• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் தோழர் தோழிகளே. நான் வந்துட்டேன். வகை தொகை இல்லாமல் எல்லா தேர்வுக்கும் கன்னாபின்னான்னு பதிவு பண்ணி வச்சா இப்படித்தான் காவ்யா பதிவு தராம கண்ணாமூச்சி விளையாடுவா...:censored::censored::censored: அதனால நீங்களும் லைக் அண்ட் கமெண்ட் கூட கண்ணாமூச்சி விளையாடாம அதை போட்ருங்க ப்ளீஸ்...:love::love::love:

IMG_20190621_185233.jpg

மழை - 19

மதியின் சில நொடி நேர வார்த்தைகளில் அரசனின் இதயம் பல நொடிகள் செயலிழந்து பின் அதற்கும்
சேர்த்து வைத்துப் பன்மடங்கு வேகமாய்த் துடித்தது.


தன் முன்னால் தனது முகத்தையே பதிலுக்காக பார்த்திருப்பவளிடம் திரும்பியவன் அந்த இருளிலும்
அவளின் இருவிழிகள் காட்டிய கரைக்காணாக் காதலைக் கண்டுக்கொண்டான்.


இதை இப்போழுதே பேசி முடித்து விடவேண்டும் என்று தோன்ற முகத்தில் தவிப்போடு கூடவே
மறுப்பும் சேர, “மதி... இது” என்று ஆரம்பித்தான்.


அவனின் முகபாவனையிலே தன் காதலுக்கு எதிராய் சொல்லப் போகிறான் என்று
கண்டுக்கொண்டாள். கூறிய அடுத்தக் கணமே தன் காதல் நிராகரிப்படுவதை அவள் விரும்பாதலால்,


“மாமா... ப்ளீஸ். நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். தயவுசெய்து எதாவது பேசி அதைக் கெடுக்காதீங்க. எனக்குத் தெரியும் உங்களுக்கு நான் என்றில்லை யாரா இருந்தாலும் மாட்டேன்னுதான் சொல்வீங்க. அதனால தான் காதலை சொல்லாம கல்யாணத்தைக் கேட்குறேன்.

இதுக்கான பதிலைக் கூட நான் தாத்தா வீட்டிற்கு போயிட்டு சென்னை கிளம்பும் முன்னாடி கேட்டுக்குறேன். இப்போ வண்டி எடுக்குறீங்களா?” என்று படபடத்து அமர்ந்துக்கொண்டாள்.

அரசனுக்கோ இயல்பாகவே இருக்க முடியவில்லை. மனதெல்லாம் ஏதேதோ எண்ணிச் சஞ்சலம் கொண்டது. ‘சிறுபெண் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுப்பதா? வீட்டினரிடம் சொல்லிவிடலாமா?
வீட்டிற்குத் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?’ என்பது போல்.


திடீரென்று மதி எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருப்பதால் இதிலும் விளையாடுகிறாளோ
என்றொரு எண்ணம். விளையாட்டாக இருக்க வேண்டும் என்று ஒரு மனம் விரும்ப மற்றொரு மனம்
அவளின் வார்த்தைகளில் இருந்த உண்மையையும் கண்களில் தெரிந்த காதலையும் எடுத்துக்
கூறியது.


மௌனமாகவே அவரவர் சிந்தனையில் வீடு வந்து சேர வண்டியில் இருந்து இறங்கிய மதியிடம், “மதி எப்போ என்றாலும்...” என் பதில் ஒன்றுதான் என்று கூறுவதற்குள் அரசனின் வாயைச் சட்டென்று
வலதுகையால் மூடியிருந்தாள் மதி. அவனின் மீசை உள்ளங்கையைக் குத்தி குறுகுறுப்பூட்ட மற்றொரு கையால் சுட்டுவிரலை உதட்டில் வைத்து அமைதியாக இருக்குமாறு கூறி பின் பத்திரம்
காட்டிச் சென்றுவிட்டாள்.


