• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu...: Aththiyaayam 15.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 15:

வீட்டில் சென்று இறங்கிய போது அம்மா இத்தனை தூரம் அன்பாக வரவேற்பாள் என கீதாவே நினைக்கவில்லை. ஊரை விட்டுப் போகும் போது ஒரு ஆறுதலுக்காகக் கூட சிரிக்காதவள் இப்படி மாறி விட்டாளே? எப்படியோ தன்னிடம் பாசமாக இருந்தால் சரி என நினைத்துக்கொண்டாள்.

"கீதா! எப்படிம்மா இருக்க? உன்னைப் பார்த்தே ஆறு வருஷமிருக்கும்மேம்மா? உள்ள வா!" என்றுஅன்போடு அழைத்துப் போனாள். சுக்குக் காப்பியும் சூடான இடியாப்பமும் எடுத்து வைத்தாள். சாப்பிட்டு விட்டு அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்தாள் கீதா. அந்த இதம் தந்த சுகத்தில் கண்களை மூடிய போது அவளை அறியாமல் கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது.

"அழாதே கண்ணு! நீ அழ வேண்டிய எல்லாத்தையும் அழுது முடிச்சுட்ட! இனி உனக்கு நல்ல காலம் தான்" என்றாள் அம்மா கண்ணீரைத் துடைத்தவாறு.

"என்னம்மா சொல்ற?"

"நீயே வரலைன்னாக் கூட நான் உன்னை ஃபோன் பண்ணி வர வெச்சிருப்பேன். உங்க அப்பா தான் தெய்வமா இருந்து உன்னை அழைச்சுக்கிட்டு வந்திருக்காரும்மா! இத்தனை வருஷம் நீ பட்ட கஷ்டம் எல்லாம் காணாமப் போயிடிச்சு"

எழுந்து அமர்ந்தாள் கீதா.

"புதிர் போடாம விஷயத்தைச் சொல்லும்மா"

"ரெண்டு நாள் முன்னாடி உன் புருஷன் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாரு"

அடி நெஞ்சில் பளாரென அடி வங்கினாள் கீதா.

"யா ய்யாரும்மா?"

"யாரா? என்ன பேசுற நீ? உன்னைத் தொட்டு தாலி கட்டின புருஷன்ம்மா ராஜேந்திரன். அவரு தான் வந்திருந்தாரு. "

உடல் நடுங்கக் கேட்டுக்கொண்டிஉர்ந்தாள் கீதா.

"என் கால்ல விழாத குறை. செஞ்ச தப்புக்கு மன்னிச்சுருங்க அத்தை! எங்கம்மா பேச்சைக் கேட்டு நான் கீதாவைக் கை விட்டுட்டேன். ஆனா இப்ப மனசு திருந்திட்டேன். அவளை ஏத்துக்கத் தயரா இருக்கேன்" அப்படீன்னாரு.

பேச்சே வராமல் அமர்ந்திருந்தாள் கீதா.

"எனக்கும் உன்னை மாதிரி தான் சந்தோஷத்துல பேச்சே வரல்ல! ஆனாலும் அவங்களை நம்பவும் பயமா இருந்தது. அதனால நீ எங்கே இருக்கேன்னு நான் சொல்லல்ல. உன் ஃபோன் நம்பரும் குடுக்கல்ல"

"உம்"

"அப்புறம் அவங்க வீட்டுல என்ன நடந்ததுன்னு அக்கம் பக்கத்துல விசாரிச்சேன். உன் நாத்தனார்களுக்குக் கல்யாணம் ஆயிடிச்சாம். கல்லூரணியில ஒரு பொண்ணும், கடையத்துல ஒரு பொண்ணும் வாக்கப்பட்டிருக்காங்களாம். ரொம்ப ஒண்ணும் வசதி இல்லையாம். சொந்தமா பெட்டிக்கடை வெச்சு ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்களாம். ஆனா ஏனோ பாவம் இன்னமும் ரெண்டு பேருக்குமே குழந்தை பிறக்கலியாம் கீதா! அது உன்னைக் கொடுமைப்படுத்துன பாவம் தான்னு மாப்பிள்ளை நினைக்கிறாரு. அதான் மனசு திருந்தி வந்திருக்காரு" என்றள் அம்மா.

கீதா யோசனையில் ஆழ்ந்தாள்.

"இப்ப என்ன செய்ய? சேகர் மேல எனக்குக் காதல் இருக்கா இல்லியான்னு எனக்கே தெரியல்ல. ஆனா நான் கட்டாயம் ராஜேந்திரனைக் காதலிச்சது உன்மை. ஊருக்குத் தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டதும் உண்மை. என்ன இருந்தாலும் அவரு என் கழுத்துல தாலி கட்டினவரு இல்லியா? அதனால அவரு தானே என் புருஷன். அப்படீன்னா நான் சேகரை மறக்கணுமா? என்னால அது முடியுமா?" பலவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

"கண்ணு! மாப்பிள்ளை இன்னமும் மும்பையில தான் வேலை பார்க்குறாராம். பெரிய கம்பெனியாம். நீயும் இப்ப நிறையப் படிச்சிருக்குறதானால உனக்கும் அங்கயே வேலை கிடக்குமாம். வீடு கூட பார்த்துட்டாராம்" அம்மா பேசிக்கொண்டே போனாள்.

