• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாய் பிரண்ட்ஸ் ,

கதையோட முக்கியமான இடத்துக்கு வந்துட்டோம்.நான் சொல்ல வர்றது உங்களுக்குப் பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு எனக்கு தெரியலை.உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு உங்களோட கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .

உங்கள் பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கும் ,
வெண்பா .
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
குயிலி சொல்லத் தொடங்கினாள் "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெருந்துறைக்கு பக்கத்தில் உள்ள வாய்க்கால் மேடுங்கிற கிராமத்தில் தான் .கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான் எங்களோடது.ரொம்ப வசதியான வாழ்க்கை இல்லனாலும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு எங்களோட வாழ்க்கை.

நான் அம்மா ,அப்பா, தங்கச்சி அப்புறம் என்னோட நாய்க்குட்டி ஜிம்மி . ஓட்டு வீடுதான் எங்களோடது என்றவள் முகம் பிரகாசமாக இருந்தது. இவ்வளவு நாட்களாக அவள் முகத்தில் காண முடியாத ஒளி இப்பொழுது தன் குடும்பத்தை பற்றி பேசும்பொழுது வந்திருந்தது .

மயில்வாகனன் அந்த முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் குயிலியே தொடர்ந்தாள்" இடி மின்னல் எல்லாம் வந்துச்சுன்னா எனக்கு அவ்வளவு பயமா இருக்கும் எங்க வீட்டுக்குள்ள வந்துருமோன்னு. அப்ப எல்லாம் நான் அப்பாவை தான் கட்டி புடிச்சிட்டு இருப்பேன். அந்த டைம்ல என்னோட பெரிய ஆசையே ஒரு மச்சி வீட்டுக்கு போகணும் அப்படிங்கறதுதான்" என்றவள் விரக்தியாக சிரித்தாள்.

அவள் கையை அழுத்தி கொடுத்தவன் மேலே சொல்லு என்பது போல் பார்க்க "அப்பாக்கு நான் கலெக்டர் ஆகணும் அப்படிங்கறது தான் ஆசை .சின்ன வயசுல இருந்தே நான் நல்லா படிப்பேன். வீட்டுக்கு பக்கத்துல இருந்த கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் நானும் என் தங்கச்சியும் படிச்சோம் . தங்கச்சிய ரொம்ப பிடிக்கும். நாங்க இரண்டு பேரும் அடிக்கிற கூத்தெல்லாம் எங்க அம்மா அப்பா பார்த்து சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. ரெண்டு பேருமே ரொம்ப ஜாலி டைப். எவ்வளவு குறும்பு பண்ணினாலும் எங்களை அடிச்சதே கிடையாது .அப்பாக்கு அங்கிருந்த ஒரு ரைஸ் மில்ல வேலை. அம்மா ஊர்தலைவர் வீட்ல இருக்க மாடு எல்லாம் பார்த்துப்பாங்க" என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

அவள் மனதில் ஏதோ சொல்ல முடியாத வேதனை குடி கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன் அவளாகவே பேசட்டும் என்று அமைதி காத்தான். சிறிது நேரத்தில் அவளே தொடர்ந்தாள். இவ்வளவு நேரம் நிமிர்ந்து அவனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த தலை இப்பொழுதுதான் தானாக குனிந்திருந்தது.

ஊர்த்தலைவர் வீட்ல அம்மா மாடுங்களைப் பார்த்துக்க போறப்ப நானும் என் தங்கச்சியும் அவங்க கூட போவோம் . அங்க நிறைய வாத்து இருக்கும் .அது கூட விளையாடிட்டு இருப்போம்.எனக்கும் அவளுக்கும் வாத்துன்னா ரொம்ப பிடிக்கும் " என்றவள் மீண்டும் அமைதியாகி விட்டாள் .கண்கள் உடைப்பு எடுக்க ஆரம்பித்து இருந்தது.

யார் முன்பும் அழப் பிடிக்காதவள் இப்பொழுது மயில்வாகனன் முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் கண்களைத் துடைத்துவிட்டவன் "ச்சு..என்ன இது சின்ன பிள்ளை மாதிரி?" என்க தலையில் இடம் வலமாக அசைத்தவாறு அவன் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் தலையை சிறிது நேரம் வருடிக்கொடுத்தான்.

