• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Love Chemistry-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

அடுத்த எபியோட வந்திட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்




பொத்தென்று எங்கிருந்தோ வந்து விழுந்தாள் சுசித்ரா.கண்ணைக் குருடாக்கிய ஒளி வெள்ளத்தால் கண்களை திறக்கவே கஷ்டமாக இருந்தது.மிஷினின் கோளாறால் மின்சாரம் தாக்கி ஹாலில் சென்று விழுந்துவிட்டோம் என்று நினைத்தாள்.ஆனால் விழுந்த இடம் சில்லென இருந்தது...மேனியை குளிர்காற்று தழுவியது.


'ஹால்ல ஏசியில்லையே!நம்ம ஊரு வெயில் வெளுத்து வாங்குமே...இப்ப திடிர்னு ஏன் இப்படி குளுருது...அழுத்திய இமைகளை கஷ்டப்பட்டு திறந்தாள்.


ஒரு முறை சுற்றிலும் பார்த்தவள் அதிர்ந்து எழுந்து நின்று விட்டாள்.பஞ்சுப் பொதியென பூமியை மறைத்த பனியும் அடர்ந்த மரங்களும் அதன் முன்பு கற்களால் கட்டப்பட்ட அழகானதொரு பங்களாவும் எதிரில் காட்சியளித்தது.அது வீட்டின் பின்புற கார்டன் என்று தோன்றியது.மெதுவாக சுற்றும்முற்றும் பார்த்தபடி வீட்டின் முன்பக்கம் வந்தாள்.அங்கே வாயிற் கதவில் 'ஸ்டீவ் ஹாத்வே'என்ற பெயரைப் பார்த்தவளின் உதடுகள்


"இட்ஸ் இம்பாசிபிள்"என்றது.


எந்த விஞ்ஞானியின் குறிப்பு இருந்தால் தன் ஆராய்ச்சி முற்றுப் பெற்றுவிடும் என்று மாதவன் கூறினானோ அதே விஞ்ஞானி ஸ்டீவ் வீட்டு வாயிலில் தான் நிற்பதை அவளால் சத்தியமாக நம்ப முடியவில்லை.ஸார்தக் ஏதோ விளையாட்டாக செய்த டைம் மிஷின் என்று அவள் 1920ஆம் ஆண்டை அதில் அழுத்த நிஜமாகவே அது தன்னை ஸ்காட்லாந்தில் கொண்டு விட்ட அதிசயத்தை அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


அவள் வியப்பை கலைப்பது போல் பின்னிருந்து ஒரு பெண்மணியின் குரல்,


"ஹே ஹு ஆர் யூ?வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?"என்று அதட்டியது.திடுக்கிட்டு திரும்பினாள் சுசித்ரா.அவளை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார் அவர்.அதைப் போன்ற இறுக்கமான பேண்ட் டாப்ஸ் ஜாக்கெட் போன்றவைகளை அங்கே எந்த பெண்ணும் அணிவதில்லை.


அவரின் பார்வையே அவர் நினைப்பை இவளுக்கு உணர்த்தி விட்டது.அவளுக்கென்ன இது போன்ற உடையில் நூறாண்டுகளுக்கு முன்பு வந்து விசித்திரமாக காட்சியளிக்க ஆசையா!அவர் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று மனதை திடப்படுத்திக் கொண்டவள் மெல்ல,


"மேடம்! மிஸ்டர் ஸ்டீவ் வீட்ல இருக்காறா?நா அவர் பாக்கனும்"என்றாள் பணிவாக ஆங்கிலத்தில்.


"இல்ல!அவர் வெளியே போயிருக்கார்...வர ராத்திரி ஆகும்.."


'என்னது ராத்திரியா! அதுவரைக்கும் காத்திருக்கறதா.. அடக்கடவுளே!'என்று கவலையடைந்தாள்.


"மேடம் ப்ளீஸ் அதுவரைக்கும் நா உள்ள வந்து இருக்கலாமா? வெளியே ரொம்ப குளுரா இருக்கே!"


அவளை உள்ளே விடுவதா வேண்டாமா என்று ஓரிரு நிமிடம் யோசித்தவர் இன்னும் சிறிது நேரத்தில் குளிர் மைனஸ் டிகிரிக்கு இறங்கும் போது அவளால் வெளியே நிற்க இயலாது என்பதால்,


"கம் இன்..யங் லேடி..."என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.வெளியை விட உள்ளே இன்னும் அதிக அழகோடு விளங்கியது அந்த வீடு.அங்கிருந்த மரப் பொருட்கள் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் இருந்தது.


பனியில் சிறிது நேரம் இருந்ததால் அவளின் நனைந்த உடை உடலோடு ஒட்டிக் கொண்டது.அதனால் நடக்கவே கஷ்டப்பட்டாள்.அதை கவனித்தவர் உள்ளே சென்று சிறிது நேரத்தில் கையில் மாற்றுடையோடு வந்தார்.


