• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Myak Koattai - MInnal : Aththiyaayam 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 9.

நடுங்கும் உடல்களோடு அந்த பங்களாவையே பார்த்திருந்தனர் மூவரும். நன்றாக இருள் கவிந்து விட்டது. இனி வேறெங்கும் செல்லவும் முடியாது. மகிழி ஏன் இங்கே அழைத்து வந்தாள் என்ற கேள்வி மூவரது உதடுகளில் இருந்தது. ஆனால் குளிர் ஒரு புறம் பயம் ஒரு புறம் என திண்டாடினர். கையிலிருந்த டார்ச்சை வீட்டை நோக்கித் திருப்பினான் அருண்.

"இப்ப நமக்கு வேற வழியே இல்ல! நாம உள்ள போயித்தான் ஆகணும்" என்றான்.

"இல்ல நான் வர மாட்டேன். அதுக்கு பதிலா இப்படி இந்தக் காட்டுல விடிய விடிய நின்னுக்கிட்டே இருக்கலாம். விடிஞ்சதும் போயிக்கலாம்" என்றான் அரவிந்தன். அவனது முகம் பயத்தில் வெளிறிக்கிடந்தது.

"பைத்தியம் மாதிரி பேசாத அரவிந்தா! இது புலிகள் நடமாடுற காடு. நாம இப்படி வெளியவே நின்னோம்னா இன்னைக்கு நாம தான் புலிகளுக்கு நைட் டின்னர். அப்படி என்ன தான் இந்த பங்களாவுக்குள்ள இருக்குன்னு பார்த்துடுவோமே? நாம மூணு பேரு இருக்கோம். அப்புறம் என்ன பயம்?"

"ஆமா அரவிந்தன். அருண் சொல்றது தான் ஒரே வழி! இப்படி வெளியவே நின்னு குளிர்ல வெறச்சு சாகுறதுக்கு பதிலா உள்ளே போயிடலாம்"

"நிலைமையோட விபரீதம் புரியாமப் பேசுறீங்க ரெண்டு பேரும். வெளிய நின்னா ஒரு வேளை நாம உயிர் பிழைக்கலமா. ஆனா உள்ள போனா நிச்சயம் நம்மால உயிரோட வெளிய வர முடியாது. " என்றான்.

வானம் இடித்துக் குமுறியது. மின்னல் பளிச் பளிச் என்று வெட்ட அந்த பங்களாவின் தோற்றமே படு பயங்கரமாக காட்சியளித்தது. பூஜாவின் கண்களுக்கு அந்த பங்களாவின் மாடி மேல் யாரோ நின்றிருப்பது போலப் பட விறைத்துப் போனாள்.

"அருண் அங்க பாரு அங்க..பங்களா மேல யாரோ நிக்கறாங்க" என்று கத்தினாள். இருவரும் பார்த்த போது ஒன்றும் தெரியவில்லை. இப்போது வானம் பொழியத் தொடங்கியது. ஏற்கனவே குளிரோடு மழையும் சேர்ந்து கொள்ள என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள்.

"நானும் பூஜாவும் பங்காளாவுக்குள்ள போகப்போறோம். இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே நின்னுக்கிட்டு இருந்தா முழுக்க நனைய வேண்டியது தான். நீ வந்தா வா வராட்டா போ! வா பூஜா போகலாம்" என்று அவளின் கையைப் பிடித்து அழைத்தான். இருவரும் கேட்டின் மீது கை வைத்தனர். அத்தனை நாள் திறக்காத அந்தக் கதவு கிரீச்கென்ற சத்ததோடு திறந்து கொண்டது.

"என்னைத் தனிய விட்டுட்டு போகாதீங்கடா நானும் வரேன்" என அவர்களோடு இணைந்து நடந்தான் அரவிந்தன். மூவரும் தோட்டப்பாதை போல இருந்த அந்த இடத்தை மெல்லக் கடந்தார்கள். எந்த நேரத்தில் என்ன நேருமோ? யார் வந்து மேலே பாயப்போகிறார்களோ என்ற அச்சத்திலேயே கடந்தனர். ஆனால் விபரீதமாக எதுவும் நேரவில்லை. பங்களா தாழ்வாரப் படிக்கட்டில் காலை வைத்தார்கள். காய்ந்த சருகுகள் சரசரவென ஓசை எழுப்பின. ஏதோ ஒன்று காலை உரச ஓவென அலறினாள் பூஜா. டார்சை அடித்ததில் சிறு நரி ஒன்று முட்டை கண்ணால் பார்த்து விட்டு ஓடியது.

