• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 10

இன்ஸ்பெக்டர் முரளி போனை கட் செய்து விட்டு யோசித்து கொண்டே நின்றிருந்தார். அப்போது முத்து அருகில் வந்து என்ன என்று விசாரிக்கிறார்.

“என்ன சார், என்னாச்சு..? யாரு போன் ல அவரா..? என்ன சொன்னாரு...?”

“போய்யா நீ வேற... அந்த ஆளு விட்ட நம்மள ஜெயிலுக்கு அனுப்பிறும் போல... எரிச்சலா வருது, ஏன் தான் இந்த ஆளுக்கு உதவி பண்ண ஒத்துக்கிட்டோமோன்னு நினைக்க வைக்கிறான்.”

“என்ன சார் பண்ண, நாம தான் காசு வாங்கிட்டோமே...! செஞ்சு தான் ஆகணும். அவரு என்ன தான் சொன்னாரு..?”

“முருகன் சொன்ன அடையாலத்த வச்சு அவன பிடிச்சுட்டாங்களாம்... இவர் அவன கொன்னுடுவாருன்னு சொன்னதால தான் நான் கண்டு பிடிக்க எடுக்குற முயற்ச்சிக்கு எந்த தடையும் பண்ணாம இருந்தேன். இப்போ வந்து என்ன அவன விசாரி, அவன எந்த உண்மையும் சொல்ல விட்டுறாத அப்டின்னு சொல்லிட்டு இருக்காரு.”

“இவ்ளோ தான சார்.. அதுக்கு எதுக்கு இவ்ளோ கவலை படுறீங்க...?”

“அது மட்டும் இல்ல, அந்த கெளதம விசாரிக்கணும்ன்னு சொல்லி ஜெயில்ல இருந்து கூட்டிட்டு வந்து அடிச்சு அவன கொலையா நான் தான் பண்ணேன்னு ஒத்துக்க வைக்கவாம்... நினைச்சு பாரு இதுல எவ்ளோ சிக்கல் இருக்கு. அது அவருக்கு புரியவே மாட்டுது. அன்னைக்கே அந்த வக்கீல் நாம அவன் அடிச்சு இப்டி பேச வச்சுருக்கோம்ன்னு சொன்னாரு, இதுல இப்போ நிஜமாவே செஞ்சா அவரு என்ன பண்ணுவாரு...”

“சார் நீங்க கவலை படாதீங்க... அந்த கெளதம் தான் ரொம்ப அப்பாவி, நாம சம்மதிக்க வச்சுறலாம்.”

“எனக்கு என்னம்மோ நடக்கும்ன்னு தோணல... அவன் அங்க ஜெயில்ல சந்தோசமா இருக்கானாம், என் ப்ரெண்ட்ஸ் என்ன காப்பாத்தி கூட்டிட்டி போய்டுவாங்கன்னு நம்பிக்கையா சொல்லிட்டு சுத்திட்டு இருக்கானாம், நம்ம ஆளு சொன்னான். அப்பாவியா இல்ல தைரியமா இருக்கானாம்.”

“ஹ்ம்ம் அப்டியொரு பிரச்சன இருக்கு தான். அன்னைக்கு கூட அவன் என்ன எப்டி கோபமா எதிர்த்தான். அவன் ஒத்துக்க மாட்டான்.” சிறிது நேரம் யோசிக்கிறார். பின், “சார்... எனக்கு ஒரு யோசனை...”

“என்ன...?”

“நம்ம முருகன கடத்தினதே கெளதம் தான்னு பிடிச்ச அவன வச்சு சொல்ல வச்சுருவோம். இவர் சொன்ன மாதிரி கெளதம கூட்டிட்டு வந்தும் அடிச்சு ஒத்துக்க வைக்க பாப்போம். ஒத்துக்கிட்டாலும் சரி, இல்லைனாலும் அவன வச்சு இவன மாட்டிவிடலாம்...”

“அவன் ஒத்துகிட்டாலும் கொலையானது யாருன்னு வேற சொல்லணும்ல அவன்..? ”

“அதையும் சொல்லி அடிச்சு ஒத்துக்க வச்சு சொல்ல வச்சுருவோம்..”

“ஏய்.! அத இப்போ சொல்ல கூடாது.. ஒத்துக்கிட்டா சொல்லுவோம்..”

“இல்லாட்டி விட்டுருவோம் சார்.. நம்ம வக்கீல் வச்சு பேச வச்சுருவோம்..”

“நீ சொல்லுறது ஒரு வகைல நல்ல யோசனை தான். ஆனாலும் அந்தஆள பட்டுகோட்டை ல வச்சுருக்காங்க... அவன அங்கேயே விசாரிச்சா பிரச்சன தான... கமிஷனர் வேற இந்த கேசுல நான் சரியா பாக்குறது இல்லன்னு வேற யாராது போடலாமான்னு பேசிட்டு இருக்காறாம், அப்டி மாத்திட்டா என்ன பண்ண...?!” என்று மேலும் மேலும் நம்பிக்கை இல்லாமலே பேசி கொண்டிருக்கிறார்.

“சார் நீங்க ஏன் இவ்ளோ கவலை படுறீங்க..? நீங்க போய் பேசி அவன இங்க விசாரிக்க கூட்டிட்டு வந்துருங்க. அத பாத்தே கமிஷ்னர் நீங்க இந்த கேஸ்ல நல்ல தான் விசாரிக்கிறீங்கன்னு வேறவங்கள போடா மாட்டாரு.. உங்களுக்கும் நல்ல பேரு கிடைக்கும்.”

“பாப்போம்... நீ சொன்ன மாதிரி நடந்தா நல்லது தான். நான் மொதல்ல அவன பட்டுகோட்டைல இருந்து இங்க கூட்டிட்டு வர்றேன்.”

இன்ஸ்பெக்டர் பட்டுகோட்டை போலீஸ் அதிகாரியிடம் பேசி அவனை இங்கு வரவழைக்கிறார். மேலும் அவனை அவர்கள் விசாரித்து எந்த உண்மையும் அவன் கூறவில்லை என்ற தெரிந்து சந்தோஷ படுகிறார். அவனை இங்கு கொண்டு வந்ததும் விசாரிப்பது போன்று அவனை “இத கெளதம் தான் பண்ணான்னு சொல்லணும்” என்று பேசி மாற்றினார்.

பின் கமிஷ்னரிடம் பேசி கெளதமை விசாரிக்க அனுமதி பெறுகிறார். ஜெயிலுக்கு இன்பார்ம் செய்து கெளதமை வரவழைக்கின்றனர். கெளதம் தனக்கு நடக்க போவது அறியாமல் நண்பர்களையும், சௌந்தர்யாவையும் சென்றால் பார்க்கலாம் என்ற ஆவலோடு சந்தோசமாக செல்கிறான்.

