• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 11

சௌந்தர்யா நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டே வெளியே வருகிறாள். முருகன், சைமன், சந்தோஷ் அனைவருமே சௌந்தர்யாவை நினைத்து பெருமை கொண்டனர். படிக்காதவளாக இருந்தாலும் இப்படி தைரியமாக முன் சென்று பேசியது நினைத்து பாராட்டி கொண்டிருந்தனர். ஆனால் கெளதம் கொஞ்சம் கலக்கத்தோடு இருந்தான்.

அவனை பார்த்ததும் “ஏன் கெளதம் சௌந்தர்யா எவ்ளோ நல்ல தைரியசாலி..?! நான் வாயாடின்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அவ ரொம்ப போல்டா இருக்கா..” என்று சைமன் புகழ்ந்து பேச, கெளதம் சோகமாகவே இருந்தான். அவனிடம் அவள் செய்ததை நினைத்து எந்த சந்தோஷம் இல்லாதது போல தோன்றியது மற்றவர்களுக்கு.

சந்தோஷ் கெளதம் கை பிடித்து, “ஏன் கெளதம் ரொம்ப சோகமா இருக்க..? அவுங்க உன்ன அடிச்சது ரொம்ப வலிக்குதா..?!” என்று அன்போடு கேக்கிறான். சைமனும் முருகனும் உடன் சேர்ந்து, “நாங்க எல்லாரும் சேர்ந்து உன்ன எப்டியாது இந்த கஷ்டத்துல இருந்து வெளில கொண்டு வந்துருவோம்.” என்று வாக்கு கொடுப்பது போல் பேசினர்.

கெளதம் புன்னகையை வரவழைத்து கொண்டு, “எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. ஆனா..!” சௌந்தர்யா பக்கம் திரும்பி கோபமாக, “உன்னை நேத்தே இப்டி எதுவும் பண்ணாதன்னு சொன்னேன்ல..?! அப்பறமும் நீ இப்டி பண்ணிட்ட..!” என்று கூறி முகத்தை திருப்பி கொண்டான்.

சௌந்தர்யா போலி கோபத்தோடு, “நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு..?! இத இப்போ சொல்லலைனா என்ன பிரச்சன வந்துருக்கும்... அய்யோ.. அத நினைச்சாலே, வேண்டாம்பா..” என்று பேச்சை பாதியில் நிறுத்தி கொண்டு குனிந்து கொண்டு வருத்த பட்டாள். “இத இப்போ அவர் ப்ரெண்ட்ஸ் பண்ணிருந்தா சந்தோஷபட்டுருப்பாறு... நான் சொன்ன அது மட்டும் கண்டிப்பாரு..” என்று முனங்கி கொண்டாள்.

மற்றவர்களுக்கும் இது கேட்கும் என்று தெரிந்தும் அவள் சொல்லிவிட்டு தள்ளி சென்று நின்று கொண்டாள் கோபத்தை வெளி காட்ட. முருகன் கெளதமிடம் “ஏன்டா இப்டி சொல்லுற..? அவ எப்டி வருத்த படுறா பாரு..? அவ உனக்காக பேசுறா, உனக்கு ஒண்ணுன்னா அவளால தாங்க முடியல. அத நீ ஏன் இப்டி தப்பா நினைக்கிற..” என்று அக்கரையோடு கேட்கிறான்.

“டேய்..! உனக்குமா நான் எதுக்கு சொல்லுறேன்னு புரியல..?! அவ பொண்ணுடா. அவ இப்டி பேசி அதுனால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருச்சுன்னா என்ன பண்ணுறது...? அதுக்கு தான் நேத்தே அவ கிட்ட இப்டி எதுவும் பண்ணாத, நம்ம வக்கீல் வச்சு பேசிக்கலாம்ன்னு சொன்னேன். அத கேக்காம இப்டி பண்ணிட்டா..”

“நீ சொல்லுறது சரி தான். ஆனா நாங்க எல்லாரும் எதுக்கு இருக்கோம், அவளுக்கு எதுவும் நடக்காம நாங்க பாத்துக்குறோம். சரியா நீ கவலை படாத..” முருகன் கெளதமை சமாதான படுத்துகிறான்.

சந்தோஷ், “நீ சொன்னது சரி தான், ஆனா நம்ம வக்கீல் நடராஜர் சார் நேத்து இறந்து போயிட்டாரு. அதுனால தான் அவ வேற வழி இல்லாம இப்டி பண்ணிட்டா.. அதுவும் கூட நல்லதா போச்சு, இப்போ வேற இன்ஸ்பெக்டர் போட்டா கேஸ்ல நல்லது நடக்கும்ல..” என்று உண்மையை கூறினான்.

கெளதமுக்கு நடராஜர் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது. “எப்டி இறந்தாரு..?” என்று கேட்டான். அவர்கள் கூறவும் மிகவும் வருந்தினான். “அன்னைக்கு கோர்ட்ல அவர் மயங்கி விழுந்த போதே பயந்தேன். வயசான அவர் என்னால இப்டி இறந்து போயிட்டாரு.. என்னால எல்லாருக்கும் எப்போவும் கஷ்டம் தான்..” என்று கூறி அவனை அவனே வருத்தி கொண்டான்.

