• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 3

கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வசந்த் அந்த போட்டோவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கடல் அலையோடு விளையாடிய கமழினி மணலில் அமர்ந்திருந்த வசந்த் அருகில் வந்து அமர்ந்தாள்..

அவள் வந்ததைக் கவனிக்காத வசந்த், ‘துகில் என்னை நீ தவறாக நினைத்தாலும் சரி.. உன்னை விரும்பிய என்னோட தோழியை உன்னிடம் சேர்த்து வைப்பதில் தான் என்னோட சந்தோசம்..’ என்று மனதிற்குள் அந்த போட்டோவிடம் அவன் பேசிக்கொண்டிருந்தான்..

அவனின் அருகில் அமர்ந்த கமழினி, “டேய் அந்த போட்டோவில் இருப்பவனை உனக்கு முன்னாடியே தெரியுமா..?” என்று கேட்டதும் தன்னுடைய மனதில் இருப்பதை தன்னுடைய மனதிற்குள் மறைத்துக்கொண்ட வசந்த், “இவனை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு கமழி..” என்று யோசனையுடன் கூறினான்..

அவன் அப்படி சொன்னதும், “ஓ உனக்கும் அப்படிதான் தோணுதா..? நானும் நேற்று நைட்ல இருந்து யோசிக்கிறேன் என்னால் கண்டுபிடிக்கவே முடியலடா...” என்று வருத்தத்துடன் கூறினாள் கமழினி..

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வசந்த், “கமழினி இவன் யார் என்ற ஞாபகம் உனக்கு வருதா..?” என்று கேட்டான்.. அவனின் குரலில் ஒரு தேடலும், அவனின் விழிகளில் ஒரு மின்னலும் வந்து போனது.. அவளோ அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், “எனக்கு ஞாபகம் வரல..” என்று சொல்லிவிட்டு எழுந்துக்கொண்டாள்..

அவள் எழுந்தும் எழுந்த வசந்த், “சரிடா நீ போய் கவலைபடாமல் காலேஜ் போ.. நான் என்னோட வேலையைப் பார்க்கிறேன்..” என்று ஒருவிதமான நிதானத்துடன் கூறியதும் சரியென தலையசைத்துவிட்டு தன்னுடைய வழியில் நடந்த கமழினியைப் பார்த்த வசந்த் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வழியில் நடந்தான்..

அவன் தன்னுடைய வழியில் நடக்க அவனின் மனமோ, ‘இவளுக்கு குணம் ஆகும் வரையில் இவளை பத்திரமாகப் பார்த்துக்கணும்..’ என்று நினைத்தான்.. அப்பொழுது அவனின் செல் அடித்தது.. அவன் தனது அலைபேசியை எடுத்து திரையைப் பார்த்தான்..

திரையில் வந்த எண்ணைப் பார்த்த மறுநொடியே அலைபேசியை எடுத்த வசந்த், “கண்ணா சொல்லுடா என்ன விஷயம்..?” என்று கேட்டான்..

அவனின் குரலைக்கேட்ட கண்ணனுக்கு மனம் நிம்மதியாக இருக்க, “டேய் அப்பா போன் செய்து எல்லாவற்றையும் சொன்னாரு.. அவள் எப்படி ரியாக்ட் பண்ற..?” என்று தன்னுடைய தங்கையைப் பற்றி கேட்டான் கண்ணன்..

அவனின் குரலில் இருந்த பதட்டம் உணர்ந்த வசந்த், “யாரு உன்னோட தங்கச்சி தானே.. காலில் சலங்கை ஒன்று மட்டும் கொடுத்திருந்தால் கன்னியாகுமரி கடலின் முன்னே ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருப்பாள்..” என்றவன் சிரிப்புடன்..

அவன் சொன்னதைக்கேட்டு வாய்விட்டு சிரித்த கண்ணன், “அவள் எங்களோட இருக்கும் பொழுது கூட ருத்ரதாண்டவம் ஆடமாட்டா..” என்று கூறியவன், “அவளுக்கு எப்பொழுது வசந்த் பழையபடி நினைவுகள் திரும்பும்..?” என்று வருத்தத்துடன் கேட்டான்..

அவனின் குரலில் இருக்கும் வருத்தம் உணர்ந்த வசந்த், “அது எனக்கே தெரியலடா.. நான் வேற குழந்தைகள் நல மருத்துவர் என்று பொய் சொல்லிட்டு இருக்கேன்.. என்னைக்கு இவளுக்கு உண்மை தெரிஞ்சு என்னை கத்தபோகிறலோ தெரியலடா..” என்றான் வசந்த்..

“நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள் வசந்த்...” என்று சொல்ல, “அவளுக்கு எல்லாம் நினைவு வரணும்.. அதுக்குதான் நானும் வெயிட் பண்றேன்.. என்னதான் நான் ஒரு மனநல மருத்துவராக இருந்தும் என்னோட தோழியை சரி செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மனசு வலிக்குது கண்ணா..” என்று கூறியவனின் குரலில் இருந்த வருத்தம் போனில் பேசிய கண்ணனையும் பாதித்தது..

அடுத்தநொடியே தன்னை சரி செய்துக்கொண்ட வசந்த், “கண்ணா நீ கமழினி பற்றிய கவலையை விடு.. அவளுக்கு சீக்கிரம் குணமாகும்.. அதுக்கு முதலில் துகிலனுடன் திருமணம் நடக்கணும்.. அவனின் அலட்சியம் தான் இவளை மீட்டுக்கொண்டு வரும்..” என்றவன் சொல்ல, “நீ சொல்வதும் சரிதான்..” என்று சொன்னவன் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைக்க தன்னுடைய வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு கிளம்பிய வசந்த் கமழினிக்கு அழைத்தான்..

காலையில் கடற்கரையில் இருந்து வந்த கமழினி திருமணம் பற்றிய எல்லா கவலையும் மறந்துவிட வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.. அவள் குளித்து முடித்து வெளியே வந்தவள் கண்ணாடி முன்னாடி நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள்...

கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்த கமழினிக்கு ஏதோ நினைவுகளின் தாக்கம் ஏற்ப்பட தலை மெல்ல வலிக்க ஆரம்பிக்கும்போது சரியாக அவளின் அலைபேசி அடித்தது.. அலைபேசியின் ஒலியில் தன்னை மீட்டெடுத்த கமழினி தன்னுடைய செல்லை எடுத்துப் பார்த்தாள்..

திரையில் அழைப்பது, ‘பூவிழி...’ என்று காட்டியதும், வேகமாக போனை எடுத்த கமழினி, “அக்கா நீ எங்கே இருக்க..?!” என்று கேட்டாள்.. தங்கையின் குரலைக்கேட்டு அழுதேவிட்டாள் பூவிழி..

பூவிழி, கமழினி இருவரும் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள்.. பூவிழி அழகரின் அண்ணன் மாணிக்கத்தின் மகள்.. கமழினிக்கு பூவிழி என்றால் அவ்வளவு விருப்பம்.. அக்கா.. அக்கா.. என்று அவளின் பின்னோடியே சுற்றிக்கொண்டு இருப்பாள்..

அவளின் அழுகுரல் கேட்டதும் கமழினியின் மனம் வலிக்க, “அக்கா நீ இப்பொழுது எதுக்கு அழுகிற..?! இப்போ நீ எங்க அக்கா இருக்கிற..? நீ வசந்திடம் உண்மையைச் சொன்னாயா..?! அவனுக்கும் வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்க.. அவன் அதில் எல்லாம் கவனமே செலுத்துவதே இல்ல..” என்று சொல்ல தங்கையைப் பேசவிட்ட பூவிழிக்கு துக்கம் தொண்டையை அடித்தது..

பூவிழியின் மனமோ, ‘உனக்காக நாங்க எல்லாம் இங்கே தவிக்கிறோம் செல்லம்.. உன்னோட மனசில் இருக்கும் காதல் என்னைக்கு வெளிவரும் என்று நான் ரொம்பவே காத்துக்கிட்டு இருக்கிறேன்..’ என்று நினைத்தவள் தனது கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தாள்..

ஒருவரின் நினைவுகள் தொலைந்தால் அதில் எத்தனை பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது என்பதற்கு கமழினியின் நினைவுகள் ஒரு எடுத்துக்காட்டு..

அவளின் மனதில் தொலைந்துபோன நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்தால் மட்டும்தான், பூவிழியின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.. வசந்த் – பூவிழி இணைய கமழினி – துகிலன் இணைய வேண்டும் என்பது எழுதபடாத விதியின் விளையாட்டு...

கமழினி பூவிழியைப் பார்த்து கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.. கமழினி கடைசியாக பூவிழியைப் பார்த்தது அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது விபத்து ஏற்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்...

