• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mr.Perfect-Mrs.Faulty-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
மூன்று மாதங்களுக்கு பிறகு


சூட்கேஸில் தன் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்த அத்தையை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நியதி.மருமகளின் மனம் புரிந்தாலும் புரியாது போல நடித்தார் லலிதா.


"அத்த! நீங்க இப்பவே போய்த்தான் ஆகனுமா?"என்று அன்றைய நாளில் நூறாவது முறையாகக் கேட்டாள்.அத்தனைத் தடவையும் அவளுக்கு பொறுமையாக விளக்கியவர் இப்போதும்


"என்னடா குட்டிமா!எத்தன வாட்டி சொல்லிட்டேன்...என் சித்தப்பா பேத்தி கல்யாணம் இல்லையா...என் தங்கை ஒரு வாரம் முன்னாடியே வந்திடனும்னு சொல்லியிருந்தா...நான் தான் அவ்ளோ நாள் முடியாது...வேணும்ன்னா நாலு நாள் முன்னாடியே வந்து அப்புறம் இரண்டு நாள் இருந்திட்டு வரேன்னு சொல்லியிருந்தேன்...என்ன நல்ல காலமோ உங்க மாமாவும் கூட வரேன்னு வராரு...ஒரு வாரம் தானே இந்த அத்தக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா?"


"புரியுது அத்த! இருந்தாலும்...."


அவளுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்றருந்த லலிதா சத்தம் வராமல் சிரித்தார்.முன் தினம் இரவு உணவை மகனுக்கு பறிமாறிக் கொண்டிருந்தவர்


"சமர்த்!நாங்க நாளைக்கு பத்து மணிக்கெல்லாம் கெளம்பிடிவோம்...நியதிய ஜாக்கிரதையா பாத்துக்கோ...சும்மா அந்த குழந்தய ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காதே...ஆபிஸ்லேந்து சீக்கிரம் வந்துடு.... அவளுக்கு தனியா இருந்து பழக்கமில்ல...நாங்க கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள்ல வந்திட்றோம்...சரியா?"


"இரண்டு நாளா?! கல்யாணம் முடிஞ்ச அப்புறமும் எதுக்கு இரண்டு நாளு?"


"நல்லா இருக்கே கல்யாணம் முடிஞ்ச கையோட புறப்பட முடியுமா!பொண்ணக் கொண்டு போயி விட்டு அங்க இருக்கற சடங்கெல்லாம் முடிஞ்சு அப்புறம் தான் திரும்பி வர முடியும்!"


"நல்ல வேளை பொண்ணுக்கு குழந்தை பிறந்த அப்புறம் தான் வருவேன்னு சொல்லலையே...அது வரைக்கும் நான் பொழச்சேன்"என்று அவர் கேட்கும்படியாகவே முணுமுணுத்தான்.


"என்னடா!முணுமுணுக்கற?


"ஒண்ணும் இல்ல மகராஜியா போயிட்டு வாங்க..."


"நியதிய..."


"நா ஒண்ணும் கடிச்சு முழிங்கிட மாட்டேன் உங்க மருமகளை"


அவன் கைகழுவிப் போனப் பின் தனக்குள்ளையே சிரித்துக் கொண்டார்.திருமணமாகி இந்த மூன்று மாதங்களில் இரண்டொரு முறை இருவரும் மோதிக் கொண்டதை விட்டால் வேறு பெரிதாக எதுவும் இல்லை.ஏச்சுமில்லை பேச்சுமில்லை என்று இருவரும் மற்றொருவர் அங்கு இல்லை என்றது போல் நடந்துக் கொண்டனர்.இருவரையும் இப்படியே விட்டால் ஒட்டுதலே இல்லாமல் போய்விடுமே...என்ன செய்வது என அவர் கவலைப்பட்ட போதுதான் இந்த திருமணம் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.கிடைத்த வாய்ப்பை கபக்கென பற்றிக் கொண்டவர் கணவரை எப்படியோ சரிக் கட்டி மகள் வித்யாவையும் சேர்த்து மூன்று பேரும் கிளம்பத் திட்டமிட்டுவிட்டார்.ப்ளஸ் டூ முடித்திருந்த ஜெயவாணி கோவையிலிருந்த என்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.அதிலும் நியதிக்கு பத்து நாட்கள் விடுமுறையும் இருந்ததால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ஆனது அவருக்கு.


