• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal- 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
கட்டங்கள் – 34

அவர்கள் அறையில் நடந்த சம்பவத்திலிருந்து முதலில் மீண்டது நித்யா.

நித்யா கனல் கக்கும் பார்வையால் மதுசூதனனை முறைத்தாள்.

அடுத்ததாக சுதாரித்தது கொண்ட முகிலன், "ப்ரோ..." என்று பதறியபடியே அழைத்துக் கொண்டு..., மதுசூதனன் அருகே முகிலன் செல்ல, "முகிலன்...", என்று அழுத்தமாக நித்யா அழைத்தாள்.

அந்த அழுத்தம் முகிலனை அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் நிற்க செய்தது. நித்யாவின் குரலில் கோபம்.. அந்த கோபம் முகிலனை மிரளச் செய்தது.

மதுசூதனன் தன் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்று கொண்டிருந்தான்.

மதுசூதனனின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது. மூச்சை உள்ளே இழுத்து தன்னை சமாதானம் செய்து கொண்டிருந்தான் மதுசூதனன்.

"நான் என்ன தவறு செய்தேன்.. பிடிக்காத கல்யாணம்.. ஆனால் என் நிலையை அவளிடம் விளக்கி விட்டேன்.. ஆனால் இன்னும் நான் உன்னை விட்டுவிட்டு சென்று விடுவேன் என்று ஏன் முரட்டு பிடிவாதம் பிடிக்கிறாள்..? இவள் என்னை ஒரு நாளும் புரிந்து கொள்ள மாட்டாளா..? நான் இவளோடு போராடுவேனா..?. இல்லை அம்மாவை நினைத்து கவலை படுவேனா..? இந்த பிசினெஸ்ஸை பற்றி யோசிப்பேனா..?", என்று கண்களை இறுக மூடி தன் கவலையை தன்னுள் மறைத்துக் கொண்டான் மதுசூதனன்..

"நான் ஏன் இப்படி காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டேன்.., இவளை நான் எப்படி அடித்திருக்கலாம்..?", தான் செய்த செயல் தன்னையே அழுத்த, மதுசூதனனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் அவன் கைகளை தொட்டது.

"உங்க அண்ணனை திரும்பி அடிக்க எனக்கு எத்தனை நிமிடம் ஆகப் போகுது...?", என்று நித்யா மதுசூதனனை நக்கலாக பார்த்தபடி முகிலனிடம் அழுத்தமாக கேட்டாள்.

நித்யாவிடம் மன்னிப்பு கேட்க, தன் கண்களை திறந்த மதுசூதனன், நித்யாவின் கேள்வியால் வெகுண்டெழுந்து அவளை முறைத்தான்.

"நான் வந்த நேரம் சரியில்லை... சாரி...", என்று கூறிக் கொண்டே, "அடி வாங்கியவர்கள் கோபமாக நிற்க, அடித்தவன் கண் கலங்குகிறான்... என்ன நடக்கிறது.,..?", என்று சிந்தித்தபடியே அறையை விட்டு வெளியே சென்றான் முகிலன்.

"நீ என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனால்.., உன்னால் என்னை விட்டு ஒரு பொழுதும் என்னை மீறி இங்கிருந்து போக முடியாது. உனக்கு பிடித்திருக்கோ இல்லையோ.., இது தான் உன் வாழ்க்கை.. நீ என்னோடு தான் இருந்தாக வேண்டும்.. இதை நீ என் பணத் திமிர்.. என் கர்வம்.. என் ஆணவம்.. இப்படி என்ன நினைத்தாலும் பரவாயில்லை ", என்று நித்யாவின் முகம் முன் விரல் அசைத்து கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்ற மதுசூதனன் மீண்டும் நித்யாவின் அருகே வந்து எதிர் பக்கமாக அவளை கோபமாக பார்த்தபடி நின்றான்.

மதுசூதனன் அருகே நிற்பது தெரிந்தும், அவனை பார்ப்பதை தவிர்த்து தரையை பார்த்தபடி அதீத கோபத்தோடு சோபாவில் அமர்ந்திருந்தாள் நித்யா.

