• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2௦

மதியம் ரயிலில் ஏறியவர்கள் கிட்டதட்ட இரவு எட்டுமணி போல கன்னியாகுமரியைச் சென்று அடைந்தனர்.. அவர்கள் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இறங்கி நால்வரும் வீடு போவதற்குள் மணி இரவு ஒன்பது ஆகிவிட்டது.. வசந்த் மருத்துவமனையில் வேலை செய்வதால் அவன் மட்டும் தங்குவதற்கு என்று பெரிய வீட்டையே வாடகைக்கு எடுத்திருந்தான்..

அவர்கள் எடுத்த வாடகை காரில் நால்வரும் வீட்டிற்கு வந்து இறங்கியதும் வேகமாக சென்று கதவைத் திறந்தான் வசந்த்.. துகிலன், கமழினி, பூவிழி மூவரும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.. ‘வசந்த் ஏன் வீட்டிற்குள் வேகமாகச் செல்கிறான்..?’ என்ற யோசனையுடன் அவனைப் பின் தொடர்ந்த துகிலனுக்கு அவனின் கையில் இருந்த போட்டோ பிரேம்மைப் பார்த்தும் புரிந்து போனது..

வசந்த் கையில் இருந்த இரண்டு போட்டோவையும் பார்த்த துகிலன், ‘ஒன்னு இவனின் திருமண போட்டோ.. இன்னொன்று பூவிழியின் அப்பாவின் போட்டோ..’ என்று மனதிற்குள் நினைத்தான்..

வீட்டின் உள்ளே நுழைந்த துகிலனை வரவேற்ற வசந்த் தன்னறையில் சென்று சூர்கேஸை வைத்துவிட்டு வர வீட்டைச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றினாள் பூவிழி.. ஒரு ஹாலும், ஒரு சமையலறையும், இரண்டு படுக்கை அறையும் உடைய வீட்டை ரொம்பவே சுத்தமாக வைத்திருந்தான் வசந்த்..

அதையெல்லாம் பார்த்த கமழினி, “டேய் வசந்த் வீட்டை ரொம்ப அழகாகவே பராமரித்திருக்கிறாய்..” என்றவளின் குரலில் சந்தோசம் வெளிப்படையாகத் தெரிய பூவிழி யோசனையுடன் துகிலனையும், கமழினியையும் பார்த்தாள்..

அவளின் பார்வையில் இருந்த அர்த்ததை அவள் சொல்லாமலே உணர்ந்துக் கொண்ட வசந்த் துகிலனை நிமிர்ந்து பார்க்க, ‘இல்ல வேண்டாம்..’ என்று மறுப்பாக தலையசைத்தவன்..

“வீடு ரொம்ப நல்ல இருக்கு..” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்வது போலவே சொன்னான்.. அதுவரை வீட்டை ரசித்த கமழினி, “என்ன இப்படியொரு வெறுப்பு..?” என்று கேட்டவள் துகிலனை முறைத்துவிட்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்று மறைந்தாள்..

அவள் சென்றதும் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய துகிலன், “பூவிழி உன்னோட மனசில் இருக்கும் இந்த ஆசை நடக்காது.. அவள் அவளாகவே இருப்பதுதான் இப்பொழுது அவளின் மன நிலைக்கு நல்லது..” என்று மெல்லிய குரலில் அழுத்தத்துடன் சொன்னான்..

அவனின் முகத்தைப் பார்த்த வசந்த், “பூவிழி அவனை ரொம்ப நோகடிக்காதே..” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.. அவன் சென்றதும் சோபாவில் அமர்ந்த துகிலனின் மனதில் அமைதி நிலவியது..

அவனுக்கு அமைதியைக் கொடுத்துவிட்டு பூவிழி கமழினியைப் பின் தொடர்ந்து செல்ல வசந்த் அவனின் அறைக்குள் சென்று மறந்தான்.. எல்லோரும் சென்ற பிறகு அமைதியாக அமர்ந்து இருந்த துகிலனின் அருகில் கொலுசு சத்தம் கேட்க நிமிர்ந்துப் பார்த்தான்.. அங்கே கமழினி நின்றிருந்தாள்..