கெளதம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சௌந்தர்யா அதற்க்கு மேல் கோபத்தை காட்டாமல் அருகில் சென்று, “நீங்க ஏன் உங்கள நீங்களே வருத்திகுறீங்க..? அவருக்கு உடம்பு சரி இல்லாம தான இறந்து போனாரு.. அதுக்கும் உங்களுக்கு என்ன சம்பந்தம். தேவை இல்லாம வருத்த படாதீங்க..” என்று ஆதரவாக பேசினாள். அப்போதும் அவன் கண்கள் கலங்கியே இருந்தன. சமாதன படுத்த கெளதமின் கைகளை பாசத்தோடு பற்றினாள்.

அவர்கள் இருவரும் நடந்து கொள்வதை பார்த்து சைமன் நக்கலாக சிரித்தான். “ம்ம்.. நல்லா தான் இருக்கு, அவ உனக்காக கவலை படுறது, நீ அவளுக்காக கவலை படுறது.. ம்ம்ம்..” என்று மறுபடியும் சிரித்தான். “ஆனாலும் இப்டி கோப படுற மாதிரி நடிக்கிறது, அப்பறம் இப்டி பாசமா வந்து கைய பிடிக்குறதுன்னு பாக்கவே வேடிக்கையா தான் இருக்கு..” என்று கூறிய உடனே இருவரும் கையை விளக்கினர்.

சந்தோஷ், முருகன் இருவரும் சிரித்து கொண்டு கண்ணசைத்தனர். விடாமல் சைமன் மேலும் கேலி செய்தான். “என்னப்பா..? உங்க ரொமான்சுக்கு நாங்க மூணு பெரும் இடைஞ்சலா இருக்கோமா...??! நாங்க வேணா கொஞ்சம் தள்ளி நிக்கிறோம். நீங்க உங்க காதல கண்டின்யு பண்ணுங்க..”

“டேய்..! போடா..” என்று கூறும் போதே கெளதமின் கண்கள் பளபளத்தன. அவனது சோகம் காணாமல் போனது. உள்ளுக்குள் சந்தோஷம் தானாக வந்தது. சௌந்தர்யா வெட்கபட்டாள். அவளது முகமே சிவந்து அழகானது. அனைவரும் சிரித்து தங்களது சோகத்தை மறந்தனர் அந்த நேரத்தில்.

கெளதமின் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமலும் இன்னும் சிறிது நேரம் நின்றால் அவன் நம்மை அதிகம் கேலி செய்வான் என்று எண்ணியும் அங்கிருந்து கிளம்ப நினைத்தாள். “நான் கிளம்புறேன்..” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

உடனே வேகமாக கெளதம் “போகாத நில்லு..” என்றான்.

அவள் திரும்பி “என்ன” என்று பாவனை செய்தாள்.

“இவுங்க யாரு கூடவாது போ.. தனியா போகாத.. அது தான் நல்லது. இனி எங்கயுமே தனியா போகாத..” என்று கண்டிப்போடு கூறினான்.

அவள் புரியாதது போல், “ஏன்..?” என்று கேக்கவும், “சொன்னா கேளு..” என்று கூறினான்.

முருகன் உடனே, “ஆமாம் அதான் நல்லது சௌந்தர்யா. நீ இன்னைக்கு அவுங்கள எதிரித்து பேசி அவுங்கள சஸ்பெண்ட் பண்ண வேற வச்சுருக்க.. அதுக்கு அவுங்க வேற ஏதாது பண்ண முயற்சிக்கலாம். அதனால தனியா எங்கயும் போகாத. வீட்டுலே இரு. நாங்க போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து உன்னை பத்திரமான இடத்துக்கு கூட்டிட்டு போறோம்.”

கெளதம், “அவ வீட்டுக்கே தனியா போக வேண்டாம்..”

சந்தோஷ், “அவுங்க தான் ஸ்டேஷன் போறாங்க நான் போகல.. நான் என்னோட வண்டில கூட்டிட்டு போறேன். நீ கவலை படாத..”

“சரி.. நீங்க கிளம்புங்க. எல்லாரும் பத்திரமா இருங்க.” என்று கூறி அனுப்பி வைத்தான். கெளதமுக்கு ஜெயில் ஹாஸ்பிட்டலிலே ட்ரீட்மென்ட் செய்ய அழைத்து சென்றனர்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
சைமன், முருகன் இருவரும் கமிஷ்னர் பார்க்க சென்றனர். சந்தோஷ் அவனது காரில் சௌந்தர்யாவை ஏற்றி கொண்டு சென்றான். அவர்கள் செல்வதை இன்ஸ்பெக்டர் கோபமாக முறைத்து பார்த்தவாறு நின்று இருந்தார்.

முத்து அருகில் வந்து, “சார்...” என்று கூப்பிடும் வரை நடந்ததை எண்ணி சௌந்தர்யா மேல் கடும் கோபத்தில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். முத்து கூப்பிட்டதும் எரிச்சலோடு “என்னயா..?” என்கிறார்.

