• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal - 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
மதுசூதனன் ட்ரோப் செய்வதாக கூறியும், "ஆபீஸ் நேரம்... நீங்க ரெண்டு பெரும் ஆபீஸ் கிளம்புங்க...", என்று கூறி மதுசூதனன் நித்யாவை அனுப்பிவிட்டு அவர்கள் Call Taxi இல் வீட்டிற்கு சென்றனர்.



"இவள் அவசரத்திற்கு கூட என்னிடம் பணம் கேட்க மாட்டாளா...?", என்ற எண்ணம் மதுசூதனனுக்கு மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்த, எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை ஓட்டினான் மதுசூதனன்.

அவனுக்கு நித்யாவின் இன்றைய செயல் அளவில்லாத கோபத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது.

இவை எதுவும் தெரியாமல், நித்யா இன்றைய அழுத்தத்தில் தன்னிலை மறந்து அமைதியாக இருந்தாள்.

அத்தனை கோபத்திலும், மதுசூதனனால் நித்யாவை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. தன்னிலை மறந்து அமர்ந்திருந்த நித்யாவின் கண்களில் இருந்து நீர் வழிய, பதறிய மதுசூதனன் தன் காரை டிராபிக் இல்லாத இடமாக பார்த்து ஓரமாக நிறுத்தினான்.

" நித்யா", என்று மதுசூதனன் அன்பாக மென்மையாக அழைக்க, நித்யா அவன் மார்பில் சரண் புகுந்து கண்ணீர் உகுத்தாள்.

"நித்யா...", என்று மீண்டும் மதுசூதனன் அழைக்க, நித்யா நிமிர்ந்து அவன் முகம் பார்க்க தைரியமின்றி அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

"இந்த பெண் யார்...? ரொம்ப புதுசா இருக்கே..!!! ", என்று மதுசூதனன் ஆச்சரியத்தோடு கேட்க, நித்யா இன்னும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் தலையை ஆதரவாக தடவி, "வெள்ளை சட்டை... அழுக்காகிரும்...", என்று மதுசூதனன் கேலியோடு கூற, "அப்படின்னா கலர் சட்டை போட்டுக்கோங்க.." , என்று நித்யா அழுகைக்கிடையில் கூற, "என் நித்யா அழ மாட்டான்னு நினைத்தேன்...", என்று மதுசூதனன் நித்யாவின் முகம் உயர்த்தி அவள் முகத்தை காதலோடு பார்த்தபடி கூறினான் மதுசூதனன்.

"அப்படி நீங்க நினைத்தா அது உங்க தப்பு.. உங்க நித்யா அழுவா... அவள் மனசை கவர்ந்தவங்க முன்னாடி.. அவளை மதிக்கறவங்க முன்னாடி.. அவள் உணர்வுகளை புரிந்தவங்க முன்னாடி.. அவளுக்காக அன்பா உருகி நிக்கறவங்க முன்னாடி.. அழுவா ", என்று நித்யா வெட்கத்தோடு கூறினாள்.

கம்பீரம் குறையாமல் அவள் மனதை அவள் காட்டிய விதம் அவனை இன்னும் ஈர்த்தது.

மதுசூதனனின் கோபம் இன்னும் குறையவில்லை.

"ஆனால் அவங்க கிட்ட பணம் மட்டும் கேட்க மாட்ட..", என்று மதுசூதனன் தன் முகத்தை சாலை பக்கமாக திருப்பிக் கொண்டு கோபமாக கூறினான்.

"நீங்க தான் நான் உங்களை பணத்துக்காக கல்யாணம் பண்ணேன்னு சொன்னீங்க....", என்று வெடுக்கென்று நித்யா முகத்தை திருப்பிக் கொண்டு கூற, நித்யாவின் முகத்தை தன் பக்கம் திருப்பி., "நான் இன்னமும் அப்படி தான் நினைக்கறேன்னு நீ நினைக்கிறியா..", என்று மதுசூதனன் அவள் கண்களை பார்த்தபடி கேட்க, நித்யா அமைதியாக இருந்தாள்.

