• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal - 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
கட்டங்கள் – 37

கோவிந்தன் நித்யாவின் கருத்தைக் கேட்க, புஷ்பாவும், கோவிந்தனும் அவள் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தனர்.

மதுசூதனன் நித்யாவை ஆச்சரியமாக பார்த்தான்.

"என் கருத்தை விட, இவள் கருத்திற்கு இந்த வீட்டில் மதிப்பு அதிகம்...", என்ற எண்ணம் மதுசூதனனுக்கு தோன்ற, அவனுக்கு சற்று பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் பொறாமையும் எட்டி பார்த்தது.

கலவையான எண்ணங்களோடு, "அப்படி என்ன பதில் சொல்லிவிடுவாள்..?" , என்ற எண்ணம் தோன்ற, நித்யாவை சுவாரசியமின்றி பார்த்தான் மதுசூதனன்.

"முகிலனுக்கு ரூபாவை பிடித்திருந்தா.... கல்யாணத்தை முடிச்சிடலாம் மாமா... பிசினெஸ்ஸை எதுக்கு பிரிக்கனும்.. முகிலனுக்கு சம்மதம்னா முழுவதையும் கொடுதிறலாம் ..", என்று நித்யா வாஞ்சையோடு கூற, மதுசூதனன் அதிர்ச்சியாக நித்யாவை பார்த்தான்.

"இவள் பணம் வேண்டாம்.. ஸ்டேட்டஸ் வேண்டாம்... என்று கூறியே.. என்னை நடுத் தெருவில் நிறுத்தாமல் விட மாட்டாள் போல...", என்று எண்ணியவனாக மனதில் கடுப்போடு படியேறி அவர்கள் அறைக்கு சென்றான்.

நித்யா கூறியதை கேட்டு, கோவிந்தனும், புஷ்பாவும் ஆனந்தமாக சிரித்தனர்.

"முகிலன் பார்த்துக் கொள்வான்...", என்று எண்ணம் தோன்ற நித்யா அமைதியாக அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

இருவரும் நேரடியாக பேசி பல நாட்கள் ஆகிவிட்டது.

பெரிய சண்டை என்றெல்லாம் சொல்ல முடியாது.

அழ ஆரம்பிக்கும் குழந்தை, சிறிது நேரத்தில் எதற்க்காக அழுகிறோம் என்று தெரியாமல் அழுவதை மட்டுமே வேலையாக செய்வது போல...!! பேசாமல் இவர்கள் ஆரம்பித்த இந்த சண்டை வீம்பு பாராட்டுவதில் இப்பொழுது நிற்கிறது.

மதுசூதனன் பேசட்டும் என்று நித்யாவும், நித்யா பேசட்டும் என்று மதுசூதனனும் மௌனம் காத்தனர்.

நித்யா தன் டைரியை எடுத்துக் கொண்டு பால்கனி ஊஞ்சலில் சாய்ந்தமர்ந்தாள்.

மதுசூதனனுக்காக அவள் வரைந்த கட்டத்தில் இருபத்துமூன்று கட்டங்கள் நிறம் மாறி இருந்தன. "இந்த அளவிற்கு எனக்கு அவங்க (அவன் என்பது மனதளவில் அவங்களாக மாறியதை நாம் கவனிக்க வேண்டும்) மீது கோபம் இருக்கிறதா...? ", என்று நித்யா கட்டங்களை பார்த்தபடி சிந்திக்க, அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"முன் நான் பலருக்கு கட்டங்கள் வரைவேன்.. இப்பொழுது மதுசூதனனிற்கு மட்டுமே கட்டம் நிரப்ப நேரம் சரியாக இருக்கிறது... ", என்ற எண்ணம் தோன்ற மீண்டும் புன்னகைத்தாள்.

"கட்டங்களின் நிறத்தை மீண்டும் வெண்மையாக மாற்றலாமா..?", என்று நித்யாவின் மனம் விழைய, நித்யாவின் தன்மானம், "உன்னை அடித்தவனுக்கு இத்தனை வக்காளத்தா...?" , என்று கேட்க, நிறத்தை மீண்டும் வெண்மையாக மாற்றாமல் டைரியை திறந்து வைத்த படியே கண்மூடி ஊஞ்சலில் சாய்ந்தாள் நித்யா.

நித்யா கண் மூடி அமர்ந்திருக்க, மதுசூதனன் நித்யாவின் மனக்கண் முன் தோன்ற, "அது என்ன எப்பொழுதும் வெள்ளை சட்டை.. ஒரு நாள் வேறு நிற சட்டை அணிந்தால் என்ன..? அத்தனை வெள்ளை சட்டையையும் ஏதாவது செய்ய வேண்டும்....", என்ற எண்ணம் தோன்ற நித்யாவின் முகத்தில் குறும்பு புன்னகை தோன்றியது.

