• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maranathin Marmam - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அத்தியாயம் 9

அடியாட்கள் இருவரும் கத்தியை மறைத்து கொண்டே முருகனுக்கு அருகில் செல்கின்றனர். முருகன் காரில் இருந்து இறங்கியதும் எதிரில் இருந்து ஒருவர் அவனை “முருகா வா...” என்று கூறி கொண்டே கையை பிடிக்க, அதை கவனியாமல் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுத்தி பார்த்தவாறே, அடியாள் ஒருவன் கத்தியை எடுத்து குத்துகிறான்.

முருகனின் கை பிடித்த அவரின் கையில் கத்தி குத்த, அது முருகன் கைகளிலும் குத்தி ரத்தம் சொட்டுகிறது. கத்தியில் குத்திய பிறகு கவனித்து மறுபடியும் முருகனை அந்த அடியாள் குத்த கத்தியை முன் நீட்டி கொண்டு வர, முருகன் ரத்தம் சொட்ட, சொட்ட அவனை தள்ளி விடுகிறான்.

அதற்குள் கோர்ட் கலவரம் அடைய, இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்புகிறான் அந்த மற்றொரு அடியாள். இன்ஸ்பெக்டர் ஓடிடு அப்டின்னு மெதுவாக சைகையோடு சொல்ல அடியாட்கள் வேகமாக எழுந்து ஓடுகின்றனர். அதற்கு பின் இன்ஸ்பெக்டர் வந்து வேறு ஒரு போலீஸ் பிடிக்க அனுப்புகிறார். அதற்குள் அவர்கள் தப்பித்து விடுகின்றனர்.

போலீஸ் வந்து அவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று கூறவும் இன்ஸ்பெக்டர் மனதினுள் சந்தோசமடைகிறார். யாருக்கும் சந்தேகம் வரவிடாமல், “வேகமா போய் பிடிக்க மாட்டீங்களா..?” என்று திட்டுகிறார். முருகனிடம் திரும்பி, “வா தம்பி ஹாஸ்பிட்டல் போகலாம்...” என்று கூறுகிறார்.

முருகன், “இல்ல சார்... எனக்கு அவ்ளோ அடிபடல... அண்ணாக்கு தான் ரொம்ப அடி பட்டுருக்கு... அவுங்கள நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க... நான் உள்ளே போகணும்...”

‘அய்யோ இவன் உள்ளே போனா அப்பறம் பிரச்சன தான்.. இவன இங்க இருந்து கூட்டிட்டு போயே ஆகணும்...’ என்று இன்ஸ்பெக்டர் மனதில் நினைத்து கொண்டே, “இல்ல நீங்க ஹாஸ்பிட்டல் வாங்க... அப்பறம் வந்து கோர்ட்க்குள போகலாம்... எப்டி ரத்தம் வருது பாருங்க... வாங்க...” என்று கூறி கொண்டே அவனை கட்டாய படுத்துகிறார்.

“இல்ல சார்... நான் வர மாட்டேன்... இத்தனை நாளா என்னால என் ப்ரெண்ட் இப்டி கஷ்ட படுறத இனியும் அனுமதிக்க முடியாது... என்ன விடுங்க சார்... நான் உள்ளே போயிட்டு வந்து பேசுறேன்...”

பேசி கொண்டே கோர்ட்க்குள் செல்கிறான். உடனே தடுக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் இன்ஸ்பெக்டர் அவன் பின்னே செல்கிறார். கோர்ட்க்குள் அரசு வக்கீல் விசாரித்து கொண்டிருக்கிறார்.

“எப்டி சார் அத சொல்லுறீங்க..? நாங்க எப்டி நம்புறது..? அதுவும் இப்போ முருகன் உயிரோட இல்லைன்னு நீங்க என்னனாலும் சொல்லலாமா..?”

காதம்பரி, “இல்ல சார்... அது தான் உண்மை... அதுவும் நாங்க இத்தனை நாளா அண்ணாக்கு தெரிஞ்சவுங்க வீட்டுல தான் தங்கியிருந்தோம்... அவரு கூட இங்க வந்துருக்காரு...” என்று கூறி கொண்டே திரும்பி தேடுகிறாள்.

“எங்கம்மா...? யாருமே அப்டி வந்த மாதிரி தெரியலையே...”

சந்தோஷ் உடனே, “இல்ல சார்... நிஜமா வந்தாரு... வெளில எங்கயாது இருப்பாரு...”

“நீங்க சொல்லுற கதைய நாங்க நம்ப முடியாது... எங்களுக்கு ஆதாரம் வேணும்...”

இருவரும் பேச முடியாமல் நிற்க, சிரித்து கொண்டே அரசு வக்கீல்,

“சார்... இவன் சந்தோஷ் கெளதம் இரண்டு பேரும் சேர்ந்து தான் கொலை பண்ணிருக்காங்க... இப்போ தன்னோட காதலான காப்பாத்த இந்த பொண்ணு பொய் சொல்லுது... அது தான் சார் உண்மை...”

“இல்ல சார்...”

என்று ஒரு சத்தமான குரல் கேட்டு அனைவரும் திரும்ப, அங்கு முருகன் நிற்கிறான்.

மறுபடியும் முருகன், “இல்ல சார்... சந்தோஷ் சொல்லுறது உண்மை...”

தன்னுடைய கண்ணையே தன்னால் நம்ப முடியாதது போல் அனைவரும் அப்படியே உறைந்து முருகனையே பார்த்து கொண்டு இருந்தனர். கெளதம்க்கு இன்று சந்தோசத்தில் தலை கால் புரிய வில்லை. தான் கைதியாக கோர்ட்டில் நிற்கிறோம் என்பது கூட மறந்தது. சந்தோசத்தில் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை.

“முருகா....! முருகா...!” என்று ஆனந்த கூச்சலிட, அங்கு கூட்டத்தில் அமர்ந்திருந்த சைமனுக்கு ஆனந்தத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய எழுந்து அவனுக்கு அருகில் செல்கிறான். சந்தோஷ், காதம்பரி இருவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். சௌந்தர்யா முருகனை பார்த்ததும் மனதில் இவன் உயிரோட வந்துட்டானா... நல்ல வேளை இவன் இப்போ வந்தான்... இனி அவர ஈஸியா வெளில கொண்டு வந்துடலாம்.... என்று நினைத்தாள்.

சைமன் முருகன் அருகில் சென்று கதறி அழுக, முருகன் கட்டி பிடித்து சமாதானம் செய்ய, அங்கு பெரும் சந்தோச நிகழ்வுகளாய் நடந்தன.

கெளதம்க்காக வாதாடும் வக்கீல் உடனே எழுந்து, “சார்... இவர் தான் கொலை செய்ய பட்டதா சொன்ன முருகன்...” என்று கூறவும், நீதிபதி சற்று முன்பு தன்னிடம் குடுத்த முருகன் போட்டோவை எடுத்து பார்க்கிறார். பார்த்ததும் அது முருகன் என்பது தெளிவாக தெரிந்தது. முருகனை பார்த்து, “நீங்க இங்க கூண்டுக்கு வந்து பேசுங்க...” என்று கூறுகிறார். முருகன் கூண்டில் ஏறி நிற்கிறான்.