அடுத்த நாள் மாடுகளின் திருநாள் என்பதால் அனைத்து மாடுகளையும் அலங்கரித்து பூசை செய்தபின் அவை மகிழ்ச்சியாய் இருக்க சுதந்திரமாக அவிழ்த்துவிட, எல்லா மாடுகளை விடக் கன்றே அதீத உற்சாகம் அடைந்து துள்ளி குதித்தோடியது. கட்டவிழ்ந்த கன்றின் உற்சாகம் என்ற வழக்குச்சொல் வந்தது இதனால் தானோ?

அடுத்து அழகேசன் தன் தாய் வீட்டிற்கு புறப்பட கூடவே கீதாவும் மதியும் வீட்டினரிடம் கூறிக்கொண்டு புறப்பட்டனர். அரசன் இரவு பார்த்ததோடு சரி அதன் பின் மதி இருக்கும் பக்கமே வரவில்லை.

இப்போது அழகேசன் இல்லாததால் கோவில் விழா மேற்பார்வை பார்க்க தாத்தா செல்ல, கூடவே பேரனும் சென்று வேண்டிய உதவி செய்தான். பின் மாலையில் வீடு வர, வெகு வருடங்கள் கழித்து மீனாம்பிகை பாட்டி சமையலறையில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.

இரவானதும் அவர் பரிமாறவர அனைவரும் அதற்கு விடாமல் அமர வைத்துக்கொண்டனர். தாத்தா அவரின் மனையாளை இவ்வளவு உற்சாமாகப் பார்க்காததால் அதில் லயித்திருக்க, ரெங்கநாயகியும்
மீனாம்பிகையும் பேசிக்கொண்டிருந்ததால் ரூபிணியின் கவனமும் அவர்களிடம் இருக்க... அரசனின்
யோசனை படிந்த முகம் யாரின் கவனத்தையும் கவராமல் போனதில் வியப்பில்லையே.


மறுநாள் திருவிழா முடிய அடுத்த நாளே கலியபெருமாள் தன் தாயையும் மகளையும் அழைத்துச் செல்ல வந்திருந்தார். மதியின் வீட்டினரும் இவர்களை வழியனுப்ப அரண்மனைக்கு
வந்துக்கொண்டிருக்க,


அறையில் இருந்த தங்கள் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர் ரூபிணியும் ரெங்கநாயகியும். தாத்தாவிடம் சிறிது நேரம் பேசி இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார் கலியபெருமாள்.

வந்ததும், “அம்மா என்னம்மா ரூபிணிக்கு அரசனைப் பிடிச்சிருக்கு நேரம் பார்த்து கல்யாணப்பேச்சு எடுங்கன்னு சொல்லிட்டுத்தான போனேன். அதைப்பத்தி பேசவே இல்லையா நீங்க?” என்று தாயைக்
கேள்வி கேட்க,


“அதுசரி... நீதான் அப்படி சொல்ற உன் பொண்ணு என்னடானா நான் பேசிப் பார்த்து சொல்றேன்
அதுவரை பொறுமையா இரு பாட்டின்னு வந்த அன்னைக்கே என் வாயைக் கட்டிப் போட்டுட்டா.
சம்மந்தம் பேசவா அரசனைப் பிடிச்சிருக்கான்னு நேத்தும் கேட்குறேன். அரசனைப் பிடிச்சிருக்கு. ஆனா அவங்க எனக்கு செட் ஆக மாட்டாங்க... ஒழுங்கா கிளம்பலாம்ன்னு சொல்லிட்டா. உனக்கே தெரியும்
உன் பொண்ண பத்தி இதுல நான் என்னத்தப் பண்றது?” என்று அவர் பக்க நியாயத்தை
எடுத்துரைத்தார்.


