் கால்களின் கொலுசு சத்தமும்...

உன் முகத்தின் முத்து சிரிப்பும்...

உன் வளையலின் இன்னிசையும்...

என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கையில்...

நான் எப்படி கண்ணயர்வேன் என் கண்மணியே...?

இன்றோடு மதி, கௌதம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று. காலேஜ் திறந்ததை தொடர்ந்து கெளதம் இரு நாட்கள் விடுமுறை எடுக்க, மதியோ ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.

அன்று உண்மையாகவே கௌதமை வீட்டில் எதிர் பார்க்கவில்லை. அதிலும் கணவனாக, காதலனாக அவனை எதிர் பார்க்கவில்லை.

அவன் வீட்டுக்கு வரவும் அவளின் பல கேள்விக்கு பதில் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.. தன்னை தொடர்ந்து வந்தது இவன் தான் அதனால் தான் என்னை பற்றி எல்லாம் அறிந்திருக்கிறான்.

இப்பொழுது தேடி வந்தவன் ஏன் தாலியைக் கட்டி விட்டு சென்றான்? இது மட்டும் அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும் அவனை உடனே மன்னித்து ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை.

அப்படியும் அவனின் தவறை மன்னிக்க அவள் ஓன்றும் அவனுடன் வாழ்கையை பகிர்ந்துக் கொண்ட மனைவி அல்லவே... பகிர்ந்துக் கொள்ள போகும் மனைவி.

அதற்காக, அவனுடன் செல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இத்தனை நாள் அப்பாவையும், பாட்டியையும் கஷ்டபடுத்தியதுப் போதும். என் வாழ்க்கை சந்தோசமாக அமைந்தால் தான் இந்தர் அவன் வாழ்க்கையைப் பார்ப்பான்.

பலவற்றை எண்ணியவள் வந்தவர்களையே பார்த்து நின்றாள். கமலாவை அவள் மனம் உடனே அறிந்துக் கொண்டது. சோறூட்டி வளர்த்த ஆன்ட்டி.

அவளின் அம்மா, பள்ளியை விட்டு வர நேரமானால், கெளதம் அவளை அவன் வீட்டுக்கு தான் அழைத்து செல்வான். அவளுக்கு தெரிந்த வரையில் அவனின் பெயர் கிருஷ்ணா. அந்த பெயர் வாயில் வராததால் அவளே அவனுக்கு “கிச்சா” என்று பெயர் வைத்துக் கொண்டாள். ஆனால், இங்கு அவர்களின் ஜி.கே ப்ரோபோசரை எதிர் பார்க்கவில்லை.

எங்கு எல்லாமோ சுற்றி, ஒரே கூட்டுக்குள் வந்து சேர்ந்தது இரு குடும்பமும். நாகு, கமலாவை அப்படியே பார்த்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகுப் பார்க்கிறார்.

கமலாவின் மகனாக, கௌதமை இன்னும் நினைத்து பார்க்க முடியவில்லை அவரால். ‘கமலா வளர்த்த பையனா அப்படி ஒரு காரியம் செய்தான். நம்ப முடியவில்லை அவரால். ஆனாலும், இனி பேசி என்ன பயன், எல்லாம் தான் சரியாகி விட்டதே. அவனும் அவளை தேடி வந்துவிட்டானே, இனி என்ன வேண்டும், மதி அவள் வாழ்கையை காப்பாள்’ எண்ணியவர்,

மதியின் முகத்தைப் பார்த்தார். அவளோ கௌதமையே பார்த்திருந்தாள். அவனும், அவளைத்தான் பார்த்திருந்தான். கண்களோ அவளிடம் மன்னிப்பையே யாசித்தது.

எல்லார் முகங்களையும் ஒரு முறை பார்த்த கருத்தபாண்டி அவர்களை நோக்கி “என் மருமகளை நான் அழச்சிட்டு போகட்டும்களா?” என சத்தியநாதனை பார்த்துக் கேட்டார்.

“இத்தனை நாள் உங்க மருமகள் உங்க கண்ணுக்கு தெரியலைங்களா?”

“அப்படி சொல்லாதீங்க சம்மந்தி... என் பையன் கல்யாணம் பண்ணினது எனக்கே தெரியாதுங்க?”