வக்கீல் விசாரிக்கிறார், “இத்தனை நாளா எங்க இருந்தீங்க முருகன்..? சந்தோஷ் சொல்லுறது உண்மையா..?”

“ஆமாம் சார்... சந்தோஷயும் காதம்பரியையும் நான் தான் ஓடி போக வச்சேன்... சித்தப்பா தங்கச்சிக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பாத்தாரு... காதம்பரிக்கு இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு புரிஞ்சது...

அதுவும் தங்கச்சி சந்தோஷ் கூட கல்யாணம் நடக்கலைனா நான் செத்து போய்டுவேன் அப்டின்னு சொன்னா...

அதான் நான் சித்தப்பா கிட்ட இப்போ கல்யாணத்துக்கு அவசர பட வேண்டாம் அப்டின்னு சொன்னேன்.... ஆனா அவரு நல்ல சம்பந்தம் முடிச்சா தங்கச்சி நல்ல வாழுவான்னு சொல்லிட்டு இருந்தாரு... அதுவும் சந்தோஷ் வேற சாதின்னு அவனுக்கு காதம்பரிய கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிடாரு..

அதுனால தான் இப்டி ஒரு முடிவு எடுத்தேன். அன்னைக்கு நைட் சித்தப்பா வீட்டுக்கு வர லேட் ஆச்சு, அத சாதகமா பயன்படுத்தி சந்தோஷ வீட்டுக்கு வர சொன்னேன். அவன் வரவும் காதம்பரிய அவன் கூட அனுப்பி வச்சேன்.

நான் வீட்டுக்கு வந்தப்ப சித்தப்பா காதம்பரிய ரொம்ப தீவிரமா தேடிட்டு இருந்தாரு... ஊருக்குள்ள இருந்தா மாட்டிப்பாங்க, அதனால அவுங்கள வேற இடத்துக்கு அனுப்பி வைக்க யோசிச்சு அவுங்கள தேட போறமாதிரி சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போய் அவுங்கள கொடைக்கானல்ல இருக்க எங்க தாத்தாக்கு தெரிஞ்ச ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.”

“சரி நீங்க தான் சந்தோஷ், காதம்பரி ஓடி போக ஹெல்ப் பண்ணுனீங்க... அப்பறம் எதுக்கு கெளதம் வீட்டுக்கு போனீங்க...?”

“சார் நான் கெளதம் பார்த்து மன்னிப்பு கேக்க போனேன்... ஆனா அங்க போகவும் என் மனசு கேக்காம அவன் கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்து கிட்டேன்..”

“அப்டி அன்னைக்கு என்ன பேசுனீங்க... என்ன நடந்தது கெளதம் வீட்டுல..?”

“சார்... அதுவந்து நான் கெளதம் வீட்டுக்கு போனேன்.. அவன் என்ன பாக்கவும் ரொம்ப சந்தோஷ பட்டான். என் கிட்ட ரொம்ப சாதரணமா பேசினான்...

அத பார்த்து எனக்கு பழசு ஞாபகம் வந்து அவன் கிட்ட என்று கூறி கொண்டிருக்கும் போதே அவனுக்கு கண்களின் முன்பு அன்று நடந்தது நிழலாடியது

முருகன் ‘நான் உன்னை தான் ரொம்ப நம்பினேன்... ஆனா நீ என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்ட... அதுவும் என்னையே நீ ஏமாத்திட்ட’

கெளதம் ‘நான் எப்போவுமே உன்னை ஏமாத்த நினைச்சது இல்ல...’

முருகன் ‘பொய் சொல்லாதா... உனக்கு சந்தோஷ், காதம்பரிய பத்தி ஏற்கனவே தெரிஞ்சு இருந்தும் என்கிட்டே இருந்து மறைச்சுட்ட...’

கெளதம் ‘நான் வேணும்ன்னு மறைக்கலை... என்னை மன்னிச்சுடு...’

முருகன் ‘நான் சின்ன வயசுள இருந்து அப்பா, தாத்தா அப்டின்னு யார் யார் மேல பாசம் வச்சேனோ அவுங்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டு போய்ட்டாங்க... அவுங்க எல்லார் போன பின்னாடி உன்னை தான் நான் ரொம்ப நம்பிட்டு இருந்தேன்... ஆனா நீ என்னையே ஏமாத்திட்ட...

பாசம் வைக்க யாரும் இல்லாம அனாதயா தான் நான் இருக்கணும் போல... ‘

கெளதம் ‘நான் உன் மேல பாசம் ரொம்ப வச்சுருக்கேன்...’

முருகன் ‘பொய்... நான் உன்கிட்ட இதுவரைக்கும் எந்த விஷயத்தையும் மறைச்சது இல்ல... ஆனா நீ என்கிட்ட எவ்ளோ பெரிய விஷயத்த மறைச்சுட்ட... இதுல இருந்தே நீ என் மேல எவ்ளோ பாசமா இருந்துருக்கன்னு எனக்கு புரிஞ்சது...

எதுக்கு என்ன ஏமாத்தின... ஏன் இப்டி பண்ண சொல்லு, சொல்லு...
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
இனியும் நான் எதுக்கு இருக்கணும்... இந்த உலகத்துல யாருமே எனக்காக இல்ல.. அப்பறம் நான் ஏன் இருக்கணும்... நான் போறேன்.. போறேன்...’

அப்டின்னு சொல்லிட்டு அங்க இருந்து ஓடிட்டேன்... அவன் என்ன தடுக்க என் பின்னாடியே வந்தான்.

எனக்கு அத பார்க்கவும் இவன் கிட்ட போயா இவ்ளோ கோபத்த காட்டினோம் அப்டின்னு ரொம்ப கஷ்டமா போச்சு... இருந்தாலும் என்னால அவன நேர பார்க்க முடியல.”

“நீங்க இறந்து போயிட்டதாவும் உங்க ப்ரெண்ட் கெளதம் தான் கொலை பன்னதாவும் கேஸ் நடக்குறது உங்களுக்கு தெரியுமா..? இல்ல தெரியாதா..? ”

“எனக்கு தெரியாது சார்... அன்னைக்கு நான் அங்க இருந்து ஓடி போய் அந்த பக்கம் ஒரு தென்னை மரத்தடில நின்னு அழுதுட்டு இருந்தேன்... அப்போ யாரோ என்னை பின்னாடி கூடி இருந்து வாய பொத்தி தூக்கிட்டு போய்ட்டாங்க...”

“என்ன சொல்லுறீங்க...?! கடத்திட்டு போயிட்டாங்களா...?!”