“ரூபிம்மா ஏண்டா? யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா?” என்று மகளிடம் பொறுமையாக
விசாரித்தார். ஏனெனில் அவருக்குத் தெரியுமே மகள் ஆர்வமாக இருந்தது.


“இல்ல டாட் அதெல்லாம் இல்ல. நான் பார்த்த வரைக்கும் ஒரு வித்தியாசமான ஆளா இருக்குறதால ஒரு ஆர்வம் வந்துருச்சிப்போல. உங்களுக்கொன்னு தெரியுமா? அவர் படிக்கவே இல்லைப்பா. மே பீ அவர் வளர்ந்த இடம் வசதி இல்லாத இடமா இருக்கலாம் அது கூட பரவால்ல இப்போத்தான் வசதி இருக்கே. பட் அவங்க இங்கேயே மரம், காடுன்னு வளர்த்துட்டு வாழ விருப்பப்படுறாங்க. ஹொவ் கேன் ஐ லிவ் பா?

அதான் வேண்டாம் என்று தோணுது. எனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்ன்னு ஒரு பிம்பம் இருக்கு. அதுக்கு இவங்க ஒத்துவரலை அவ்ளோதான். ஓகே நாங்க ரெடி கிளம்பலாமா டாட்” என்று ரூபிணி கூறி முடிக்க,

அவளது கூற்று தந்தை பாட்டியின் காதில் மட்டுமின்றி வேறொரு காதிற்கும் சென்றதை அவள் அறியவில்லை.

அறையில் இருந்து வெளிவந்து நடுக்கூடத்தில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க சற்று
நேரத்திற்க்கெல்லாம் அழகேசன் தன் மனைவி மகளுடன் வந்து சேர்ந்தார். இந்த இரு நாள்களின் தாய் வீட்டு வாசம் அவரைச் சற்று இளமையாக காட்டிக்கொண்டிருந்தது.


அரசன் இப்போது தோட்டத்தில் இருந்து வர, ரெங்கநாயகி அவனை அணைத்துக்கொண்டு, “ஒரு நாள் வீட்டுக்கு வா ராசா... உன் அம்மா வாழ்ந்த வீடு” என்று கண்கலங்கினார். ஒரே பேரனல்லவா? அதுவும் மகள் வழிப்பேரன் பிரிய மனமின்றிதான் பிரிந்தார். அதன்பின் அனைவரிடமும் விடைப்பெற்றுச் செல்ல அவர்களின் கார் வந்தது போல் அவர்களை அழைத்தும் சென்றது.

அதைப்பார்த்த மதிக்கு மனதில் ஏற்பட்ட அலைப்புறுதலும் அவர்களோடே சென்றது போல் உள்ளம் பெரும் ஆசுவாசம் அடைந்தது. கூடவே அதை விடப் பெரிதான அரசனின் பதிலை எண்ணி அலைபாயத் தொடங்கி, ‘ஐயானரே நான் பொங்கல் வச்சதுக்கு பதிலா மாமா கிட்ட இருந்து நல்ல பதிலை வரவைத்துவிடு’ என்று கடவுளிடம் கைம்மாறு உதவி ஒன்றை அவசரமாக வேண்டியது.

அவளின் எண்ணவோட்டத்தை, “மதி சக்திவேல் பத்திரம் உன்கிட்டத்தான இருக்கு போய் எடுத்துட்டு வா” என்ற அழகேசனின் குரல் தடை செய்தது.

“இதோ எடுத்துட்டு வரேன்ப்பா...” என்று மேலே சென்று அதை எடுத்து வர, “மாமா இதுக்கு மேல பொறுமையா இருக்க வேண்டாம். இன்னைக்கே ஒரு முடிவு கட்டலாம்ன்னு இருக்கேன் அதுக்கு அப்புறம் தான் சென்னைக்குப் போகணும். நீங்க என்ன சொல்றீங்க" என்று தன் மாமனாரிடம் கேட்டார்.