"இந்த அமைதிக்கு என்ன அர்த்தம் பேபி...?" , என்று மதுசூதனன் அவள் முகத்தை பார்த்தபடி கேட்க, "நான் ஒன்றும் பேபி இல்லை..", என்று நித்யா சிணுங்களாக கூறினாள்.

"நீ என்றும் எனக்கு பேபி தான்..", என்று மதுசூதனன் அழுத்தமாக கூற, "ஏன் அப்படி..?", என்று நித்யா முகத்தை சுருக்கி கொண்டு கேட்க, "ஏன்னா நான் உன்னை குழந்தை மாதிரி பார்த்துப்பேன்.. அதுக்கு தான்...", என்று மதுசூதனன் கூற, "நல்லா பார்த்தீங்க..", என்று சலிப்பாக கூறினாள்.

"என்ன நித்தி சலிப்பு...?", என்று மதுசூதனன் அவள் முகம் பார்த்து கூற, "முகிலனுக்கு தெரிந்த விஷயம் கூட, உங்களுக்கு தெரியாது... ", என்று கூறி நித்யா மதுசூதனனை கடுப்பாக பார்த்தாள்.

"ஹா.. ஹா... ", என்று சிரித்தபடி மதுசூதனன் "ரூபா விஷயமா..?", என்று கண்சிமிட்டி கேட்க, அவனை ஆச்சரியமாக பார்த்தாள் நித்யா.



"உங்களுக்கும் தெரியுமா...?", என்று நித்யா ஆச்சரியமாக கேட்க, "என் மனைவி எப்பொழுதும் என் பாதுகாப்பு வளையத்தில் தான் இருப்பாள்.?", என்று மதுசூதனன் பெருமையாக கூறினான்.

"நீங்க என் கிட்ட சொல்லவே இல்லையே....", என்று நித்யா சலிப்பாக கூற, "நீ என் கிட்ட சொன்னியா..?", என்று மதுசூதனன் கேள்வியை அவள் பக்கம் திருப்ப நித்யா புன்னகைத்தாள்.

"மேடம் எதாவது பிரச்சனைனா என் கிட்ட வருவீங்கன்னு பார்த்தா.., எல்லாமே தனியா handle பண்றீங்க.. ரூபா விஷயம் முதல், வெண்பா விஷயம் வரை... எனக்கு வேலையே இல்லாதப்ப நான் அமைதியாகி இருந்துட்டேன்.." , என்று மதுசூதனன் மெதுவாக கூற, "இதில் உங்களுக்கு வருத்தமா..?", என்று நித்யா அவனை நிமிர்ந்து கண்களில் ஏக்கத்தோடு பார்த்தாள்.

"பெருமை பேபி.. நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிப்பேன்… மனைவி புத்திசாலியா, கெட்டிக்காரத்தனாமாக இருந்தால் கணவன் கொடுத்து வைத்தவன்.. அதுவும் உன்னை போல் மனம் நிறைய அன்பிருந்தால் அதிர்ஷடசாலி... நான் மிகவும் கொடுத்து வைத்த அதிர்ஷ்டாசாலி நித்யா..... மனைவியின் வளர்ச்சியை பார்த்து கணவன் சந்தோஷப்படணும்.. நான் அந்த ரகம் நித்யா...", என்று மதுசூதனன் பெருமையோடு கூற, "அதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. பிடிக்காத மனைவிக்கு.., இவ்வளவு செய்யறீங்க..", என்று நித்யா நக்கல் கலந்த புன்னகையோடு கூறினாள்.

"இப்படியே பேசு.. உன்னை ஒரு நாள் வாயடைக்க செய்கிறேன் பார்...", என்று மதுசூதனன் சவால் விட, "அது யாராலும் முடியாது..", என்று நித்யா பதில் கூற, மதுசூதனன் அவளை கேலியாக பார்த்தான்.

