• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode kattangal-42 (Final Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
கட்டங்கள் – 42

சத்தம் கேட்டு எழுந்த மதுசூதனன் , அருகில் நித்யாவை காணாமல் தேடினான்.

கதவு உள்பக்கமாக, தாழிட்டுயிருக்க நித்யாவைத் தேடி பால்கனிக்கு சென்றான்.

அவன் பால்கனிக்கு செல்லவும், பால்கனி வாசலில் மேலிருந்து மறுபடியும் படாரென்று சத்தம் கேட்க.., அண்ணாந்து பார்த்தான் மதுசூதனன்.

அவன் முகத்தில், பூக்கள் விழ.., மதுசூதனன் அதிர்ச்சியிலிருந்து வெளி வருவதற்குள், மீண்டும் சத்தத்தோடு தண்ணீர் விழுந்தது. மதுசூதனன் முழுதாக நனைந்திருக்க, "ஹாப்பி.. பர்த்டே...", என்று நித்யா வாழ்த்து தெரிவித்தாள்

மனதில் சந்தோசம் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, "ராத்திரி நேரம் இப்படி தான் தண்ணீர் கொட்டி விளையாடுவியா..? ", என்று மதுசூதனன் சிடுசிடுப்பாக கேட்க, தன் தோள்களை குலுக்கிக் கொண்டு, "ஆம்" , என்று தலை அசைத்தாள் நித்யா.

"இது எல்லாம் யாரோடது..? என்ன சின்ன குழந்தை விளையாட்டு சாமான் எல்லாம் வைத்திருக்க..?", என்று ஈரத்தோடு நின்ற மதுசூதனன் கடுப்பாக கேட்க, "எல்லாம் என் சாமான்.. யாரும் தொட கூடாது..", என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, அவனுக்கு நீல நிற துண்டை நீட்டினாள் நித்யா.

"இதை யார் தொடுவா..?", என்று எண்ணியபடியே., அந்தத் துண்டை வாங்கினான்.

துண்டைப் பார்த்த மதுசூதனன், "என் துண்டு எங்கே..? ஏன் ப்ளூ கலர் துண்டை கொடுக்கிற,?", என்று கேள்வியோடு அவளை முறைத்தான்.

"வேணுமுன்னா இதை உபயோகிச்சிக்கோங்க.. இல்லைனா இப்படியே ஈரமா நில்லுங்கள்..", என்று நித்யா கறாராக கூற, அவளை திட்டிக் கொண்டே, தன் தலையை துவட்டினான் மதுசூதனன்.

அவன் முன் ஹார்ட் வடிவம் கொண்ட கேக்கை நீட்டி, மீண்டும் அவனை நித்யா வாழ்த்த, "இதெல்லாம் எதற்கு..?", என்று முகம் சுருக்கி தயக்கமாக மதுசூதனன் கேட்க, "வேண்டாமா..? சொல்லுங்கள்.. முகிலன், அத்தை, மாமா எல்லாரையும் எழுப்பி அவங்களுக்குக் கொடுக்கிறேன்..", என்று கூறி, " முகிலன் ", என்று நித்யா சத்தமாக குரல் கொடுக்க, அவள் தலையில் தட்டி.., "லூசு.. லூசு.. சத்தம் போடாத...", என்று முணுமுணுப்பாகக் கூறினான் மதுசூதனன்.

" இவளால் கண்ணைக் கட்டுதே...", என்று எண்ணியபடியே ஊஞ்சலில் அமர்ந்தான் மதுசூதனன்.

அவனைக் கேலி புன்னகையோடு நித்யா பார்த்துக் கொண்டிருக்க, "உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?", என்று மதுசூதனன் புன்னகையோடு கேட்டான்.

நித்யா சம்மதமாக தலை அசைக்க, "ஒரு ஊரில் சோமு.. சோமுன்னு ஒருத்தன் இருந்தான்..", என்று மதுசூதனன் கூற, "அவன் பெயர் சோமுவா..? இல்லை சோமு சோமுவா ?" , என்று நித்யா தீவிரமாக சந்தேகம் கேட்க, "நான் முடிக்கும் வரை நீ இடையில் பேச கூடாது..", என்று மதுசூதனன் கடுமையாக கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் நித்யா.