அதன்பிறகு அவளை கமழினி பார்க்கவே இல்ல.. அது மட்டும் இன்றி பூவிழி வசந்திடம் உண்மையைச் சொன்னாளா என்றும் அவளுக்கு தெரியவில்லை.. அதன்பிறகு அவள் இன்றுதான் அழைக்கிறாள்.. பூவிழியின் நினைவுகள் கடந்தகாலம் நோக்கிப் பயணிக்க அதை தடுத்து நிறுத்தியது கமழினியின் குரல்..!

“அக்கா நீ வசந்திடம் உண்மையைச் சொல்லியிரு அக்கா.. இதுக்கு மேல் தாமதிக்காதே..” என்று கூறியவள் கண்களில் வழிந்த கண்ணீரோடு, “அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அக்கா.. அடுத்தவாரம் பொண்ணு பார்க்க வராங்க..” என்று வருத்தத்துடன் கூறினாள்..

அவள் சொன்னதைக்கேட்டு மெல்ல சிரித்த பூவிழி, “அப்படியா கமழினி..? யார் மாப்பிள்ளை..? எங்கே இருக்காங்க..?” என்று கேட்டதும் கமழினியின் நினைவுகள் பின்னோக்கி நகர அவள் தலை வெடிப்பது போலவே இருந்தது..

அவள் தலை மீது கையை வைத்துக்கொண்டு, “தெரியல அக்கா.. அப்பாதான் போட்டோ அனுப்பினார்.. நான்தான் சரியென்ற வார்த்தை தவிர வேற எதுவும் பேசவே மாட்டேன் என்று உனக்கு தெரியுமே.. அதுதான் சரி என்று சொல்லிட்டேன்..” என்றவள் கூறியதும்,

“சரிடா அக்கா சீக்கிரம் உன்னோட திருமணத்திற்கு வருகிறேன்.. வசந்திடம் நான் போன் செய்தேன் என்று சொல்லுடா..” என்று அவள் சொல்லவே, “ம்ம் கண்டிப்பாக வசந்திடம் உண்மையைச் சொல்கிறேன்..” என்று கூறியவள் போனை வைக்க வசந்த் அழைத்தான்..

அவனின் அழைப்பைப் பார்த்த கமழினி ஆன் செய்து காதில் வைக்க, “ஏய் லூசு டபிலேட் போட்டுட்டு காலேஜ் போ.. இல்ல மறுபடியும் உனக்குத்தான் தலை வலிக்கும்..” என்று சொல்ல, “சரிடா..” என்று கூறியவள் குரலில் இருந்த மகிழ்ச்சியைக் கவனித்தான் வசந்த்.
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அக்கா கூப்பிட்டா வசந்த்..” என்று சொல்லவும், வசந்த் மனம் சந்தோசத்தில் துள்ளியது.. பூவிழி மனைவி அல்லவா..? அவனுக்கும் ஆசைகள் இருக்கும் தானே..?! அவள் சொன்னதைக் கேட்டு அவன் சிலையென்று நிற்க, “அக்கா உன்னை ரொம்பவே விசாரித்தால் டா..” என்று கூறினாள்..

அவள் கூறியதைக் கேட்ட வசந்த் எதுவும் பேசாமல் இருக்க கமழினியோ, ‘இவனுக்கு பேச்சு வரதே.. அவள் எப்படியெல்லாம் காதலித்தால் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்..?!’ என்று நினைத்தவள்,

“டேய் வசந்த் என்னடா ட்ரிம்மா..?” என்று கேட்டதும், “அதெல்லாம் இல்லடி.. அவள் எப்படி இருக்கிறாளாம்..?” என்று கேட்டான்.. அவனின் மனம் அவளின் நலனை அறிய விரும்பியது..

“அவள் நல்ல இருக்கிறாளாம்.. கண்டிப்பாக என்னோட திருமணத்திற்கு வரேன் என்று சொல்லியிருக்கா..” என்று சந்தோசமாக சொல்லியவளுக்கு வசந்த் – பூவிழி திருமணம் நினைவில்லாமல் போனதுதான் காலத்தின் விளையாட்டா..?!

அவள் சொன்னதைக் கேட்டு வசந்த் மனம் துள்ளியது.. அவனின் திருமணத்தின் பொழுது பூவிழியைப் பார்த்த ஞாபகம் அதன்பிறகு அவனை விட்டு பிரிந்து சென்றவள் இதோ இன்றுதான் கமழினிக்கு அழைத்திருக்கிறாள்..

