• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Missing episodes-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
ஒரு சின்னக் கப் காபியை இதைவிட நிதானமாக யாராலும் குடிக்க முடியாது. இவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி ஆற அமர காஃபியை குடிக்க, இவளுக்குத் தான், இது என்ன இன்ப அவஸ்தை என்றிருந்தது... அனு அனுவாக அவளையும் ரசித்துப் பருகினான்.

அவன் பார்வை அவன் செயல் எல்லாம் இவள் கனவுலகில் நினைத்தது படியிருந்தாலும். பதில் பார்வை பார்க்கும் தைரியம் எல்லாம் வரவில்லை, ஏனோ ஒரு தயக்கம்!

ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் தன் பார்வை ஜாலத்தை முடித்தவன்,

“யோசிச்சு நல்ல முடிவைச் சீக்கிரம் சொல்லு, ஆபிஸ்’ல பார்க்கலாம். கிளம்புறேன், பை” என்று எழவும்.

அவனை வழியனுப்ப வாசல்வரை வந்து கதவைப் பிடித்த படியிருந்தாள் சித்ரா.

“சீக்கிரம் ஆபிஸ் வரப் பாரு, நீ இல்லாம எனக்கு அங்க நல்லாவே இல்லை”

மிக நெருங்கி நின்று அவள் கண்களை நேராகப் பார்த்து அவன் சொன்ன விதத்தில் அவளை மீறிக் கொண்டு உதட்டில் புன்னுறுவல் பூத்தது சித்ராவுக்கு. அவளையும் அவள் செய்கைகளையும் கண்ணில் நிறைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

வீட்டிலிருந்து அவன் வெளியேரவும், ஈஷ்வரி உள்ளே வரவும் சரியாய் இருந்தது.

‘இவன் அவன் ல’ என்றபடி போனவனையும் சித்ராவையும் மாறி மாறிப் பார்க்க, அவளோ இவள் கண்ணைச் சந்திக்காமல் வீட்டினுள் பால்கனி பக்கம் ஓடினாள். திரைசீலைக்கு நடுவில் கொஞ்சம் விலக்கி வெளியே அமுதன் தெரிகிறானா என்று பார்க்க, அவன் யாரிடமோ போனில் சிரித்து பேசியபடி காரில் ஏறுவது தெரிந்தது. இவள் செய்கையைப் பார்த்து ஈஷ்வரியும் அது அமுதனே தான் என்று உறுதிபடுத்திக் கொண்டாள்.

அவன் கார் மறைந்ததும் உள்ளே திரும்பிய சித்ராவிடம்,

“என்னடி நடக்குது இங்க? நான் ஆபிஸ் போயிட்டேன்னு நீ உன் இஷடத்துக்குக் இருக்குறதா?” பொரியத் தொடங்கியவளை கண்டுக்காமல் சித்ரா அவர்கள் இருவருக்கும் உணவு எடுத்து வைக்க ஆரம்பித்தாள். ஈஷ்வரி அவளை முறைத்து கொண்டிருக்க, அவளோ

“இன்னிக்கி உனக்குப் பிடிச்ச ஐடெம்ஸ் எல்லாம் பண்ணியிருக்கேன், சாப்பிடு வா” என்று பறிமாறியவளை நாலு கேள்வி கேட்க வேண்டும் என்றிருந்த வேகத்தைச் சற்று நேரம் ஒதுக்கினாள் ஈஷ்வரி, பசி வயிற்றை கிள்ளியதால்! உணவு முடித்ததும். பாத்திரம் கழுவ போகிறேன் என்று ஆட்டம் காட்டிய சித்ராவை பிடித்திழுத்து அமர வைத்து,

“அது நம்ம காலேஜ் சீனியர் அமுதன் தானே? அவனை எப்போ எங்க பார்த்த? உன் காதலை ஏத்துகிட்டானா? நம்ம வீட்டுக்கு வர அளவுக்கு வளர்ந்திடுச்சா ? ஏன் என் கிட்ட சொல்லலை “ என்று தன் சந்தேகங்களை எல்லாம் ஒன்று திரட்டிக் கேட்க,

தன் கைவிரல்களை ஆராய்ந்த படியிருந்தாள் சித்ரா.
சொல்லேன் என்று தோழி உலுக்கியதும்,

“எங்க ஆபிஸ்ல ஹிட்லர்னு சொல்லுவேன்ல அவன், அவன் இவன் தான்” பட்டென்று சொல்லி
விட்டாள்.