ஸ்டேஷனில் முரளி அவனை ஒத்துக்க வைக்க பண்ண வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுகிறார். சௌந்தர்யா மற்றும் நண்பர்கள் மூவருக்குமே கெளதம் இங்கு வருவது தெரியாது. முத்து இன்ஸ்பெக்டரிடம் வந்து முருகனோ அல்லது வேற யாராது வந்து பார்த்து விட்டாலும் பிரச்சனை என்று கூறுகின்றார்.

இன்ஸ்பெக்டர், “அதுக்கு நான் இன்னொரு இடம் வச்சுருக்கேன், அங்க வச்சு தான் கௌதம நாம விசாரிக்க போறோம். கௌதம இங்க கூட்டிட்டு வந்த பின்னாடி நாம அவன அங்க மாத்திடுவோம்.

அதுவும் இப்போவே நைட் லேட் ஆச்சு. இதுக்கு அப்பறம் அவுங்க யாரும் வர மாட்டாங்க. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே நாம அவன ஒத்துக்க வைக்கணும்.

எனக்கு ஒரு சந்தேகம் தான், அவன் இங்க ஒத்துக்கிட்டு அப்பறம் கோர்ட் ல போய் இவுங்க என்னை அடிச்சு தான் இப்டி சொல்ல வச்சாங்கன்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது..?”

“அதுக்கு தான் வக்கீல் ஐயா இருக்காருல... அவரு பாத்துப்பாரு, நீங்க கவலை பட்டுட்டே இருக்காதீங்க சார்...”

கெளதம் இங்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் என்று செய்தி வருகிறது. அப்போது திடீரென்று முருகன் ஸ்டேஷன் வருகிறான். அவனை பார்த்ததும் கெளதம் வரும் நேரத்துக்கு இவனும் இங்க வந்துட்டானே, ஒரு வேல அவனுக்கு தெரிஞ்சுருச்சா என்று சந்தேக படுகிறார் இன்ஸ்பெக்டர். இருந்தாலும் முகத்தில் எதையும் வெளி காட்டாமல் பேசுகிறார்.

“என்ன வேணும்..? எதுக்கு வந்துருக்கீங்க..?”

“தெரியாத மாதிரி கேக்காதீங்க சார்..? நீங்க எப்டி இந்த விஷயத்த எங்க கிட்ட இருந்து மறைச்சீங்க..?”

இன்ஸ்பெக்டர்க்கு சந்தேகம் அதிகரித்தது.

“எந்த விஷயம்..?”

“அதான் சார், நான் அடையாளம் சொன்ன அவன நீங்க பிடிச்சுடீங்கலாமே... சொல்லவே இல்ல சார்...”

“ஓ.. அதுவா, இன்னைக்கு தான் பிடிச்சோம். இங்க கொண்டு வந்து விசாரிச்சுட்டு இருக்கோம். நீங்க எதுனாலும் நாளைக்கு இல்ல நாளனைக்கு வந்து கேளுங்க, இன்பார்ம் பண்ணுறோம். இப்போ நீங்க கிளம்பலாம்.”

“நான் அவன பாக்கணும்..”

“இப்போ முடியாது, நீங்க கிளம்பி போங்க. போயிட்டு நாளைக்கு வாங்க..”

“இல்ல சார், நான் அவன பாத்து விசாரிக்கணும்..”

“அப்பறம் நாங்க எதுக்கு இருக்கோம்..?! எங்களுக்கு தெரியுங்க நீங்க கிளம்புங்க...” என்று எரிச்சல் பட்டு கொண்டே பேசினார். கெளதம் வந்து விடும் முன் இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று அவனை அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் முருகனோ கிளம்புவேனா என்று இருந்தான்.

“இல்ல நான் எதுவும் பண்ண மாட்டேன். அவன பார்த்து கேட்டுட்டு போய்டுவேன். ப்ளீஸ் சார்..”

“அதுக்கு எல்லாம் அனுமதி கொடுக்க முடியாது. கிளம்ப போறியா இல்லையா நீ..?!” என்று மிரட்டும் தோணியில் பேச ஆரம்பித்தார்.

நாளைக்கு நாம வக்கீல் சார பேச வச்சு அவன நாம விசாரிப்போம், இப்போதைக்கு கிளம்புவோம் என்று எண்ணி அங்கிருந்து கிளம்புகிறான். அவன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பும் போது எதிரே கெளதமை கூடி கொண்டு வந்த வண்டி வந்து நிற்கிறது. வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் அவனது கண்களை கூச செய்தது. அவனால் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை.

கெளதம் வெளியே இறங்கினான். அதற்குள் சத்தம் கேட்டு இன்ஸ்பெக்டர் வேகமாக வெளியே வருகிறார். முருகன் கண் கூசுவதால் முகத்தை மூடினான், அதனால் கெளதமை பார்க்க வில்லை. முரளி கெளதமின் கையை பிடித்து இழுத்து வேகமாக ஸ்டேஷனுள் கொண்டு சென்றார். வண்டியை ஆப் செய்த பின் லைட் வெளிச்சம் குறையவும் முருகன் நிமிர்ந்து யார் என்று பார்க்கிறான். அங்கு ரெண்டு கான்ஸ்டபில் இருக்கின்றனர். பின் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான். அவன் செல்லும் வரை முரளி நின்று பார்த்து விட்டு பின் உள்ளே வருகிறார்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
ஏளன பார்வையோடு கெளதமை ஏற இறங்க பார்க்கிறார். அவனுக்கு புரியவில்லை. அவரது பார்வை கெளதமுக்கு எரிச்சலை தந்தது. எதற்கு நம்மை இங்கு வரவழைத்திருப்பார்கள் என்று அப்போது தான் யோசனை வந்தது. எப்டியும் கொஞ்ச நேரத்துல சொல்லுவாங்க, எப்டியும் தெரிஞ்சுடும் என்று எண்ணி பேசாமல் நின்றான்.

இன்ஸ்பெக்டர் முத்துவை பார்த்து, “இவன கொண்டு போய் வண்டில ஏத்துங்க.” என்று கூறிவிட்டு அவரும் வெளியே சென்றார். கெளதமை போலீஸ் வண்டியில் ஏற்றி உடன் முத்துவும் இன்னும் ஒரு கான்ஸ்டபிலும் ஏறினார்கள். வண்டி கிளம்பி நேராக சென்று இடது புறம் திரும்பியது. கெளதம் என்ன என்று புரியாமல், எதுவும் கேக்கவும் முடியாமல் சென்றான். வண்டி கிளம்பி சென்ற பின் இன்ஸ்பெக்டர் அவரது வண்டியை எடுத்து கொண்டு செல்கிறார்.