கொஞ்சநேரம் சென்றபிறகு, “சரிடா நீ டபிலேட் போட்டுவிட்டு காலேஜ் போடா..” என்று சொல்லவும், “டேய் நான் என்ன பேசண்டா..? நானும் இன்னும் கொஞ்ச நாளில் டாக்டர்தான்..” என்று அவள் சொல்ல தன்னை மீறி சிரித்த வசந்த்..

“சரிங்க டாக்டரம்மா.. உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ எனக்கு ஞாபகம் இருக்கு நீங்க டாக்டர்தான்..” என்று டாக்டரில் அழுத்தம் கொடுத்து அவன் சொன்னதும் சிரித்தவள் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்..

அதன்பிறகு அவன் சொன்ன டப்லேட்ஸ் எல்லாம் எடுத்து போட்டவள் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.. கமழினி பெயரில் இருக்கும் மணம் இப்பொழுது அவளின் மனதில் இல்லை.. அவளின் மனம் இப்பொழுது காகிதபூவாக இருக்கிறது..

காகிதபூவின் அர்த்தம் பார்க்க அழகாக இருக்கும்.. துரத்தில் இருந்து பார்க்க நிஜமாகவே பூ போன்ற தோற்றம் அளிக்கும்.. அருகில் சென்று அதை எடுத்துப் பார்த்தால் அதில் மணம் மட்டும் இருக்காது..

அதேபோலவே கமழினியின் காதலும்.. தன்னுடைய நினைவுகள் இருக்கும் வரை பூவென்று கமழ்ந்த கமழினி இன்றைய நிலையில் வெறும் காகிதபூ மட்டுமே..

அவள் மணம் பெற வேண்டும் என்றால் அவளின் மனதில் இருக்கும் நினைவுகள் உயிர் பெற வேண்டும்.. அந்த நினைவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான் துகிலனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்..

கமழினியுடன் பேசிவிட்டு போனை வைத்த வசந்த் தன்னுடைய பெசண்டை பார்க்க சென்றான் வசந்த்.. அன்றைய கேஸ் ரொம்பவும் வினோதமாக இருந்தது.. பெசண்டை காண சென்ற வசந்த் அவரின் அருகில் என்றதும் தன்னை ஒரு தோழன் என்ற முறையில் தன்னுடைய அறிமுகத்தை ஆரம்பித்தான்..

“ஹலோ அரவிந்த்..” என்று சொல்லவும் அவனை நிமிர்ந்துப் பார்த்த அரவிந்த், “ஹலோ வசந்த்.. நீ எங்கடா இங்கே..?” என்று கேட்டதும் அவனின் பேச்சில் அவனுக்கு ஒரு நண்பன் இருப்பதை உணர்ந்துக்கொண்ட வசந்த்,

“இந்த கேள்வியை நான் கேட்க வேண்டும் அரவிந்த்.. உன்னோட அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க.. நீ எப்படி இங்கே வந்தா..?” என்று நார்மலாக அவனின் அருகில் அமர்ந்து அவனைப் பற்றிய கேள்விகளைத் தொடுத்தான் வசந்த்..

அவனின் கேள்வியில் கொஞ்சம் யோசித்த அரவிந்த், “அதுவா..?! நான் காலையில் வீட்டில் இருந்து கிளம்பியதும் வழியில் ஒரே நேரிசல்டா.. அப்படி இப்படி என்று தப்பித்து பிழைத்து வந்தால் சிக்னல் போட்டுடாங்க.. அப்பொழுது என்னோட பைக்கின் பின்னாடி ஒரு குட்டி பாப்பாடா உட்கார்ந்து சிரிக்கிற.. எனக்கு அவளை அடையமே தெரியல.. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தால் என்னை அப்பா என்று சொல்கிறாள்.. நான் என்ன பண்ண அதுதான் அவளை இங்கே கொண்டு வந்து விடலாம் என்று வந்தேன்..” என்றவன் சொல்ல அதை கேட்ட எல்லோரும் திகைத்து நின்றனர்..

அவர் சொல்வது எல்லாமே உண்மைதான்.. ஆனால் அவர் சொன்ன காலையில் நடந்த விஷயம் என்று சொன்னது எல்லாமே கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்னாடி நடந்த விஷயங்கள்..

மனதில் இருக்கும் நினைவுகள் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதே கிடையாது.. மனதிற்கும் மூளைக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.. மனதிற்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது அதை ஒதுக்கி வைக்கும் பொழுது மூளை அதன் நினைவு அலைகளை ஒதுக்கி வைக்கும்..

