• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 14

கமழினியின் அறையைவிட்டு வெளியே வந்த துகிலன் அறையின் வாசலில் நின்றிருந்த பூவிழியைப் பார்த்து நிம்மதியுடன் புன்னகைக்க இருவரையும் பார்த்தபடியே அவர்களின் அருகில் வந்த வசந்த் துகிலனின் தோளில் கை வைக்க அவனின் கை மீது தன் கையை வைத்தான் துகிலன்...

மனதில் இருப்பதை வார்த்தை மூலமாகத்தான் சொல்ல வேண்டும் என்று இல்லையே... மனதில் இருப்பதை ஒரு ஸ்பரிசத்தின் மூலம் வெளிபடுத்திய துகிலனை புரிந்துக் கொண்டான் வசந்த்...! இருவரையும் ஒரே இடத்தில் பார்த்த பூவிழி புன்னகை பூத்தாள்..

வசந்த் முகம் பார்த்த துகில், “ஸாரிடா..” என்று சொல்லவும், “டேய் நீ எதுக்குடா என்னிடம் ஸாரி கேட்கிற...? உண்மையைச் சொல்ல போன நீ தெளிவாக இருந்த உன்னை குழப்பியது எல்லாமே அந்த ராதா தான்.. அவளுக்கு ஏன் இந்த புத்தி என்று எனக்கு தெரியும்..” என்று கூறினான்..

வசந்த் சொன்னதைக்கேட்டு பூவிழி குழம்ப அவளின் குழப்பத்தைப் பார்த்து சிரித்த துகில், “பூவிழி வசந்த் சொல்வது உண்மைதான்... நான் கிட்டதட்ட ஒரு வருடம் தெளிவாகத்தான் இருந்தேன்.. அந்த ராதா வந்து சொன்னதில் தான் என்னோட மனம் ரொம்ப குழம்பியது..” என்று கூறி நிறுத்தியவன்,

“குழப்பத்தில் எடுக்கும் எந்த முடிவும் தெளிவாக இருக்காது என்பது என்னோட விசயத்தில் சரியாக இருக்கு..” என்று கூறியவன், வசந்தை பார்க்க, “உன்னை எந்த அளவுக்கு குழப்பி இருக்கிற இல்ல..?” என்று கேட்டான் வசந்த்..

துகிலன் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு, “டேய் என்னை எதுக்குடா அவள் தேவை இல்லாமல் குழப்பினாள்..?” என்று புரியாமல் வசந்திடம் கேட்டான் துகிலன்..

“அவ என்னை ஒன்சைடா விரும்பினாள் துகில்.. ஆனால் நான் பூவிழியை விரும்புறேன் என்று சொன்னதும் இவளையும் குழப்பி, உன்னையும் குழப்பி யாரோட வாழ்க்கையிலும் நிம்மதி இல்லாமல் பண்ணிட்டா..” என்று வெறுப்புடன் கூறினான் வசந்த்..

அவன் அப்படி சொன்னதுமே, “அவள் குழப்பினால் நானாவது குழம்பாமல் இருந்திருக்கலாம்..?” என்று துகிலன் தன்னுடைய தவறைச் சொல்ல, “டேய் நம்ம மனசு ஒரு நீரோடை போல.. அதோட போக்கில் நாம் போனால் வாழ்க்கை ரொம்ப தெளிவாக இருக்கும்.. ஆனால் அதில் சந்தேகம் என்ற கல்லெறிந்தால் அந்த நீரில் சில சலசலப்பு வரும்..” என்று கூறியவன்,

“நீரோட சலசலப்பு சில நொடியில் சரியாகிவிடும்.. ஆனால் மனநீரில் ஏற்படும் சந்தேக சலசலப்பு நொடியில் மாறாது.. அதுக்கும் சில கால கட்டம் வரணும் இல்ல வசந்த்..” என்று புன்னகையோடு கேட்ட துகிலனின் முகம் பார்த்த வசந்த்,

“டேய் நீ எப்பொழுதும் தெளிவாக இருடா.. யாரும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது..” என்று சந்தோஷமாகச் சொல்ல, “உள்ளே ஒரு குட்டி பிசாசு தூங்கிட்டு இருக்கு அதை உசுப்பி எழுப்பி விட்டுறாதா வசந்த்.. அப்புறம் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது..” என்று சொல்ல வசந்த் புரியாமல் பார்த்தான்..