கண்னாடியில் சட்டங்கள் பதித்த அந்தக்காலத்துக் கதவில் பூட்டு தொங்கியது.

"நாம உள்ளே போக முடியாது போல இருக்கு. இந்தப் பூட்டுக்கு சாவி இல்லையே?" என்றாள் பூஜா. அதற்குள் அருண் கைகளால் அதை இழுக்க கையோடு வந்து விட்டது பூட்டு. அதை ஒரு புறமாக வைத்து விட்டு வாயிலைக் கடந்தார்கள்.

டார்ச் லைட் வெளிச்சத்தில் ஓரளவு பார்க்க முடிந்தது. சுமார் 30 அடி உயரம் உள்ள சீலிங்க். அதில் அழகான சாண்டிலியர் விளக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. பெரிய ஹால். ஆங்கிலேயர்கள் வழக்கப்படி ஹாலில் தரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த மேஜைகள் சோஃபாக்கள் என பலவும் தேக்கு மரத்தால் இழைக்கப்பட்டு கொள்ளை அழகோடு காட்சியளித்தன. ஏதேதோ ஆங்கிலேயர்களின் புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த ஹாலில் இருந்து மூன்று அறைகள் பிரிந்தன. நடு நாயகமாக மிகப்பெரிய மெழுகு வர்த்தி ஸ்டேண்ட் இருந்தது. அதில் பருமனான மெழுகு வர்த்திகள் பாதி எரிந்த நிலையில் இருந்தன. ஹாலில் சுவரின் மான் தலை காட்டெருமைத்தலை அதோடு படு பயங்கரமான புலித்தலை ஒன்றும் தொங்கிக்கொண்டிருந்தது.

"இத்தனை வருசமா பூட்டியிருந்ததுன்னு சொல்றாங்க? ஆனா இடம் இத்தனை சுத்தமா இருக்கு?" என்றாள் பூஜா.

சுத்தமா இருக்கு சுத்தமா இருக்கு என்று எதிரொலித்தது. பயத்தில் நாக்கு உலர்ந்து போனது அவர்களுக்கு. சத்ததாலோ இல்லை வேறு எதனாலோ புலித்தலை சற்றே சாய்ந்தது. அலறத்துடித்த மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு மேலும் ஆராய்ந்தார்கள். சட்டென தோன்றிய யோசனையில் தன் பேண்டிலிருந்து தீப்பெட்டி எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அதைப் பயன்படுத்தி அந்த ஸ்டேண்டில் இருந்த மெழுகு வர்த்திகளை ஏற்றினாள் பூஜா. தங்க நிற வெளிச்சத்தில் அந்த இடம் இன்னும் ஒரு பயங்கர வசீகரத்தை அடைந்தது.

அறையின் வலப்பக்க மூலையில் ஒரு கதவு. அதில் திரைச் சீலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. காற்றே வராத இடத்தில் அவை மெலிதாக ஆடுவது போல இருக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டாள் பூஜா. மூவரும் அந்தக் கதவை தள்ளித் திறந்தனர், லேசான மக்கிய வாசனை வர அதனுள்ளே சென்றார்கள். அங்கும் ஒரு மெழுகுவர்த்தி ஸ்டேண்ட் இருக்க அதையும் ஏற்றினாள் பூஜா. இது வரையிலும் பயப்படும்படியாக எதுவும் நடக்கவில்லை என்பதால் மூவருக்கும் கொஞ்சம் போல தைரியம் வந்தது. மூன்று அறைகளையும் திறந்து பார்த்தனர். கடைசியாக இருந்த அறையில் சில மேஜைகள் இருந்தன. அவற்றின் மீது காகிதக் கட்டுக்கள் இருந்தன. அவை காற்றில் படபடத்தன. அந்த அறையில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. அந்த பங்களாவின் மற்ற அறைகளில் இருந்தவை அனைத்தும் வெள்ளைக்காரர்களின் படங்கள். ஆனால் இது ஒரு இந்திய அதுவும் தமிழ்ப்பெண்ணின் படம். இரு சிறுமிகள் நின்றிருந்தனர். அந்தப் படத்தில் இருந்த தூசியைத் துடைத்து விட்டுப்பார்த்த போது தூக்கி வாரிப்போட்டது. அதி இருந்த ஒரு சிறுமி மகிழி போலவசே இருந்தாள்.