அன்னைக்கு என் தங்கச்சிக்கு உடம்பு சரியில்ல. அதனால அம்மா அவளை பார்த்துக்க வீட்டிலேயே இருந்துட்டாங்க. எனக்கு வீட்ல இருக்க போர் அடிச்சிச்சு. அதனால அந்த வாத்துங்க கூட போய் விளையாடலாம்னு நினைச்சு அம்மாகிட்ட சொல்லிட்டு நான் போனேன். அப்ப எய்த் படிச்சுட்டு இருந்தேன்.

நான் போய் வாத்துங்களோட விளையாடிட்டு இருந்தேன் .அப்ப அந்த ஊர் தலைவர் வந்து வீட்டுக்குள்ள சாக்லேட் இருக்கு வா எடுத்து தரேன் அப்படின்னு கூப்பிட்டான் .அவன் எனக்கும் என் தங்கச்சிக்கும் அடிக்கடி சாக்லெட் தருவான் .அதனால நானும் நம்பி உள்ள போன. அப்ப அவங்க வீட்ல யாருமே இல்ல..." என்றவள் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

விஷயம் என்ன என்பதை உணர்ந்த மயில்வாகனனிற்க்கு ஒரு நிமிடம் உலகமே தட்டாமாலை சுற்றியது .தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவள் மீண்டும் தொடர்ந்தாள் "சாக்லெட் உள்ளே இருக்கு அப்படின்னு சொல்லி பெட் ரூம் குள்ள கூப்பிட்டான்.. நானும் தயங்கித் தயங்கி உள்ள போனேன். பெட்ல உட்காரு சாக்லெட் தர அப்படின்னு சொன்னான். நான் இல்லங்க ஐயா அதெல்லாம் வேண்டாம் அப்படின்னு சொன்ன .நான் சொன்னதைக் கேட்காமல் கோபமா பெட்ல உட்காரு அப்படின்னு சொன்னான். நானும் பயந்து போய் உட்கார்ந்துட்டேன்.இப்பகூட நான் அவன் ஏன் அப்படி பண்றான்னு நினைச்சேனே தவிர வேற எண்ணம் என் மனசுக்குள்ள வரலை. என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த உடனேயே நான் எழுந்திட்டேன் .நான் ஓடுறதுக்குள்ள என்னோட கைய பிடிச்சு அப்படியே பெட் மேல தள்ளிவிட்டான்" என்றவளின் உடல் நடுங்கியது

"நானும் அவனை தள்ளி விட்டு ஓட பார்த்த ஆனால் அவன் என்ன விடவே இல்ல. நான் கத்த கத்த என்ன ..."என்றவளின் வாயை பொத்திய மயில்வாகனன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

குயிலின் முதுகில் திடீரென்று ஈரம் பரவ அணைப்பில் இருந்து விடுபட பார்த்தால். ஆனால் முடியவில்லை .மயில்வாகனனின் உடல் லேசாகக் குலுங்கியது. அவன் அழுவதை பார்த்ததும் குயிலியின் வாய் தானாக "அப்பா" என்று முணுமுணுத்தது.

சட்டென்று அணைப்பிலிருந்து விலகியவன் "என்ன சொன்ன?" என்று கேட்க "எனக்கு அப்பா ஞாபகம் வந்திருச்சு" என்றவள் மேலே பேச தொடங்கினாள். அப்புறம் நான் கண் முழிச்சு பார்த்தப்ப ஹாஸ்பிடல்ல இருந்தேன். என்ன சுத்தி அம்மாவும் அப்பாவும் நின்னு அழுதுட்டு இருந்தாங்க. நர்ஸ் வந்து ஏதோ அம்மாவை திட்டிட்டு போனாங்க .எனக்கு அப்ப இருந்த நிலைமைல்ல எதுவுமே புரியல. அவங்க ஏதோ சொன்ன உடனே அம்மா அப்படியே கீழே உட்கார்ந்து அழுக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலி. நான் கண்மூடி படுத்துட்டே அவங்க சொன்னத கேட்டேன்.

