• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
காதலும் வஞ்சமும்


மெஸ்ஸிற்குள் தேடலாய் பார்வையை சுழற்றி கொண்டே நுழைந்தாள் ஷிவானி.

அவள் தேடியவனின் முகம் தென்படாமல் போக, மெஸ் கல்லாவில் அமர்ந்திருந்த சுப்புவின் புறம் பார்வையை திருப்ப அவன் அத்தனை நேரமாக அவளையேதான் நோட்டம்விட்டு கொண்டிருந்தான்.

அன்று இவளை பார்த்துதானே குரு புலம்பி கொண்டிருந்தான்.

எந்த பெண்ணையும் நிமிர்ந்துபார்த்திராத தன் நண்பனுக்கு அப்படி என்ன இவளிடம் பிடித்து போனதென்று யோசனை அவனுக்கு.

"ஹெலோ" என்றவள் அவன் முகத்திற்கு நேராய் கரத்தை அசைக்கவும் யோசனையில் இருந்து மீண்டவன்,

"சொல்லுங்க என்ன விஷயம்?" என்றான்.

"நான் உங்க மெஸ் ஓனரை பார்க்கனும்" என்க, அவளை ஆச்சர்யமாய் பார்த்தான் சுப்பு.

அவளே மேலும், "அவரு இப்போ இங்கே இருக்காரா?" என்றவள் அடுத்த கேள்வி எழுப்ப,

'எதுக்கு இந்த புள்ள அவனை தேடி வந்திருக்கு" என்று யோசித்தவன்,

அவளிடம், "எதுக்கு அவரை நீங்க பார்க்கனும்?" என்று கேட்க, ஷிவானி பதலளிப்பதற்கு முன்னதாக பின்னோடு வந்த குரு பதிலளித்தான்.

"நீ என்னடா கூறுகெட்டத்தனமா கேள்வி கேட்டுட்டிருக்க... அவக ஆசையாய் இந்த மாமனை பார்க்க வந்திருக்ககாக" என்க, சுப்பு புரியாமல் விழித்தான்.

ஷிவானி அவன் குரல் கேட்டு திரும்பி பார்க்க, அவனோ வேட்டிசட்டையில் மிடுக்காக நின்று கொண்டு

சுப்புவின் புறம் திரும்பி, "இவங்க மலேசியாவில இருக்க என் பெரிய அக்கா மவ ஷிவானி... அதான் அன்னைக்கே எனக்கு எங்கனயோ பார்த்த முகமா இருக்கேன்னு தோணுச்சுன்னு சொன்னேன் இல்ல" என்றவன் தன் நண்பனிடம் பேசி கொண்டிருந்தாலும்,

அவன் கல்மிஷமான பார்வை ஷிவானியைதான் அளவெடுத்து கொண்டிருந்தது.

"என்ன குரு சொல்லுத... இவைங்களும் உங்க அக்கா மவளா?" என்று ஏக்கமாய் அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு குருவிடம் கேட்க, அவன் கவனமெல்லாம் அங்கில்லை.

அவளிடம்தான் லயித்திருந்தது. அந்த பார்வையின் தாக்கம் அவளை முதல்முறையை தன் பெண்மையின் முதிர்ச்சியை அவளுக்கே சுட்டிக்காட்டியிருக்க, அவசரமாய் தன் உடையை சரிபார்த்து கொண்டிருந்தாள்.

அபூர்வமாகவே அன்று அவள் சுடிதார்தான் அணிந்திருக்க அப்படியென்ன அவன் பார்வையை ஈர்க்கிறதென்று புரியாமல் யோசித்தவள்,

சட்டென்று தான் அணிந்திருந்த துப்பட்டாவை வேகமாக கழுத்திற்கு கீழே இழுத்துவிட்டாள்.

அவளின் அந்த செய்கையை பார்த்து ஏக்கமாய் பெருமூச்சுவிட அவளுக்கு கோபம் பொங்கி கொண்டுவந்தது.

அதே நேரம் குருவின் உள்மனம்,

'ஏன்டா குரு... அக்கா மவளா இருந்தாலும் இப்படியால பார்த்து வைப்ப' என்று கரித்து கொட்ட,

சுப்புவின் மனக்குமறலோ வேறுவிதமாய் இருந்தது.

