Maranathin Marmam - 1

How is the story going

  • Bad

    Votes: 0 0.0%
  • Need improvement

    Votes: 0 0.0%

  • Total voters
    5

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
மக்களே எல்லோருக்கும் வணக்கம்..

என்ன டா இவ இங்க என்ன செய்றான்னு தான யோசிக்குறீங்க . ஒன்னும் இல்லை மக்களே , நம் தேடலில் ஒரு புதிய எழுத்தாளர் ஒருவரை அறிமுகம் செய்ய வந்து இருக்கிறேன் ..

இவர் பெயர் மித்ரா பிரசாத். இது அவரின் முதல் கதை. நிறைய suspense நிறைந்த கதையாக கொடுக்க போகிறார்..

முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன் படித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள் .. plz do support friends..
 
Last edited:

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
மரணத்தின் மர்மம்
அத்தியாயம் 1
காலை 6 மணி, தஞ்சாவூர், கோகிலாபுரம் மேற்கு பகுதியில் உள்ள சிறிய வீடு. படுக்கையில் இருந்து எழுகிறான் கெளதம். அழகிய கண்களும் ஈர்க்கும் பார்வையும், நார்மலான உயரமும், மாநிறமும் கொண்ட இருவத்தேழு வயதாகிய இளைஞன். முகத்தில் எப்போதும் ஒரு அமைதி இருக்கும். கண்களை கலைத்து கடிகாரத்தை பார்க்கிறான். பின்பு கண்களை மூடி கடவுளை வணங்குகிறான். எழுந்து இடதுபுறமுள்ள மேஜையில் உள்ள டிராவில் இருந்து ப்ரஷ், பேஸ்டு, சோப்பு எல்லாம் எடுத்து கொண்டு, அதன் அருகில் உள்ள பீரோவில் இருந்து துணிகளையும் எடுக்கிறான். பின்பு மெதுவாக வலதுபுறமுள்ள பாத்ரூம் செல்கிறான். அரை மணி நேரம் சென்றிருக்கும் குளித்து முடித்துவிட்டு வந்தவன், வெளியே சென்று சூரிய நமஸ்காரம் செய்கிறான்.
அது ஒரு சிறிய ஓட்டுவீடு. அங்கு அவன் மட்டும் தான் இருக்கிறான். அருகில் சில வீடுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் மட்டும் ஒரு குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களை தெரியும், ஆனால் பழக்கம் கிடையாது கெளதமிற்கு. தஞ்சை நீலமேக பெருமாள் கோவில் தெருவில் தேங்காய், பழங்கள், பூஜை பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறான். காலை ஏழு மணிக்கே கடையை திறந்துவிடுவான். பூஜை நாட்களில் ஆறு மணிக்கே கடையை திறப்பான். கடைக்கு கிளம்பும் முன் தாய், தந்தை படத்திற்கு முன்பு நின்று பேசுகிறான்.
“எல்லாம் நல்லதா நடக்கணும்பா, இன்னைக்கு ஏனோ என் மனசுல சந்தோஷம், துக்கம் இரண்டுமே சேர்ந்து இருக்கு. ஏனு தெரியல.” சிறு மௌனம், கண்களில் ஏதோ கலக்கம், “ ஏதோ நல்லதும், கெட்டதும் சேர்ந்தே நடக்க போற மாதிரி இருக்கு. இனம்புரியாத பயம் வருது. நீங்க தான்பா கூடவே இருந்து வழி காட்டனும். நல்லதே நடக்கனும்மா. நான் கடைக்கு கிளம்புறேன்.”
கடைக்கு செல்லும் வழியில் கையில் பூக்கூடையுடன் வரும் சூரிய பிரசாத்தை பார்க்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்பத்திற்காக உழைக்கும் பதினேழு வயதான இளைஞன். பூக்கடையை நடத்தி சம்பாதிக்கும் குடும்பம். அதுமட்டுமின்றி கடைகளுக்கு பூக்கள், மாலைகள் சப்ளே செய்கின்றனர். கெளதம் கடைக்கு கூட அவர்கள் பூக்கள், மாலைகள் கட்டி தருகின்றனர்.
“ சூர்யா, சூர்யா...” சூர்யா பார்க்கிறான்.
“எப்டி இருக்க? அப்பா, அம்மா எப்டி இருக்காங்க?”
“நல்ல இருக்கோம்ணா, நீங்க எப்டி இருக்கீங்கணா?”
“ம், நல்ல இருக்கேன்பா. இன்னைக்கு பூ?”
“எப்போவும் வைக்கிற இடத்துல வச்சுட்டேணா.”