அந்த அறையின் ஒரு மூலையில் இருட்டாக இருந்தது, அங்கு மெழுகு வர்த்தியின் வெளிச்சம் செல்லவில்லை. அங்கு டார்சை அடித்தான் அருண். மூவரும் ஒரே நேரத்தில் மூச்சை இழுத்தார்கள். காரணம் அங்கே எலும்புகள் சிறு குவியலாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பக்கத்திலேயே இரு மண்டை ஓடுகளும் இருந்தன. டார்சைப் பிடித்திருந்த அருணின் கை நடுங்கிஉயது.

"இது இது..." என்றான் அரவிந்தன் .திக்கித்திக்கி. பக்கத்திலேயே காணிகள் அணியும் மாதிரியிலான உடைகள் கீழே கிடந்தன.

"ஏதோ ரெண்டு காணிங்க காணாமப் போயிட்டாங்கன்னு தலைவர் சொன்னார் இல்ல? இது அவங்க எலும்பா?" என்றான் அருண். உடலில் வியர்வை வெள்ளம். பூஜாவோ பயத்தில் இறுகி இருந்தாள்.

"இப்ப என்ன செய்ய?" என்றான் அரவிந்தன்.

"எப்படியாவது இந்த ராத்திரி இங்க பொழுதைக் கழிச்சுட்டு உயிரோட இருந்தோம்னா காலையில இங்க இருந்து ஓடியே போயிரணும். அப்புறம் ஜென்மத்துக்கும் இங்க வரவே கூடாது" என்றான் அருண்.

"அப்ப இந்த எலும்புகளை என்ன செய்ய?"

"இது யாருன்னே நமக்குத் தெரியாது. இவங்களுக்கு கர்ம காரியமா பண்ண முடியும்? காணிக்குடியிருப்புல இருந்தவங்க இங்கே எப்படி வந்தாங்க? யாரு அவங்களை இந்த கதிக்கு ஆளாக்குனது எதுவுமே தெரியலையே?" என்றாள் பூஜா.

"அதைப் பத்தி நினைக்குற நேரமா இது? நாமளும் இப்படி ஆகிடாம இருக்க கடவுள் தான் கருணை செய்யணும்" என்றான் அரவிந்தன். அழுகையே வந்து விட்டது அவனுக்கு.

இனி வேறு அந்த அறையையும் திறந்து பார்ப்பதில்லை என்ற தீர்மானத்தோடு மூவரும் மீண்டும் ஹாலுக்குள் வந்தார்கள். சரெக்கென யாரோ மறைவது போல இருக்க பயத்தோடு பார்த்துக்கொண்டனர்.

"ஹலோ! யாரு? யாராவது இருக்கீங்களா இங்க?" என்று கேட்டான் அருண் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

இங்க இங்க என்று எதிரொலித்ததே தவிர எந்தப் பதிலும் வரவில்லை. தாகத்தில் நாக்கு உலர்ந்து போனது.

"பூஜா இப்படியே இருந்தா பயத்துலயும் தாகத்துலயும் செத்திருவோம். மழை நல்லாப் பெய்யுது. வெளிய போயி கையால தண்ணியைப் பிடிச்சுக் குடிப்போம்" என்று அவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் வெளிப்புறத்துக்கு வந்தான் அருண். மழையில் நனைந்தாலும் பரவாயில்லை என்று இரு கைகளையும் கப் மாதிரி செய்து நீரை பிடித்துக் குடித்தனர் மூவரும். இளநீர் போல இனித்தது மழை நீர். தாகம் அடங்கியதும் அப்படியே ஓரமாக நின்றார்கள்.