'அவஅவனுக்கு உடம்பில மச்சம் இருக்கும்... இவனுக்கு மச்சத்திலயேதான் உடம்பு இருக்கு போல'

அந்த சமயம் குரு தன் நண்பனின் எண்ணத்தை துல்லியமாய் கணித்தவன் போல,

"ரொம்ப புகையாதல சோலியை பாரும்" என்று சொல்லிவிட்டு ஷிவானியின் புறம் அவன் திரும்ப,

அவளோ அந்த நொடி ஏன் இங்கே வந்து தொலைத்தோம் என்று படபடத்து கொண்டிருந்தாள்.

அதனை அவள் பார்வை அப்பட்டமாய் உணர்த்தவும் செய்வறியாது திகைத்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன்,

"இம்புட்டு வருஷமாச்சு... எங்களையெல்லாம் உனக்கு பார்க்க வர... இல்ல?!" என்றவன் குத்தலாய் கேட்டான்.

'நாம இவன்கிட்ட கேள்வி கேட்கலாம்னு பார்த்தா இவன் நம்மலயே கேள்வி கேட்கிறான்' என்றவள் குழப்பமாய் யோசித்திருக்க,

குரு அப்போது, "நான் ஒரு கூறுகெட்டவன்... உன்னை நிற்க வைச்சே பேசிட்டிருக்கேன்... பாரு" என்றவன்,

உடனடியாக அவள் கரத்தை பிடித்து,"சரி வா உள்ளர போலாம்" என்றவன் படபடவென இழுத்து கொண்டு செல்ல,

"என் கையை விடுங்க" என்றவள் சொல்வதை காதில் வாங்காமல் தன் அலுவலக அறைக்குள் அவளை அழைத்து வந்து நிறுத்னான்.

அத்தோடு அவள் கரத்தையும் அவன் விடுவிக்க, அதிர்ச்சியாய் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தவளின் முகம் வெளிறி போனது.

பதட்டத்தோடு அவனை நோக்கியவள், "என்ன நினைச்சிட்டிருக்கீங்க?... எதுக்கு இப்போ என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க?" என்றவள் வினவ,

அவன் அலட்டிக் கொள்ளாமல் மேஜை மீது சாய்வாய் அமர்ந்து கொண்டு

"பேசதாம்ல... நீ என்ன நினைச்சிக்கிட்டவ?" என்று புருவத்தை ஏற்றி அவன் கேட்ட தோரணையில் அவளுக்கு எரிச்சலானது.

"இந்த வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காதீங்க மிஸ்டர்" என்றவள் கோபம் தெறிக்க வார்த்தைகளை விட,

"மிஸ்டர் கிஸ்டர்னே... பல்லை தட்டி கையில கொடுத்திருவேன்... மாமான்னு கூப்பிடிறி" என்றவன் வெகுண்டெழுந்தான்

,"கூப்பிட முடியாது... எங்க என் பல்லை தட்டி கையில கொடுங்க பார்போம்" என்றவள் சொல்லிக் கொண்டே அசராமல் அவன் முன்னே வந்து நின்றாள்.

குருவிற்கு அந்த நொடி கோபம் போய் சிரிப்பு வந்தது. அவனைஅவள் குழப்பமுற பார்க்க அவன் புன்னகைததும்ப,

"அட்றா சக்கை... எங்கயோ வளர்ந்தாலும் உன் பேச்சிலயும் தைரியத்திலயும் அப்படியே நம்மூர் வாடை அடிக்குதுடீ" என்றவன் பெருமிதமாய் பார்த்தான்.

அவள் மௌனமாய் பார்க்க,

"அது போகட்டும்... நீ என்ன சாப்பிடுவேன்னு சொல்லு... எடுத்துட்டு வர சொல்லுதேன்" என்றவன் விசாரிக்க

"இத பாருங்க... நான் ஒண்ணும் சாப்பிட வரல... உங்க கூட சண்டை போட வந்திருக்கேன்" என்றாள்.

மீண்டும் சிரிப்புதான் வந்தது அவனுக்கு.