பூவிழி, “யாருடா அந்த குட்டி பிசாசு..” என்று சந்தேகமாகக் கேட்க, “அங்கே பாரு பூவிழி கட்டலில் படுத்து எப்படி தூங்குது பாரு மை டியர் குட்டி பிசாசு..” என்று சந்தோஷமாகக் கூறினான்..

‘இவன் யாரை சொல்கிறான்..’ என்று அறையின் உள்ளே பார்க்க அங்கே தூங்கிக்கொண்டிருந்த கமழினியைப் பார்த்த வசந்த், “அவ உன்னோட குட்டி பிசாசா..?” என்று கேட்டதும், “ஆமா வசந்த் இதில் உனக்கு என்ன டவுட்..?” என்று சிரிப்புடன் கேட்டவனை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முறைத்தனர்..

இருவரையும் பார்த்த துகில், “உன்னோட டவுடை நான் கிளியர் பண்றேன்.. அவள் எழுந்து வரட்டும்..” என்று சாதாரணமாகக் கூறியவன் சிரிக்க இருவரும் சேர்ந்து துகிலனைத் துரத்த, “டேய் என்னோட பிசாசு தூங்கிட்டு இருக்குடா.. இருவரும் சேர்ந்து எழுப்பி விட்ராதீங்கடா..” என்று கத்தியவனை பார்த்து இருவரும் சிரித்தனர்..

அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆக பிறகு, “வசந்த் நான் உன்னிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன் பதில் சொல்லுடா..” என்று தயக்கத்துடன் கேட்டவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த வசந்த், “கேளுடா இதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்..?” என்று கேட்டான் வசந்த்..

“கமழினியை நான் நல்ல பார்த்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை உனக்கு எப்படிடா வந்தது..?” என்று நிறுத்தி நிதானமாக துகிலன் கேட்டதும், “கமழினியை என்னைவிட நீ அதிகமாக நேசிக்கிற இல்ல.. அந்த நேசம்தான் எனக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தது..” என்றவனின் கேள்விக்கு புன்னகையோடு பதில் கொடுத்தான் வசந்த்..

அவனின் பதிலில் சிரித்த துகில், “இந்த நம்பிக்கையோடு இருடா.. உன்னோட தோழியின் கடந்த காலத்தின் நினைவுகளை நான் மீட்டு எடுக்கிறேன்..” என்று சொன்னவன், பூவிழியின் பக்கம் திரும்பி, “உனக்கும், வசந்த்திற்கும் திருமணம் ஆனதை நீ அவளிடம் சொல்லாதே.. அப்புறம் அப்பா இறந்த விஷயமும் தான்...” என்று எச்சரிக்கையோடு கூறினான் துகிலன்..

அவன் சொன்னதைக் கேட்ட வசந்த், “டேய் அவளோட உடல்நிலை பற்றி நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும் டா..” என்று சொல்ல, “அவளோட மனநிலை பற்றி கேட்க கூட எனக்கு நேரம் இல்லடா.. சோ சாரி..” என்று வசந்திடம் கூறியவன் பூவிழியின் பக்கம் திரும்பி, “நீ இப்போ என்னோடு வருகிறாயா..?” என்று கேட்டான்..

அதற்கு பூவிழி, “ம்ம் வா போலாம்..” என்று சொல்லியவள் கமழினி எழுந்திருப்பதைப் பார்த்து வசந்திடம் கண்ணசைவில் விடைப்பெற்று சென்றாள்.. அவள் சென்ற மறுநொடி கமழினி எழுந்து வர வசந்தை பார்த்த துகிலன்,

“இனிமேல் எனக்கு போன் பண்ண நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்.. கல்யாண பேச்சு வார்த்தை பேசத்தான் அவளோட அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் இருக்காங்க இல்ல.. அப்புறம் நீ எதுக்கு தேவைஇல்லாமல் என்னோட வழியில் கிராஸ் பண்ற..?” என்று கேட்ட துகிலனைப் பார்த்த வசந்த்திகைத்தான்..