இந்தர்க்கு இந்த கதை புதியது. அவனின் பார்வை ரதியை நோக்கி தாவியது. ‘நீ சொல்லலியா?’ என...

‘நான் சொன்னேன்... ஆனா ரொம்ப லேட்டா சொன்னேன்’ என்பதாக பதில் பார்வைப் பார்த்தாள் அவள்.

மெதுவாக எழுந்த கமலா, மதி அருகில் சென்று, அவளின் கன்னம் வருடி “நீ என் வீட்டுக்கு என்னோட மகளா வரியாம்மா?” இப்பொழுது கேள்வியை அவளிடமே கேட்டார். முடிவெடுக்க வேண்டியவள் அவளே.

வாழ போவது அவள். அவள் பதிலை எதிர் பார்த்திருந்தனர். ஆனால் அவளோ தன் தந்தையைப் பார்த்தாள். இத்தனை நாள், எந்த கஷ்டமும், எந்த வார்த்தையும் சொல்லாமல், அவளின் சந்தோசத்துக்காக அவளை படிக்க வைத்தவர்கள். அவர்கள் பதில் தான் அவள் பதிலாக இருக்கும்.

நேற்றே இந்தர், சத்தியநாதனிடம் எல்லாம் கூறிவிட்டான். கெளதம் சிறு வயது காதலும், அவளை தேடி அலைந்ததில் தான் மதியை விட்டு சென்றான் என்றும். அவனின் காதலியும், தாலி கட்டிய மனைவியும் மதி தான் என்ற உண்மை தெரியவரவும், அவளின் மனநிலை அறிய அவளிடம் விளையாட்டாக பேசியதையும் சத்தியநாதனிடம் கூறியிருந்தான்.

கோபமாக அவனை ஏறிட்டார் “இது வாழ்க்கை இந்தர் விளையாட்டு இல்லை... ஒரு வேளை இவளுக்கு கிச்சாவை பிடிக்கலன்னா இவன், மனைவியாகிய மதியை தேடி வரமாட்டானாமா?”

“அப்படி இல்ல மாமா, அவளுக்கு கிச்சாவை பிடிக்கலன்னா, கணவனா அவன் கண்டிப்பா அவளை தேடி வருவான்?”

“அதெப்படி வருவான் இந்தர்... ஒரு வேளை அவனோட காதலி கிடைக்கலன்னா, கடைசி வரைக்கும் நம்ம மதியை அவன் தேடியிருக்கவே மாட்டான் தானே?”

“ஏன் மாமா இப்படி எல்லாம் நெகட்டிவ்வா பேசுறீங்க... அப்படி நான் விட்டிருவேனா? அவங்க ரெண்டு பெரும் சேர்ந்த பிறகு தான், நானும் ரதியும் சேர்வதாக பேசியிருந்தோம் மாமா, இப்படி இருக்கும் போது எப்படியும் கெளதம், மதியை ஏற்றுக் கொள்ள தானே வேண்டும்?”

“எதுக்கு பிடிக்காத பொண்ணை வச்சு, அவன் என்ன பண்ணுவான், ஒரே வருஷத்துல என் பொண்ணை விட்டு விட்டு போகவா?”

“என்ன மாமா, எது சொன்னாலும் இப்படியே பேசுறீங்க. அவன் ரொம்ப நல்லவன் மாமா, மதி மேல அவன் உயிரையே வச்சிருக்கான்”

“மதி மேலன்னு சொல்லாத, அவன் காதலி மேலன்னு சொல்லு?” கடுப்பாக மொழிந்தார்.

“ரெண்டு பேரும் ஒருத்தங்க தானே மாமா?”

“அது இப்போ தானே, அவனுக்கு தெரியுது”

“மாமா, பிளீஸ்... எதுக்குன்னாலும் இப்படி ஏறுக்கு, மாறா பேசினா எப்படி மாமா? காலம் முழுக்க நம்ம மதி இங்கயே இருக்கணுமா? இப்போ அவ மனசு முழுக்க இருக்கிறது, அவளோட கணவன்?”

சட்டென அமைதியானார் அவர்.

“ஆமா மாமா, உண்மை தான்”

“என்ன சொல்லுற?”

