• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Keladi kanmani epi 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 6
தன் பாஸிடம் விடுப்பு கேட்க மிகவும் தயங்கி பின் ஒரு வழியாய் அதைக் கேட்கும் விதமாய் மின்னஞ்சல் அனுப்பி வைத்தான்.அடுத்த நாளே அதற்கான சம்மதமும் கிடைத்தது.அந்த வார சனிக்கிழமை அதிகாலையில் கார்த்தியுடன் சேர்ந்து சென்னைக்கு விமானம் ஏறினான்.
சிங்கப்பூருக்கான ஏழு மணிநேர பயணம் முகிலை மீண்டும் அவன் பழைய ஞாபகங்களுக்கு இழுத்துக்கொண்டு சென்றது.
அன்றிரவு மைதிலியிடம் பேசுகையில் தன் மனதில் நினைத்து வைத்திருந்த அனைத்தையும் சொல்லிவிட்டான் முகில், தான் எதற்காக தயங்கினான் என்பது உட்பட.
“ஆரம்பத்திலேயே என் இஷ்டத்தை சொல்லிட தான் நினைச்சேன், ஆனா ஜெய் உன் அப்பா பத்தி சொன்னதும், இது நடக்க வாய்ப்பு இல்லையோன்னு முடிவுக்கு வந்துட்டேன்...”
“எங்க அப்பாவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம்.” என்றாள் அவள், திடுதிப்பென்று.
சொல்லிவிட்ட பிறகு எதற்கு அதைச் சொன்னாள் என்றிருந்தது, இருவருக்குமே.
“அப்படின்னா என்ன அர்த்தம், இது சரிவராதுன்னு சொல்ல வரியா?”
“ஐயோ அப்படி இல்லை...”
பதறிக்கொண்டு அவசரமாக அவள் மறுத்துச் சொல்ல, அதிலேயே அவள் மனம் அவனுக்குப் புரிந்து போனது. ஒருவரின் விருப்பம் மற்றவருக்குப் புரியும் வரை தான் இந்தத் தயக்கம் எல்லாம்.
காதல் பேச்சுக்கள் அதன்பின் எந்தத் தடையும் இல்லாமல் தினமும் தொடர்ந்தது. அதற்கு மிகவும் உதவிக்கரமாய் இருந்தது இருவரின் செல்பேசி.
இவன் சென்னையில் வேலையில் இருக்க அவள் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தாள். கல்லூரி வரும்வழி போகும் வழியில் ஃபோனில் அவர்கள் பேச்சு தொடர்ந்தது நித்தமும்.
இவனுக்குப் பணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அடிக்கடி ஊர் வந்து போக முடியவில்லை. ஆனால் காதலில் விழுந்துவிட்டால் முடியாதது என்று எதுவும் இல்லையே. அவளை பாராமல் இருப்பது சிரமமாய் இருக்க, அடிக்கடி ஊருக்கு அவன் விஜயம் தந்தான்.
தஞ்சை பெரிய கோவிலில் முதல் முறை சந்தித்துக் கொண்டனர்.
அவனை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டுவிட்ட சந்தோஷத்தில் அவள் அவனிடம் உருகிப் பேசியது ஒரு பத்து நிமிடமே. மீதி நேரம் எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பதட்டத்திலேயே தீ மேல் நிற்பது போல் இருந்தாள்.
“அவ்வளோ பயமா இருந்தா ஏன் வரேன்னு ஒத்துக்கிட்ட...” எத்தனை ஆசையாகப் பார்க்க வந்தோம், இந்த பெண் என்னவென்றால் இத்தனை பயப்படுகிறாளே என்றிருந்தது அவனுக்கு.
“துரைக்கு இப்ப பயம் போயிடிச்சோ..?” நமுட்டு சிரிப்புடன் அவள் கேட்க, அவன் அதற்கும் முறைத்து வைத்தான்.
“நானே நேரடியா சொல்லிட்டா பரவாயில்லை, யார் மூலமாவது அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் முகில்...”
அதன் பின் நேரில் சந்தித்துக் கொள்வதை இருவருமே ஆதரிக்கவில்லை.
“உன்னை பார்க்கணும் போல் இருக்கு டி..” என்பான் சில சமயம் ஃபோனில், ஏக்கமாய்.
