• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Marcus Weds Chaitanya-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
ஹாய் பிரெண்ட்ஸ்... அடுத்த எபியோட வந்திட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...காத்திருக்கிறேன்



அந்த பெரிய ஹாலையே சிறியதாகிக் கொண்டு அமர்ந்திருந்த மார்கஸை மறைந்திருந்துப் பார்வையிட்டாள் சைதன்யா (அடிப்பாவி!சைட் அடிக்கிறியா?)


அவனை வீட்டவர்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினார் தீனதயாளன்.


"மதுரா!இவர் தான் மிஸ்டர் மார்கஸ் வெஸ்ட்க்ளிஃப்....இவ என் வைஃப் மதுரா"எனவும்


"வணக்கம் ஆண்ட்டி"என்று மார்கஸ் சுத்த தமிழில் பேசவும் அங்கிருந்த அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.அவர்களை சிறு புன்னகையுடன் ஏறிட்டவன்


"என் அம்மா மேரி தமிழ்நாட்டவர் தான்...லண்டனலேந்து இங்க சுத்திப் பாக்க வந்த என் அப்பா அவங்கள லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டார்...எங்க அம்மா தயவால நா தமிழ் நல்லாவே பேசுவேன்"(அப்போ மொழி பிரச்சினை இல்ல)


அவன் கொஞ்சும் தமிழில் சைதன்யாவின் மனம் ஒருகணம் கொள்ளைப் போனது.(நீ லண்டன் பேக் ஆகறது கியாரண்டி)


ஆனால் அவன் விரோதி...அவனைப் பற்றி நல்லவிதமாக எண்ணக் கூடாது என தன் மனதிற்கு கடிவாளமிட்டாள்.(கடிவாளம் போட்டா மனசு கேட்டுடுமா?)


அர்ச்சனாவின் தோழி என்று அறிமுகப்படுத்தப்பட்ட போது தேவைக்கு மேல் அவன் விழிகள் தன் மேல் நிலைத்ததோ என்று சந்தேகித்தாள் சைதன்யா.(சந்தேகமே வேணாம்)


அவர்கள் முதல் பிளானை நிறைவேற்ற மார்கஸ்க்கு சூடானக் காப்பி வந்தது.தீனதயாளனை வைத்துக் கொண்டே அதை நிறைவேற்ற முடியாததால் அவர்கள் திட்டப்படி வேலைக்காரன் வந்து அவருக்கு போன் வந்திருப்பதாக அறிவித்தான்.அவரும் மார்கஸிடம் இதோ வருவதாகக் கூறி எழுந்து சென்றார்.


மார்கஸின் அருகில் இருந்த ஒற்றை சோபாவில் அர்ச்சனா அமர்ந்திருந்தாள்.நம்ம மிஷன் மார்கஸ் தலைவி சோபாவின் கையில் அமர்ந்திருந்தாள்.வேலையாள் இவர்களைத் தாண்டிய போது யாருமறியாமல் காலை லேசாக நீட்டினாள் சைதன்யா.


இன்னும் ஏன் சூடான காப்பி மார்கஸ் மேல் கொட்டிவிட்டது என்று எண்ணி சைதன்யா மகிழ நுலிழையில் போன் மணி அடிக்க அதை அட்டன் செய்ய எழுந்துச் சென்று விட்டான் மார்கஸ்.(ஜஸ்ட் மிஸ்ஸு)


அவன் பொன்னான மேனியை புண் செய்திருக்க வேண்டிய காப்பி வெற்று சோபாவில் கொட்டி கீழே வழிந்தோடியது.ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டனர் தோழிகள் இருவரும்.(உங்களுக்கு இது தேவையா?)