சிரித்து கொண்டே, "சண்டைதானே... போடு... யார் வேணான்னு சொன்னாக... ஆனா சாப்பிட்டுட்டு போடு... இல்ல சாப்பாட்டுக்கிட்டே போடு...நம்மூர் அல்வா எடுத்துட்டு வர்ற சொல்லுதேன்? ஸ்வீட்டா சாப்பிட்டிக்கிட்டே நல்லா காரமா சண்டை போடுக" என்றவன் சொல்லிவிட்டு

அங்கிருந்து தொலைப்பேசியை எடுத்து, "ஒரு கப்ல சூடா அல்வா எடுத்துட்டு வாங்க" என்று சொல்ல,

அவள் அளவில்லாத கோபத்தோடு,

"உங்க ஸ்வீட்டெல்லாம் எனக்கு ஒண்ணும் வேண்டாம் லா... வீடு தேடிவந்த எங்க அம்மா அப்பாவை ஏன் இன்ஸ்ல்ட் பண்ணிங்க... அதுக்கு பதில் சொல்லுங்க" என்க, அவன் பார்வையிலும் கோபம் தொற்றி கொண்டது.

"யாருலே இன்ஸல்ட் பன்னது... நானா... இல்ல உங்க அப்பாரா?" என்றவன் கேட்க,

"எங்க அப்பாவை பத்தி ஒருவார்த்தை... ஒருவார்த்தை தப்பா பேசினாலும் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்றவள் விரல் நீட்டி எச்சரித்தாள்.

அந்த நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், "உனக்கு மட்டும்தான் உங்க அப்பாரு மேல பாசமோ... ஏன் எங்களுக்கெல்லாம் அது இருக்க கூடாதோ? பெத்த மவளை பதினேழு பதினெட்டு வருஷமா பார்க்காதிருக்கிறதோடு வலியென்னன்னு தெரியுமால உனக்கு?!" என்றவன் கடைசி வரியை அதீத கோபத்தோடு குரலை உயர்த்தி கேட்க வும் அவள் அதிர்ச்சியில் நின்றாள்.

அவனே மேலும்,

"வீட்டில ஒவ்வொரு விசேஷம் நடக்கும் போது பெரியவக வந்திருந்தா நல்லா இருக்குமேன்னு எங்க ஐயன் ஏங்குவாக... எங்க அம்மா ஒவ்வொரு நாளும் பெத்த மவ எப்படி இருக்காளோன்னு நினைச்சி நினைச்சி அழுவாக... என் சின்ன அக்காங்க அக்கா பசங்க எல்லோரும் பெரிம்மா என்னைக்காவது ஒருநாள் வருவாங்கன்னு காத்திட்டிருக்காக... அப்பத்தா கூட... நான் கண்ணை மூடிறதுக்குள்ள பெரியவளையும் கொல்லு பேத்தியையும் என் கண்ணில காண்பிச்சிடிறா குருன்னு எம்புட்டு வேதனையா சொல்லுவாங்க தெரியுமால உனக்கு ...

ஆனா உங்க அப்பாரு இம்புட்டு வருசமா அவரோட கெளரவமும் சுயநலமூம்தான் பெரிசுன்னு அக்காவையும் உன்னையும் அழைச்சிட்டு வராமலே இருந்துப்புட்டாக... இதுக்கு உன்னால என்ன நியாயம்லே சொல்லிட முடியும்... சொல்லுவே பார்ப்போம்" என்றவன் உணர்ச்சி பொங்க கேட்க அவள் வார்த்தை வராமல் சற்று திணறிதான் போனாள்.

அவள் வாழ்வில் தந்தை தாயை தவிர்த்து உறவுகளின் அத்தியாயங்கள் ரொம்பவும் குறைவு. அவன் சொல்ல சொல்லதான் அவர்கள் தன் தாயின் மீது கொண்ட பாசத்தின் ஆழமும் பிரிவின் ஆழமும் அவளுக்கு பிடிப்பட்டது.

அவள் ஆழ்ந்த யோசனையில் நிற்க அவன் சற்று நிதானித்து,

"அந்த கோபத்திலதான் நான் அப்படி நடந்திக்கிட்டேன்" என்றவன் சொல்லி முடித்தான்.