“ஆமாம் இத்தன நாளா என்னை புதுகோட்டைல ஒரு வீட்டுல அடைச்சு வச்சுருந்தாங்க... நான் அங்க இருந்து இன்னைக்கு காலைல தான் தப்பிச்சு வந்தேன்... இங்க ஊருக்கு வந்தப்போ தான் எனக்கு தெரிஞ்சது கேஸ் பத்தி... அப்பறம் கொடைக்கானல்ல சந்தோஷ் தங்கி இருந்த சேகருக்கு கால் பண்ணேன்... அவரு இப்போ தான் நாங்களும் இங்க வந்தோம்ன்னு சொன்னாரு... அதான் நேரா இங்க வந்தேன்... இங்கயும் என்னை கொலை பண்ண ஆளுக இருந்தாங்க..”

அப்போது தான் அவனது கைகளில் இருந்து ரத்தம் வருவதை பார்க்கிறான் கெளதம். உடனே பதறி போய், “முருகா...! என்னாச்சு உன்னோட கையெல்லாம் ரத்தமா இருக்கு..?” என்று கேக்கிறான். அதன் பின் தான் அனைவரும் அவனது கைகளை கவனிக்கின்றனர். சைமன், சந்தோஷ், காதம்பரி அனைவரும் பதறுகின்றனர்.

வக்கீல், “இந்த காயம் எப்டி வந்தது..?”

“கோர்ட் வாசல்ல என்னை ஒருத்தன் கொலை பண்ண ட்ரை பண்ணான்...”

எல்லாரும் பதறினார்கள். நீதிபதி, “இன்ஸ்பெக்டர் முரளி என்ன பண்ணுறீங்க..? கோர்ட் வாசல் ல கொலை முயற்சி நடந்துருக்கு... என்ன பாதுகாப்பு குடுக்குறீங்க... கொலை பண்ண முயற்சி பண்ணவன பிடிச்சீங்களா...?” என்று கேக்கவும், இன்ஸ்பெக்டர் எழுந்து பதில் சொல்லுகிறார்.

“இல்ல சார்... பிடிக்க முடியல... நாங்க நல்லா தான் பாதுகாப்பு குடுத்தோம்... அப்டி இருந்தும் இப்டி நடந்துருச்சு... இத பண்ணவங்கள எப்டியும் பிடிச்சுடுவோம்...”

“ம்ம்ம்...” என்று நீதிபதி எரிச்சல் பட்டார்.

“அவன் என்னை கத்தி வச்சு குத்த வந்தான்.. அப்போ தான் சேகர் என்னை வான்னு சொல்லி கை குடுத்தாரு... அவன் குத்தின கத்தி அவரோட கைல பட்டு என் கைலயும் குத்திருச்சு... அவருக்கு தான் ரொம்ப அடிபட்டுருச்சு... அவர ஹாஸ்பிட்டல்க்கு அனுப்பிருக்காங்க போலீஸ்... நான் இங்க வர வேண்டியது அவசியம்ன்னு எனக்கு தோனுச்சு... அதான் நான் ஹாஸ்பிட்டல் போகாமா இங்க வந்துட்டேன்...”

அரசு வக்கீல் எழுந்து வந்து, “என்ன முருகன் உங்கள யார கடத்துனாங்க...? கெளதமா..?”

“இல்ல சார்... என்னோட கெளதம் அப்டி பட்டவன் இல்ல... ரொம்ப நல்லவன்...”

கெளதம்காக வாதாடும் வக்கீல், “சார்... இப்போ உங்களுக்கு தெளிவா தெரிஞ்சுருக்கும்... என்னோட கட்சி காரர் எந்த கொலையும் பண்ணலைன்னு...

கெளதம்க்கும் இந்த கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...

அதனால அவர விடுதலை பண்ணனும் சார்...”

நீதிபதி, “கெளதம்க்கும் இந்த கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எப்டி சொல்லுறீங்க...? கெளதம் கொலை நடந்த இடத்துல இருந்துருக்கான்... அதுவும் இல்லாம சைமன், கெளதம் பொணத்த ரோட்டுல தூக்கி போட்டாத பாத்துருக்காரு... அப்டி இருக்க அவர எப்டி விடுதல பண்ண முடியும்...?”

வக்கீலால் பதில் பேச முடியவில்லை. அரசு வக்கீல் சந்தோசமடைந்தார்.

நீதிபதி தொடர்ந்து கேள்விகள் கேட்டார், “சைமன் அங்க வேற யாரும் இல்லன்னு சொன்னாரு... அப்டின்னா முருகன யாரு கடத்தினா...?

இவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனா, யாரு அந்த கொலை பண்ணா..? அத நிரூபிங்க...

இன்ஸ்பெக்டர் முரளி... முருகன கொலை பண்ண முயற்ச்சி பண்ணது, கடத்தி வச்சது யாருன்னு கண்டு பிடிங்க சீக்கிரமா...”

இன்ஸ்பெக்டர் எழுந்து, “ம்ம்ம்... ஓகே சார்...”

நீதிபதி ஏதோ எழுதுகிறார். பின், “விசாரணையை பத்து நாளைக்கு ஒத்தி வைக்கிறேன்...” என்று கூறி எழுந்து செல்கிறார்.

எல்லாரும் வெளியே வருகின்றனர். எல்லாருக்கும் முகம் தெளிவாக இருந்தது. சைமன் மற்றும் சௌந்தர்யா முகம் மட்டும் சோகத்தில் இருந்தது. முருகனிடம் சிவசங்கர் வந்து பேசுகிறார்.

“நீ உயிரோட இருக்கன்னு நினைக்கும் போதே ரொம்ப சந்தோசமா இருக்கு... நீ சீக்கிரம் வீட்டுக்கு வாப்பா... ம்ம்ம்.... நீ ஹாஸ்பிட்டல் போயிட்டு வீட்டுக்கு வாப்பா...

ஆனா உன் தங்கச்சியயும், அவனையும் கூட்டிட்டு வந்துறாத... நான் கிளம்புறேன்...” என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

முருகன் காதம்பரியிடம் பேசி கொண்டு இருக்கிறான். சந்தோஷ் சைமனிடம் வந்து நிற்கிறான்.

சௌந்தர்யா தனியாகவும், சந்தோஷ், சைமன் தனியாகவும், முருகனும் காதம்பரியும் தனியாக நிற்கின்றனர். கெளதமை வெளியே முரளி கூட்டி கொண்டு வருகிறார். கெளதம் வருவதை பார்த்ததும் அனைவரும் வேகமாக அருகில் செல்கின்றனர். முருகன் அருகில் சென்று கெளதமின் கையை பிடிக்கிறான். பின் கெளதமின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து அவனை கட்டி பிடித்து சிரிக்கிறான்.

“ரொம்ப சந்தோசமா இருக்கு... இப்டி ஒரு நாள் வரும்ன்னு நான் நினைக்கல... உன்னையும் இவனுங்களையும் ரொம்பவே கஷ்ட படுத்திட்டேன் நான்... மன்னிச்சிடு...” என்று முருகன் வருத்தப்பட்டு பேசுகிறான்.