அவளின் முகத்தைப் பார்த்த துகிலன், “என்ன தாமரை..?” என்று கேட்டதும், “இல்ல உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்..” என்று சொன்னவளின் குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்த துகிலன் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

அவனின் பார்வையை உணர்ந்துக்கொண்ட கமழினி, “நானும் அக்காவும் ஒரு அறையில் படுத்துக் கொள்கிறோம்.. நீங்க இன்னைக்கு ஒருநாள் மட்டும் வசந்த் அறையில் படுத்து தூங்குங்க..” என்றவளின் குரலில் தயக்கம் இருந்தது..

‘அவள் எதுக்கு இவ்வாறு தயங்குகிறாள்..?’ என்று துகிலனுக்கு நன்றாகவே புரிந்தது.. அவளைப் பொறுத்தவரையில், இப்பொழுது வசந்தை துகிலனுக்கு பிடிக்காது..’ என்று அவளை இருவரும் சேர்ந்து நம்ப வைத்திருப்பதால் தான் அவளின் குரலில் இந்த தயக்கம்..!

அவளின் முகத்தைப் பார்த்த துகில், “அதுக்கு என்னடா ஒருநாள் தானே நான் படுத்துக்கொள்கிறேன்... நீ போய் படு..” என்று சொன்னவன் சோபாவில் அமர அவனின் முகத்தைப் பார்த்த கமழினி, “தேங்க்ஸ்..” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவளின் அறையை நோக்கி ஓடினாள்..

அதை புன்னகையோடு பார்த்த துகிலன் எழுந்து வீட்டைவிட்டு வெளியே வர வீட்டின் இடதுபுறம் இருந்த தோட்டத்தைப் பார்த்தவனின் அங்கிருந்த அமைதியை நாடிச்செல்ல அமைதியாகச்சென்று தோட்டத்தில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்..

இரவு நேரத்தில் வானில் உலா போன வெள்ளி ரத மேகமும், வானில் நீந்தும் நிலா மகளும், நட்சத்திர பூக்களும் சில்லென்ற தென்றல் காற்றும் அவனின் மனதிற்கு அமைதியைக் கொடுக்காமல் இருந்தது.. அதையெல்லாம் பார்த்தவனின் மனம் எந்த நிலையில் இருக்கிறது என்று அவனால் கூட உணர முடியவில்லை..

ஏதோவொரு கனத்த உணர்வில் அவனின் மனம் சிக்கித்தவிக்க அதிலிருந்து வெளியே வர முடியாமல் இரவு நேரத்து தென்றலை ரசித்தபடியே அமர்ந்திருந்தான் துகிலன்.. இவன் தோட்டத்திற்கு வந்ததைப் பார்த்த வசந்த் அவனின் பின்னோடு வந்தான்..

அவன் துகிலனை நெருங்கியதும், “வா வசந்த்..” என்று அழைத்த துகிலன், “தூக்கம் வரவில்லையா..?” என்று கேட்டவனின் முகம் பார்த்த வசந்த் இல்லையென தலையசைக்க, “வசந்த் உன்னிடம் கொஞ்சம் பேசணும் உட்காரு..” என்று சொன்னவன் வசந்த் அமர இடம் விட்டு தள்ளியமர்ந்தான்..

அவனின் அருகில் அமர்ந்த வசந்த், “என்னடா விஷயம்..?” என்று கேட்டதும் அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த துகில், “நாளைக்கு பெரிய மாமாவுக்கு திதி கொடுக்கணும்.. அதுவும் கமழினி தெரியாமல் திதி கொடுக்கணும்..” என்று சொல்ல வசந்திற்கு, ‘அவன் என்ன சொல்ல வருகிறான்..’ என்று புரிந்தது..

“காலையில் அவள் காலேஜ் போனதும் நாம போய் திதி கொடுத்திவிட்டு வரலாம் துகில்..” என்று வசந்த் சொல்ல அதுதான் சரியென்று துகிலனுக்கு பட இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.. அப்பொழுது துகிலனின் முகம் பார்த்த வசந்த், “துகில் எனக்கு ஒரு சந்தேகம்..?” என்று கேட்டான்..