“இன்னைக்கு நான் கொஞ்சம் பூ சேர்த்து கேட்டேன். அதுவும் சேர்த்து வச்சுடீங்களா?”
“அதுவும் தான்ணா”
“சரிப்பா சரிப்பா”
“அண்ணா, முருகன் அண்ணா எப்போ கடைய திறப்பாங்க?”
அவனுக்கு என்ன பதில் சொல்ல என தெரியாமல் யோசித்தான். பின்பு “ தெரியலப்பா” என கலக்கதோடு கூறினான்.
“உங்களுக்கு கூட தெரியாதாணா?”
என அவன் யோசனையோடு கேட்டான். கெளதம் பதில் கூறாமல் நிற்கவும் அவன்,
“சரி விடுங்கணா, பரவா இல்ல. நான் கிளம்புறேன் லேட் ஆச்சு.”
“சரிப்பா போய்ட்டுவா”
சூர்யா கிளம்பிய பிறகு அவன் நடக்க ஆரம்பித்தான். கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குகிறான். காலையில் அப்பா, அம்மா படத்திற்கு முன்பு பேசியது போல் கடவுளிடம் மனதிற்குள் முறையிட்டு கொண்டான். பிரகாரத்தை சுற்றி வருகிறான். அங்கு ஒருவர் எல்லாருக்கும் பொங்கல் பிரசாதம் கொடுக்கிறார். அதை வாங்கி கொண்டவுடன் அவனுக்கு, அவனுடைய சிறு வயது நினைவிற்கு வந்தது.
இருபது வருடங்களுக்கு முன்பு, தஞ்சைக்கு அருகில் உள்ள தேவராஜபுரம் எனும் சிறிய கிராமத்தில் இருந்தனர் அவரது குடும்பம். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அனைத்து சொத்துகளையும் இழந்து, ஆதரிக்க சொந்தங்களும் முன்வராததால் அவர்கள் ஊரை விட்டு கிளம்பி இங்கு தஞ்சைக்கு வந்தனர். இங்கு வந்து இறங்கியதுமே அவனது தாயார் முருகலட்சுமி பேருந்து நிலையத்திலே துக்கத்தினால் இறந்துவிட்டார். சிறு வயதிலே தாயாரை இழந்து கெளதமும், மனைவியை இழந்த அவனது தந்தை குலசேகரனும் மிகவும் சோகத்திற்கு ஆளானர். அப்போது ஒரு வயதானவர், நீலமேக பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினால் அனைத்து துன்பங்களும் நீங்கும், நல்லது நடக்கும் என கூற, இந்த கோவிலுக்கு வருகின்றனர். அங்கு வந்ததும் இன்று போல் அன்றும் கோவிலில் பொங்கல் பிரசாதம் தந்தனர். அன்று அவர்களது பசிக்கு அது விருந்தானது. அங்கு ஊரில் பெரியமனிதரான சிவகுரு அய்யா அவர்கள், அவர்களுக்கு ஆதரவு தந்து தன்னிடம் வேலைக்கு வைத்து கொண்டார்.
“அண்ணா, அண்ணா... இங்க பாருங்க”
அவனது நினைவை கலைத்து நிஜத்திற்கு அழைத்தது, அந்த குரல். ஒரு சிறுவன் அவன் அருகில் நின்றிருந்தான். அவன் கெளதமை பார்த்து
“அண்ணா பிரசாதம் தீந்துடுச்சு. நீங்க கொஞ்சம் தருவீங்களா?”
என பாவம் போன்று கேட்டான். உடனே கெளதம் அந்த பிரசாதத்தை கொடுத்தான் சிறுவனுக்கு. அதை வாங்கியவுடன் சிறுவன் முக மலர்ச்சியோடு சிரித்துவிட்டு ஓடிவிட்டான். கெளதம் கடைக்கு செல்கிறான். வழியில் முருகன் கடை உள்ளது. திரும்பி பார்கிறான், கடை முடபட்டிருந்தது.