தீனதயாளனும் மார்கஸும் திரும்பி வரும் முன் அவர்கள் மேற்பார்வையில் அந்த இடத்தை வேகவேகமாக சுத்தம் செய்தனர் வேலையாட்கள்.(உங்களையே துடைக்க விட்ருகணும்)


அவர்கள் திரும்பி வந்த போது ஏதும் அறியாதவர்கள் போல தோழிகள் இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர்.(இது உலக நடிப்புடா சாமி)


மார்கஸுக்கு மாடியில் இருந்த விருந்தினர் அறையை தயார் செய்யப்பட்டிருந்தது.அங்கே வேறுவிதமான தயாரிப்பு ஆகியிருந்ததை யாரும் அறியவில்லை.(பாவம்டா நீ மாக்கு)


மாடிக்குச் செல்லும் முன் சைதன்யாவை கூர்ந்து விட்டேச் சென்றது மார்கஸின் விழிகள்.(சைட் அடிக்கறானோ?!)


அனைவரும் அகன்ற பின்


"என்னடி சைத்து!முதல் ப்ளானே ஊதிக்கிச்சு?இப்ப என்னடி செய்றது?"(அவளையே கேளு...உன் ப்ரைன கொஞ்சம் யூஸ் பண்ணா என்ன?)


"சும்மா ஏன்டி கவலப்பட்ற? இந்த ப்ளான் போனா அடுத்தது இல்லையா?அத சூப்பரா ஒர்க்கவுட் பண்ணலாம் வா"(என்ன பண்ண போவுதுங்களோ?!)


தனக்கு கொடுக்கப்பட்ட அறையை சிறிது நேரம் அளவெடுத்த மார்கஸ் சென்னை வெயில் கசகசப்பை ஏற்றவே குளிக்கலாம் என குளியலறையில் புகுந்தான்.(அங்க என்ன காத்திருக்கோ?!)


சோப்பை நன்றாகக் குழைத்து உடலெங்கும் பூசி தேய்த்து ஷவரை அவன் திறந்த போது அதில் நீருக்கு பதில் புஸ்ஸென காற்று தான் வந்தது.முகத்தில் தேய்த்த சோப் கண்ணை எரிய(ஐயோ பாவம்)


"ஹே எனிபடி ஹியர்!இங்க தண்ணி வரலை...ப்ளீஸ் ஹெல்ப் மீ..."என்று கூவிக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தான்.


அடுத்த ப்ளானுக்காக அவன் படுக்கை மேல் வைத்திருந்த மாற்றுடையில் அரிப்பை உண்டாக்கும் இலைப் பொடியை தடவியபடி இருந்த சைதன்யா அவன் வெளியே வந்ததை கவனிக்க வில்லை.(அதுக்கு தான் பகல்ல பக்கம் பாத்து எதையும் செய்யின்னு சொல்றது)


எரியும் கண்களை தடவியபடி வந்தவன் அவள் மேல் மோதினான்.திடிரென தன் பின்னே இடிக்கவும் நிலைத் தடுமாறி அவள் விழ அவள் மேல் அவன் விழுந்தான்.(செம ஹாட்)


அவன் அண்மையில் விழுத்துக் கொண்டது அவள் பெண்மை.இனம் புரியாத மயக்கம் ஆட்கொண்டது அவளை.ஒரு கணம் தான் அதற்குள் அவன் தங்கள் விரோதி...அவனோடு அப்படி இருப்பது தவறு என அறிவு சாடவே பட்டென அவனை தன் மேலிருந்து தள்ளியவள் அங்கிருந்து விரைந்துச் சென்று விட்டாள்.(நீ தோண்டின குழில நீயே விழுத்திட்டியே சைத்து!)


ஏனோ தான் வைத்திருந்த உடையில் வேறுவிதமான வாசம் வரவே அதை அணியாமல் வேறு உடை அணிந்துக் கொண்டு கீழே வந்தான் மார்கஸ்‌.(பயபுள்ள புத்திசாலி தான் போல)


அவன் மனதில் சற்று முன் நடந்தவையே ஓடிக் கொண்டிருந்தது.பூவான அவள் மேல் இருந்தது கிறக்கத்தை தந்தாலும் அவள் அந்த நேரம் தன் அறையில் என்ன செய்துக் கொண்டிருந்தாள் என சந்தேகித்தது அவன் கூர்மையான அறிவு.(ரொம்ப யோசிக்காதடா மூளை கரைஞ்சுட போவுது)


மதிய உணவிலும் தன் கைவரிசையைக் காட்டிருந்தாள் சைதன்யா.ஒரே விதமான பதார்த்ததில் அவனுக்கு மட்டும் ஸ்பெஷலான பொருட்களை சேர்த்து தயாராக வைத்திருந்தாள்.(உப்பா?மிளகாயா?)