ஈஷ்வரிக்கு எங்கேயிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ, குஷனை எடுத்து மொத்தி விட்டாள் தன் தோழியை!

“பாவி, பாதகி! எவ்ளோ வருஷ நட்பு நமக்குள்ள, இப்படி மறைச்சிட்டியே! ஒரு நாளாவது அவன் தான் இவன்னு சொன்னியா? நந்தன், ஹிட்லர்ன்னு ஓட்டிகிட்டு இருந்தே?”

அவ்வளவு அடியையும் வாங்கி கொண்டு, பல்லைக் காட்டி சிரித்தாள் சித்ரா,

“எதுக்கு உன் கிட்ட சொல்லி நீ என்னை கூடக் கொஞ்சம் பாடா படுத்தவா? நானே அவனை மறக்கணும்னு முயற்சி பண்ணிகிட்டிருந்தேன். “

“ம்ம், மறக்குற லட்சணமா டி இது? அதான் இவ்வளவு வருஷமும் இந்த ஒரே கம்பெனில குப்பை கொட்டினியா நீ? எனக்கு அப்பவே டவுட் தான், ஆனா என் கிட்ட எதையும் மறைக்க மாட்டியேன்னு உன்னை நம்பிட்டேன்” ஈஷ்வரி சரியான பாயிண்டை பிடிக்க.

“ஆங், அது வந்து ஹேமா இருக்கால, அவளை மிஸ் பண்ண வேணாம்னு” எதை எதையோ கூற நினைத்தவளை ஈஷ்வரி கையமர்த்தி நிறுத்தச் சொல்ல, அத்துடன் வாயை மூடிக்கொண்டாள். முழுதாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? தன் உயிர் தோழி இவ்வளவு பெரிய விஷயத்தைத் தன்னிடம் மறைத்து விட்டாளே என்பதை ஈஷ்வரியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

“போட்டோ கேட்டப்ப எல்லாம் சாக்கு சொன்னா, கண்ல காட்டினதே இல்லை. சமீபமா அவனைத் திட்றதும் இல்லை. ச்சே இவளை நம்பியிருக்க கூடாது...” தனக்குள் புலம்பியபடி

கிளம்பி வெளியே சென்றுவிட்டாள் ஈஷ்வரி. எதுவும் சொல்லாமல்! அவ்வளவு கோபம் சித்ராவிடம். அவளுக்கும் கஷ்டமாய் தானே இருக்கும்? மறைக்க வேண்டிய ஆள் இல்லையே ஈஷ்வரி?

தோழியின் செய்கையில் சித்ராவுக்கு தப்பு செய்துவிட்டோமோ என்ற பயம், இவளை எப்படி சமாதானபடுத்துவது? சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் என்ன இது?!

அடுத்த நாளிலிருந்து சித்ராவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை ஈஷ்வரி, அவள் சமைத்ததை சாப்பிடவும் இல்லை. சித்ராவுக்கு குற்ற உணர்வு மேலோங்கிவிட்டது.

இது எல்லாவற்றிற்கும் மாற்றமாய் ஆபிஸில் தன்னை ஏதோ ராணி போல் உணர்ந்தாள், எல்லாம் இந்த அமுதனால். அவள் எங்கே சென்றாலும் அவன் பார்வை இவளைத் தொடர்ந்தது!

அவசியமே இல்லாமல் இவளைத் தன்னறக்கு அழைத்தான், தனிமையிலாவது தன் சம்மதத்தை வாய் திறந்து தன்னிடம் சொல்வாள் என்று எதிர்ப்பார்த்து! இவளா அமுக்குனியாக மாறிவிட்டிருந்தாள், இன்னும் தன் சம்மதத்தை அவனிடம் முறையாகச் சொல்லவில்லை. வெறும் பார்வை பறிமாற்றங்களில் ஓட்டிக்கொண்டிருந்தாள். சித்ரா மனதில் அமுதனின் தவிப்பெல்லாம் எண்ணி நகைத்தாள். என்னைத் தவிக்கவிட்டியா டா? இப்ப அனுபவி!