“ஆமா, மாமா... ஒருநாளும் கெளதம் பத்தி, மதி என்கிட்ட கேட்டதே இல்லை. ஆனா நேத்து அவனை பத்தி தான் எல்லாம் கேட்டா... அதுக்கு பிறகு தான் நான் ரதியை பார்க்க போனேன்... அவ அப்பாகிட்ட பேசினேன்”

அமைதியாக கேட்டவர். அதன் பிறகு எதுவும் கூறவில்லை. எப்பொழுதும் மதி சந்தோசம் தான் அவர்கள் சந்தோசம். மதியின் முடிவு தான் அவர்கள் முடிவு.

இப்பொழுதும் மதியின் முடிவை நோக்கி இருந்தனர். அவள் முகத்தை பார்க்க, அவளோ தன் தந்தையை பார்த்து நின்றாள். அஷோக் எல்லாருடைய முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

‘என்னடா இது... சட்டுபுட்டுன்னு ஒரு முடிவை எடுத்து அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க, அப்போ தான் என் ரூட் கிளியர் ஆகும்’ மனதில் புலம்பிக் கொண்டான்.

அவன் புலம்பல் அருகில் இருந்த கௌதமுக்கு கேட்டதுப் போல, எழுந்து சத்தியநாதனை நோக்கி சென்றான்.

“அங்கிள்...” என அவரை அழைத்தான் கெளதம்.

“சொல்லுப்பா..”

“என்ன மன்னிசிடுங்க அங்கிள்... நான்... எனக்கு மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்ல... ஆனா இப்போ என்னால அதை மட்டும் தான் செய்யமுடியும். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து நான் அதிகம் தேடியது என்னோட நிலாக்குட்டியை தான்... அந்த நாட்கள் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஆனா, நான் ஒரு அளவுக்கு வளரும் போது என்னை விட்டு போயிட்டா, அவளை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?.

அது எனக்கு மட்டும் தான் தெரியும், இதோ இருக்கிறானே அஷோக் அவனுக்கு கூட தெரியாது. அவளை தேடி நான் அலைஞ்சுட்டு இருக்கும் பொழுது, என்னோட எம்டி பண்ணுன வேலையில், யாரோ ஒரு பொண்ணுக்கு தாலி கட்ட வேண்டிய கட்டாயம், அதிலும் அந்த பொண்ணு முகத்தில் இருந்த ஏதோ ஒன்றுக்காக கட்டினேன். அது சத்தியமா என்னோட நிலாக்குட்டின்னு எனக்கு தெரியாது.

ஒரு வேளை அவளோட அப்பா, அம்மா அங்க இருந்திருந்தால், இவளை அடையாளம் கண்டிருப்பேனோ என்னவோ, பாட்டியை கூட நான் பார்க்கலை. எல்லாம் என் விதி. கையில் கிடைச்ச பிறகும், தொலைத்து தேடி அலையணும் என்று எனக்கு விதி இருக்கும் போல,

தாலி கட்டின அன்னைக்கு கூட நான் அவளை விட்டு போகணும்னு நினைக்கல, ஆனா, என்னோட நிலாக்குட்டி முதல் முறையா என்கிட்ட கேட்ட ஒரு விஷயம் என்னால எப்படி அதை நிறை வேற்றாமல் இருக்க முடியும்” அவளையே ஆழ்ந்துப் பார்த்தான்.

அவளுக்கே என்ன என்று நியாபகம் இல்ல. அவனையே பார்த்திருந்தாள். அப்படியா என்னை அவன் நினைவில் வைத்திருக்கிறான். அவளால் நம்ப முடியவில்லை. எல்லாரும் அவன் முகத்தையே பார்த்திருக்க மீண்டும் தொடர்ந்தான்,
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“என்னை மறக்க மாட்டாய் தானே கிச்சா?” இந்த வார்த்தை... இந்த வார்த்தை அவள் கண்ணீரோட என்கிட்ட கேட்டது. தாலி கட்டியதும் அவளோட கண்ணீர் முகம் நினைவுக்கு வருது. நான் என்ன பண்ணுறது, என்னோட நிலாக்குட்டி ஒரு வேளை என்னக்காக காத்திருந்தா, என்னை தேடி வந்தா நான் அவளுக்கு என்ன பதில் சொல்வதாம்? அவளுக்கு என் மேல காதல் இருக்கா இல்லையா தெரியாது, ஆனால் ஒருவேளை என்னை தேடி வந்துட்டான்னா நான் என்ன பதில் சொல்லுறது? அது தான் விலகி போனேன். அவளுக்கு, அவளோட கிச்சா கிடைக்கணும் தானே? அதுக்கு தான் விலகினேன்.

