Marcus Weds Chaitanya-8-final epi

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்

கடைசி அத்தியாயத்தோட வந்திட்டேன்...நீங்க கொடுத்த ஊக்கத்தால தான் கதையை முடிக்க முடிஞ்சது...முதலில் இருந்து லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்....


மார்கஸ் சர்ச் மேரெஜ் என்றதில் மார்கஸ்ஸுக்கு தான் திருமணம் என்று முடிவே கட்டி விட்டாள் சைதன்யா.இவ்வளவு சீக்கிரம் தன்னை மறந்து யாரையோ திருமணம் செய்வதா என கோபம் தலைக்கேறியது அவளுக்கு.இனி அவனே எல்லாம் என நாடு சொந்த பந்தம் எல்லாவற்றையும் துறந்து வந்திருக்கும் தன்னிலை என்ன?அவன் செய்வது நியாயமே மில்லை...மேரி கூடவா இது தவறென்று கூறவில்லை?!


கணநேரத்தில் உலகையே சுற்றி வரும் மனம் எதையெதையோ எண்ணி தவித்தது.படபடக்கும் இதயத்தை முயன்று அடக்கியவள் எதிரிலிருந்தவரிடம்,


"சர்ச்....சர்ச் நேம்...அண்ட் அட்ரஸ்..."


அது இவளுக்கு எதற்கு என்பது போல் அவளை மேலும் கீழும் பார்த்தார் அவர்.


"ப்ளீஸ் கிவ் மீ த அட்ரஸ்...இட்ஸ் அர்ஜண்ட்"என்று பொறுமை இழந்த குரலில் கூவினாள்.


தான் கூறுவது அவளுக்கு புரியாது என்பதால் கேப் ஒன்றை புக் செய்தார்.பத்து நிமிடங்களில் கார் வந்து ரோட்டில் நின்றது.அதில் செல்லுமாறு சைகை செய்தார்.அவருக்கு மனதார நன்றி கூறியவள் அதில் ஏறி விரைந்து செல்லுமாறு பணிந்தாள்.


செயிண்ட் ஜார்ஜ் சர்ச் உள்ளே அமருமிடம் உறவினர் நண்பர்களால் நிரம்பி இருந்தது.மணமகளின் தந்தை அவளின் கையோடு தன் கையை கோர்த்தவாறு அழைத்து வந்து மணமகனின் அருகில் நிறுத்தினார்.


மணமக்கள் இருவரும் பிரமாணம் செய்து மோத்திரம் அணிவிக்கப் போகும் சமயத்தில் சர்ச் வாயிற்கதவிலிருந்து,


"ஸ்டாப் த மேரெஜ்!இந்த மேரெஜ் நடக்கக் கூடாது...மார்கஸ் இஸ் மை மேன்...ஹி இஸ் மை லவ்...ஸ்டாப் நவ்"என்று உரத்த குரலில் எதையும் கவனியாமல் கத்தியவாறு நிமிர்ந்து பார்த்த சைதன்யா அதிர்ந்தாள்.ஏனெனில் அங்கே நின்றிருந்த மணமகன் மார்கஸ் அல்ல வேறு யாரோ ஒருவன்.


தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என சுற்றிலும் பார்வையை அவள் ஓட்டிய போது மணமகனின் சில அடி பின்னே இவளையே கண்கொட்டாமல் பார்த்தவாறு மார்கஸ் நிற்பதைக் கண்டாள்.இவளின் கலாட்டாவால் அதிர்ந்து நின்றிருந்தனர் அனைவரும்.ஓரிருவர் யார் என்ன என்று விசாரிக்க முன்னேறு முன் எதிரில் வந்து நின்ற மார்கஸ்,


"சாரி லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்!திஸிஸ் ஜஸ்ட் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்..."என்றவன் சைதன்யாவின் அருகே வந்து அவள் தோளில் கை வைத்து தன் அருகே இருத்தவன்,


"திஸ் இஸ் சைதன்யா...மை லவ்...மை ஃபியான்ஸி...ஏதோ சின்ன ப்ராப்ளம்...யூ காய்ஸ் கேரி ஆன்...நோ இஷுஸ்.."என்று அவர்களை சமாதானம் செய்து திருமணம் தொடர்ந்து நடக்க வழி செய்தவன் சைதன்யாவின் தோளை விடாமல் அவளை அழைத்துச் சென்று வெளியே நின்றிருந்த காரில் அமர்த்தினான்.ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவன் காரை புயல் வேகத்தில் செலுத்தினான்.


அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தாள் அவள்.அவனுடையது சர்ச்சில் கண்ட மென்மையான முகமாக இல்லை.அந்த கடினமான முகத்திலிருந்து அவளால் எதையும் ஊகிக்க முடியவில்லை.


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் லேப்டாப்பை தட்டியவாறு அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.கண்கள் திரையைப் பார்த்திருந்தாலும் மனம் வேறெங்கோ சஞ்சரிப்பது அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.கண்ணாடி முன் தலைவாரியபடி நின்றிருந்த விக்னேஷ் அதை விடுத்து அவள் அருகில் வந்து அமர்ந்தான்.


"அச்சும்மா!சியரப்டா...நீ இப்படி அப்செட்டா இருக்கறத என்னால பாக்க முடியல...வா எங்காவது சைட் சீயிங் போலாம்..."


"ப்ச்...எங்க போகவும் பிடிக்கல...விக்கி!அவ ஏன் அப்படி பண்ணா?பாவம் மார்க் அண்ணா...சே...லவ்வாம் மூணு வருஷமா!எனக்கு தெரியாம இவளுக்கு லவ்வா...நாங்க எல்கேஜி படிக்கறதுலேந்து பெஸ்ட் பிரெண்ட்ஸ் தெரியுமா? எப்பவும் ஒண்ணாவே இருப்போம்....எங்கிட்டையே மறைச்சிட்டா..."


"அச்சு!எவ்ளோ பிரெண்ட்ஸ்னாலும் அவங்கவங்களுக்கு பர்சனல் விஷயங்கள் இருக்கும்... எல்லாத்தையும் ஷேர் பண்ணும்னு அவசியமில்ல..."


"ஆனாலும் அவ...."பேசியபடியே முகநூலை அழுத்தியிருந்தவள் அதில் தோழி ஷிவானியின் சுயவிவரத்தை அழுத்தியிருந்தாள். அதில் தெரிந்த அன்றைக்கு அவள் பதிவிட்ட கவர் போட்டோவில் அவளோடு அவள் பெற்றோர் மற்றும் ஒரு இளைஞன் நின்றிருக்க கண்டாள்.சிறியளவிலான படமானாலும் அந்த இளைஞனை எங்கையோ பார்த்தது போல் தோன்றவும் படத்தை பெரிதுப்படுத்தினாள்.அந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன் சைதன்யா அறிமுகப்படுத்திய விஷ்வா.அதே புகைப்படத்தின் கீழே லைக்கில் இருந்த விஷ்வாவின் சுயவிவரத்தை அழுத்தி படபடப்பாக காத்திருந்தாள்.


அவனின் ஆல்பத்தின் முதல் படமே அவனோடு அவன் மனைவி இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தையோடு இருக்கும் படம்.அதை கண்டு அதிர்ந்து விட்டாள் அர்ச்சனா.அவளின் அதிர்ந்த முகத்தைக் கண்ட விக்கி,


"அச்சு!வாட் ஹேப்பண்ட்...ஏன் இவ்ளோ ஷாக் ஆயிட்டே?"


வாய் பேசாமல் லேப்டாப்பை அவன் புறம் திருப்பிக் காட்டினாள்.அவனும் அவள் அளவே அதிர்ந்து விட்டான்.


"அச்சு!இது...."


"விஷ்வா...ஒன் மினிட் விக்கி.."என்று யார் யாருக்கோ போன் செய்து எப்படியோ ஷிவானியின் நம்பரை வாங்கினாள்.கைகள் நடுங்க அவள் நம்பரை அமுக்கிக் காத்திருந்தாள்.நான்கைந்து ரிங் போனது மேல் ஷிவானியின் "ஹலோ...!"என்றது.


"ஹாய் ஷிவா!நா அர்ச்சனா... ஞாபகம் இருக்கா...ஸ்கூல் பிரெண்ட்..."


"ஹே அச்சு!ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்...!எப்படி இருக்கே?பாத்து ரொம்ப நாள் ஆச்சு..."


"ஐம் ஃபைன்...எனக்கு மேரெஜ் ஆயிடுச்சு...இப்ப ஹஸ்பெண்ட கூட சிட்னிக்கு ஹனிமூன் வந்திருக்கேன்...ஷிவா எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான இன்ஃபோ வேணும்...ப்ளீஸ் சொல்றியா?"