“இல்ல... நீ தான் என்னை மன்னிக்கணும்... நான் உன்னோட நட்புக்கு சரியான நண்பனா இல்ல... நீ சொன்னது சரி தான்... மன்னிச்சுடு”

“அப்டியெல்லாம் பேசாதடா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...

அன்னைக்கு நான் பேசினத நினைச்சு இப்போ ரொம்ப வருத்த படுறேன். என் மேல எவ்ளோ பாசம் வச்சுருக்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன்... இனியும் நாம பிரிஞ்சு இருக்க வேண்டாம். நாம எல்லாரும் பழைய மாதிரி ஒண்ணா இருக்கலாம்...”

கெளதம் முகத்தில் பழைய சந்தோசம் வந்தது அப்போது தான். பிரிந்த உறவு மறுபடியும் சேந்தது போல் அளவுகடந்த மகிழ்ச்சி அவனது முகத்தில் தெரிந்தது.

சந்தோஷ் அருகில் வந்து, “எல்லாத்துக்கும் நான் தான் காரணம், என்னோட காதல் தான் நாம எல்லாரையும் பிரிச்சுருச்சு... நான் தான் தப்பு பண்ணிட்டேன்... என்ன தான் நீங்க மன்னிக்கணும், என்னால தான ரொம்ப பாசமா இருந்த நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க... அதுவும் நான் ஓடி போனதுனாலா இன்னைக்கு கெளதம் ஜெயில் ல இருக்கான்... எல்லாம் நான் பண்ண முட்டாள் தனம். என்னை நீங்க எல்லாரும் தான் மன்னிக்கணும்...” சந்தோஷ் மிகவும் பீல் பண்ண, கெளதமும் முருகனும் சிரித்தனர்.

முருகன் நக்கலாக, “அப்போ மன்னிக்கணும் அப்டினா... நீ என்னோட தங்கச்சிய மறந்துடணும்... சரியா...?” என்று கேக்கிறான்.

சந்தோஷ் பதில் பேசாமல் முழிக்கவும் அவர்கள் மேலும் சிரித்தனர். சைமன் மட்டும் பின்னாடி தனியாக ஒதுங்கியே நின்றான். முருகன் அவனது கைகளை பிடித்து இழுத்து, என்னடா நீ எதுவும் சொல்ல மாட்டியா..? என்று எதார்த்தமாக கேக்க சைமன் அழுக ஆரம்பித்தான். அனைவரும் ஏண்டா அழற...? என்று கேட்டு கொண்டே இருந்தனர்.

சௌந்தர்யா உடனே, “நல்லா தான் நடிக்கிற சைமன்... போதும் உன்னை எல்லாரும் சகஜமா தான ஏத்துக்கிட்டாங்க.. அப்பறம் எதுக்கு நீ நல்லவன் மாதிரி நடிக்கிற..? அவசியம் இல்லப்பா..” என்று சைமன் மனதை குத்தும் வார்த்தைகளை சொல்லுகிறாள்.

கெளதம் அவனுக்காக, “ஏன் சௌந்தர்யா இப்டி பேசுற... அவன் அப்டி பட்டவன் கிடையாது...”

முகத்தை திருப்பி கொண்டால் சௌந்தர்யா.

சைமன் நிமிர்ந்து கெளதமிடம், “என்ன மனிச்சுருடா... நான் உனக்கு ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டேன்... நீ இப்போ ஜெயில்ல இருக்குறதுக்கு நான் தான காரணம்... ஆனா நீ எவ்ளோ பாசகாரனா இருக்க... உன்ன போய் நான் சந்தேக பட்டேனே... என்ன அந்த கடவுள் மன்னிக்க மாட்டாரு...” என்று அழுது கொண்டே பேசுகிறான்.

“தப்பு எல்லாரும் தாண்டா பண்ணிருக்கோம்... நீ மட்டும் இல்ல, நான் கூட பண்ணிருக்கேன்... நான் உன்னை தப்ப நினைக்கல... நீ மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்ல... நீ எப்டியும் ஒரு நாள் உண்மை புரிஞ்சு என்ன நம்புவன்னு எனக்கு தெரியும்... அது இன்னைக்கு நடந்துருக்கு...
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
அதுவும் இல்லாம நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்துருக்கோம்... இந்த சந்தோசத்த நாம சிரிச்சு கொண்டாடனும், அழுதுட்டு இருக்க கூடாது. நான் இன்னும் கொஞ்ச நேரம் தான் உங்க கூட இருந்து பேச முடியும், அப்பறம் என்ன ஜெயிலுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க... அதுனால நீ அழுதா அப்பறம் நான் ரொம்ப வருத்த படுவேன்... நீயும் சந்தோஷமா இரு... நம்ம முருகன் உயிரோட வந்துட்டான்...”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கல... என்னோட சாட்சி தான இப்போ நீ இந்த கேஸ்ல இருந்து வெளில வர தடையா இருக்கு... நான் அடுத்த விசாரணைல பொய் சாட்சி சொன்னதா சொல்லி உன்னை வெளில கொண்டு வர்றேன்...”

“நீ எதுவும் பண்ண வேண்டாம்...” என்று கைகளை இறுக பிடித்து அவனையும் கட்டி பிடித்து சமாதன படுத்துகிறான்.

சௌந்தர்யா, “நான் ஒரு கேள்வி கேக்கலாமா..?” என்றவுடன் அனைவரும் சேர்ந்து என்ன என்பது போல் அவளை பார்க்கின்றனர். “எப்போ இந்த பாச மழை நிக்கும்...? பேச வேண்டியது எப்போ பேசுவீங்க..?”

முருகன் உடனே, “ஆமாம் இந்த கொலையா யாரு பண்ணா..? அதுவும் யாரது செத்து போனது... அது எல்லாம் நாம கண்டு பிடிக்கணும்... கண்டு பிடிச்சே ஆகணும்...”

சந்தோஷ், சைமன் இருவரும் சேர்ந்து, “இனி நாங்களும் உனக்கு இருக்கோம்... கவலை படாத.. கண்டிப்பா உன்னை சீக்கிரம் வெளில கொண்டு வந்துருவோம்... நீ தைரியமா இரு...”

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் வருகிறார். “என்ன சார்...? பேசி முடிச்சாசா..? நாம கிளம்பலாமா..?” எரிச்சலை வெளி காட்டாமல் சொல்ல, கெளதம் உடனே

“வர்றேன் சார்...” என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அனைவரும் அவன் செல்லும் வரை அங்கேயே நின்று பார்க்கின்றனர்.