கெளதம், முருகன், சைமன், சந்தோஷ் நால்வரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். முருகன் சிவகுரு அய்யாவின் மூத்த மகனான சிவசங்கர் அவர்களின் மகன். சிவகுரு அய்யாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் சிவசுந்தரம். முருகனின் அப்பா சிவசங்கர், சிவகுரு அய்யாவை போன்றே நல்லவர், திறமையானவர், படித்தவரும் கூட. முருகனின் தாய் உமா, முருகன் பிறந்ததுமே இறந்துவிட்டார். அப்பா, தாத்தாவின் வளர்ப்பில் முருகனும் நன்றாக வளர்ந்தான். ஒருமுறை சிவசங்கர் அவர்கள் எஸ்டேட் வாங்குவதற்காக வக்கீல் ஒருவருடன், குலசேகரனை உதவிக்கு வைத்துகொண்டு சென்றார். அவர்கள் சென்றுவிட்டு திரும்பும் போது கார் விபத்தில் அனைவரும் இறந்துவிட்டனர். அநாதை ஆனான் கெளதம். அவனுக்காக சிவகுரு அய்யா அவருக்கு சொந்தமான நீலமேக பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு கடையை கொடுத்தார். முருகன் சித்தப்பாவிடம் வளர்ந்தான். முருகன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சிவகுரு அய்யா இறந்துவிட்டார். அதன் பின் முருகன் படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலை செய்து தொழில் செய்ய ஆரம்பித்தான்.
கெளதம் கடைக்கு சென்று பொருள்களை எடுத்து வைத்து வேலையை செய்ய தொடங்கினான். சிறிது நேரம் சென்றது. மஞ்சள் நிறத்தில் பூக்கள் போட பாவாடையும், நீல நிற தாவணியும் அணிந்தவாறு, கையில் ஒரு கூடையுடன், பார்வையில் தெளிவும் முகத்தில் சர்வலட்சனம் பொருந்திய அழகிய தேவதை போல் நடந்து வருகிறாள் சௌந்தர்யா. கெளதம் கடைக்கு அருகில் உள்ள பூக்கடை, அவளது கடை. அவளை பார்த்தாலே கெளதமிற்கு முகத்தில் சந்தோசம் தானாக வந்து விடும். அவள் அருகில் வந்தவுடன்
“என்ன இவ்ளோ நேரம் ஆகிடுச்சு நீங்க வர”
“இல்ல, பாட்டிக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டு வர நேராயிடுச்சு.”
“பரவாயில்ல, கொஞ்ச பேர் தான் வந்துட்டு இருக்காங்க. மணி இன்னும் எட்டு ஆகலேல. நீங்க கடைய திறங்க.”
“ம்ம்” என கூறிவிட்டு கடையை திறந்தாள். பூக்களை எடுத்து வைத்து, மாலையை கட்ட ஆரம்பித்தாள். இடையிடையே இருவரும் பார்த்து கொண்டனர். இருவரது பார்வையிலும் சொல்லப்படாத அன்பு வெளிப்பட்டது. கண்களில் பேசி கொண்டனர் இருவரும். இடையில் சிலருடன் வியாபாரமும் நடைபெற்றது. நேரம் செல்ல செல்ல பசி எடுக்க ஆரம்பித்தது கெளதமிற்கு. அவன் அவளை பார்த்தான். அவள் வேலை செய்வதில் ஆர்வமாக இருந்தாள். அவளை அவன் கூப்பிட்டான்.
“ஏங்க!” அவள் திரும்பவில்லை. சிறு இடைவெளிவிட்டு மீண்டும்
“சௌந்தர்யா, ஒரு நிமிஷம் இங்க பாருங்க”
திரும்பினாள், கண்கள் என்ன என்றது.
 

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
“நான் சாப்பிட்டு வரேன், கொஞ்சம் கடைய பாத்துகோங்க”
அவன் கூறியதற்கு எதுவும் பேசாமல் அவள் உள்ளே சென்று, தான் கொண்டு வந்த கூடையில் இருந்து ஒரு கிண்ணம் எடுத்து வந்தாள். அதை அவள் முன் இருந்த பலகையில் வைத்தாள். கண்களை காட்டி அதை அவனுக்கு என்றாள். இப்போது அவன் முகம் என்ன என்பது போல் பாவனை செய்தது.
“இன்னைக்கு பாட்டிக்கு பிடிக்கும்னு வெண்பொங்கல் செஞ்சேன்.”
அவன் உள்ளுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை மறைத்து கொண்டு
“சரி, அதுக்கு” என கிண்டலடித்தான். அவள் முகம் போலி கோபத்தை காட்டியது. மீண்டும் அவனே, “பாட்டிக்கு மட்டும் தான் பிடிக்குமா?”
“எனக்கு பிடிச்சவங்களுக்கு பிடிக்கும். அதனால எனக்கும் பிடிக்கும்.”
“சரி, அப்ப நீ சாப்பிடு. நான் வெளில போய் சாப்பிட்டு வரேன்.”