அப்போது அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"நீங்க சொல்றதெல்லாம் சரி... ஆனா ஏன் இத்தனை வருஷத்தில ஒருதடவை கூட யாரும் எங்களை தேடி வந்து பார்க்கல" என்று கேட்க

"எங்கன பார்க்க... உங்க அப்பாருதான் உங்களை மலேசியா கூட்டிட்டு போயிட்டாகளே... அம்புட்டு தூரம் வர அளவுக்கெல்லாம் எங்க அப்பாருக்கு வசதியில்ல ம்மா... மூணு அக்காங்களுக்கு கல்யாணம் பண்ணி... சீர் செனத்தை செஞ்சி என்னைய படிக்க வைச்சி... இம்புட்டையும் செஞ்சி முடிக்கும் போது எங்க ஐயா வயசாகி ஓஞ்சிப்புட்டாரு... பிறவு நான் இந்த பொறுப்பை எல்லாம் எடுத்துக்கிட்டு இந்த மெஸ்ஸை இந்த நிலைமைக்கு கொண்டு வர ஒன்றரை வருசாமாச்சுது... அதுக்கப்புறம் போன வருசம் உங்க அத்தையை தேடி சென்னைக்கு போய் உங்க விலாசத்தை விசாரிச்சேன்... கொடுக்க மாட்டேன் மூஞ்சாலடிச்சு மாறி சொல்லி அனுப்பிட்டாக... தெரியுமால உனக்கு?"

"நிஜமாவா லா?" அவள் நம்பமுடியாத பார்வையோடு கேட்க,

"பின்ன... பொய்யா சொல்லுதாக" என்றான்.

"அப்போ அந்த கோபத்திலதான் அப்பாகிட்ட என் நிச்சியதார்த்தத்தை நிறுத்திறன்னு சவால் விட்டீங்களா ?" என்றவள் ஆழமான பார்வையோடு கேட்க,

"நிச்சயத்தை நிறுத்திறேன்னு மட்டும் சொல்லல... உன்னை கல்யாணம் கட்டிக்கிடுதேன்னும் சவால் விட்டேன்" என்றவன் அசராத பார்வையோடு அவளிடம் சொல்ல சற்று தடுமாறியவள்

"இதெல்லாம் ரொம்ப டூ மச்" என்றாள்.

"ஏன்? நான் உனக்கு கட்டிக்கிற முறைதானே" என்றவன் கேட்க அவளுக்கு கோபமேறினாலும் பொறுமையோடே,

"அதெல்லாம் சரி... ஆனா எனக்கும் மோகனுக்கும் எங்கேஜ்மன்ட் நடக்க போகுது" என்றுரைக்க,

"நடக்குதானேல போகுது... இன்னும் நடக்கலயே" என்று சொல்லி சிரித்தான்.

"உங்க மோட்டிவ் என்னன்னு எனக்கு புரியல... என் எங்கேஜ்மேன்ட் நிற்கிறதா இல்ல நம்ம பேஃமிலி பிராப்ளம் எல்லாம் சால்வாகி எல்லோரும் சேர்றதா?"

"இரண்டும்தேன்"

"புரிஞ்சிக்கோங்க லா... இந்த பங்கஷன்ல உங்க பேஃம்லி எங்க பேஃம்லின்னு எல்லோரையும் வரவைச்சி இந்த பிராப்ளத்தை பினிஷ் பண்ணிக்கலாம் லா" என்றவள் கெஞ்சலாய் சொல்ல,

"அதென்ன உங்க பேஃம்லி எங்க பேஃம்லின்னு பிரிச்சி பேசுதே" அவன் பார்வை கோபமாய் மாற,

"சாரி சாரி... நம்ம பேஃம்லி..." என்றவள் அவனிடம் இறங்கிய தொனியில்,

"நான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டு கோபமாதான் வந்தேன்... பட் நீங்க அப்படி இல்லன்னு எனக்கு இப்போ புரியுது... நீங்க சொன்ன பிறகு எனக்கும் எல்லாரையும் பார்க்கனும் போல ஆசையா இருக்கு... ப்ளீஸ் லா... நீங்க பிரச்சனை பண்ணாம இருந்தீங்கன்னா எல்லாமே சுமுகமாயிடும்... அப்புறம் நான் எங்கேஜ்மன்ட்ல எல்லோரையும் மீட் பண்ணலாம்... மாமும் ரொம்ப ஹேப்பியா இருப்பாங்க" என்றவள் ஏக்கப் பார்வையோடு கேட்க அவனால் அதற்கு மேல் வேறெதுவும் பேசமுடியவில்லை.