"பணத்துக்கு ஆசைப்பட்டு சின்ன பிள்ளையை போயி இப்படி பண்ண வெச்சிருக்கியே... கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உனக்கு ?"அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா அதுக்கு மேல ஒன்னும் பண்ணாம என்னை கூப்பிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க.வீட்டுக்கு வந்ததுக்கப்பறம் நிறைய பேர் வந்து அப்பா அம்மாவை ஏதேதோ சொன்னாங்க. என்னோட தங்கச்சி "அக்காக்கு என்ன ஆச்சு ன்னு?" அம்மா அப்பா கிட்ட கேட்டுட்டே இருந்தாள்.

என்னால உடம்புவலி தாங்கவே முடியலை.வலிக்குது வலிக்குதுன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தேன். நாளைக்கு வலியே இருக்காது கண்ணு ...சரியாயிடும் அப்படின்னு சொன்னாங்க. அப்ப எனக்கு புரியல .ஆனா அடுத்த நாள் தான் புரிஞ்சுச்சு" என்றவளை அவன் கேள்வியாக பார்த்தான்.

அன்னைக்கு நைட் பால்ல எல்லாத்துக்கும் அம்மா விஷம் வெச்சு கொடுத்துட்டாங்க .எனக்கு பால் பிடிக்காது .அதனால நான் அந்தப் பாலைக் கொண்டு போய் வெளியே கொட்டிட்டேன் அம்மாவுக்கு தெரியாம .அதனால என்னைத் தவிர எல்லாரும் ..."என்றவள் பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

"இன்னைக்கு தான் அவர்கள் இறந்த நாள். என்னால சத்தியமா முடியல .ஒவ்வொரு வருஷமா இந்த நாள்ல நான் படற பாடு" என்றவளின் உடல் நடுங்கியது." ஒன்னும் இல்லடா ...ஒன்னும் இல்ல... இனி உனக்கு எல்லாமா நான்இருக்கேன் "என்று மயில்வாகனன் சொல்ல

"அடுத்த நாள் காலையில் ஜிம்மி கத்திட்டே இருந்துச்சு. நான் கஷ்டப்பட்டு கண்ண முழிச்சு பக்கத்துல பார்த்தா மூணு பேரோட வாயிலையும் நுரை இருந்துச்சு. மூணு பேரையும் எழுப்பின ஆனா அவங்க எந்திரிக்கவே இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம அம்மான்னு கத்தினேன். பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஓடி வந்து பார்த்துட்டு எந்த ஹெப்பும்மே பண்ணல .ஊர்த்தலைவர் பெரிய ஆள்ல... எனக்கு உதவப் போய் அவரை ஏதாவது அவன் பண்ணிட்டான்னா... அதனால பயந்துட்டு யாருமே ஹெல்ப் பண்ண வரல... சில பேரு என் மேல தான் தப்பு அப்படின்னு பேசிட்டாங்க .யாருன்னு தெரியல யாரோ ஒருத்தர் ஆம்புலன்சுக்கு போன் பண்ணி அப்புறம்தான் எல்லாம் நடந்துச்சு..."
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
"அன்னைக்கு நைட் வீட்ல நானும் ஜெமினியும் தான் இருந்தோம் .எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அம்மா அப்பா இறந்த வலி ;உடம்பு வலி எல்லாம் என்ன பாடா படுத்துச்சு .சமாதானப்படுத்த கூட யாரும் இல்ல. அழுதழுது அப்படியே தூங்கிட்டேன்.

திடீர்னு என் மேல ஏதோ படுக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணை திறந்து பார்த்த திரும்பவும் அந்த நாய்தான் .எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்துச்சோ தெரியல. அவனைத் தள்ளி விட்டுட்டு கன்னத்தில் மிதிக்க ஆரம்பிச்சுட்டேன் .அவன் குடிச்சி இருந்ததுனால அவனால என்ன பெருசா ஒன்னும் பண்ண முடியல .