"வாவ் கன்கிராஜுலேஷன்ஸ் டியர்... அப்புறம் உனக்கு என்ன விஷயம் தெரியனும்... எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்"


"விஷ்வாங்கறது யாரு? உனக்கு ரிலேட்டிவா?"


"ஓ விஷ்வா...அவன் என் பெரியப்பா பையன்...சென்னைல தான் இருந்தான்...இப்ப அமெரிக்காவுல இருக்கான்...நம்ம சைத்துவும் அவனும் ஒரே பேட்மிண்டன் டீமாச்சே... உனக்கு தெரியாதா?"என்று இவள் கேளாத கேள்விக்கும் விடையளித்துவிட்டாள்.


அர்ச்சனாவிற்கு சைதன்யா தன்னோடு இருப்பதை விட்டு பேட்மிண்டன் கற்க போவது பிடிக்காமல் இருந்ததால் அங்கே யார் யார் அவளோடு விளையாடுகிறார்கள் என்று இவள் கேட்டதே இல்லை.அதனாலயே விஷ்வா அவள் டீமில் இருந்தது இவளுக்கு தெரியவில்லை.


"ஹோ... எனக்கு தெரிலப்பா...இட்ஸ் ஓகே...உன் ப்ரோஃபைல்ல விஷ்வா போட்டோ பாத்தேன் அதான் யாரா இருக்கும்னு கேட்டேன்...நா அப்புறம் கால் பண்றேன்...பை..."


"பை...ஹாப்பி ஹனிமூன்"என்று போனை வைத்து விட்டாள்.


இதுவரை அவள் ஸ்பீக்கரில் பேசியதால் விக்னேஷும் அனைத்தையும் கேட்டிருந்தான்.


"அச்சு...!"


"பொய்... அத்தனையும் பொய்...விஷ்வா மேல லவ் மூணு வருஷமா...எல்லா பொய்!அமெரிக்காவுல மனைவி குழந்தையோட இருக்கறவன இவ இந்தியாவுல இருந்துகிட்டு லவ் பண்ணாளாமா?அவள அவள...கைல கெடைச்சா...அடி பின்னிருவேன்... எதுக்கு இந்த பொய்...?"


"வைட் ய மினிட் அச்சு...! அன்னிக்கு நாம விருந்துக்கு போன போது அவளையும் மார்கஸையும் வச்சு எவ்ளோ கேலி பண்ணோம்..எவ்ளோ வெட்கப்பட்டா... பிடிக்காம இருந்தா அப்படி ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டா...ஐ திங்க் அவர் அப்பாதான் இதுல என்னமோ பண்ணிட்டார்...நா கேட்டதுக்கு ரெண்டு நாள் டயம் கேட்டார்...ரெண்டு நாள்ல சைதன்யா இப்படி ஒரு ட்ராமா பண்றான்னா...அவர் ஏதோ சொல்லி அவள பயமுறுத்தியிருக்கனும்..."


"ஆமா நீங்க சொல்றது தான் கரெக்ட்...விக்கி!மார்க் அண்ணாக்கு உடனே போன் பண்ணுங்க... அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்"


ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் லைன் கிடைக்க வில்லை.
 

Bhavya

Author
Author
SM Exclusive Author
#2
புயல் வேகத்தில் பறந்த மார்கஸின் கார் ஐந்து மணி நேரப் பயணத்திற்கு பின் கடற்கரையோரமிருந்த தனிமையான பங்களாவின் முன் வந்து நின்றது.சுற்றிலும் பலவகையான மரங்கள் சூழ எழில் கொஞ்சியது அந்த இடம்.கடல் அலைகள் கரையில் வந்து மோதும் ஹோவென்ற சப்தம் மிக அருகில் கேட்டது.


பயணம் முழுவதும் மார்கஸ் சைதன்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை.காம்பௌண்ட்க்குள் நுழைந்து பங்களா வாயிலில் வந்து கார் நின்றதும் முதலில் இறங்கிய மார்கஸ் அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான்.இறங்கியவளை வீட்டினுள் வழி நடத்திச் சென்றான்.


மாடியில் இருந்த அழகிய அறை வாயிலின் கதவை திறந்தவன்,


"ஃப்ரெஷ் அப் ஆகி வா...உள்ளே எல்லா வசதியும் இருக்கு...ஷவர்ல நான்ஸ்டாப் தண்ணி வரும்..."என்றவன் அவளை பேச இடம் கொடாமல் கீழிறங்கிச் சென்று விட்டான்.


