• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

konjam vanjam kondenadi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் ப்ரண்ட்ஸ்,
இந்த கதை என் எழுத்து பாணிக்கு கொஞ்சம் புதுசுதான். விறுவிறுனு த்ரில்லர் கொடுத்தே பழகியாச்சு. இது கொஞ்சம் மைல்ட்டான கதைதான். பார்ப்போம்..

எல்லாம் வாசகர்களாகிய உங்கள் ரசனையை பொறுத்தது.

**********************************************************************
1. பொறாமை தீ


அந்தச் சமையலறையே ஓரே அமளிதுமளி பட்டுக் கொண்டிருந்தது.

கலகலவெனப் பாத்திரங்கள் அவ்வப்போது உருளும் சத்தம் கேட்டு, வெளியே டைனிங் டேபிளில் மிரட்சியோடு அமர்ந்திருந்த ரஞ்சன், மோகன் இருவரையும் கலக்கமடைய செய்திருந்தது.

"அப்படி என்னதான் ண்ணா பண்ணிட்டிருக்க ?" மோகன் கொஞ்சம் அஞ்சிய தோரணையில் வினவ,

"தெரியலடா... ஏதோ சைன்னிஸ் டிஷ்னு சொன்னாளே... குங் ப்ஃவூ பாண்டான்னு ஏதோ சொல்லிட்டு போனேளே"

"யோவ் அண்ணா... அது பாண்டா லாம் இல்ல... குங் சவ்னு ஏதோ" மோகன் யோசித்த மேனிக்கு மேலே பார்க்க,

"நோ லா... அது குங் பஃவ் சிக்கன்" என்று சொல்லியபடி வெளியே வந்து நின்றாள் ஷிவானி.

அவள் கரத்தில் அவள் சொன்ன பெயருடைய அந்த உணவுப் பண்டம் இருக்க, மோகனும் ரஞ்சனும் அதனைப் பார்த்துத் தங்கள் பார்வைகளை அகல விரித்தனர். வாயையும் சேர்த்தே !

அந்த உணவைப் பார்வையாலயும் வாசனையாலயுமே பாதி விழுங்கிவிட்டான் மோகன்.

அவள் அதனை டேபிள் மீது வைத்த மாத்திரத்தில் மோகன் சாப்பிடும் ஆவலில் அதனைத் தன்புறம் இழுக்க,

"இரு மோக்... இன்னும் சூப் ரெடியாகல... அதான் பஃர்ஸ்ட்" என்று சொல்லி அவனிடமிருந்து அந்த உணவைத் தள்ளிவைக்க, வாயில் ஊறிய உமிழ் நீரை விழுங்கியபடி,

"என்ன ஷிவா ?" என்று அலுத்துக் கொண்டான்.

"இன்னும் பைஃவ் மினிட்ஸ்தான் லா... ரெடியாயிடும்" என்றவள் மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொள்ள,

"ம்ம்க்கும்... இப்படிதான் அஞ்சு மணிநேரமா சொல்லிட்டிரூக்கா"என்று மோகன் அலுத்துக் கொண்டுவிட்டு, அவள் வருகிறாளா என எட்டி பார்த்தவன் மெல்ல அந்த குங் பஃவ் சிக்கனை தன்னருகில் இழுக்கவும்,

"ஷிவான்ன்ன்னினி" என்று ராகமாய் ரஞ்சன் அழைக்க,

"யா கம்மிங் கம்மிங்" என்றவள் குரல் கொடுத்ததுதான் தாமதம்.

மோகன் தன் கரத்தைச் சடாரென மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு தன் தமையனை முறைத்தபடி, "யூ டூ ப்ரூட்டஸ்" என்றான்.

"அவதான் வரன்னு சொன்னால... அதுக்குள்ள என்ன அவசரம்" என்க,

"அட போடாங்... அவ எப்போ வந்து... நான் எப்போ சாப்பிட்டு" சலிப்போடு மோகன் சமையலறைக்குள் எட்டிப் பார்க்க உள்ளிருந்து வாசனை மட்டும்தான் வந்தது.

அவள் வரக் காணோம்.

அவர்கள் இருவரும் இப்போது இருப்பது மலேசியாவில் உள்ள செலங்கூர் மாநிலத்தில் இருக்கும் சுபங்ஜெயா.

அங்கிருக்கும் வீடுகள் யாவும் கண்ணாடி மாளிகைகள் போல பளபளக்க, அது வசதியானவர்கள் வசிப்பிடம் என்பது பார்வையாலேயே விளங்கிற்று.