அவனின் கேள்வியில் நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்த துகில், “ம்ம் கேளுடா..” என்று பொறுமையாகச் சொல்ல, “இல்லடா கமழினியை நீ பிரிந்து இப்போ ஐந்து வருடம் ஆச்சு.. இந்த ஐந்து வருடத்தில் அவளின் நினைவு உனக்கு வரவே இல்லையா..?” என்று அவனின் மனதில் இருந்த சந்தேகத்தைக் கேட்டான் வசந்த்..

அவனின் கேள்வியில் சிரித்த துகில், “உன்மேல் இருந்த கோபத்தில் தான் வசந்த் நான் கமழினியைப் பார்க்கவே வரல.. அதுவும் இல்லாமல் அவள் இல்லாத தனிமைப் போக்கத்தான் நானே தொழில் தொடங்கினேன்..” என்று கூறினான்..

“என்னோட படிப்பு முடிந்ததும் சர்டிபிகேட் எல்லாத்தையும் பேங்கில் வைத்து லோன் வாங்கினேன்.. தொழில் தொடங்க ஒரு இடம் பார்த்து அங்கே ஜவுளிகடையைத் திறந்தேன்.. ஆனால் நான் அவளை மறக்கவே இல்ல.. எப்படி இருந்தாலும் அவளாக ஒருநாள் என்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது..” என்று கூறியவனை வசந்த் அமைதியாகப் பார்த்தான்..

துகிலனோ, “இந்த ஐந்து வருடத்தில் எல்லாவற்றிலும் பெரிய மாற்றம் வந்துச்சுடா.. என்னோட காதலில் மட்டும் எந்த மாற்றமும் வரவே இல்ல..” என்று கூறியவன் துகிலனைப் பார்த்து, “ஒரு நல்ல காதலனாக என்னால் இருக்க முடியாமல் போச்சு... ஆனால் ஒரு நல்ல கணவனாக இருக்க என்னால் முடியும் வசந்த்..” என்று தெளிவாகப் பேசினான்..

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட வசந்த் அவனின் தோளில் கைபோட்டு, “எல்லோரும் ஒரு திசையில் போறாங்க என்றால் நம்ம வாழ்க்கையோட திசையே வேறாக இருக்கிறது துகில்... எது எப்படி இருந்தாலும் அவளின் நினைவை நாம் மீட்டு எடுத்துவிடுவோம்..” என்று நம்பிக்கையோடு சொன்னான்..

அவனின் நம்பிக்கையான வார்த்தைக் கேட்ட துகில், “வசந்த் என்னோட கணிப்பு சரியாக இருந்தால் அவள் தேர்வு எழுதும் கடைசி நாள் வரையில் தான் அவள் இப்படி இருப்பாள்..” என்று கூறியவனைப் புரியாமல் பார்த்தான் வசந்த்..

அவனின் பார்வையை உணர்ந்த துகில், “யெஸ்.. அவளுக்கு எல்லாம் ஞாபகம் வர இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு..” என்று சொல்ல, “ஒரு டாக்டர் என்னால் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை நீ எப்படிடா தெளிவாகச் சொல்கிறாய்..” என்று சந்தேகமாகக் கேட்டான்..

அவனின் கேள்வியில் சிரித்த வசந்த், “நாளைய விடியல் நமக்கு ஒரு சவாலை வைத்திருக்கிறது..” என்று கூறியவன் வசந்தின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அவளுக்கு தெரியாமல் நாம் திதியை முடிக்கணும் என்று நினைக்கிறோம்..” என்று துகில் சொல்ல அவன் சொல்ல வருவதை கவனித்தான் வசந்த்..

“சப்போஸ் அது நடக்கல.. இந்த திதியைப் பற்றிய உண்மை கமழினி தெரிய வருது என்றால் அது அவளுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும்.. அந்த அதிர்ச்சி தான் அவளின் சிந்தனையைத் தூண்டும்..” என்று துகில் சொல்ல, “இந்த உண்மையைச் சொன்னால் அவளின் உயிருக்கு கூட ஆபத்து வரும் துகில்..” என்று வசந்த் எச்சரிக்கை குரலில் கூறினான்..