அவனின் அன்னியமான பாவனை மனதை சுட்டாலும் அவன் போ எனாததே போதுமாகத் தோன்றவே பயண அலுப்புத் தீர குளித்து அழகான சுடியில் தயாராகி கீழிறங்கி வந்தாள்.இதுவரை பார்த்ததில் அவர்கள் இருவரை தவிர அங்கே வேறு மனிதர்கள் யாரும் இல்லை என்பதை கண்டாள்.ஏன் என்று கேட்க முதலில் அவன் அவளோடு பேச வேண்டுமல்லவா?!...


அங்கே ஒரு புறத்தில் சிற்றிரிய சத்தங்கள் கேட்கவும் அங்கே சென்றாள்.அது ஒரு சமையலறை...அங்கு டவாவில் எதையோ திருப்பிப் போட்டு கொண்டிருந்தான் மார்கஸ்.அவனும் கேஷ்வலுக்கு மாறியிருந்தான்.லூசான அரைக்கை டீசர்ட் அவனின் வலிமையான புஜங்களை எடுத்துக் காட்டியது.ஆணின் இலக்கணமாக இருந்தவனை பின்னிருந்து அணைக்கத் துடித்தது அவள் இதயம்.ஆனால் தான் கூறிய அடாத பொய் அவர்கள் நடுவே சுவராக நின்று அவளைத் தடுத்தது.


தான் வந்ததை அறிவிக்க எண்ணி"க்கூம்"என்று குரல் கொடுத்தாள்.அவள் வந்ததை அறிந்தவன் லேசாகத் திரும்பிப் பார்த்தவன் சமையல் பாத்திரங்களை ஒவ்வொன்றாக தந்து உணவு மேஜையில் வைத்தான்.அதிகமாக எதுவுமில்லை.


பிரட் ஸான்விட்ஜ், கெச்சப் ,ஆம்லெட்,மாதுளை ஜுஸ் என அவ்வளவு வேகமாக அவன் செய்தது அவளை ஆச்சரியப்படுத்தியது.சேரை இழுத்து அவளை அமரும்படி சைகை செய்தான்.அதை வாயில் கூறினால் என்ன என்று மனதில் பொறுமினாள் அவள். அவன் பரிமாற பேசாமல் உண்டாள்.


சாப்பிட்டானதும் பாத்திரங்களை எடுக்க முன்வந்த சைதன்யாவின் உதவியை மறுத்தவன் தானே எடுத்துச் சென்று துலக்கி அதற்கான ஸ்டாண்டுகளில் அடுக்கினான்.


அவன் வரும்வரை ஹாலில் காத்திருந்தாள்.அவனிடம் மன்னிப்பை வேண்ட துடித்தது அவள் மனம்.ஆனால் அவனோ ஹாலிற்கு வந்தவன்,


"கோ டு யுவர் ரூம் அண்ட் டேக் ரெஸ்ட்"என்றதும் விருட்டென கோபத்தோடு எழுந்து தன்னுக்கு அளிக்கப்பட்ட அறைக்குச் சென்று பொத்தென படுக்கையில் விழுந்தாள்.நீண்ட பயணமும் மன உளைச்சலும் படுத்து ஐந்து நிமிடங்களில் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விட்டாள்.


அவள் துயிலில் ஆழ்ந்த பின் மார்கஸ் அந்த அறைக்கு வந்ததையோ அவளின் நெற்றியில் விழுந்த கூந்தல் சுருளை காதின் பின்னே சொருகி அவளின் நெற்றியில் காதலோடு முத்தமிட்டதையோ அவள் அறியாமல் போனாள்.


சைதன்யாவிற்கு துயில் கலைந்த போது பௌர்ணமி நிலவு வானில் எழுந்து கடல் காற்றோடு சேர்ந்து அவள் பூமேனியைத் தழுவிக் கொண்டிருந்தது.மெல்ல எழுந்து ஜன்னல் வழியே வெளியேப் பார்த்த போது நீச்சல் குளத்தின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த மார்கஸை கண்டவள் வேகமாக கீழிறங்கிச் சென்றாள்.