சௌந்தர்யா, “இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு... அவரு வெளில வரலைனாலும், அவரோட மனசு இன்னைக்கு தான் சந்தோஷமாகிருக்கு, அது அவரோட முகத்துல நல்லாவே தெரியுது... இத்தனை நாளா அவரோட மனசு எவ்ளோ காயம் பட்டு இருந்துச்சோ அது எல்லாத்துக்கும் இன்னைக்கு மருந்தா நீங்க எல்லாரும் வந்துருக்கீங்க... அது தான் அவர தைரிய படுத்தி அவரோட முகத்துல சிரிப்ப வர வச்சுருக்கு...

என்ன தான் அவரு வெளில தைரியமா இருந்தாலும் உள்ளுக்குள்ள அவர் ரொம்ப நொறுங்கி போயிட்டாரு முருகன் இறந்துட்டான்னு சொல்லவும்... அதுவும் இன்னைக்கு அவரு, நான் ஜெயில்க்கு தான் போகணும் அப்டின்னு சொல்லிட்டு இருந்தாரு... என்கிட்ட கூட சரியா பேசல...

அவர எப்டி தைரிய படுத்துறதுன்னு நினைச்சு கலங்கிட்டு இருந்தேன் நான்... ஆனா நீங்க எல்லாரும் ஒருசேர வந்து அவர சந்தோஷ படுத்தி தைரியபடுத்தி இருக்கீங்க...” என்று உணர்ச்சிவச பட்டு பேசுகிறாள்.

முருகன் அவளிடம் “நாங்க வந்துட்டோம் இனி நீ கவலை படாத... அவனுக்கு நாங்க இருக்கோம்... எங்க உயிருக்கு மேலான நண்பன் அவன்... அவன வெளில கொண்டு வர வேண்டியது எங்களோட கடமை... அத நாங்க பண்ணுவோம்...”

எல்லாரும் சேர்ந்து கெளதமை வெளி கொண்டு வருவதில் உறுதியாகினர். பின் அங்கிருந்து முருகனுடன் ஹாஸ்பிட்டலுக்கு சைமன் கிளம்பினான். சந்தோஷ் காதம்பரியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றான். சௌந்தர்யா வீட்டிற்கு சந்தோசமாக கிளம்பினாள்.

சைமன் முருகனை ஹாஸ்பிட்டலுக்கு கூடி கொண்டு சென்று கைக்கு கட்டு போட்டு கூட்டி கொண்டு வருகிறான். அப்போது முருகன் சைமனை பார்த்து கேக்கிறான்.

“ஏன் சைமன் நீ கெளதம் மேல சந்தேக பட்ட..? அவன உனக்கு நல்லாவே தெரியும், தெரிஞ்சு இருந்தும் நீ எதுக்கு அப்டி ஒரு பொய் சாட்சி சொல்லி அவன ஜெயிலுக்கு அனுப்பின..?”

“நானும் எதுவும் வேணும்ன்னு பண்ணல... நீ எப்டி அவன புரிஞ்சுக்காம போனியோ, அப்டி தான் நானும் புரிஞ்சுக்காம போனேன். ஆனா நான் பொய் சாட்சி சொல்லல... அது உண்மை தான்...”

“உண்மையா...?”

“ஆமாம்... நான் அன்னைக்கு அங்க பொணத்துக்கு முன்னாடி கெளதம் உக்காந்து இருந்தத பாத்தேன். என்னோட சந்தேகமே நீ தான அந்த பக்கம் போன.. அப்போ ரோட்டுல உனக்கு ஆக்சிடென்ட் தான் ஆகிருக்கும் ன்னு தான் நினைச்சேன்... ஆனா அத ஏன் கெளதம் தடுக்காம பக்கத்துல உக்கார்ந்து பார்த்துட்டு இருக்கான்னு தான் சந்தேகம் வந்துச்சு... ஒருவேள இறந்தது வேற யாராது இருக்குமோ அப்டின்னும் சந்தேகம் வந்துச்சு... குழப்பத்துலே இருந்தேன், போலீஸ் தான் நீ இறந்தன்னு சொன்னாங்க... அதுவும் போலீஸ்க்கு நானா போகல... அவுங்க வந்து விசாரிச்சப்போ தான் நான் சொன்னேன்... ஆனா கெளதம் கொலை பண்ணுனான்னு நான் நம்பள...”

“ம்ம்ம்... புரியுது... தர்ம சங்கடமான நிலமையில நீ மாட்டிகிட்ட... சரி இது வரைக்கும் நடந்த நாம மறந்துடுவோம்... அன்னைக்கு என்ன தான் நடந்ததுன்னு நாம கண்டு பிடிக்கணும்...”

“ம்ம்ம்... உன்ன யாரு கடத்தினா..? எதுக்கு கடத்தினாங்க..? நீ எதுவும் அந்த கொலையா பாத்தியா..?”

“இல்ல நான் எதுவும் பாக்கல... கடத்துனவங்களையும் பாக்கல... என்னை கடத்தி வச்ச இடத்துல கூட ஒருத்தன மட்டும் தான் பாத்துருக்கேன்... அவனும் எப்போவும் முகத்த மூடிட்டு தான் வருவான்... அன்னைக்கு கிளம்பி வரும் போது தான் அவன் முகத்த பார்த்தேன்...”

“அப்டியா...! அப்போ நாம போலீஸ் கிட்ட சொன்னா அவுங்க அவன யாருன்னு கண்டு பிடிப்பாங்க... அவன எப்டி இருப்பான்னு நீ சொன்னா அத வரஞ்சு கண்டு பிடிப்பாங்க... நாம போய் போலீஸ்ல சொல்லுவோமா..?”

“ம்ம்... நீ சொல்லுறது சரி தான்... நாம போய் பாக்கலாம்... ஆனா இப்போ வேண்டாம்... நாளைக்கு போவோம்...”

“சரி, சரி... நீயும் போய் நல்லா ரெஸ்ட் எடு... ரொம்ப பாதுகாப்பா இரு.. மறுபடியும் கொலை பண்ண வந்துற போறாங்க...”

இருவரும் பேசி விட்டு கிளம்பினர். முருகனை சைமன் ஆட்டோ வரவழைத்து வீட்டுக்கு அனுப்பினான். வீட்டுக்கு போய்ட்டு எனக்கு கால் பண்ணு என்று கூறி விட்டு அவனும் ஒரு ஆட்டோ ஏறி கிளம்பிவிட்டான்.

முருகன் வீட்டிற்கு வருகிறான். சிவசங்கர் கோபமாக இருக்கிறார். ஷேரில் அமர்ந்து ஏதோ கையில் வைத்து பார்த்து கொண்டு இருக்கிறார். முருகன் உள்ளே வர எத்தனித்த போது அவர் ஒரு நிமிஷம் அப்டின்னு சொல்லி, திரும்பி வேலை கார அம்மாவை பார்க்கிறார். அவள் வந்து திருஷ்டி கழிக்கிறார். பின் முருகன் உள்ளே வந்து சித்தப்பா அருகில் சென்று நிற்கிறான். எதுவும் பேசவில்லை. காதம்பரிய நாம தான் அனுப்பினோம் அப்டின்னு கோபமா இருக்காரு சமாளிக்கனும் எப்டியாது என்று எண்ணி கொண்டே பேசுகிறான்.