“எனக்கும் தான்...” என்று இவளும் ஒத்தூத, “பேசாம சென்னைக்கு கிளம்பி வாயேன்...” என்பான்.
“என்ன விளையாட்டு முகில், நான் தனியா தஞ்சாவூரைத் தாண்டினது இல்லை...”
“வீட்டில் இண்டர்நெட் இல்லைங்குற, இருந்தா வீடியோ காலாவது பண்ணலாம். அடுத்த மாசத்திலிருந்து எப்படி பார்ப்பேனோம்?”
“ஏன் ஊருக்கு வரும் போது பார்க்கலாமே.”
“என் கம்பெனியில் என்னை ஜப்பான் அனுப்புறாங்க மைதிலி, அடுத்த மாசம் கிளம்ப வேண்டியதிருக்கும்...”
அவன் சொன்னதில் அவளை சோகம் சூழ்ந்து கொண்டது.
“திரும்பி வர எவ்ளோ நாளாகும் முகில்..?”
“தெரியலை, அந்த பிராஜெக்ட் பொருத்து தான் இருக்கு.”
“என்னது? அப்போ நான் எப்படி உங்களை பார்க்கிறதாம்?”
“சீக்கிரமா நான் வந்து மாமாக்கிட்ட பேசி உன்னைக் கூப்பிட்டு போறேன்...”
அந்த வார்த்தைகளில் கண்கள் கலங்கிவிட்டன மைதிலிக்கு.
“இது நடக்கணும், அப்பா சம்மதிக்கணும் முகில்...”
“எனக்கும் அந்தக் கவலை இருக்கு, மேடம் தைரியசாலின்னு நினைச்சா நீயே இப்படி சொல்றே...”
“என்னவோ அப்பா ஒத்துக்குவாரா மாட்டாரான்னு மனசு கிடந்து தவிக்கிது.”
சட்டென்று ஃபோனை அணைத்துவிட்டாள் மைதிலி. இவன் அழைத்தும் எடுக்கவில்லை.
கடந்து போனதை யோசித்த முகில், விமானத்தில் நித்திரையில் ஆழ்ந்துவிட்டான். அவள் ஃபோனை வைத்த பிறகு நடந்த விஷயங்கள் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லையே.
மைதிலி முகிலுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் தம்பி வந்தான் அந்த அறையினுள். சட்டென்று ஃபோனை அணைத்த மைதிலி,
“டேய் மாதவா எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன் கதவை தட்டிட்டு வான்னு...”
அவளைக் கண் எடுக்காது பார்த்த அவள் தம்பி,
“யார்கூட பேசிக்கிட்டுருந்த மைதிலி...” என்று வினவ,
“யாரு, நான் யார்கூட பேசப் போறேன்? நம்ம பாரதி கூட தான்...” என்றாள்.
“எந்த பாரதி, சுப்பிரமணிய பாரதியாரா? என்ன ஆளாளுக்கு பாரதியை இழுக்குறீங்க.?”
“டேய், என் பிரண்டு பாரதிடா..”
“அப்படியா? இவங்களா பாரு.” வெளிப்பக்கமிருந்து பாரதியின் கையை பற்றி அவன் அறையினுள் இழுத்து,
“ஆனா பாரதி அக்கா கையில் ஃபோனும் இல்லையே, எப்படி பேசுறே?”
அடக்கடவுளே. இவன் கிட்ட போய் மாட்டினேனா.?
“இப்ப சொல்லுக்கா, யார்கூட பேசிகிட்டு இருந்தே?” அவன் விடுவதாக இல்லை. திருடன் போல் முழிப்பது இப்போது மைதிலியின் முறையானது.
“அக்கா ஒழுங்கா விஷயத்தை சொல்லிடு, இல்லைன்னா இப்போவே அம்மாக்கிட்ட பேச வேண்டியிருக்கும்.”
‘அப்பாவை கூட சமாளிக்கலாம், அம்மாவா, ஆத்தாடி...’ என்றெண்ணியவள், “டேய் தம்பி அக்காவை நம்புடா..” என்றிட,
“உனக்கு ஒரு மணிநேரம் டைம் தரேன், யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வா...” என்றவன் அறையை விட்டு வெளியேற,
“ஏன் டி இப்படி சொல்லாம கொள்ளாம வந்து என்னை வம்பில் மாட்டி விட்ட? உன்னால் தான் எல்லாம்.”