“என்னப்பா பண்ண போறீங்க?” என்று தாத்தா கேட்க நினைத்த கேள்வியை மதியே கேட்கவும்,

“கோவில்ல பாத்தியே என் ஃப்ரண்ட் விக்னேஷ். அவன் இப்போ சேலம் கமிஷனரா இருக்கான். இன்னும் ஆறு மாசத்துல பணிஓய்வு பெற போறானாம். அதுனால அவங்க பூர்விக வீட்டை புதுப்பிக்க
உதவி கேட்டான். அப்போ தான் எனக்கு தோணிச்சு ஏன் இவன் கிட்ட உதவி கேட்ககூடாது. நம்ம புகார் கோர்ட்க்கு போயிருசின்னா போதும். அதுக்கு அப்புறம் நான் பார்த்துப்பேன்” என்று
கூறிக்கொண்டிருக்கும் போதே மதி குறுக்கிட்டாள்.


“அப்பா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க ஃப்ரண்டே ஆனாலும் நல்லா விசாரிச்சி
சொல்லுங்கப்பா. இத்தனை வருஷம் கழித்தும் அவரு பழைய மாதிரியே நல்லவங்களா
இருப்பாங்கன்னு நம்ப வேண்டாம்.”


“ஹாஹா... நான் அதை விசாரிக்காம இருப்பேனா? அதெல்லாம் தொழில்ல நேர்மையாதான்
இருந்திருக்கான். அவனோட ட்ரான்ஸ்பர் எண்ணிக்கை சொல்லும் எவ்ளோ நல்லவன்னு” என்று அழகேசன் புகழ மதி ஒரு வழியாய் ஒத்துக்கொண்டாள்.
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அரசன் இதில் பார்வையாளராய் அமர்ந்திருந்தான். அவனுக்கு உள்ளுக்குள் மதியை நினைத்து பயமேதான். ‘எப்போது பதிலைக் கேட்பாளோ? தான் சொல்வதைக் கேட்டு எப்படி நடந்துக்கொள்வாளோ?’ என்று.

மதிக்கும் அதே பயம்தான். ‘என்ன சொல்வானோ? மறுத்துவிட்டான் என்றால் என்ன பண்ணுவது?’ என்று.

ஆக இருவரும் பதில் தெரிந்தே அதைச் சொல்லவோ கேட்கவோ மனமின்றி கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டிருந்தனர். என்ன ஒரு ஒற்றுமை?


முக்கிய விசியமாக அழகேசன் அழைத்திருப்பதால் குடும்பத்தினரை விட்டுத் தான் மட்டும் வந்திருந்தார் விக்னேஷ்வரன். எப்போது வேண்டுமென்றாலும் வேலை வந்துவிடலாம் என்பதால் நாளை என்ற ஒன்று அவரது அகராதிலேயே இல்லை. நன்றே செய் அதை இன்றே செய் என்னும் கோட்பாடுடையவர். அதனால் பல நல்லதையும் கெட்டதையும்
ஒருங்கே கண்டவர்.


அவர் வந்ததும் கீதா பழச்சாறு தந்து உபசரிக்க, அதைப் புன்னகையோடு
பெற்றுக்கொண்டவர் நேராக விசியத்திற்கு வந்தார்.


மீனாம்பிகைக்கு இன்னும் உண்மை சொல்லப்படாததால் கீதா அவருடன் இருக்க மற்றவர்கள் மாடிக்குச் சென்றனர்.

அழகேசனும் தாத்தாவும்தான் அவரிடம் கலந்துரையாடியது. அரசன் அதை உன்னிப்பாக
கவனிக்க மதி காதை அங்கும் கண்ணை அரசனின் மேலும் வைத்திருந்தாள். கூடவே
சுதர்சன் சொல்லி அன்று காவலர் வீட்டிற்கு வந்து புகார்ப் பதிவு செய்ததை வத்தியும்
வைத்தாள்.