"ஆபரேஷனுக்கு தேவையான வேலைகளை முடித்து விட்டு.., நான் இரண்டு நாளில் லண்டன் கிளம்பறேன்..", என்று மதுசூதனன் கூற, "இவன் என்னை அடிப்பான்... என் வார்த்தைகளை மதிக்க மாட்டான்..", என்ற எண்ணம் அவள் மூளையை வேகமாக தாக்க, "நித்யா பொறுமை.. பொறுமை.. இன்று ஏன் உனக்கு நிதானம் இல்லை.. நேற்று முதல் இருந்த பதட்டம்.. அழுத்தம்.. இல்லை அதீத வேலையா...? இந்த கோபம் நல்லதில்லை.. ", என்று சிந்தித்த படி , "1.. 2.. 3.. 4.. 5.. 6.. 7.. 8... 9.. 10.. 11.. 12.. 13.. 14. 15..", என்று தன் மனதிற்குள் சொல்ல.., நித்யாவின் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

நித்யா பதில் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்க, அவள் பதிலுக்காக காத்திருக்காமல் கதவை வேகமாக மூடிவிட்டு வெளியே சென்றான் மதுசூதனன்.

தன் டைரியை எடுத்து பதினைந்து கட்டங்களுக்கு நிறம் மாற்றினாள் நித்யா.

ஐந்து கட்டங்கள், இருபது கட்டங்களாக உயர்ந்து காட்சி அளிக்க, ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வு நித்யாவின் மனதை தாக்கியது.

அவள் கண்களிலிருந்து நீர் வந்துவிடுமோ என்று நித்யா அஞ்ச.., தன்னை தானே திடப்படுத்திக் கொண்டு மறுப்பாக தலை அசைத்து.., "இவன் நான் கூறுவதை கேட்க மாட்டானா..?", என்று முணுமுணுத்து கொண்டே மீண்டும் மூன்று கட்டங்களை நிறம் மாற்றினாள் நித்யா.

ஆக.., இருபத்துமூன்று கட்டங்கள் நிறம் மாறி இவளை பார்த்து கைகொட்டி சிரித்தது..

34_img.PNG


டைரியை மூடிவிட்டு, தன் வேலையைச் செய்ய தொடங்கினாள் நித்யா.

யாரிடமும் பேசாமல், தன் வேலைகளை முடித்து விட்டு, மருத்துவமனைக்கு நித்யா தயாராக, "நித்யா கிளம்பு... போலாம்..", என்று நித்யாவிடம் கூறிவிட்டு, "முகிலன் ரெடியா...?", என்று படியிறங்கி வந்த முகிலனைப் பார்த்து சோபாவில் சாய்ந்தபடி மதுசூதனன் கேட்டான்.

"முகிலன் நீங்க கார் எடுங்க நாம போலாம்.. இல்லைனா உங்க கார் சாவியை கொடுங்க.. நான் கிளம்பறேன்.. ", என்று தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு , முகிலனை பார்த்தபடி நித்யா கூற , அத்தனை வருத்தத்திலும் நித்யாவின் மன நிலைமை புரியாமல், பிரச்சனையின் வீரியம் தெரியாமல் மதுசூதனின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.

நித்யா அறியாமல், அந்த புன்னகையை மறைத்தான் மதுசூதனன். நித்யா அவன் கண்களுக்கு கோபப்படும் சிறு குழந்தையாக தெரிந்தாள். "நான் அடித்தது தவறு தான். அதற்காக இவள் என்னிடம் பேசாமல் இருந்து விடுவாளா..?", என்று எண்ணம் மதுசூதனனிற்கு தோன்றியது.

"தவறு என் பக்கம்.. நான் தான் சமாதானம் செய்ய வேண்டும்", என்ற எண்ணம் தோன்ற, "உனக்கு கார் ஓட்ட தெரியுமுன்னு எனக்கு தெரிந்திருந்தா முன்னாடியே கார் வாங்கிருப்பேன்.. அம்மா.. ஆபரேஷன் முடியட்டும்.. நான் லண்டன் போயிட்டு வந்த உடனே.., உனக்கு பிடித்த மாதிரி கார் வாங்கிடலாம்.. இப்ப ஹாஸ்பிடல் கிளம்பு..", என்று மதுசூதனன் சமாதானமாக நித்யாவின் முகம் பார்த்து கனிவாக கூறினான்.

"தம்பி.. உங்க காரில் நீங்க கிளம்ப மாட்டிங்களா....?", என்று முகிலனின் முகம் பார்த்து நித்யா கோபமாக கேட்க, "அண்ணி.. நீங்க எப்படி சொல்றீங்களோ... அப்படி செய்றேன்..", என்று நித்யாவிடம் கூறிக்கொண்டே தன் அறைக்கு சென்று தன் கார் சாவியோடு திரும்பினான் முகிலன்.

முகிலனோடு நித்யா காரில் கிளம்பி செல்ல, மதுசூதனன் தன் தோளைக் குலுக்கி கொண்டு, தன் காரில் மருத்துவமனைக்கு சென்றான்.