'போச்சுடா மறுபடியும் நானா?’ நொந்து கொண்டாள் பாரதி.
“மைதிலி நான் என்ன டி பண்ணுவேன்? எங்க வீட்டில் என்ன செல் ஃபோனா இருக்கு?”
சற்று நேரம் அமைதியாயிருந்தனர் இருவரும்.
“மைதிலி எனக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம், அதை கேட்கத்தான் வந்தேன்.
அதை சொல்லிக் குடுத்திட்டேனா, நான் என் வழியை பார்த்திட்டு போயிட்டே இருப்பேன்...” என்று ஆரம்பித்த பாரதியிடம், “வீடே பத்திக்கிட்டு எரிந்தாலும், உனக்கு உன் பிரச்சனை. போடி எனக்கு இப்ப சொல்லித் தர மூட் இல்லை...” என்றாள் எரிச்சலாய்.
“ப்ளீஸ் மைதிலி எங்க அம்மாக்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி இங்க வந்திருக்கேன். கொஞ்சம் இரக்கம் காட்டு டி...”
“உன்னோடு பெரிய தொல்லை, சரி வா...” அதன்பின் படிப்பதில் மூழ்கினர் இருவரும்.
மாதவன் சொன்னது போல் சற்று நேரத்தில் வந்தான்.
“என்னக்கா யோசிச்சு முடிச்சிட்டியா? இப்ப ஒழுங்கா சொல்லு பார்போம்...”
பொல்லாதவன். இவர்களை விட ஐந்து வயது குறைவு என்றாலும் என்ன போடு போடுகிறான்? இவர்கள் உரையாடல் ஆரம்பித்ததும், எழுந்து சென்ற பாரதி அந்த அறைக் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு வந்தாள்.
“பேசாம மாதவன்கிட்ட விஷயத்தை சொல்லிடு மைதிலி...”
மைதிலி கண்ணைக் காட்டினாள் பாரதிக்கு, சொல்ல போவதில்லையென்று. ஆனாலும் அவள் கேட்கவில்லை. மைதிலியும் தனக்குத் தானே வாதாடி பார்த்தாள்.
“ஹேய் லூசு நான் ஒண்ணுமே இல்லைங்குறேன்.”
பாரதி மைதிலியின் பார்வையை தவிர்த்துவிட்டு, “டேய் தம்பி யார் கிட்டையும் சொல்லிடாதே என்ன? உங்க அக்கா வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கு.”
“பாரதி பேசாம இரு...” மைதிலி தடுக்க முயன்றதையும் மீறி, எல்லாவற்றையும் போட்டுடைத்தாள்.
மாதவனால் முதலில் நம்ப முடியவில்லை. ‘நம்ம அக்காவா...?’
சமீபமாய் போனில் அதிகமாய் உரையாடிக் கொண்டிருக்கிறாளே என்று சும்மேவேணும் அதட்டினால், விஷயம் இந்த அளவுக்கு முத்தி விட்டதா?
“அக்கா அப்பா நீ என்ன கேட்டாலும் செஞ்சிடுவார்னு நினைச்சிட்டியா?”
“...”
“இந்த விஷயத்தில் அப்படியெல்லாம் கற்பனை பண்ணாதே...” எனவும், “டேய் தம்பி என்னடா...” என்றனர் மைதிலி, பாரதி ஒன்றாக.
“ஏற்கனவே அவர் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டார். நீ இப்படி ஃ போனும் கையுமா இருக்குறதால, இப்ப வீட்டில் நடக்குற விஷயங்களை நீ கவனிக்காம விட்டிருக்கலாம்...”
மைதிலி வேகமாய் எழுந்து வந்தவள் தம்பி கைபற்றி, “டேய் அப்படி எல்லாம் எதுவும் நடந்திட கூடாது. அக்காவுக்கு நீதான் உதவி செய்யணும்...” என,
நீண்ட நேரம் இது விஷயமாகப் பேசிவிட்டு, பாரதி கடைசி பஸ்ஸையும் கோட்டை விட்டது தான் அன்று நடந்த ஒரே உருப்படியான காரியம்.
மைதிலி முகில் காதலை எப்படியாவது வெற்றிபெற வைத்துவிட வேண்டுமென்பதே மூவரின் எண்ணமாக இருந்தது.