இதற்கிடையில் மனோஜ் எப்போதும் போல் சான்ஸ் ஏற்படுத்தி வழிந்து கொண்டிருந்தான் சித்ராவிடம். ஆபிஸில் எவ்வளவு பேரழகிகள் இருக்க, இவனுக்கு ஏன் தன்னிடம் இப்படியொரு ஆர்வம் என்று உள்ளுக்குள் எரிச்சலாய் இருந்தாலும், அமுதனை வெறுப்பேற்ற அவனிடம் சிரித்து பேசினாள். அமுதன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை பார்ப்பதில் ஒரு ஆனந்தம். யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு வருமடா, என்று தேவை இல்லாமல் அவனை வெறுப்பேத்த. எவ்வளவு நாள் பொறுத்து பார்த்தவன் தன் அன்னையிடம் சம்பிரதாயங்களை ஆரம்பிக்கும் படி சொல்லிவிட்டான்.

அந்த வாரம் தன் விவசாய பணிக்காகச் செங்கல்பட்டு வரை பயணித்துக் கொண்டிருந்தவனின் மனமெல்லாம் ஏனோ திடீரென்று தன் பாட்டியின் நினைவு.

அமுதன் தாய் வழி பாட்டி வசித்தது முக்கூடல் என்னும் கிராமத்தில். நெல்லையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அந்தக் கிராமம். எங்கு நோக்கினாலும் பச்சை பசேல் என்றிருக்கும். மதுரையில் இருப்பவன் பள்ளி விடுமுறையின் முக்கால்வாசி சமயம் பாட்டி வீட்டுக்கு வந்துவிடுவான்.

கட்டு செட்டாகக் குடும்பம் நடத்திய அவர்கள் பிள்ளைகள் விஷயத்திலும் அவ்வாறே. ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன். இளையவள் ராதிகா, நந்தனின் தாய். ராதிகாவை அவர்கள் நிலைக்கு அதிக நகை எல்லாம் போடாமல், விரலுக்கேத்த வீக்கம் என்பது போல் ஒரு எளிமையான குடும்பத்தில் உள்ள மாப்பிள்ளைக்குக் கட்டி கொடுத்தனர்.

“மாப்பிள்ளை பேரு நந்தகுமார், மதுரையில் சின்ன அளவுல பலசரக்கு கடை வச்சியிருக்காரு. நல்ல விதமா சொல்றாங்க, ராதிகாவுக்கு பார்ப்போமா?” என்று யாரோ ஆரம்பித்து வைத்த பேச்சுவார்த்தை சுபமாக முடிந்து ராதிகா திருமணமாகி மதுரையில் குடிபெயர்ந்தாள்.

அன்பான கணவன், இரண்டு மகன்கள் என்று அவள் வாழ்கை நல்ல ஒரு நிலையில் இருக்க, அமுதனின் தாத்தனும் பாட்டியும் உள்ளூரில் தங்கள் வயலுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

பள்ளி விடுமுறைகளின்போது மகள் தன் பிள்ளைகளுடன் அங்கு வர, அந்த வயதான் தம்பதியினருக்கு அதுவே மிகப் பெரிய கொண்டாட்டம்.

தாத்தா பாட்டியுடன் வயலில் வேலை செய்வதில் அலாதி பிரியம் அமுதனுக்கு.
கொத்துவது, பாத்தி பிடிப்பது என்பது போன்று சின்ன சின்ன வேலைகளைப் பழகிக்கொண்டான்.

அமுதன் பள்ளி விடுமுறை முடியும் வரை அவர்களுடன் இருப்பான். வயலில், வாய்காலில், ஆற்றில் என்று நேரம் இனிமையாய் போகும்.

பச்சை பசேல் என்று நெல் நாத்து விளைந்திருக்க, ஒரு வெல்வெட் போர்வை போர்த்தியது போலிருக்கும்.

