• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 26 – மதுமிதா

சுரேகா சொல்லச் சொல்ல மீதி கதையை மித்ரா டைப் செய்து கொண்டிருந்தாள்.

எழுதி முடித்ததும், கதையின் தலைப்பை இதயமலரே என்று வை என்றாள் சுரேகா

என்னது இதய மலரே ன்னு டைட்டிலா நல்லாவே இல்லை

சரி நீயே நீயே ன்னு வை.

இதுவும் வேண்டாம். வேறு தலைப்பு வை

இப்போதைக்கு இந்தத் தலைப்பு இருக்கட்டும். பிறகு மாத்திக்கலாம் என்றாள் சுரேகா.

முடிவில் தலைப்புடன் கிடைத்த கதை இது.

இதய மலரே ( நீயே நீயே )
--------------------------------------------

கதையின் நாயகன் ராம்குமார் பாடகனாக காத்திருப்பவனாக முதல் காட்சியில் அறிமுகமாகிறான். அபுதாபியில் பணியில் இருக்கும் அவனுக்கு எப்போதும் ஊரின் நினைவு தான். அவனை நண்பர்கள் அனைவரும் ராஜா என்றே அழைப்பார்கள்.

அபுதாபிக்கு வந்து வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இடையில் ஊருக்குப் போகவே இல்லை. ஊரின் ஞாபகம் இப்போதெல்லாம் அதிகமாக வந்தது ராஜாவுக்கு. எப்போது ராஜா ஊருக்குத் திரும்புவான் என அவனுடைய குடும்பத்தினரும் ஊர் நண்பர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, இன்னும் ஒரு வருடத்துக்குள்ளாவது ஊருக்குத் திரும்பிப் போக முடியுமா என்று நினைத்துப் பார்த்தான்…

க்லிங்கென்ற சத்தம் கேட்டதும் பாடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு வாட்ஸப் மெசேஜை பார்த்தான் ராஜா. புதிதாக ஒரு எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. திறந்து பார்த்தால் ”வாழ்த்துகள் ராஜா” என்று மெசேஜ் இருந்தது. அப்போதுதான் தெரிந்தது, நண்பர்கள் குழுமத்தில் தான் பாடிய பாட்டின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தான். அது எழுத்தாளர்களும் கலைஞர்களும் சேர்ந்திருக்கும் குழுமம். அந்த குழுமத்தின் ஒரு எண்ணிலிருந்துதான் அந்த வீடியோ பாடல் மிகவும் நன்றாக இருந்தது என வாழ்த்தி மெசேஜ் வந்திருந்தது.

தனிமையில் புதிதாக கிரியேட்டிவாக செயல்பட முடியாமல் டல்லான மூடில் இருந்தபோது, இந்த வாழ்த்து ஒரு புத்துணர்வை அளித்து புதிய உற்சாகத்தை கொடுத்தது. மெசேஜை அனுப்பியது யாரென்று பார்த்தபோது பவித்ராம்மா என்று தெரிந்தது.

இன்னும் நித்யாவிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை… ஏன் அவளிடமிருந்து ஒரு மெசேஜும் வரவில்லை எனத் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒரு மெசேஜும் நித்யாவிடமிருந்து வரவில்லை என்பதே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி அவளால் அவனை தொடர்புகொள்ள முடியாமல் இருக்க முடிந்தது என நினைத்துப் பார்த்தான்.

சிறுவயதில் வேப்பங்குளத்தில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது முதலில் காதலில் விழுந்த போது அது அவர்களுக்குத் தெரியவில்லை. ராஜா (ராம்குமார்) சிறுவயது நித்யாவையும், நித்யா (சித்ரா) சிறுவயது ராஜாவையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுவயதில் வேப்பங்குளத்தில் கண்மாயில் விழுந்த சித்ராவை (நித்யா), பாயும் நீரின் வேகத்துக்கிடையில் நீச்சலடித்துப் போய் காப்பாற்றிக் கரை சேர்த்தவன் ராம்குமார் (ராஜா). இருவரும் காலத்தின் போக்கில் பிரிந்து இப்போது கல்லூரியில் சேர்ந்த போது அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

தங்களை அறியாமல் இப்போது இந்த வயதில் மனம் ஒன்றிணைந்தபோது சிறுவயது நட்பா, இந்தக் காதலா இதை எப்படி முடிவு செய்வது என்ற மனப் போராட்டத்தில் இருக்கின்றனர்.