“சித்தப்பா... நான் எதுவும் வேணும்னே பண்ணல... அப்போ தங்கச்சி தற்கொலை பண்ணிக்க போற மாதிரி பேசினா.... அதான் நான்..”

பேசி கொண்டிருக்கும் போதே எழுந்து கோபமாக உள்ளே சென்று விட்டார். சந்தோஷ் க்கு கால் பண்ணி பேசுகிறான்.

“பொண்ணோட வாழ்க்கை இப்டி நம்ம இஷ்டத்துக்கு நடக்கலயே அப்டின்னு தான் இப்டிலாம் நடந்துக்குறாரு... எப்டியும் மாறுவாறு... ஒரே பொண்ணு அவ, அவளோட சந்தோசத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னு சொல்லுவாருல, அப்போ அவரு தானா வருவாரு... கொஞ்சம் பொறுத்தா எப்டியும் நாம நினைச்ச மாதிரி அவர் கையாலே கல்யாணத்த நடத்தி வைப்பாரு, நீங்க கவலை படாதீங்க... தங்கச்சிகிட்டயும் சொல்லு, பயப்பட வேண்டாம் அண்ணன் நான் இருக்கேன்.”

மறுநாள் காலை சௌந்தர்யா நடராஜரை பார்க்க செல்கிறாள். அவர் இன்று வீட்டுக்கு சென்று விடுவார் என்றும் வக்கீல் அய்யா உன்ன பார்க்க வர சொன்னதாகவும் சுந்தரி கூறியிருந்தாள். அதனால் அவருக்கு ஹாஸ்பிட்டலில் வைத்தே பார்த்து விட்டு அப்டியே நன்றி சொல்லிவிட்டு வர வேண்டும் என்று நினைத்து சென்றாள். அங்கு சென்று பார்க்கவும் அவர் பீஸ் கேட்கிறார். அவள் தற்போது அவளால் குடுக்க முடியவில்லை என்று கூறவும் எரிச்சல் அடைந்தார்.

அடுத்த விசாரணைக்கு வர்றதுக்குள்ள நான் எப்டியாது ரெடி பண்ணி குடுத்துடுறேன் என்று கூறி சமாளித்தாள். ஆனால் அவர் எதையும் ஏற்கவில்லை. இனியும் நான் உன்னை நம்புறதா இல்ல, நீ பீஸ் கட்டினா கேஸ் நடத்தி தர்றேன், இல்லையா வேற யாராது போய் பாரு என்று கூறி அனுப்பி விட்டார். சந்தோஷ் இல்லைனா முருகன் கிட்ட உதவி கேட்கலாம் என்று நினைத்து பார்க்க செல்கிறாள். முருகன் வீட்டில் இல்லை. சந்தோஷ் உதவி செய்யும் நிலையில் இல்லை. திரும்பி கடைக்கு சென்று விட்டாள்,
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
முருகன், சந்தோஷ், சைமன் மூவரும் போலீஸ் ஸ்டேஷன் செல்கின்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை. கான்ஸ்டபில் முத்து வந்து என்ன என்று விசாரிக்கிறார். இன்ஸ்பெக்டர் பார்க்கணும் என்றனர். உங்க கேஸ் விசியமா தான் பட்டு கோட்டைக்கு போயிருக்காரு இன்ஸ்பெக்டர், நீங்க நாளைக்கு வாங்க என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டார் முத்து. மூவரும் கிளம்பிய பின்னர் முத்து இன்ஸ்பெக்டர்க்கு கால் செய்து பேசுகிறார்.

“ஹலோ சார்... நான் தான் முத்து...”

“ம்ம்ம்... சொல்லு...”

“போன காரியம் என்னாச்சு...?”

“நான் இங்க வந்தது நல்லதா போச்சு, இங்க பட்டுகோட்டை ல இருக்க இன்ஸ்பெக்டர் அந்த வீட்டுக்கு போயிட்டாரு. அங்க எதுவும் கிடைக்கலைன்னு பக்கத்துல வீட சுத்தி தேடிருக்காறு... அப்போ தான் நான் அங்க போனேன். நான் ஒரு சைடு செக் பண்ணேன். அங்க ஒருத்தனோட ட்ரிவிங் லைசென்சு இருந்துச்சு. கூமுட்டைக..! ஒரு வேலைய கூட ஒழுங்கா பாக்க தெரியாது போல.. நான் பாக்காம வேற யாராது பாத்துருந்தா இப்போ மாட்டிருப்பாங்க. நான் அத எடுத்து மறச்சு வச்சுட்டேன். இப்போதைக்கு அவுங்களுக்கு வேற எந்த குழுவும் கிடைக்கல, கிடைக்காத வரைக்கும் தான் நல்லது.”

“ஆமாம் சார்... ரொம்ப நல்லதா போச்சு நீங்க போனது.”

“நீ எதுக்கு கால் பண்ண..?”

“இன்னைக்கு இங்க அந்த கெளதமோட ப்ரெண்ட் மூணு பேரும் இங்க வந்துட்டாங்க... நான் என்ன விஷயம்ன்னு கேட்டேன். ஆனா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லணும் அப்டின்னு என்கிட்டே ஒண்ணுமே சொல்லல. அதான் நான் நாளைக்கு வர சொல்லிருக்கேன் அவுங்கள.”

“அவனுங்க என்ன பிரச்சனைய கொண்டு வர போறானுகளோ..?! ஒரே தொல்லையா இருக்குப்பா...”

“சார்.. நீங்க அவர் கிட்ட பேசுனீங்களா..? நான் அவர் கிட்ட கொஞ்சம் பணம் கேட்டுருந்தேன்...”

“இல்ல. அவருக்கு காரியம் ஆகணும்னா மட்டும் நம்மள கூப்ட்டு பேசுவாரு. ஆனா நம்ம கால் பண்ண மதிக்க மாட்டாரு... சரி அத விடு நான் இன்னைக்கு பேசுவேன், எனக்கும் தரணும் அப்டியே உனக்கும் கேக்குறேன்.”

“சரி சார்... நீங்க பேசிட்டு சொல்லுங்க. நான் போன வைக்கிறேன்.”

முருகன், சைமன், சந்தோஷ் மூவரும் கிளம்பி கோவில் தெருவுக்கு வருகின்றனர். சிலர் முருகனிடம் வந்து பேசுகின்றனர். நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் சௌந்தர்யாவின் கடைக்கு வருகின்றனர். அவள் அவர்கள் வந்ததை கவனிக்காமல் பூ கட்டி கொண்டு யோசனையோடு இருக்கிறாள். முருகன் அவளை பேர் சொல்லி அழைத்தும் திரும்பவில்லை. சைமன் அருகில் சென்று தட்டி கூப்பிடவும் கவனிக்கிறாள்.