இதற்காக சமர்த் வருவது வேண்டாமென கேப் புக் செய்திருந்தார் தயாநிதி.சொன்னபடியே பத்து மணிக்கு கணவன் மனைவி மகள் என மூவரும் கிளம்பி விட்டனர்.கதவை பூட்டிக் கொண்டு வந்த நியதிக்கு அத்தனை பெரிய வீடு வெறுமையாகக் காட்சி அளித்தது.


தன் ரூமிற்கு சென்றவள் சிறிது நேரம் கல்லூரி பாடங்களை படித்தாள்.பின்பு சிடி ப்ளேயரில் பாடலை ஒலிக்க விட்டவள் துப்பட்டாவை சைடில் கட்டிக் கொண்டு ஆடத் துவங்கினாள்.ஐந்து வயதிலிருந்தே பரதநாட்டியமும் வெஸ்டன் டான்ஸும் பயின்றிருந்தாள்.ஒரு மணி நேரம் சென்ற போது மூச்சு வாங்க நின்றிருந்தவள் ப்ரெஷப் ஆகி வந்து உணவுண்டாள்.அதன்பின் சிறிது ஓய்வெடுத்தவள் திடுக்கிட்டு கண் விழித்த போது கடிகாரம் மணி மூன்று என்றது
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஐயோ இவ்ளோ நேரமா தூங்கிட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல யூகே வந்திடுவானே"என்றவாறே முகம் கழுவி வேறு உடை உடுத்தியவள் ஏதாவது மாலை சிற்றுண்டி செய்ய சமையலறைக்குச் சென்றாள்.என்ன செய்வது எனக் குழம்பியவள் டேப்பில் யூடியூப்பில் தேடினாள்.அதிலிருந்த ஒரு சிற்றுண்டி சற்று சுலபமாகத் தோன்றவே அதை எதிரே வைத்துக் கொண்டு செய்யத் தொடங்கினாள்.


இன்னும் சிறிது வேலை இருந்த போதும் தாயின் வார்த்தைகளை எண்ணி வீட்டிற்கு சீக்கிரமாகவே புறப்பட்டு விட்டான் சமர்த்.ட்ராபிக்கைத் தாண்டி அவன் வீடு வந்த போது ஐந்து மணியாகி இருந்தது.தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்துக் கொண்டு அவன் உள்ளே நுழைந்த போது யாரோடோ நியதி பேசும் குரல் கேட்டது.


'யாரோட பேசறா?'என்றெண்ணியவாறே குரல் வந்த சமையலறைக்கு வந்து பார்த்த போது யூடியூப்பில் செய்வதைப் பார்த்தவாறே அடுப்பில் வைத்துக் கிளறிக் கொண்டிருந்தாள் நியதி.சிற்றுண்டியின் மணம் கம்மென்று அவனின் முகத்தில் மோதி பசியைத் தூண்டியது.தான் வந்தது கூட தெரியாமல் இருக்கிறாளே என்றெண்ணி சிறு புன்னகை கூட வந்தது அவனுக்கு.தான் வந்ததை அறிவிக்க "ம்ஊம்...."என்று லேசாக இருமினான்.


அவனின் சிறு சத்தத்தில் திடுக்கிட்டு கையிலிருந்த கரண்டியை நழுவ விட்டவள் அது விழும் முன் பிடித்து நிமிர்ந்து சமையலறை வாயிலைப் பார்த்தாள்.ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்தவன் ஏதும் பேசாமல் அங்கிருந்து அகன்று விட்டான்.


பதினைந்து நிமிடங்களில் அவன் கீழே இறங்கி வந்த போது டைனிங் டேபிளில் நியதி செய்த சிற்றுண்டி அவனுக்காகக் காத்திருந்தது.சேரில் அமர்ந்து ஸ்பூனால் சிறிது அளவு எடுத்து வாயில் போட்டவன் ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி மில்லிமீட்டர் புன்னகையை சிந்தினான்.