அதுக்கு பிறகும், இவளை தேடி வந்தேன். தாலி கட்டிய கடமைக்காக, ஆனால் இந்தர் என்னை தடுத்துட்டான். அது கூட நல்லதுக்கு தான்.

அவன் தடுத்ததினால் தான் என் நிலாக்குட்டியை நான் கண்டு பிடிச்சிருக்கேன். இல்லன்னா எனக்கு அவள் கிடைச்சிருக்கவேமாட்டாள். தாலி கட்டியவள் என்னோட நிலான்னு அறியாமலே, தாலி கட்டியவளுக்காக என்னை நான் இயந்திர தனமாக மாற்றினாலும் மாற்றியிருக்கலாம். இருவர் வாழ்கையும் கடைமைக்காக வாழ்ந்ததாக இருந்திருக்கும்.

ஆனா, இப்போ அப்படி இல்லை என் மனதுக்கு பிடிச்ச என் நிலா கூட பல வருஷம் சந்தோசமா வாழ்வேன்... எந்த நிலையிலும், எதற்கும் அவளை விடமாட்டேன். என் சாவிலும், அவளையும் சேர்த்து அழைத்து செல்வேன். இதை புரிஞ்சுக்க தான் இத்தனை கஷ்டம் வந்ததுவோ என்னவோ? இப்போ சொல்லுங்க நான் என்ன பண்ணுவது...” அவர்களையே பார்த்து நின்றான்.

எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். அவன் மனநிலையில் பார்த்தால், அவன் செய்தது தவறில்லை தான். ஆனால் மதி நிலையில் நினைத்துப் பார்த்தால் மதியை விட்டது பெரும் தவறே... அன்று பலர் ஏளன பார்வைக்கும் அஞ்சி தான், அவளை இந்தர் இருக்கும் ஊருக்கு அனுப்பி விட்டனர். அவர்கள் வீட்டு தேவதை யார் பார்வைக்கும் குறைந்தவளாகவோ, ஏளனமாகவோ தெரியக் கூடாது என எண்ணி தான் இந்தர் அழைத்து சென்றான்.

‘டேய் கிச்சா... நீ என்னை நினைத்த அளவு கூட நான் உன்னை நினைக்கவில்லையே... சாரிடா’ அவளையே நொந்துக் கொண்டவள், மனதில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். ‘ஆனாலும் அவனை அப்படியே விட மனதில்லை. அவன் தன்னை எப்படி எல்லாம் சுத்த விட்டான். அவனை கொஞ்சமேனும் சுத்தலில் விடணும்’ மனம் உறுதியாக முடிவெடுக்க’ அவனை முறைத்து பார்த்தாள்.

எல்லாரையும் பார்த்தவன் “இனியும் என் மேல நம்பிக்கை இல்லன்னா, எப்போ நம்பிக்கை வருதோ அப்போ நம்பி என் நிலாவை எங்க வீட்டுல விடுங்க... அம்மா வாங்க கிளம்பலாம்” எல்லாரையும் அழைத்து வெளியில் செல்ல எத்தனிக்க,

“மாப்பிள்ளை” என அவனை அழைத்த சத்தியநாதன், மதி கையை அவனோடு பிணைத்து, முழு மனதோடு, அவன் மேல் நம்பிக்கை வைத்து மகளை, அவள் கணவன் கையில் ஒப்படைத்தார்.

அன்றிரவு மொட்டைமாடியில் அமர்ந்து, கமலா சாப்பாட்டை உருண்டை பிடித்து கொடுக்க, சாப்பிட்டபடியே எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர். சிறுவயது, அனுபவங்களை பேசியபடியே அமர்ந்திருந்தனர்.

மதி, சிறு வயதில் இருக்கும் பொழுது சாப்பிட்டது. அதன் பிறகு இன்று தான் நிலா சோறு சாப்பிடுகிறாள்.

அன்பும், பாசமும் இழையோட அரட்டை அரங்கம் பல விசயங்களில் சென்று களைகட்ட ஆரம்பித்தது.

ஆனா, கமலா மட்டும் ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்தார்.

