• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu... : Aththiyaayam 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 18.

மும்பையிலிருந்து வந்து கன்னியம்மாளிடம் சென்று பேசி விட்டு வந்தான் ராஜேந்திரன். கீதா வந்திருக்கிறாள் என்பதை மாமியார் மூலம் தெய்ர்ந்து கொண்ட அவன் மனைவியைப் பார்க்கும் ஆவலோடு வந்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே! தன்னைப் பார்த்த உடன் கட்டிப்பிட்த்துக் கதறுவாள் என நினைத்ததர்கு மாறாக அமைதியாக வாங்க என்றாள். அவளது முகத்தில் ஆர்வமோ சந்தோஷமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தியது அவளது மௌனம்.

மகிழ்ச்சியே இல்லாத கீதாவை பார்த்தான் ராஜேந்திரன். கடந்த எட்டு ஆண்டுகளில் பெரிதாக அவளிடம் மாற்றம் ஒன்றும் இல்லை. கண்களில் தெரியும் குறும்பும் அன்பும் மட்டும் மிஸ்ஸிங்க். அவள் அருகில் போன போது விலகிப்போனாள் கீதா.

"கீதா என்னை மன்னிச்சிடும்மா! பழசையெல்லாம் மறந்திடு. இனிமே நாம ஒண்ணா இருக்கலாம். என்ன சொல்ற?"

பேசிய ராஜேந்திரனை ஏறிட்டுப் பார்த்தாள் கீதா. அவள் கண்களில் கேலி தெரிந்ததோ என சந்தேகம் தட்டியது ராஜேந்திரனுக்கு.

"மாப்ள! இந்தப் பாலைச் சாப்பிட்டுக்கிட்டே பேசிக்கிட்டு இருங்க" என்று கன்னியம்மாள் நீட்டிய டம்ளரை வாங்கிக்கொண்டான்.

"என்னத்த? நீங்க தான் என்னை மாப்ள, மாப்ளன்னு கூப்பிடறீங்களே தவிர கீதா பேசக் கூட மாட்டேங்குறாளே?" என்று குறைப்பட்டுக்கொண்டான்.

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லீங்க! அப்ப சின்ன வயசு. இப்ப அவளுக்கு விவரம் நல்லா தெரிஞ்ச வயசு. வெக்கப்படுவாளா இருக்கும்" என்றாள்

"கீதாவுக்கு வெக்கமா?" என்று கேட்டு விகாராமாகச் சிரித்தவனை எதுவும் பேசாமல் மௌனமாக பார்த்தபடி இருந்தாள் கீதா. அவளைத் தனியாக அழைத்தாள் கன்னியம்மாள்.

"இந்தாடி! உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்க நீ? பெரிய ரதின்னா? கை விட்டுப் போன வாழ்க்கை உன்னை இப்பத் தேடி வந்திருக்கு! அதை திரும்பவும் தொலைச்சுட்டு முழிக்காதே! வாழ் நாளெல்லாம் இப்படியே தனியாவா இருக்க முடியும்? போ போயி மாப்பிள்ளை கிட்ட ரென்டு வார்த்தை நல்லதா பேசு" என்றாள்.

இயந்திரம் போல வந்து அவனை நோக்கி சிரித்தாள்.

"அப்பா! இப்பத்தான் நிம்மதியா இருக்கு! இப்படியே சிரிச்சுக்கிட்டே இரு! என்ன?"

"உம்"

"அப்புறம் என்ன இருந்தாலும் நான் உன் கழுத்துல தாலி கட்டுனது நீ மேஜராகாத போது. அது செல்லாதாம். வக்கீல் சொல்லிட்டாரு. அதனால வர வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு. அன்னைக்கு நம்ம இலஞ்சி குமாரர் கோயில்ல நான் திரும்பவும் உன் கழுத்துல தாலி கட்டப் போறேன். அப்புறம் கொஞ்ச நாள் நீ எங்க வீட்டுல மருமகளா இரு! ஒரு வாரம் கழிச்சு நம்ம ரெண்டு பேருக்கும் மும்பைக்கு டிக்கெட் போட்டிருக்கேன். புறப்படுடலாம் என்ன சொல்ற?" என்றான்.