‘இந்நேரம் வரையில் சரியாகத்தானே இருந்தான்.. இப்பொழுது எதுக்கு என்னை எடுத்தெறிந்து பேசறான்.. ஆமா நான் எப்போ இவனுக்கு போன் பண்ணினேன்..’ என்று வசந்த் தீவிரமாக யோசனை செய்ய அங்கே நடப்பதை எல்லாம் பார்த்து கோபத்துடன் துகிலனின் அருகில் வந்தாள் கமழினி..

“ஏய் நீ எதுக்கு அவனை திட்டுகிற..?! வசந்த் இந்த வீட்டில் ஒருத்தன்.. அவனை பேச நீ யாருடா..” என்று கேட்டதும் தான் கமழினி அங்கே வந்ததை உணர்ந்தான் வசந்த்.. அவளின் கேள்வியில் அவளை திரும்பிபார்த்த துகிலன், “ஏன் நான் யார் என்று உனக்கு தெரியாதா..? எங்கே என்னை தெரியாது என்று சொல்லு பார்க்கலாம்..” என்று இடது புருவத்தை தூக்கியபடியே அவளைப் பார்த்தான்..

அவனின் அலட்சியம் நிறைந்த பார்வை அவளின் பார்வையோடு ஊடுருவிச் சென்று அவளின் மனதில் பதிய அந்த நொடியே அவளின் மனதில் இருந்த பிரதிபிம்பம் நிழல் போல அவளின் மனதில் எழுந்தது.. அந்த அளவிற்கு அவளை ஆழ்ந்து பார்த்தான் துகிலன்..

அந்த நிழலைப் பார்த்த கமழினி, “வசந்த் இவனை நான் எங்கையோ பார்த்த மாதிரியே இருக்கு.. இவனோட பார்வை.. பார்வை..” என்று தனது மனதில் இருந்த பிம்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபடியே நின்ற தோழியைத் திகைப்புடன் பார்த்தான் வசந்த்..

இதுநாள் வரையில் அவன் முயற்சிக்கு கிடைக்காத பலன்.. துகிலனின் ஒரு அலட்சியப்பார்வைக்கு பலன் கிடைத்தது.. அவள் யோசனையோடு நிற்க வசந்திற்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது.. கமழினி மனதில் தோழமை மட்டும் அல்ல.. துகிலனின் மீதான காதலும் இருக்கிறது என்பதை கண்கூட உணர்ந்தான் வசந்த்..

இந்த விஷயம் அவன் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று.. துகிலன் திடீரென்று தன்னிடம் காத்த ஆரம்பித்ததன் அர்த்தம் இப்பொழுது அவனுக்கு புரிந்தது.. துகிலன் அவள் யோசிப்பதைப் புன்னகையோடு பார்த்துவிட்டு, “நீ நல்ல யோசித்து வை.. நான் கிளம்பறேன்..” என்று கமழினியிடம் அலட்சியமாகக் கூறியவன், “நான் சொன்னது எல்லாம் நினைவு இருக்கட்டும்..” என்று வசந்தை எச்சரிக்கை செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான் துகிலன்..

துகிலன் செல்வதைப் பார்த்த கமழினி, “வசந்த் இவனை எனக்கு சுத்தமாக பிடிக்கல.. உன்னையே யார் என்று கேட்கிறான்.. அப்பாவிடம் பேசணும்..” என்றவள் வெறுப்புடன் சொன்னதும், “அடியே உனக்குள் இவ்வளவு தைரியமா..?” என்று வியப்புடன் கேட்டான்..

அவனின் கேள்வியில் அவனை திரும்பிப் பார்த்தவள், “லூசு நீ இருக்க எனக்கு என்னடா கவலை..?! அப்பாவிடம் நீயே பேசிரு..” என்று சாதாரணமாகக் கூறியவளைப் பார்த்த வசந்த், “காலையில் திருமணத்துக்கு ஓகே சொன்னியே அது என்ன ஆச்சு..” என்று அவளிடம் தூண்டில் போட்டான் வசந்த்..