சமையலறையிலிருந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த நியதி அவனின் ரியாக்ஷனில் எட்டாவது அதிசயத்தை நேரில் கண்டவள் போல் ஆனாள்.
'அட இந்த யூகேக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா...இல்ல நான்தான் கனவு காணுறேனா'என்று தன் கையைக் கிள்ளிப் பார்த்தவள் வலிக்கவும் இது கனவல்ல நிஜம்தான் என்று தெளிந்தாள்.


இரவு உணவுக்கு பின் தன் ரூமில் பாடங்களை படித்துக் கொண்டிருந்த நியதி எப்போது தூங்கினாள் என்று அறியாள்.டீவியை சிறிது நேரம் உருட்டிய சமர்த் தூக்கம் வருவது போல் ஆகவும் எழுந்து சென்றான்.மாடியில் தன் அறைக்கு செல்ல தாண்டு முன் நியதியின் அறையில் விளக்கெறிவதைக் கண்டு உள்ளே சென்றவன் அங்கே டேபிளில் தலை வைத்து தன்னை மறந்து தூங்கும் நியதியை ஓரிரு நிமிடம் பார்த்தவன் அவளருகில் வந்து அவள் தோளில் லேசாகத் தட்டினான்.ஆனால் கும்பகர்ணனின் தங்கையாகும் தகுந்தி வாய்ந்த நம் நியதி எழவேயில்லை.என்ன செய்வது என யோசித்தவன் ஆபத்துக்கு பாவமில்லை என எண்ணி தன் இரண்டு கைகளிலும் பூமாலையெனத் தூக்கி அவளின் மெத்தையில் படுக்க வைத்து போர்வையால் மூடினான்.அங்கே டேபிளில் அவள் விரித்து வைத்திருந்த புத்தகங்களை மூடி சரியாக அடுக்கினான்.பிரகாசமான விளக்கை அணைத்து இரவு விளக்கைப் போட்டவன் சத்தமில்லாமல் கதவை சாத்திக் கொண்டு சென்று விட்டான்.


காலை ஆறு மணிக்கு அலாரத்தின் ஒலியில் விழித்த நியதி சோம்பல் முறித்துக் கொண்டு சுற்றுப்புறம் பார்த்தவள்


'நா இங்க எப்பிடி வந்தேன்? ராத்திரி அங்க உட்கார்ந்திட்டு இல்ல படிச்சேன்...எழுந்து வந்து படுத்தது ஞாபகமேயில்லையே..'இது என்ன மர்மம் என யோசித்தவாறே ப்ரெஷாகி டிபன் செய்துக் கொண்டிருந்த போது அவளின் போன் ஒலித்தது.திரையில் வித்யாவின் எண்ணைப் பார்த்தவள் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.


"என்னடி யதி!உள் காயமா?வெளிக் காயமா?"


"என்னடி உளறல் இது?"


"ஆமா எல்லாரும் இருந்த போதே அப்படி சண்டை போடுவீங்க...இப்ப கேக்க யாருமில்ல...கம்பா?உருட்டுக் கட்டையா?"


"சண்டையெல்லாம் ஒண்ணும் இல்ல..."


"நெஜமா!....ம்.... அப்படின்னா அதுக்கு ஆப்போசிட்டா....ஒரே ரொமேண்ஸ்ஸுன்னு சொல்லு"


"ச்சீ...யாரு யூகேவா...எபிஸிடியே தெரியாதேடி..நீ என்னென்னா டாக்டர் பட்டம் கொடுக்கற"


"அதெல்லாம் இருக்கட்டும்...அது உங்க பாடு....நியதிம்மா எப்படிடா இருக்கே...சமர்த் ஆபிஸ் கிளம்பிட்டானா?"என்று அத்தையின் குரல் கேட்டதும் நாக்கை கடித்துக் கொண்டு தலையில் குட்டிக் கொண்டாள்.


'அடிபாவி விதி!அத்தைய வச்சிகிட்டா போன் செஞ்சே...நா வேற என்னென்னமோ பேசிட்டேன்'


"அஅத்த!நா நல்லா இருக்கேன்...அவர் இன்னும் கீழ வர்லேத்தே... நீங்க எப்படி இருக்கீங்க?மாமா நல்லா இருக்காறா?அங்க ரொம்ப வெய்யிலா?அங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"என்று தன் பேச்சை மறக்க வைக்க ஏதேதோ பேசினாள்.அவரும் அவளுக்கு தக்கவாறே பேசி போனை வைத்தார்.