அதில் வரும் வாசமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது...
எத்தனை பாடு அதிலிருந்து அரிசியை உருவாக்க.

இப்படி பாடுபட்டு உருவாக்கும் அரிசி எவ்வளவு சாதாரணமாய் வீணாக்கப் படுகிறது!

பின்னாளில் அமுதனுக்கு இயற்கையின் மீதும் விவசாயத்தின் மீதும் பற்றுதல் வந்து அவனை மாற்றி விட்டதற்கு காரணம் இந்த அனுபவமாகக் கூட இருக்கலாம்.

பருவ வயதில் படிப்பு சுமையின் காரணமாக அங்குச் செல்ல முடியவில்லை அமுதனால். அவன் கல்லூரி சேர்ந்த பிறகும் அந்த ஊருக்கு அவன் வரத்து குறைந்தது. அவன் மறுபடி வந்தது தன் தாத்தா தவறிவிட்ட சமயம் தான். தாத்தா இல்லாத அதிர்ச்சியில் பாட்டியும் சில நாட்களிலேயே அவர் வழி சென்றார்.

அவர்களின் பிரிவு அமுதனை மிகவும் பாதித்தது!

அவர்களின் ஏனைய சொத்துக்களை அமுதனின் மாமாவுக்குக் கொடுத்திருந்தவர்கள், அவர்கள் பாடுபட்டு உருவாக்கிய வயலை மட்டும் அமுதனின் பெயரில் எழுதிவிட்டிருந்தனர். முக்கூடல் கிராமத்தில், பிரதான வாய்க்காலை ஒட்டியே இரண்டு ஏக்கர் வயல் அவனுக்கென்று விதிக்கப்பட்டது! தற்சமயம் தன் மாமனின் பராமரிப்பில் விட்டிருந்தான்.

வயலை பற்றிச் சிந்தித்து முடித்ததும், சித்ராவை பற்றிச் சிந்தனை திரும்பியது.

ஒரு பதில் கேட்டால் சொல்ல என்ன ஆட்டம் காட்டுகிறாள்!

அவன் வீட்டில் சொல்ல ஏற்பாடானது பெண் பார்க்கும் படலம். இது எதுவும் அறியாமல். எப்போதும் போல் அவனைக் குழப்பிவிட வழி தேடிய சித்ராவுக்கு அவளே குழம்பும்படி ஆனது. வேலையில் மும்முறமாய் இருந்தவளுக்கு போன் செய்த அவள் பெற்றோர்,

“ஒரு நல்ல சம்மந்தம் அமைஞ்சியிருக்கு, நம்ம ஊர் காரங்க தான், இந்த வாரம் உன்னைப் பார்க்க வராங்க. நீ வெள்ளிகிழமை கிளம்பி வந்திடு, என்ன! திங்கள் லீவ் சொல்லிடு” சொன்ன நர்மதாவிடம் இனி எப்படி தான் அமுதனை விரும்புவதாகச் சொல்ல? அவன் வேறு கேட்டிருக்கிறானே!

“அம்மா, நான் ஒண்ணு சொல்லணும் “ என்று ஆரம்பிக்க

“எதுவாயிருந்தாலும், அவங்களை பார்த்ததுக்கு அப்புறம் சொல்லு. அப்பா வேற நான் தான் உனக்கு ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு திட்றாங்க என்னை” சொல்லி இவள் வாயை அடைத்தாள்.

ஐய்யோ ஹிட்லர் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. தேவையான விஷயத்தை விட்டுக் கண்டதையும் பேசி நேரத்தைக் கடத்தியாயிற்று. எப்படி அவனிடம் சொல்ல? எப்படி என்னவென்று லீவ் கேட்பது?

ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டாள், திங்கள் தான் லீவ் என்று! பதிலில்லை! நல்லதா போச்சு என்று நினைக்கையில், இண்டர்காம் அடித்தது. அவனாக இருக்க கூடாது என்றெண்ணி எடுக்க, அது அவனே தான்.

“கம் டு மை காபின்” ஒற்றை வரியில் வைத்துவிட்டான்.