ஊஞ்சலுக்கு பின் பக்கமாக நின்று கொண்டிருந்த மதுசூதனன் நித்யாவின் கையிலிருந்த திறந்த டைரியை பார்த்தான்.

இருபத்திமூன்று கட்டங்கள் நிறம் மாறி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தான் மதுசூதனன். "அடிப்பாவி... நான் அத்தனை மோசமானவனா....!! ", என்று மதுசூதனன் நினைக்க.., மீதி இருந்த இரண்டு கட்டங்கள் இவனை பார்த்து கை கொட்டி சிரித்தது.

"இன்னும் இரண்டு கட்டங்களையும் நிறம் மாற்றிவிடுவாளோ, என்ற கேள்வி எழ, மதுசூதனன் தனக்கு தானே மறுப்பாகா தலை அசைத்துக் கொண்டான்.

"அப்படி நினைத்திருந்தால், நித்யா அதை என்றோ செய்திருப்பாள்.. உன் மீதுள்ள அன்பு.., அவளை அப்படி செய்ய விடமால் தடுக்கிறது...", என்று அவன் அறிவும், மனமும் ஒன்றாக கூற, மதுசூதனன் அறைக்குள் நுழைந்து மெத்தையில் படுத்து, சிந்தனையில் ஆழ்ந்தான்.

"நித்யாவிற்கு என்னை பிடித்திருக்கிறதா...?", என்று மதுசூதனின் அறிவு வினவ, "பிடிக்காமலா உன்னையும் உன் குடும்பத்தையும் நினைத்துக் கொண்டே இருக்கிறாள்", என்று மதுசூதனின் மனம் நித்யாவிற்க்காக வாதாடியது.

நித்யாவின் நினைப்போடு மதுசூதனன் கண்ணுறங்கினான்.

இரவு பன்னிரண்டு மணி..

மெத்தையில் வெண்பா புரண்டு படுக்க, "வெண்பா தூக்கம் வரலியா..?", என்று முரளி அவள் பக்கமாக திரும்பி படுத்து வினவினான்.

"எப்படி தூக்கம் வரும்...?" , என்று வெண்பா கடுப்பாக கூற, "ஏன் என்ன ஆச்சு...?", என்று தூக்க கலக்கத்தோடு எழுந்தமர்ந்தான் முரளி.

"அத்தை என்னை ஒரு வேலை செய்ய விடுறதில்லை.. சித்ரா காலேஜ் போய்டுவா.. நீங்களும், அசோக்கும் வேலைக்கு போயிடுவீங்க.. எனக்கு சும்மாவே இருக்கிறது கடுப்பா இருக்கு.. பகல் எல்லாம் தூங்கறேன்...", என்று வெண்பா சோகமாக கூற, "இது தான் விஷயமா..?", என்று நிம்மதி பெருமூச்சோடு படுத்து, "என்ன பண்ணலாமுன்னு நினைக்கிற...!!", என்று முரளி வெண்பாவை பார்த்து கேட்டான்.

தலையணையில் சாய்ந்த படி வெண்பா, முரளியை ஆழமாக பார்த்து, "என்னால் வேறு எங்கையோ வேலைக்கு போக முடியுமுன்னு தோணலை.. நாம பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணலாமா..?", என்று வெண்பா மெதுவாக கேட்க, முரளி தூக்கம் கலைந்து அதிர்ச்சியாக எழுத்தமர்ந்தான்.

"ஏன் இப்படி ஷாக் ஆகுறீங்க...?", என்று வெண்பா வினவ, "Technically நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்க.. நானும் பார்த்துப்பேன்.. மேனேஜ்மென்ட் என்னால் handle பண்ண முடியும்...", என்று வெண்பா நிதானமகா கூற, "பணம்", என்று முரளி மெதுவாக கேட்டான்.

"லோன் ட்ரை பண்ணுவோம்.. கண்டிப்பாக பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணனுமுனு சொல்லை... ஒரு முயற்சி பண்ணுவோமா...?",என்று வெண்பா தன்மையாக கேட்க, "யோசிப்போம்", என்று கூறினான் முரளி.

சிரித்த முகமாக தலை அசைத்து படுத்தாள் வெண்பா.

வெண்பா அமுதவள்ளிக்கு உதவியாக காய்கறி நறுக்க, "அண்ணி... நீங்க நகருங்க.. எனக்கு இன்னும் காலேஜ் கிளம்ப டைம் இருக்கு... நான் காய் நறுக்கிறேன்..", என்று சித்ரா வெண்பாவின் அருகே அமர, "இருக்கட்டும் வெண்பா நான் சும்மா தானே இருக்கேன்...", என்று கூறிக் கொண்டே வெண்பா காய்கறிகளை நறுக்கினாள்.