"மை லேடி!இந்த வீட்ல என்னைத் தவிர வேற பெண்ணில்ல.... உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா என்னோட இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்குங்க...ஈரமான ட்ரெஸ் ஜுரம் வர காரணமாயிடும்..."


அவரின் கனிவான முகம் சுசித்ராவிற்கு தன் தாயை நினைவூட்டியது.லேசான புன்னகையோடு அந்த உடையைப் பெற்றுக் கொண்டவள்,


"தேங்க் யூ...மிஸஸ்?"


"மிஸஸ் ஃபேர்க்ளாத்"என்றார் சிறிய புன்னகையோடு.


அங்கிருந்த கெஸ்ட் ரூம்களில் ஒன்றை அவளுக்காக திறந்துவிட்டார்.அவர் சென்றப் பின் கதவை தாழிட்டவள் அவர் கொடுத்த கணுக்கால் வரை நீண்ட ஸ்கர்ட்டை அணிந்தாள்.அங்கேயிருந்த நீண்ட கண்ணாடியில் தெரிந்த பெண் தானே தானா என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.


அவள் கீழே இறங்கி வந்த போது ஃபேர்க்ளாத் அவளுக்கு ப்ரெட்டும் சூடான டீயும் கொடுத்தார்.அந்த நடுக்கும் குளிருக்கு சூடான பானம் இதமாக இருந்தது.


பொதுவான விஷயங்களை இருவரும் சிறிது நேரம் அளவளாவினர்.பாதி ஸ்டீவின் புகழாரமே.அவனைப் போல் மனிதன் இந்த உலகில் இல்லை என்றார்.சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவன் தானே முயன்று படித்து இந்தளவு முன்னேறியிருந்தான்.உறவினர் யாரும் உதவிக்கு வரவில்லை.ஆனால் அவனுக்கு நல்ல நண்பர்கள் இருந்தனர்.அவனுக்காக எதை செய்யவும் சித்தமாக இருந்தனர்.சிறிது நேரம் இருந்தவர் வேலையிருப்பதாக சென்று விட்டார்.ஸ்டீவ்வை பற்றிக் கேட்டதிலிருந்து அவனைப் பார்க்கும் ஆர்வம் பலமடங்கு அதிகரித்து விட்டது.


இரவு பத்து மணி அளவில் வாயிலில் குதிரைகளின் குளம்படியோசை கேட்டது.வேலையாட்கள் இருவர் வேகமாக வெளியே சென்றனர்.சிறிது நேரத்தில் ஃபேர்க்ளாத்தின் பதட்டமான குரல் ஹாலை நிறைத்தது.என்னவாக இருக்கும் என்று தான் இருந்த அறையிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள் சுசித்ரா.


அங்கே ஹாலில் வயதான ஒரு மனிதர் நின்றிருக்க சோபாவில் தலையில் அடிப்பட்ட கட்டோடு அமர்ந்திருந்தான் கம்பீரமான மனிதன்.அவன் கரிய நிற கோட்டின் உள்ளே அணிந்த வெள்ளை நிற சர்ட் ரத்தக்கறை படிந்துக் காணப்பட்டது.


"மிஸ்டர் எட்வர்ட் சாருக்கு என்ன ஆச்சு?இது என்ன காயம்?"


"சிட்டி ஹால் கிட்ட ஒரு சின்ன பையன நாலஞ்சு பேரு அடிச்சுக்கிட்டு இருந்தாங்க சார் அவங்களையெல்லாம் அடிச்சு விரட்டிட்டாரு...ஆனா ஓடின ஒருத்தன் மட்டும் மறைஞ்சிருந்து கல்லை இவர் தலைக்கு அடிச்சிட்டான்...ரத்தம் ரொம்ப லாஸ் ஆயிடுச்சு... டாக்டர் பேன்டேஜ் போட்டு இன்ஜெக்ஷன் கொடுத்தார்...நாலு நாள் ரெஸ்ட்ல இருக்கனும்...மிஸஸ் ஃபேர்க்ளாத் ஜாக்கிரதையா பாத்துக்குங்க...நா நாளைக்கு வரேன்"என்று அந்த பெரியவர் வெளியே சென்று விட்டார்.


யாரோ முகமறியா சிறுவனுக்காக அடிப்பட்டு வந்திருக்கும் ஸ்டீவ் அவள் கண்களுக்கு புதுமையாக காட்சியளித்தான்.அவனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அவன் அறையில் படுக்க வைத்தார் ஃபேர்க்ளாத்.


சுடான உணவு வகைகளை அவனை உண்ண செய்து மருத்துவர் அளித்த மருத்துவர் அளித்த மருந்தை கொடுத்தவர்,


"டேக் ரெஸ்ட் மிஸ்டர் ஹாத்வே! ஏதாவது தேவை என்றால் இந்த பெல் அடிங்க..நா உடனே வந்திடுவேன்"என்று கதவை லேசாக மூடிக்கொண்டு சென்றுவிட்டார்.