“என்னாச்சு கமலா, இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க? உன் மருமகளுக்கு எப்படி கொத்து சாவியை கொடுப்பதுன்னு தீவிரமா யோசிக்கிற போல?” கிண்டலாக வினவினார் மீசை.

“ஆமா, அது தான் யோசிக்கேன்?” நொடித்துக் கொண்டார்.

“எனக்கு எப்போ கல்யாணம் பண்ணனும்னு யோசிக்குறீங்க அப்படி தானே அத்த” அஷோக் கேட்க,

அவனை முறைத்த மீசை “வீட்டுக்கு முதல், பேர குழந்தை பிறக்கட்டும், அதுக்கு பிறகு உனக்கு பண்ணலாமா, வேண்டாமான்னு யோசிக்கலாம், சும்மா அலையாதே” முறைக்க,

“என்ன பேரக் குழந்தையா?”அலறினான்.

“ஏன்டா?,” இப்பொழுது நேரடியாக முறைத்தான் கெளதம். காரணம் இங்கு இருந்த ஒரு வாரமும், மதி அவனிடம் சண்டை போடவே இல்லை. அதிலும் அவனுக்கு சாப்பாடு பரிமாறியது எல்லாம் அவள் தான். அந்த சந்தோஷத்தில் அவனை முறைத்தான்.

“அதில்லடா, பேர குழந்தை வர பத்து மாசம் ஆகும்” இரு கையையும் காட்டி நீட்டி முழக்கினான் அவன்.

“அம்மா, நீ சொல்லு என்ன யோசிக்கிற?” அவளின் தோள் தொட்டு வினவினாள் ரதி. அவரின் பதிலுக்காக அவர் முகத்தை பார்த்திருந்தாள் மதி.

“ஒன்னும் இல்லம்மா, ஒரு வாரமா மனசு ஒரு மாதிரியாவே இருக்கு. அன்னைக்கு கட்டுன தாலி தான் சரி இல்ல போல அது தான் ஒரு வருசம் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தாங்க, ரெண்டு நாளில் சுமங்கலி பூஜை வேற வருது, வீட்டுல பூஜை வச்சு, மூத்த சுமங்கலி கையால் தாலி வாங்கி மதிக்கு கட்ட சொல்லலாமான்னு சின்ன யோசனை தான், மதிக்கு பிடிக்குமா? என்னன்னு தெரியணும், அது தான் எப்படி கேட்கன்னு யோசிக்கிறேன்” மதியை பார்த்துக் கொண்டே கூறினார் அவர்.

“அதெல்லாம், ஒன்னும் வேண்டாம்மா, ஜெய், எங்களுக்காக தான் தாலி செஞ்சார். அவர் காதலி கூட சேர்ந்து பக்காவா பிளான் போட்டு தான் கல்யாணத்தை முடிச்சார். அதனால் தாலி பிரச்சனை எல்லாம் இல்ல”

“நீ பேசாம இருடா... மதி நீ சொல்லு... உனக்குன்னு அத்தை செய்யுற தாலி வேணுமா? வேண்டாமா?”

“நீங்க சொல்லுறதை, நான் எப்படி அத்தை வேண்டாம்ன்னு சொல்லுவேன்... நீங்க எது செய்தாலும், நல்லதுக்கு தான் செய்வீங்க, எனக்கு தானே செய்யுறீங்க. யார் கிட்டையும் கேட்கவேண்டாம்... பூஜைக்கு ரெடி பண்ணுங்க” கௌதமைப் பார்த்துக் கொண்டே தான் கூறினாள்.

‘டேய்... இப்போவே உன் பொண்டாட்டி உனக்கு எதிரா திரும்புறா? சீக்கிரம் ஏதாவது செய்’ மெதுவாக கெளதம், காதை கடித்தான் அஷோக்.

“ம்ம்ம்ம்” வேகமாக தலையாட்டிக் கொண்டான் கெளதம்.

அப்படியே, ரதி பாய் எடுத்து வர, கதைகள் பேசியபடியே மாடியில் படுத்துக் கொண்டனர். ஒரு வாரமாக அவர்களின் படுக்கை இந்த நிலவொளி தான்.

நடு ராத்திரியில் எழும் கெளதம், அந்த நிலவொளியில், அவனின் நிலாவையே ரசித்துப் பார்த்திருப்பான். அந்த வானத்து நிலவும் அவனுக்கு துணையாக வெகு நேரம் விழித்திருக்கும்...