ஜிம்மி உடம்பு புல்லா ரத்தத்தோடு வந்து அவனை கட்டிக் ஆரம்பிச்சுருச்சு. அவன் உள்ள வர்றப்ப ஜிம்மியை அடிச்சிருப்பான் போல. அதனால அதுக்கு உடம்பு புல்லா ரத்தம்" என்றவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

அவனுக்கு புரிந்தது இதனால் தான் அவள் அன்று மருத்துவமனையில் வாயில் நுரை தள்ளியவரைப் பார்த்தவுடன் மயங்கி விழுந்தால் என்று. அந்த சம்பவம் கொடுத்த தாக்கம் பன்னிரண்டு வருடங்கள் கழித்தும் அவளை விட்டுப் போகவில்லை .

சிறிது நேர அமைதிக்குப் பின்பு "கொஞ்ச நேரத்துல ஜிம்மி செத்துடுச்சு. அப்புறம் எனக்கு அங்கே இருக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு. என்ன பண்றதுன்னு தெரியல. பக்கத்து வீட்டு அண்ணா தான் அடுத்த நாள் வீடிய காலையில யாருக்குமே தெரியாம என்ன டவுனுக்கு கூட்டிட்டு போய் பஸ் ஏத்திவிட்டாங்க. ஒரு ஆசிரமத்தோட அட்ரஸ் கொடுத்து "நீ அங்க போ.அவங்க உன்னை பார்த்துப்பாங்க" அப்படின்னு சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்தாங்க.

"நான் சேலம்ல அந்த ஆசிரமத்துக்கு போய் சேர்ந்துட்டேன் .படிக்கும்போதே ஐஏஎஸ் ஆகி அப்பாவோட ஆசையை நிறைவேத்த ணும்னு வெறியோடு தான் படிச்சேன் .நான் படிக்கிறப்பவே அங்கிருந்த மத்தவங்களுக்கும் டியூஷன் எடுப்ப. என்னை எப்போதுமே பிசியா தான் வைச்சிருந்த. இருந்தாலும் அம்மா அப்பா ஞாபகம் அடிக்கடி வரும் .அப்ப எல்லாம் அவ்வளவு கஷ்டமா இருக்கும்" என்றவளின் தலையே மயில்வாகனன் ஆறுதலாக தடவிக் கொடுத்தான்.
"எம்எல்ஏ ஓட பையனுக்கு பர்த்டே அன்னைக்கு சாப்பாடு அவங்க ஸ்பான்சர் பண்ணி இருந்தாங்க. அவன் செல்லா கிட்ட கொஞ்சம் மிஸ் பிஹேவ் பண்ணிட்டான். அது பார்த்து நான் அவனை அறைந்திட்டேன். அதனால ரொம்ப பெரிய பிரச்சினை ஆயிடுச்சு.

ஆசிரமத்தோட ஹெட் வந்து என்ன அவன் கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னாரு. நான் மாட்டேன்னு சொன்னேன் .நான் அவன் கிட்ட மன்னிப்பு கேட்கலைன்னா ஆசிரமத்தையே உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு அவன் சொன்னான். அதனால வேற வழி இல்லாம நானும் செல்லாவும் அந்த ஆசிரமத்தை விட்டு வெளியே வந்துட்டோம் என்றவள் அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை." இதுதான் நான். என்னோட வாழ்க்கை .நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட நாம நல்ல பிரண்ட்ஸா மட்டும் தான் இருக்க முடியும். என்னால பிசிகல் ரிலேஷன்ஷிப் உள்ள வர முடியாது .அதனாலதான் நான் இது வேண்டாம் வேண்டாம் சொன்னேன். எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நான் ஒத்துக்குறேன் .ஆனா கல்யாணம் வரைக்கும் எல்லாம் வேண்டாம்.லெட்ஸ் பீ ஃப்ரெண்ட்ஸ்" என்றவன் முகத்தைப் பார்த்து சொன்னாள்.