"சோமுவுக்கு lottery யில் அதிர்ஷ்டவசமாக ஒரு bulldozer கிடைத்ததாம்.. தனக்கு ஒத்து வராதென்று தெரிந்தும்.., கிடைத்த அதிர்ஷ்ட பொருளான bulldozer ரை விட்டுக் கொடுக்க மனமில்லாமல்... அதை வீட்டிற்குக் கொண்டு வந்தான். அவன் வீட்டிற்கு வரும் பாதை ரொம்ப சின்னதா இருந்ததால் வரும் வழியில் இரண்டு வீடுகளில் சுவர் இடிபட்டு, உடைந்த சுவருக்கு அபராதமும் கட்டிவிட்டு bulldozer ரோடு வீட்டிற்கு வந்தான் சோமு..,", என்று மதுசூதனன் கதையை நிறுத்த, "மச்சு", என்று குரல் எழுப்பி பரிதாபமாக தலை அசைத்தாள் நித்யா.

மதுசூதனன் மேலும் கதையை தொடர்ந்தான், " வீட்டிற்கு வந்து பார்த்தால், வாசல் மிகவும் குறுகியதாக இருந்தது.. அதை இடித்துச் சரி செய்தான் சோமு.. bulldozer உள்ளே சென்றால், உள்ளே நுழைய முடியவில்லை.., கூரை உயரம் குறைவாக இருந்தது.. அதையும் இடித்துக் கட்டினான் சோமு..", என்று மதுசூதனன் சோகமாக கூற, "அதற்கு அந்தப் bulldozerரை முதலிலேயே வேண்டாமென்று சொல்லிருக்கலாம்...", என்று நித்யா கடுப்பாக கூறினாள்.

"இது சரி.. உன் அறிவோ.. அறிவு..", என்று மதுசூதனன் நித்யாவை பாராட்ட, மதுசூதனனைச் சந்தேகமாக பார்த்தாள் நித்யா.

முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, கண்களில் கேலி புன்னகை மின்ன, " பாரேன்.. உனக்கு இருக்கும் அறிவு எனக்கு இல்லை.. கல்யாணத்தன்று அதிர்ஷ்டமாகக் கிடைத்த பெண்ணை விட மனமில்லாமல்.. அந்தப் பெண்ணை கூட கூட்டிட்டு வந்து நான் படும் பாடு இருக்கே...", என்று மதுசூதனன் சோகமாக கூற, நித்யா அவனை கோபமாக முறைத்தாள்.

பால்கனியில் இருந்து தங்கள் அறைக்குள் சென்று, மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்தாள் நித்யா.

"ஏன் பேபி கோபப்படுற..? நான் நீ எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமென்று சொல்ல வந்தேன்...", என்று மதுசூதனன் அதே கேலி புன்னகையோடு கூற, "இப்பொழுது பேச மாட்டேன்.. நாளைக் காலை என்ன நடக்குதுன்னு பாருங்கள்..", என்று மனதிற்குள் கூறிக்கொண்டு அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள் நித்யா.

"யாரவது கேலி பேச்சுக்கு கோபப்படுவார்களா...? வா கேக் சாப்பிடலாம்..", என்று மதுசூதனன் அவளை பால்கனிக்கு அழைத்துச் செல்ல, நித்யா சிரித்த முகமாக அவனோடு சென்றாள்

"ஹே.. அருமை.. நைஸ் டிசைன் அண்ட் சூப்பர் டேஸ்ட்...", என்று மதுசூதனன் கூற, நித்யா அமைதியாகப் புன்னகைத்தாள்.

"நித்யா இன்னும் கோபமா..? விளையாட்டுக்குத் தான் சொன்னேன்..", என்று மதுசூதனன் கூற, நித்யா அவனை ஆழமாகப் பார்த்தாள்.

"நைட் ஒரு மனிதனை எழுப்பி தலையில் தண்ணி ஊற்றி நீ விளையாடலாம்.. அது தப்பில்லை.. நான் கேலி பேசினால் அது தப்பா..?", என்று அவன் சட்டம் பேச நித்யா மெலிதாக புன்னகைத்தாள்.