அவள் வேகமாக எழுந்து கோவத்தோடு பார்த்து,
“உங்களுக்கு பிடிக்கும்னு ஆசையா பொங்கல், வடனு போட்டு வந்தா, நீங்க வெளில போய் சாப்பிடபோறேனு பேசுறீங்க. போங்க” என வருத்ததோடு பேசினாள். அவன் சிரித்து கொண்டே
“இத மொதல சொல்லிருக்கணும்” என கூற, அவள் முகத்திலும் சிரிப்பு வந்தது.
“நீ சாப்பிட்டயா?”
“இல்ல. உங்க கூட தான் சாப்டனும்”
“சாப்பிடுவோமா?”
“ம்ம்ம்” என சிரித்தாள். அவளது முகம் சிரிப்பில் அழகு தேவதை போல் ஜொலிக்க அவன் அதை கண் தட்டாமல் ரசித்தான். அவள் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்று குடத்தில் இருந்து இரண்டு தம்ளரில் நீர் கொண்டு வந்தாள். மேஜை மேல் எடுத்து வைத்து அவனுக்கு சாப்பாடு பரிமாறினாள். அவன் அவளை ரசித்தவாறே சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்து கை கழுவ பின் புறம் சென்றான்.
அப்போது சைமன் வேகமான நடையுடன், பார்வையில் தேடலுடன் வந்தான். சௌந்தர்யா அருகில் வந்தான். அருகில் யாரோ வருவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் கெளதமை தேடி கொண்டு தான் இருந்தது.
“ஏய்! கெளதம் எங்க?”
“என்ன ஏய்யா? என்ன திமிரு உனக்கு? போடா பதில் சொல்ல முடியாது.” என கூற, அவன் அவளை பார்த்து தலை குனிந்து ஏளனத்துடன்,
“சாரி மேடம். மனிச்சுடுங்க. கெளதம் சார் எங்க மேடம்? அப்டின்னு கேக்கணுமா உனக்கு... போடி, பெரிய மனுசி நீ. உனக்கு நான் மரியாத வேற கொடுக்கணுமா வேற... போ. உன் கூட சண்ட போட எனக்கு நேரம் இல்ல. அவன் எங்க சொல்லு?”
பின்புறம் இருந்து கெளதம் வருகிறான்,
“டேய்! எங்கடா போன?”
“கைய கழுவ போனேன். என்னாச்சு? என்ன இப்போ வந்திருக்க?”
“வாட போலாம்” என கூறிக்கொண்டே அவனது கைகளை இழுத்தான்.
“பொறுடா. என்ன அவசரம் அப்டி?”
“சந்தோஷ் உன்கிட்ட ஏதோ சொல்லனும்னு சொன்னான். போவோம்மா.”
“ம்ம். சரி பொறு போலாம்” என கூறிவிட்டு அவள் புறம் திரும்பினான். அவள் சிறு கோப பார்வையுடன்
“போங்க சார். இந்த ஊர் சுத்திகூட சுத்துங்க. அப்பறம் எங்க கடைய கவனிக்க. போங்க, போங்க” என அலட்சியமாக அவனை பார்க்காமல் பூக்களை அடுக்கி கொண்டே பேசினாள்.
“ஏய்! என்ன சொன்ன?” கோபமாக கௌதமை நோக்கி “டேய்! பாத்துட்டு பேசாம நிக்கிற, இப்டி பேசுறா. நீ இப்டியே நில்லு... இதெல்லாம் நீ குடுக்குற இடம் தாண்டா.”
“டேய்! அவ எதோ விளையாட்டுக்கு பேசுற.” என சைமனை சமாளிக்கிறான் கெளதம். பின்பு அவளிடம் “சௌந்தர்யா நீ ஒன்னும் பேச வேண்டாம். அவன்லாம் அப்டி கிடையாது. நாங்க எல்லாரும் எப்போதும் ஒன்னா தான் இருப்போம். யாரும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறவுங்க இல்ல. நீ இப்டி பேசாத.”
“சரி சாமி. நான் ஒன்னும் பேசல” என சிலிப்பி கொண்டாள்.
“கொஞ்ச நேரம் கடைய பாத்துக்கோ. நான் வந்துடுறேன்.” என கூறிவிட்டு கடையை விட்டு வெளியே வந்தான். சைமன் கெளதம் கையை பிடித்துகொண்டு, சௌந்தர்யாவை பார்த்து
“ஏய்! வாயடி, பொறு, உன்ன அப்பறம் வந்து கவனிக்கிறேன்.”
“பார்ப்போம்.” என சலித்து கொண்டாள்.