பிறகு பல தடுமாற்றங்களுக்குப் பிறகு ராம்குமார் தான் ராஜா என்றும், சித்ரா தான் நித்யா என்றும் ஒரு தருணத்தில் தெரிந்து கொள்கிறார்கள். ராம்குமார் & ராஜா, சித்ரா & நித்யா இருவரும் ஒருவரே என்பது இருவருக்கும் தெரிய வருகிறது. மகிழ்ந்து போகிறார்கள்.

வேலைக்கு ராஜா அபுதாபிக்கு வந்த பிறகும் மொபைலில் இருவரும் பேசி கொண்டுதானிருந்தார்கள். ஆனால் ஏன் சில நாட்களாக அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதும் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் அவனுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஊருக்குத் திரும்பி திரைப்படத்தில் பாடுவதற்கு முன்னோட்டமாக நண்பர்களுடன் இணைந்து தயாரித்த இரு குறும்படங்களில் பாடி இருந்தான். நடிப்பை விட பாடுவது மட்டுமே அவனுக்கு பிடித்தமானதாக இருந்தது.

நித்யாவின் பிரச்சினை என்ன? ஏன் அவளிடமிருந்து தகவல் இல்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்து சரி செய்தான் என்பது சொல்லப்பட வேண்டும்.

பாடகனாக வெற்றி பெறுவதற்கான போராட்டத்தினிடையே சென்னைக்கும், தனது ஊருக்கும் ராஜா செய்யும் நன்மை எப்படி சாத்தியப்பட்டது என்பதை காட்சிப் படுத்த வேண்டும்.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, அவனுடைய மீடியா வெற்றியை, அடுத்த தனது முன்னேற்றத்துக்கென வெற்றிக்கென கவனத்தில் வைத்துக் கொள்ளாமல், ஊருக்கான நன்மை தரும் திட்டமாக எப்படி மடைமாற்ற முடிந்தது என்பது ஒவ்வொன்றாக சொல்லப்பட வேண்டும்.

நித்யாவின் கதாபாத்திரம் முழு ஆளுமையாக செதுக்கப்பட வேண்டும். பவித்ராம்மாவின் பாடல்கள் தயாரிப்பினால் தொடர்ந்த நட்பு ராஜாவை இன்னும் எவ்விதம் பக்குவப் படுத்தியது, அவரின் ஆலோசனைப்படி, இளைய தலைமுறைகள் அனைவரும் தொழில் என்று பெரு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட, முதியவர்கள் மட்டுமே குழந்தைகளின் பாசத்தில் வாடிக்கிடந்து சோகம் நிறைந்திருக்கும் ஊரில் மகிழ்ச்சியை எப்படிக் கொண்டுவருகின்றனர் என்பது சித்திரம் போல காட்சிப் படுத்த வேண்டும்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த ஊரில், பதினைந்து வருடங்களுக்கு முன்பு பொங்கிப் பெருகி ஓடிய கண்மாயில், இப்போது ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கண்மாயில், ராஜாவும் நித்யாவும் என்ன மாயம் செய்து தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்கின்றனர். மீண்டும் எப்படி ஊரில் பசுமை விரிகிறது. ஊர் மக்களை வாழவைத்து இந்தியாவுக்கே நீரின் மேலாண்மையை எப்படிக் கற்றுக் கொடுக்கின்றனர் என்பது கதை.

இந்தக் கதை உலகுக்கே நீரின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும், இதில் காட்டப்படும் வழிமுறைகளின் காட்சியால் உலகம் முழுக்க தண்ணீர் விழிப்புணர்வு பெற்று நீர் வளம் பெருகும் சரித்திர முக்கியத்துவம் பெறும் படமாக அமையட்டும். ஆனால் இது போதனை செய்யும் படமோ டாக்குமெண்ட்ரி படமோ அல்ல.