"ஹாஸ்ப்பிட்டல்ல உங்க கிட்ட பேசாம ஏன் இருந்தேன்னா....", என்று நித்யா தயக்கமாக ஆரம்பிக்க, "தெரியும்...", என்று அழுத்தமாக மதுசூதனன் கூறினான்.



தலை சரித்து நித்யா மதுசூதனனை பார்க்க, "நான் உன்னை அடித்தது கோபம்.. வீம்பு.. ஆனால் நீ பேசாம இருந்ததற்கு உண்மை காரணம் அது இல்லை… பேசினால் உன்னை சம்மதிக்க வைத்து நான் கிளம்பியிருப்பேன்.. ஆனால் நீ பேசலைன்னா நான் போக மாட்டேன்னு தெரிந்து நீ அமைதியாக இருந்துட்ட...", என்று மதுசூதனன் புருவம் உயர்த்தி கூற, நித்யா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

அதே நேரம்.., "நான் உன் மேல் வைத்திருக்கும் காதலை நீ புரிஞ்சிகிட்டன்னு சொல்லாம சொல்லிட்ட பேபி....", என்று மதுசூதனன் கூறிக்கொண்டே அவள் அருகே நெருங்க, நித்யா வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டாள்.

"எந்த விஷயத்திலும் என் உதவி உனக்கு தேவை பாடாதுன்னு தெரிந்தாலும்... உன்னை நான் கண்காணிச்சிட்டே தான் இருந்தேன் நித்யா.. உன்னை பற்றி முழுதாக புரிந்து கொண்ட என்னால், நீ இன்று அழுத காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை." , என்று மதுசூதனன் வருத்தமாக கேட்டான்.

"அப்பாவுக்கு அக்சிடெண்ட்ன்னு கேட்டவுடன் ஒரு அழுத்தம்.. யாருமே இல்லைன்னு ஒரு பரிதவிப்பு.. வீட்ல நாங்க ரெண்டு பேருமே பொண்ணுங்க.. அதனால் நான் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கனுமுன்னு ஒரு பொறுப்புணர்வு.. அழாம எல்லாவற்றையும் சமாளிக்கனுமுனு ஒரு எண்ணம்.. ஆனால் இன்று என் பொறுப்பை நீங்க எடுத்தவுடன்.., ஒரு சந்தோசம்..", என்று நித்யா உணர்ச்சி பொங்க கூறினாள்.

"இதுவும் ஆனந்த கண்ணீர் தான்..", என்று நித்யா நிமிர்வாக கூற, மதுசூதனன் பெருங்குரலில் சிரித்தான்.

"எதுக்கு சிரிக்கறீங்க...?", என்று நித்யா கடுப்பாக கேட்க, "என் மனைவி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷமாக இருக்கிறாள்... அதற்கு தான்..", என்று மதுசூதனன் நக்கலாக கூற நித்யா அவனை கோபமாக பார்த்து, பேச ஆர்மபித்தாள்.

நித்யாவின் பக்கம் திரும்பி, அவள் கன்னங்களில், தன் இதழ்களை மதுசூதனன் பதிக்க, நித்யா அதிர்ச்சில் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

"தன் விரலை உதட்டில் வைத்து, இப்படியே அமைதியா ஆபிஸ் போகிற வரைக்கும் இருக்கனும். ", என்று செல்லமாக மிரட்டிவிட்டு காரை கிளப்பினான் மதுசூதனன்.

அப்பொழுது மதுசூதனனின் மொபைல் ஒலிக்க, அதில் தெரிந்த பெயரை பார்த்து இருவரும் ஒருவரை மற்றோருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டனர்.



கட்டங்கள் நீளும்....
பூஜை வேளை கரடி யாரு?
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
சதா சார் நீங்களா இது..... உங்க பொண்ணு மேல இவ்வளவு பாசம் வச்சிட்டே எதுக்கு வீம்பு.....
நித்தி மதுகிட்ட உன் மனச சொல்லிட்ட சூப்பர்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top