“அது எனக்கும் தெரியும் வசந்த்.. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று பழமொழியே இருக்கு.. நம்ம அவளின் உயிருக்கு ஆபத்து வருமோ என்று உண்மையை மறைக்க நினைக்கிறோம்.. ஆனால் அந்த உண்மை அவளுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையும் நாம் தெரிஞ்சி வச்சுக்கணும் வசந்த்..” என்று சொல்ல சிந்தனையில் ஆழ்ந்தான் வசந்த்..

பிறகு நிமிர்ந்தவன், “நாம் ஏன் நெகட்டிவாக நினைக்கணும்..? பாஸிடிவ்வாக நினைக்கலாம்.. நடப்பது எல்லாம் நன்மைக்கே..” என்று வசந்த் சொல்ல அந்த இடத்தில் இருந்து எழுந்தவன், “எல்லாவற்றிலும் இருக்கும் நெகடிவ்வை தெரிந்து வைத்திருப்பது தவறில்லை வசந்த்..” என்று கூறியவன், “வா போய் தூங்கலாம்..” என்று சொல்ல அவனுடன் எழுந்து சென்றான் வசந்த்..

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
காலையில் எழுந்த பூவிழி குளித்துவிட்டு வசந்திடம் கேட்டது எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று அறிந்தவள் சமையலைத் தொடங்க அவளின் பின்னோடு எழுந்து வந்த கமழினியைப் பார்த்த பூவிழி,

“ஏய் என்னடி காலேஜ் கிளம்பனும் என்ற எண்ணமே இல்லாமல் இப்படி ஆடி அசைந்து எழுந்து வர..?” என்று கேட்டவளை முறைத்த கமழினி, “மனுஷனை நிம்மதியாக தூங்கவிடாமல் செய்வதே உனக்கும் உன்னோட புருஷனுக்கும் வேலையாகப் போச்சு..” என்று சொன்னவள் குளிக்க சென்றாள்..

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த வண்ணம் திரும்பிய பூவிழிக்கு அப்பொழுதுதான் அவள் சொன்னதன் அர்த்தம் புரிய அதிர்ச்சியில் நின்றாள் பூவிழி.. தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்த வசந்த் பூவிழி அதிர்ச்சியுடன் நிற்பதைப் பார்த்து அவளை நெருங்கினான்..

தன்னுடைய அறையில் குளிக்க சென்ற கமழினி அப்பொழுதுதான் துணியை எடுத்து வராததை கவனித்துவிட்டு, “உன்னோட மண்டையில் களி மண்தான் இருக்கும் போல..” என்று சொன்னவள் தலையைத் தட்டியபடியே தன்னுடைய அறையில் அவளின் பெட்டியைத் தேடினாள்..

அது அந்த அறையில் கிடைக்கவில்லை என்றதும் பக்கத்து அறையில் சென்று பார்த்தாள்.. துகிலன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து சிரித்தவள் தன்னுடைய சூர்கேசைத் திறந்து துணிகளை எடுக்க ஆரம்பித்தாள்..

அங்கே துணியெடுத்துக் கொண்டிருந்தவளின் கையில் கிடைத்தது அந்த போட்டோ ஆல்பம்..! அந்த ஆல்பத்தைப் பார்த்த கமழினி, “இது யாரோடது..?” என்ற கேள்வியுடன் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினாள்.. அதில் இருந்த போட்டோஸ் எல்லாமே கன்னியாகுமரி கடற்கரையில் எடுக்கபட்ட போட்டோகள்..!

அதில் முக்கால்வாசி இருந்த புகைப்படத்தில் கமழினியின் புகைப்படமே இருக்க அவற்றை ஆர்வத்துடன் புரட்டியவளின் கண்களில்பட்டது அந்த போட்டோ..! அதை பார்த்தவளின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தது..