அப்பொழுதுதான் துகிலன் செய்த சேட்டை அவளின் நினைவுக்கு வர வேகமாகத் திரும்பியவள், “இல்ல இல்ல நீ அப்பாவிடம் பேசவே வேண்டாம்..” என்று கையெடுத்துக் கும்பிட்டவளைப் பார்த்த வசந்த் அவளைப் பார்த்து சிரித்தான்..

அவனின் சிரிப்பைப் பார்த்த கமழினி, “எதுக்குடா இப்படி சிரிக்கிற..?” என்று சிணுங்கலுடன் கேட்டாள்.. அவளின் கேள்வியில், “இல்லடி இவ்வளவு வேகமாக வேண்டாம் என்று சொல்றீயே..? அந்த அளவுக்கு அவன் என்ன செய்தான்..?” என்று சிரிப்புடன் கேட்டான் வசந்த்..

அவனின் கேள்வியில், “டேய் உன்னிடம் எல்லாத்தையும் சொல்ல முடியுமா..? போடா இருக்கிற கடுப்பை கிளப்பிவிடாதே..” என்று கூறியவள், “அவன் எதுக்கு இங்கே வந்தான்..?” என்று கேட்டதும், “ம்ம் இன்னும் பத்துநாளில் உனக்கும் அவனுக்கும் திருமணம் என்று அவனுக்கு போன் பண்ணி சொன்னேன்.. அதுதான் வந்து சாமியாடிட்டு போறான்..” என்று சாதாரணமாக அவளின் தலையில் இடியை இறக்கி வைத்தான் வசந்த்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவன் சொன்னதும், “ஏய் என்ன இன்னும் பத்து நாளில் திருமணமா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவள், “என்னடா நடக்குது இங்கே..? பொண்ணு பார்க்க வராங்க என்று சொல்லிட்டு இப்போ திருமணம் என்று சொன்னால் என்னோட படிப்பு என்னாவது..?” என்று கேட்டவளின் முகம் கலையிளந்து போயிருந்தது...

அவளின் முகத்தைப் பார்த்த வசந்த், “டேய் உன்னோட படிப்புக்கு நான் கேரண்டி.. திருமணத்தை முடித்துவிட்டு நேராக நாம் கன்னியாகுமரி போகலாம்..” என்றவன் நிதானமாக அவளுக்கு எடுத்துச் சொல்ல அவளும் அமைதியாகக் கேட்டுக் கொண்டாள்..

‘ஐயோ என்னோட நிலையில் இருந்து யோசிக்க இருந்த ஒரே ஜீவனையும் இப்பொழுது பேச முடியாத அளவுக்கு பண்ணிட்டானே..’ என்று அவள் மனதிற்குள் துகிலனை வறுத்தெடுக்க, ‘யாரு அவனா..?’ என்று கேட்டு அவளின் மனம் அவளை கேலி செய்தது..

வீட்டில் இருந்த அனைவரிடமும் விடைபெற்று காரில் ஏறிய துகிலனைப் பார்த்த பூவிழி, “டேய் நீ எப்படிடா இப்படி மாறி போனா..?” என்று கேட்டதும், “தாமரை சொல்லும் பொழுது நட்போட அருமை புரிந்தும் நான் கொஞ்ச நாளில் குழம்பிட்டேன்.. ஆனால் நீ வந்தபிறகு எனக்கு நட்போட வலிமை புரிஞ்சிருக்கு..” என்று கூறியவனைப் பார்த்த பூவிழி,

“உன்னைவிட நான் ரொம்ப போஸிசிவாக இருந்தேன் துகில்.. ஆனால் அதை எல்லாம் கமழி தான் மாற்றினாள்..” என்றவள் அந்த நாளின் நினைவுகளோடு உறவாட, துகிலனின் காதல் மனம் அவளின் நினைவுகளோடு பயணிக்க காரை எடுத்தான்..