“என்ன சார் என் மேல எரிஞ்சு விழுகுறீங்க..?! அந்த பொண்ணு பண்ணதுக்கு நான் என்ன பண்ணுவேன்..?!”

“என்ன பேசிட்டு இருக்க..? நீ அந்த பொண்ணு வந்து பாத்துட்டு போற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த..??! உன்னால இப்போ சஸ்பென்ட் ஆகியாச்சு.. ”

முத்துவுக்கும் சஸ்பென்ட் ஆனதை எண்ணி வருத்தம் இருந்தது. அதனால் சௌந்தர்யா மேல் சொல்ல முடியாத அளவுக்கு கோபமும் வந்தது. இப்போது இன்ஸ்பெக்டர் அவர் மேல் கோபம் காட்டுவதும் அவருக்கு சௌந்தர்யா மேல் இருந்த கோபத்தை பகையை போல் மாற்றியது.

“என்ன சார் நான் மட்டும் தான் கவனிக்கலையா..? நீங்க கூட தான் யாரு பக்கத்துல இருக்கான்னு கூட தெரிஞ்சுக்காம போன் ல பேசிருக்கீங்க.. அத வச்சு தான் அந்த பொண்ணு அங்க ஸ்டேஷன் வந்து பாத்து தெரிஞ்சுருக்கு..”

“என்ன நான் தான் தப்பு பண்ணேன்னு சொல்லுறீயா..?” என்று அதிகாரதோரணையில் திமிராக கேக்கிறார்.

“ஆமாம் சார்.. என்ன மட்டும் சொல்லாதீங்க..?”

முத்துவுக்கு கோபமாக வந்தது. என்ன தான் முரளி இன்ஸ்பெக்டர் என்றாலும் இன்று அவரும் இவரை போலவே சஸ்பென்ட் ஆகி இருப்பததால் எதிர்த்து பேசுகிறார்.

“ஏய்..! என்ன திமிரா பேசுற..? நீ சாதாரண கான்ஸ்டபில் அவளோ தான், நீ என்னையே எதிர்த்து பேசுறியா..?”

“போங்க சார் எப்போ பாரு என்னையே குறை சொல்லிட்டு இருக்கீங்க..? நீங்க தான் இந்த கேசுல என்னையும் சேர்ந்து செஞ்சா பணம் கிடைக்கும்ன்னு ஆசை காட்டி, இப்போ மாட்டி விட்டு வேலைக்கே ஒல வச்சுட்டீங்க.. இதுல என்னை திட்டிட்டு மட்டும் இருங்க..”

தன்னால் முடிந்த அளவு அதே நேரத்தில் அவரை திட்டுவதில் கவனமாக இருந்தார். இவர்களது சண்டைக்கு இடையே இன்ஸ்பெக்டர்க்கு கால் வருகிறது. எடுத்து நடந்ததை ஒப்பிக்கிறார்.

போனிலே இருவரையும் நன்கு திட்டுகிறார் அவர். முரளிக்கும் கோபம் வந்தது. பதிலுக்கு பதில் பேசினார். ஆனால் எதுவும் அதிகமாக பேசிவிட வில்லை. எதிர்த்து பேசி நாமும் கஷ்ட பட கூடாது என்று எண்ணினார். அதனால் ஆதங்க பட்டு கொண்டே அதே நேரத்தில் சில இடங்களில் அவரிடம் கோபத்தையும் வார்த்தைகளில் காட்டினார்.

“ஒரு வழியா ரெண்டு பெரும் சேர்ந்து என்னை மாட்டிவிட்டுட்டு இப்போ என்னன்னா உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி தப்பிக்கிறீங்களா..? நான் சும்மா விட மாட்டேன் உங்கள..

நான் கூட எனக்கு உதவி செஞ்சதுக்காக உங்களுக்கு உதவி பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்..

நீங்க பண்ணுறத பார்த்தா உங்களுக்கு எதுவும் செய்யா கூடாது..

உங்களுக்கு உண்மை தெரியுங்குறதால உங்களையும் ஏதாவது பண்ணனும்...”

அவர்களையும் கொலை எதுவும் செய்து விடுவார்களோ என்று பயந்து பதறி கொண்டே சமாளிக்கிறார்.

“என்ன சார் நீங்க இப்டி பேசுறீங்க..?! நான் உங்களுக்கு உதவி தான பண்ணிருக்கோம். ஜட்ஜ் கேக்கும் போது உங்கள பத்தி எதுவுமே மூச்சு விடல. அப்டி இருக்க எங்கள நீங்க எதுக்கு தப்ப நினைக்கிறீங்க..?

இது எல்லாத்துக்கும் காரணம் அந்த பொண்ணு தான் சார்.. அவல வேணா ஏதாவது பண்ணுங்க.. அது தான் சரியானது.”

தாம் தப்பிக்க சௌந்தர்யா பக்கம் அவரது கோபத்தை திருப்பினார்.

“அந்த ஒரு விஷயத்துக்காக தான் உங்கள நான் சும்மா விடுறேன். என்ன பத்தி வெளில ஏதாவது சொன்னீங்க... அப்பறம் என்ன நடக்கும்ன்னு நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்ல..