"இது நித்யா...!!", என்று அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, "கேக் செம.. எங்க வாங்கின..?", என்று அவன் கேக்கை ருசித்த படி கேட்க, "நான் வீட்டில் செய்தேன்..", என்று அவள் பெருமையாக கூற, "Really Awesome..Design and Taste..", என்று நித்யாவை மனதார பாராட்டினான்.

"கேக் மட்டும் தானா நித்யா..?", என்று மதுசூதனன் ஆழமான குரலில் கேட்க, நித்யா அவன் முகத்தைப் பார்த்து, "வேறு என்ன வேண்டும்..?", என்று தலை சாய்த்துக் கேட்டாள் நித்யா.

"உன் சம்மதம்..", என்று மதுசூதனன் சுவரில் சாய்ந்து நித்யாவின் முகம் பார்த்து கூற, "இது என்ன புதுசா இருக்கு.. நீங்க என்ன சொன்னாலும் நான் எல்லாவற்றிக்கும் சரியென்று தானே சொல்றேன்..", என்று நித்யா புன்னகையோடு அமைதியாகக் கூற, மதுசூதனன் சிரித்துக் கொண்டான்.

"முகிலன்..", என்று மதுசூதனன் தயக்கமாக ஆரம்பிக்க, நித்யா தன் கண்களைச் சுருக்கி கொண்டு மதுசூதனனை நேரடியாகப் பார்த்தாள்.

"முகிலன் காயத்ரியை கல்யாணம் செய்யணும்முன்னு விரும்பறான்...", என்று மதுசூதனன் நிதானமாகக் கூற, மதுசூதனன் கூறிய சொற்கள் நினைவு வர நித்யாவின் முகம் மாறியது.

" மதுசூதனன் இன்று மாறி இருக்கலாம்.., ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் அப்படிக் கூறிவிட்டால்...?", என்ற எண்ணம் தோன்ற நித்யா மறுப்பாகத் தலை அசைக்க எண்ணுகையில், அவள் முகத்திலிருந்து நித்யாவின் முடிவை அறிந்து கொண்ட மதுசூதனன், "நீ மறுத்தால் என் மனம் மிகவும் வருந்தும்.. ", என்று கூறிவிட்டு முகவாட்டத்தோடு அவர்கள் அறைக்குள் செல்ல, அவன் வருந்திச் செல்வது பிடிக்காமல் அவன் செல்லும் வழியை மறித்து நின்றாள் நித்யா.
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
நித்யாவை கேள்வியாக மதுசூதனன் பார்க்க, "பிறந்தநாள் அன்று கேட்டுடீங்க.. மறுப்பாகப் பதில் சொல்ல முடியாது... ", என்று ஆரம்பித்த நித்யா மதுசூதனனைக் கேலியாக பார்த்தாள்

"மாப்பிளை தங்கமான குணம்.. அதைப் பற்றி கவலை இல்லை.. மாப்பிளையோடு அம்மா, அப்பா.. பெரிய பிரச்சனை இல்லை..", என்று நித்யா கன்னத்தில் கை வைத்து தன் பேச்சை நிறுத்தினாள்.

புன்னகையோடு அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த மதுசூதன், "அப்புறம் என்ன..? பெண் படிப்பு முடிந்த பிறகு கல்யாணத்தை முடித்து விட வேண்டியது தான்..", என்று மதுசூதனன் அழுத்தமாகக் கூற, மறுப்பாகத் தலை அசைத்து.., அதில் ஒரு சிக்கல் இருக்கு என்று கூறினாள் நித்யா.

அப்படி என்ன சிக்கல், என்று மதுசூதனன் கேள்வியாக நித்யாவை பார்க்க, "மாப்பிள்ளையின் அண்ணன் ஒரு சிடுமூஞ்சி.. கொஞ்சம் குணம் மோசம்", என்று நித்யா தன் முகத்தைச் சுருக்கி அவன் காதில் ரகசியம் பேசினாள் நித்யா.

"அப்படிங்கிற...!!!", என்று மதுசூதனன் நித்யவை பார்த்துக் கேட்க, நித்யா "ஆம்", என்று மேலும் கீழுமாக வேகமாகத் தலை அசைத்தாள்.