மேஜராவதற்கு முன்னால் கட்டிய தாலி செல்லாது என்ற வார்த்தை அவள் மனதில் பாலை வார்த்தது என்றாலும் இருவருக்குள்ளும் அப்போதே எல்லாம் நடந்து முடிந்து விட்ட பிறகு இனியும் சேகரை தொல்லைப்படுத்துவது முறையா? களங்கப்படாத நல்ல பெண் அவருக்குக் கிடைக்க மாட்டாளா என்ன? என்று எண்ணி பலவாறாகக் குழம்பிக்கொண்டிருந்தாள்.

"நீ எப்பப் பார்த்தாலும் இப்படியே உம்முனு இரு! ஏன்டா வந்தோம்னு இருக்கு! சரி நான் கிளம்புறேன். எல்லா விவரத்தையும் உங்க அம்மா கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க சொல்றா மாதிரி கேட்டு நடந்துக்கோ!" என்று சொல்லி விட்டு விட பெற்றுப் புறப்பட்டான். அவன் போகிறேன் என்றதும் பெரிய நிம்மதிப் பெருமூச்சொன்று புறப்பட்டது அவளிடமிருந்து. கன்னியமாளிடமும் சொல்லிக்கொண்டு படி இறங்கினான் ராஜேந்திரன். கால்கள் அவனை அவன் வீடு நோக்கி இழுத்துச் சென்றன. அவன் மும்பையிலிருந்து வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன என்றாலும் அவன் வீட்டில் இன்னமும் அலை ஓயவில்லை.

"என்னடா உன் பொண்டாட்டி துரத்தி விட்டுட்டாளா?" என்று எகத்தாளத்தோடு கேட்டாள் அம்மா.

"என்னமா நீ? உனக்கு சரியாவே பேச வராதா?"

"ஏன் என் பேச்சுக்கு என்ன குறை? நீ தான் பேச மாட்டேங்குற?"

"நான் என்னம்மா பேசல்ல?" என்றான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு. தங்கை பலகாரத்தட்டை நீட்ட வாங்கிக்கொண்டான்.

"ஏண்டா! இப்ப எதுக்கு முடிஞ்சு போன கதையை திரும்பவும் வளர்க்கற? அந்த கீதாப் பொண்ணு சகவாசம் உனக்கு எதுக்கு? அது ஒரு ஓடுகாலி ! நீ அவளை வேன்டாம்னு கிளம்புனதுக்கப்புறம் படிக்கறேன் பேர்வழின்னு காலேஜுக்கு மினுக்கிக்கிட்டுப் போச்சு! அப்புறம் இந்தப்பக்கம் கண்ணுலயே படல்ல! எங்கியோ ஹாஸ்டல்ல கொண்டு விட்டுட்டா அவ அம்மா! அங்க எப்படி இருந்தாளோ யார் கூட இருந்தாளோ?" என்றாள் நீட்டி முழக்கி.

"அவ எப்படி இருந்தா என்னம்மா? எனக்கு அவ வேணும் அவ்வளவு தான்"

"அப்படி என்னடா அவ உசத்தி?"

"புரியாமப் பேசாதம்மா! எனக்கும் கீதாவுக்கும் கல்யாணம் நடந்தது அக்கம் பக்கத்துல எல்லா ஊருக்கும் தெரியும். அதனால நல்ல குடும்பத்துல இருந்து எவனும் எனக்கு பொண்ணு குடுக்க மாட்டான். எனக்கும் மும்பையில தனியா வாழ்ந்து சப்பாத்தி தின்னு அலுத்துப் போச்சு! அதோட அங்க ரெண்டு பேரும் வேலை பார்த்தாதான் காலம் தள்ள முடியும். கீதா படிச்சவ. புத்திசாலி. எப்படியும் அவளுக்குப் பெரிய வேலை கிடைக்கும். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வேண்டாம்னு சொல்ல எனக்கென்ன பைத்தியமா?" என்றான்.