உணவு மேசையில் தீனதயாளனோடு வந்து அமர்ந்த மார்கஸின் கண்கள் சைதன்யாவிடம் வேறு கதை பேசியது(என்ன கதை..‌காதல் கதையோ?)


அவன் பார்வையை நேரே சந்திக்காமல் தீனதயாளன் அறியாமல் மார்கஸுக்கு ஸ்பெஷல் உணவை பரிமாறினாள்.உணவை சுவைத்த தீனதயாளன் அவளை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்.ஆனால் ஒரு வாய் தின்ற மார்கஸின் கண் மூக்கு எல்லாம் நீர் வர ஆரம்பித்தது.(ரொம்ப உணர்ச்சிவசப்படாதே மாக்கு)


அவ்வளவு காரமான உணவை அவன் வாழ் நாளில் என்றுமே உண்டதில்லை.ஓரக்கண்ணால் பார்த்த போது சைதன்யா அர்ச்சனாவிற்கு ஜாடைக் காட்டிச் சிரிப்பது புலனாகியது.(மாட்டிக்கிட்டா...மாட்டிக்கிட்டா)


இதெல்லாம் அவளின் வேலையே என்பது தெளிவாக விளங்கியது அவனுக்கு.அவள் எதிரில் தோற்கக் கூடாது என்றே அவ்வளவு உணவையும் ஏதும் பேசாமல் உண்டான்.(வீரன்டா நீ)


காரமான உணவை உண்டு தண்ணீர் தண்ணீர் என தவிப்பான் பார்த்து மகிழலாம் எனக் காத்திருந்த தோழியர் இருவரும் அவன் எந்த உணர்வும் இல்லாமல் உணவுண்டதை கண்டு வாயைப் பிளந்தனர்.(இந்த ப்ளானும் புஸ்ஸா போச்சா?)


மாடியில் அர்ச்சனாவின் அறையில் அமர்ந்திருந்தவர்கள் கவலையோடு இருந்தனர்.


"என்னடி சைத்து!எல்லா ப்ளானும் ஃபாளாப் ஆகிடுச்சே...இனிமே என்ன பண்றது...அந்த மார்கஸ் பெரிய ஜான்டனா இருப்பான் போலையே! என்ன பண்ணாலும் அசைய மாட்றானே"(உங்க ப்ளான் லட்சணம் அப்படி)


"எல்லா ப்ளானும் முடிஞ்சு போச்சா?மூணு தானே ஆகியிருக்கு... இதெல்லாம் ஃப்ளாப் ஆனா என்ன?இத விட பெரிய வேட்டா வைச்சு அவன இங்கேந்து கிளப்பறேன்... நாளைக்கு மாக்குக்கு அங்கிள் பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கார் இல்ல...அங்க நா பண்ற வேலைல அடுத்த ஃப்ளைட்ல அவன் லண்டன‌ பாக்க நடைய கட்டுவான்...இட்ஸ் மை சாலன்ஜ்"(அவசரப்பட்டு சாலன்ஜ் பண்றதே உன் வேலையா போச்சு...பார்ட்டில என்ன நடக்கப் போகுதோ?)
?????Next ud immediate ah venum dr .....
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Nice epi... athe pinnadi vare mind voice counter eh than ennaku romba pudichu irukku...
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
Hey bavi dear ? how are you?eaan ivlo late??epi super????????next ud seekiram kudunga?me waiting for you ????
Sorry da kojam late ayiduchu...inime regular a varum...
Thank you nathiya ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top