அவர்கள் இருக்கும் ஷிவானி வீடும் அத்தகைய வசதி படைத்தவர்களின் குடியிருப்புதான். வீட்டின் பொருட்கள் எல்லாம் ஆடம்பரமாகவும் அதிநவீனமாகவும் காட்சியளிக்க, சுற்றிப் பார்த்தாலே ஒரு நாள் முடிந்துவிடும் போல.

அத்தனை விசாலமாய் இருக்க, அதற்கேற்றாற் போல் அங்கு அத்தனை வேலையாட்கள் இருந்தனர்.

ஆனால் ஷிவானி அவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டுத் தானே சமைக்கிறாள் எனில் அதற்குக் காரணம் சமையல் கலை அவளுக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று.

அதுதான் அவள் படிக்கும் படிப்பும் கூட. எல்லா வகையான சமையல்களும் நன்கறிந்தவள்.

அதுவும் சைன்னிஸ் குஸைன் அவளுக்கு ரொம்பவும் விருப்பமான ஒன்று.

அதனால்தான் சென்னையிலிருந்து வந்திருக்கும் தன் அத்தை மகன்கள் இருவரையும் சோதனை எலியாய் வைத்துத் தன் சாதனையைக் காட்ட முனைந்து கொண்டிருந்தாள்.

ஷிவானியின் தந்தை சபரி மற்றும் தாய் வேதவள்ளி.

சபரி பங்குசந்தை தொழிலில் பெரும் வல்லமை படைத்தவர். எந்தப் பங்குகளை எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் எனத் துல்லியமாய் கணக்கிட்டுச் சொல்வது அவருடைய சிறப்பு. அதுவே மலேசியாவில் அவரின் இத்தகைய வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் காரணமும் கூட.

பிழைக்க வந்த இடத்தில் பெரும் தொழில் ஜாம்பவானாக மாறுவதெல்லாம் சாதாரணமான விஷயமா என்ன ?

மோகனும் ரஞ்சனும் சபரியின் சொந்த அக்கா நளினியின் மகன்கள். நளினியின் கணவர் அரவிந்தன் சென்னையில் உள்ள பெரிய நிறுவனத்திற்குச் சட்ட ஆலோசகராய் இருக்கிறார்.

கிட்டதட்ட சபரி தன் தமக்கையை விட்டுத் தன் நண்பனின் உதவியோடு
மலேசியாவிற்கு வந்து பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன.

தன் திறமையால் பேரும் புகழும் ஈட்டியவர் நாளடைவில் அங்கேயே நிரந்தரமாய் குடிபெயர்ந்துவிட்டார்.

அவ்வப்போது இவர்கள் மலேசியாவிற்கு வருவதும் சபரி குடும்பமும் அத்தி பூத்தது போலச் சென்னையை எட்டிப் பார்த்து விட்டு வருவதும் நடக்கும்.

அந்த டைனிங் டேபிளே நிறையும் அளவுக்காய் வாயில் நுழையாத மாதிரியான பெயர்களோடு வகைவகையாய் பன்னாட்டு உணவுப் பண்டங்களை எடுத்து வந்து வைத்தாள்.

ஷிவானி அவற்றை எல்லாம் காண்பித்து, "இது மலேசியன் பேஃவரட் புஃட் நாஸி லெமாக்... இதெல்லாம் சைன்னிஸ்... ஸ்டீம் போட்... சஃவ் மெயின்... " என்றவள் சொல்லிக் கொண்டே போக,

மோகன் வயிற்றை பிடித்துக் கொண்டு, "அய்யோ சிவா போதும்... பசிக்குது... எனக்கு பேரெல்லாம் வேணாம்... சோறுதான் வேணும்" என்று வாய்திறந்து வெளிப்படையாய் சொல்லிவிட,

அவள் சிரித்துவிட்டு, "இதோ ஓன் மினிட்" என்று மீண்டும் உள்ளே ஓடினாள்.

"டே மோகன்... கொஞ்சமாச்சும் டீஸன்ட்டா நடந்துக்கோ" ரஞ்சன் அவன் தோளைத் தட்டி சொல்ல,

"அட போங்க ப்பா சாப்பிடல என்ன டீஸ்ன்ஸி ? பசி வந்தா பத்தும் பறந்திரும்... இன்னும் கொஞ்ச விட்டா நான் சுருண்டு விழுந்திருவேன் பார்த்துக்கோ" என்றவன் புலம்பித் தீர்க்கும் போது ஷிவானி வெளியே வந்தாள்.