மருமகளின் தடுமாற்றத்தை புரிந்துக் கொண்ட லலிதா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.நிஜமாகவே இதில் வித்யாவின் தவறு எதுவுமில்லை.அவள் நியதிக்கு போன் பேசியபோது அந்தப் பக்கமாக வந்த லலிதா மருமகளோடு பேச ஆசைக் கொண்டவர் அங்கேயே நின்றுவிட்டார்.தங்களுக்குள் சண்டை எதுவுமில்லை என்று நியதி சொன்னதே அவருக்கு நிம்மதியாக இருந்தது.இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு ஒன்று சேர்ந்து விட்டால் அதுவே போதும் என அந்த தாயுள்ளம் இறைவனிடம் வேண்டியது.


காலை உணவுண்டு சமர்த் ஆபிஸ் போனப் பின் மாடி அறைகளை சுத்தம் செய்யத் தொடங்கினாள் நியதி. ஒரு ரூமை முடிக்கவே இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.நடுவில் இருந்த பெரிய ஹாலில் பெரிய ஸ்டூலைப் போட்டுக் கொண்டு ஒட்டடை அடிக்கும் ஸ்டிக்கால் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.


மிகவும் முக்கியமான ஃபைல் ஒன்று அவசரமாகக் தேவைப்பட்டதால் வீட்டிற்கு வந்த சமர்த் தன் சாவியால் திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.கீழே எங்கும் நியதியின் சுவடேயில்லை.மெதுவாக மாடிக்கு ஏறி ஹாலை நெருங்கியவனின் நெஞ்சு ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.


வேலைக்கு சுலபமாக இருக்கும் என முக்கால் பேண்ட்டும் சிறிய டீசர்ட் அணிந்திருந்த நியதி கையைத் தூக்கி ஒட்டடை அடித்த போது அந்த சிறிய டாப்ஸ் நன்றாக மேலேறி அவளின் சிற்றிடையை பளீரென வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.அவளை இதுவரை இது போல பார்த்திராத சமர்த்தால் தன் கண்களை அவளை விட்டு அகற்றவே முடியவில்லை.


சே...அப்படி பார்ப்பது தப்பு என தன் மனதிற்கு கடிவாளமிட்டு கண்களை அவன் திருப்பும் முன் சிறிது அப்புறத்தில் இருந்த தூசியைத் தட்ட எம்பிய நியதி கால் வழிக்கி கீழே விழப் போனாள்.


"ஆ......"என அவள் கீழே விழும் முன்னரே அவளை தன் இருக் கைகளில் பிடித்திருந்தான் சமர்த்.


பூங்கொடியென தன் கைகளில் தவழ்ந்திருந்தவளை கீழே விடாமல் ஏதோ பிரமைப் பிடித்தவன் போல் அவளையேப் பார்த்தபடி நின்றிருந்தான்.கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்த நியதி தன்னை விழாமல் யாரோத் தாங்கிப் பிடிக்கவும் கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தாள்.தன்னை பிடித்திருந்தது சமர்த் என்று அறிந்தவள் தன்னை கீழே விடுமாறு அவன் தோளை தட்டினாள்.ஆனால் தன் கைகளில் இருந்த சிற்றிடையின் மென்மையில் தன்னை மறந்திருந்த அவன் அவளின் தொடுகையை உணரவேயில்லை.


எத்தனை அழைத்தும் அவன் சிலையென நின்றதால் இந்த முறை சற்று பலமாகவே அடித்தாள்.திடுக்கிட்டு அவளை கீழே இறக்கி விட்டான்.


"அது ஃபைல் ஒண்ணு எடுக்க வந்தேன்...நா வரேன்"என்று தன் அறைக்கு சென்றவன் அதை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டான்.


அவன் செல்லும் வரை அவனையேப் பார்த்திருந்த நியதி


'இது என்ன யூகே ஏதோ மோகினி பிசாசு அடிச்ச மாறி இருக்கானே'என எண்ணி வாய்விட்டு சிரித்தாள் நியதி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top