• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayakkottai - Minnal : Aththiyaayam 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 8.

முதலில் அந்தப் பெண் நடக்க அவள் பின்னால் பூஜாவும் அவளுக்குப் பின்னால் அருண் மற்றும் அரவிந்தன் நடந்தனர். அவள் காட்டுப் புதர்களை விலக்கிக் கொண்டு மிகவும் இலகுவாக நடந்தாள்.

"ஆமா! நீ இந்தக் காட்டுல இப்படித் தனியா இருக்கியே? உனக்கு பயமில்லையா?" என்றாள் பூஜா.

"எனக்கு என்ன பயம்? நீங்க எதுக்கு வந்தீங்க? உங்களைப் பார்த்தா நகரவாசிகள் மாதிரி தெரியுதே? புலித்தோல் மான் கறின்னு ஆசைப்பட்டு வந்தீங்களா?"

"ஐயையோ இல்லம்மா! நீ எங்களை போலீஸ்ல ,மாட்டி விட்டுருவே போலிருக்கே? நாங்க அது எதுக்குமே வரல்ல! எங்க தலையெழுத்து இப்படி நடுக்காட்டுல வந்து மாட்டிக்கிட்டோம். எப்படியாவது எங்களை பூங்குளத்துல விட்டுரும்மா" என்றான் அரவிந்தன். அவனை விழித்துப் பார்த்தாள் அந்தப் பெண்.

"ஆமா உன் பேர் என்ன?" என்றாள் பூஜா.

"என் பேரு மகிழி. அப்படியே நீங்க கூப்பிடலாம்"

"மகிழி இது என்ன புதுப்பேரா இருக்கு? மகிஷின்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். மகிழின்னா?" என்றான் அருண்.

"நல்ல தமிழை மறந்துட்டீங்க எல்லாரும். ஆனந்தின்னா புரியும் ஆனால் மகிழின்னா புரியாதா? நல்ல மக்கள்! பார்த்து வாங்க! இங்க கரிமுகன் இருக்கான்" என்றாள்.

"கரிமுகன் யாரு? உங்க அண்ணனா?" என்றான் அரவிந்தன்.

கலகலவெனச் சிரித்தாள் அந்தப் பெண். வெண்கல மணி ஒன்று ஒலிப்பது போல இருந்தது அந்த சத்தம்.

"அப்படியும் சொல்லலாம். ஆனா அவன் யானை. இந்தப்பக்கம் இப்ப ஒரு யானைக் கூட்டம் வரும். அதோட தலைவன் தான் கரிமுகன். நீங்க பேசாம நில்லுங்க. அவங்க போயிருவாங்க" என்றாள்.

அருணுக்கும் மற்றவர்களுக்கு பயத்தில் மூளையே கலங்கி விட்டது.

"ஐயையோ! பூஜா இந்தக் காட்டுவாசிப்பொண்ணை நம்பி வந்தது தப்பாப் போச்சே! இவ பாட்டுக்கு யானைக் கூட்டமா வரும்னு சொல்றா! பேசாமா இருங்கன்னு வேற சொல்றா! இவ நம்மை பலி குடுக்கப் போறாளா?" என்றான் அருண்.

இதற்கும் அந்தப் பெண் கலகலவென நகைத்தாள்.

நாட்டுல என்னென்னவோ செய்யறீங்க? ஆனா யானைக்கு பயப்படுறீங்களே? பயப்படாதீங்க! நான் சொல்றபடி இந்த மரத்துக்கு பின்னால போய் இருங்க!" என்றாள். அவள் சொல்லி முடிக்கவும் பிளிறல் சத்தம் கேட்டது. அவசரமாக கடவுளை வேண்டியபடி மூவரும் பெரிய மரத்துக்கு ஒதுக்குப்புறமாக மறைந்து அமர்ந்தனர். ஓடுவதற்கு தயாராகவே இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் யானைகள் கூட்டம் நடந்து வருவது தெரிந்தது. தலைமையில் மிகப்பெரிய கம்பீரமான யானை சுமார் ஆறடி நீள தந்தங்களோடு ராஜ நடை போட்டு வந்தது. அதன் பின்னால் சிறியதும் பெரியதுமாக சுமார் 20 யானைகள் வந்தன. அவைகளின் வருகையில் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் தெரிந்தது.

மூவரும் பதுங்கியிருந்த மரத்தை நெருங்கியதும் சற்றே தயங்கியது தலைமை யானை. மூச்சைப் பிடித்துக்கொண்டார்கள் மூவரும். இதயம் மிகவும் வேகமாகத் துடித்தது. என்ன தோன்றியதோ தெரியவில்லை துதிக்கையை உயரத்தூக்கி பிளிறி விட்டு கடந்தது தலைமை யானை. அதனை மற்ற யானைகள் பின் தொடர்ந்தன. சுமார் அரை மணி நேரத்தில் அந்த இடத்தில் யானைகள் வந்து போனதற்கான சுவடுகள் மட்டுமே இருந்தன. நெஞ்சில் கை வைத்தபடி எழுந்தார்கள் மூவரும்.