ஏதோ ஒரு வித்தியாசமான பெயரைச் சொல்லி அவள் எடுத்து வந்த சூப்பை அவர்கள் முன்னிலையில் வைக்க,

காத்திருந்து காத்திருந்து மோகனின் பசியெல்லாம் எப்போதோ காற்றோடு பறந்து போயிருக்க, சூப்பை பருகினாலாவது பசி மீண்டும் பிரவேசம் செய்கிறதா என எண்ணி அவசர அவசரமாய் தன் கரங்களைச் சூடேற்றி கொண்டு அந்த சூப்பை ஸ்பூனில் பருக

ஸ்தம்பித்துப் போய்விட்டான். உலகம் இரண்டாய் பிளவுற்றது.

அவன் நாவிற்கும் தொண்டைக்கும் பெரும் போர் மூள ஆரம்பித்தது.

நாக்கு அதை உள்ளே தள்ளப் பார்க்க, அவன் தொண்டை குழி அதனை வெளியே தள்ள முயன்று கொண்டிருந்தது.

ரஞ்சனோ புன்னகையோடு, "எக்ஸ்லன்ட் சிவா" என்று பாராட்ட மோகன் வாயை திறவ முடியாமல், "ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்" என்று ஊமைப் பாஷையில் அவளை மெச்சினான்.

வேறுவழி. வருங்கால மனைவியாகப் போகிறவளாயிற்றே. பிடிக்கவில்லை எனினும் பாராட்டிவிட வேண்டியதுதான்.

"ரியலி" என்றவள் ஆனந்தத்தில் துள்ளி குதிக்காத குறை. அவள் முகத்தில் அத்தனை பரவசம்.

"தேங்க்ஸ் லா" என்று சொன்னவள் இன்னும் ஆர்வமாய் அவள் சமைத்து வைத்த உணவுகளைத் தட்டில் பரிமாற,

மோகன் பரிதாபமாய் ரஞ்சனை பார்க்க, அவன் சமிஞ்சையால் சாப்பிடச் சொல்லி மிரட்டினான்.

ஷிவானி அவர்களைப் பார்த்துப் புன்னகையித்து, "என்ன லா... பார்த்துட்டே இருக்கீங்க" என்றவள் கேட்க,

"இதோ சாப்பிடிறோம்" என்று ரஞ்சன் உரைக்கும்போது அவளின் கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்க,

"ஜஸ்ட் மினிட்" என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

மோகன் வேகமாய் எழுந்து வாஷ்பேஷினில் அந்த சூப்பை உமிழ்ந்துவிட்டு, "என்ன கன்றாவி இது ?!" என்க,

"யே அதான் சொன்னா இல்ல... போர்க்னு"

"உவேக்... என்னால முடியாதுப்பா"

"டே இதெல்லாம் சைனிஸ் டிஷ் டா அப்படிதான் இருக்கும்" என்று ரஞ்சன் தளராமல் அந்த சூப்பை குடித்து முடித்தான்.

அவனுக்கு எதையும் தாங்கும் இதயம் போல. ஆனால் மோகனால் முடியவில்லையே.

"ஒழுங்கா வந்து சாப்பிடிற" என்று ரஞ்சன் மிரட்டல் தொனியில் தம்பியை அழைக்க,

அவன் அந்த உணவுப் பண்டங்களை எல்லாம் மலைப்பாய் பார்த்தபடி, "இதையெல்லாம் சாப்பிட்டா சேகர் செத்திருவான்" என்றான்.

"யாரு லா சேகர்?" என்று கேட்டபடி ஷிவானி அவர்கள் உரையாடலுக்குள் நுழைய,

ரஞ்சன் உடனே, "எங்க பக்கத்து வீட்டில இருக்கிற டாக் நேம்" என்று சொல்லிச் சிரிக்க, மோகன் அவனை முறைப்பாய் பார்த்தான்.

"இருங்க லா... என் ப்ரண்ட் வந்திருக்கான்... உங்களுக்கு அவனை இன்ட்ரோ பன்றேன்" என்று சொன்னவள் அவசரமாய் வாசல் புறம் சென்று

அப்படியே மைதா மாவில் பிசைந்து வைத்த சைனா மேட் ஆடவனோடு வந்து நின்றாள்.