"அந்த அண்ணனுக்கு ஒரே ஒரு மனைவி இருக்காங்களாம்.. ", என்று மதுசூதனன் சிரித்த முகமாகக் கூற, நித்யா அவனைக் கோபமாக முறைத்தாள்.

மதுசூதனன் அவள் கோபத்தை சட்டை செய்யாமல் மேலும் தொடர்ந்தான். " அந்த மாப்பிள்ளையின் அண்ணி.. அந்த அண்ணனை சரி செய்திருவாங்களாம் ", என்று மதுசூதனன் நித்யாவின் முகம் பார்த்து கூற, "அப்படியா சொல்கிறீர்கள்..?", என்று நித்யா ஆர்வமாகக் கேட்க, ஆமென்று சந்தோஷமாகத் தலை அசைத்தான் மதுசூதனன்..

"அப்படினா.. இந்தக் கல்யாணத்தில் எனக்கு முழு சம்மதம்..", என்று நித்யா மதுசூதனின் முகம் பார்த்து கூறினாள்.

"தேங்க்ஸ்..", என்று மனமார கூறினான் மதுசூதனன்.

நித்யா புன்னகையோடு படுக்கச் சென்றாள்.

காலை 6:௦௦ மணி:

நித்யா யோகாவை முடித்து விட்டு, தியானத்தில் இருந்தாள் . தன் அலமாரியைத் திறந்த மதுசூதனன், "நித்யா.. நித்யா", என்று கோபமாக சத்தமாக அழைத்தான்.

நித்யாவிடம் பதில் இல்லாமல் போக, நித்யாவை தேடி பால்கனிக்கு வந்தான் மதுசூதனன்

நித்யா தியானத்தில் ஆழ்ந்திருக்க, "உலகமே அழிந்தாலும், இவள் யோகாவைச் செய்து விடுவாள்..", என்று கோபமாக அவள் வருகைக்காகக் காத்திருந்தான்.

"என் சட்டை எல்லாம் எங்க..? எல்லாமே கலர் ஷர்ட்ஸ் தான் இருக்கு.. ", என்று மதுசூதனன் கடுப்பாக வினவ, "எல்லாச் சட்டையையும்...எல்லாருக்கும் தானம் பண்ணியாயிற்று.. ", என்று நித்யா அசட்டையாகக் கூறினாள்.

மதுசூதனன் அதிர்ந்து பார்க்க, "உங்களுக்கு வேறு வழியே கிடையாது.. எல்லாம் நீங்கள் அழைத்து வந்த அதிர்ஷ்டம் செய்த வேலை தான்.. ", என்று நித்யா கண்சிமிட்டி கூற, நித்யாவை கோபமாக பார்த்தான் மதுசூதனன்.

"எனக்கு நீங்க uniform மாதிரி வைட் ஷர்ட் போடறது சுத்தமா பிடிக்கவில்லை..", என்று கெஞ்சலாக, கொஞ்சலாக நித்யா கூற, " அது தான் எல்லாவற்றையும் மாற்றி வச்சிட்டியே... அப்புறம் என்ன கொஞ்சல்..?", என்று மதுசூதனன் சிடுசிடுப்பாக கூற, "கோபமா..?", என்று தன் முகத்தைச் சுருக்கி கொண்டு கேட்டாள் நித்யா.

மதுசூதனனுக்கு கலர் ஷர்ட்ஸ் அணிவது இஷ்டமில்லை என்றாலும், நித்யாவின் முகம் வாடுவது பிடிக்காமல், "உனக்குப் பிடித்திருந்தால்., எனக்குச் சந்தோசம்..", என்று நித்யாவின் முகம் பார்த்து அவன் கூற, நித்யாவின் முகம் புன்னகையால் மலர்ந்தது.

இருப்பினும், யோசனையாக, "உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்..", என்று நித்யா சோகமாக கூற, "எனக்கு பிடித்திருக்கிறது..", என்று சிரித்த முகமாகக் கூறினான் மதுசூதனன்.

" விட்டுக்கொடுத்து வாழ்வதில் தானே ஆனந்தம்..", என்று இருவரும் புரிந்து கொண்டார்கள் என்பது இருவரின் நடத்தையிலும் நமக்குத் தெரிகிறது.

