• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal - 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
கட்டங்கள் – 40

மதுசூதனனின் மொபைலில் சதாசிவம் என்ற பெயர் மின்ன, மதுசூதனன், நித்யா இருவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்தனர்.

மதுசூதனின் மொபைல் ஒலிக்க.., காரை கிளப்பாமல், மொபைலை எடுத்து காதில் வைத்து பேச ஆரம்பித்தான் மதுசூதனன்.

நித்யா "என்ன?", என்று கண்களால் வினவ, "உஷ்...", என்று மதுசூதனன் விரலை, தன் உதடுகள் மீது வைத்து அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினான்.

"நான் பேசவில்லை...", என்று தன் கைகளால் நித்யா செய்கை காட்ட.., நித்யாவை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் மதுசூதனன்.

"ம்..", "சரி...", என்ற வார்த்தைகளைத் தவிர, மதுசூதனன் சதாசிவத்திடம் எதுவும் பேசாததால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாமல் நித்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

சதாசிவத்திடம் பேசிவிட்டு, புன்முறுவலோடு காரை கிளப்பினான் மதுசூதனன்.

நித்யா அமைதியாக அமர்ந்திருக்க, "பேபி.. உன்னை வாயடைக்க இப்படி ஒரு வழி இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தா நான் இதை என்றோ செய்த்திருப்பேன்.." , என்று மதுசூதனன் மீண்டும் நித்யாவை வம்பிழுக்க, நித்யா அவனை முறைத்து பார்த்தாள்.

அவள் முறைப்பைப் பார்த்த மதுசூதனன்.., "பேபி.. நீ ரொம்ப அழகு..", என்று மதுசூதனன் நித்யாவை பார்த்தபடி ரசித்து கூற, நித்யா "களுக்கு " , என்று சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிற..?", என்று மதுசூதனன் சாலையை பார்த்தபடி கேட்க, "உங்க கண்ணை நினைத்து சிரித்தேன்.. ", என்று நித்யா நக்கலாக கூறினாள்.

"என் கண்ணிற்கு என்ன குறைச்சல்..?", என்று மதுசூதனன் தீவிரமாக சிந்தித்த படி கேட்க, "பக்கத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகுதே... ", என்று நித்யா கேலி தொனித்த குரலில் கூற, மதுசூதனன் ரசித்து சிரித்தான்.

"சதாசிவம் சார்.., அவங்க பெண்ணை பார்த்து பேசப் போகிறேன்.... பேசிட்டு பிஸ்னஸ் டீல் confirm பண்றேன் .., என்று கூறினார், ", என்று மதுசூதனன் கியரை மாற்றியபடியே கூற, "வாவ்.. தட்ஸ் எ கிரேட் நியூஸ்"..., என்று நித்யா சந்தோஷமாக கூறினாள்.

"உனக்கு நன்றி சொல்ல சொன்னார்...", என்று மதுசூதனன் ஸ்டியரிங்கை திருப்பியடியே கூற, நித்யா மெளனமாக புன்னகைத்தாள்.

"உனக்கு அந்த பெண் மேல் ஏன் இவ்வளவு அக்கறை... ", என்று மதுசூதனன் சிந்தனையோடு கேட்க, "எனக்கு உங்களை மாதிரி நல்ல கணவன் கிடைத்தற்கு அவங்களும் ஒரு காரணம்.. அதற்கு தான்..", என்று நித்யா உணர்ந்து கூற, "நான் செய்த தவறை சரி செய்கிறாயா நித்தி...", என்று ஆழமான குரலில் மதுசூதனன் கேட்க, "இதை நான் சொன்ன மாதிரியும் சொல்லலாம்..", என்று நித்யா கூறினாள் மதுசூதனனை வீட்டுக் கொடுக்காமல்.



"அவங்க அப்படி கல்யாணம் பண்ணதுக்கு நான் தான் காரணமா நித்தி...?", என்று மதுசூதனன் குரலில் வருத்தத்தோடு கேட்க, "நீங்க மட்டும் காரணம் இல்லை.. ஆனால் நீங்களும் ஒரு காரணம்...", என்று நித்யா அழுத்தமாக கூறினாள்.

"நித்தி நான் என் பிஸ்னெஸ்ஸை தவிர வேறு எதுவும் யோசித்ததில்லை.. யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை..", என்று மதுசூதனன் சாலையில் கவனமாக தீவிரமான குரலில் கூற, நித்யா மெளனமாக சிரித்தாள்.

"ஏன் பேபி.. என்னை நம்பலையா..? சிரிக்கிற...", என்று மதுசூதனன் வருத்தமான குரலில் கேட்க, "உங்களை விட உங்களை பற்றி எனக்கு நல்லா தெரியும்... நீங்க என் கிட்ட தன்னிலை விளக்கம் தர வேண்டாம்..", என்று நித்யா அழுத்தகமாக கூற, மதுசூதனன் சிரித்து கொண்டான்.