அவனோ அவளோடு அத்தனை நெருக்கமாய் உரசிக் கொண்டு வர, மோகனுக்கு பொறாமை தீ உள்ளூர படர்ந்து கொண்டிருந்தது.

ஷிவானி.
பேரழகி என்று விவரிக்க முடியாவிட்டாலும் அவள் அழகுதான். அதுவும் அவளின் அந்த மாநிறமே பார்ப்பவர்களை வசீகரிக்க வைத்திடும்.

மலேசியாவிலேயே வசித்தாலும் அவள் முகமும் நிறமும் அவளை அக்மார்க் தமிழ் பெண் என்பதைக் காட்டி கொடுத்துவிட, அவளின் ஆடைகள்தாம் அவளை வேற்று நாட்டுப் பெண்ணாக காண்பித்துக் கொண்டிருந்தது.

ஸ்லீல்வ்லஸ் டைட் டாப்ஸும்... முட்டிக்கு மேல் தெரியும் ஷாட்ஸ் என அவள் உடை சற்று விரசமாய் இருந்தாலும் அவளின் ஒல்லியான உயரமான தேகத்திற்கு அவை ஒன்றும் அந்தளவுக்கு
ஆபாசமாய் இருக்கவில்லை.

அவையெல்லாம் தாண்டி அவளின் குழந்தைத்தனமான பேச்சிலும் சிரிப்பிலும் அவளிடம் பருவ பெண் என்ற சாயலே படரவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் ஷிவானியிடம் மோகனுக்கு என்ன பிடித்தெல்லாம் தெரியாது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற அவா.

ஏனெனில் ரஞ்சன் அவளைவிட ஐந்து வயது பெரியவன். மோகனுக்குத்தான் அவளுடன் ஓத்த வயது. அதுமட்டுமின்றி ரஞ்சனின் திருமணம் ஆறுமாதங்கள் முன்னர் நடந்தேறியபோது,

அடுத்து ஷிவானி மோகன் திருமணம் என உறவினர்கள் தெரியாமல் தவறவிட்ட வார்த்தை அவனின் ஆசை தீயை அதீதமாய் ஏற்றிவிட்டது.

அதனால்தான் அந்த சைனாக்காரன் அவளருகில் அத்தனை நெருக்கமாய் வர அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன் தம்பியின் முகம் சுணங்கி போவதை ரஞ்சனும் ஒருவாறு கவனிக்க அவள் அப்போது அவர்கள் இருவரிடமும்,

"ஹீ இஸ் சியாங் கெவின்... என்னோட கிளாஸ் மேட்... அன் மை க்ளோஸ் ப்ரண்ட் டூ" என்று அவன் தோள்மீது கைப்போட்டுச் சொல்ல, மோகன் மனதில் பொறாமை தீ இன்னும் ஏகபோகமாய் காட்டு தீக்கணக்காய் பரவிக் கொண்டிருந்தது.

அவள் சியாங் கெவினிடம், "திஸ் இஸ் மோகன்... ரஞ்சன்... மை ரிலேட்டிவ்ஸ்... பஃரம் இன்டியா" என்றவள் அறிமுகம் செய்ய,

அந்த சைனாக்காரனும் அவர்களுக்கு ஆர்வமாய் கைகுலுக்கினான்.

கெவினின் பார்வை டைனிங் டேபிளில் நிறைந்திருந்த உணவு பண்டங்களைப் பார்த்து, "வாவ்வ்வ்வ்... ஷிவு... யூ மேட் ஆல் திஸ்" என்று வியப்புறக் கேட்க,

"எஸ் கெவின்... கம்... ஜாயின் வித் ஹஸ்" என்று சொல்லி அவனையும் அவர்களோடு உணவு உண்ண அமர வைத்தாள்.

அவள் மூவருக்கும் பரிமாற அவர்கள் அந்த உணவுகளைச் சுவை பார்த்தனர்.

கெவின் மட்டும் வாய் ஓயாமல் அவள் சமையலை பாராட்டித் தள்ளிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவள் கரத்தை வேறு பற்றி சைன்னா பாஷையில் ஏதோ சொல்ல அவளோ அவன் தோளில் தட்டி வெட்கப்பட்டு கொண்டிருந்தாள்.

அது ஏதோ அவர்களுக்கு மட்டும் புரியும் ரகசிய சம்பாஷணை போல.