கண்கள் மூடியிருந்தாலும் தன்னவளின் அருகாமையை மனதால் உணர்ந்தவன் கண்களைத் திறந்த போது நாற்காலி அருகே மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கையை தன் இருக்கைகளில் அடக்கி அதில் தன் முகத்தை பதித்தாள்.இரண்டொரு நொடியில் கையில் ஈரத்தை உணர்ந்தான் மார்கஸ்.அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பொங்கிய பிரவாகமாக உடல் குலுங்கினாள் அவள்.சிறிது நேரம் அழவிட்டவன் அது நிற்காமல் அதிகமாகவும் அதற்குமேல் தாங்க மாட்டாமல் அவளை இழுத்து தன்னுள் அடக்கிக் கொண்டான்.


தன் மன்னவனின் நெஞ்சில் தஞ்சமடையவும் அந்த மதங்கியின் அழுகை சிறிதுசிறிதாக குறைந்து கேவல் மட்டும் மிச்சமானது.அணைப்பை விடாமலே அவளை லேசாக நிமிர்த்தியவன்,


"ஏன்....?"என்றான்.அனைத்து கேள்வியும் அந்த ஒற்றை வார்த்தையில் அடக்கியவனிடம் திக்கியவாறு தந்தையின் மிரட்டல் அதற்கு பயந்து தான் ஆடிய நாடகம் மார்கஸ் சென்ற பின் அழுகையில் கரைந்த தன்னை தேற்றி தாய் அனுப்பி வைத்தது என ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள்.அவன் கண்களில் கோபத்தைக் கண்டவள்,


"சாரி மாக்கு! உங்களுக்கு ஏதாவது ஆயிட்டான்னு நா ரொம்ப பயந்துட்டேன்...என்ன பண்றதுன்னே தெரியல...என் மேல கோபப்பட்டு நீங்க விலகிப் போயிட்டா எந்த ஆபத்தும் இல்லாம நல்லா இருப்பீங்கன்னு தான் அப்படி செஞ்சேன்...ஐம் ரியலி சாரி மாக்கு...ரியலி சாரி...."


"ஸ்டுப்பிட்! எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலையா உனக்கு?என் பவர் தெரிஞ்சும் முட்டாள்தனமா இப்படித்தான் பண்றதா? எனக்கு எவ்ளோ ஹேர்ட் ஆகும்னு யோசிச்சியா?உன் பொய்யால எவ்ளோ வேதனைப்பட்டேன்னு தெரியுமா உனக்கு?லைஃப்பே வேண்டாம்னு தோணிடுச்சு...அம்மாக்காக...அவங்க தனியாடுவாங்கன்னு பொறுத்துக்கிட்டேன்..."எனவும் அவன் வாயைப் பொத்தியவள்,


"சாரி....ஐம் சாரி...என் வாழ்க்கை பூரா சாரி கேட்டாலும் நா செஞ்ச தப்புக்கு போதாது...நா என்ன பண்ணனும்னு சொல்லுங்க...என் உயிரை கொடுக்கனும்னா அதையும் செய்றேன்...ப்ளீஸ் மாக்கு டெல் மீ சம் திங்....ப்ளீஸ் கிவ் மி பனிஷ்மெண்ட்"என்று அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.


இனியும் அவள் அழுது கரைவதை தாங்காதவன்,


"ஓகே ஒரு பனிஷ்மெண்ட் இருக்கு...ஆனா உன்னால பண்ண முடியும்னு தோணல"


"ஆங்...எத இருந்தாலும் பண்ணுவேன்...எவ்ளோ கஷ்டமாயிருந்தாலும் பரவாயில்லை"


"ஆர் யு ஷ்யூர்?"


"ஹண்ட்ரட் பர்சனட் ஷ்யூர்"


"என் ஆயுள் கைதியா வாழ்க்கை பூரா என்னை விட்டு ஒருகணமும் பிரியாம இருக்கனும்...பனிஷ்மெண்ட் ஓகேவா?"என்று முகத்தில் குறும்பு புன்னகை தவழக் கேட்டான் அந்த கள்வன்.


ஏதோ சொல்ல போகிறான் என காத்திருந்த சைதன்யாவின் கண்கள் அவன் தண்டனையைக் கேட்டதும் சாஸராக விரிந்தது.


"என்னை மன்னிச்சிட்டிங்களா மாக்கு?"என்று கண்களில் உயிர் தேக்கிக் கேட்டாள்.அதில் முழுவதும் கரைந்தவன் அவளை இறுக அணைத்தான்.