அவள் மருத்துவமனைக்கு செல்ல, வாசலில் நின்று கொண்டிருந்த ரூபா, "வேலையை முடித்துவிட்டு வர இவ்வளவு நேரமா..?", என்று புருவம் உயர்த்தி சலிப்பாக கேட்டாள்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
பதில் எதுவும் சொல்லாமல், அறைக்குள் சென்று தான் கொண்டு வந்த பொருட்களை வைத்து விட்டு, புஷ்பாவிடம் உடல் நலன் விசாரித்துவிட்டு, அவருக்கு தேவையான உதவியை செய்துவிட்டு.., கோவிந்தனிடம் ஆறுதலாக பேசிவிட்டு அறையின் வெளியே இருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்தாள்.

அவள் அருகே அமர்ந்த ரூபா, "கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதா..?", என்று ரூபா நக்கலாக கேட்க, "நான் உன் மேல் செம கடுப்பில் இருக்கிறேன். உன் வேலையை அத்தை, மாமா, மதுசூதனன், முகிலனோட நிறுத்திக்கோ.. என்கிட்டே உன் வேலையை காட்டி அன்று போல் அடி வாங்கிட்டு போகாத...", என்று நித்யா அவளை பார்க்கமால் எங்கோ பார்த்தபடி கூற, ரூபா, "திமிர்...", என்று நித்யாவை பார்த்து முணுமுணுத்தாள்.

"உன்னை நானாக பார்த்து மன்னித்து விட்டு வைத்திருக்கிறேன்.. உன்னை பற்றி வெளியே சொல்ல வேண்டாமுன்னு பார்க்கறேன்... உன் மேல் இந்த வீட்டில் எல்லாரும் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.. அதை நீ காப்பற்றி க் கொண்டால் உனக்கு நல்லது...", என்று ரூபாவின் முகம் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள் நித்யா.

மதுசூதனனும், முகிலனும் இரவில் மருத்துவமனையில் தங்க, கோவிந்தனும் நித்யாவும் வீட்டிற்கு திரும்பினர்.

பேச்சியம்மாள் உதவியாக இருந்தாலும், நித்யவிற்கு வேலை சரியாக இருந்தது.

இவ்வாறாக இரண்டு நாட்கள் சென்றது.

மதுசூதனன் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தான். மதுசூதனன் நித்யாவிடம் பேச முயற்சி செய்ய, நித்யா பதில் பேசாமல் மதுசூதனனை தவிர்த்து கொண்டிருந்தாள்.

"இது சரியில்லையே....", என்று மதுசூதனன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

நித்யா அவர்கள் அறைக்கு வந்துவிட்டு, வெளியே செல்ல அவள் வழியை மறைத்து நின்றான் மதுசூதனன்.

"பேசு நித்யா.. நீயும் நானும் சண்டை போட்டோம்.. அப்படினா நீ சண்டை தானே போடணும்.. ஏன் பேச மாட்டேங்கற..? இது சரியில்லை...", என்று மதுசூதனன் நித்யாவின் முகம் பார்த்து கூற, நித்யா மதுசூதனின் முகம் பார்க்காமல் குனிந்து கொண்டாள்.

நித்யா பேசாமல் அமைதியாக நிற்க, "இவள் என்னை பேசி கொல்லுவாள்... இல்லையென்றால் பேசாமல் கொல்லுவாள் போல", என்ற எண்ணம் மதுசூதனனிற்கு தோன்றியது.

"நித்யா நான் இன்று கிளம்பறேன்.... நான் கண்டிப்பாக போக வேண்டும்.... நான் போகாம இந்த டீல் Cancel ஆகிருச்சுனா நமக்கு நஷ்டமாக முடியும்... அம்மா, அப்பாவை பார்த்துக்கோ.. முகிலன் பயப்படுவான்.. அவனுக்கு தைரியம் சொல்லு.. உன்னை நம்பி தான் நான் கிளம்பறேன்...", என்று மதுசூதனன் உடைந்த குரலில் மெதுவாக கூற, நித்யா அமைதியாக நின்றாள்.

"பார்த்துகிறேன்னு ஒரு வார்த்தை சொல்லு...", என்று மதுசூதனன் அவளிடம் கெஞ்சுதலாக கூற, நித்யா ஆழமாக மூச்செடுத்து அமைதியாக நின்றாள்.

"பிடிவாதக்காரி....", என்று மனதிற்குள் அவளை திட்டினான் மதுசூதனன்.

கண் இமைக்காமல் அவளை பார்த்தான் மதுசூதனன். மிகவும் சோர்வாக இருந்தாள் நித்யா. "நிறைய வேலை.. அதீத அலைச்சல்... என் பிரச்சனை அனைத்தையும் தன் பிரச்சனையாக சுமப்பாள்.. ஆனால் என்னிடம் பேச மாட்டாள்... அழுத்தக்காரி...", என்றெண்ணினான் மதுசூதனன்.