அங்கே போய் நிற்கையில்

“செவ்வாய், கிளையண்ட் மீட்டிங் இருக்கு! திங்கள் லீவ் போட்டா எப்படி?” பழைய மாதிரியே அவளிடம் எரிந்து விழுந்தான்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போல! இவளும்

“அமுதன்... சார், ஊர்ல இருந்து வரச் சொல்லியிருக்காங்க, கொஞ்சம் அவசரம், அதான்...” என்று இழுத்தாள்...

“நோ சில்லி எக்ஸ்யூஸ். திங்கள் இங்க ஆபிஸில் இருக்கணும், அவ்ளோதான். யு கான் கோ நவ்” பதில் சொல்லாததற்கும் சேர்த்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டான்.

அவன் அதட்டியதில் விளைந்த ஆத்திரத்தில், இவன் என்ன பெரிய அந்நியன் விக்ரமா? மாறி மாறி இருக்கிறான்? வெறியாய் வந்தது சித்ராவுக்கு. கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு கத்துறியா, உன்னை யாரு டா கட்டிப்பா? அவள் திட்டிக் கொண்டிருக்கையில் அமுதனுக்கு அவன் அன்னையிடமிருந்து போன்

“என்னம்மா” எரிச்சலாகக் கேட்டவனை

“என்ன பா, கோபமாயிருக்கியா? சரி நான் வச்சிடுறேன்... பொண்ணு வீட்டில பேசினதை சொல்லத் தான் கூப்பிட்டேன்!” ராதிகா சொன்னதும்
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
பல்ப் எரிந்தது அவன் முகத்தில். உடனேயே,

“என்னென்னு சொல்லுங்க மா” என்று ஆவலாய் கேட்ட மகனை நினைத்துச் சிரித்தபடி,

“ம்ம், இப்ப கோபம் போயிருக்குமே? வர ஞாயிற்றுகிழமை வரச் சொல்லியிருக்காங்க, பொண்ணை பார்க்க. யாரு டா அந்தப் பொண்ணு? எவ்ளோ நாளா கேட்குறேன். அவங்க உங்களுக்கு யார் மூலம் ஜாதகம் கிடைச்சதுன்னு கேட்டதுக்கு, நீ சொன்ன கல்யாண சங்கத்தோட பெயரைச் சொல்லிட்டேன். பொய் சொல்லிப் பழக்கம் இல்லை பா, இப்பவாவது என்கிட்ட உண்மையைச் சொல்லு”

சிறிது தயங்கிய பின் “நான் சொல்லியிருக்கேன்ல மா. என் காலேஜ் ஜூனியர், அவதான்” ஒருவாராகச் சொன்னவனிடம்,

“பார்த்தியா, அம்மா சொன்ன மாதிரி உன் எண்ணம்போல் நடந்திட்டது. கடைசியில் நீயா பொண்ணு பார்த்துகிட்ட, ஆதியாவது எனக்கு வாய்ப்பு தருவானா தெரியலை”

“ இன்னும் என் கிட்ட போக்கு காட்டிட்டு இருக்கா, அவளுக்கு நிஜமாவே இஷ்டமான்னு தெரியலை. அதுக்கு தான் உங்களையே பேசச் சொன்னேன். ஆனா யார் கிட்டையும் எனக்குத் தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லாதீங்க” மேலும் பலதை பேசிவிட்டு வைத்தான்.

பெண் பார்க்கும் படலத்திற்காகத் தன் ஊர் வந்து சேர்ந்தவளை நர்மதாவும் சக்தியும் நிம்மதியாய் விடவில்லை. அவளை மேலும் அழகாக மாற்றுவதாய் நினைத்துக் கொண்டு படுத்தியெடுத்தனர்...

