• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu... : Aththiyaayam 19.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 19.

பயந்த மான் போல அத்தை மாமா முன் அமர்ந்திருந்தாள் கயல். அத்தை அலமேலுவுக்கு அவளிடம் அன்பாகப் பேச வேண்டும். அப்போது தான் சேகர் நம் வழிக்கு வருவான் என படித்துப் படித்துச் சொல்லியிருந்தார் அவள் கணவன் ராமலிங்கம். ஆனாலும் கயலைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ செண்பகத்துக்கு ஆத்திரம் பொங்கும். அதை அடக்க முடியாமல் சற்றே கடுமையாகவே பேசினாள்.

"இதைப் பாரு கயல்! நானும் மாமாவும் உன் நன்மைக்குத்தான் சொல்லுவோம். உங்க அண்ணன் என் மகளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா நீ என்ன நெனச்சாலும் படிக்கலாம். செலவழிச்சு உன்னை டாக்டருக்குப் படிக்க வைக்கக் கூட நாங்க தயாரா இருக்கோம். அது மட்டுமில்லாம உன்னை நானும் மாமாவும் எங்க குழந்தை மாதிரி பார்த்துக்குவோம் என்ன சொல்ற?"

"உம் சரிங்க அத்தை"

"நீ உங்க அண்ணன் கிட்ட சொல்லுறியா? என் மகளைக் கல்யாணம் பண்ணிக்க்க சம்மதம் வாங்கித்தரியா?"

"உம் சரிங்க அத்தை"

"உனக்கும் உன் அண்ணனுக்கும் எங்களை விட்டா நாதி இல்ல! உங்க அண்ணன் பாவம். உன்னை விடவும் முடியாம கூடவே வெச்சுக்கவும் முடியாம திண்டாடுறான். நீ மட்டும் இல்லைன்னா அவன் இந்தக் கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சிருப்பான். நீ இருக்கவே பயப்படுறான். என்ன செய்ய எல்லாம் அவன் தலை விதி. அப்பன் செஞ்ச பாவத்தை மகன் அனுபவிக்கிறான்."

கண்களில் நீர் வடிய மௌனமாக அமர்ந்திருந்தாள் கயல். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளது குழந்தை மனதில் கீதா அண்ணி ஏன் ஃபோன் செய்யவில்லை? அண்ணன் ஏன் எப்போதும் கவலையாக இருக்கிறார்கள்? அத்தை மாமா வேறு என்னென்னவோ சொல்கிறார்களே? அவர்கள் சொல்வதைப் பார்த்தால் நான் அண்ணனுக்கு சுமையா? நான் இல்லையென்றால் அண்ணனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமா? என்று எண்ணிக் குழம்பித் தவித்தாள். அவளையும் அறியாமல் கண்கள் நீரைப் பொழிந்தபடி இருந்தன.

"இந்தா! இப்ப என்ன ஆயிடிச்சுன்னு அழுவுற? நல்ல விஷயத்தைப் பத்திப் பேசும் போது இப்படி மூதேவி மாதிரி ஒப்பாரி வைக்காதே" என்றாள் அத்தை கடுமையாக.

சிறு வயது தான் என்றாலும் அவளை யாருமே இப்படிக் கடிந்து பேசியதில்லை என்பதால் அவளுக்கு மேலும் அழுகை வந்தது. அழுதால் அத்தை திட்டுவார்கள் என்று அதனை அடக்கினாள். கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.

"செண்பகம்! என்னம்மா நீ? குழந்தை கிட்ட எப்படிப் பேசுறதுன்னு தெரியலையே உனக்கு?" என்று கண்ணைக் காட்டி விட்டுப் பேசத் தொடங்கினார் ராமலிங்கம்.

"கண்ணு ! கயல்! நீ சின்னப்பொண்ணு ஆனா உனக்கு புத்திசாலித்தனம் ஜாஸ்தி. உங்க அண்ணன் நல்லா இருக்கணும்னு நீ நினைக்குற இல்லையா?"

ஆமெனத் தலையாட்டினாள் அவள்.

"அப்ப எங்க மகளை உங்க அண்ணன் கல்யாணம் செய்துக்கணும். அப்ப அவனுக்கு நிறையப் பணம் சொத்து எல்லாம் கிடைக்கும். பணம் இருந்தாத்தானே வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்? அதனால உங்கண்ணன் கிட்ட துளசி அண்ணியைத்தான் நீங்க கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்லுறியா?"

மீண்டும் மௌனமானாள் கயல்.

"இந்த வயசுலயே என்ன அழுத்தம் பாருங்க" என்றாள் செண்பகம். மீண்டும் அவளை அடக்கினார்.