இருவரும் கெளதம் வீட்டை தாண்டி செல்லும் குறுக்கு பாதை வழியே சென்று, பின்புறமாக உள்ள தென்னந்தோப்பை கடந்து சாலைக்கு வந்தனர். வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால், சாலையின் ஓரம் நின்றிருந்தனர். அப்போது எதிர்புறம் சந்தோஷ் அவர்களை பார்க்கிறான். ப்ளு ஜீன்ஸ், ப்ளாக் ட்ஷிர்ட், சூ என பார்க்கவே பணக்காரன் என்பது அப்டியே இருந்தது.
“ டேய்! நான் இங்க.” என கையசைக்கிறான். இருவரும் பார்த்துவிட்டு சாலையை மெதுவாக கடந்து செல்கின்றனர். சாலைக்கு அந்த புறமும் தென்னந்தோப்பு தான் உள்ளது. ஒரு தென்னை மரத்தடியில் வந்து நிற்கின்றனர் முவரும். சைமனுக்கு அதிகமாக வேர்த்திருந்தது. “காலைல வெயிலே இப்டி இருக்குபா” என கூறி நெற்றியில் வழிந்த வேர்வையை சுண்டிவிட்டான்.
“என்னாச்சு சந்தோஷ், ஏன் இவ்ளோ அவசர படுத்தின பேசுறதுக்கு? நான் நேத்தே, இன்னைக்கு மதியத்துக்கு பிறகு பாத்து பேசலாம்னு சொன்னேன்ல.”
“அது சரிடா. இப்போ பேச வேண்டிய கட்டாயம் வந்திருச்சு”
“என்னதாண்டா பேசணும்? இப்பவாது சொல்லிதொள. அதான் அவனையும் கூட்டிட்டு வந்துட்டேன்ல.”
“பொறு. சொல்றேன்.” என பெருமுச்சு விட்டான். “ நேத்து காதம்பரி போன் பண்ணா.”
காதம்பரி சிவசங்கரின் மகள், முருகனின் தங்கை. அவள் தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ நான்காம் ஆண்டு பயிலுகிறாள். அதே கல்லூரியில் சந்தோஷ் வேலை பார்க்கிறான். இருவரும் காதலிக்கின்றனர்.
“ இத சொல்லவா கூப்பிட்ட”
“கொஞ்சம் பொறுமயா இரு சைமன். அவன பேச விடு.”
“காதம்பரி சொன்னா வீட்டுல ஏதோ பிரச்சனனு. அதபத்தி நாளைக்கு தெளிவா சொல்றேன். காலேஜ்க்கு வரேன் பேசுவோம்னும் சொன்னா. அது மட்டும் இல்லாம ஏதோ முக்கியமான முடிவு எடுக்கணும்னு சொன்னா.”
“சரி பேசிட்டியா?”
“இல்ல. அவ இன்னைக்கு வரவே இல்ல”
“என்ன சொல்ற, என்னாச்சு?”
சைமன் குறிக்கிட்டு “நீ கால் பண்ணி பேசினியா?”
“இல்லடா, போன் போக மாட்டேன்குது. என்னாச்சுனு எனக்கும் புரியல”
“டேய் அவ நேத்து உங்கிட்ட என்ன பிரச்சினைனு சொல்லவே இல்லையா? அப்புறம் எனத்த தாண்டா அவ்ளோ நேரம் பேசிட்டு இருந்திங்க.” என சைமன் கோபத்தோடு கூற, கெளதம் அவனது கைககளை பிடித்து அழுத்தினான். அமைதியாக இருக்குமாறு கண்ணசைத்தான்.
“அவள யாரோ பொண்ணு பாக்க வர்ரதா சொன்னா. இந்த சம்பந்தம் முடிஞ்சுடும்னு வேற அவுங்க அப்பா சொல்லிட்டு இருந்தாராம். இவ்ளோ தாண்டா எனக்கு தெரியும்.”
“ஓ! இது தான் பிரச்சனையா”
“இல்லடா, வேற எதோ பிரச்சன இருக்கு”
“எப்டி அப்டி சொல்ற நீ. அப்டிலாம் ஒன்னும் இருக்காது. நீ பயப்படாத”
“இதுக்கு முன்னாடியே இப்டிலாம் நடந்திருக்கு. ஆனா அவ காலேஜ்க்கு வராம இருந்தது இல்ல.”
“என்னைக்கு நீயும், கதம்பரியும் காதலிக்கிறது அவுங்க அப்பாவுக்கு தெரிஞ்சுதோ அப்போ இருந்தே பிரச்சினை தான். முருகன் கூட புரிஞ்சுக்காம நம்மள விட்டுட்டு போய்ட்டான். இப்போவே அஞ்சு மாசத்துக்கு மேல ஆச்சு அவன் நம்ம கூட பேசி.”