"ஷ் லூசு!மன்னிப்பெல்லாம் எதுக்கு...என் மேல இருக்கற அதிகமான காதலால தானே நீ அப்படி பண்ண..ப்ராமிஸ் மீ இனிமே என்னை பிரிய மாட்டேன்னு..."என்று தன் வலக்கையை நீட்டினான்.


தாங்க முடியாத உவகையில் தன் கை கையை அவன் கையில் வைத்தவள்,


"என்னிக்கும் உங்கள விட்டு பிரியவே மாட்டேன்...மாக்கு ஐ ப்ராமிஸ் யூ"


"இது போதாதே!"


"இன்னும் எப்படி சொல்றது?"


"நிஜமா புரியலையா உனக்கு...ம்"என்றவனின் கண்கள் அவள் பூவிதழ் மேல் நிலைத்தது.


அவன் எண்ணம் புரிய வெட்கம் மேலிட அவனிடமிருந்து விலகப் போனவளை இழுத்தவன் அவள் மலரிதழ் நோக்கி குனிந்தான்.ஆனால் இதழ்கள் சேரும் முன் அவனின் போன் இசையெழுப்பி அதை தடை செய்தது.


"சே... எப்ப ஆரம்பிச்சாலும் முடிக்க விட மாட்றாங்கப்பா....இந்த வாட்டி நோ ஸ்டாப்"என்று போனை அலட்சியப்படுத்தியவன் அவளை நோக்கி குனிந்தான்.ஆனால் அவன் இதயத்தில் கை வைத்து லேசாக தள்ளியவள்,


"மாக்கு!போன் ரிசீவ் பண்ணுங்க... ஒருவேளை அர்ஜென்ட் காலா இருந்தா..."


"பேபி...!"


"ப்ளீஸ்...ரிசீவ் பண்ணுங்க"


"ப்ச்..."என்றவாறு போனை எடுத்தவன் விக்னேஷ் நம்பர் காணவும் ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.


"மார்கஸ் ப்ரோ!நா அர்ச்சனா...சைத்து அன்னிக்கு சொன்னதெல்லாம் பொய்...அந்த விஷ்வா அவ பேட்மிண்டன் டீம்ல இருந்தவரு...அங்கிங் அவள என்னமோ சொல்லி மிரட்டியிருக்கனும்...அதனால தான் அவ அப்படி பண்ணிட்டா...நா நம்பருக்கு போன் பண்ணா நாட் ரீச்சபள் வருது... நீங்க இந்தியாக்கு வாங்க ப்ரோ...ப்ளீஸ்"


அவள் கூறியதைக் கேட்ட சைதன்யாவின் கண்கள் நீரைப் பொழிந்தது.


"ப்ரோ லைன்ல இருக்கீங்க தானே?ஹலோ ஹலோ!"


"அச்சு...!"


"சைத்து!...சைத்து!நீ அங்க எப்படி?என்னடி நடக்குது இங்க?"


"நா லண்டன்கே வந்திட்டேன்டி...இனிமே மாக்குவோட தான் இருக்கப் போறேன்..."


"உஹூ...ஏ....சைத்து நிஜமா தான் சொல்றியா?"


"ஆமாடி நிஜம் தான்...என் முட்டாள் தனத்தால உங்க ரெண்டு பேரையும் இழந்துட்டேன்னு எவ்ளோ அழுதேன் தெரியுமா!"


"சாரி டி சைத்து!என்ன ஏதுன்னு கேக்காம உன்னை ரொம்ப திட்டிட்டேன்..."


"இட்ஸ் ஓகே டி...வேணும்னா அப்படி பண்ண...பிரெண்ட்ங்கற உரிமைத் தானே அப்படி பேசின...விடு நீ அதெல்லாம் மறந்துடு...நாமா எப்பவும் போல பெஸ்ட் பிரெண்ட்ஸ் ஓகே!"


"ட்ரிபிள் ஓகே..."


"எக்ஸ்க்யூஸ் மீ சிஸ்டர் அண்ட் விக்னேஷ் இன்னும் ரெண்டு நாள்ல எனக்கும் சைதன்யாக்கும் மேரெஜ்...ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் வந்து நடத்திக் கொடுக்கனும்..."


"சூப்பர் சூப்பர் ப்ரோ நாங்க கண்டிப்பா வரோம்"


"ஷ்யூர் மார்கஸ் கண்டிப்பா வரோம்...நா இப்பவே டிக்கெட் புக் பண்றேன்..."