அவன் மௌனமாய் நின்றிருக்க, அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டது
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
குரு சென்று கதவை திறந்தவன்

திரும்பி வரும் போது அல்வா கிண்ணத்தை எடுத்து கொண்டு வந்து, "சாப்பிடு ஷிவானி" என்று சொல்லி அவளிடம் நீட்ட,

"உம்ஹும்... எனக்கு வேண்டாம் பா... வெளியே மோக் வெயிட் பன்றான்... நான் கிளம்பிறேன் லா" என்க,

"மோக்... அது யாருலே?" என்று கேட்க

"நளினி அத்தையோட சன்... அன்னைக்கு கூட ரெஸ்டிரான்ட்ல என் கூட இருந்தானே" என்றதும் அவன் முகம் கடுப்பாய் மாறியது.

"ஓ... அந்த வெண்டைக்காயா?!" என்றவன் கேட்க,

"என்ன சொன்னிங்க... வெண்டைக்காயா?" என்றவனை புரியாமல் பார்த்தாள்.

"பார்க்க அப்படிதான் இருக்கான்... போயும் போயும் அந்த வெண்டைக்கயாம்ல கிடைச்சான் உனக்கு கல்யாணம் கட்டிக்கிட"

"ஹீ இஸ் மை குட் ப்ரண்ட்... நாங்க சின்ன வயசில இருந்தே ரொம்ப க்ளோஸ்" என்றவள் சொல்ல அவனுக்குள் உள்ளூர எரிச்சலா பொறாமையா என்று சொல்ல முடியாத உணர்வு படர்ந்தது.

"சரி சரி அதை விடு... சாப்பிடு" என்று அந்த பேச்சை வளர்க்காமல் நிறுத்தினான்.

"எனக்கு வேண்டாம்... மோக் வெளியே வெயிட் பன்றான்... நான் போகனும்" என்றவள் பரபரக்க,

"அவகளுக்கும் நான் ஒரு பார்ஸல் தர்றேன்... நீ சாப்பிடும்" என்று சொல்லி அவளை கட்டாயப்படுத்தி அமர வைத்தவன் அந்த கிண்ணத்தை அவள் கரத்தில் கொடுத்தான்.

அவள் அதனை பார்த்து சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்திருக்க,

"ஏன்லே பார்த்துட்டே இருக்க... சாப்பிட்டுதான் பாரேன்... அப்படியே கரைஞ்சி தொண்டைக்குள்ளர போகுமாக்கும்... அம்புட்டு ருசியா இருக்கும்" என்க,

"ரியலி" என்று கேட்டவளுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

அவள் அதனை வாயில் வைத்த நொடி, "வாவ்! நல்லா இருக்கு லா" என்றவள் ஆர்வமாய் ருசித்து சாப்பிட, குருவின் விழிகளோ தன்னையும் மீறி கொண்டு அவளை பார்வையால் ருசித்து கொண்டிருந்தது.

அவன் அவளிடம் மெதுவாக, "கோவம் தீர்ந்துச்சுதுன்னா மாமான்னு கூப்பிடலாம்ல" என்றவன் சொல்ல,

சாப்பிட்டே கொண்டே "ஹ்ம்ம் கூப்பிடலாமே" என்றாள்.

"அப்போ கூப்பிடு" என்றவன் கேட்க ஷிவானிக்கு பொறையேறியது.

அவன் அவள் தலையை தட்டியபடி தண்ணீரை நீட்ட அவள் அதனை வாங்கி கொள்ளாமல், அந்த அலுவலக கதவின் வழியே அதிர்ச்சியாய் பார்த்தாள்.