போலீஸ் வண்டி நேராக வேறு ஒரு ஸ்டேஷன் செல்கிறது. வண்டி நின்றதும் கெளதமை வெளியே இறங்க சொல்லி உள்ளே கூட்டி கொண்டு செல்கின்றனர். கெளதமுக்கு இது வேறு ஒரு ஸ்டேஷன் போல தெரியுது, ஆனா எதுக்கு இங்க கொண்டு வந்தாங்க என்று தெரியவில்லை. அதற்க்கு மேல் கேக்காமல் இருக்க முடியவில்லை.

உள்ளே சென்றதும், “சார்... எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க..?”

முத்து கெளதம் பேசுவதை கண்டு கொள்ளாமல், அவரது வேலையிலே கவனமாக இருந்தார். ஏதோ எழுதி கொண்டிருந்தார். கெளதமுக்கு முத்து மேல் ஏற்கனவே கோபம் அதிகமா இருந்தது. அதனால் பேசாமல் இருந்தான். ஆனால் இன்று வேறு வழி இல்லாமல் பேசினான். அவர் அவனை அலட்சிய படுத்துவது இன்னும் கோபத்தை தூண்டியது.

முத்து ஒரு போலீஸ் என்பதால் கெளதமால் எதுவும் பண்ண முடியவில்லை. எரிச்சலோடு இருந்தான், எதுவும் பேசவில்லை. முகம் கோபத்தில் கொந்தளித்தது. ஏதோ தப்பாக தோன்றியது. இன்னும் இரண்டு நாளில் கேஸ் விசாரணை வர இருக்கும் போது இப்படி தன்னை கூட்டி கொண்டு வந்தது எதற்காக இருக்கும் என்று குழப்பம் அடைந்தான்.

எதோ எழுதி அதை அந்த ஸ்டேஷன் கான்ஸ்டபில் ஒருவரிடம் குடுக்கிறார். பின் திரும்பி வந்து கெளதமை செல்லுக்குள் தள்ளினார். கெளதம் மறுபடியும், “ஏன் சார் இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க சார்...?” என்று கேக்கவும் பின்புறம் இருந்து இன்ஸ்பெக்டர் முரளி பேசுகிறார்.

“உனக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது..?”

“எதுக்கு, ஏன்..? என்ன இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க, அத எதுக்கு நான் தெரிஞ்சுக்க கூடாதா..?” கோபமாக கேட்டான்.

முத்து வேகமாக, “இவனுக்கு எல்லாம் எதுக்கு சார் பதில் சொல்லிட்டு இருக்கீங்க..?” என்று கூறி கொண்டே அவனை உள்ளே தள்ள முயற்சித்தார்.

கோபம் அதிகரித்தது கெளதமுக்கு. கல் போன்று அங்கு இறுக்கி காலை ஊன்றி நின்றான். கெளதமை முத்துவால் தள்ள முடியவில்லை. இன்ஸ்பெக்டர் கோபமாக அருகில் வந்து,

“நில்லுங்க முத்து..! சார் தான் தெரிஞ்சுக்க ஆசை படுறார்ல.. தெரிஞ்சுக்கட்டும்...” என்று கெளதம் மேல் இருந்து முத்துவின் கையை எடுத்து விட்டார். “உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்..? சொல்லுங்க கெளதம்...” என்று நக்கலாக கேட்டார்.

“என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க..?”

“முருகன கடத்துன அக்யுஸ்ட் ஒருத்தன் பிடிபட்டுருக்கான்... அவன் நீ தான் முருகன் கடத்த சொன்னதா வாக்குமூலம் குடுத்துருக்கான்... அதுனால தான் உன்னை விசாரிக்க இங்க கூட்டிட்டு வந்துருக்கோம்... போதுமா விவரம்...?!”

“சார்... என்ன சொல்லுறீங்க..? நான் முருகன கடத்துனேனா...?!

இல்ல சார் இதுல வேற யாரோட சதியோ இருக்கு... எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...”

“அத விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா தெரிஞ்சுடும்..

கான்ஸ்டபில் இவன உள்ள இழுத்துட்டு போய் அந்த ஷேர்ல உக்கார வைங்க..”

“எஸ் சார்...” என்று கூறிவிட்டு இரண்டு கான்ஸ்டபில் வந்து அவனை செல்லுக்குள்ளே இழுத்து சென்று அங்கு போட பட்டிருந்த ஷேரில் அமரவைத்தனர். அவனும் அமைதியாக சென்று அமர்ந்தான்.

இன்ஸ்பெக்டர், முத்து இருவரும் தனியாக பேசுகின்றனர். முத்து அவரிடம், “எதுக்கு சார் அவனுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கீங்க..?” என்று கேக்க, “எனக்கு தெரியும் நான் பாத்துக்குர்றேன்... நீ போய் அவன கவனி..” என்று இன்ஸ்பெக்டர் கூறி முத்துவை உள்ளே அனுப்புகிறார். பின் இன்ஸ்பெக்டர் வெளியே சென்று கால் செய்து தகவல் சொல்லிவிட்டு உள்ளே வருகிறார்.

பிரம்போடு உள்ளே செல்கிறார் முத்து. அதை பார்த்ததும் கெளதமுக்கு என்ன என்பது புரிந்தது. தன்னை அடித்து கஷ்ட படுத்த வேண்டும் அது அந்த ஸ்டேஷனில் இருந்தால் முடியாது, முருகன், சௌந்தர்யா அல்லது வேற யாராது பார்த்தால் பிரச்சனை என்று எண்ணி நம்மை இந்த ஸ்டேஷன் கொண்டு வந்துள்ளனர் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

முத்து உள்ளே கெளதமின் அருகில் சென்று நிற்கிறார். அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்கிறார். மனதில் ‘அன்னைக்கு என்ன எப்டி பேசின அதுவும் நான் ஒரு போலீஸ் அப்டின்றத மறந்துட்டேல... என்னை விட சின்ன பயலுக முன்னாடி என்னை அசிங்க படுத்திட்ட, அதுக்கு இப்போ தான் பதில் கொடுக்க போறேன்...’ என்று எண்ணி கொண்டார்.

கெளதமை அடிக்க ஆரம்பித்தார். அவன் ஷேரில் இருந்து எழுந்தான். அடிப்பதை தடுக்க முயற்சித்து அவரது கையில் இருந்த பிரம்பை பிடுங்கி தூக்கி எறிந்தான். முத்து கோபத்தில் எவ்ளோ தைரியம் உனக்கு என்று கூறி கொண்டே அவனை அடிக்க கை ஓங்க, கெளதம் அவரை ஒரு தள்ளு தள்ள அவர் போய் சுவற்றில் இடித்து கீழே விழுந்தார்.