அன்று வீடே காலை நேர பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மதியின் குடும்பத்தார் காலையிலையே மதி வீட்டிற்கு வந்து விட்டிருந்தனர்.

ரதியும், இந்தரும் வாசலில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ஐயர், பூஜைக்கு தேவையான எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக, கமலா நின்றிருந்தார்.

“யம்மா, நீ போய், புஷ்பம், மஞ்சகிழங்கு, வெத்திலை எல்லாம் கொஞ்சம் எடுத்துட்டு வாம்மா?” என அங்கு நின்றிருந்த சுபியை பணிந்தார் ஐயர்.

அவள் செல்லவே, “நானும் உனக்கு உதவி பண்ணுறேன் சுபி?” என்றபடி அவளின் பின்னே அசோக்கும் சென்றான். கௌதம் காதலை கூறியபடியே அவளுடன் நடந்தான் அசோக்.

அவன் கையில் இரண்டு தாம்பளத்தை கொடுத்த சுபி, அடுத்ததை தான் தூக்கிக் கொண்டு ஐயரிடம் கொடுத்தார்.

பூ, பழம், குத்துவிளக்கு, குங்குமம், வெற்றிலை, மாலை, புது தங்க தாலி, சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க வேண்டிய, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு அடங்கிய சிறு பை, கூடவே அவர்களுக்காக ரவிக்கை துணி, சிறு தட்டு இத்தனையும் அடங்கிய தாம்பளத்தை சாமி முன் அடுக்கிக் கொண்டிருந்தார் மீசை.

மஞ்சளும், பச்சையும் கலந்த பட்டுபுடவை உடுத்தி, தலையில் மல்லிகை சூடி, வீட்டின் பரம்பரை நகையை அணிந்து தேவதையென மதி வர, அவள் அருகில் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டையில் கௌதம் வர,

அங்கிருந்த குட்டி நாற்காலியில் இருவரையும் அமரக் கூறினார் ஐயர்.

அவர்கள் அமரவும், “இந்தாங்கோ, இந்த மாலையை எடுத்து அவாட்ட கொடுங்கோ” ஐயர் கூற, இரு மாலையும் கையில் எடுத்த கமலா, இருவர் கையிலும் ஒவ்வொன்றைக் கொடுத்தார்.

“ரெண்டு பேரும் மாலையை மாத்துங்கோ” ஐயர் உரைக்கவே இருவரும் மாலையை மாற்றிக் கொண்டனர்.

“இந்தாங்கோ இதையும் பிடிச்சுகோங்கோ” என கெளதம் கையில் குத்துவிளக்கை கொடுத்தார்.

அதை அவன் முன்னால் வைக்கவே, ஒரு தாம்பாளத்தில் வைத்திருந்த, ரோஜா மலர்களை அவர்களிடம் கொடுத்து, “ரெண்டு பேரும் அபிஷேகம் பண்ணுங்கோ” என்றபடி மந்திரத்தை ஆரம்பித்தார்.

அவர் மந்திரம் கூற, இருவரும் கொஞ்சம், கொஞ்சமாக பூவை விளக்கில் அபிஷேகம் செய்தனர்.

மந்திரத்தை முடித்தவர், தீபத்தை ஏற்றி சாமியை வழிபட்டு, தீபத்தை கெளதம், மதியிடம் காட்டி அவர்கள் வணங்கிய பின், ரதி கையில் கொடுக்க, ஒவ்வொருத்தருக்காய் தீபத்தை கொண்டு சென்றாள்.

புதிதாக வாங்கி வைத்திருந்த தாலியை, கையில் எடுத்த ஐயர், மூத்த சுமங்கலி கையில் கொடுத்தார்.

அதை வாங்கியவர், மஞ்சள், குங்குமம் கலைந்த தாம்பாளத்தில் வைத்து, மற்ற சுமங்கலிகளிடம் ஆசி வாங்கி வந்து ஐயர் கையில் கொடுத்தார்.

“இதை அவா கழுத்தில் கட்டுங்கோ?” என கெளதம் கையில் புது தாலியை கொடுத்தார் அவர்.