"ஏம்மா! இப்ப இத்தனை செய்யுறவரு அஞ்சு வருஷம் முன்னால எங்கே போயிருந்தாராம்? நாம எத்தனை ஃபோன் பண்ணினோம்? அப்ப வந்தாரா? அவங்கம்மா சொன்னதுக்குத்தானே கட்டுப்பட்டாரு?"

"பழசையெல்லாம் மனசுல வெச்சிருந்தா வாழ்க்கை எப்படிம்மா நடத்துறது? ஏதோ நம்ம கெட்ட நேரம் கஷ்டப்படணும்னு இருந்தது. அதுக்கு மாப்பிள்ளை என்ன செய்வாரு?" என்றாள் அம்மா.

ஏனோ மனம் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக சஞ்சலப்பட்டது.

"அம்மா என்னை நீ என்ன செய்யச் சொல்ற?"

"என்னடி இது? நான் இது வரை சொன்னது புரியலியா? இல்ல சந்தோஷத்துல மூளை வேலை செய்யலியா? சரி நானே சொல்றேன். மாப்பிள்ளை இன்னைக்கு வரேன்னு சொல்லியிருக்காரு. அவர்ட்ட பேசு. அவரு உன்னை மும்பைக்குக் கூப்பிட்டாருன்னா பேசாம அவர் பின்னால போ! நம்மைப் பார்த்து கேலி பேசுனாங்களே ஊர் ஜனங்க அவங்க இப்ப என்ன செய்வாங்கன்னு பார்க்கிறேன்" என்றாள் அம்மா உணர்ச்சியுடன்.

ராஜேந்திரன் வருகிறான் என்றதுமே துள்ளிக் களியாட்டம் போட வேண்டிய மனது மௌனம் சாதித்தது. அதன் காரணம் கீதாவுக்குப் புரிந்தது. இப்போது அவள் மனதில் இருப்பது ராஜேந்திரன் இல்லை. சேகர் சேகர் சேகர் தான். ஆனால் அம்மா மனம் இறங்கி வந்து இப்போது தான் பேசுகிறாள் அன்பாக இருக்கிறாள். இந்த நிலைமையில் வேறு ஒருவனைக் காதலிப்பதாகவும் அவனையே கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னால் அம்மா என்ன செய்வாள்? என்னை வெறுத்து விடுவாள் நிச்சயம். அம்மாவின் அன்பு இல்லாமல் என்னால் இனி வாழ முடியாது. அதோடு நான் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால் இந்த ஊர் இன்னமும் என்னைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கேவலமாகப் பேசும். அந்த இழி நிலைக்குப் பயந்து அம்மா மீண்டும் ஏதாவது செய்து கொண்டால் என்ன செய்ய? அதற்குப் பதில் ராஜேந்திரனோடு வாழ்க்கை நடத்தினால் எல்லாருக்கும் நல்லதல்லவா?" என்று யோசித்தாள்.

"அப்ப சேகர்? அவரோட தங்கச்சி கயல்? இவங்க உனக்கு முக்கியம் இல்லையா? உனக்கு ரொம்பவும் தேவைப்படுற நேரத்துல கை விட்ட ராஜேந்திரனுக்காக நீ சேகரையும் கயலையும் கை விடப் போறியா? இன்னும் நாலு நாள்ல அவங்க வந்து நிப்பாங்களே அப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போற?" கீதாவின் மனசாட்சி அவளைக் கேள்வி கேட்டது. எனக்கு அம்மா முக்கியம் அவளின் சந்தோஷம் முக்கியம். அதற்காக நான் என்ன தியாகம் வேண்டும்மென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். என்று தீர்மானித்துக்கொண்டாள். அம்மாவுக்காக ராஜேந்திரனைப் பார்க்க ஒப்புக்கொண்டாள். மாலை சுமார் ஐந்து மணிக்கு வந்தான் ராஜேந்திரன். ஏனோ அவனைப் பார்த்ததும் ஒரு வெறுப்பும் இகழ்ச்சியும் தான் தோன்றியது அவளுக்கு.

"கீது எப்படிம்மா இருக்க?" அவன் கேட்டதும் ஆத்திரம் வந்தது.

"ரொம்ப நல்லாவே இருக்கேன் ராஜேந்திரன். எம் பி ஏ முடிச்சுட்டு ஒரு நல்ல கம்பெனியில நல்ல வேலையில இருக்கேன்" என்றாள் சுருக்கென.

"உனக்கு இன்னமும் என் மேல உள்ள கோபம் தீரல்லன்னு நினைக்கறேன். நீ என் நிலையிலோ இருந்தா அதைத்தான் செஞ்சிருப்ப"

"நிச்சயமா இல்ல! என்னை நம்பி வந்தவங்களை ஏமாத்திட்டு ஓட நான் ஒண்ணும் கோழையில்ல" என்றாள் சூடாக.