புரியுதா..!?” என்று மிரட்டுகிறார்.

“எங்களுக்கு எல்லாம் தெரியும் சார். நாங்க எத பத்தியும் வெளில சொல்ல மாட்டோம். நீங்க எங்க விஷயத்துல கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நல்லா இருக்கும். அதே போல அந்த பொண்ண ஏதாவது பண்ணுங்க..”

“நான் ஹெல்ப் பண்ண பாக்குறேன். இப்போ உடனே பண்ண முடியாது, அப்பறம் சந்தேகம் வந்துரும் என்மேல. அதே போல அந்த பொண்ண என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் அத நீ சொல்ல வேணாம்.”

பேசி விட்டு போன் கட் செய்யவும் ஆர்வமாக முத்து அருகில் வந்து, “என்ன சார் சொன்னாரு..? நமக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னாரா..?” என்றார்.

“ம்ம்.. பண்ணுறேன் இப்போ வேணாம் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணுறேன்னு சொல்லுறாரு..”

நிம்மதி பேரு மூச்சு விடுகிறார் முத்து, “நல்லதா போச்சு..”

“அந்த பொண்ணையும் ஏதாவது பண்ணுறேன்னு சொன்னாரு, அதுக்கு அப்பறம் தான் எனக்கு நிம்மதியாச்சு...”

“ஆமாம் சார் அந்த பொண்ண ஏதாவது பண்ணினா தான் நிம்மதி. இல்ல தேவை இல்லாம இடைஞ்சல் பண்ணிட்டே இருக்கும்..”

இருவரும் தங்களது வேலைக்கு பிரச்சனை வந்து விடாமல் அவர் காப்பாத்துவார் என்ற நம்பிக்கையில் நிம்மதியோடு அங்கிருந்து கிளம்பினர்.

முருகனும், சைமனும் கமிஷ்னர் ஆபீஸ் சென்று கமிஷ்னரைசந்திக்கின்றனர். அங்கு அவர் இந்த் கேஸ் விசாரிக்க புது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமித்திருப்பதை சொல்லுகிறார்.

அந்த இன்ஸ்பெக்டரை சந்திக்க ஸ்டேஷன் செல்கின்றனர். இந்த இன்ஸ்பெக்டர் எப்படியும் உண்மையை கண்டு பிடித்து கெளதமை வெளியே எடுக்க உதவுவார் என்று நம்பிக்கை கொண்டனர்.

அவர்கள் ஸ்டேஷன் சென்ற போது அங்கு இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை. அவர் வருவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று கூறவும் அங்கேயே இருந்து அவரை சந்தித்து பேசிவிட்டு தான் வர வேண்டும் என்று எண்ணி காத்திருக்கின்றனர்.

சந்தோஷ் காரில் சௌந்தர்யா நிம்மதியாக வந்தாள். ஒருவாறு அந்த போலீஸ் அதிகாரிகளை மாற்றி விட்டார் நீதிபதி என்ற சந்தோஷம் இருந்தது. வெகு நேரம் அடுத்து என்ன நடக்கும் என்று அமைதியாக யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சந்தோஷ் எதுவும் பேசாமல் அமைதியாக வண்டி ஓட்டி கொண்டிருந்தான். இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் சந்தோஷ் போன் ஒலித்தது.

எடுத்து பார்த்த உடன் அவனது முகம் மாறியது. எரிச்சலோடு கட் செய்தான். மறுபடியும் கால் வருகிறது. அப்போதும் கட் செய்கிறான். சௌந்தர்யாக்கு எதுவும் புரியவில்லை. கேட்கலாமா என்று யோசனை வந்தது. பின் தவறாக அமையும் என்று எண்ணி அமைதியாகிறாள். அமைதியாக இருக்க மனமின்றி நலம் விசாரிக்கிறாள்.

“என்ன சந்தோஷ் காதம்பரி எப்டி இருக்க..? உங்க வீட்டுல எல்லாரும் அவள எதுக்கிட்டான்களா..?”

“ம்ம் அப்பா என்னோட வாழ்க்கைல நான் தான் முடிவு எடுக்கணும் அதுல நான் தலை இட மாட்டேன் அப்டின்னு சொல்லி இத ஏத்துக்கிட்டாரு

ஆனா அம்மா தான் மொதல ஏத்துக்கல... இப்போ தான் வேற வழி இல்லைன்னு ஏத்துக்கிட்டாங்க...

அதுவும் அம்மாக்கு காதம்பரி இங்க வீட்டுல இருக்குறது பிடிக்கவே இல்ல.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அதுனால எப்போ பாரு ஏதாவது அவள குறை சொல்லிட்டே இருக்காங்க.. அத நினைச்சு அவ தான் ரொம்ப வருத்தத்துல இருக்கா..

இப்போ கூட அம்மா தான் கூப்பிட்டாங்க.. எப்போ பாரு ஏதாவது அவள குறை சொல்லுறாங்க.. அதான் கட் பண்ணிட்டேன்..”

“நீ எதுக்கு கட் பண்ணுற..? ஒரு வேல முக்கியமான விஷயமா கூட இருக்கலாம்ல..?!”