அவள் முடி முகத்தில் விழுந்து அவள் கண்களை மறைக்க, அதை ஒதுக்கி அவள் முகம் நிமிர்த்தி.., அவள் கண்களை பார்த்து.., "Sorry", என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் மதுசூதனன்.

அவன் சென்ற திசையை பார்த்தபடி அமைதியாக நின்றாள் நித்யா.

அவளை திரும்பி பார்த்த மதுசூதனன், "ப்ளீஸ் என்னுடன் கிளம்பு.. ஹாஸ்பிடல் போயிட்டு அம்மாவை பார்த்திட்டு நான் ஏர்போர்ட் கிளம்பறேன்... நீ முகிலன் கூட Return வா... ", என்று கூறிவிட்டு மருத்துவமனைக்கு தயாரானான் மதுசூதனன்.

நித்யா மதுசூதனனிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அவன் அடித்ததிலிருந்து அவள் மதுசூதனனிடம் பேசவில்லை. மதுசூதனன் நித்யாவிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான்.

பாவம் அவனுக்கு பதில் தான் கிடைப்பதில்லை.

எதுவும் பேசாமல் அமைதியாக அவனோடு கிளம்பி சென்றாள் நித்யா.

மதுசூதனன் சாலையில் கவனமாக காரை ஓட்ட, நித்யா சாலையை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மருத்துவமனைக்கு சென்று, தன் தாயிடமும், தந்தையிடமும் கூறிவிட்டு மதுசூதனன் கிளம்ப, முகிலன் தன் அண்ணனை பரிதாபமாக பார்த்தான்.

மதுசூதனன் முகிலனின் தோளை தட்டிக் கொடுத்து விட்டு, நித்யாவிடம், "தைரியமா போயிட்டு வாங்க.. நான் பார்த்துகிறேன்னு ஒரு வார்த்தை சொல்லு...", என்று மதுசூதனன் நித்யாவின் முகம் பார்த்து மீண்டும் கேட்க, "முகில்.. உங்க அண்ணன் நம்மளை இந்த நிலைமையில் விட்டுட்டு கிளம்புவதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லைன்னு சொல்லு...", என்று முகிலனிடம் கூறிவிட்டு தன் முகத்தை திருப்பி கொண்டாள் நித்யா.

மதுசூதனன் நித்யாவை ஆழமாக பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். ஏர்போர்ட் செல்வதற்காக, மருத்துவமனையை விட்டு வெளியே சென்று காரை நோக்கி நடந்தான்.

நித்யா தலையை பிடித்துக் கொண்டு, நாற்காலியில் சோர்வாக அமர்ந்தாள்.

"மதுசூதனன் வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். நாளை மறுநாள் ஆபரேஷன்.., நான் தான் அத்தனை பேருக்கும் ஆறுதலாக இருக்க வேண்டும்... நான் சோர்ந்து போக கூடாது..", என்று தனக்கு தானே கூறிக் கொண்டு தன்னை தேற்றிக் கொண்டாள் நித்யா.

அப்பொழுது அங்கு ரூபா வர, "இவளை வேறு சமாளிக்க வேண்டும்..", என்று எண்ணம் தோன்ற சலிப்பாக உணர்ந்தாள் நித்யா.

அதிகமான டிராபிக்.., சாலையில் கார் மெதுவாக நகர்ந்தது.

சில மணி துளிகளில், மதுசூதனன் ஏர்போர்ட்டில் நுழைந்தான்.



கட்டங்கள் நீளும்....
 




baminikani

நாட்டாமை
Joined
Jul 20, 2018
Messages
89
Reaction score
221
Location
sattur
என்ன செய்யப்போகிறாய்.....???
இதுல உள்ள மூன்று கேள்விகுறியில்
1.மதுவுக்கு
2.நித்தியாவுக்கு....
Last but first preference..
இவங்களுக்குதான் கொடுத்திருக்க வேண்டும்...it's ok
3.ஆசிரியர் அகிலா...
துணை கேள்விகுறிகளும் உண்டு....to...
முகிலன்,ரூபா.....
பதில் தெரிய...
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
என்ன செய்யப்போகிறாய்.....???
இதுல உள்ள மூன்று கேள்விகுறியில்
1.மதுவுக்கு
2.நித்தியாவுக்கு....
Last but first preference..
இவங்களுக்குதான் கொடுத்திருக்க வேண்டும்...it's ok
3.ஆசிரியர் அகிலா...
துணை கேள்விகுறிகளும் உண்டு....to...
முகிலன்,ரூபா.....
பதில் தெரிய...
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Kelvi kettu kalkreenga
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top