"அப்ப நீ ஒரு கணக்குப் போட்டுத்தான் அவளைக் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லு"

"பின்ன என்ன? நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். நீயும் நாலஞ்சு எடத்துல எனக்குப் பொண்ணு கேட்டுப் பார்த்த எவனும் குடுக்க மாட்டேன்னுட்டானே? அதான் யோசிச்சு இந்த முடிவை எடுத்தேன். வள வளன்னு பேசாத! வர வெள்ளிக்கிழமை எனக்கும் கீதாவுக்கும் இலஞ்சி குமாரர் கோயில்ல வெச்சுக் கல்யாணம். கட்டாயம் நீயும் வரணும். அதுக்கப்புறம் அவ இந்த வீட்டுல தான் இருப்பா. ஏதாவது இடக்கு மடக்கா செஞ்சியோ நான் மனுசனாவே இருக்க மாட்டேன் ஆமா?" என்று மிரட்டினான்.

"ராஜு! கொஞ்சம் யோசிச்சுக்கப்பா! இப்ப உள்ளே போனாளே உன் தங்கச்சி! அவளைக் கொஞ்சம் நெனச்சுப்பாருப்பா"

"இன்னும் என்னம்மா நெனச்சுப் பார்க்குறது? நான் தான் பணம் அனுப்புனேனே? கல்யாணமும் ஆயாச்சே? இவ ஏன் இங்க வந்து உககந்திருக்கா?" என்றான் இரக்கமே இல்லாமல்.

"அப்படி வெடுக்குன்னு பேசாதப்பா! இவ புருஷன் ஏதோ கடை நடத்துனான் அதுல நஷ்டமாகிப் போச்சு! அதுக்கு இவ நகையை வித்துக் கொடுத்திட்டாங்க! இப்ப ஒரு கல்யாணத்துக்குப் போகணும்னாக் கூட குந்துமணித் தங்கம் கூட இல்லப்பா இவ கிட்ட"

"சரி வேணும்னா கீதா கிட்ட இருக்குற நகையில ஒரு செயினை வாங்கித்தரேன். அவ்வளவு தான் என்னால முடியும்"

"கூடப் போறந்த அண்ணன் இப்படிப் பேசலாமப்பா? இவ புருசனுக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு சொல்லி வெச்சிருக்காங்களாம். எவனோ ஒருத்தன் நாலு லட்ச ரூபா கொடுத்தா கண்டக்டர் வேலை வாங்கித்தரேன்னு சொல்லுறானாம். அந்தப் பணத்தோட வந்தா வா இல்லைனன உங்க ஆத்தா வீட்டோட இருன்னு சொல்லி இவ புருசனும் மாமியாரும் அடிச்சு விரட்டிட்டாங்கப்பா! நீ தான் ஏதவது பண்ணணும்"

சட்டென எழுந்தான் ராஜேந்திரன்.

"இந்த எழவுக்குத்தான் நான் ஊர்ப்பக்கமே வரதில்ல! எப்பப் பார்த்தாலும் பணம் காசுன்னு நச்சரிச்சுக்கிட்டே இரு! இத்தனை வருஷத்துல புருஷனைக் கைக்குள்ள போட்டுக்கத்தெரியல்ல! இவள் எல்லாம் என்ன பொம்பளை?"

உள்ளே விசும்பும் சத்தம் கேட்டது. மனம் உடைந்தது அன்னைக்கு.

"எப்பா! ராசு! நீ மவராசனா இருக்கணும். இப்ப நான் சொல்லப் போறதை நல்லாக் கேளு! நம்ம கடையநல்லூர் முத்தையா மாமாவை உனக்கு நியாபகம் இருக்கா?"

"ஏன் இல்லாம? அவருக்குக் கூட ஏகப்பட்ட சொத்து இருக்கே?"

"அவரே தாண்டா! அவரு எனக்குக் கூடப் போறந்த அண்ணன் இல்லைன்னானும் எனக்கு ஒண்ணு விட்ட பெரியப்பா மகன் தானே அவரு? அவருக்கு ஒரு பொண்ணு இருக்கு. பேரு முல்லை. அவளை நீ கட்டிக்கிட்டா தன் சொத்துல பாதியை உன் பேருக்கு மாத்தி எழுதறேன்னு சொல்றாரு முத்தையா அண்ணன்." என்றாள்.

சிரித்தான் ராஜேந்திரன்.

"என்னால நம்ப முடியல்ல! அந்தப் பொண்ணு முல்லையை நான் பார்த்துருக்கேன். ரொம்ப அழகா செக்கச் செவேர்னு இருக்கும். அப்படிப்பட்ட பொண்ணுக்கு ஏன் இப்படி அவசர அவசரமா சொத்தைக் குடுத்துக் கல்யாணம் செய்யுறாரு மாமா? எங்கியோ இடிக்குதே?" என்றான் நகைத்தபடி.