“இல்ல சௌந்தர்யா, அம்மா நான் கோர்ட் ல இருக்கும் போதே கால் பண்ணினாங்க, காதம்பரி சாப்பிட வரலன்னு கம்ப்ளைன்ட் பண்ணுறாங்க..

நான் விடுங்க அம்மா, அவளுக்கு இஷ்டம் இருந்தா வந்து சாப்பிட போறன்னு சொன்னா கேக்க மாட்டுறாங்க..

அவ நேத்தே உடம்பு சரி இல்லாம மயங்கி விழுந்துட்டா, இன்னைக்கு சாப்பிடலைனா அப்பறம் வேற ஏதாவது ஆனா என்னை தான் குத்தம் சொல்லுவீங்க.. அப்டின்னு சொல்லி சண்ட போடுறாங்க.

நான் வந்து சாப்பிட வைக்குறேன் அப்டின்னு சொல்லியும் கேக்க மாட்டுறாங்க.. எப்போ பாரு கால் பண்ணி தொந்தரவு பண்ணுறாங்க..”

“நீங்க ஏன் இப்டி கோப படுறீங்க..? இது எல்லாம் கல்யாணம் முடிஞ்சா சரியாகிடும். கவலை படாதீங்க..” அவனை சமாதான படுத்த முயற்ச்சிக்கிறாள்.

“இல்ல அதுவும் பிரச்சனையா தான் இருக்கு. காதம்பரி இங்க எங்க வீட்டுல இருக்குறது சரி இல்ல, அதுனால அப்பாவும் அம்மாவும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்லுறாங்க. அவளுக்கு அப்பா சம்மதத்தோட கல்யாணம் நடக்கணும்ன்னு ஆசை. முருகன் கிட்ட சொன்ன, அவன் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க சித்தப்பாவ சம்மதிக்க வச்சுரலாம்ன்னு சொல்லுறான்.

இப்போ என்ன பண்ணன்னு புரியல அவளுக்கு. ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கலைனா நீ உங்க அப்பா வீட்டுக்கு போ அங்க இரு, கல்யாணம் ஆனா பின்னாடி இங்க வா, அப்டின்னு சொல்லுறாங்க..

ஷ்ஷ்... எரிச்சலா இருக்கு. இதுக்கு நாங்க ஓடி போனப்போவே கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்கணும்.” நம்பிக்கை இல்லாமல் பிரச்சனையை சந்திக்க முடியாமல் பேசினான்.

“ஏன் நீங்க இப்டி பேசுறீங்க..? யாரும் இல்லாம கல்யாணம் பண்ண நீங்க ரெண்டு பெரும் என்ன யாரும் இல்லாத அனாதையா..? இல்ல எதுவும் இல்லாதவங்களா..? ஏன் இப்டி..? இனி ஒரு நாளும் அப்டி யோசிக்காதீங்க..

உங்க கல்யாணம் எல்லாரோட சம்மதத்தோட நல்லபடியா நடக்கும். நீங்க கவலை படாதீங்க...” சமாதன படுத்தினாள். அதற்குள் அவளது வீடு வந்தது. இறங்கி போகும் போது சந்தோஷ் போன் மறுபடியும் ஒலிக்கிறது.

“இப்போது அப்பா நம்பர் வருது..” என்று அவன் கூறுகிறான்.

“ஏதாவது மிக்கியமான விஷயமா கூட இருக்கலாம். எடுத்து பேசுங்க..”

அவள் சொல்லுவது போலவே அவனுக்கும் தோன்றியது. அட்டென்ட் செய்து பேசுகிறான்.

“என்னாச்சு அப்பா..? ஏன் எல்லாரும் மாத்தி மாத்தி கால் பண்ணுறீங்க..?”

“டேய்..! காதம்பரிக்கு உடம்பு சரி இல்ல... மயங்கி விழுந்துட்டா.” அவனது முகம் மாறியது, “நாங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறோம்.. நீயும் அங்க வந்துரு..” தகவலை மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்தார்.

சந்தோஷ் சோகமும் கவலையுமாக மாறினான்.

சௌந்தர்யா, “என்னாச்சு சந்தோஷ்..? ஏன் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க..? எதுவும் பிரச்சனையா..?” என்று பதறி கொண்டு கேட்டாள்.

“காதம்பரிக்கு உடம்பு சரி இல்லையாம் மயங்கி விழுந்துட்டாலாம், அவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறாங்க..

எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... நான் என்னோட பிரச்சனைய மட்டும் கவனிச்சுட்டு இருந்துருக்கேன். அவ மனச புரிஞ்சுக்காம அவள கவனிக்காம விட்டுட்டேன். என்னால தான் அவளுக்கு இப்டி ஒரு நிலைமை.” என்று சொல்லும் போதே அவனது கண்கள் கலங்கியது.

“அய்யா..! அப்டியெல்லாம் பேசாதீங்க.. அவள போய் பார்ப்போம். நானும் உங்க கூட வர்றேன்..” என்று கூறிவிட்டு, வேகமாக வீட்டிற்குள் சென்று பாட்டியிடம் சென்று சொல்லிவிட்டு வந்தாள். சந்தோஷ் உடன் சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்கு செல்கிறாள்.