"வெண்பாவை பற்றி தெரிந்தும் அமைதியாக இருந்துட்ட...", என்று மதுசூதனன் மெதுவாக கூற, "நீங்க ரூபாவை பற்றி தெரிந்து அமைதியாக இருந்த மாதிரி ..", என்று நித்யா கண்சிமிட்டி சிரித்தாள்.

கார் அலுவலகத்தில் நுழைந்தது.

அவன் Lift ல் நுழைய, அவனோடு நுழைந்த நித்யா முதல் நாள் ஞாபகத்தில் புன்னகைக்க, இவள் சொன்ன டீல் நினைவுக்கு வர, "More than love.. You impressed me a lot….", என்று அவளை மனதார பாராட்டினான் மதுசூதனன்.

நித்யா புன்னகைத்து கொண்டே, உள்ளே நுழைய, "அண்ணி.. மாமா நல்லா இருக்காங்களா..?", என்று வினவ, "நல்லா இருக்காங்க..", என்று இன்முகமாக கூறிக்கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள் நித்யா.

நித்யா தன் டைரியை எடுத்து அனைத்து கட்டங்களையும் வெண்மை நிறத்திற்கு மாற்றினாள்.

epi40_img.PNG

நித்யாவிற்கு மதுசூதனனின் மேல் உள்ள கோபம், வருத்தம், வீம்பு, அவனிடம் கொண்ட பிடிவாதம் அனைத்தும் மதுசூதனனின் பொறுப்பான அன்பால் அழிந்து விட்டது.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
நித்யா தன் அலுவலக வேலையில் மூழ்கி விட்டாள்.

முகிலன் தன் கண்களை சுருக்கி கொண்டு சிந்தித்த படியே, "அண்ணா.. ", என்றழைத்துக் கொண்டு மதுசூதனன் அறைக்குள் சென்றான்.

மதுசூதனன் நாற்காலியில் சாய்ந்து, கண்களை உயர்த்தி, "என்ன? ", என்று கேட்டபடி அவனை பார்த்தான்.

"எனக்கு இன்னும் இரெண்டு வருஷத்திற்கு கல்யாணம் வேண்டாம்..", என்று முகிலன் மதுசூதனின் எதிரே நின்று கூற, "ரூபா வேண்டாமுன்னு நீ சொல்வதில் நியாயம் இருக்கு.. அது நான் எதிர்பார்த்ததும் கூட... ரூபாவை இனி தள்ளி நிறுத்துவது என் பொறுப்பு...", என்று மதுசூதனன் உறுதியாக கூற, சம்மதமாக தலை அசைத்து மதுசூதனன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் முகிலன்.

"ஆனால், அது என்ன இரண்டு வருட கணக்கு..?" , என்று பேனாவை சுழட்டிக் கொண்டு முகிலனை பார்த்து கேட்டான் மதுசூதனன்.

"காயத்ரி படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடம் ஆகும்...!!", என்று சிறு குழந்தையை போல் முகிலன் கூற, மதுசூதனன் முகிலனை அதிர்ச்சியாக பார்த்தான்.

அவன் அதிர்ச்சியை சிறிதும் கண்டு கொள்ளாமல், "நான் காயத்ரியை தான் விரும்பறேன்...", என்று முகிலன் பிடிவாதமாக கூற, "இது எப்ப..?", என்று மதுசூதனன் பரிதாபமாக கேட்டான்.

"அதெல்லாம் தெரியாது...", என்று முகிலன் கூற, மதுசூதனன் முகிலனை சுவாரசியமாக பார்த்தான்.

"எனக்கு காதல், கல்யாணம் அதில் எல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை.. ஆனால் அண்ணி நம்ம வீட்டுக்கு வந்ததும் நம்ம வீடே மாறிடுச்சு.. அண்ணி மாதிரி சூழ்நிலையில் வளர்ந்த பொண்ணு தான் எனக்கு மனைவியாக வரணும்.. உன் கல்யாண வீட்டில் என்னை எப்படி கூப்பிடறதுன்னு தயங்கி நின்ற காயத்ரியை எனக்கு பசுமையாக நினைவிருக்கு..", என்று முகிலன் ரசித்து கூற, "இது காயத்ரிக்கு தெரியுமா..?" , மதுசூதனன் முகிலனை கூர்மயாக பார்த்த படி கேட்டான்.

"ஐயையோ...!! இது யாருக்கும் தெரியாது.. எனக்கு தெரிந்த விஷயம்.. இப்பொழுது உனக்கு... ", என்று முகிலன் பதட்டத்தோடு கூறினான்.

மதுசூதனன் அமைதியாக அமர்ந்திருக்க, "அண்ணியை பார்த்த பின்.. அவங்க நம்ம வீட்டிற்கு வந்த பிறகு.., நம் வீட்டில் வந்த மாற்றங்களை பார்த்த நாள் முதல்.. எனக்கு கல்யாணம் பண்ணிக்கனுமுனு தோணுது...", என்று தீர்க்கமாக கூறினான் முகிலன்.

