• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu...: Aththiyaayam 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 20.

கீதாவின் வீட்டில் சோஃபாவில் அமர்ந்திருந்தான் ராஜேந்திரன். அவன் சொன்னதைக் கேட்டு இமைக்கவும் மறந்து அமர்ந்திருந்தாள் கீதா. இப்போதெல்லாம் கீதாவுக்கு சிந்தனை என்ற ஒன்றே இருப்பதில்லை. அம்மாவின் சந்தோஷத்துக்காகவே வாழ ஆரம்பித்து விட்டாள். ஆனாலும் ராஜேந்திரன் சொன்னது அவளை வருத்தியது. இத்தனை ஆண்டுகளான பின்னும் பணப்பிரச்சனை முடியவே இல்லையே என்று என்ணிக்கொண்டாள். அவன் சொன்னதைத் தன் தாயிடம் சொல்ல மறுத்து விட்டதால் அவனே கன்னியம்மாளிடம் சொல்லி விட்டான்.

"என்ன அத்தை பேசாம இருக்கீங்க? எங்கம்மா கேட்டதும் நியாயம் தானே? என் தங்கச்சி புருஷனுக்கு பணம் குடுத்துட்டா அவருக்கு கவர்மெண்ட் வேலை கெடச்சிரும். அப்புறம் அவங்க என்னையோ உங்க மகளையோ தொந்தரவே செய்ய மாட்டாங்க! என்ன சொல்றீங்க?"

"நீங்க சொல்லுறது நியாயம் தான் மாப்பிள்ளை! ஆனா எங்கிட்ட இப்ப மூணு லட்ச ரூவா இல்லையே? அதான் யோசிக்கிறேன்"

கோபம் வந்தது ராஜேந்திரனுக்கு.

"நீங்க உங்க மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியல்ல! கிட்டத்தட்ட ஆறு வருஷம் முன்னாடி நான் உங்க மக கழுத்துல தாலி கட்டினேன் ஆனா என்னால அவளோட தொடர்ந்து குடும்பம் நடத்த முடியல்ல! நான் அப்படியே போயிருந்தா உங்களால என்ன செய்ய முடியும்? அவளைத் தொட்டுட்ட பாவத்துக்கு நானே கடைசி வரை வெச்சுக் காப்பாத்தலாம்னு நெனச்சேன். அதான் வந்தேன். ஆனா நீங்க என்னடான்னா ஒரு மூணு லட்ச ரூவாய்க்கு மூக்கால அழுறீங்க" என்றான்.

மனதில் பல கேள்விகள் எழுந்தன கீதாவுக்கு. ஆனால் அம்மா தவறாக நினைத்துக்கொள்வாள் என பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"அத்தை! இது ஆண்பிள்ளை இல்லாத வீடு. நானே ஆம்பிளையா இருந்து எல்லாமே செய்யுறேன். நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! நான் கீதா கழுத்துல தாலி கட்டாம இருந்து இப்ப அவளைப் பொண்ணு கேட்டு வரேன்னு வெச்சிக்கோங்க! அப்ப நீங்க கல்யாணம் நல்லபடியா கட்டிக் குடுப்பீங்களா மாட்டீங்களா?"

"கட்டாயம் செய்வேன் மாப்பிள்ளை! அதுல என்ன சந்தேகம்?"

"அப்படித்தான் ந்டக்குதுன்னு நெனச்சுக்குங்களேன். கல்யாணச் செலவுக்கு உண்டான பணத்தை எங்கிட்டக் கொடுங்கன்னு தான் கேக்குறேன். மத்தபடி நகை நட்டு சீர் செனத்தின்னு நீங்க எதுவுமே செய்ய வேண்டாமே?" என்றான்.

அவன் சொல்வது நியாயம் என்றே தோன்றியது கன்னியம்மாளுக்கு. ஆனால் பணம் ஒன்றா இரண்டா? மூன்று லட்சம். எங்கே போவது? யோசித்தாள் அந்த ஏழைத்தாய்.

"தம்பி பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்யலாம்னு யோசிச்சுட்டு சொல்றேனே? அது வரைக்கும் கொஞ்சம் டயம் குடுங்க! அது மட்டுமில்ல! இப்ப அப்படியே உங்க கூட கீதாவை அனுப்பி வைக்க முடியாது. ஆறு வருஷத்துக்கு முன்ன நடந்த கல்யாணம் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க உங்கம்மா! இவளும் ஏதோ ஒரு கோவத்துல தாலியைக் கழட்டிட்டா. அதனால மறுபடியும் ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம இலஞ்சி முருகன் கோயில்ல அவ கழுத்துல தாலி கட்டிக் கூட்டிக்கிட்டுப் போங்க! அப்பத்தான் எனக்கு கௌரவமா இருக்கும்."

"அதுக்கென்ன அத்தை? செஞ்சாப் போச்சு! அப்ப ஏதோ போறாத நேரம் அப்படி ஆயிடிச்சு! இந்தத் தடவை பெரியவங்க முன்னாடி ஊர் மக்கள் முன்னாடி இவ கழுத்துல தாலி கட்டிட்டா எங்க குடும்பத்துக்கும் உள்ள கெட்ட பேரும் போயிரும்." என்றான்.