"பை ...கன்கிராஜுலேஷன்ஸ்"என்று வாழ்த்தி போனை வைத்தனர் இருவரும்.


மார்க்ஸின் அறிவிப்பில் திகைத்து அவனையே விழி விரியப் பார்த்தாள் சைதன்யா.


"என்ன லுக்கு...ம்..."


"ரெண்டு நாள்ல நமக்கு மேரெஜா?"


"எஸ் இன்னும் டூ டேஸ்... இந்த ஸ்வீட் ஏன்ஜல் மை வைஃப்...மிஸஸ் மார்கஸ் வெஸ்ட்க்ளிஃப்...கம் ஆன் போன் வரதுக்கு முதல்ல ஸ்டார்ட் பண்ணத முடிக்கலாம்"என்று அவளை தன் புறம் இழுத்தப் போது அவனிடமிருந்து நழுவி உள்ளே ஓடி விட்டாள் அவள்.பின்னேயே ஓடினான் அவளின் மாக்கு.


ஒரு வாரத்திற்கு பின்


பரந்து விரிந்த கடலின் மத்தியில் நின்றிருந்தது மினியேச்சர் க்ரூஸ் கப்பல்.யாருமற்ற கப்பலின் கேப்டன் மார்கஸ்.அவனோடு அவன் மனைவி சைதன்யா.ஐந்து நாட்களுக்கு முன் செயிண்ட் ஜார்ஜ் சர்ச்சில் அவர்கள் முறைப்படியும் கோயில் ஒன்றில் தாலிக்கட்டி இந்திய முறைப்படியும் சைதன்யாவை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றிருந்தான் மார்கஸ்.அன்றைய தினமே இருவரும் அவனின் குட்டி கப்பலில் தங்கள் பயணத்தைத் தொடங்கி விட்டனர்.யாருமற்ற தனிமையில் வாழ்வின் இனிமையைத் திகட்ட திகட்ட அனுபவித்தனர்.


மனைவியின் முகத்திருந்து நிமிர்ந்த மார்கஸ்,


"பேபி!ஸ்வீட் லாலிபாப்!மை டியர் ஏன்ஜல்!என்னை தொரத்த ப்ளான் பண்ணி நீயே வசமா என்கிட்ட மாட்டிக்கிட்டே"


" எவ்ளோ ப்ளான் பண்ணோம் எல்லாம் ஃபாளப்....ஆமா நா ஒண்ணு கேக்கனும்னு நெனைச்சேன்...அச்சு விக்கிய லவ் பண்ணது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது... அவங்க ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தாங்களே?"


அதற்கு அடக்கமாட்டாமல் சிரித்தான் அவன்.எதற்கு இப்படி சிரிக்கிறான் என்று யோசித்த சைத்து,


"மாக்கு! எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க? சொல்லிட்டு சிரிங்க..."


"அந்த விஷயத்தை சொன்னதே நீதான்...!"


"நானா...!நோ...நா எப்ப சொன்னேன்?யூ லயர்!"


"ஹா...ஹா... அன்னிக்கு பார்ட்டில ஹாட் ட்ரிங்க்ஸ மிக்ஸ் பண்ணிக் கொடுத்து என்னை மட்டையாக்க நீ ப்ளான் பண்ணயில்ல நா அத உல்டா பண்ணி நீயே அத குடிக்கும்படியா பண்ண...மேடம் அதுக்கு மேல ஒரு பாட்டில் ஃபுல் குடிச்சு எல்லாத்தையும் உளறிட்ட..ஹா...ஹா...ஸோ ஃபனி"


"யூ யூ உங்கள"என்று அவன் மேல் பாய்ந்திருந்தாள்.சிறிது நேரம் இருவரும் செல்ல சண்டையிட்டனர்.முடிவில் அவள் வீக்னஸான அவள் இடையை அலங்கரிக்கும் ஹிப் செயினில்(அவளுக்காக அவன் வாங்கியது)முத்தமிடவும் கிறங்கிப் போனாள்.நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் தொடங்கியது அவர்கள் காதல் விளையாட்டு.


உண்மை காதல் என்றுமே தோற்பதில்லை என்பதிற்கு உதாரணமாக இருவரும் ஈருடல் ஓருயிராக(நான்கைந்து பறங்கிக்காய்களைப் பெற்று)வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.
 

Sponsored

Advertisements

Top