ராஜாவின் குணாதிசயங்கள் (விகடன் ஆசிரியர் கண்ணன், இயக்குநர் கவிதாபாரதியைப் பற்றி முன்னுரையில் எழுதிய குணாதிசயங்கள் இருப்பது போல முழுக்க முழுக்க காட்சிப் படுத்த வேண்டும்) பிறருக்கு உதவும் மென்மையான மனம், நித்யாவுடனான காதல், ஊரின் மீதான பற்று, பவித்ராம்மாவுடன் நீடிக்கும் நட்பு அனைத்தும் பல பரிமாணங்களில் காட்சிப் படுத்தப்பட்டு தொடர ஊருக்கு செய்யும் நன்மையுடன் அது உலகுக்கான நன்மையாக விரிய ராஜாவும் நித்யாவும் ஒன்று சேர மக்களின் வாழ்த்துடன் கதை முடிகிறது.

(பி.கு) முதலில் குறிப்பிட்ட வயல்வெளி கரும்புத்தோட்டம் வெல்லப்பாகு காய்ச்சும் காட்சிகள் சுரேகா, அசோக் பெயரில் இல்லாமல் ராஜா, நித்யா என்று பெயர் மாற்றம் செய்து விடலாம்.

பவித்ரா - சுரேகாவாகிய நானே தான். இப்போ பாடல்கள் எழுதுகிறேனே

சுபம்.

எழுதிய இந்தக் கதை தேர்வாச்சுன்னு சொன்னால் அதன் பிறகு இதை எப்படி விரிவாக எழுதணும், எத்தனை காட்சிகளாக எழுதணும் என்பதை நீங்க சொன்ன பிறகு எழுத ஆரம்பிக்கிறேன் என்று எழுதி செல்வகுமாருக்கு மெயிலில் அனுப்பி வைத்தாள்.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
நூலகத்தில் இப்போது வாடகைப் பிரச்சினை இல்லை.

பெண்களும் குழந்தைகளும் உற்சாகமாக வந்து புத்தகங்களை எடுத்துச் சென்றனர். மேலும் புதிய புத்தகங்கள் வந்தன.

அடுத்த வாசகர் வட்ட சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் கவிஞர் ஆனந்தி. முதலிலேயே அனைவருக்கும் பரிச்சயமானவர் என்றாலும் அவர் வருகிறார் என்றதும் அனைவரும் வருகைக்கு உற்சாகமாகக் காத்திருந்தனர்.

நூலகர் ஆனந்தியை வரவேற்றார்.

அடுத்து பேசிய ஆனந்தி, “இந்த நூலகம் ஆரம்பித்த நாளிலிருந்து சுரேகாவின் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நூலக வளர்ச்சிக்கு விடாமல் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறாள் என் தோழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என் அப்பா இந்த நூலகத்துக்கு வாடகை அளித்த விஷயத்தை, மறக்காமல் எழுதிக் கொடுத்திருந்தாள். அதை என் அப்பாவின் புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நூலகப் பணியில் உங்களுடன் உடன் இருக்கிறேன். அன்றும் இருந்தேன். இப்போதும் இருக்கிறேன். இனியும் இருப்பேன். புத்தகங்களை வைக்க இரண்டு ரேக்குகள் என் செலவில் வாங்கித் தருகிறேன். முடிக்கும் முன் இரண்டு முக்கியமான செய்திகள் பிளாஸ்டிக் உபயோகப் படுத்தாதீர்கள்; மரம் வளர்ப்போம்.” என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார்.

அவர் கிளம்பும் போது, ஆனந்தா வித்யாலயா பள்ளியில், பிரளயன் இயக்கத்தில் 'உப கதை' நாடகத்தில் எங்கள் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்க இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். எல்லோரும் வந்து பார்த்துவிட்டுப் போங்க என்று அழைப்பு விடுத்துச் சென்றார்.

*

வீட்டுக்கு வந்த பின்பு, தோழி ஆனந்தி தன் தந்தையின் புத்தகம் குறித்து சொல்லிச் சென்ற நினைவுகளில் சுரேகா ஆழ்ந்திருந்தாள்.