அப்போது தான் இன்ஸ்பெக்டர் உள்ளே வருகிறார். முத்துவை கீழே தள்ளியதை பார்த்ததும் கெளதமை கோபத்தோடு கன்னத்தை பார்த்து ஓங்கி அடித்தார். அவன் தடுமாறி தள்ளி போய் நின்றான். மறுபடியும் என்னை அசிங்க படுத்திட்டானே என்று கோபமாக வந்தது முத்துவுக்கு. எழுந்திறிக்கவும் முடியவில்லை. சுவற்றில் இடித்து கீழே விழுந்ததால் முதுகினுள் பயங்கரமாக வலித்தது. அதை வெளி காட்டினால் இன்னும் அசிங்கம் என்று எண்ணி அவர் எழ இன்ஸ்பெக்டர் கை குடுத்து தூக்கி விடுகிறார்.

ரவி என்று சத்தமாக இன்ஸ்பெக்டர் மற்றொரு கான்ஸ்டபில்லை அழைக்க அவர் வேகமாக கையில் இன்னொரு பிரம்புடன் உள்ளே வந்தார். அதை வாங்கி முரளி கெளதமை பயங்கரமாக அடிக்க ஆரம்பித்தார். அரைமணி நேரம் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபில் என மாற்றி மாற்றி அடித்தனர். பின் அவர்களுக்கு ரெஸ்ட் வேண்டும் என்று கெளதமை விட்டனர்.

கெளதமுக்கு சாப்பிடவா குடிக்கவோ எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கூறி இன்ஸ்பெக்டர் காலையில் வர்றேன் என்று கான்ஸ்டபில் ரவியை கவனமாக பார்க்க சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். முத்துவும் கிளம்பிவிட்டார்.

கெளதமுக்கு அடி வாங்கி வலியும் வேதனையுமாக இருந்தது. ‘செய்யாத தவறுக்காக இப்டி கஷ்டபட வேண்டியதா இருக்கே, எல்லாம் நான் செய்த தப்பு தான். அன்னைக்கு முருகன நான் எப்டியாது போக விட்டுருக்க கூடாது. அவன கடத்திட்டு போன இடத்துல எப்டிலாம் கஷ்ட பட்டானோ..?! அவன விடவா நாம கஷ்ட பட போறோம்...

ஆனா எப்டியும் முருகனோ, சௌந்தர்யாவோ இல்ல அவனுக யாராது நம்மள வெளில கொண்டு வந்துருவாங்க...

இவனுக நம்மள இப்டி பண்ணுறதுல என்ன கிடைக்க போகுது..?! ஏன் இப்டி எல்லாம் பண்ணுறாங்க..

விசாரணைன்னு கூட்டிட்டு வந்துட்டு எதுவுமே கேக்கல, அதவிட்டுட்டு அடிச்சுட்டு போறானுக, நம்ம மேல அப்டியென்ன தனிப்பட்ட வெறுப்போ..?

கேச முடிக்கணும்ன்னு இப்டி பண்ணுறாங்களா..? இல்ல இவங்களுக்கும் கொலை காரனுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கும்மா..?

இல்ல, இல்ல அப்டியெல்லாம் இருக்காது.. அவுங்க போலீஸ் அப்டிலாம் பண்ண மாட்டாங்க...

எப்டியும் இந்த கஷ்டம் எல்லாம் ரெண்டு நாளைக்கு தான், அப்பறம் நாம வெளில போய்டலாம்...’ என்று தனக்குள்ளே பல எண்ண அலைகளில் மிதந்து கொண்டு இருந்தான். வலியினால் தன்னை அறியாமலே தூங்கியும் போனான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
மறுநாள் காலை சீக்கிரத்திலே முத்து அவரது ஸ்டேஷன் வருகிறார். அங்கு முருகனை கடத்தியவன் தூங்கி கொண்டிருந்தான். அவனை எழுப்பினான். அவன் கண் தேய்த்து அரை தூக்கத்தில் முழித்து பார்த்து, “என்ன சார்..! இப்போ வந்து எழுப்பிட்டு இருக்கீங்க...?” என்று சலித்து கொண்டே மறுபடியும் கண்களை மூடி சாய்ந்தான்.

“அட..! லூசு பயலே.. இங்க பாரு, நான் சொல்லுறத கேளு..”

“என்ன சார்...! சொல்லுங்க..”

“இன்னைக்கு நீ கடத்தின முருகன் வருவான்... எப்டியும் அவன உன் கிட்ட விட மாட்டோம்... ஒருவேள அவனோ இல்ல வேற யாரு வந்து உன்னை விசாரிச்சாலும், நாங்க சொல்லி குடுத்த மாதிரி கெளதம் தான் கடத்த சொன்னான்னு சொல்லனும்... என்ன சரியா...??!”

“அவ்ளோ தான சார்... அதெல்லாம் கரெக்ட்டா சொல்லிடுவேன்... போதுமா..! நான் இப்போ தூங்கலாமா..?”

“டேய்..! விடிஞ்சுருச்சு, எழுந்திரி போதும்.. ம்கூம்..!”

முத்து சொல்வதை கேக்காமல் வேற என்ன வேல இருக்கு என்று முனங்கியவாறு தூங்கி கொண்டே இருந்தான். முத்துவுக்கு நின்று பேச இஷ்டம் இல்லாமல் கிளம்பி விட்டார். அங்கிருந்து நேராக கெளதம் இருக்கும் ஸ்டேஷன் சென்றார். அங்கும் கெளதம்தூங்கி கொண்டிருந்தான். அவன் தூங்குவதை பார்த்ததும் சுற்றி ஏதோ தேடினார்.

இடது மூலையில் ஒரு குடத்தில் தண்ணீர் இருந்தது. சென்று தண்ணீர் எடுத்து வந்து கெளதம் மேல் வேகமாக ஊற்றினார். தூக்கத்தில் இருந்து பதறி போய் எழுந்தான் கெளதம்.

“நீ எல்லாம் தூங்கவே கூடாது. ஒரு கொலைய பண்ணிட்டு நிம்மதியா தூங்கலாமா..?! விட்டுருவோமா...?! எழுந்திரி..!”

அப்போது வெளியே சென்ற கான்ஸ்டபில் ரவி வருகிறார். அவரை பார்த்ததும் முத்து கோபமாக,

“எங்க போன நீ, அதுவும் இவன தனியா விட்டுட்டு.. இவன் ஒரு அக்கியுஸ்ட்... தப்பிச்சுட்டு போனா என்ன பண்ணுவ.. அதுவும் இவன நாம ஜெயில் ல இருந்து விசாரணைக்கு கூட்டிட்டு வந்துருக்கோம். இவன் காணாம போனா அது நமக்கு தான் பிரச்சன..”