மற்ற சுமங்கலி பெண்கள் அவளின் பழைய தாலியை கழட்ட, நல்ல நாளில் மதிக்கு புது தாலியை கட்டினான் கெளதம். அவன் செயலில் மதி முகம் கொஞ்சமே கொஞ்சம் புன்னகையை காட்டியது.

முழு மனதோடு, முழு காதலோடு மதிக்கு தாலி கட்டினான் கெளதம்.

“இந்த குங்குமத்தை எடுத்து அவா தாலில வைங்கோ”

குங்குமத்தை கையில் எடுத்த கெளதம், மதி முகத்தைப் பார்க்க, மதி, தன் கையில் தாலியைப் பிடித்து அவனுக்கு காட்ட, அவள் கையோடு தாலியை பிடித்து குங்குமம் வைத்து விட்டான். மதி மனது நிறைந்துப் போனது.

“உச்சி பொட்டில் வைங்கோ”

அவளின் கண்களை பார்த்தபடியே அவளின் வகிட்டில் குங்குமத்தை வைத்து விட்டானவன்.

“இந்த பூவை அவாளுக்கு போட்டு ஆசிர்வதிங்கோ” ஐயர் உரைக்கவே, அவர் சொன்னதை அப்படியே செய்தானவன்.

“உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் ஆகிட்டோன்னோ, அப்படியே இந்த காசையும் அவா தாலில கோத்துடுங்கோ’ என்றபடி தங்க காசை கெளதம் கையில் கொடுக்க, அதை வாங்கி, அவளை, அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே தாலியில் கோர்த்தான்.

“அப்படியே இந்த குங்குமத்தையும், காசுல வைச்சு விடுங்கோ”

குங்குமத்தை வைத்து எழ, “பெரியவாள் காலில் விழுந்து நமஸ்கரிங்கோ” கூற அப்படியே எல்லார் காலிலும் விழுந்து வணங்கினர். மிக பெரிய பாரமும் இறங்கியது போல் இருக்க எல்லாருக்கும் அத்தனை சந்தோஷமாக இருந்தது.

மதி கையால், எல்லாருக்கும் மஞ்சள், குங்கும், தாலி, பூ, ரவிக்கை துணி கொடுக்க அவளை வாழ்த்தி விடை பெற்றனர் சுமங்கலி பெண்கள்.

இன்று நல்ல நாளாகவும் இருக்க, இருவரையும் ஒன்றாக இணைக்க எண்ணினார் கமலா. அதற்கான ஏற்பாடும் நடந்தது.

அன்று இரவு மதி அருகில் வந்த ரதி, “அண்ணி சீக்கிரம் எனக்கு ஒரு மருமகனை பெத்துக் கொடுங்க, நான் மகளை பெத்து தாரேன், அப்படியே ரெண்டு பேரும் சம்மந்தி ஆகிடலாம்” இருவரும் டீல் பேச,
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
“அதுக்கென்ன ரதி, ஒன்னு என்ன ரெண்டு மருமகன் புள்ளையை எண்ணி பத்தே மாசத்துல பெத்து தாரேன்?”

“அட...! செம ஸ்பீடு அண்ணி நீங்க” கிண்டலடிக்க,

“பின்ன நான் என்ன உன் அண்ணன் மாதிரி மக்கு வாத்தியரா?”

“ஹா... ஹா... அண்ணி நீங்க இந்தர் சொன்ன மாதிரி சோ ஸ்வீட்” என கன்னத்தில் முத்தம் வைக்க,

“அட..! மேக்கப் கலைச்சிராதடி” என்றபடி அவளின் தெற்றிப் பல் தெரிய சிரித்தாள் அவள்.

“அண்ணி, செம அழகு நீங்க, பூஜை நடக்கும் போதே அண்ணன் உங்களை ஒரே சைட் தான்”

“யாரு, வாத்தியா... நீ வேற... உங்கண்ணன் அதுகெல்லாம் சரிபடமாட்டான்”

“அண்ணி... எங்கண்ணனை ரொம்ப கிண்டல் பண்ணுறீங்க, அவர் யாருன்னு உங்களுக்கு தெரியாது, தெரியாம கிண்டல் பண்ணாதீங்க”

“அட... ஆறு மாசமா ஒளிஞ்சு நின்னு தானே சைட் அடிச்‌சார் வாத்தி”

“எதுக்கு ஒளிஞ்சு நின்னான்னு, இன்னைக்கு தெரிய தானே போறீங்க”

“சீ... போடி”

“அட... அட... வெட்கத்தைப் பாரேன்” ரதி கிண்டல் செய்ய,

“ஏய்... போ படு” என்றபடி வந்த கமலா, ரதியை விரட்டி விட, அவளை பார்த்து கண் சிமிட்டி சென்றாள்.