அப்பாக்கள் தான் குழந்தைகளின் வளர்ச்சியில் முழு பங்கையும் அளித்து விடுகிறார்கள். அப்பாக்களின் பெருமையை மகள்கள் எழுதி எழுதி தங்கள் அன்பையும் அப்பாக்களால் மகள்கள் தங்கள் வாழ்வில் அடைந்த உயர்வையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து பதிவு செய்து பாதுகாக்கிறோம் என்று அப்பாவின் நினைவில் மூழ்கினாள்.

தொலைபேசி அவளுடைய சிந்தனையைக் கலைத்தது.

தோழர் இளம்பரிதி பேசுகிறேன் தோழர் எட்வின் பேசுகிறேன்

சொல்லுங்க தோழர்

நீங்க இரவு, மரங்கள்னு தொகுப்பு நூல் கொண்டு வந்தீங்களே அது போல அப்பான்னு ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர்றோம் தோழர். உங்க படைப்பு இதில் இருக்கணும்னு நினைக்கிறோம். உங்க அப்பா பற்றி ஒரு கட்டுரை எழுதித் தர முடியுமா

அனுப்புகிறேன் தோழர் என்று சொன்னவள் உடனே எழுத அமர்ந்தாள்.

அப்பாவின் நல்லியல்பு நற்குணம் சமூகத்தின் மீதான பேரன்பு மன்னிக்கும் தன்மை வானுக்குக் கீழான அனைத்தைப் பற்றியும் அறிந்து தீர்க்கமாக அவற்றைச் சொல்லும் ஆற்றல் இவை அனைத்தையும் ஒரு கட்டுரையில் எப்படி எழுத முடியும்.

இருந்தும் எழுத ஆரம்பித்தாள்.

அப்பா
-----------------

அப்பா என்றாலே எப்போதும் குழந்தைகளுக்கு ஆதர்சமானவர். என் அப்பா என்று சொல்லும்போது இப்போது இருக்கும் நான் அப்பாவின் வளர்ப்பு என்று மட்டும் சொல்லி முடித்துக் கொள்ளலாம். பல சிறப்பான விஷயங்கள் புத்தகமாக எழுதும் அளவுக்கு சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட ஒரு விஷயமும் , சமுதாயத்துக்கு அவர் செய்த பணிகளில் ஒன்றையும் மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

சிறுவயதிலிருந்தே கேட்டதெல்லாம் கிடைத்து வந்த சூழலில் ஏதேனும் கிடைக்கவில்லையென்றால் அதற்காக துக்கம் கொள்ளக் கூடாது என்னும் சிறந்த கருத்தை சிறு வயதிலேயே மனதில் பதிய வைத்தார். 'கிட்டாதாயின் வெட்டென மற' இதுதான் என் நினைவில் இருக்கும் அப்பா சொல்லித்தந்த முதல் வாசகம். அவர் சமாதானம் செய்யும் விதம் அலாதியானது. ’பைவ் ஸ்டார் ஹோட்டலையும் காட்ட வேண்டும், ப்ளாட்பாரத்தில் படுக்கவும் கற்றுத்தர வேண்டும் ’ என்பது அவரது கோட்பாடு. அப்படியே அதனை நடைமுறையில் காட்டியவர். தேவையானதை வாங்கித் தருவார் காத்திருக்கும் ருசியை அறியச் செய்து, ஒரு வாரத்திற்குப் பின்பும்.

புளியங்குடியில் இருக்கையில்தான் நூலகத்துக்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். கிறுக்குப் பிடித்தாற் போல் வாசிக்கும் வழக்கம் அப்போதே பீடித்தது. எட்டாம் வகுப்பு வரை தென்காசியில் படித்தேன். பாட்டி வீட்டில் பெரியவர்கள் தரும் பணத்தை உண்டியலில் போட்டு சேமிக்கக் கற்றுத் தந்திருக்கின்றனர். சோவியத் புத்தக விழா என்று பள்ளியில் நடக்க அதில் புத்தகம் வாங்க என் உண்டியலில் உள்ள பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டு உண்டியலை குப்பையில் போட்டிருக்கிறேன். நான்தான் இப்படி செய்தேன் எனத் தெரிந்ததும் திட்டியோ அடித்தோ எதுவும் செய்யாமல் என்னை அருகில் அழைத்து உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள். இப்படிச் செய்யாதே என்று அன்புடன் கூறிய நாளில்தான் உண்மையின் மகத்துவத்தை அவர் என் மனதில் விதைத்திருக்க வேண்டும். என்ன தண்டனை எதிர்கொள்ள நேர்ந்தாலும், இன்றும் அதனால்தான் அப்படியே உண்மையைக் கூறிவிடும் தைரியம் என்னுள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோக பொய்யை நினைவு கூர்ந்து அப்படியே சொல்லத் தெரியாதென்பது வேறு விஷயம்.