“சாரி சார்... இனி கவனமா இருக்கேன் சார்..”

அவர்கள் பேசுவதை கவனமாக கேட்டு கொண்டிருந்தான் கெளதம். திரும்பி கெளதமமை பார்த்த முத்து முறைத்து கொண்டே, “என்னடா..!” என்று கேக்கவும், இவன் திரும்பி கொண்டான்.

ரவியை பார்த்து, “இவனுக்கு ஏதாது சாப்பிட குடுத்தியா..?”

“இல்ல சார்... அதான் இன்ஸ்பெக்டர் இவனுக்கு எதுவும் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு போயிருந்தாருல..”

“ம்ம்... சரி, நீ போய் பிரம்ப எடுத்துட்டு வா, இவன விசாரிப்போம்...” என்று சொல்லி கொண்டே கெளதம் அருகில் சென்றார். ரவி வந்து பிரம்பை கொடுக்கவும், அதை வாங்கி கொண்டு கெளதமின் தோளில் லேசாக தட்டினார். கெளதம் நிமிரவும், கம்பை வைத்தே எழ சொல்லினார் சைகையில். அவன் எழுந்து நிற்கவும்,

“முருகன எதுக்காக நீ கடத்தினா...? அந்த கொலைய நீ தான பண்ணின.. எதுக்கு பண்ணின...?”

அவன் திமிரான பார்வையோடு, “நான் எந்த கொலையோ, கடத்தலோ பண்ணல...”

“நீயா ஒத்துக்கிட்டா நல்லது... இல்ல நீ பண்ணத எப்டி ஒத்துக்க வைக்கனும்ன்னு எனக்கு தெரியும்.. நேத்து அடி வாங்கினது அதுக்குள்ளே மறந்து போச்சா..! ஞாபக படுத்தவா..??!” என்று கம்பை தூக்கினார்.

முத்து சொல்லியதை கேட்டு கெளதமின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. இவர்கள் போலீஸ், எந்த தப்புக்கும் துணை போகமாட்டார்கள் என்று எண்ணியது தவறு என்றும், அதுவும் நம்மை கொலை பண்ணியதாக ஒத்துக்க வைக்கவே இங்கு அழைத்து வந்ததும் புரிந்து விட்டது.

கெளதம் அப்டியே நிற்க, முத்து கம்பால் அடிக்க ஆரம்பித்தார். ஒத்துக்க வைக்க அடித்து பார்த்தார், கடைசியில் அடிக்க முடியாமல் சோர்ந்து போய் கம்பை தூக்கி எரிந்து விட்டு வெளியே சென்று ஷேரில் அமர்ந்தார். அவருக்கு ரவி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கி குடித்தார். திரும்பி சென்று கெளதமை அடித்தார். வெளியில் வந்து தண்ணீர் குடித்து விட்டு மறுபடியும் அடிக்க சென்றார்.

இப்டியே இரண்டு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கவும் அடிக்கவுமாக சென்றது. ஆனால் கெளதம் கல் போன்று நின்றான், வலியை தாங்கி கொண்டு. மற்ற கான்ஸ்டபில் அனைவரும் நடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

இன்ஸ்பெக்டர் அவரது ஸ்டேஷன் சென்றார். அங்கு அவருக்காக முருகன், சைமன் இருவரும் காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் ‘தினமும் வந்துருவாங்க’ என்று உள்ளுக்குள் எரிச்சல் பட்டு கொண்டார். வந்து அவரது ஷேரில் அமர்ந்தார். முருகன் பேச வந்தான், அதற்குள் கான்ஸ்டபில்லை அழைத்து வேலை சொல்லி கொண்டிருந்தார். அவராக கேக்கும் வரை அமைதியாக இருக்கலாம் என்று எண்ணி பேசாமல் இருந்து விட்டான் முருகன்.

இன்ஸ்பெக்டர் முருகனிடம், “சொல்லுங்க... எதுக்கு வந்துருக்கீங்க..?” என்று தெரியாதது போல் கேட்டார்.

“அதான் நேத்து நைட் சொன்னேனே சார்... என்னை கடத்தினவன நான் விசாரிக்கணும்...” முருகன் கூறவும் சைமன் உடன் தலை ஆட்டினான்.

“நானும் நேத்தே சொன்னேனே, அப்டியெல்லாம் நீங்க விசாரிக்க முடியாது..”

சைமன் கெஞ்சுவது போல, “இல்ல சார் நாங்க அவன பாத்து விசாரிக்கல, சும்மா பார்த்து பேசதான் போறோம்..”

“அந்த செல்லுல இருக்கான் வாங்க..” என்று கூறி உடன் எழுந்து செல்கிறார். உள்ளே சென்று அவருகளுக்கு அருகிலே நின்றார்.

முருகன், “நீ எதுக்கு என்ன கடத்தின..? உன்ன யாரு கடத்த சொன்னா..?”

இன்ஸ்பெக்டர் அவன் என்ன சொல்லுவான் என்று சிறு பயத்தோடு இருந்தார். ஆனால் அவன் எதுவும் பேசவில்லை. முருகனுக்கு கோபம் வந்தது. இன்ஸ்பெக்டர் அருகில் இருந்ததால் எதுவும் பேசவில்லை அடுத்து. சைமன் அடுத்து கேட்டான்.

“நீ யார் சொல்லி இத பண்ணின..? இல்ல நீ தான் அந்த கொலைய பண்ணுனியா..?”

அவன் அதற்கும் பதில் எதுவும் சொல்லவில்லை. இருவருக்கும் கோபம் இருந்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்ஸ்பெக்டர் அவர்களை போதும் நீங்க கிளம்புங்க என்று கூறி போக சொல்லினார். அவனிடம் மறுபடியும் மறுபடியும் கேட்டு பார்த்தார்கள். ஆனால் அவனிடம் எந்த பதிலும் பெற முடியவில்லை. பின் அங்கிருந்து அவர்கள் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் சென்ற பின்னர் இன்ஸ்பெக்டர் கெளதமை பார்க்க சென்றார். அங்கு அவனை அடித்து அடித்து சோர்ந்து போய் முத்து அமர்ந்து இருப்பதை பார்த்து, “என்ன சொல்லுறான்” என்று கேட்டார். என்ன பண்ணாலும் அப்டியே இருக்கான் என்று கூறினார். அவர் சிறிது நேரம் இருந்தார். அவனை எப்டியெல்லாம் அடித்து ஒத்துக்க வைக்கலாம் என்று முத்துவுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார். பின் அவருக்கு வேலை இருக்கு என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

கெளதமை தலை கீழாக கட்டிவைத்து அடிப்பது, பின் புறம் ஊசி வைத்து படுக்க செய்வது என்று இன்னும் பல விதத்தில் கெளதமை அடித்து ஒத்துக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் கெளதம் மிகவும் திடமாக இருந்தான். கெளதமுக்கு சாப்பிட எதுவும் குடுக்கவில்லை. குடிக்க தண்ணீர் கூட தர மறுத்தனர். அவற்றை எல்லாம் அவன் தாங்கி கொண்டான்.