வெண்பா குரலில் வழக்கமாக இல்லாத சோர்வு இன்று தெரிய, அமுதவள்ளி சிந்தனையில் இறங்கினார்.

"நேற்று முரளியிடம் ஏதோ பிசினெஸ் விஷயம் பேச வேண்டும்..., என்று சொன்னாளே.. பேசினாளா..? இல்லையா ? ", என்று சிந்தித்தபடியே முரளியை தேடிச் சென்றார் அமுதவள்ளி.

"முரளி..", என்று அழைத்தபடியே அமுதவள்ளி முரளியின் அறைக்குள் நுழைய, "சொல்லுங்க அம்மா..", என்று முரளி தன் தாயை நோக்கி திரும்பினான்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
"வெண்பா ஏதோ பிசினெஸ் விஷயம் பேசணுமுன்னு சொன்னாளே... என்ன முடிவு பண்ணிருக்க...?", என்று அமுதவள்ளி வினவ, "பார்க்கணும்", என்ற குரலில் சுரத்தே இல்லாமல் கூறினான் முரளி.

"ஏன் இவ்வளவு யோசனை...?", என்று அமுதவள்ளி அக்கறையாக வினவ, "சித்ராவுக்கு கல்யாணம் பார்க்கணும்.. அப்பொழுது நிறைய செலவு வரும்... இப்பொழுது லோன் எடுத்து சிக்கல் ஆகிற கூடாது...", என்று முரளி அக்கறையாக கூறினான்.

"அதெல்லாம் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை... சித்ரா கல்யாண செலவை நாங்க பார்த்திக்கிறோம்.. ", என்று கூறியபடியே சுந்தரம் அருகே வர, "வெண்பா ஆசை படுறா இல்லையா...? முயற்சி பண்ணு.....", என்று அமுதவள்ளி அக்கறையாக கூற, சிந்தனையில் ஆழ்ந்தபடி சம்மதமாக. தலை அசைத்தான் முரளி.

" இன்னும் பதினைந்து நாள் காத்திருங்க.... அடுத்த மாசம் நல்ல நாள் வருது.., அன்று இதை பற்றிய பேச்சை ஆரம்பிங்க..." , என்று கண்டிப்போடு கூறிவிட்டு சமையல் அறையை நோக்கி நடந்தார் அமுதவள்ளி.

நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர, முகிலன் திரும்பும் நாளும் வந்து சேர்ந்தது.

" Flight ஏறுமுன், முகிலன் நித்யாவிற்கு கால் செய்ய நித்யா மொபைல் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். "தம்பி நாங்க நாளைக்கி பிக்கப் பண்ண Airport வரோம்...", என்று நித்யா அக்கறையாக கூற, "தேவை இல்லை அண்ணி... டிரைவர் மட்டும் அனுப்புங்க.. நான் வீட்டுக்கு போன பிறகு Refresh ஆகிட்டு ஆபீஸ் வந்துருவேன்... நீங்களும் அண்ணனும் ஆபீஸ் கிளம்புங்க... டீல் வெற்றிகரமாக முடிந்தது... I am so so so much happy அண்ணி..

All because of you… Thank you so much அண்ணி" , என்று முகிலன் கூற சந்தோஷமாக தலை அசைத்து.., "சரி தம்பி.. பத்திரம்.. டேக் கேர்...", என்று மொபைல் பேச்சை முடித்தாள் நித்யா.

இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மதுசூதனனிற்கு வீட்டில் அனைவருக்கும் என்னை விட இவள் மீது தான் பாசம் அதிகம் என்று எண்ணினான் மதுசூதனன்.

மறுநாள் காலை மதுசூதனன், நித்யா இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பி செல்ல சற்று நேரத்தில், முகிலன் வீட்டிற்கு வந்தடைந்தான்.

முகிலன் குளித்துவிட்டு, உடை மாற்றி அலுவலகத்திற்கு கிளம்பி படி இறங்கி வர, "முகிலன்.. என்ன அவசரம்.. ஆபீஸ் கிளம்பிட்ட... உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே..", என்று கோவிந்தன் முகிலன் அருகே வந்து கூறினார். "அப்பா.. அண்ணனையும், அண்ணியையும் பார்க்கணும்... ஆஃபீஸ்ல் முக்கியமான வேலை இருக்கு அப்பா.. சாயங்காலம் பேசிக்கலாம்...", என்று கூறியபடியே தன் காரை நோக்கி சென்றான் முகிலன்.

தனியாக பிஸ்னஸ் டீலை பேசி முடித்த சந்தோசம் அவன் முகத்தில் தெரிந்தது.

"முகிலன் மிகவும் பொறுப்பாக மாறி விட்டான்..", என்று சிந்தித்தார் கோவிந்தன்.