"என்ன ரொம்ப பயந்துட்டீங்களா? வன விலங்குகள் நம்மை எதுவுமே செய்யாது. நாம தீம்பு நெனச்சாத்தான் அதுக்குத் தெரியும். அப்பத்தான் அது நம்மைத் தாக்கும். நல்லவேளை நீங்க பயந்து ஓடல்ல! அப்படி ஒடியிருந்தா கரிமுகன் உங்களை சும்மா விட்டிருக்க மாட்டான்" என்றாள் மகிழி. அவளைக் கையெடுத்துக் கும்பிட்டான் அருண்.

"அம்மா தாயே! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்? இன்னும் என்னென்ன விலங்குகள் வரும்னு சொல்லிடும்மா! எல்லாத்துக்கும் சேர்த்து ஒரேடியய பயந்துக்கறோம். " என்றான். அவனுக்கு ஏனோ அந்த பெண்ணை மிகவும் பிடித்து விட்டது.

"அதிக தூரம் இல்ல! வந்தாச்சு. மானடையும் முன்ன நீங்க அங்க இருப்பீங்க" என்றாள்.

புரியாமல் விழித்தனர். மாண்டையும் முன்னர் என்றாள்? அவளே தொடர்ந்தாள். புரியலையா? மான்கள் மேஞ்சு முடிச்சு தன் இருப்பிடத்தை அடையுறதைத்தான் அப்படி சொன்னேன். இன்னும் கொஞ்ச தூரம் தான்" என்றாள். அருணை லேசாக இழுத்தான் அரவிந்தன். பூஜாவும் சற்றே பின் தங்கினாள்.

"அருண்! என்னடா இது? இன்னும் கொஞ்ச தூரம்னு தான்னு சொல்றா! ஆனா இன்னமும் தமிரபரணி நதியே வரலியே? அப்புறம் அந்த ஓடை? அதையும் காணலியே? எனக்கென்னமோ இவளுக்கே வழி தவறிட்டதுன்னு நினைக்கறேன்" என்றான். அதனை ஆமோதித்தாள் பூஜா. எனக்கும் அதே சந்தேகம் தான். நானும் பக்கவாட்டுல பார்த்துக்கிட்டே தான் வரேன். அம்புக்குறி போட்ட மரமே வரல்ல! " என்றாள்.

"சரி இருங்க! நான் அவ கிட்டயே கேக்கறேன்"

"மகிழி! நாம சரியான திசையில தான் போறோமா? இன்னும் ஓடையே வரல்லியே?" என்றான்.

"எந்த ஒடை? ஓ! குருதி ஓடையைச் சொல்றீங்களா? அதைப் பார்த்து நீங்க பயந்து போயிருப்பீங்களே?" என்றாள்.

"குருதின்னா ரத்தம் தானே? அப்ப அந்த ஓடையில ரத்தம் தான் ஓடுதா? என்ன கொடுமை இது?" என்றான் அரவிந்தன்.

"நீங்க காமிச்சுக்குற அளவுக்கு உங்களுக்கு மூளை இல்ல! ரத்தம் எப்படி இந்தக் காட்டுக்குள்ள ஓடும்? அந்த ஓடையில சில குறிப்பிட்ட நேரத்துல தண்ணி நிறம் மாறும் அவ்வளவு தான்."

"நாங்க அந்த ஓடைக்கரையில ஒரு பொண்ணைப் பார்த்தோம். ஆனா அவ மாயமா மறைஞ்சுட்டா" என்றாள் பூஜா.

"மாயமா மறைஞ்சிருக்க மாட்டா! பக்கத்துல ஏதாவது மரத்துல ஒளிஞ்சிருப்பா! " என்றாள். அவள் பேசுவதைப் பார்த்தால் அந்த வனத்தில் மாயமாக எதுவும் இல்லை என்பது போல இருந்தது.

"ஏன் மகிழி! அப்படீன்னா இந்த வனத்துல மாயம் மந்திரம் எதுவும் இல்லையா? ஏன் எங்களைப் போக வேண்டாம்னு காணிங்க தடுத்தாங்க?" என்றான் அருண்.

"எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்க! வழி தவறிட்ட சில பேருக்கு வழி காட்டுவேன் அவ்வளவு தான். "

"உன் வீடு எங்க?"

பதிலே பேசாமல் நடந்தாள் மகிழி. அவளது காலில் இருந்த வண்ண மணிகள் அந்த மங்கிய வெளிச்சத்தில் பளபளத்தன. அவளது முகமே அழகாக ஜொலித்தது.

"உன்னைப் பார்த்த அவ்வளவு அழகா இருக்கு மகிழி! நீ வன தேவதையோன்னு நினைக்கத் தோணுது" என்றான் அருண். அதை ஆமோதித்தான் அரவிந்தன்.