அவர் சென்ற மேல் அந்த கதவின் அருகில் வந்து நின்றாள் சுசித்ரா.சிறிது நேரம் சென்றப் பின் மெல்ல சத்தம் செய்யாமல் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


மரக்கட்டிலில் அமைதியாக துயில் கொண்டிருந்தான் ஸ்டீவ்.ஆண்மை நிறைந்த அவனின் முகத்திற்கு அந்த காயம் திருஷ்டி பொட்டாக‌ தெரிந்தது.அவனின் மூச்சுக்கேற்ப ஏறி இறங்கிய மார்பு அவன் திண்மையை பறைசாற்றியது.எங்கிருந்தோ திருட்டுத்தனமாக அந்த அறையில் நுழைந்த காற்று அவன் கூந்தலை கலைத்து விளையாடியது.அதில் சுசித்ராவின் மனம் அவளேயறியாமல் சிறிதே அசைந்தது.


'சே...இப்ப போயா இவரு இப்படி அடிப்பட்டு வரனும்!இந்த நிலைமைல என் விஷயத்தை எப்படி கேக்கறது?....இவர் குணமாகற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்...ஆனா என்னத்த சொல்லி நாளை கடத்தறது?எதா இருந்தாலும் காலைல பாக்கலாம்...'என்று அவள் திரும்பி நடந்து கதவை அடைந்தப் போது அவள் பின்னிருந்து,


"ஹு ஆர் யூ?"என்ற ஸ்டீவின் ஆழ்ந்த குரலில் திடுக்கிட்டு நின்று விட்டாள்.


'ஐய்யயோ!எழுந்துட்டாரே...இப்ப என்ன பண்றது?என்னன்னு எக்ஸ்ப்ளைன் பண்றது?'என்று ஏதேதோ எண்ணி பயந்தாள்.


"கம் ஹியர்!"என்று அழைத்தான் ஸ்டீவ்.


எங்கோ மறைந்துக் கொள்ள முயன்ற தைரியத்தை இழுத்துப் பிடித்தவள்,


"ஹாய் சார்,ஐம் சுசித்ரா ஃப்ரம் இந்தியா"என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.


அவன் கண்கள் சாஸராக விரிந்தது


"ஃப்ரம் இந்தியா?!இங்க என்ன வேலையா வந்த?"


'என்ன பதில் சொல்றது?நா நிஜத்த சொன்னா இவர் நம்புவாரா!தலைல வேற அடிப்பட்டு கஷ்டப்பட்றாரு...இது சரியாகற வரைக்கும் டயம் வேணுமே!என்ன பண்றது'என்று மனதில் போராடியப் போது சட்டென ஒரு யோசனைத் தோன்ற,


"சார் எனக்கு கெமிஸ்ட்ரி கத்துக்கனும்...ஐ வாண்ட் டூ பி யுவர் ஸ்டூடண்ட்..ப்ளீஸ் எனக்கு கெமிஸ்ட்ரி சொல்லித்தரீங்களா?"என்று வாயில் வந்ததை கூறிவிட்டாள்.


என்னது ஸ்டூடெண்ட்டா!என்பது போல் அவளையே கூர்ந்தான் அவன்.எங்கோ இந்தியாவிலிருந்து இதற்காக தன்னைத் தேடி ஒரு பெண் வருவதென்றால்...


"ஆர் யூ ஷ்யூர்? கெமிஸ்ட்ரி கத்துக்கவா இவ்ளோ தூரம் வந்தே!...நிஜமாவா?"


'அவசரப்பட்டு வாயை விட்டுட்டோம் எப்படியாவது அதையே மெயின்டைன் பண்ணுவோம்'என்று முடிவெடுத்தவள்,


"ஹண்ட்ரட் பர்சனட் ஷ்யூர் சார்! உங்ககிட்ட கெமிஸ்ட்ரி கத்துக்கனும்னே இவ்ளோ தூரம் வந்திருக்கேன்...ப்ளீஸ் சார்!மாட்டேன்னு சொல்லிடாதீங்க"என்று பதட்டத்துடன் கூறினாள்.


"ஓகே!ஓகே!பீ கூல்...நா சொல்லித் தரேன்...டெடிக்கேஷன் அண்ட் கான்ஸன்ட்ரேஷனோட கத்துக்கனும்..."


"ஷ்யூர் சார்!தேங்க் யூ ஸோ மச் சார்"


"கோ அண்ட் ரெஸ்ட்!நாளைலேந்து ஸ்டார்ட் பண்ணலாம்...குட் நைட்"


"டேக் கேர் அண்ட் குட் நைட் சார்"என்று கதவு வரை சென்றவள் திரும்பி ஒருமுறை அவனைப் பார்த்த போது அவனின் கூர்கண்கள் அவளையேப் பார்ப்பதை கண்டவளின் கன்னங்கள் லேசாக சூடேறின.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top