"இது நீ மட்டும் முடிவு பண்ற விஷயம் இல்லை முகிலன்... எல்லார் கிட்டயும் பேசுவோம்...", என்று மதுசூதனன் கூற, "இதில் எதிர்ப்பு வர வாய்ப்பே இல்லை.. அண்ணியோட அம்மா, அப்பாக்கு நம்ம மேல் நல்ல மரியாதை இருக்கு.. நம்ம அம்மா அப்பாக்கு அண்ணி மேலயும், அவங்க குடும்பத்து மேலயும் நல்ல மரியாதை இருக்கு.. அப்புறம் என்ன பிரச்சனை..?", என்று தீர்க்கமாக முகிலன் கேட்டான்.

தான் நித்யாவிடம் முதல் நாள் பேசிய பேச்சுக்கள் நினைவு வர, "உங்க அண்ணி...", என்று தயக்கமாக கூறினான் மதுசூதனன்.

"அண்ணி.. எனக்காக எதுவும் சரின்னு தான் சொல்லுவாங்க... மறுத்தால் நீ மட்டும் தான் மறுக்கணும்...", என்று முகிலன் மதுசூதனனை பார்த்தபடி கூற, "நான் ஏண்டா வேண்டாமுன்னு சொல்ல போறேன்...", என்று சிரித்தமுகமாக கூறினான் மதுசூதனன்.

"என்னை மீறி என் தங்கை கல்யாணம் நடக்காது...", என்று நித்யா அன்று கூறியது இன்று மதுசூதனனின் காதில் ஒலிக்க, "நித்யா சம்மதிப்பாளா..?", என்று யோசித்தான் மதுசூதனன்.

"ப்ரோ.. உன் பொறுப்பு... என் கல்யாணம் இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான்...", என்று கூறிவிட்டு முகிலன் எழுந்து செல்ல, சிந்தித்த பிறகு சம்மதமாக தலை அசைத்தான் மதுசூதனன்.

மதுசூதனனிற்கு யோசிக்க இடம் கொடுத்து, நாம் காயத்ரியை பார்க்க செல்லுவோம்.



மாலை மணி 6:00

வெயில் குறைந்து காற்று பலமாக வீச, துணி எடுக்க காயத்ரி படி ஏறி மாடிக்கு சென்றாள்.

வெண்பா துணி எடுப்பதற்காக மாடிக்கு செல்ல, "அண்ணி.. நீங்க எதுக்கு படி ஏறணும்... ? நான் எடுத்துட்டு வரேன்...", என்று கூறிக்கொண்டு அசோக் படி ஏறி மாடிக்கு சென்றான்.

அவன் எதிரே காயத்ரி வர, "அப்பாவுக்கு இப்ப பரவால்லையா?", என்று அசோக் மரியாதையாக கேட்க, "ஒன்னும் பிரச்சனை இல்லை.. இப்பொழுது நல்லா இருக்காங்க...", என்று கூறிவிட்டு காயத்ரி படி இறங்க எத்தனித்தாள்.

"இந்த அசோக் மாறி விட்டான்..", என்ற எண்ணம் தோன்ற காயத்ரி மனதில், குற்றக் குறுகுறுப்பு அதிகரித்தது.

அசோக்கின் பக்கம் திரும்பி, "சாரி...", என்று கூறினாள் காயத்ரி.

அசோக் கேள்வியாக பார்க்க, "அன்று பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டியது நானும் அக்காவும் தான்...", என்று காயத்ரி தயங்கியபடியே கூற, "எனக்கு தெரியும்.. அது உங்க அக்கா வேலை தான் என்று.. அன்று எனக்கு பயங்கர கோபம்.. ஆனால் இப்பொழுது இல்லை...", என்று கொடியில் இருந்த துண்டை எடுத்தபடியே நிதானமாக கூறினான் அசோக்.

காயத்ரி படி இறங்கி செல்ல, அப்பொழுது அங்கு வந்த முரளி அசோக்கை சந்தேகமாக பார்த்தான்.

"என்ன நடக்குது...?", என்று முரளி கேட்க, அசோக், "ஒன்றும் இல்லை", என்று தலை அசைத்தான்.

"நீ காயத்ரியை விரும்பறியா..?", என்று முரளி நேரடியாக கேட்க, அசோக் அவனை அதிர்ச்சியாக பார்த்தான்.

கட்டங்கள் நீளும்....
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
ஆஹா..... முகிலன் காயத்ரி மேல இருக்கற விருப்பத்த மதுவ விட்டுட்டு நித்திகிட்ட சொல்லியிருக்கலாம்.... இப்ப தான் எல்லா கட்டமும் வெள்ளையாச்சு அதுக்கு வேட்டு வச்சிடுவ போலவே.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top