“டேய், தன்னோட தங்கச்சிய காதலிச்சா யாரா இருந்தாலும் இப்டி தாண்டா செய்வாங்க.” என கெளதம் முருகனுக்கு ஆதரவாக பேசினான்.
“போடா, அதுக்காக இப்டியா. சந்தோஷ் எந்த விதத்துல அவுங்களுக்கு குறஞ்சவன். அவுங்க கிட்டயும் பணம், படிப்பு, மதிப்பு எல்லாம் இருக்கு. ஒரு வேல அவனும் அவுங்க சித்தப்பா மாதிரி சாதி வெறி பிடிச்சவனா மாறிட்டான் போல.”
“டேய், அவன அப்டி பேசாத. அவன பத்தி உனக்கு தெரியாதா? ஏன் இப்டி பேசுற?”
“பின்ன என்னாடா. அவன் சொன்னதுல என்ன தப்பு. என்கிட்ட பேசலைனா பரவாயில்ல. உங்க கிட்டயும் பேசாம விட்டுட்டான். அதுதான் எனக்கு கோபம் வருது.”
“என்னடா நீயும் இப்டி பேசுற? அவன் நல்லவன்டா.”
“இல்லைடா, அவன் அவுங்க சித்தப்பா பேச்ச கேட்டுட்டு இப்டி மாறிட்டான்.”
“டேய் அவுங்க சித்தப்பா பத்தி தெரியாம இப்டி பேசாத. அவர் முருகனுக்கு பிரண்ட்ஸ்னு நம்மள விட்டாறு, அப்பரம் இப்டி நடந்துச்சுனா யாருதான் ஏத்துப்பாங்க.”
“சரி ஓகே. அத விடுங்க, நம்ம ஆர்குயு பண்ணி சண்ட போட வேண்டாம். அப்பறம் பிரச்சினை இங்கயும் வந்துரபோகுது.” என சந்தோஷ் கேலி செய்ய, உடனே கெளதம் இருவரின் கைகளையும் பற்றி,
“டேய் இனி எப்போவும் இப்டி பேசாத. ஏற்கனவே ஒரு பிரச்சன வந்து நாம நாலு பேர் மூணு பேர் ஆகிட்டோம். இனியும் ஒரு பிரிவு என்னால தாங்க முடியாது. என்னோட சொந்தமா இப்போ நீங்க மட்டும் தாண்டா இருக்கீங்க.” என மிக வருத்தத்துடன் பேச,
“அப்போ சௌந்தர்யா” என கேலியாக சைமன் கேட்க, உடனே சிரித்துவிட்டான் கெளதம். கண்களில் வலிந்த கண்ணீரை துடைத்து கொண்டே “போடா, உனக்கு எப்போ பாரு விளையாட்டு தான்.”
“சரி, இப்போ இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு சொல்லுங்கடா. என்ன பண்ணலாம்.”
“நீ அவ வீட்டுக்கே போய்டேன்” என கண்ணடித்தான் சைமன்.
“விளையாடதடா போடா”
“நீ பொறுமயா இரு சந்தோஷ். கண்டிப்பா உனக்கு அவ போன் பண்ணுவா. பயப்படாத, நாங்க இருக்கோம். ஒரு வேல அவ போன் பண்ணல, போன் எடுக்கவும் இல்லேன்னா, இன்னைக்கு ஒரு நாள் பாரு. அப்புறம் நாளைக்கு நாம அவுங்க வீட்டுக்கு போய் பாத்து பேசுவோம்.”
“கெளதம் சொல்றது தாண்டா சரி. இன்னைக்கு வெயிட் பண்ணு. ஓகே வா.”
“சரி எனக்கும் அது தான் சரின்னு படுது. பார்போம்” என யோசனையோடு தலையசைத்தான்.
கெளதமை பார்த்து சைமன் “ என்ன இன்னைக்கு எதோ ஸ்பெஷல் சாப்பாடு போல சார்க்கு” என கேட்டான்.
“போடா உனக்கு கிண்டல் பண்ணிட்டே இருக்கணும் யாரையாவது. நான் கிளம்புறேன் போ.”
“உடனே ஓடுறான் பாரு. டேய்!...” என இருவரும் சிரிக்க, கெளதம் சிரித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.
....