அந்த போட்டோவில் கமழினி – துகிலன் இருவரும் புன்னகை முகத்துடன் அமர்ந்திருப்பதை அப்படியே புகைப்படமாக இருப்பதைப் பார்த்தவளின் மனம் முழுவதும் ஏதோவொரு எண்ணம் வேகமாகப் பரவியது..

அவளுக்கு அந்த போட்டோ கொடுத்த அதிர்ச்சியில் அமைதியாக நின்றிருந்த கமழினியின் மனதில் நினைவு அலைகள் வேகமாக அடிக்க ஆரம்பிக்க அதை அடக்க முடியாமல் பெரும் பாடுபட்டாள் கமழினி..! எதொதேதோ சிந்தனைகளும் நினைவுகளும் அவளின் நெஞ்சில் படமெடுக்க அந்த அதிர்வைத் தாங்க முடியாமல் நின்றிருந்தவளின் காதுகளில் ஒலித்தது துகிலனின் குரல்..!

‘எத்தனை கனவு.. எத்தனை ஆசை எல்லாவற்றையும் ஒரே வார்த்தையில் அழிச்சிட்டு சிரிக்கிற..?’ என்று கேட்ட துகிலனின் குரலில் பழைய நினைவுகள் அவளின் அடிமனதில் இருந்து அலையலையாக எழுந்தது..

அவன் அருகில் நெருங்கும் வேலையில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த துகிலன் வசந்தைப் பார்த்தும் தன்னுடைய அறைக்கே திரும்பிச்சென்றான்.. அவனின் அறையில் துணியை எடுத்துக் கொண்டிருந்த கமழினியைப் பார்த்த துகில், “குட் மார்னிங்..” என்று சொல்ல அவள் அதை கவனிக்கவே இல்லை..

அவள் எந்த பதிலும் சொல்லாமல் நிற்பதைப் பார்த்த துகில் அவளின் அருகில் நெருங்கி அவளின் கையில் இருந்த ஆல்பத்தை வாங்கும் முன்னே நிமிர்ந்தவள், “குட் மார்னிங்..” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு தன்னுடைய சுடிதாரோடு சேர்ந்து அந்த ஆல்பத்தை எடுத்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியே சென்றாள்..

காலையில் எழுந்ததும் புன்னகை முகத்துடன் கமழினி “குட் மார்னிங்..” சொன்னதே துகிலனுக்கு போதுமனதாக இருக்க அவளைப் பார்த்துவிட்டு தன்னுடைய அறையில் குளிக்க சென்றான்..

சமையலறையில் அதிர்ச்சியோடு நின்றிருந்த பூவிழியை நெருங்கியவன் அவளின் தோளைப் பிடித்து உலுக்க, “வசந்த்..” என்று அலைத்தவளின் குரல் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தது...

அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்த வசந்த், “என்ன ஆச்சு..” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் கமழினி கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னதை அவள் சொல்ல, “ம்ம் நல்லது தானே பூவிழி.. இதுக்கு எதுக்கு இத்தனை அதிர்ச்சி..?” என்று புன்னகையோடு கேட்டான்..

அவனின் கேள்வியில் அவனை முறைத்த பூவிழி, “இந்த நேரத்தில் அவளுக்கு எல்லாம் நினைவு வந்தால் அவள் எப்படி எக்ஸாம் எழுதுவாள்..?” என்று கேட்டவளின் கேள்வியும் நியாயம் இருந்ததை கவனித்தான் வசந்த்..

கொஞ்சநேரம் சிந்தனை செய்தவன், “அவனின் நினைவு வருவதை நாம் யாரும் தடுத்து நிறுத்த முடியாது பூவிழி..” என்று வசந்த் சொல்ல, “சரி அவளுக்கு பழைய நினைவு வந்தால் இந்த அஞ்சு வருசமாக நடந்தை மறந்துவிடுவாளா..?” என்று தன்னுடைய மனதில் இருக்கும் சந்தேகத்தைக் கேட்டாள்..