"மோக்" என்று சொல்லி கிண்ணத்தை வைத்துவிட்டு கதவை திறந்து கொண்டு அவள் செல்ல,

அவன் அவளை திரும்பி கூட பாராமல் சென்றுவிட்டான்.

"மோக் நான் சொல்றது கேளு" என்று சொல்லும் போதே காரை கிளப்பி கொண்டு அவன் சென்றுவிட,

"ஏ இடியட் மோக்... நில்லுறா ராஸ்கல்" என்றவள் கத்த கத்த கார் நிற்காமல் சென்றுவிட்டது.

குரு பின்னோடு வந்து, "வெண்டைக்காய் திடீர்னு பச்சைமிளமாய் மாறி இம்புட்டு காரமா போகுது" என்றதும் கோபமாய் அவன் புறம் திரும்பியவள்,

"என்ன கிண்டலா?... எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்... நான் அப்பவே சொன்னேல்ல... வேண்டாம்னு, நீங்கதான்" என்று கடுப்பானாள்.

"நீ அல்வா சாப்பிட்டதுக்கா அந்த முறுக்கு முறுக்கிட்டு போறான்... இதுக்கு பேர்தான் க்ளோஸ் ப்ரண்ட்ஷிப்பாலே?!"
என்றவன் எள்ளிநகைக்க அவள் அவனை முறைத்துவிட்டு முன்னேறி நடந்தாள்

"ஏய் இரூ புள்ள... நான் உன்னைய கொண்டு போய் வீட்டில சேர்த்திடுதேன்" என்றவன் சொல்லி பின்னாடி வர, "நோ தேங்க்ஸ்" என்றாள்.

"மலேசியா காரவக... இம்புட்டு பெரிய திருநெல்வேலி ஜில்லாவில வழி தெரியாம போயிட்டீகன்னா"

"அதெல்லாம் போக மாட்டேன்... என் போஃன்ல மேப் இருக்கு லா... நான் எங்கிருந்தாலும் வீட்டுக்கு போய் சேர்ந்திடுவேன்"

'இந்த மேப்பை கண்டுபிடிச்சவன் என் கையில கிடைச்சான்னு' என்று குரு மனதார திட்டி கொண்டிருக்கும் போதே,

"அய்யோ... என் போஃன் கார்ல இருக்கு" என்று பர்ஸை துழாவியவள், "இப்ப என்ன பன்றது?" என்று பதட்டமானாள்.

"உன் மாப்பும் ஆப்பு வைச்சிட்டாக... உன் மேப்பும் ஆப்பு வைச்சிடுச்சு... இப்ப உதவிக்கு இந்த மாமன்தான் இருக்கேன்" என்றதும்

"குட் ஐடியா... உங்க போஃன் கொடுங்க... நான் டேடுக்கு கால் பண்ணிக்கிறேன்" என்றாள்.

அவன் கடுப்பாகி, "நான்தான் உன்னை கூட்டிட்டு போய்விடிறேன் சொல்லுதேன்ல... என்னைய நம்பி வரமாட்டீகளோ?" என்றவன் கேட்க,

அவள் தயக்கமாய் நின்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, "நம்பிக்கை இல்லைன்ன பிறவு என்ன செய்ய... பேசிக்கிடுதும்" என்றவன் செல்பேசியை நீட்ட

அவள் மௌனமாய் அவனை ஏறிட்டு, "சரி கூட்டிட்டு போங்க" என்று சம்மதித்தாள்.

அவன் பைக்கில் தயக்கத்தோடு ஏறியவள் சற்று தள்ளி அமர்ந்து கொள்ள, அவனும் அவள் எண்ணம் புரிந்தவனாய் விலகி அமர்ந்து கொண்டான்.

அந்த பயணத்தில் அவள் இறுக்கமாகவே வந்தாலும் அவன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன்.

"ஆமா... கேட்கனும்னு நினைச்சேன்... நீ இப்போ என்னவே படிக்கி"

"நான் கேட்டரிங் கோர்ஸ் படிச்சிட்டிருக்கேன்!"

"நிஜமாவா?"