மதியை கெளதம் அறைக்கு செல்ல கூற, “சரித்தை” என எழுந்து சென்றாள் அவள்.

அசோக்கிடம், சில பல ஐடியா வாங்கிய கெளதம், அவனின் நிலாவுக்காக அறையில் இருந்தான்.

அவன் அறைக்கு சென்ற மதி, அவனை தேட அவனை காணவில்லை...

மேஜை மேல் ஒரு ரோஜாவும், அதன் அருகில் சிறு ஸ்வீட் டப்பாவில் அவளுக்கு பிடித்த பால்கோவாவும் இருந்தது. இவை கண்ணில் பட, வாத்தியை மறந்துப் போனாள்.

(உபயம் அஷோக் மூளை... அப்பவே கெளதம் கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும்..)

‘ம்ம்... பரவாலியே வாத்தி கொஞ்சம் ரொமாண்டிக் ஆள் போல’ எண்ணியவள், கட்டிலில் அமர்ந்துக் பால்கோவாவை ருசிக்க ஆர்மபித்தாள்.

‘அடடே... அடடே... என்னா டேஸ்டு... என்னா டேஸ்டு...’ ரசித்து ருசித்து உண்டவள், அந்த ரோஜாவை எடுத்து கூந்தலில் சூடிக் கொண்டாள்.

அதன் பிறகு தான் கெளதம் நினைவு வர அறையில் தேடியவள் அவன் இல்லாமல் போக, ஜன்னல் வழியாக பால்கனியில் எட்டிப் பார்க்க, அவன் சத்தம் கேட்கவும் அங்கு எட்டிப் பார்த்தாள் அவள்.

அவனோ, “ஏய்... நிலவு பெண்ணே...

என்னை விட்டு, இன்னும் எத்தனை நாள் விலகிப் போவாய் நீ...” கவிஞராய் மாறி நிலவுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தான்.

‘வாத்தி பயங்கர லவ் மூட்ல இருக்கார் போல, நாம வீணா ஏன், தொந்தரவு பண்ணனும்... லவ்ஸ்ஸ என்றும் பிரிக்க கூடாது’ எண்ணியவள், இங்கிருந்து அவனுக்கு ஒரு தலைகாணியும், ஒரு போர்வையும் வாசலில் வைத்தாள்.

அறைக்கு வந்து ஒரு பேப்பர், பேனா எடுத்து ஏதோ எழுதியவள் அவன் கண்ணில் படும் படியாக வைத்துவிட்டு கதவை பூட்டி வந்து படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனாள்.

கொஞ்ச நேரத்தில் பயங்கர குளிர் அடிக்கவே, கைகளை உரசி கன்னத்தில் வைத்த கெளதம் ‘நம்ம பொண்டாட்டி இன்னுமா வரல?’ என்ற யோசனையுடன் திரும்ப, வாசலில் இருந்த அவனின் தலைகாணியும், போர்வையும் அவனைப் பார்த்து சிரித்தது.

பக்கத்தில் வெள்ளை பேப்பர் அவனைப் பார்த்து பல்லிளிக்க, அதை கையில் எடுத்துப் பார்த்தான்.

“வீட்டில் ரெண்டு கால் எலி அதிகமாக உள்ளது, நாளையில் இருந்து இன்னும் கொஞ்சம் அதிகமாக பால்கோவா வாங்கி வரவும்” என்ற வாசகம் அவனைப் பார்த்து சிரித்தது.

‘அடேய் அஷோக்... உன் ஐடியாவில் தீயை வைக்க... கல்யாணம் முடிஞ்சும் சிங்கிள் லிஸ்ட்ல என்னையும் சேர்த்துட்டியே பாவி, நாளைக்கு இருக்குடா உனக்கு... நீ எப்படி மிங்கிள் ஆகுறன்னு நானும் பாக்குறேன்’ கருவியவன், அந்த பனியில் தன் படுக்கையை விரித்தான்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top