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினான். தாயின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் கீதா.

"என்ன கண்ணு? ஏன் முகம் என்னவோ மாதிரி இருக்கு? கவலைப் படாதே தாயி! அம்மா எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருவேன் என்ன?"

"அதுக்கில்லம்மா! இப்ப திடீர்னு அத்தனை பணத்துக்கு எங்கே போவ? அப்படியாவது பணத்தைக் குடுத்து நான் அவன் கூட வாழணுமாம்மா?" என்றாள் மெல்ல.

"அடி செருப்பால! என்னடி புருஷனை அவன் இவன்னு மரியாதை இல்லாமப் பேசுற? பட்டணத்துல போயி இதைத்தான் கத்துக்கிட்டியா? நானே அவரு மனசு மாறி வந்திருக்காருன்னு மாரியாத்தாளுக்கு பொங்கல் வைக்கலாமா? சாமிக்கு அர்ச்சனை பண்ணலாமான்னு அலை பாஞ்சுக்கிட்டு வரேன். நீ என்ன இப்படிப் பேசுற?" என்று கத்தினாள்.

"அம்மா! கோபப்படாம கேளும்மா! எனக்கு எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல்ல"

"ஏன்? ஏன் பிடிக்கல்ல? அப்ப பிடிச்சது இப்ப ஏன் பிடிக்காமப் போச்சு? நல்லா நினைவு வெச்சுக்கோ கீதா! நீ இப்ப கன்னிப்பொண்ணு இல்ல! அவர் கூட மூணு நாளு நாள் வாழ்ந்தவ. அதை மறந்துட்டுப் பேசாத"

"அதுக்கில்லம்மா! வந்து...வந்து...எனக்கென்னமோ அவரு நல்ல நோக்கத்தொட வந்திருப்பாருன்னு தோணல்லம்மா! அதுவுமில்லாம சென்னையில சே..." என்று சொல்ல ஆரம்பித்தாள்.

"இதைப்பாருடி கீதா! உன் புருஷன் நல்லவரோ கெட்டவரோ எனக்குத் தெரியாது. அவரையும் நான் தேர்ந்தெடுக்கல்ல. நீ தான் தேர்ந்தெடுத்த. இனி அதை மாத்தி இன்னொருத்தனோட வாழப் போறேன்னு சொன்னா அதுக்குப் பேரு என்னடி? அத்தனை அசிங்கம் பிடிச்சவளா நீ?" என்றாள் கன்னியம்மாள்.

அந்த ஒரு வார்த்தையில் அப்படியே அடங்கிப் போனாள் கீதா. இனி எக்காரணம் கொண்டும் அம்மாவிடம் சேகரைப் பற்றியோ கயலைப் பற்றியோ சொல்லக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்து மாலினிக்கு சரியான தூக்கமே இல்லை என்றானது. என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம் என யோசித்து யோசித்து மூளையைக் கசக்கிக் கொண்டாள். அவள் கணவன் ராஜேஷ் அதைக் கவனித்தான்.

"என்ன மாலு! ஏன் எப்பப் பார்த்தாலும் எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்க? ஆபீஸ்ல ஏதும் பிரச்சனையா?

"இல்லங்க! இது வேற! நானே உங்க கிட்ட சொல்லி உதவி கேக்கணும்னு நெனச்சேன். தனியா என்னால இதை சமாளிக்க முடியாதுங்க!"

"என்னம்மா பிரச்சனை?"

தொலைபேசியில் வந்த விவரத்தையும் மற்ற விவரங்களையும் சொன்னாள் மாலினி. அதைக் கவனமாகக் கேட்ட ராஜேஷ் முறுவலித்தான்.

"நீ தனியா இதை சமாளிக்க முடியாது தான். ஆனா கவலைப் படாதே! நான் இருக்கேன். இதை எங்கிட்ட விட்டுரு. நான் சொல்ற யோசனைப்படி செய்து பார்ப்போம்" என்று சொல்லி விட்டு மனைவியிடம் தன் யோசனையைக் கூறினான்.

"சரிங்க! இதை விட்டா வேற வழியும் நமக்கு இல்ல! செஞ்சு பார்ப்போம்" என்று சொல்லி விட்டு தொலைப் பேசியை நோக்கிப் போனாள் மாலினி.
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
unmaya sollanumna rajendran peachu geetha amma pathil kovam romba varuthu....deariyama geetha tappu panna mathiri rajendran thimira pesi kasu ketkaran ivangalum saringaranga....yosikka vendama appavum kasu ippavum kasukku than mukkiyathuvam kodukkaranga........malini rajesh nalla plan pottu sekar kappathi geetha loosu kooda sethu vekkanum....
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
கீதாவின் மனநிலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தனது தாயை சமாதானம் செய்ய முடியாத கீதா எப்படி அவனுடன் வாழ முடியும்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top