திருதிருவென விழித்தாள் காமாட்சி!

"சும்மா சொல்லும்மா! அந்தப் பொண்ணு கிட்ட என்ன குறை?"

"குறையெல்லாம் ஒண்ணும் இல்லப்பா! நம்ம ஊர்க்காரங்க தான் எல்லாத்தையும் ரொம்ப கதை கட்டிப் பேசுவாங்களே! அதனால அந்தப் பொண்ணு பாதிக்கப்பட்டிருக்கு!"

"அப்படி கதை பேசுற அளவுக்கு என்னம்மா நடந்தது?"

"அந்தப்புள்ள! கூடப் படிக்கிற பையனோட திருநெல்வேலியில ஏதோ சினிமவுக்குப் போச்சாம். அதை ஒரு விஷயமாப் பேசுறாங்க! அதனால தான் அண்ணனும் சீக்கிரமே அவளுக்குக் கல்யாணத்தை முடிச்சிடணும்னு நினைக்கறாரு" என்றாள்.

தன் தாய் எதையோ மறைக்கிறாள் என்று பட்டது ராஜேந்திரனுக்கு.

"நீ எதையோ எங்கிட்ட மறைக்கிற! சரி பரவாயில்ல! இதை நீ முதல்லயே சொல்லியிருந்தா நான் கீதா வீட்டுக்கே போயிருக்க மாட்டேனே! இத்தனை தூரம் பேசின பிறகு வந்து சொல்றியேம்மா நீ?" என்று கடிந்து கொண்டான்.

"என்னை எங்கேடா பேச விட்டே நீ? வந்தே பையை வெச்சுட்டு நேரே கீதா விட்டுக்குப் போயிப் பேசுன வந்த அவ்வளவு தானே? எங்க கிட்ட கலந்து ஆலோசிச்சியா? இப்ப வந்து ஏன் முன்னாலயே சொல்லைன்னா நான் என்ன சொல்ல?" என்றாள் எரிச்சலுடன்.

"இப்ப என்னை என்னம்மா செய்யச் சொல்ற?"

"எனக்கு ஒரு வழி இருக்கு! அப்படி செஞ்சா எது நடந்தாலும் நமக்கு நல்லது தான்."

"சொல்லு பார்ப்போம்"

"மேஜராகுறதுக்கு முன்ன கட்டுன தாலி செல்லாதுன்னு வக்கீல் சொல்லப் போய்த்தானே நீ அவளுக்கு மறுதாலி கட்டப் போற?"

"ஆமா"

"நீ இப்ப நேரே கன்னியம்மா வீட்டுக்குப் போ! இந்த மாதிரி என் மாமன் மகளைக் கட்டுனா எனக்கு சொத்து வருதுன்னு அம்மா சொல்லுறாங்கன்னு சொல்லு! அவங்க பதறுவாங்க! அப்ப அவங்க கிட்ட நாலு லட்ச ரூவா கேளு! குடுத்தாங்கன்னா நல்லது. கீதாவுக்கு மறுதாலி கட்டு. இல்லை முடியாதுன்னாங்கன்னு வெச்சிக்கோ அவளைக் கழட்டி விட்டுட்டு முல்லை கழுத்துல புதுத்தாலி கட்டு! எப்படி என் யோசனை? எப்படி இருந்தாலும் உன் தங்கச்சிக்கு பணம் கிடைச்சிரும் இல்லியா?" என்றாள். அவள் சொல்லுவதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டி விட்டு எழுந்து நின்றான் மகன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
intha rajendran ippavum kasukku adipottu than geethava koopadran......
analum sotthukku vendi ava amma sonna ponnayum katlamnu deal pesittu irukkanga enna jenmanga....avanga vettu ponnukaka matha veettu ponnu perisa theriyalayea.......
geetha ne than samarthiyama mudivu edukkanum.........
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
Nice ud. இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள்??? கீதா என்ன முடிவு எடுப்பாள்??? ராஜேந்திரனை பற்றி தெரிந்து மறுபடியும் சேகரை திருமணம் செய்தால் அது கீதாவின் சுயநலம் இல்லையா??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top