நீல நிற சட்டையில் மதுசூதனன் கம்பீரமாக படி இறங்கி வர, முகிலன் மதுசூதனனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். "உங்கள் அண்ணி செய்ற எல்லா வேலைக்கும் நீ தான் உடந்தையா..?, என்று மதுசூதனன் கோபமாக கேட்க, "ஏதோ நான் கூட இருக்கிறதால் தான், நீ இந்த அளவோடு தப்பிக்கற... இல்லனா அண்ணி வேற Level...", என்று முகிலன் மதுசூதனனை அவன் பங்கிற்கு மிரட்ட, "எல்லாம் என் நேரம் என்று..", என்று நினைத்தான் மதுசூதனன்.

அனைவரும் வியக்கும் அளவிற்கு, மதுசூதனன் பிறந்த நாளிற்காக விதவிதமாக சமைத்திருந்தாள் நித்யா.

மதுசூதனன் தன் மனைவியை மனதில் அன்போடும் கண்களில் காதலோடும் நித்யாவை பார்த்தான்.

வருடங்கள் அதன் போக்கில் அழகாய் நகர்ந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,

காயத்ரி," படிப்பு முடிந்து, வேலைக்குச் செல்ல வேண்டும், என்று கூறியதால், அவள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து.., நான்கு ஆண்டிற்குப் பிறகு திருமண ஏற்பாடு நடந்திருக்கிறது.

Mr . Govindan & Mr Ranganathan Family invites

Mukilan

Weds

Gayathri

என்ற வரவேற்பு பலகை நம்மை அன்புடன் அழைக்க நாமும் திருமணத்திற்கு செல்வோம்.

மணமேடையில் முகிலன் கம்பீரமாக அமர்ந்திருக்க, காயத்ரி வெட்கத்தோடு அமர்ந்திருந்தாள்.

மதுசூதனன் மும்முரமாகத் திருமண வேலையில் ஈடுபட்டிருந்தான். அவன் தன் திருமண நாளின் நினைவில், நித்யாவை தேட அவளைக் காணவில்லை.

"வேலையாக இருப்பாள்...", என்று தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டான் மதுசூதனன்.

சதாசிவம் அவர் மனைவியோடு அமர்ந்திருந்தார். அவர் அருகே முரளி, அசோக், அமுதவள்ளி, சுந்தரம், என அனைவரும் அமர்ந்திருக்க வெண்பாவைக் காணவில்லை.

சித்ரா திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டதாகவும், அசோக்கிற்கு தாங்கள் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அமுதவள்ளி பேசிக் கொண்டிருப்பது நம் காதில் விழுகிறது.

வெண்பா முரளியின் மூன்றரை வயது மகன், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க, அவன் பின்னால் ஓடிக் களைத்து நின்று கொண்டிருந்தாள் வெண்பா. "அண்ணி.. நீங்கக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கள்...", என்று அசோக் அந்த சிறு குழந்தையோடு பேச ஆர்மபித்தத்தான்.
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
ஆனால், "நீ சொல்வதை நான் கேட்பேனா..?", என்று அசோக்கிடம் இருந்து தப்பி ஓடினான் அந்த சின்ன சிறு பாலகன்.

குழந்தையின் சேட்டையை சமாளிக்க முடியாமல், அவனைத் திட்டிக்கொண்டே வெண்பா அவன் பின்னே செல்ல, முரளியும் அவளோடு ஓடினான்.

அப்பொழுது நித்யாவின் கை பிடித்து, அமைதியாக நடந்து வந்தான் நித்யா மதுசூதனின் மூன்று வயது மகன். நித்யாவின் வயிறு மேடிட்டு, அவள் அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்று அனைவருக்கும் கூறியது.

நித்யாவின் மகனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வெண்பா.

" தன் மகனை விட, சின்னவனான நித்யாவின் மகன் எப்படிச் சொல்வதை எல்லாம் கேட்கிறான்..? இதை நித்யாவிடம் கேட்க வேண்டும் ", என்று நினைத்தாள் வெண்பா.

திருமணம் முடிந்து மதிய வேளை உணவை முடித்துவிட்டு அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேச, முகிலன், காயத்ரி அருகே நித்யா அமர்ந்தாள்.