மனதில் இன்னும் ஒரு நாள் இன்னும் ஒரு நாள் அதன் பின் எல்லாம் முடிந்து விடும் என்று மறுபடி மறுபடியும் தனக்கு தானே ஆருதல சொல்லி, தைரியத்தை வரவழைத்து கொண்டு எல்லாவற்றையும் ஏற்று அமைதியாக இருந்தான்.

அன்றைய இரவு அவனை தூங்க விட கூடாது என்று முடிவு எடுத்து அதை நிறைவேற்ற முத்து நைட் டுயூட்டி பார்த்தார். ஆனால் அவருக்கும் அடித்து அடித்து டயர்டாக இருந்ததால் சிறிது நேரத்திற்கு மேல் தூக்கத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல் தூங்கி விட, கெளதமும் தூங்கி விட்டான்.

மறுநாள் காலை திடிரென்று முத்து கண் விளித்து பார்த்தார், விடிந்திருந்தது. திரும்பி பார்த்தார் கெளதம் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். தூங்கி எல்லாத்தையும் கெடுத்துட்டோம் என்று எண்ணினார். கெளதமை வந்து அடித்து எழுப்பினார்.

கெளதமுக்கு இரவு தூங்கியது சிறிது அலுப்பை, வலியை குறைத்து இருந்தது. இன்று மறுபடியும் வாங்க போற அடிக்கு தயாராகி விட்டான் கெளதம். மனதில் என்ன செய்தாலும் தான் ஒப்பு கொள்ள கூடாது என்று முடிவு எடுத்து இருந்தான்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
முருகனை கடத்தியவனை பார்த்து பேச நடராஜர் ஸ்டேஷன் வருவதாக கூறி இருந்ததால் சௌந்தர்யா ஸ்டேஷன் வருகிறாள். நடராஜர் இன்னும் இங்கு வராததால் அவள் உள்ளே செல்ல இஷ்டம் இன்றி வெளியே நிற்கிறாள். அப்போது தான் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் வருகிறார். இன்ஸ்பெக்டரை பார்கிறாள் சௌந்தர்யா. அவர் வண்டியில் இருந்து இறங்கிய உடனே கால் வருகிறது. எடுத்து பேசுகிறார்.

“சொல்லுங்க சார்...”

“...”

“அவன நாங்க வேற ஸ்டேஷன்ல வச்சு தான் பண்ணிட்டு இருக்கோம்..”

“...”

“ம்ம்.. புரியுது நானும் யோசிச்சேன் சார்... நீங்க சொன்ன மாதிரி சொல்ல வைக்கிறேன். ஆனா அவன ஒத்துக்க வைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, இதுல இத சொல்லுவானான்னு தெரியல.?! முயற்ச்சி பண்ணுறேன்.”

“...”

“சரி சார் நான் பாத்துக்குறேன்...”

பேசி முடித்து போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு, மறுபடியும் வண்டியில் கிளம்பி செல்கிறார். அவர் பேசியது எல்லாத்தையும் சௌந்தர்யா கேட்டு விடுகிறாள். அவளுக்கு அது கெளதமா என்று சந்தேகம் எழுந்தது. பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் சென்று பார்க்கலாம் என்று எண்ணி செல்கிறாள். அங்கு கெளதம் இல்லை. பின் அடுத்து ஒரு ஸ்டேஷன் செல்கிறாள். அங்கும் அவன் இல்லை. அதன் பின் ஒரு ஸ்டேஷன் செல்கிறாள் அங்கு உள்ளே செல்லும் போதே முத்து ஒரு ஓரமாக நின்று போன் பேசி கொண்டு இருக்கிறார். அதை பார்த்ததும் இங்கு தான் கெளதம் இருப்பார் என்று எண்ணி வேகமாக உள்ளே செல்கிறாள்.

உள்ளே கெளதமை இன்ஸ்பெக்டர் முரளி அடித்து கொண்டிருக்கிறார். “நீ தான அந்த கொலை பண்ண, நீ தான..” என்று கூறி கொண்டே அவனை ஒதுக்க வைக்க அடித்து கட்டாய படுத்துவது புரிந்தது சௌந்தர்யாவுக்கு. உடனே நடராஜரை அழைத்து வந்து கெளதமை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி வேகமாக செல்கிறாள்.

நடராஜரின் வீட்டின் முன்பு கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிற்கின்றனர். குழப்பத்தோடு உள்ளே செல்கிறாள் சௌந்தர்யா. வீட்டு வாசலின் அருகில் செல்லும் போதே ஏதோ அழுகுரல் கேக்கிறது. ஐயாக்கு உடம்பு மறுபடியும் சரி இல்லாம போயிடுச்சா..? என்று சந்தேகத்தோடு வேகமாக உள்ளே நுழைகிறாள்.

ஹாலில் நடராஜரது உடம்பு வைக்கபட்டிருந்தது. அருகில் சொந்தகாரங்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த சுந்தரி சௌந்தர்யாவை பார்த்தாள். நடராஜருக்கு காலையில் ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல் செல்லும் வழியிலே இறந்து விட்டார் என்று சுந்தரி வந்து கூறுகிறாள். கேட்ட உடன் தாங்க முடியாத சோகம் வந்தது. நம்ம கேஸ் நடத்த ஒத்துகிட்ட பிறகு தான் ஐயாக்கு இப்டி நிலைமை என்று எண்ணி அழுதாள்.

ஈம சடங்கு முடியும் வரை அங்கிருந்து விட்டு பின் வீட்டிற்கு சென்றாள். கெளதமின் நிலை அப்போது தான் நினைவுக்கு வந்தது. குளித்து விட்டு, முருகனிடம் சொன்னால் ஏதாவது செய்வான் என்று எண்ணி முருகனின் வீட்டிற்கு சென்றாள். அங்கு அவன் இல்லை. முருகனை கடத்தியவனின் குடும்பத்தாரை சந்தித்து பேச அவனும் சைமனும் சென்றிருப்பது தெரிந்தது. வேறு வழியில்லாமல் சௌந்தர்யா மீண்டும் ஸ்டேஷன் சென்றாள்.