வாங்க என்று வாய் வார்த்தையாக கூறினாள். ஆனால் அவள் யோசனையோடே இருந்தாள். அவர்களை பார்த்தது அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் யாரை எதிர் பார்த்தோமோ அவர்களே ஒன்று சேர்ந்து வந்தது அவளுக்கு சந்தோஷமாகவும் இருந்தது. இருந்தாலும் அவர்களிடம் காசு கேட்பது சரியா என்று யோசித்து கொண்டிருந்தாள். மூவருக்கும் எதுவும் புரியாததால் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு என்ன என்று கண் ஜாடை செய்தனர். சைமன் நான் கேக்குறேன் என்று சைகை செய்தான்.

“சௌந்தர்யா...! என்னாச்சு...? ஏன் ஏதோ யோசனையிலே இருக்க, என்ன பிரச்சன..? கெளதம் பத்தி நினைச்சுட்டு சோகமா இருக்கியா..? என்னன்னு சொல்லு..?”

அவள் தயங்கி கொண்டே, “நான் வேற யார பத்தி நினைக்க போறேன், அவர பத்தி தான். ஒரு சின்ன பிரச்சன.. அத எப்டி சொல்லன்னு தெரியல..?”

“எங்க கிட்ட சொல்ல ஏன் தயங்குற... என்ன பிரச்சனன்னு சொல்லு, நாங்க இருக்கோம்.” என்று முருகன் சொல்லவும்,

“அது நம்ம கெளதம்காக வாதாடுற வக்கீல் நடராஜர் அய்யா பீஸ் கட்ட சொல்லிருந்தாரு. நான் முயற்சி பண்ணேன், எங்கயும் கிடைக்கல. இப்போ அவரு காசு கட்டாம நான் வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதான் என்ன பன்னன்னு தெரியல எனக்கு.”

“இதுக்கு ஏன் நீ கவலை படுற. என் கிட்ட கேக்க வேண்டியது தான. அப்டி இல்லைனா முருகன் கிட்ட கேக்கலாம். நாங்க உதவி பண்ண போறோம். இதுக்கு எதுக்கு நீ வருத்த பட்டுட்டு இருக்க..?” என்று சந்தோஷ் கூறவும் முருகனும் ஆமாம் என்று கூறுகிறான். அதை கேட்டதும் மன பாரம் கொஞ்சம் இறங்கியது சௌந்தர்யாவுக்கு.

முருகன், சந்தோஷ் இருவரும் சேர்ந்து பணம் ரெடி செய்து குடுப்பதாக கூறினார். நாளைக்கு நாம போய் அவர பார்ப்போம். பணத்த குடுத்துட்டு வருவோம். நீ கவலை படாத நாங்க இருக்கோம். கெளதம்காக நாங்க எதுனாலும் செய்வோம் என்று கூறினர்.

இன்ஸ்பெக்டர் பட்டுகொட்டையில் வேலையே முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிய பிறகு கால் பண்ணுகிறார். லைன் பிஸி என்று சிறிது நேரம் வந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு கால் வருகிறது.

“என்ன முரளி என்ன நடந்தது..?”

“சார் எல்லாம் நல்லபடியா தான் போயிட்டு இருக்கு. அவனுக ட்ரிவிங் லைசென்ச அங்க விட்டுட்டு போயிருக்கானுங்க... நான் பாத்து அத எடுத்துட்டேன். இப்போ எதுவும் கிடைக்கல.”

“ம்ம்ம்.. நல வேல பண்ண.”

“சார் அப்பறம்.... நான் பணம் கேட்டுருந்தேன்...?”

“குடுக்கணும்... ஆனா நீங்க எந்த வேலையும் சரியா பண்ணறது இல்ல. அதுனால பாப்போம், குடுக்குறேன் நீங்க பண்ணுறத பாத்துட்டு... சரியா... எனக்கு தெரியும் எப்போ குடுக்கனும்னு.”

முரளி எதுவும் பேசவில்லை.

“அந்த பசங்க ஏதோ ஸ்டேஷன் வந்தாங்க போல..? எதுக்காம்..?”

“நான் இங்க இருந்தனால அவுங்க அங்க யார் கிட்டயும் சொல்லல... நான் போய் பாக்குறேன் சார்.”

“ம்ம்ம்... என்னன்னு பாரு... எதுவும் கண்டுபிடிச்சுட்டாங்களா...? இல்ல ஆதாரம் எதுவும் கிடைச்சுருக்கா..? அப்டின்னு கேட்டு வாங்கி வை..”

“ம்ம்... சரி சார்...”

“நாளைக்கு கால் பண்ணுறேன்...”

இன்ஸ்பெக்டர்க்கு கோபமாக வந்தது. எரிச்சலை காட்ட முடியவில்லை அவரிடம். தஞ்சைக்கு கிளம்பி வந்தார். நேராக ஸ்டேஷன்க்கு வருகிறார். அங்கு கான்ஸ்டபில் முத்து அவரின் வருகைகாக காத்திருந்தார். ஸ்டேஷனில் நுழைந்ததும் முத்து பிரச்சனையை சொல்லுகிறார்.

முருகன், சைமன், சந்தோஷ் எல்லாரும் சேர்ந்து கௌதம வெளில எடுக்க எல்லா முயற்சியும் பண்ணுறாங்களாம், அதுவும் அவன் முருகன் யாரோட முகத்தையோ பாத்துருக்கானாம் என்று கூறி கொண்டிருந்தார். இன்று கூட காலையில் அவர்கள் அதற்காக தான் பார்க்க வந்ததாகவும் கூறுகிறார்.

இது ஒரு பிரச்சனையா என்று நினைத்து எரிச்சல் அடைந்தார். அலைச்சல் அதிகம் இன்னைக்கு அதனால நான் வீட்டுக்கு கிளம்புறேன். எதாதுன்னா கூப்பிடுங்க என்று கூறிவிட்டு கிளம்புகிறார் முரளி. முத்து அவரிடம் மறுபடியும் கேக்கிறார் அவனுக வந்தா என்ன பண்ணுறது நம்ம. முரளி அலட்சியமாக அவனுக வரும் போது பாத்துக்கலாம் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

மறுநாள் முருகன் கொஞ்சம் பணம் தன்னிடம் இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினான். வழிமறித்து சிவசங்கர், எங்க இவ்ளோ பணத்த எடுத்துட்டு போற என்று கேக்கிறார். அவன் கௌதம வெளில எடுக்க தான் இந்த பணம் என்று கூறவும் அவர் முகம் மாறியது.

“இவ்ளோ பணத்த ஏன் குடுக்குற..? அவனால அத திருப்பி குடுக்க முடியுமா..? அதுவும் அவன் வெளில வருவானான்னு கூட தெரியல அப்டி இருக்கும் போது எதுக்கு இவ்ளோ பணத்த தேவை இல்லாம செலவழிக்கிற..? எனக்கு இது சரின்னு படல..”