மறுநாள் காலை ஏழு மணி, கடையை திறக்க வேகமாக வந்து கொண்டிருக்கிறாள் சௌந்தர்யா. வழியில் டீக்கடை முன்பு சிலர் மிக ஆர்வமாக பேசி கொண்டு இருக்கின்றனர். அந்த தெருவை கடந்து வலதுபுறம் திரும்பியதும் கோவில் தெரு வந்தது. அங்கும் இங்கும் சிலர் கூடி கூடி பேசி கொண்டு இருந்தனர். அவளுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது. அவள் கடையை திறந்தாள். அவளது கடைக்கு எதிர்புறம் உள்ள வளையல் கடை நடத்தும் பாக்கியலட்சுமி அவளை பார்த்ததும்,
“ ஏய்! சௌந்தர்யா. உனக்கு விஷயம் தெரியுமா?!” என கேட்டாள்.
“இல்லக்கா. எனக்கு எதுவும் தெரியாதே. ஏன்கா என்னாச்சு?”
“உனக்கு விஷயமே தெரியாதா?! இங்க வாயேன் நான் சொல்றேன்.”
அவள் சென்றாள். “சொல்லுங்க, அக்கா”
“நம்ம கோகிலாபுரத்துக்கு பின்னாடி ஒரு பெரிய ரோடு போகும்ல, அங்க ஒரு பொணம் கிடக்காம். ஏதோ ஆக்சிடென்ட் கேசாம். உனக்கு தெரியாதா.”
“தெரியாதுக்கா. ஓஹோ! அதான் நான் வர்ற வழியெல்லாம் கும்பல் கும்பலா பேசிட்டு இருந்தாங்களா. இப்போ தான் தெரியுது.”
“அப்போ நீ பாக்களையாடி?! ஆமாம்ல நீ சின்னசாமி தெருவுல இருக்கேல”
“ஆமாங்கா,
உங்களுக்கு எப்டி தெரியும்?”
 

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
“என் புருசேன் காலேல அந்த பக்கமா போனாராம். அங்க போலீஸ் நெறய பேர் நிக்கிறத பாத்துட்டு, என்னனு பாக்க போனாறாம். அங்க ஒரு பொணம் இருந்துச்சாம். ஏதோ வண்டி எத்திருக்கும் போல தல, கால் எல்லாம் நசுங்கி இருந்துருக்கு.”
“அப்டியா. எப்போவாம்?”
“தெரியலடி. ஆனா சின்ன பையன் மாதிரி இருந்துச்சாம். பேன்ட்டு, சட்டை போட்டுருந்தானாம்.”
“ரொம்ப மோசம் அக்கா. இப்போலாம் ஆக்சிடென்ட் அப்டிங்கிறது எல்லாம் சாதாரணமா போச்சு.”
“ஆமாம்டி. அந்த பையன் யாருனே தெரியலயாம்.”
“அதான் முகமே நசுங்கி போச்சுல.”
அப்போது ஒருவர் பூ வாங்க அவளது கடைக்கு வந்து நின்றுவிட்டு அவளை அழைக்கின்றனர். “ஏம்மா! கதம்பம் எவ்ளோ?”
“இதோ வரேன் அக்கா.” என கூறிவிட்டு செல்கிறாள்.
கோவிலுக்கு வரும் அனைவரும் அதை பற்றியே பேசுகின்றனர். ஒரு தம்பதி “கோவிலுக்கு வரும் போது எதல்லாம் பாக்க வேண்டியதா இருக்கு பாருங்கோ?” என சலித்து கொண்டு பேசி கொண்டிருந்தனர்.
கெளதம் கடை முடபட்டிருந்தது. அவன் இன்னும் கடைக்கு வரவில்லை. சௌந்தர்யா அவன் இன்னும் வரவில்லையே என கவலை கொண்டிருந்தாள். நேரம் சென்று கொண்டிருந்தது. நேரம் பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. கெளதம் இன்னும் கடைக்கு வரவில்லை. நடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது. அவள் கடையை சாத்த கடையை விட்டு வெளியே வந்தாள். அப்போது கெளதம் வருவதை பார்த்தாள். அவன் முகம் சோகத்தில் இருந்தது. அவன் ஏதோ யோசனையோடு நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் அருகில் வந்தான். ஆனால் அவளை கவனியாமல் கடையை திறந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏங்க, என்ன இவ்ளோ நேரம்? என்னாச்சு? உடம்பு எதுவும் சரி இல்லையா?” என கேள்விகள் கேட்டு கொண்டிருந்தாள். அவன் அப்போதும் அவளை கவனிக்கவில்லை. “ஏங்க?!” என சத்தமாக கூப்பிட்டாள்.
“ம்ம்.” என வேகமாக திரும்பினான்.
“என்னாச்சு?”
“மன்னிச்சுடு. நான் உன்ன கவனிக்கல.”
“கவனிக்கலையா? அப்போ சொன்னதையும் கேக்கலையா?”