அங்கு இன்ஸ்பெக்டர் முரளி கேஸ் ஒன்றின் விசாரனைக்காக வெளியே சென்றிந்தார், அதனால் முத்து இருந்தார். அவரிடம் சென்று பேசவே அவளுக்கு இஷ்டமும் இல்லை. என்ன செய்ய என்று யோசித்து அப்டியே நின்றிருந்தாள். அவள் வந்தது முத்துவுக்கு தெரியாது. அவர் கொஞ்ச நேரத்தில் டீ குடிக்க வெளியே சென்றார். அப்போது மற்றறொரு போலீசிடம் சென்று பேசி அனுமதி பெற்று கெளதமை சென்று பார்க்கிறாள்.

கெளதமுக்கு சொவ்ந்தர்யாவை பார்த்ததும் சொல்ல முடியாத சோகம், வலி எல்லாம் கண்ணீராய் வந்தது. அதை பார்க்கவும் அவளும் அழுகிறாள்.

“ஐயோ..! உங்கள இப்டி போட்டு அடிச்சுருகாங்களே.. இத தடுக்க கூட முடியாம இருக்கேன் நான்.”

பின் கௌதமே அவளுக்கு தைரியமும் சொல்கிறான்.

“கஷ்டம் இல்லாம எந்த சந்தோசமும் இல்ல.. நாளைக்கு கிடைக்க போற சந்தோசத்துக்கு இன்னைக்கு கொஞ்சம் கஷ்ட படுறேன். நீ கவலை படாத, அவுங்க நினைக்கிற மாதிரி நான் கொலை பண்ணதா ஒத்துக்க மாட்டேன்.”

“நீங்க என்ன சொன்னாலும் செய்யாத தப்புக்கு ஏன் அடிவாங்கனும்.. எதுக்கு பொய் சொல்லி நாமலே தண்டணைய அனுபவிக்கனும்ன்னு எனக்கு கஷ்டமா இருக்கு... நாம ஏழையா இருக்கோம்ன்னு என்னானாலும் பண்ணுவாங்களா..? இல்ல அப்பாவியா இருக்கோம்ன்னு என்னானாலும் பண்ணுவாங்களா..? இது பெரிய தப்பு இல்லையா..? இத நாம எதிர்க்கலைனா அதுவும் தப்பு தான்...!” அவள் கோபமும் அழுகயுமாக பேசுகிறாள்.

“நீ ஏன் இவ்ளோ யோசிச்சு கஷ்ட பட்டுக்குற.. தப்பு செய்தா அதுக்குரிய தண்டணைய நாம தர வேண்டாம், நமக்கு அது தேவையும் இல்ல.. அவுங்க என்ன அடிச்சு உண்மைய ஒத்துக்க வச்சாலும் இறந்து போனது யாருன்னு கோர்ட்ல கேப்பாங்கள..? அப்போ அவுங்க தானா மாட்டுவாங்க..? நீ ஏன் அவுங்கள எதிர்த்து பேசி தண்டணைய வாங்கி குடுக்கணும்ன்னு நினைக்கிற..? அது மாதிரி எல்லாம் யோசிக்காத.. தப்பு பண்ணவங்க எத்தன நாள் தான் ஒளிஞ்சுக்க முடியும், ஒரு நாள் மாட்டிப்பாங்க...”

“உங்கள மாதிரி எல்லாம் என்னால யோசிக்க முடியாது. நாளைக்கு நான் பாப்பேன், ஒருவேள உங்கள அவுங்க மாட்டி விட்டுட்டு தப்பிக்க நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்.. நான் அவுங்கள மாட்டி விட்டுடுவேன்... நீங்க எதுவும் சொல்லாதீங்க, என்ன சொன்னாலும் நான் இப்போ கேக்க மாட்டேன்.. நான் அப்டி தான் பண்ணுவேன்.”

அவளை தடுக்க முடியாது என்று தோன்றியது நாளை இவள் அப்டி செய்தால் அவர்களால் சௌந்தர்யாவுக்கு வேறு பிரச்சனை வந்து விட கூடாது என்று எண்ணி வருந்தினான். அவள் கான்ஸ்டபில் வருவதை பார்த்து விட்டு பின் வேகமாக கிளம்பினாள்.

மறுநாள் கோர்ட்டிற்கு வருகின்றனர் அனைவரும். சௌந்தர்யா முருகனை பார்த்து பேசுகிறாள்.

“நம்ம வக்கீல் நடராஜர் அய்யா இறந்து போயிட்டாரு நேத்து...”

மற்றவர்கள் முகத்தில் அதிர்ச்சி. இப்போது கெளதம்காக யார் வாதாடுவது என்று குழப்பத்தில் நின்றனர். ‘காசுக்கு காசும் போச்சு, நம்ம கெளதம் இன்னும் வெளிலையும் வரல. இவர் இப்போவே போய் சேர்ந்துட்டாரு.. இதுக்கு நாம வேற எந்த வக்கிலயாது பாத்துருக்கலாம்..’ என்று புலம்பினான் சைமன்.

கெளதமை அழைத்து கொண்டு வந்தனர். அவனை பார்த்ததும் அவனது முகமே அவனை போலீஸ் அடித்திருப்பதை காட்டி குடுத்தது. சௌந்தர்யா நேற்று நடந்ததை சொல்லுகிறாள். முருகன் கோபத்தோடு போலீஸ் ஏன் இப்டிஎல்லாம் நடந்துக்குறாங்க.. என்று எரிச்சல் பட்டு பேசினான். அனைவரும் போலீஸ் மேல் கோபம் கொண்டனர். அவனிடம் சென்று பேசலாம் என்று எண்ணி அருகில் செல்ல, அவர்களை அவனிடம் பேச அனுமதிக்கவில்லை. அதற்குள் கேஸ் ஸ்டார்ட் ஆக போகிறது என்று கூறி அவனை உள்ளே அழைத்து சென்று போய்விட்டனர்.

இவர்களும் உள்ளே செல்கின்றனர். கேஸ் ஸ்டார்ட் ஆகிறது. கடைசி விசாரணை விவரங்கள் கூறி அரசு வக்கீல் சொல்கின்றார். முருகனை கடத்தியவனை போலீஸ் பிடித்து விட்டதாக கூறி அவனை விசாரிகின்றனர்.

அரசு வக்கீல், “நீங்க எதுக்காக முருகன கடத்துனீங்க..? தனிப்பட்ட விரோதம் எதுவும் இருக்கா..? இல்ல வேற யாருக்காகவாது கடத்துனீங்களா..? அன்னைக்கு அங்க நடந்த கொலையும் நீங்க தான் பண்ணுணீங்களா..?”

“சார் எனக்கும் அவனுக்கு எந்த சம்பந்தமும் இல்ல... இந்த கெளதம் சொல்லி தான் கடத்தினேன்..” என்று கூறி கெளதமை கை காட்ட,

நீதிபதி கெளதம் பக்கம் திரும்பி, “நீ சொல்லுப்பா, எதுக்காங்க முருகன கடத்தின.. அந்த கொலைய எதுக்காக பண்ணின..? அவனுக்கு உனக்கும் என்ன சம்பந்தம்..?”