அதுபோலவே அரவிந்த் நிலையும்.. அவரின் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை.. அவருக்கு தலையில் அடி எல்லாம் படவே இல்லை.. ஆனால் அவரின் உயிருக்கு உயிராக வளர்ந்த மகள் விபத்தில் அடிபட்டதைநேரில் கண்டவரால் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரவே முடியவில்லை..

அதுதான் அவர் இப்பொழுது சொல்லும் பெண் அவரின் மகள்தான்.. அவரின் நினைவலையில் அவரின் மகளின் நினைவுகள் இருந்தாலும் அவள் இறந்த விஷயம் கேட்டபிறகு அதை ஏற்கமுடியாமல் அது வேறொரு பெண் என்ற கற்பனையில் இருக்கிறார்..

அவர் சொல்லி முடித்தும் அரவிந்தை பார்த்த வசந்த், “ஐயோ அரவிந்த் அது என்னோட குழந்தைடா.. அவள் எங்கே இருக்கிறாள்.. அவளுக்கு என்னை அடையாளம் காட்டு என்று சொல்லிதானே உன்னோடு அனுப்பி வைத்தேன்.. நீதானே அவளை காலையில் அழைச்சுட்டு வந்த..?” என்று கேட்டதும் அவனின் முகம் மாறியது..

அவனின் முகமாற்றத்தைக் கவனித்த வசந்த் அமைதியாக அமர்ந்திருக்க, “இல்லடா இல்ல நான் இன்னைக்கு காலையில் உன்னோட வீட்டுக்கு வரவே இல்ல..” என்று வேகமாக கூறினான்..

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த வசந்த், “அப்புறம் எப்படி என்னோட மகள் உன்னோட வண்டியில் வந்தால்..?” என்று கேட்டதும் அவனின் நினைவுகள் மெல்ல மெல்ல மேல் எழ அதை அடக்க வழி தெரியாமல் கத்த ஆரம்பித்தான் அரவிந்த்..

எல்லோரும் அவனைவிட்டு நகர்ந்து செல்ல, “டேய் வசந்த் என்னோட மகள்.. என்னோட மகள்..” என்று அவன் மூச்சிரைக்க, “என்னோட மகள்..” என்று அவனை தூண்டிவிட, “இல்லடா அவள் என்னோட மகள் பிரீத்தி..” என்று சொன்னவனுக்கு தலை ரொம்பவே வலித்தது..

இருந்தாலும் கூட தன்னுடைய மனதில் பாரத்தை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலையில் அவனின் நினைவுகள் அவனின் மனதில் எழுந்து படமென்று ஓட, “என்னோட மகள் அன்னைக்கு காலையில் ரோடு கிராஸ் பண்ணும் பொழுது கார் விபத்தில் இறந்து போயிட்டாடா..” என்று சொன்னதும் வசந்த் முகத்தில் புன்னகை அரும்பியது..

வசந்த் அருகில் நின்றிருந்த அரவிந்த் மனைவி சங்கரி அவனை ஆச்சர்யத்தோடு பார்க்க, “என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியலடா..” என்று வசந்த் சொல்லியபடியே அவனை கவனிக்கத்தான்..

அவனோ, “நம்புடா என்னோட மகள் இறந்துவிட்டாள்..” என்று சொல்லவும் சுற்றி இருந்த அனைவருக்குமே அவர் சரியாகிவிட்டத்தை உணர அனைவரின் கண்களும் மகிழ்ச்சி போங்க அனைவரையும் பார்த்த அரவிந்த் அப்பொழுதுதான் மனைவியைப் பார்த்தான்..

அவளைப் பார்த்தும், ‘சங்கரி..?!’ என்று அழைக்க, “டாக்டர் இவரை எங்கேயுமே குணப்படுத்த முடியாது என்று நினைத்தேன்.. ஆனால் நீங்க என்னோட கணவரை எனக்கு மீட்டு கொடுத்துட்டீங்க..” என்று கண்ணீரோடு சொல்ல, “பரவல்ல சிஸ்டர்..” என்று கூறியவன் எழுந்து சென்றான்..

இத்தனை திறமை உள்ள வசந்த் தன்னுடைய தோழியின் நினைவுகளை மீட்டெடுத்து, தன்னுடைய மனைவியின் கரம் பிடிப்பானா..? காலம் தான் சொல்ல வேண்டும்..

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top