" ஆனால் ரூபா விஷயத்திற்கு என்ன முடிவு சொல்லுவான். புஷ்பா.., இந்த திருமணம் முடிய வேண்டும் என்று நினைக்கிறாள்…", என்று சிந்தனையில் ஆழ்ந்தார் கோவிந்தன்.

மதுசூதனனின் அலுவலகம்..

நித்யா தன் லப்டோப்பில் மூழ்கிருக்க, ரூபா அவள் அருகில் சென்று, "என்ன பண்றீங்க மேடம்..", என்று நக்கலாக கேட்க, "பல்லாங்குழி விளையாடுறேன்... வரியா சேர்ந்து விளையாடுவோம்...", என்று நித்யா தன் வேலையை பார்த்தபடியே கூறினாள்.

"இவளுக்கு உடம்பு முழுவதும் கொழுப்பு.. ", என்று எண்ணிய ரூபா, " சேர்ந்து விளையாடுவோம்... சேர்ந்து விளையாடி தானே ஆகணும்.. இனிமேல் நீயும் நானும் ஒரே வீடு.. நான் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் வரைக்கும்... ", என்று ரூபா சிரித்த முகமாக கூற, "ஆஹான்... நல்ல விஷயம்... நல்ல விஷயம் சீக்கிரம் நடந்தா ரொம்ப நல்லா இருக்கும்..", என்று நித்யா ரூபாவின் முகம் பார்த்து ரூபாவை விட பெரிதாக புன்னகைத்து கூறினாள்.

"என்ன…!!! மதுசூதனன் நீ என்ன சொன்னாலும் கேட்பாங்கற திமிரா..?", என்று ரூபா கோபமாக கேட்க, "மதுசூதனனை நான் சொல்வதை கேட்க வைப்பதற்கு தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்... இவளுக்கு என் கஷ்டம் எங்கு புரிகிறது...", என்று தனக்குள் நினைத்த நித்யா..., "நீ இப்பொழுது யாரை பார்க்க வந்த..?", என்று கேள்வியோடு ரூபாவை பார்த்தாள் நித்யா.

"மை டார்லிங்.. முகில்... On the way to office... அவனை பார்க்க தான் வந்தேன்..", என்று ரூபா செயற்கை வெட்கத்தோடு கூற, "இதெல்லாம் பார்க்கணுமுன்னு என் தலை எழுத்து... ", என்று நித்யா மனதிற்குள் நொந்து கொண்டாள்.

நித்யா அமைதியாக அமர்ந்திருக்க, "நீ கல்யாணத்தை நிறுத்துவன்னு நான் நினைத்தேன்.. என்ன இப்படி அமைதியாக இருக்க.. என் கிட்ட மோதி ஜெயிக்க முடியாதுன்னு பயந்துட்டியா..?", என்று ரூபா கேலி தொனியில் கேட்க, "ஐயோ... இந்த கொசு தொல்லை தாங்கலையே....", என்று நினைத்தபடி, "நடக்கப் போற கல்யாணத்தை தானே நிறுத்த முடியும்.. நடக்காத கல்யாணத்தை நான் எப்படி நிறுத்துவது..?", என்று நித்யா சோகமாக கேட்க , அவளை கூர்மையாக பார்த்தாள் ரூபா.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மதுசூதனன் அறைக்குள் சதாசிவம் நுழைந்தார்.

"இவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார்... இவரிடம் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறதே.... ",என்று ரூபா யோசிக்க, "இவர் தானே வெண்பாவின் தந்தை...", என்று நித்யா யோசித்தாள்.

சதாசிவம் மதுசூதனன் அறைக்குள் நுழைந்து சிறிது நேரத்தில், முகிலன் அலுவலகத்தில் நுழைந்தான்.

"ஹாய்.. முகில்..", என்று ரூபா முகிலன் அருகே சென்று கை கோர்த்து கொள்ள.., முகிலனும் ரூபாவோடு இணைந்து நடக்க, ரூபா முகத்தில் வெற்றி புன்னகை பூத்தது.

"அண்ணி.. So.. so.. happy.. Thank you so much.. ", எல்லாம் உங்களால் தான்...", என்று முகிலன் பெரிதாக புன்னகைத்து நித்யாவிற்கு நன்றி தெரிவிக்க, நித்யா ரூபாவை கேலிப் புன்னகை யோடு பார்த்தாள்.

புன்னகைகளின் உள்ளர்த்தம் என்ன..??

கட்டங்கள் நீளும்....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
தொடர்ச்சியாக அப்டேட்ஸ் கொடுப்பதற்கு மிகவும் நன்றி,
அகிலா டியர்
Thank you ? Banuma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஸ்சப்பா......
நிஜமாகவே இந்த ரூபா-ங்கிற
கொசுத் தொல்லை தாங்க
முடியலையே, அகிலா டியர்?
மருந்தடிச்சு கொல்லுங்கடா,
நாராயணா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top