"நீங்க எப்படி வேணும்னாலும் நினைச்சுக்குங்க! இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க போக வேண்டிய இடம் வந்திரும். அப்புறம் நான் என் வழியில நீங்க உங்க வழியில" என்றாள்.

"நீயும் எங்க கூட வந்து தங்கிக்கோ ! கலையில உன் இருப்பிடத்துக்குப் போய்க்கோ! இந்த இருட்டுல எங்கேன்னுபோவ?" என்றாள் பூஜா. சட்டென நின்றாள் மகிழி.

"இப்படியே மேற்கே நடங்க! அதோ ஒரு ஒத்தையடிப்பாதை மாதிரி தெரியுது இல்ல? அதுல போங்க! நான் வரல்ல!" என்றாள். அவள் கை காட்டிய திசையைப் பார்த்தனர் மூவரும். அப்போது இருள் நன்றாகக் கவிந்து விட்டதால் சரியாகத் தெரியவில்லை. தூரத்தில் ஏதோ சில கட்டிடங்கள் மாதிரி தெரிந்தன. பூங்குளம் வந்து விட்டது என நினைத்துக்கொண்டனர்.

"ரொம்ப தேங்க்ஸ்மா மகிழி! நீ இல்லைன்னா நாங்க என்ன ஆயிருப்போமோ? எங்களை யானை கிட்ட இருந்து காப்பாத்தி, ராத்திரியில காட்டுல தவிக்க விடாம பத்திரமா கொண்டு வந்து சேர்த்துட்ட. உனக்கு நாங்க எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. காசு கொடுத்தா கட்டாயமா வாங்க மாட்ட! உனக்கு நாங்க எதைத் தர?" என்றான் அருண். அவள் சிரித்தாள்.

பூஜா தன் கைப்பையில் குடைந்து ஒரு அழகான ஹேர் கிளிப்பை எடுத்தாள். பச்சை சிவப்பு வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டு அது மிகவும் அழகாக இருந்தது.

"நீயும் என்னை மாதிரி பொண்ணா இருக்குறதால நான் இதை உனக்குத் தரேன் மகிழி! இது நான் மும்பையில வாங்குனது. உன் முடிக்கு ரொம்ப அழகா இருக்கும் போட்டுக்கோ! இது நிச்சயமா நீ செஞ்ச உதவிக்கு பணம் தரதுக்கு பதிலா இதைத் தரேன்னு நினைக்காதே! என் தங்கச்சியா நெனச்சுத்தரேன் வாங்கிக்கோ" என்றாள் பூஜா.

மீண்டும் அழகாகச் சிரித்தாள் மகிழி. அந்த ஹேர் கிளிப்பைக் கையில் வாங்காமல் சிறு கூடையில் போடச் சொன்னாள். அப்படியே செய்தாள் பூஜா. அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அவள் சொன்ன பாதையில் நடந்தனர், கட்டிடம் பக்கத்தில் தெரிய ஆரம்பித்தது. ஆனால் அது காணிக்குடியிருப்பு போல இல்லை. பெரிய பங்களா போலத் தெரிந்தது. மிகப்பெரிய இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. அந்தக் கதவுகளைத் தாண்டி ஒரே புதரும் செடிகளுமாக இருந்தது. தன் கையில் இருந்த டார்சை எடுத்து இரும்புக் கதவைப் பார்த்தான். பெரிய பூட்டு துருப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது. இரும்புக்கதவுகள் சுவரோடு இணையும் இடத்தில் ஒரு பெயர்ப்பலகை காணப்பட்டது. அது சுவரோடு சுவராக பதித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மீதும் சில செடிகள் கொடிகள் வளர்ந்திருந்தன. அரவிந்தன் அவைகளை அப்புறப்படுத்தினான். ஆங்கிலத்தில் சில எழுத்துக்கள் தெரிந்தன.

சர் ஜான் பெக்கெட் ஃபரஸ்ட் ஆபீசர் என்று பெயர்ப்பலகை இருந்தது. அதன் கீழே வேறு ஏதோ ஒரு பலகை தெரிய அதைப் படித்தான் அருண். அதைப் படித்ததும் மூவருக்கும் அந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. கைகள் நடுங்கின.
மாயக்கோட்டை
இது மின்னலின் இருப்பிடம். இங்கே தான் மின்னல் வனத்தைக் காவல் காக்கிறாள் என்றிருந்தது.

"நாம நாம மாயக்கோட்டைக்கே வந்துட்டோம்" என்றான் அருண் திக்கித்திணறி. அதே நேரம் சட்டென ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது அந்த பங்களாவுக்குள். அப்படியே சரிந்து அமர்ந்தாள் பூஜா.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மகிழிதான் மின்னலோ!!! ஊருக்குள் போகுறதுக்கு வழி கேட்டா இங்க கொண்டு வந்து விட்டுட்டாளே....
Nice update Srija sis
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடக்கடவுளே?
என்னப்பா, ஸ்ரீஜா டியர்?
இந்த மகிழி இப்படி பண்ணிட்டாளே?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top