“இல்ல சித்தப்பா அவனுக்கு நாம உதவி பண்ணாம யாரு உதவி பண்ணுறது..? அதுவும் என்னால தான் அவனுக்கு இந்த நிலைமை...”

“நீ சொல்லுறது சரி தான், இருந்தாலும் இவ்ளோ பணம்...
 




MithraPrasath

SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
274
Reaction score
1,366
Age
31
Location
Bangalore
வேணும்னா நம்ம இந்த பணத்த கடனா குடுப்போம்... என்ன சரியா..?”

“சித்தப்பா அவன் எனக்கு இன்னொரு உறவு. அவனுக்காக நான் எதுனாலும் பண்ணுவேன். அதுனால இந்த பணத்துக்கு உங்களுக்கு வட்டி நான் கட்டுறேன்.”

“என்ன முருகா இப்டி சொல்லுற... நீ நம்ம வீட்டு பையன். அவன் என்னக்கு எப்போவும் வெளி ஆளு, அது நால தான் இப்டி சொன்னேன். நீ இந்த பணத்த எடுத்துட்டு போப்பா... இத நான் உனக்காக குடுக்குறேன். உனக்கும் இந்த சொத்துல அதிகாரம் இருக்கு. நீ விருப்ப பட்டவங்களுக்கு குடுக்கலாம். நீ கொண்டுட்டு போ..”

“என்ன மன்னிச்சுருங்க சித்தப்பா, நான் உங்கள சங்கட படுத்தனும்னு இத சொல்லல... எனக்கு எப்டியாது கௌதம வெளில கொண்டு வரணும் அதான்.”

“எனக்கு உன்ன பத்தி தெரியும் முருகா... உன்னோட நல்ல குணத்துக்கு நல்லது தான் நடக்கும். நான் எதுவும் தப்ப நினைக்கல.. நீ பணத்த எடுத்துட்டு போ..”

இன்ஸ்பெக்டர் முரளி காலை ஸ்டேஷன் வந்ததும் நேற்று போல் இன்றும் முத்து வந்து கேக்கிறார், அவனுக வந்து சொன்னா என்ன பண்ணுறது என்று. அதற்க்கு முரளி நான் யோசிச்சு வச்சுருக்கேன்யா.. அவன எப்டி சமாளிச்சு அனுப்புறேன் பாரு... என்று தைரியமாக சொல்லுகிறார்.

முருகன், சைமன் இருவரும் சௌந்தர்யாவை கூட்டி கொண்டு வக்கீலை பார்க்க செல்கின்றனர். அவருக்கு பீஸ் குடுத்து சம்மத்திக்க வைக்கின்றனர். அவரிடம் நடந்ததை கூறி என்னை கடத்தி வைத்தர்களில் ஒருவனை தான் பார்த்ததாக கூறுகிறான். உடனே நடராஜர் போலீசில் சொல்லியாச்சா..? என்று கேக்கிறார். இப்போ அங்கு தான் போக போறதாக கூறுகின்றனர். சரி ஏதாதுன்ன கால் பண்ணுங்க அப்டின்னு சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மூவரும் ஸ்டேஷன் செல்கின்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் முரளி ஏதோதோ சொல்லி சமாளிக்கிறார். உடனே சைமன் நடராஜருக்கு கால் செய்கிறான். பின் அவர் போனில் பேசுகிறார்.

“ஹலோ இன்ஸ்பெக்டர்... நான் நடராஜர் பேசுறேன்.”

“ம்ம்ம்... சொல்லுங்க சார் நான் இன்ஸ்பெக்டர் தான் பேசுறேன்...”

“என்ன நீங்க முருகன் கடத்தினவன பாத்ததா சொல்லுறான்... நீங்க ஒன்னும் ஆக்ஷன் எடுக்க மாட்டுறீங்கன்னு சொல்லுறாங்க... என்ன சார்..?”

“அது சரி வராது.. அத தான் சொன்னேன்.”

“என்ன சரி வராது..? ஆர்டிஸ்ட் வச்சு பாத்தவனோட படத்த வரைஞ்சா அவன கடத்தினவங்கள கண்டுபிடிக்கலாம். அத வச்சு இந்த கொலைக்கும் அவங்களுக்கு என்ன சம்பந்தம்ன்னு கூட தெரிஞ்சுக்கலாம்...”

“இல்ல சார்... இங்க ஆர்டிஸ்ட் இல்ல...”

“அப்போ வரவைங்க... இல்ல நாங்க மேல கமிஷ்னர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணவா..?”

“எதுக்கு சார் இதுக்கு எல்லாம் அங்க வரைக்கும் போகணும்... நாங்க ஆர்டிஸ்ட் வரவழைச்சு பண்ணுறோம்..”

“ஹ்ம்ம் அத பண்ணுங்க... இல்லைனா நான் என்ன பண்ணுவேன்னு சொல்லிட்டேன்... பாத்துகோங்க...”

எரிச்சலோடு ஆர்டிஸ்ட் வர ஏற்பாடு பண்ணுகிறார். அவர் வர ஈவ்னிங் ஆகும் என்று அவர்களை அப்போ வாங்க என்று கூறி அனுப்பிவிட்டார். கால் செய்து நடந்ததை ஒப்பிக்கிறார். கேட்டு விட்டு அவரும் ஆர்டிஸ்ட் வர சொல்லி வரைய சொல்லு. நான் அவன கொன்னுடுறேன். நீ கவலை படாத என்று கூறி விடுகிறார். ஒரு பிரச்சன முடிஞ்சது என்ற நிம்மதி ஏற்பட்டது.

ஆர்டிஸ்ட் வைத்து வரையப்பட்டது. தினமும் முருகன், சைமன் எல்லாரும் அவனை பிடிச்சுடீன்களா என்று கேட்டு கொண்டே இருந்தனர். முரளி தேடிட்டு இருக்கோம் என்று கூறி சமாளித்தார். ஒரு வாரம் ஓடி விட்டது. அவர்கள் இன்னும் பிடிக்கவில்லை என்று கமிஷனரிடம் கம்ப்ளைன்ட் செய்தனர். அப்படியுமே எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒரு நாள் இன்ஸ்பெக்டர் முரளிக்கு கால் வருகிறது. போனில் “அவன் தப்பிச்சுட்டான். அவன இன்னைக்கு வரைக்கும் பிடிக்க முடியல. அத விட இன்னொரு பிரச்சன வந்துருச்சு, அவன உங்க போலீஸ் டிபார்ட்மென்ட் பிடிச்சுட்டாங்க. அவன நீ தான் விசாரிக்கணும். அதுனால நீ இன்னொரு வேல பண்ணு, அந்த கௌதம விசாரிக்கணும்ன்னு ரெண்டு நாளைக்கு கூட்டிட்டு வா... வந்து அவன கொலை பண்ணதா ஒதுக்க வை...”

தொடரும்...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis. yaar antha dead person. oru vela sithappa than ellathukum karanama:unsure::unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top