எல்லாம் பொறுமையாக கேட்டவர், “அப்போ சக்திவேல் இறந்ததுக்கும் இவருக்கும்
தொடர்பு கண்டிப்பா இருக்கும் இல்லையா?” என்று கேள்வியாக நிறுத்த,


“இருக்கும்ன்னு உறுதியா தெரியுது விக்னேஷ். ஆனா நிருபிக்க வழியில்ல. இப்போ நடந்த கொலையே கண்டுபிடிக்க வருசக்கணக்கு ஆகுது. இதுல இருபத்தஞ்சு வருசத்துக்கு
முன்னாடி நடந்தத எப்படி கண்டுபிடிக்க? இப்போதைக்கு அந்த பாக்டரியை மூடி இடத்தை
திரும்ப வாங்குனா போதும்” என்றார் அழகேசன்.


“நீ புரியாம பேசுற அழகு. உனக்கு தெரியுமா அவன் எவ்ளோ பெரிய ஆளுன்னு. இப்போ இந்தியா முழுக்க தரமான காகித உற்பத்தி பண்ணுற நம்பர் ஒன் தொழிற்சாலை.
வெளிநாட்டுல கூட இந்த காகிதத்துக்கு மதிப்பு இருக்கும்போது இப்போ நாம போய் கம்பெனியா மூட சொன்னா அரசே இந்த கேசை இந்திய பொருளாதாரம் வளரணும்னு மூடி மறைக்கப் பார்க்கும்.”


“அது எப்படி அங்கிள். எங்க இடத்துல எங்க பெர்மிஷன் இல்லாம இத்தனை வருஷம்
பாக்டரி ஓடுனதே தப்பு. அப்போ நியாயப்படி இதை மூடித்தானே ஆகணும்” என்றாள்.


“நியாயம்?” என்று ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தவர். “ஒரு கண்துடைப்புக்கு வேணும்னா மூடலாம். அப்புறம் எப்படியாவது திரும்ப திறப்பாங்க. ஒரு கேஸ் போட்டா இப்படித்தான்.
ரெண்டு மூணு குற்றத்தில் பதிவு செய்யும் போது இடம் உங்க கைக்கு வர வாய்ப்பிருக்கு”
என்றார்.


“ரெண்டு மூணா?” என்று யோசித்த மதி. “அங்கிள் ஊருல இருக்குற மரம் எல்லாத்தையும்
இத்தனை வருசத்துல வெட்டிருக்காங்க. தாத்தா சொன்னாரு. மரம் வெட்டுறது இப்போ குற்றம் தானே? காகித தொழிற்சாலைன்னா மரம் வெட்டலாமோ?” என்று பொங்கினாள்.


“சரி அவங்க தான் மரம் வெட்டுனாங்க. ஆதாரம் காமி” என்றார் விக்னேஷ்வரன்.

மதி முழிக்க, “ஆதாரம்தான் இங்க முக்கியம். அவங்களால கண்டிப்பா தப்புப் பண்ணாம
இருக்க முடியாது. அதைக் கண்டுபிடிச்சா அதுவே நமக்கு வெற்றியைக் குடுக்கும்.
இல்லைன்னா வருசக்கணக்கா இழுத்துரும். நான் ரிடையர் ஆகுறதுக்கு முன்னாடி இதை முடிக்க நினைக்குறேன். அதுக்கு அப்புறம் என்ன ஆகும்ன்னு சொல்ல முடியாது. இப்போவே லேட்ன்னு தான் சொல்லுவேன். ஏன்னா அவன் அழிச்சது நம்ம ஊரை அண்ட் ஏமாத்துனது ஒரு நல்ல மனுசனை.” என்றார் சக்திவேலை மனதில் வைத்து.