முகில் மைதிலியிடம் சொல்லிக் கொண்டிருந்தது போல் ஜப்பான் பிராஜெக்ட்டில் தேர்வாகி, அங்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். பெற்றவர்களையும் மைதிலியையும் பார்த்து சொல்லிவிட்டுச் செல்ல தஞ்சாவூர் வந்தவனுக்கு, மனம் கனத்துப் போனது தான் மிச்சம். எல்லாம் மைதிலியால். அவளின் அழுகையால்.
“நீங்க கட்டாயம் போகணுமா முகில்?”
ஜெய்யை சரி கட்டி அவன் கடையில் இம்முறை அவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. வெளியில் ஷட்டர் போட்டிருந்ததால், கடை இவர்களுக்கான இடமாய் மாறியிருந்தது. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற ஐயமில்லாமல் சந்தித்திருந்தனர் அன்று.
இத்தனை நேரமும் ஆசையாய் பேசிக் கொண்டிருந்தவள், கிளம்பலாம் என்றதும் கண்ணீர் மடையைத் திறந்துவிட்டாள்.
“நான் கிளம்புறப்ப இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்காதா மைதிலி?” என்று அவன் கேட்டாலும் தொடர்ந்து விசும்பினாள்.
அவளைத் தலை நிமிர்த்திப் பார்த்தவன்,
“இன்னும் கொஞ்ச மாசம் பொறுத்துக்கோ, உன்னையும் என்னோட கூப்பிட்டு போறேன், என்ன...”
“எவ்வளோ நாள் ஆகும்?”
“என்ன மைதிலி, நான் என்ன தெரிஞ்சு வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்? உங்க அப்பாவை நினைச்சா வேற எனக்கு கிலியா இருக்கு... கொஞ்ச நாள் பொறுத்துக்கோ மா...”
“என் பக்கத்தை மட்டும் சொல்றீங்க? உங்க வீட்டில் எதுவும் பிரச்சனை வராதா முகில்?”
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
“அப்பா என் விருப்பத்துக்கு எதுவும் தடை சொல்ல மாட்டார், அம்மா தெரியலை. அதைப்பத்தி இப்ப யோசிக்க வேண்டாமே.”
அவன் சொன்னதும், தோளில் சாய்ந்தபடியிருந்தவள், அவன் முகம் நோக்கி,
“உங்களை நம்பிதான் இருக்கேன் முகில்... பத்திரமா போயிட்டு வாங்க... நான் கிளம்பட்டா?” என்று எழுந்துவிட்டவளின் பின்னோடு எழுந்தவன், அவள் கைப்பற்றியபடி,
“என்னம்மா வந்தே, பேசின, போய்கிட்டே இருக்க? எனக்கு எதுவும் கிடையாதா?” என்றான்..
அவன் கேட்ட தோணியில் சற்று மிரண்டுவிட்டு, பின் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்... நான் வரேன்...” என்று நகர்ந்தவளின் கைபற்றி இழுத்தவன்,
அவள் சுதாரிக்கும் முன் தான் நினைத்த காரியத்தை முடித்தான் அவள் அதரங்களில். சற்று நேரம் திமிறியவள், ஒப்புக் கொடுக்க, இவன் தொடர்ந்தான். நினைவுக்கு வந்தவள்,
“விடுங்க முகில்...” என்று விலக முயல, அவளை மேலும் அணைத்தவன்,
“என்ன ரொம்ப தான் பிகு பண்ணிக்கிற? ஒரே ஒரு முத்தம், அதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் தேவையா?” என்றபடி அவளை மறுபடி அணைக்க,
“ஓ அப்படியா? வந்து எங்க அப்பாக்கிட்ட பேசுங்க, அப்புறம் மேற்படி விஷயத்தைப் பார்க்கலாம்.”
“அட ரொம்ப தைரியமா பேசுறே. அப்போ இன்னும் ஒன்னு கொடுத்திட்டு போ..” என்று நெருங்கியவனிடம் ஒருவழியாய் தப்பித்து வந்தாள்.
முகிலுக்கு அவளைச் சிரித்த முகமாய் அனுப்பி வைத்தது சந்தோஷமாக இருந்தது.
அவனும் கிளம்பி ஐந்தாறு மாதங்கள் முடிந்துவிட்டன. மைதிலியும் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்க ஆரம்பித்திருந்தாள்.