நித்யாவிற்கு மாதுளை ஜூஸ் கொடுத்து, " குடி..", என்று கூறி கண் அசைத்தான் மதுசூதனன்.

"வேண்டாம்..", என்று நித்யா தலை அசைக்க," காலையில் இருந்து சுற்றிக்கொண்டே இருக்க.., உனக்கு நல்லதுன்னு எடுத்துட்டு வந்தேன் ம்மா.. குடி பேபி", என்று மதுசூதனன் அழுத்திக் கூற நித்யா மதுசூதனன் சொல்லுக்கு கட்டுப்பட்டு குடிக்க ஆரம்பித்தாள்.

"அப்பா.. எனக்கு..", என்று மதுசூதனின் மீது தாவினான் நித்யாவின் மகன்.

அவனை செல்லமாக மதுசூதனன் அணைத்துக் கொண்டான். அப்பொழுது அவர்கள் அருகே வெண்பாவும் முரளியும் சோர்வாக அவர்கள் மகனைத் தூக்கி கொண்டும், துரத்திக் கொண்டும் சுற்ற, "வெண்பா.. வாங்க உட்காருங்கள்...", என்றழைத்தாள் நித்யா.

"நான் எங்கு உட்கார..? இவன் என்னை ஒரு நிமிடம் உட்கார விட மாட்டான்..", என்று தன் மகனைக் காட்டியபடி வெண்பா கூற , நித்யா அழகாகப் புன்னகைத்தாள்.

"நீங்கத் திட்டுவது போல் கூட தெரியவில்லையே.. எப்படி இந்தக் குட்டி பையன் நீங்கச் சொல்வதெல்லாம் கேட்கிறான்..?", என்று வெண்பா அதிசயமாகக் கேட்க, தன் கைப்பையில் இருந்து டைரியை எடுத்து ஒரு சிறிய கட்டத்தைக் காட்டினாள் நித்யா.

epi_42_final.PNG

அந்தக் கட்டத்தை வெண்பா ஆச்சர்யமாகப் பார்க்க, நித்யா பேச ஆரம்பித்தாள்.

" மாதத்திற்கு ஒரு முறை இதைப் போல் கட்டம் வரைவேன்.. குட்டி பையன் நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் கட்டத்தின் நிறத்தை "Bad boy....", என்று கூறி சிகப்பு நிறமாக மாற்றிவிடுவேன்.. ஒரு மாதம் முழுவதும், அந்தக் கட்டம் நிறம் மாறாவிட்டால் நாங்க குட்டி பையனுக்கு எதாவது பரிசு வாங்கிக் கொடுப்போம். ", என்று நித்யா நிதானமாகக் கூற, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வெண்பா.

"குழந்தைகளை திட்டுவதாலும், கோபப்படுவதாலும்.. ஒரு உபயோகம் இல்லை..", என்று நித்யா பொறுமையாக கூறினாள்.

"அக்கா.. பக்கத்தில் இருக்கும் பெரிய கட்டம் யாருக்கு..?", என்று காயத்ரி ஆர்வமாக வினவ, "அது எனக்கு...", என்று கூறி மதுசூதனன் பெருங்குரலில் சிரிக்க நித்யா வெட்கப்பட்டு புன்னகைத்தாள்.

"அக்கா தண்டனை கொடுப்பதிலிருந்து பரிசு கொடுக்கும் அளவிற்கு நல்லவளாக மாறிட்ட...", என்று காயத்ரி நக்கல் பேச, "அண்ணி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.. ", என்று முகிலன் நித்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க மதுசூதனன் சிரித்தான்..

"நேரம் ஆகிடுச்சு..... பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு கிளம்ப வேண்டும்.. இன்னும் நிறைய வேலை இருக்கு.. ", என்று கூறிக்கொண்டே பத்மா வர, அவரைத் தொடர்ந்து ரங்கநாதன் , கோவிந்தன், புஷ்பா என அனைவரும் திருமணம் முடிந்த சந்தோஷத்தோடும் வேலை செய்த களைப்போடும் வந்தனர்.

புதுப் பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்குக் கிளம்பினர். மற்றவர்கள் அவர்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.