ரஞ்சன் அப்போது மோகன் காதோடு, "நீயும் ஏதாவது பாராட்டேன் டா... பாரு அந்த சைனா மேட் எப்படி அவகிட்ட ஸ்கோர் பண்றான்" என்க,

அதே கவலைதான் மோகனுக்கும் அப்போது.

ஆனால் அவன் பாராட்டும் நிலைமையில் இல்லை. அவன் வாயைத் திறக்கப் போய் அவன் சிரமப்பட்டு உள்ளே தள்ளிய உணவெல்லாம் வெளியே வந்து விழுந்துவிட்டால்...

அறை வேக்காடாய் மோகனின் வயிற்றுக்குள் சென்ற உணவெல்லாம் உள்ளே சென்று வெந்து தீய்ந்து கொண்டிருந்தது.

அவனின் கவலைக்கு ஏற்றாற் போலதான் கெவினும் ஷிவானியும் அத்தனை நெருக்கமாய் பேசிக் கொண்டிருக்க,

ரஞ்சன் அப்போது மோகனிடம்,

"ஏழாம் அறிவு படத்தில வந்த டோங் லீ மாறியே இருக்கான் இல்லடா இவன்" என்று மெலிதாய் மோகனின் காதோடு உரைக்க,

"ரொம்ப முக்கியமாக்கும்" மோகன் கடுப்பானான்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ரஞ்சன் புன்னகை ததும்ப, "இந்த டோங்க் லீதான் உனக்கு வில்லன் போல!" என்று சொல்லி வாய்க்குள் சிரிக்க அதற்கு மேல் முடியாமல் எழுந்து கை அலம்பி கொண்டான் மோகன்.

"என்ன மோக்... போதுமா... இன்னும் நாஸி லெமாக்... இருக்கே" என்றவள் சொல்ல,

அவள் அருகாமையில் மெலிதாக "எனக்கு போதும்... நீ உன் பிரண்டு கியாங் செவின்... நல்லா கவனி" என்று கோபம் கலந்து புன்னகையோடு உரைக்கவும்,

"மோக்... அது கியாங் செவின் இல்ல... சியாங் கெவின்" என்றாள்.

அவன் வேண்டா வெறுப்பாய் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகல, அவனின் எண்ணம் என்னவென்று அவளால் யூகிக்க முடியவில்லை.

ஆனால் ரஞ்சன் தன் தம்பியின் வேதனையை புரிந்து சில நிமிடங்களில் அவன் பின்னோடு வந்து நின்று அவன் தோளை தொட்டு,

"அந்த சைனா மேட் ஜஸ்ட் அவளோட ப்ரண்டு டா" என்றுரைக்க, அப்படி ஒன்றும் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை.

அவனோடு அவள் இயைந்து கொண்டு நிற்பதை பார்த்தால் அது வெறும் நட்பு ரீதியான உறவென்று சொல்வதற்கில்லை.

சிறு வயதிலிருந்து ஷிவானிதான் அவனுக்கென்று பேசி வைத்திருக்க, புதிதாய் எங்கிருந்து முளைத்தான் இந்த சைனாக்காரன் என்று உள்ளூர அவன் பொறுமி கொண்டிருக்க,

மோகன் மனதில் எரியும் தீ கட்டுபடுத்த முடியாத நிலையில் வளர்ந்து கொண்டே இருந்தது.

அதுவே இனி ஷிவானி வாழ்வில் நடைப்பெற போகும் விபரிதங்களுக்கு மூலகாரணியாக அமைய போகிறது.

உண்மையிலேயே மோகனுக்கு வில்லனாய் வர போகிறவன் கெவின் அல்லவே!

அவன் தமிழ் நாட்டில் நெல்லை நகரத்தில் அல்லவா வசித்து வருகிறான். சற்றும் அவளின் பழக்கவழக்கங்களுக்கு சம்பந்தமில்லாமல்.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அசத்தலான அறிமுகங்கள்
இன்னும் ஹீரோ வரலையா?

மிகப் பிடித்தது அத்தியாயம்.
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மோனி சூப்பர்டா தலைப்புக்கு ஏற்ற கதைதான் மோனுக்கு வில்லன் சைனிஸ் சப்பை மூக்கன்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Akka... Sirichi sirichi mudiyala... But last la ninuruchi... Paravalla ennakum vaayila nulaiyaatha per thaan mandaiyil yeralla... You rock...

But oru question ka next update yeppo nu keka maatean neengalae thaanga atha yeppo tharuvinga weekly once aa monthly once aa sollirunga lean
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top