எட்டாம் வகுப்பு முடிந்ததும் புளியங்குடியில் இருந்து தென்றல்நகருக்கு வந்துவிட்டார். தென்றல் நகரில் ஒன்பதாம் வகுப்பில் என்னைச் சேர்த்தார். என்னையும் தங்கையையும் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள பரதநாட்டிய வகுப்பில் சேர்த்தார். அப்போது எங்கள் சமூகத்தில் அதிகம் படிக்கவேகூட வெளியே அனுப்ப மாட்டார்கள். பெண் பெரியவளானால் படிக்க அனுப்பாமல் வீட்டில் வைத்து விடுவார்கள். என்னை திரை போட்ட ரிக்ஷாவில் படிக்க அனுப்பினார். நாங்கள் சற்றே விலகும் திரையின் இடுக்கு வழியே உலகைப் பார்த்தவர்கள்.

பத்தாம் வகுப்பு முடிக்கையில் பினாச்சியோ, மந்திரவாதி மாண்ட்ரெக், இரும்புக்கை மாயாவி, காமிக்ஸ் புத்தகங்கள் கடந்து இராஜாஜி எழுதிய மஹாபாரதம், இராமாயணம், காந்திஜியின் சத்திய சோதனை, அழிவற்ற காதல், பிரபஞ்சமும் ஐன்ஸ்டினும், பெரியார், ராகுல சாங்கிருத்யாயன், வால்காவிலிருந்து கங்கை வரை... என்று பலதரப்பட்ட நூல்களை புரிந்தும் புரியாமலும் பலமுறை படித்து முடித்திருக்கிறேன். தொடர்ந்து பார்க்கக் கிடைக்கும் புத்தகங்களைப் படித்துப் படித்து வந்த பிறகு 89 க்குப் பிறகே இலக்கிய நூல்கள் எழுத்தாளர்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

அம்மா குத்துவிளக்கேற்றி வணங்கிய பிறகுதான் காலை உணவே சாப்பிடுவார். எங்களுக்கு எதிலும் தடை கிடையாது. பஜன் பாடல்கள் விரும்பிப் பாடுவோம். கடவுள், மதம் குறித்த விவாதங்கள் நடக்கும். கடவுள் மறுப்புக் கொள்கை குறித்தும் பேசுவார். யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது அவருடைய இயல்பல்ல.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தேர்வில் அறிவியல் பிரிவு மாணவிகள் பரீட்சை அறையில் தோழிகளுக்குள் பதில்தாளை விளையாட்டைப்போல மாற்றிக்கொண்டு பரீட்சை எழுதி முடித்துவிட்டோம். அடுத்த வகுப்பு கணக்குப் பிரிவு மாணவிகள் இதைக் கேள்விப்பட்டு மறுநாள் தங்களுக்குள் பரீட்சை விடைத்தாள்களை மாற்றிக்கொள்ளும்போது பிடிபட்டுவிட்டனர். அறிவியல் வகுப்பு மாணவிகள் முதல்நாள் செய்ததால் நாங்கள் செய்தோம் என்று கூறிவிட்டனர். எங்கள் தலைமையாசிரியை பிச்சையம்மாள் அவர்கள் வகுப்புக்கு வந்தார். யார் நேற்று இப்படிச் செய்தது; தாங்களாகவே ஒப்புக்கொள்ளாவிட்டால் வகுப்பு முழுவதையும் வெளியேற்றி விடுவோம்; ஐந்து நிமிடம் தருகிறேன் உண்மையைச் சொல்லுங்கள் என்று கூறி அமர்ந்துவிட்டார். மூன்று நிமிடங்கள் முடியும் வரை வகுப்பில் அமைதி. நான்காவது நிமிடம் நான் எழுந்து நின்றேன். நான்தான் செய்தது என ஒப்புக் கொண்டேன். இப்படி வாங்கி எழுத வேண்டுமா என்றதும், இல்லை நான் வாங்கி எழுதவில்லை. நான் கொடுத்தேன் என்றேன். யாருக்கு விடைத்தாள் அளித்தாய் என்று கேட்டதும், தோழி சுதாவின் பெயரைச் சொல்லிவிட்டேன். அவள் எழுந்து நின்றாள். அவளை அமரச் சொல்லிவிட்டு என் விடைத்தாளில் பூஜ்யம் என்று பெரிய முட்டை மதிப்பெண் போட்டு, மறுநாள் பள்ளிக்கு வரும்போது தந்தையிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டுமென்று சொல்லி அனுப்பிவிட்டார். வகுப்பில் அனைவருக்கும் இனி எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிச் சென்று விட்டார்.