"உனக்கு பட்டுப்பாவாடை, ஜிமிக்கி, கொலுசு எல்லாம் வாங்கித்தரேன் உங்க அண்ணன் கல்யாணத்துக்கு சரியா?" என்றார். புரியாமல் தலை ஆட்டினாள். அவளுக்கு எப்போதடா அண்ணன் வருவான் என்றிருந்தது. பத்து நிமிடத்துக்கெல்லாம் வந்து விட்டான் சேகர்.

களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்த சேகரை எதிர்கொண்டாள் கயல். அவளது முகம் கலங்கி இருந்தது. ஆனாலும் புன்னகை பூத்தாள்.

"என்ன கயல் கண்ணு கலங்கி இருக்கு?"

கயல் பதிலளிக்க ஆரம்பிக்கும் முன்னமே பசினாள் அத்தை.

"கண்ணுல தூசி ஏதாவது விழுந்திருக்கும் இல்லம்மா?" என்றாள் தலையசைத்தாள் கயல்.

"கயல் என்னம்மா ஆச்சு? அத்தை திட்டுனாங்களா?" என்றான் மீண்டும் விடாமல். அதைக் கேட்டு கோபம் வந்தது அத்தைக்கு.

"என்னடா இப்படிக் கேக்குற? நான் என்ன கொடுமைக்காரியா? எதுக்கு இந்தப்பிள்ளையைத் திட்டணும்? அப்படியே திட்டியிருந்தாலும் பெரியவுங்க ஏதோ நல்லதுக்குத்தான் சொல்றாங்கன்னு நீ சொல்லிக்கொடுக்கணும். அதை விட்டுட்டு இப்படிக் கேள்வி கேக்குறியே?" என்றாள்.

"அப்ப நீங்க திட்டியிருக்கீங்க? அப்படித்தானே?" என்றான்.

அங்கே ஒரு சண்டை உருவாவதைப் பார்த்து ராமலிங்கம் நைச்சியமாகப் பேசினார்.

"என்னப்பா சேகர்! நீ எங்களை எதிரி மாதிரியே பார்க்குற? எங்களுக்கும் இவ மருமக உறவு தானே? சின்னப்பொண்ணை நாங்க எதுக்குப்பா திட்டணும். ஆபீசுல இருந்து சீக்கிரமே வந்துட்டியே? முதல்ல உக்காரு. செண்பகம் தம்பிக்கு காப்பி கொண்டாம்மா" என்று சூழ்நிலையை சகஜமாக்க முயன்றார்.

"இருக்கட்டும் நான் என் ரூமுக்குப் போய் கொஞ்சம் கயலோட தனியாப் பேசணும். அப்புறமா காப்பி சாப்பிடுறேன்" என்று சொல்லி விட்டு கயலை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். அவனை நோக்கி உதட்டை மடித்து முகவாயைக் கோணி அழகு காட்டினாள் அத்தை. அதைப் பார்த்து மௌனமாகச் சிரித்தார் ராமலிங்கம்.

அறையின் உள்ளே சென்று பாத்ரூமில் போய் லுங்கிக்கு மாறி வெளியே வந்து கயலை அணைத்துக்கொண்டான் சேகர்.

"குட்டிம்மா! ஏன் கண்ணு கலங்கியிருக்குதுடா? அத்தை ஏதும் திட்டினாங்களா?"

"இல்லண்ணா! எனக்கு அண்ணி ஞாபகம் வந்திடிச்சு. அதான் அழுதேன்"

"கீதா அண்ணியா?"

தலையசைத்தாள் கயல். கண்களை மூடி வேதனை விழுங்கினான் சேகர். தங்கையை இனியும் பொய்யான நம்பிக்கையில் வைத்திருக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான். அவளை நாற்காலியில் அமர வைத்து கீழே தான் அமர்ந்து கொண்டான்.

"கயல் குட்டி! நீ இப்ப பெரிய பொண்ணு இல்ல? அண்ணன் சொன்னாப் புரிஞ்சுக்குவே தானே கண்ணம்மா?"

மீண்டும் தலையை ஆட்டினாள்.

"கீதா அண்ணி இனிமே திரும்பி வர மாட்டாங்கடா! அவங்களுக்கு நம்மைப் பிடிக்கல்ல! அவங்க ஊருக்குப் போயிட்டாங்க. இனிமே சென்னை வரவே மாட்டாங்க! அதனால இனிமே நீ கீதா அண்ணியைப் பத்தி நெனச்சு அழக் கூடாது சரியா?"

கண்களில் பயமும் வேதனையும் போட்டி போட்டன கயலுக்கு.

"ஏன் கீதா அண்ணிக்கு நம்மைப் பிடிக்கல்ல? நான் ஏதும் தப்பு செஞ்சுட்டேனா அண்ணா? அதான் என்னை விட்டு அண்ணி போயிட்டாங்களா? நான் வேணும்னா அண்ணி கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேனே! அப்ப அவங்க கோபம் போயிரும் இல்ல?" என்றாள் மெல்லிய குரலில்.