சீரான வேகத்தில் காரை செலுத்திய துகிலன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.. அந்த பயணம் முழுவதும் ஒருவித மௌனத்துடன் கழிய வீட்டின் முன்னே காரை நிறுத்தியதும் இறங்கிய பூவிழி முதலில் பார்த்தது வாசலில் அமர்ந்திருந்த சாரதாவைத்தான்..

பூவிழி காரை விட்டு இறங்கியது சாரதாவை நோக்கிச் செல்ல காரைவிட்டு இறங்கிய துகிலன், “என்னம்மா வெளியே உட்கார்ந்திருக்கீங்க..?” என்று கேட்டபடியே அவரின் அருகில் சென்று அமர்ந்தான்..

அவனைப் பார்த்த சாரதா, “உன்னோட கேள்விக்கு எல்லாம் பதில் கிடைத்தா..?” என்று புதிருடன் கேட்டதும், “என்னோட கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கல.. ஆனால் இனிமேல் நானே பதிலாக மாறலாம் என்று இருக்கேன்..” என்று சொன்னவனை புன்னகையோடு பார்த்தாள் பூவிழி..

பிறகு பூவிழியின் பக்கம் திரும்பிய சாரதா, “அங்கே என்னடா நடந்தது..?!” என்று கேட்டதும், “இவன் அங்கே வந்து ருத்ரமூர்த்தியாகவே மாறிட்டான்.. என்னால் இவனை சமாளிக்க முடியும் என்றே தோன்றவே இல்ல அம்மா..” என்று கூறியதும் தான் துகிலனுக்கு சந்தேகம் வந்தது.. அந்த சந்தேகத்தை அம்மாவிடம் கேட்டுவிட்டான்..

“அம்மா நான் கமழினியைக் காதலித்தது உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று கேட்டதும், “அது எல்லாம் எனக்கு தெரியாதுடா.. ஆனால் கன்னியாகுமரியில் பிரண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வந்த பிறகு உன்னில் பல மாற்றங்கள்..” என்று கூறினார்..

“அப்புறம் ஒருநாள் பூங்காவில் உட்கார்ந்து கமழினி கூட பேசிட்டு இருந்ததை நான் பார்த்தேன்.. அப்பொழுதில் இருந்தே கமழினியை எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்று சொல்ல, “அம்மா அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்று உங்களுக்கு தெரியுமா..?” என்று தன்னுடைய தலையாய சந்தேகத்தைக் கேட்டான் மகன்..

அவனின் முகத்தைப் பார்த்த சாரதா, “உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும் துகில்.. இருந்தாலும் நான் அமைதியாக இருந்தது.. உன்னோட காதலுக்கு நீ எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கற என்று தெரிஞ்சிக்கத்தான்..” என்று தெளிவாகக் கூறினார்..

அவரின் முகத்தைப் பார்த்த துகில், “சரிம்மா எல்லாம் ஓகே.. இனிமேல் இருவரும் சேர்ந்து, திருமணவேலையை சீக்கிரம் பாருங்க..” என்று சொல்லிவிட்டு புன்னகை முகத்தோடு அறைக்குள் நுழைந்தவன் காலையில் இருந்த பதட்டம் எல்லாம் மாறி, ‘கமழினியை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்..’ என்ற எண்ணத்தோடு படுக்கையில் விழுந்தவன் நினைவுகள் அனைத்தும் அவளை நோக்கிப் பயணித்தது..

இருந்தாலும் அதற்கு கடிவாளம் இட்டு தன்னுடைய மனதை ஒருநிலைக்கு கொண்டுவந்து தூங்க ஆரம்பித்தான்.. நாட்கள் சீக்கிரம் விரைந்து செல்ல கல்யாணவீடு களை கட்டியது.. திருமணத்திற்கு உண்டான எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று செய்தான் வசந்த்..

இதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கமழினி, ‘எனக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை நடத்த இவங்க எல்லாம் எவ்வளவு மும்பரமாக வேலை செய்யறாங்க..?’ என்ற யோசனையுடன் உலவினாள்..