நாம் இவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல், "நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வது வேறு யாரும் இல்லை. நன்மையோ.. தீமையோ அது நம்மால் தான்.. இந்தக் கட்டத்தில் எப்படி வாழ்கிறோமோ..? என்ன செய்கிறோமோ..? அதுவே நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது.. புத்திசாலித்தனத்தோடும், தைரியமாகவும், பொறுமையோடும், பக்குவமாகவும், அனுசரித்தும் பெண்கள் நடந்து கொண்டால் ஒரு பெண்ணின் வருகை அந்த குடும்பத்திற்கு நல்வரவே!! ", என்று அழகாக வாழ்ந்து காட்டிய இந்த இளம் பெண்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

நாமும் நம் வாழ்க்கையின் கட்டங்களை அழகாக நகர்த்துவோம்..!!!

அது நம் கையில் தானே இருக்கிறது...!!

இப்படிக்கு,
அகிலா கண்ணன்.
 
Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான கதை.. நல்லதொரு கருத்தும் கூட... சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க அகிலா.. வாழ்த்துகள்
 
Last edited:

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அருமை அகிலா அக்கா..
கட்டங்கள் மூலம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அழகா கூறிவிட்டீர்கள்.. நன்றி இப்படி ஒரு படைப்பை கொடுத்ததற்கு.. மீண்டும் அடுத்த கதையோடு சீக்கிரம் வரவும்.. வாழ்த்துக்கள்.. ???
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
அருமை அகிலா அக்கா..
கட்டங்கள் மூலம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அழகா கூறிவிட்டீர்கள்.. நன்றி இப்படி ஒரு படைப்பை கொடுத்ததற்கு.. மீண்டும் அடுத்த கதையோடு சீக்கிரம் வரவும்.. வாழ்த்துக்கள்.. ???
thank you ma.. Sure..
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,904
Reaction score
46,340
Location
Earth
அருமையான கதை.. நல்லதொரு கருத்தும் கூட... சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க அகிலா.. வாழ்த்துகள்

Thank you Sangeetha.. Sure Sangeetha.. :)
 
N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
ஆனால், "நீ சொல்வதை நான் கேட்பேனா..?", என்று அசோக்கிடம் இருந்து தப்பி ஓடினான் அந்த சின்ன சிறு பாலகன்.

குழந்தையின் சேட்டையை சமாளிக்க முடியாமல், அவனைத் திட்டிக்கொண்டே வெண்பா அவன் பின்னே செல்ல, முரளியும் அவளோடு ஓடினான்.

அப்பொழுது நித்யாவின் கை பிடித்து, அமைதியாக நடந்து வந்தான் நித்யா மதுசூதனின் மூன்று வயது மகன். நித்யாவின் வயிறு மேடிட்டு, அவள் அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்று அனைவருக்கும் கூறியது.

நித்யாவின் மகனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வெண்பா.

" தன் மகனை விட, சின்னவனான நித்யாவின் மகன் எப்படிச் சொல்வதை எல்லாம் கேட்கிறான்..? இதை நித்யாவிடம் கேட்க வேண்டும் ", என்று நினைத்தாள் வெண்பா.

திருமணம் முடிந்து மதிய வேளை உணவை முடித்துவிட்டு அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேச, முகிலன், காயத்ரி அருகே நித்யா அமர்ந்தாள்.

நித்யாவிற்கு மாதுளை ஜூஸ் கொடுத்து, " குடி..", என்று கூறி கண் அசைத்தான் மதுசூதனன்.

"வேண்டாம்..", என்று நித்யா தலை அசைக்க," காலையில் இருந்து சுற்றிக்கொண்டே இருக்க.., உனக்கு நல்லதுன்னு எடுத்துட்டு வந்தேன் ம்மா.. குடி பேபி", என்று மதுசூதனன் அழுத்திக் கூற நித்யா மதுசூதனன் சொல்லுக்கு கட்டுப்பட்டு குடிக்க ஆரம்பித்தாள்.

"அப்பா.. எனக்கு..", என்று மதுசூதனின் மீது தாவினான் நித்யாவின் மகன்.