குழந்தை மனதை இப்படி ரணப்படுத்தி விட்டுச் சென்ற கீதாவை எண்ணி பல்லைக் கடித்தான் சேகர்.

"இல்ல கண்ணு! நீ எந்தத்தப்பும் செய்யல்ல! அவங்களுக்கு நம்ம கூட வாழ குடுத்து வெக்கல்ல அவ்வளவு தான். இப்ப என்ன? உனக்கு ஒரு அண்ணி வேணும் அவ்வளவு தானே?"

எதுவும் பேசாமல் இருந்தாள் கயல்.

"கயல் கண்ணு! கொஞ்சம் புரிஞ்சிக்கோ குட்டிம்மா! அண்ணன் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தானே செய்வேன் அது உனக்குத்தெரியும் இல்ல தங்கம்?" என்றான் தங்கையின் முகத்தைக் கையில் ஏந்தி.

"தெரியும் அண்ணே!"

"அப்ப நான் சொல்லப் போறதை கவனமாக் கேளு! நான் அத்தை மக துளசியை கல்யாணம் செஞ்சுக்கப்போறேன். சென்னையை விட்டுட்டு நாம திருச்சி போயிருவோம். அங்க உனக்கு புது ஸ்கூல் புது ஃபிரெண்ட்சுன்னு நீ ஜாலியா இருக்கலாம். அத்தையும் மாமாவும் உன்னை நல்லாப் பார்த்துப்பாங்க. அண்ணி வேற இருப்பாங்க. சரியாம்மா?"

"அப்ப கீதா அண்ணி?"

சட்டென கோபம் வந்தது சேகருக்கு. கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டிஉர்க்கிறேன். இவள் கீதா கீதா என்று ஜெபம் செய்கிறாளே என்று எரிச்சல் ஆனான்.

"என்ன கயல் நீ? எப்பப் பார்த்தாலும் கீதா அண்ணி கீதா அண்ணின்னு சொல்லிக்கிட்டு! நான் சொல்லுறது உனக்குப் புரியலையா? நமக்கு வாழ்க்கையில நிம்மதி இருக்கக் கூடாதுன்னு நம்ம தலையில பிறக்கும் போதே கடவுள் எழுதிட்டார். அதை நாம மீற முடியுமா? கீதா அண்ணி இனி வரமாட்டாங்க! நான் துளசி அண்ணியைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இதுக்கு மேல எதுவும் பேசாத. போயி படிக்குற வழியைப் பாரு" என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் அமர்ந்திருந்த அத்தையையும் மாமனையும் ஏறிட்டான்.

"அத்தை! துளசியைக் கல்யாணம் செஞ்சுக்க எனக்கு சம்மதம். ஆனா நீங்க சொன்னா மாதிரி கயல் பேருக்கு பாதி சொத்தை எழுதிக்கொடுக்கணும். அப்பத்தான் நான் தாலி கட்டுவேன். இல்லைன்னா இல்லை" என்றான். அத்தை சிந்தனையில் இருக்க மாமா தான் எழுந்து ஓடி வந்தார்.

"நல்ல முடிவு மாப்பிள்ள! நாளைக்கே நான் பத்திரம் எழுத ஆளை ஏற்பாடு செய்யுறேன். நீங்க வேலையை ராஜினாமாப் பண்ணிட்டு திருச்சிக்கு எங்க கூட வரதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யுங்க" என்றார். மனம் கனக்க தலை பாரமாக அழுத்த காற்றாட வெளியில் வந்து விட்டான் சேகர்.

"என்னங்க! சொத்தை எழுதிக்கொடுத்தாத்தான் தாலியே கட்டுவேங்குறான் அவன். என்ன செய்யப் போறீங்க?"

"அதை நான் யோசிக்காம இருப்பேனா செண்பகம்? கயல் இன்னமும் மைனர் தானே? மேஜராக இன்னும் 5 வருஷம் இருக்கு. அதுக்குப் பிறகு தான் பத்திரம் எழுத முடியும்னு சொல்லிருவேன். வேணும்னா சேகர் பேருக்கு பாதி சொத்தை எழுதித்தரோம்னு சொல்லுவேன். அவன் பேர்ல இருந்தா என்ன நம்ம மக பேர்ல இருந்தா என்ன? எல்லாம் ஒண்ணு தானே?" என்றார் தந்திரமாக.

தங்களின் சூழ்ச்சி பலித்ததை எண்ணி கெக்கலித்தார்கள் பெரியவர்கள் இருவரும். அறையில் தனியாக தேற்றுவார் இன்றி அழுது கொண்டிருந்தாள் கயல் அவள் அண்ணன் எதிர் காற்றில் கண்ணீரை மறைத்து நடந்து கொண்டிருந்தான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Paavam kayal chinna ponnai ippidi meratrainka..geetha enge sis nice epi sis
.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud sekar and kayal paawam pa
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Ivanga valai la sekar vizhundhuttane...kayal romba appavi ya irukka...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top