“என்ன சொன்ன?”
“உங்களுக்கு என்னாச்சு? உடம்பு சரி இல்லையா?”
அவன் சோகமாகவே இருந்தான். அவள் முகம் பார்த்து கூட பேசாமல், பொருள்களை எடுத்து வைத்து கொண்டே பேசினான். “அப்டிலாம் ஒன்னும் இல்ல.”
“பாத்தா அப்டி தெரியலயே.”
“நான் நல்லாதான் இருக்கேன். ஏன் அப்டி சொல்ற?”
“பின்ன?! நடைய பூட்ட போறாங்க. இப்போ வந்து எடுத்து வச்சுட்டு இருக்கீங்க.”
“ஓ! ஆமாம்ல”
“என்னதான் ஆச்சு?” உச்சு கொட்டினான். “சரி விடுங்க. உங்களுக்கு தெரியுமா?! உங்க ஏரியா பின்னாடி போகுற ரோடுல எதோ ஆக்சிடென்ட் ஆகிருக்கு போல காலைல. தெரியுமா?”
பதில் எதுவும் பேசாமல் ஏதோ யோசனையிலே இருந்தான். அவளுக்கு புரியவில்லை. திடீரென்று போலீஸ் வாகனம் கோவில் தெருவினுள் நுழைந்தது. இடையில் நிறுத்தப்பட்டது. உள்ளிருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி அங்கிருந்த ஒருவரிடம், ஏதோ விசாரிக்கின்றார். அவர் இவர்கள் நிற்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார். உடனே வாகனம் இங்கு வருகிறது. உள்ளிருந்து போலீஸ்காரர் இறங்குகின்றனர். இவர்கள் அருகில் வருகின்றனர். கௌதமிற்கும், சௌந்தர்யாவிற்கும் ஒன்றும் புரியவில்லை.
“இங்க கெளதம் யாரு? நீயா?” என கெளதமை பார்த்து கேக்கின்றனர்.
“ஆமாம் சார்.”
“உன்னை அர்ரெஸ்ட் பண்ண வந்ருக்கோம். வா வந்து ஏறு வண்டியில.” என கூறி அவனது கைகளை பிடித்தனர். உடனே பதற்றமாகினர் இருவரும். சௌந்தர்யா அவனது கையை பிடித்து கொண்டு
“எதுக்கு, ஏன்? எதுக்காக அர்ரெஸ்ட் பண்றீங்க? சொல்லுங்க சார்.”
“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாதுமா. எதுனாலும் ஸ்டேஷன் வந்து பாத்துக்கோ.”
“சார் எதுக்காக என்ன அர்ரெஸ்ட் பண்றீங்கனு நான் தெரிஞ்சுக்க கூடாதா?”
“ஏய் பேசாம வாடா.” என கையை பிடித்து இழுத்தனர்.
“ சார் சொல்லாம வர முடியாது. என்னனு சொல்லுங்க சார்”
வாகனத்தின் உள்ளிருந்து இன்ஸ்பெக்டர், “ கான்ஸ்டபில் என்ன பண்றீங்க? கூட்டிட்டு வாங்க?”
“சார் வர மாட்டேங்கிறான்.”
இன்ஸ்பெக்டர் இறங்கி வருகிறார். “கூப்பிடும் போதே வந்தா நல்லது உனக்கு.”
“சார் எதுக்கு என்ன அர்ரெஸ்ட் பண்றீங்கன்னு சொல்லுங்க சார்?”
“ஆக்சிடென்ட் கேஸ் விஷயமா உன்ன சந்தேகத்தின் பேரில அர்ரெஸ்ட் பண்றோம்”
சௌந்தர்யா, கெளதம் முகத்தில் அதிர்ச்சி, பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்.
“சார் எந்த ஆக்சிடென்ட் சார்?”
“ஒன்னும் தெரியாத மாதிரி பேசாத. முருகன் ஆக்சிடென்ட் கேஸ்.”
“முருகனா?” அதிர்ச்சியில் அவன் கண்கள் கலங்கியது. “உண்மையா சார்?! நான் நம்ப மாட்டேன். முருகன் இறந்துருக்கமாட்டான். இல்ல, இல்ல” என அவன் பொலம்ப, அதை கண்டுகொள்ளாமல் இன்ஸ்பெக்டர்,
“கான்ஸ்டபில் அர்ரெஸ்ட் பண்ணுங்க?” என கூறினார்.
அவனை இழுத்து கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றினார் கான்ஸ்டபில். என்ன செய்வது என புரியாமல் கலக்கத்தோடு நின்றாள் சௌந்தர்யா.
....
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top