சிறுவயதில் இங்கே இருந்ததால் அவருக்கு ஜமின்தார் குடும்பத்தின் மேல் என்றும் மதிப்பு உண்டு. இப்போது நண்பன் சொல்லியே இங்கு நடந்ததை அறிந்தவர்க்கு எப்போதும் போல் மனம் கோபம் கொள்ள திட்டம் போட்டு ஏமாற்றிய சுதர்சனை திட்டம் போட்டே வீழ்த்த
நினைத்தார்.


“ஆதாரம் தானே நான் முயற்சி பண்றேன். மரம் வெட்டுறது இங்க குற்றம். ஆனா எங்க இடத்துல அது பெரும் பாவம். வேண்டாத கிளைகளை வெட்டி நாங்க வாழ்வோமே தவிர அதை அழிச்ச பிறகு மனுசனுக்கு வேற என்ன வாழ்க்கை இருக்கப் போகுது?” என்று காட்டில் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணியவாறு தன்போக்கில் மனதில் இருப்பதைக் கொட்ட, “மாமா...” என்ற மதியின் அதட்டல் குரல் நிதர்சனத்திற்கு அழைத்து வந்தது.

மற்றவர்களுக்கு புரிந்தாலும் விக்னேஷ்வரன் புரியாமல் அரசனைக் காண, அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவருக்கு பதில் கூற வேண்டி மதி, “அது அங்கிள். சக்தி மாமா விபத்துல இவங்க பிழைத்தது இப்போதான் தெரிஞ்சது. அதுவரை காட்டுல வாழ்ந்தாங்க அதான் இப்படி” என்று பதிலளித்தாள்.

“ஓகே..” என்று அதை உள்வாங்கியவர். “நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்று அரசனிடம் வினவ,

“நீங்க பேசுற அந்த இடத்துக்கு வாரம் வாரம் வியாழக்கிழமை காலையில மரங்களோட
வாசனை வருது. அதுவும் மலைவேம்பு, சவுக்கு, தைலமரம்தான். இத்தனை நாளா ஏன் ஏன்னு புரியாம இருந்தது. இப்போ புரியுது. அதுவும் இதெல்லாம் நம்ம ஊரைச் சுற்றி
இல்லாத மரங்கள் தான்.


ரொம்ப உன்னிப்பா கவனிச்சதுல புதன்கிழமை மாலை வர ஒன்னும் நடக்கல. ஆனா வியாழக்கிழமை காலை வாசனை வருது. காட்டுல வாழ்ந்த எனக்கு அதோட வாசனை வைத்தே சொல்ல முடியும் என்ன மரம்னும் எப்போ வெட்டினது என்றும். அது பச்சை
மரங்களின் வாசனை. அதாவது வெட்டி ஒருநாள் கூட ஆகிருக்காது” என்று கூற


விக்னேஷ் அதை ஆமோதித்து, “அப்போ புதன் நைட் தான் வந்திருக்கும். பொதுவா கடத்தல்
நைட் டைம் தான் அதிகமா நடக்கும்” என்றார்.


“இன்னைக்கு புதன்கிழமை. நான் உள்ளே போய்ப் பார்க்கலாம் என்று இருக்கேன். என்ன சொல்றீங்க?” என்று பட்டென்று அரசன் கேட்க விக்னேஷ்வரனைத் தவிர அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மழை வரும்...

முகில் மறைக்கும் நிலவாய் இருப்பவள்

உன் மனம் நிறைக்கும் நீராய் இறங்கிட

மழையாக நான் வரவா?
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Me firstuuu chellam
Interesting ஆ போகும் போது இப்படிப் பட்டுனு முடிச்சுட்டியே காவ்யா. அரசன் போய் பார்த்தானான்னு சீக்கிரம் நாங்க தெரிஞ்சுக்க கொஞ்சம் சீக்கிரமா அடுத்த பதிவு தந்திடும்மா.
இதுக ரெண்டும் நல்லா கண்ணாமூச்சி ஆடுதுங்கடா...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top