"ஆமா... நான் சைன்னிஸ் இட்டேலியன் மலேசியன் புஃட்னு எல்லாமே குக் பண்ணுவேன்"

"ஆச்சர்யமா இருக்குலே... எங்கிட்டோ இருந்தாலும் நம்ம குடும்ப தொழிலை நீ கத்துக்கிட்டிருக்க"

"சரி நீங்க என்ன படிச்சிருக்கீங்க"

"நான் எம்.ஏ எக்னாம்கிஸ்" என்றதும் ஆச்சர்யமானவள்

"நிஜமாவா?" என்று கேட்க,

"ஏன் ? பேன்ட் சட்டையெல்லாம் மாட்டியிருந்தாதான் படிச்சவங்கன்னு நம்புவீங்களோ?!"

"சேச்சே அப்படி எல்லாம் நான் யோசிக்கல... எக்னாம்க்ஸ் படிச்சிட்டு இந்த மெஸ்ஸை நடத்திறீங்களேன்னு"

"எக்னாமிக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் படிச்சுதேன்... மெஸ் நம்ம தாத்தா காலத்துல ஆரம்பிச்சுது... அதை எப்படி விட்டு கொடுக்க... அதான் நம்ம மெஸ்ஸை எடுத்து நடத்துதேன்"

"ஓ... அப்போ நீங்க குக் பண்ணுவீங்களா?"

"செய்யாம எப்படி? அதையும் செய்யுவோம்"

இப்படி பேசிக் கொண்டே வந்தடைந்தனர்.

குரு வீட்டின் கொஞ்சம் முன்பாகவே இறக்கி விட

"தேங்க்ஸ்" என்றாள் ஷிவானி.

"என்ன வேத்தாள் மாறி தேங்க்ஸெல்லாம் சொல்லுத" என்றவன் முறைக்க,

"தப்புதான் இனிமே சொல்லல" என்றவள் புறப்படுவதாக சொல்லி செல்லவும்,

"ஷிவானி ஒரு நிமிஷம்" என்றழைத்தான்.

அவள் என்னவென்பது போல் திரும்பி பார்க்க,

"கண்டிப்பா நீ அந்த வெண்டைக்காயதான் கட்டிக்கிடனும்" என்றவன் கேட்க அவள் சிரித்துவிட்டாள்.

அவள் அவனுக்கு பதில் பேசாமல் முன்னேறி நடக்க,

"மாமான்னு கூப்பிடாமலே போறியே... நியாயமா?" என்றவன் சத்தமாய் சொல்ல,

அப்படியே திரும்பியவள், "போயிட்டு வர்றேன் மாம்ஸ்... ஒகேவா" என்றவள் தன் கட்டைவிரலை காட்டி புன்னகையித்துவிட்டு,

அவள் வீட்டிற்குள் சென்று அவன் பார்வையை விட்டு மறைந்துவிட, அந்த கணம் அவள் முகமே எங்கு திரும்பினாலும் பிரதிபலித்தது அவனுக்கு.

நீக்கமற அவள் தன் மனதில் நிறைந்துவிட்டாள் என்பதை உணர்ந்தவனுக்கு

அவள் மீது காதல் மட்டுமே இல்லை. அதனை தாண்டி ஆழமாய் கொஞ்சம் வஞ்சமும் குடிகொண்டிருந்தது.

சிவானி சென்ற திசையை நோக்கியவன் வஞ்சம் இழையோடிய புன்னகையோடு,

'சபரி மாமோய்... மாப்பிள்ளை முறுக்கா காட்டுதீக... உங்க பொண்ணு மொத்தமா என்பக்கம் சாயட்டும்... அப்போ காட்டுதேன்ல... மாப்பிள்ளை முறுக்குன்னா என்னன்னு' என்று சொல்லி கொண்டான்.

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி

***********--***************
ஹாய் ப்ரண்ட்ஸ்,
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் அன் கமெண்ட்ஸ் தந்த அனைவரூக்கும் மனமார்ந்த நன்றி.

இந்த பதிவையும் படிச்சி உங்க கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
:love::love::love: super.... Epi... Nan appave sonnen la I don't like mok.. Guru mama kum pidikala... Konja naal la shivaani kum pidikkathu... Guru., family financial situation a solrathu yatharththam... Apdiye oru nellai mamava kannu munnadi niruththitinga... Thanks for the lovely episode...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top