அவர்கள் சென்ற பின்னர் சிறிது நேரத்தில் அங்கு ஒரு வண்டி வருகிறது. வீட்டை விட்டு தூரமாகவே வண்டியை நிறுத்தி விட்டு இருவர் வேகமாக வருகின்றனர். சௌந்தர்யா வீட்டை நெருங்கியதும், ஒற்றை விரலை சுட்டி காட்டி “இதுதான..?” என்று ஒருவன் கேக்கவும், மற்றொருவன் “ம்ம்..” என்று கூறி கொண்டே சுற்றிலும் நோட்டம் விட்டவாறே கதவை தட்டுகிறான்.

பாட்டி எழுந்து மெதுவாக வருகிறார். பொறுமை இல்லமால் கதவை வேகமாக தட்டுகின்றனர். பாட்டி அருகில் வர அதே நேரம் அவர்கள் கதவை தட்டியே திறந்து விடுகின்றனர். அருகில் வந்த பாட்டி தலையில் கதவு இடித்து அவர் கீழே விழுகிறார்.

உள்ளே வந்தவுடம் சுற்றி சுற்றி தேடுகின்றனர். “ஒளிஞ்சுட்டு எதுவும் இருக்காளான்னு பாரு..?” என்று ஒருவன் ஏவ, மற்றொருவன் தேடுகிறான். “அவ இங்க இல்ல..” என்று பதிலுரைத்ததும் பாட்டிக்கு புரிந்தது சௌந்தர்யாவை தான் அவர்கள் தேடுகின்றனர் என்று.

கீழே கிடந்த பாட்டியை காலால் ஒரு எத்து விட்டவாறே, “எங்க போயிருக்கா உன் பேத்தியா..?” என்று கேக்கிறான்.

“உனக்கு எதுக்கு நான் சொல்லணும்..??” என்று கோபமாக சொல்லுகிறார்.

“இப்போ நீ சொல்லுற.. இல்ல உன்னோட உயிர் போய்டும்..”

“என்ன ஆனாலும் நான் சொல்லமாட்டேன்..” என்று தைரியமாக இருக்கார்.

“ஏய்..! என்ன கிழவி சொல்ல மாட்டியா..?! நீ செத்த அவ இங்க உடனே ஓடி வருவாள..? அப்போ அவள பாத்துக்குறோம்..”

என்று கூறிவிட்டு அவன் பாட்டி தலையை தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறான். அடி பலமாக பட்டு அவர் “ஐயோ..!” என்று கத்தி விட்டு மயங்கி விட்டார். பின் புறம் தலையில் இருந்து அதிக ரத்தம் வருகிறது.

இன்னொருவன், “யாக்கும் சந்தேகம் வர கூடாது..” என்று கூறவும், அவன் “போய் தண்ணி எடுத்துட்டு வா..” என்று கூறுகிறான்.

தண்ணீர் எடுத்து வந்து குடுக்கவும் அதை பாட்டி கால் அடியில் ஊற்றி விட்டு காலிலும் ஊற்றுகிறான். தண்ணீர் சொம்பை அங்கேயே போட்டு விடுகிறான்.

“இனி யாருக்கும் சந்தேகம் வராது... வா நாம கிளம்பலாம், அவ வந்த பின்னாடி வருவோம்.” என்று கூறி விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

ஹாஸ்பிட்டலில் காதம்பரியை செக் செய்து விட்டு ட்ரிப்ஸ் போடுகின்றனர். வாசலில் அனைவரும் பதற்றத்தோடு நிற்க, டாக்டர் வந்து, “எந்த பிரச்சனையும் இல்லை, இன்று ஒரு நாள் இங்கயே இருந்து ட்ரிப்ஸ் போட்டுட்டு போகட்டும், அதுவே போதும். இனி இப்டி நடக்காம பாத்துக்கோங்க..” என்று கூறிவிட்டு செல்கிறார்.

டாக்டர் கூறிய பின்னரே அனைவருக்கும் பதற்றம் நீங்கியது. உள்ளே சென்று பார்க்கலாம் என்று எண்ணி சந்தோஷ் செல்கிறான். ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு சார் உள்ளே வராதீங்கே என்று நர்ஸ் கூறவும் வெளியே நிற்கின்றனர். பின் முருகனுக்கு கால் செய்கிறான் சந்தோஷ்.

தகவல் அறிந்த உடன் வேகமாக முருகனும் சைமனும் ஹாஸ்பிட்டல் வருகின்றனர். ட்ரிப்ஸ் முடிந்த பின்னர் எல்லாரும் உள்ளே சென்று பார்க்கின்றனர். முருகனை பார்த்ததும் தாங்க முடியாமல் காதம்பரி அழுகிறாள். அருகில் சென்று முருகன் அவளை சமாதான படுத்துகிறான். எல்லாரும் நலம் விசாரித்து விட்டு வெளியே வருகின்றனர்.
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
சௌந்தர்யா சந்தோஷிடம் “அவ சின்ன பொண்ணு, இப்போ தான் வீடு விட்டுட்டு வெளி உலத்துல வாழ ஆரம்பிச்சுருக்கா.. அவளுக்கு ஆறுதலா பேசுங்க. நம்பிக்கையா பேசுங்க. நீங்களே நம்பிக்கையை இல்லாம பேசாதீங்க.. அவள நல்லா பாத்துக்கோங்க. இப்போ அவளுக்கு உங்க அரவணைப்பும் நம்பிக்கையான பேச்சும் தான் தேவை. கவலை படாதீங்க அவ நல்லாகிடுவா.. என்று தனக்கு தெரிந்த அளவுக்கு ஆறுதல் கூறினாள். பின் அங்கிருந்து கிளம்பினாள்.