வீட்டில் வந்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மா சாப்பிட அழைத்தும் சாப்பிடவில்லை. அப்பா வந்த உடன் பூஜ்யம் போட்ட தாளை நேராக எடுத்துச் சென்று அவர் கையில் கொடுத்துவிட்டேன். அவர் எதுவும் சொல்லவில்லை. சாப்பிட்டாயா என்றார். இல்லை என்றதும் அம்மாவிடம் உணவு எடுத்து வைக்கச் சொன்னார். சாப்பிட்டோம். சாப்பிட்டதும் என்ன என்று கேட்டார். நடந்ததைக் கூறி தலைமையாசிரியை கையெழுத்து வாங்கி வரச் சொன்னார் என்றதும் எதுவுமே சொல்லவில்லை. கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தத் தேர்வில் எனது மதிப்பெண் ஐம்பதுக்கு நாற்பத்தி எட்டு. கடைசியில் பூஜ்யமாகி விட்டது. அன்று மட்டும் அப்பா திட்டியோ அடித்தோ இருந்தாரென்றால் எனது மனநிலை வேறு விதமாக மாறியிருந்திருக்கும். எதற்கும் கட்டுப்படாமல் போக நேர்ந்திருக்கலாம். அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் வித்தையை அப்பா சொல்லாமலேயே கற்றுக் கொடுத்திருந்தார். இன்றளவும் எந்த மாசும் தீண்டாமலும் அப்படியே மனதை தூய்மையாக வைத்திருக்கவும், உள்மன அமைதியை தக்க வைத்திருப்பதற்கும் அவர் அளித்த பயிற்சியே காரணம்.

கல்லூரிக்கு அனுப்பாமல் தனது தமக்கை மகனுக்கே என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். என்னை கல்லூரிக்கு அனுப்ப வேண்டுமென்பது அவரின் விருப்பமாக இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் இவளுக்கு மணம் செய்து கொடுத்தால்தான் அடுத்த மகளுக்கு சில வருடங்களுக்குப் பிறகு மணம் செய்யலாம் என்று கூறியதை ஏற்றுக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படிக்கலாம் என்று சொல்லி மணம் செய்து கொடுத்தார். திருமணம், குழந்தைகள் என்பதற்குப் பிறகும் அஞ்சல்வழிக் கல்வியிலேயே பி.ஏ எம்.ஏ ஆங்கிலம் முடிக்க முடிந்தது. எனது கணவர் என்னை மணக்க விருப்பம் இருப்பதை தனது தாய்மாமனிடம் சொல்லி அனுமதி பெற்றதும், அதை அவர் அங்கீகரித்ததும்கூட தனிக் கதை.

கறைபடாத கரங்கள் என போற்றப்படும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் நாராயணசாமி நாயுடு தனது மகளுக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கையில் 'எனது மகளை எனது சகோதரி மகனுக்கு மணம் செய்து கொடுத்தேன். நீங்களும் அப்படி செய்யலாம்' என அவருக்கு அப்பா ஆலோசனை அளித்ததன் பேரில் தலைவர் தனது மகளை தனது சகோதரியின் மகனுக்கு மணம் செய்து கொடுத்தார்.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
ஜப்தி என்னும் ஒரு கொடுமை தமிழகத்தை முழுதாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபோது, விவசாயிகளைக் காக்க தனிமனிதனாக தந்தை ஐபிஅர் ரகுபதிராஜா ஜப்தியை ஒழிக்க செய்த சாதனை, இன்னும் வெளிச்சத்துக்கு வராதது.

விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். வங்கிக் கடன் கட்ட மாட்டோம் என்றும் போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகளுக்காக 'பச்சைத்துண்டு' என்று ஒரு பத்திரிகை அப்போது வெளிவந்து கொண்டிருந்தது.

அப்போது எங்கள் வீட்டில் ஜப்தி செய்ய வருகின்றனர் என்று தகவல் வந்துவிட்டது. அப்பா இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அம்மா பயந்து போய்விட்டார். தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டிய சமயம். அம்மா தனது தந்தைக்கு தென்காசிக்கு தொலைபேசியில் விபரத்தை எடுத்துச் சொல்ல, பணம் வங்கியில் கட்டிவிடலாம் என தாத்தா கூறியதும் ஜப்திக்கு வந்தவர்களிடம் அப்பா இல்லையென்ற தகவல் கூறி சிறிது நேரம் கழித்து வரச்சொல்லி அனுப்பி விட்டார். தகவல் தெரிந்து நான் அம்மா வீட்டுக்கு வந்தேன். அதற்குள் அம்மாவும் தங்கையும் ஜப்தி எடுத்துபோய் விடுவார்கள் என்று பயந்து தங்கநகைகள், வெள்ளிப் பாத்திரங்களை மூட்டையில் கட்டி எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட தயார் செய்து வைத்திருந்தனர்.
வெளியே போயிருந்த அப்பா வீட்டுக்கு வந்ததும் விபரம் அவருக்கு சொல்லப்பட்டது. அம்மாவிடம் உனது தந்தையிடம் நான் பணம் வாங்கித் தொகையைக் கட்டி விட்டேனென்றால் மற்ற விவசாயிகள் வேறுவழியின்றி அவர்களும் கட்ட வேண்டிய நிர்ப்பந்தமாகிவிடும். என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியாது எனச் சொல்லிவிட்டார். அம்மா அழுது கொண்டிருந்தார். அதற்குள் அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார் என்ற தகவல் அறிந்து மறுபடியும் ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்துவிட்டனர். அப்பா முன்னால் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அந்த சாமான்கள் இருக்கும் சாக்கு மூட்டையை அம்மாவும் தங்கையும் குளியலறையில் வைத்துவிட்டனர்.

அப்பா அதிகாரிகளிடம் பணம் கட்ட ஒத்துக் கொள்ளவில்லை. அதிகாரிகள் உங்கள் மனைவி பணம் கட்டிவிடுகிறேன் என்று சொன்னார் என அப்பாவிடம் கேட்கின்றனர். என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பணம் தரமுடியாது என அப்பா சொல்லிவிட்டார். வீட்டுக்குள்ளே வந்து சாமான்களை ஜப்தி என்று எடுக்காமல், வீட்டுக்கு வருமானம் அளித்துக் கொண்டிருந்த டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டு விட்டது.

எனது தாய்வழித் தாத்தா ராமசாமி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. சக விவசாயிகளின் நலன் முக்கியம். தலைவனான நான் சொல்வது போலவே நடந்து காட்ட வேண்டும், வார்த்தை மீறக்கூடாது என்று நடந்து காட்டினார்.

அந்த ஒரு டிராக்டர் ஜப்தியின் வழக்கு மூலம் 1980 - 85 களில் தமிழகம் முழுவதும் மற்ற விவசாயிகளின் எந்தப் பொருளும் ஜப்தி செய்யப்படவில்லை. இது தனிமனித சாதனையும் கூட. அந்த டிராக்டர் வழக்கு முப்பத்தி எட்டு வருடங்களாக இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஜப்தியாக எடுத்துச் செல்லப்பட்ட டிராக்டரின் உபரி பாகங்கள் கூட இன்று அங்கே இல்லை. ஒரு எக்ஸப்ஷனல் கேஸ் அது.