"இப்ப ஆயிரம் சொல்லலாம்! ஆனா ஒரு மைனர் பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கே! அவங்க போலீஸ் புகார் குடுத்தா நீ கம்பி தான் எண்ணனும்னு வக்கீல் சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும்? என் எதிர்காலமே கேள்விக்குறியா இருந்த போது நான் வேற எதைப் பத்தி யோசிக்க முடியும்?"

"சபாஷ்! அப்ப உங்களுக்கு உங்க எதிர்காலம் தான் முக்கியமாப் போச்சு இல்ல? நம்மை நம்பி ஒரு பொண்ணு வந்து எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறாளே அவளுக்கு நாம துணையா இருக்கணும்னு உங்களுக்குத் தோணலை இல்ல?"

"அதுக்குத்தான் உங்கிட்ட மன்னிப்புக்கேட்டுட்டேனே கீது! கோபத்தை விடும்மா. நான் நெனச்சிருந்தா மும்பையில பொண்ணுங்களுக்கா பஞ்சம்? அவங்கள்ல ஒருத்தியைக் கட்டிக்கிட்டு வந்திருக்கலாமே? ஆனா நான் செய்யல்ல! ஏன்னா நான் உனக்கு தாலி கட்டின புருஷன்"

சந்தோஷம் வருவதற்குப் பதிலாக எரிச்சல் வந்தது கீதாவுக்கு.

"இதைப் பாருங்க! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போக்கல்ல! நீங்க யாரை வேணும்னாலும்கல்யாணம் செஞ்சிக்குங்க! எனக்கு ஆட்சேபணை கிடையாது. காரணம் நாம சட்டப்படி கணவன் மனைவி இல்ல! புரியுதா?"

"சட்டப்படி கணவன் மனைவி இல்ல தான் ஆனா தர்மப்படி? நீ என் கூட மூணு நாள் வாழ்ந்துட்ட அதை மறக்காதே! இப்ப நான் உன்னைக் கை விட்டுட்டேன்னா உன் வாழ்க்கையே அவ்வளவு தான். அதை நினைப்புல வெச்சிக்க" என்றான் சற்றே திமிராக.

வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை விழுங்கினாள். அம்மா சந்தோஷமே உருவாக பலகாரத்த்தட்டைக் கொண்டு வந்து வைத்தாள்.

"மாப்பிள்ள! வீட்டுல சுட்ட பலகாரம். நல்லா சாப்பிடுங்க! எப்ப மும்பை கிளம்பணும் நீங்க?" என்றாள்.

"எங்கே? உங்க மக தான் பிடி குடுத்தே பேச மாட்டேங்குறாளே?" என்றான் முறுக்கைக் கடித்தபடி. கீதாவை முறைத்தாள் அம்மா. கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு ராஜேந்திரனை ஏறிட்டாள்.

"சரிங்க! நான் உங்க கூட மும்பை வரேன். எப்ப கிளம்பணும்?" என்றாள் கீதா மனதைக் கல்லாக்கிக்கொண்டு.

"இப்பத்தான் நீ என் பழைய கீது! இன்னைக்கு புதன் கிழமை இல்லியா? வர வெள்ளிக்கிழமை கிளம்புவோமா?" என்றான்.

அடைத்த நெஞ்சை அலட்சியப்படுத்தி அவனை நோக்கித்தலையாட்டினாள் கீதா. ஆனால் அம்மா மறுதலித்தாள்.

"வீட்டுப்பொண்ணு வீட்டை விட்டு வெள்ளிக்கிழமை அன்னைக்குக் கிளம்பக்கூடாது மாப்பிள்ள! பல ஆண்டுகள் கழிச்சு ரெண்டு பேரும் குடித்தனம் போடப்போறீங்க! அதனால நானே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க" என்றாள் கன்னியம்மாள்.

"அப்ப சரி! நான் லீவை எக்ஸ்டெண்ட் செஞ்சிருறேன் . கீதா இப்ப சந்தோஷமா?" என்று கேட்டு விட்டு விடை பெற்றான் ராஜேந்திரன்.

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவஸ்தையில் அழவும் இயலாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் கீதா.
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
மிகவும் அருமை. என்ன முடிவு எடுப்பா கீதா??? கீதா சேகரை விரும்புரேனு சொல்லு
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
loosa intha geetha:mad::mad::mad::mad::mad:.....kadamai ammannu vendamnu apa viittuttu pona rajendran,thidirnu pondattinnu vantha enna artham iva yosikka vendama....kamatchi evlo asingama pesirkanga.,.........
malini sonna advise ellam kathula parakka vittuttalea....ine sekar nlilamai.......
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud(y)(y)
Enaku ennavo rajendran mela doubt a ve iruku:unsure:
Geetha nalla yosichu mudivethutha sari
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top