கெளதம், “இல்ல சார் அவன் பொய் சொல்லுறான், எனக்கு இவன் யாருனே தெரியாது.. அதுபோல அன்னைக்கு நான் எந்த கொலையும் பண்ணல..”

அரசு வக்கீல் கெளதமிடம் சென்று, “இன்னும் எத்தன நாளைக்கு இப்டி பொய் சொல்ல போற, இன்னைக்கு நேரடி சாட்சியே கிடசாச்சு இன்னும் நீ இப்டி சொன்னா அத கோர்ட் நம்பாது..”
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
கெளதமுகாக வாதிட அங்கு வக்கீல் இல்லாததால் கேஸ் சிக்கலாகி விடுமோ என்று எல்லாரும் பயந்து போய் இருந்தனர். அப்போது சௌந்தர்யா எழுந்து,

“அய்யா அவன் சொல்லுறது எல்லாம் பொய்...” என்று கடத்தியவனை கை காட்டி சொல்கிறாள். நீதிபதி உடனே கோபமாக,

“யார் அது..? கேஸ் நடந்துட்டு இருக்கும் பொது தேவை இல்லாம இடைல பேசிட்டு இருக்குறது..” எரிச்சலோடு கேட்கிறார்.

அரசு வக்கீலுக்கு சௌந்தர்யாவை பற்றி தெரியாததால் ஒன்றும் பேசாமல் அவரும் முழித்து கொண்டு இருந்தார். சௌந்தர்யாவே அருகில் சென்று பேசுகிறாள்.

“அய்யா என் பேரு சௌந்தர்யா. நான் கெளதமுக்கு தெரிஞ்சவர்.”

“நீ எப்டிம்மா அவன் பொய் சொல்லுறான்னு சொல்லுற..?” என்று நீதிபதி கேட்கிறார்.

“அய்யா நான் நேத்து போலீஸ் ஸ்டேஷன் போனேன். அப்போ அங்க இன்ஸ்பெக்டர் யார் கூடயோ பேசிட்டு இருந்தாரு, கௌதம கொலை பண்ணதா ஒத்துக்க வைக்குறேன் அப்டின்னு சொல்லிட்டு இருந்தாரு.. அப்பறம் அவரு இன்னொரு ஸ்டேஷன்ல வச்சு கௌதம விசாரிக்கிறாருன்னு நான் அங்க போய் பார்த்தேன்.

அங்க அந்த கான்ஸ்டபில்(கான்ஸ்டபில் முத்துவை கை காட்டி) கெளதம கொலை நீ தான பண்ண ஒத்துக்கோ, ஒத்துக்கோ அப்டின்னு சொல்லி அடிச்சுட்டு இருந்தாரு...”

என்று கூறவும் இன்ஸ்பெக்டர் முரளியும், முத்துவும் அதிர்ச்சியாகினர். அரசு வக்கீல் வேகமாக சமாளிக்க முயற்சிக்கிறார்.

“சார் இந்த பொண்ணு கெளதமுக்கு தெரிஞ்ச பொண்ணு, அப்டி இருக்க இந்த பொண்ணு அவனுக்கு ஆதரவா தான் பேசும். அதுனால தான் சார் அவன காப்பாதா இப்டி மற்றவங்க மேல பழி போடுது.”

நீதிபதி அவர் சொல்வதை கேட்டு இருந்தும் கெளதமிடம் கேட்கிறார், “போலீஸ் உன்ன பொய் சொல்ல சொல்லி அடிச்சாங்களா..?”

“ஆமாம் சார் அடிச்சாங்க.. ஆனா நான் ஒத்துக்கல...”

உடனடியாக அரசு வக்கீல், “இவன் தப்பிக்குறதுக்காக இப்டி பொய் சொல்லுறான் சார்.. அவன பாத்தா அடி வாங்கின மாதிரி இருக்கா..?! இல்லையே..!” என்று சொல்லி தானாக மாட்டி கொண்டார்.

நீதிபதி கோர்ட்டில் உள்ள டாக்டர் வர சொல்லி கெளதமை செக் பண்ண சொல்லுகிறார். முரளியும், முத்துவும் மாட்டி கொண்டோம் என்று பயந்து போய் எப்டி தப்பிக்கலாம் என்று எண்ணி கொண்டிருந்தனர். டாக்டர் செக் செய்து விட்டு வந்து கெளதம் உடம்பில் உள்ளுக்குள் அதிக காயம் அடித்தது போல் இருக்கிறது என்று கூறிவிட்டார்.

நீதிபதி எரிச்சலோடு இன்ஸ்பெக்டரிடம் கேக்கிறார், “எதுக்கு இப்டி பண்ணீங்க..?”

“சார்... அது வந்து...” பேச தெரியாமல் முழித்து கொண்டே அவரையும் மாட்டி விடாமல் நாமளும் தப்பிக்க வேண்டும் என்று யோசித்து, “கேஸ் சீக்கிரம் முடிக்க அப்டி பண்ணிட்டேன் சார்.. சாரி சார்..” என்று கூறி நீதிபதி என்ன சொல்ல போகிறாரோ என்று பயந்து போய் நின்றிருந்தார்.

நீதிபதி ஏதோ கோபமாக அவர்களை முறைத்து விட்டு எழுதி வைக்கிறார். பின்,

“இந்த கேஸ்ஸ விசாரிக்கிற போலீஸ் அதிகாரியே தவறு பண்ணியதால், இந்த கேஸ விசாரிக்க வேற போலீஸ் அதிகாரிய நியமிக்க உத்தரவிடுகிறேன்.

மேலும் தவறு செய்த இந்த இன்ஸ்பெக்டர் முரளி, கான்ஸ்டபில் முத்து இருவரையும் சஸ்பென்ட் செய்ய காவல்துறைக்கு பரிந்துறைக்கிறேன்.

இந்த கேஸ் விசாரணையை மேலும் இரண்டு நாட்களுக்கு தள்ளி வைக்கிறேன்.”
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb epi sis natarajan ippidi iranthutare.... ovoru muraiyum soundarya than gowthamai kapatha vendi irukku. oru vazhiya vera inspectoritam casea mathitanga.. ini yaar varaporangalo................ :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:yaar than sis accidentla iranthathu suspensea irukkuo_Oo_Oo_Oo_Oo_Oo_O
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
superb epi sis natarajan ippidi iranthutare.... ovoru muraiyum soundarya than gowthamai kapatha vendi irukku. oru vazhiya vera inspectoritam casea mathitanga.. ini yaar varaporangalo................ :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:yaar than sis accidentla iranthathu suspensea irukkuo_Oo_Oo_Oo_Oo_Oo_O
thanks sis:)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top