உடனே முருகன், “நான் கூட வர்றேன்.. நீ தனியா போகாத..” என்று கூறி கொண்டு வண்டியில் உடன் அழைத்து செல்கிறான். போகும் போது, “நீ இவ்ளோ தைரியமான பொண்ணா..? நான் நினைச்சதே இல்ல.. அதுவும் இவ்ளோ பக்குவுமா பேசுற எதிர்பாக்கல நான். உனக்கும் என்னோட தங்கச்சி வயசு தான இருக்கும்..?” என்று புகழ்ந்து பேசுகிறான்.

“நம்மளோட வயச விட நம்ம அனுபவிக்கிற வாழ்க்கை பாடம் தான் நம்மள இப்டி பேச வைக்கும். எனக்கு வயசு கம்மி தான் இருந்தாலும் நான் யாரோட துணையும் இல்லாம வெளி உலகத்த பார்த்து வளர்ந்துருக்கேன்.” பதில் சொல்லுவது போல் தன்னுடைய நிலையை மறைமுகமாக எடுத்துரைத்தாள். அதற்க்கு மேல் அவளிடம் பேசவில்லை முருகன்.

வீடு வந்தவுடன் இறங்கி கொண்டு, “வாங்க முருகன்.. ஏதாது சாப்பிட்டு போங்க.. பாட்டி பாத்தா சந்தோஷ படுவாங்க.” என்று நிலை தெரியாமல் உபசரிக்க அழைத்தாள். அவன் மறுக்கவும் முடியாமல் சரி என்று கூறி உடன் செல்கிறான்.

கதவு திறந்து கிடந்தது. ‘இந்த பாட்டிக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாது, இத்தனைக்கும் அப்போ கதவ மூடி வச்சுகோன்னு சொல்லிட்டு தான் போனேன்.’ என்று மனதினுள் திட்டி கொண்டே கதவை திறக்கிறாள். கதவு முழுசாக திறக்கவில்லை, உள்ளே ஏதோ இடிப்பது போன்று இருந்தது.

உள்ளே சென்று பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் அப்டியே தூக்கி வாரி போட்டது. வீடு முழுவதும் ரத்த வெள்ளத்தில் பாட்டி மயங்கி இருந்தார். ரத்தத்தை பார்த்ததும் மயக்கமே வந்து விடும் அளவுக்கு இருந்தது அவளுக்கு. கண்கள் கலங்கி பயத்தில் அவளது கை கால்கள் நடுங்கின.

அருகில் சென்று பாட்டி தலையை தூக்கி எடுத்து மடியில் வைத்து “பாட்டி.. பாட்டி..!” என்று பதற்றமாக அழுது கொண்டே எழுப்புகிறாள். வண்டியை நிழலில் நிறுத்தி விட்டு வந்தவன் சௌந்தர்யாவின் குரலில் ஏதோ மாற்றம் தெரிகிறதே என்னவென்று பார்ப்போம் என்று வேகமாக உள்ளே சென்றான்.

பாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அவருக்கு அருகில் சௌந்தர்யா அழுது கொண்டே எழுப்ப முயற்ச்சித்து கொண்டிருந்தாள். பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சியில் என்ன செய்வது என்று புலப்படவில்லை. அப்படியே நின்றான்.

சௌந்தர்யா பதற்றத்தில் பயத்தில் ஏதேதோ செய்தால், பாட்டியை கன்னத்தில் அடித்தால், கை கால்களை பிடித்து தேய்த்தால் எதற்கும் பாட்டி கண் திறக்கவில்லை. பின் முருகன், “நம்ம ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோம்..” என்று கூறி ஆம்புலன்ஸ்க்கு கால் செய்கிறான். அவள் தன்னுடைய முயற்ச்சியை விடவில்லை. பாட்டியை எழுப்பி கொண்டே இருந்தாள். ஒரு துணியை எடுத்து தலையில் கட்டுகிறாள். ரத்தம் வருவது அப்போதும் நிற்கவில்லை.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வருகிறது. பாட்டிக்கு சில முதலுதவிகள் செய்கின்றனர். இருந்தாலும் அதிக ரத்தம் போய்விட்டது காப்பாற்றுவது கஷ்டம் என்று அவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே பாட்டி கண் திறக்கிறார்.

அதை பார்த்ததும் சௌந்தர்யாவுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. பாட்டி அவளது கையை பிடித்து, “உன்னை தனியா தவிக்க விட்டுட்டு போறேனே..!” என்று கூறி கொண்டிருக்கும் போதே மூச்சு வாங்குகிறது.