அவளின் மனம் விருப்பமே இல்லாமல் நாளை நெட்டி தள்ளிக்கொண்டு இருக்க அவளின் மனமோ குழப்பத்தில் தவித்தது.. துகிலனின் ஒவ்வொரு செயலும் வசந்திற்கு எதிராக இருந்தது.. ‘வசந்தின் நட்பை கைவிட்டு தானா இவனின் கரத்தை நான் பிடிக்கணுமா..? அப்படி ஒரு திருமணம் தேவைதானா..?’ என்று அவளின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது..

அதுமட்டும் இன்றி அவள் மறந்த நினைவுகள் அனைத்தும் துகிலனின் மூலம் தூண்டப்பட நிழல் போல அவனின் மனதில் அடிக்கடி சில பிம்பங்கள் வந்து வந்து மறைய அவளுக்கு பைத்தியமே பிடிப்பது போல இருந்தது..

எந்த நேரத்திலும் அவளின் மனதில் தோன்றும் துகிலனின் அலட்சியம் மிகுந்த பார்வை அவளின் மனதினை தூண்ட வசந்த் நட்பினை கைவிட வேண்டிய நிலை வந்துவிட்டதோ என்று ரொம்பவே குழப்பத்தில் ஆழ்ந்தாள் கமழினி..

அவள் எப்பொழுதும் யோசனையாக இருப்பதைப் பார்த்த வசந்த், “டேய் துகில் அவளுக்கு ஏதாவது ஆகிட போகுதுடா..” என்று ஒரு நண்பனாக அவன் கவலைப்பட அவனின் தவிப்பைப் பார்த்த துகில்,

“என்னதான் படிப்பு, பகுத்தறிவு எல்லாம் இருந்தாலும் நட்பு, காதல் இந்த இரண்டும் வரும் பொழுது எல்லாம் மாறிவிடுது இல்ல வசந்த்..?” என்று கேட்ட துகிலனைப் புரியாமல் பார்த்தான் வசந்த்..

அவனின் பார்வையை உணர்ந்த துகில், “டேய் நீ ஒரு மனநல மருத்துவர் என்பதையே மறந்துட்ட இல்ல..?” என்று கேட்டவன், “நான் உன்னோட சண்டை போட போட அவளுக்கு கோபமும் குழப்பமும் அதிகமாக வரும்.. அதே மாதிரி இது எல்லாமே எங்கோ நடந்தது போல அவளுக்கு தோன்றும்.. அப்போ அவள் யோசித்தால் அவளோட நினைவுகள் எல்லாம் திரும்ப வந்துவிடும்..” என்று புன்னகையோடு சொன்ன துகிலனைப் பார்த்த வசந்த்,

“அந்த நினைவுகள் மீண்டு வந்தால் உன்மேல் வெறுப்பும் வரும் பரவல்லையா துகில்..?” என்று கேட்ட வசந்தின் முகம் பார்த்த துகிலனின் முகம் மாறிப்போனது.. ஆனாலும் தன்னை சமாளித்துக்கொண்ட துகில்,

“வெறுப்பு என்மேல் தானே வரும்..? அதுக்கு பயந்து அவளை குணப்படுத்தாமல் விட முடியுமா..? என்ன பழைய நினைவு வந்தால் என்னை விட்டு பிரிஞ்சி போடா நினைப்பாள்..” என்று வலியோடு கூறிய துகிலனின் முகம் பார்த்த வசந்த் மனமும் வலித்தது..

துகிலனை பிரிந்து விடுவாளா கமழினி..?! இல்லை அவனுடன் வாழ்வாளா..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis... Nice Ud sis..

Wow... thukil... today UD la una enaku pidichuruku da...sema performance... po...

sarathama... good mothernu proof panitanga...

kamazhiniku ellam niyabagam vanthal... kobam irukum... kandipa verupu... irukathu thukil... so.. full actionla perform panu da...

Radhaku vasanth mela irunthathu love ila... love irunthuruntha... epadi... pazhi vangiruka mata... athan marriage aitola... en intha kolaveri... stupid girl... eapdi ellarium confuse pani... avanga lifeah waste panita...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top