மைதிலியின் தாய் லட்சுமியின் பலனால் கல்யாண பேச்சு அந்த வீட்டில் ஆரம்பித்துவிட்டிருந்தது. தன் மனக்குறையைக் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“மைதிலி வயசு பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தையே வந்தாச்சு. நீங்கதான் அவ பேச்சை கேட்டு இத்தனை வருஷம் படிக்க வச்சிட்டீங்க.”
குணசீலன் இதை முதல் தடவை கேட்கவில்லை.
“சரியான நேரம் வர வேணாமா?”
“நாம முயற்சி பண்ணா தான் நேரமும் வரும்”
“சரி, அதான் அந்த இரண்டு ஜாதகம் பார்த்து வச்சிருக்கோமே அதில் சரி பண்ணப் பார்ப்போம். நம்ம பொண்ணுக்கு முதலில் பிடிக்கணும், அதையும் பார்த்துக்கோ...”
“அவ சின்ன பொண்ணு, அவளுக்கு என்ன தெரியும்? நாம தான் நல்லதை எடுத்து சொல்லணும்.”
யோசித்தபடியிருந்தவரிடம் மேலும், “ஏங்க, அந்த திருச்சி பையன் ஜாதகமும் நல்ல பொருத்தம் தானே, பையனும் நல்லாயிருக்கான், நல்ல வேலையும் கூட.” எனவும், “சரி சரி அதையே பார்ப்போம்” என்றார் குணசீலனும்.
வெளியில் தலைவர் என்றாலும், வீட்டில் பொண்டாட்டியிடம் அடங்கித் தானே போக வேண்டும்.
“அவளை கூப்பிட்டு இப்பவே கேளுங்க, மகாராணி வந்து அவ முடிவையும் சொல்லட்டும்.”
அதற்கேற்ப மாதவனை அழைத்தவர், “மைதிலியை நான் கூப்பிட்டேன்னு சொல்லு.. ”என்றார்.
படிக்கிறேன் பேர்வழி என்று இத்தனை நேரமும் அவர்கள் பேச்சை கவனித்திருந்தவன், தமக்கையை அழைக்கச் செல்ல அவள் எப்போதும்போல் இப்போதும் ஃபோனில் மூழ்கியிருந்தாள்.
“மாமா வேலை பார்க்கவே மாட்டாரா அக்கா...?” இவனைப் பார்த்ததும் ஃபோனை வைத்த தமக்கையிடம் இவன் கேட்க,
“டேய் அவருக்கு நம்மை விட மூன்றரை மணி நேரம் அதிகம், ஆபிஸ் முடிச்சு இப்ப வீட்டில் தான் இருக்கார். உன்னை மாதிரியே எல்லாரையும் நினைக்கக் கூடாது தம்பி...”
“அப்பா எதுக்கு கூப்பிடுறாரு தெரியுமா...?” என்று அனைத்தையும் சொல்லி, அவளை அலர்ட் செய்தபடி தந்தையிடம் அவன் அழைத்து வர, அங்கு ஆரம்பமானது மைதிலியின் தலைவலி.
குணசீலன் அவளிடம், “மைதிலி அம்மா உனக்குச் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு சொல்றா. இந்தப் பையன் ஃபோட்டோ பாரு உனக்குப் பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்று,
அவர் சொன்னதைக் கேட்டு அதை வாங்கிப் பார்த்தவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டவில்லை.
அவளயே பார்த்துக் கொண்டிருந்த அவள் தாய், “என்னடி, பையன் நல்லாயிருக்கானா? வாயை நிறந்து ஏதாவது சொல்லேன், அப்பா கேட்குறாங்க பார்...” என, போட்டோவை அன்னையிடம் திருப்பி தந்தவள்,
“அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ப்பா...” என்றாள்..
பெற்றவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“இதுக்கு மேலயும் உன்னை படிக்க வைக்கும் எண்ணம் எனக்கில்லை ம்மா. எதுனாலும் இனி கல்யாணம் முடிச்சிட்டு செய்..”
“இல்லப்பா, படிச்சது எனக்கும் போதும்...” என்றவள், அன்னையை ஓரக் கண்ணால் பார்த்தபடி, “அப்பா உங்கக்கிட்ட தனியா பேசணும்” என்றதுமே, மாதவனுக்கு மனதுக்குள் அலாரம் அடித்தது.
‘அக்கா இப்பவே சொல்ல போறியா? ஐயோ.’
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top