“விபத்தில் தலையில் அடிபடும் நபர்களின் அம்னீஷியா இரண்டு வகை பூவிழி.. ஒன்று பழைய நினைவுகள் மீண்டும் வந்தால் புதிய நினைவுகள் எல்லாம் அவர்களுக்கு மறந்து போய்விடும்.. இது ஒருவகை அம்னீஷியா.. இரண்டாவது வகை அம்னீஷியா பழைய நினைவுகள் மீண்டு வந்தாலும் புதிய நினைவுகள் மறக்காது..” என்று அவலூ விளக்கியவன்,

“இவளுக்கு வந்திருப்பது இரண்டாவது வகை அம்னீஷியா..” என்று சொல்ல துகிலனும், கமழினியும் வந்தனர்.. பிறகு எல்லோரும் அமைதியாக அமர்ந்து சாப்பிட சிந்தனையுடனே கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள் கமழினி..

அவள் சென்றதும் துகிலன், வசந்த், பூவிழி மூவரும் மாணிக்கத்திற்கு திதி கொடுக்க கடற்கரைக்கு சென்றனர்.. அங்கே ஐயரை வைத்து எல்லா வேலைகளையும் சரிவர செய்து வைத்திருக்க மாணிக்கத்திற்கு திதி கொடுக்க வசந்த் வெள்ளை வேஷ்டி கட்டி அமர்ந்திருந்தான்.. துகிலனும், பூவிழியும் அவனின் பின்னோடு நின்றிருந்தனர்..

கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற கமழினியின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் படையெடுக்க அங்கே சென்று பார்த்ததும் கல்லூரியில் லீவ் என்ற அறிவிப்பைப் பார்த்தவள் வீட்டிற்கு செல்ல நினைக்க அவளின் மனமோ கடற்கரையை நோக்கிப் பயணிக்க நேராக கடற்கரைக்கு சென்றாள்.. தன்னுடைய மனதில் உள்ள கேள்விக்களுக்கு விடைதேடி கடற்கரையை அடைந்தாள்..

ஒருபக்கம் மூவரும் சேர்ந்து மாணிக்கத்திற்கு திதி கொடுக்க கமழினி அமைதியைத் தேடி அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தாள்.. அவளுக்கு துகிலன் சொன்ன அதிர்ச்சி வருமா..? வசந்த் பயந்து போலவே நடக்குமா..?

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா டியர்
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சந்தியா அருமை அருமை அருமை வேறு என்ன சொல்ல ஒவ்வொரு வரியிலும் கமழிக்கு ஞாபகம் திரும்பி விடுமோ அடுத்து என்ன செய்வாள் என்று பரபரப்பு கடைசியில் கடற்கரையில் மாணிக்கம் படம் பார்ப்பாளா அதை பார்த்து நினைவு திரும்புமா இல்லை மாணிக்கம் படம் பார்த்து இறந்ததை அறிந்து என்ன செய்ய போகிறாள் பார்ப்போம்
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis..

Nice ud sis..

Pavam vasanth and thukil.. Ena nadakumnu theriyathu tensnsahvey irukanga epadi react panuvanu theriyama.. Athum thukil eadukurathu big risk.. Evaluki ellam yabagam vantha.. Avana verupa and pirinjuruvanu therinjey risk eadukuran.. Ethey avnoda love katuthu.. Ava normal life vazanumnu nanaikuran super.. Da thukil..

Vasanth paya unaku eathuku ambuto periya veedu.. Sari ilaye.. Sari nee oru big doctor so polachu po

Nanga ketka vendiya qn epi lastla neenga ketachu so answer nanga panrom... ??

Beach varava.. Panjumittai vangi sapdalamnu nanaikura.. Apothan thukila anga pakura.. Udaney avanta poi panjumittai ketkura.. Evanga 3 perum shockla nikuranga athukula panju mittaikaran poiran eva tensn aito po avan poitan parunu sanda podura.. Eva big sanda poduva.. And photova parthu ellam yabagam vanthu ena agumnu tensnah iruntha 3perum. .. Relaxahki thukil antha panju mittaikarana amuki pidichu.. Big panju mittai vangi kuduthu homeku varanga.. Wat nxt

Thodarum..

Epudi.. Sumah lululaiku.. ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top