சித்ராவை விட்டால் ஓடிவிடுவாள் ஆனால் தன் அன்னையை மீறும் தைரியம் அவளுக்கில்லை. இஷ்டமில்லாத இந்தச் சடங்கில் போய் நிற்க வேண்டுமே என்ற எரிச்சல் முகத்தில் அப்பட்டமாய தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப, ஒரு பட்டுப் புடவையில் எளிமையான நகைகளுடன் எழிழோவியமாய் தான் இருந்ததை அவள் உணரவில்லை! எரிச்சலாக இருந்தாள். நர்மதா மற்ற வேலை என்று ஒதுங்க, சக்தியிடம் தப்பிக்க முடியவில்லை சித்ராவால்.
------------
சித்ரா வேலையில் சேர்ந்த நாள் முதல் ஹேமாவை தெரியும். இரண்டு பேரும் ஒரே சமையத்தில் டிரெயினீயாகச் சேர்ந்திருந்தனர்.

அமுதனை அங்கே தான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்தாள், அவளின் நேர்காணலின்போது. இரண்டு பேருக்கும் முட்டி மோதும் என்பது ஆண்டவன் கட்டளை போலும்!

அன்று அலுவலகத்தில் அமுதனின் இடது கண் துடித்தபடியிருந்தது... ராத்திரி நீண்ட நேரம் தன் பிராஜக்ட்டில் போராடியது அதன் பலன்! எத்தனை முறை தன்னை அதிக வேலை பலுவிலிருந்து தள்ளி வைக்க நினைத்தாலும், முடிவதில்லை. கண்ணைக் கசக்கியபடி இருந்தவனிடத்தில் அவன் நண்பன் கெளரி சங்கர்

“என்னது? கண்ணு துடிக்கிதா? அப்போ, இன்னிக்கி ஏதோ அதிர்ஷ்டம் கிடைக்க போகுது “ என்றான் சிரித்தபடி.

மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான் அமுதன்...

அதிர்ஷ்டம் என்பது அயராத உழைப்பில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பும் அமுதன் நண்பன் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கெளரி சங்கர், அமுதனுக்கு நெருக்கமானவன். ஒரே டீமில் வேலை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து தொடரும் நட்பு அவர்களுடையது. நந்தனுக்கு ஆபிஸில் அரசியல், டெக்னாலஜி, குடும்பம் எதை பற்றிப் பேசுவதானாலும் அவன் நாடுவது கெளரியை தான்.

அன்று மேனேஜர் உடன் மீட்டிங் என்று அழைத்திருந்தார் அமுதனை. கெளரியிடம் விடைபெற்று அங்குச் சென்று திரும்பியவனுக்கு தான் நினைத்தது இவ்வளவு விரைவில் நடந்ததே என்று நம்ப தான் முடியவில்லை. கடின உழைப்பின் பலன் இது. முகம் எல்லாம் புன்னகை சூழ வந்தவனுக்கு தன் நண்பனின் வாயில் சக்கரை தான் போட வேண்டும் என்று தோன்ற, உடனே கெளரிக்கு மெசேஜ் அனுப்பினான், தனக்கு அறிவிக்கப்பட்ட பிரமோஷனை பற்றி.

அவனும் பதிலுக்கு, “கங்கிராட்ஸ் மச்சான், கேட்டீனுக்கு வரவும்” என்று அனுப்பியிருக்க அங்குச் செல்ல எத்தனித்தவனை மோதியது எதிரே வந்த ஒரு பெண்... கீழே விழப்போனவன் நிதானித்து நிமிரும் முன் தன்னை இடித்த ஆளை அங்குக் காணவுமில்லை. யார் என்று பார்க்க முடியவில்லை. இவர்களாக வந்து ஒரு ஆணை இடித்தால் மட்டும் தப்பில்லையா?! மொபைலில் தட்டடித்தபடி இவனும் தான் கவனிக்காமல் குனிந்தபடி வந்தான்! அதை வசதியாக மறந்தாயிற்று. சுற்றி முற்றி தேடி பார்க்க, யாரும் கண்ணில் படவில்லை...!

அத்தோடு அவ்விஷயத்தை மறந்தும் போனான்.

ஆனால் அங்கு நடந்தவற்றை மறக்காத ஒரே ஜீவன் சித்ரா! ஊருக்குப் போகும் வழியெல்லாம் அவன் நினைப்பு மட்டுமே. வேலை கிடைத்த சந்தோஷத்தை மிஞ்சியது அவனைப் பார்த்ததால் வந்த சந்தோஷம்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top