சௌந்தர்யா, “இல்ல.. இல்ல பாட்டி நீ என் கூட தான் இருப்ப...”என்று கூறுகிறாள். பாட்டி கண்களில் சௌந்தர்யா மீது இருந்தது. மூச்சு இழுத்து இழுத்து விட்டார். அப்படியே அவளது கைகளை பிடித்தவாறே பாட்டியின் உயிர் பிரிந்தது.

அதை ஏற்று கொள்ள முடியாமல் அப்படியே உறைந்தாள். “பாட்டி..! பாட்டி..!” என்று வார்த்தையில் தெம்பு இல்லாதது போல இருந்தது. அருகில் நின்றிருந்த நர்ஸ் முருகன் பக்கம் திரும்பி, “இறந்துட்டாங்க..” என்று கூறுகிறார். முருகனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

சௌந்தர்யா “இல்ல, இல்ல.. பாட்டி என்ன விட்டுட்டு போகல..” என்று சத்தமாக கூறி தேம்பி தேம்பி அழுகிறாள். பாட்டி இறந்ததை புத்திக்கு புரிந்தாலும் மனம் அதை ஏற்க முடியாமல் தவித்தது.

பாட்டியின் உடம்பை எடுத்து வைத்தனர். என்ன தான் பக்குவ பட்டவளாக இருந்தாலும் அவளும் சாதாரண மனுசி. அவளுக்கும் மனது வலித்தது. சோகம் தொண்டையை அடித்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டே தவிக்கவும் செய்தாள். அவளுக்கும் தாய் தந்தை இறந்த பின்னர் பதினைந்து வருடமாக தனியாக இருந்து தன்னை வளர்த்து ஆளாக்கி இப்படி நிலைமையில் பாட்டி தனியாக விட்டு சென்றது பெரிய இடியாக இருந்தது.

யார் வருகின்றனர் யார் தனக்கு ஆறுதல் கூறுகின்றனர் எதுவும் அவளுக்கு தெரியவில்லை. பிரம்மை பிடித்தது போல் அழுது கொண்டே இருக்கிறாள். சைமன், சந்தோஷ் அனைவரும் தைரியம் கூறுகின்றனர். சுந்தரி சாப்பிட எது கொடுத்தாலும் சாப்பிட வில்லை. தொண்டையை நனைக்க கூட தண்ணீர் குடிக்க வில்லை.

முருகன் பயந்து போய் இருந்தான். யார் ஆறுதலாய் பேசினாலும் அவளுக்கு எதுவும் ஏற்கும் அளவுக்கு இல்லை. மனம் விட்டு யாரிடமும் பேசவும் இல்லை. பாட்டி முன் அழுது கொண்டே இருந்தாள். சைமனும் இவ இப்படி நடப்பான்னு நான் நினைக்கல தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன் என்று கூறி வருந்தினான்.

சந்தோஷ் அவள் சொல்லியது போல அவளுக்கு இப்போ கெளதமின் ஆறுதலும் அரவணைப்பும் இருந்தால் தான் அவளுக்கு நல்லது. அப்போது தான் அவளை இதில் இருந்து வெளி கொண்டு வர முடியும் என்று சொல்லுகிறான். அவன் சொல்லுவது சரி தான் என்றாலும் அது நடக்காத ஒன்று என்று எண்ணி அவர்கள் மூவரும் வருந்தினர்.

சடங்கு எல்லாம் பண்ண வேண்டும் என்று ஒருவர் கூறவும் அதை முருகன் ஏற்பாடு செய்கிறான். ஏற்பாடு எல்லாம் முடிந்த பின்னர் செய்ய வேண்டியதை எல்லாம் செயலாம் என்று வேலை தொடங்குகிறான். தண்ணீர் எடுத்து ஊத்துகிறாள் சௌந்தர்யா. பின்னர் பிள்ளை, பேரன் யார் இருந்தாலும் முன்னே வர சொல்லுகின்றனர். அப்படி யாரும் இல்லை என்று கூறவும் அப்போ யாரு கொல்லி வைக்கிறது என்று கேக்கின்றனர்.

இப்போ என்ன பண்ணுவது என்று யோசித்து கொண்டிருந்தனர். அப்போது சௌந்தர்யா நானே வைப்பேன் என்று கூறுகிறாள். அதற்க்கு பெண்கள் எல்லாம் அத பண்ண கூடாது என்கின்றனர்.

“எனக்கும் பாட்டிக்கும் யாரு இருக்கா..? எங்களுக்கு நாங்க தான் எதுனாலும் பண்ணிக்கணும், எங்களுக்கு வேற யாரு இருக்கா..? எல்லாம் நானே பண்ணுறேன்..” என்று அழுகையும் கோபமுமாக கூறுகிறாள்.

திடிரென்று ஒரு குரல், “நான் இருக்கேன்... நான் பண்ணுறேன்.” என்று கூறி கொண்டு கெளதம் வந்து நிற்கிறான்.

எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கெளதம் எப்படி வந்தான் என்று எண்ணி கொண்டு இருந்தனர்.

தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top