இன்றும் எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை. டிராக்டர் இழந்து அதன் மூலம் வருமானம் இழந்து, நிலம் விற்றுவிட்டாலும் தன்மானம் இழக்காத தந்தை அவர் என நினைக்கையில் பெருமிதம் கொள்கிறது மனது.

அவரது தம்பி, எனது சித்தப்பா ராகவன். அண்ணன் தம்பி இருவரும் பேசுவது வியப்பாக இருக்கும். ஒருவர் விஷயத்தில் ஒருவர் தலையிடாமல், ஒருவர் சொல்வதை இன்னொருவர் மதித்துக் கேட்டு நடப்பது வேறு எங்கும் நான் கண்டதில்லை. டிராக்டர் ஜப்தியின் மூலம் வருமானம் இழந்த சித்தப்பாவும் இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கும் பெருந்தன்மை வேறு எங்கும் காண இயலாதது.
மூன்று முறை விவசாய சங்க ஒன்பது அம்ச கோரிக்கைகளுக்காக சிறைச்சாலை சென்றவர் அவர். பொதுநலம் வேண்டி சுயநலம் கருதாத எப்பேர்ப்பட்ட மனிதர் அவர் என்று நினைக்கையில் கண்கள் பனிக்கின்றன.

உயிருடன் இருக்கும் வரையில் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்படி நடந்துவிடக் கூடாது என்னும் எண்ணமே இதுவரையில் என்னை வழிநடத்திச் செல்வதாக உணர்கிறேன்.

அன்புடன்
சுரேகா

என்று இப்படைப்பை எழுதி முடித்ததும் அப்பாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

இந்த நூலகத்துக்கான ஆரம்பமும் இது வரை அரசுடன் நடக்கும் இத்தனை விஷயங்களிலும் உடன் இருப்பவர் அவர் அல்லவா.

எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அப்பாவைப் பார்க்க வீட்டுக்குக் கிளம்பினாள்.

கதவைத் திறந்தால் அப்பா சுரேகாவைப் பார்க்க வந்திருந்தார்.

அப்பா உங்களைத்தான் பார்க்க வந்தேன். வாங்க உட்காருங்க என்றாள்.

சுரேகா தன் அப்பாவிடம் கண்மாயின் நீர் வளங்கள் குறைந்ததைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.

முந்தைய காலத்தில் கண்மாய்களை எப்படி பாதுகாத்தனர்? ஏன் இப்போது அப்படி அதுபோல பாதுகாக்க முடியவில்லை? எப்போது பராமரிப்பை கைவிட்டோம்?

நதிநீர் இணைப்பு ஏன் வேண்டும்? என்று தொடர்ந்து அசோக் வரும்வரையிலும் பல விஷயங்களைப் பேசினார்கள்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb epi sis idaya malare kathai kurippu arumai athil koota neer melanmai pathi koori ullerkal nice sis. appa patriya katturai miga arumai
சிறுவயதிலிருந்தே கேட்டதெல்லாம் கிடைத்து வந்த சூழலில் ஏதேனும் கிடைக்கவில்லையென்றால் அதற்காக துக்கம் கொள்ளக் கூடாது என்னும் சிறந்த கருத்தை சிறு வயதிலேயே மனதில் பதிய வைத்தார். 'கிட்டாதாயின் வெட்டென மற'
(y)(y)(y)(y)(y)
என்ன தண்டனை எதிர்கொள்ள நேர்ந்தாலும், இன்றும் அதனால்தான் அப்படியே உண்மையைக் கூறிவிடும் தைரியம் என்னுள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
:):):):)
அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் வித்தையை அப்பா சொல்லாமலேயே கற்றுக் கொடுத்திருந்தார். இன்றளவும் எந்த மாசும் தீண்டாமலும் அப்படியே மனதை தூய்மையாக வைத்திருக்கவும், உள்மன அமைதியை தக்க வைத்திருப்பதற்கும் அவர் அளித்த பயிற்சியே காரணம்.
:):):):):):)
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
superb epi sis idaya malare kathai kurippu arumai athil koota neer melanmai pathi koori ullerkal nice sis. appa patriya katturai miga arumai

(y)(y)(y)(y)(y)

:):):):)

:):):):):):)
நன்றிம்மா Sridevi
உங்க ரசனை உற்சாகத்தைத் தருதும்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top