"இங்க இருந்தா எங்க உன்னோட கட்டுப்பாட்டை மீறி என் கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லி விடுவேன்னு நினைச்சு தான டிரான்ஸ்பர்க்கு அவ்வளவு தீவிரமாக முயற்சி பண்ணிட்டு இருந்தியா ?"என்று அவன் கேட்க அவள் வாயடைத்துப் போனாள் ."அது வந்து ..."என்றவள் இழுக்க "உண்மைதான?" என்றான் அவன் கேலிக் குரலில்.

"இது ஜஸ்ட் ஒரு சின்ன ஆக்சிடன்ட் தான். அதை நீ இவ்வளவு தைரியமா பேஸ் பண்ணி இருக்கிறத நினைச்சு ஆம் ரியல்லி ப்ரவுட். ஒரு காக்கா நம்ம மேல எச்ச பண்ணா அதை எப்படித் அடிச்சு போட்டுட்டு போறோமோ அது மாதிரிதான் இதுவும் .இவ்வளவு நாள் இதை நீ ஞாபகம் வச்சு இருந்த ஓகே. இனிமேல் மறந்திடு .அப்புறம் கல்யாணத்துக்கு வந்து பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் தான் முக்கியம் அப்படின்னு கிடையாது .ஆனால் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்பில் முக்கியம் .அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் "என்றவன் சொல்ல

"இல்ல இல்ல கண்டிப்பா என்னால அது முடியாது " என்றவள் உறுதியாகக் கூற சிரித்தவன் "சரி அது அப்ப பார்த்துக்கலாம்" என்றான் ."இல்ல இல்ல எப்பவும் பார்க்க வேண்டாம் .நமக்குள்ள இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம் ...ப்ளீஸ்" என்று கெஞ்ச அவளை பார்த்து கெக்கபோக்கேவென என சிரித்து விட்டான்.

'ஏன் இப்படி சிரிக்கிறான்?' என்று புரியாமல் பார்த்தவளிடம்"இல்ல அவ்வளவு டெரரான கலெக்டர் மேடம் இப்ப என்கிட்ட வந்து ப்ளீஸ்ன்னு கெஞ்சிட்டு இருக்கிறது நினைச்சு சிரிப்பு வந்துருச்சு" என்று சிரித்துக் கொண்டே கூற இப்பொழுது குயிலியின் முகத்திலும் புன்னகை குடி கொண்டது.

மேலும் அவள் ஏதோ பேச வர "நான் அர்ஜுன் கூட தான் இங்க வந்த. அவன் வேற எனக்கு விடாமல் கால் பண்ணிட்டு இருக்கான் .எதுவா இருந்தாலும் நைட்டு கால் பண்றேன் பேசலாம்" என்றவன் வெளியே வந்து விட்டான்.
ஆனால் உண்மையில் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. அவளை நார்மலாக்க சிரித்துப் பேசினாலும் அவள் சொன்ன விஷயத்தின் கணத்தை அவனால் தாங்க முடியவில்லை என்பதே திண்மையான உண்மை!தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள அவனுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

காமக் கொடூரனால் சீரழிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து வாடிய அந்த மொட்டை நினைத்து இவன் மனம் பதறியது .ஆண்கள் எவ்வளவு தான் உடலளவில் திட மாணவர்களாக இருந்தாலும் பெண்களின் மனத்திடத்தை ஒப்பிடும்பொழுது அவர்களின் திடம் சொற்பமானதே!27 வயதில் அவள் கூறியதைக் கேட்கவே அவனுக்கு அவ்வளவு கொடுமையாக இருந்தது.ஆனால் அந்த 13 வயதில் அவள் அதையெல்லாம் எப்படி கடந்து வந்திருப்பாள் என்று நினைக்கையில் அவன் உடல் நடுங்கியது. அவள் மேல் கடலளவு மதிப்பு கூடியது.இனி காலம் முழுவதும் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.இவ்வளவு நாட்கள் அனுபவித்த வலியெல்லாம் மறந்து போகும் அளவிற்கு சந்தோஷத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்தான்!

குயிலி வருவாள் ...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிஸ்காவர்ணா டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nijamaave ithai naan ethir parthen..
Mayil avalai nalla paarthuko ssellam.
Episode all over ok da.. Entha korviyum vidave illa.. Super epi.. Next ud eppo da amnu..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top