அவனை செல்லமாக மதுசூதனன் அணைத்துக் கொண்டான். அப்பொழுது அவர்கள் அருகே வெண்பாவும் முரளியும் சோர்வாக அவர்கள் மகனைத் தூக்கி கொண்டும், துரத்திக் கொண்டும் சுற்ற, "வெண்பா.. வாங்க உட்காருங்கள்...", என்றழைத்தாள் நித்யா.

"நான் எங்கு உட்கார..? இவன் என்னை ஒரு நிமிடம் உட்கார விட மாட்டான்..", என்று தன் மகனைக் காட்டியபடி வெண்பா கூற , நித்யா அழகாகப் புன்னகைத்தாள்.

"நீங்கத் திட்டுவது போல் கூட தெரியவில்லையே.. எப்படி இந்தக் குட்டி பையன் நீங்கச் சொல்வதெல்லாம் கேட்கிறான்..?", என்று வெண்பா அதிசயமாகக் கேட்க, தன் கைப்பையில் இருந்து டைரியை எடுத்து ஒரு சிறிய கட்டத்தைக் காட்டினாள் நித்யா.

View attachment 4039

அந்தக் கட்டத்தை வெண்பா ஆச்சர்யமாகப் பார்க்க, நித்யா பேச ஆரம்பித்தாள்.

" மாதத்திற்கு ஒரு முறை இதைப் போல் கட்டம் வரைவேன்.. குட்டி பையன் நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் கட்டத்தின் நிறத்தை "Bad boy....", என்று கூறி சிகப்பு நிறமாக மாற்றிவிடுவேன்.. ஒரு மாதம் முழுவதும், அந்தக் கட்டம் நிறம் மாறாவிட்டால் நாங்க குட்டி பையனுக்கு எதாவது பரிசு வாங்கிக் கொடுப்போம். ", என்று நித்யா நிதானமாகக் கூற, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வெண்பா.

"குழந்தைகளை திட்டுவதாலும், கோபப்படுவதாலும்.. ஒரு உபயோகம் இல்லை..", என்று நித்யா பொறுமையாக கூறினாள்.

"அக்கா.. பக்கத்தில் இருக்கும் பெரிய கட்டம் யாருக்கு..?", என்று காயத்ரி ஆர்வமாக வினவ, "அது எனக்கு...", என்று கூறி மதுசூதனன் பெருங்குரலில் சிரிக்க நித்யா வெட்கப்பட்டு புன்னகைத்தாள்.

"அக்கா தண்டனை கொடுப்பதிலிருந்து பரிசு கொடுக்கும் அளவிற்கு நல்லவளாக மாறிட்ட...", என்று காயத்ரி நக்கல் பேச, "அண்ணி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.. ", என்று முகிலன் நித்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க மதுசூதனன் சிரித்தான்..

"நேரம் ஆகிடுச்சு..... பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு கிளம்ப வேண்டும்.. இன்னும் நிறைய வேலை இருக்கு.. ", என்று கூறிக்கொண்டே பத்மா வர, அவரைத் தொடர்ந்து ரங்கநாதன் , கோவிந்தன், புஷ்பா என அனைவரும் திருமணம் முடிந்த சந்தோஷத்தோடும் வேலை செய்த களைப்போடும் வந்தனர்.

புதுப் பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்குக் கிளம்பினர். மற்றவர்கள் அவர்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.

நாம் இவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல், "நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வது வேறு யாரும் இல்லை. நன்மையோ.. தீமையோ அது நம்மால் தான்.. இந்தக் கட்டத்தில் எப்படி வாழ்கிறோமோ..? என்ன செய்கிறோமோ..? அதுவே நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது.. புத்திசாலித்தனத்தோடும், தைரியமாகவும், பொறுமையோடும், பக்குவமாகவும், அனுசரித்தும் பெண்கள் நடந்து கொண்டால் ஒரு பெண்ணின் வருகை அந்த குடும்பத்திற்கு நல்வரவே!! ", என்று அழகாக வாழ்ந்து காட்டிய இந்த இளம் பெண்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

நாமும் நம் வாழ்க்கையின் கட்டங்களை அழகாக நகர்த்துவோம்..!!!

அது நம் கையில் தானே இருக்கிறது...!!

இப்படிக்கு,
அகிலா கண்ணன்.
நிறைவாக மண நிறைவான சுபம்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top