உள்ளே செல்லவும் பயம் அங்கேயே எத்தனை நேரம் நின்றிருப்பது என்ற கேள்வி அதோடு பகல் முழுவது சரியான நடை எல்லாமாக சேர்ந்து அவர்களை அசத்தியது. காற்றும் மழையும் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. மூவரும் நின்றிருந்த இடத்தில் கூட சாரல் தெறித்தது. சற்றே துணிச்சலோடு உள்ளே நுழைந்தான் அருண் மீண்டும். அவன் நுழைந்ததும் வெளிச்சம் அதிகமானது போல தோன்ரியது.

மகிழம் பூவின் நறுமணம் மெலிதாக வந்தது. நடுவில் இருந்த அறையில் எதுவோ அசைவது போலத் தோன்ற அங்கே விரைந்தான் அருண். அவன் உள்ளே சென்றதும் அறைக்கதவுடப்பென்ற சத்தத்துடன் மூடிக் கொண்டது. அதைக் கண்ட பூஜா பதறியோடி வந்தாள். பின்னாலேயே வந்தான் அரவிந்தன்.

"அருண்! கதவைத்திறடா! எனக்கு பயமா இருக்கு! உனக்கு என்ன ஆச்சு கதவைத் திற" என்று கத்தினாள். அவளது பயம் முழுவதும் நீங்க எப்படியாவது அருணைக் காப்பாற்ற வேண்டும் என்ற வெறியே நிறைந்திருந்தது அவள் மனதில். கதவைத் தள்ளினாள். அசைந்து கூடக் கொடுக்கவில்லை அது.

"அருண் உள்ளே இருக்கியா?" என்றாள் பூஜா அழுகையோடு.

உள்ளிருந்து ஏதும் பதில் வந்ததா என எதுவும் புரியவில்லை. மீண்டும் கதவைத் தள்ளினாள். இம்முறை அரவிந்தனும் உதவி செய்தான். சற்றே நகர்வதாகத் தோன்றியது. சிறு இடைவெளி ஏற்பட்டது இரு கதவுகளுக்கும் இடையே. அதில் டார்ச் அடித்துப் பார்த்தான் அரவிந்தன். அருணின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அவன் கீழே விழுந்து கிடப்பது போல இருந்தது.

"அருண் அருண்" என்று அழைத்தாள் பூஜா. அவன் மெல்ல கண்களைத் திறந்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அவள்.

"கதவை ஏன் திறக்க முடியல்ல அருண்?" என்றான் அரவிந்தன்.

"ஏதோ பெரிய ஷெல்ஃப் விழுந்து கதவை அடைச்சிக்கிட்டு இருக்கு. அதை அப்புறப்படுத்தினா தான் என்னால வெளிய வர முடியும். கொஞ்சம் இருங்க பார்க்குறேன் " என்று சொல்லி விட்டு அந்த ஷெல்ஃபை தள்ள முயன்றான் அருண். அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் இறைந்து கிடந்தன. வெளியே நின்றிருந்த பூஜாவுக்கும் அரவிந்தனுக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு மணி நேரமாகக் இருந்தது. பத்து நிமிடத்தில் கையில் ஒரு புத்தகத்தோடு வெளி வந்தான் அருண்.

"நீ எப்படி அந்த ரூமுல மாட்டுன? இது என்ன புக்? என்றாள் பூஜா படபடவென.

"நான் இந்தக் கதவைத் தள்ளித்திறந்ததும் யாரோ என்னை கீழே தள்ளி விட்ட மாதிரி இருந்தது. நான் கீழே விழவும்ம் நான் நின்னுக்கிட்டு இருந்த இடத்துல ஷெல்ஃப் விழவும் சரியா இருந்தது. . அந்த ஷெல்ஃபுல இருந்து சில புத்தகங்கள் சிதறிச்சு. அதுல எல்லா புக்கும் இங்கிலீஷ்ல இருந்தது. இது மட்டும் தான் தமிழ்ல இருந்தது. அதான் இதை எடுத்துக்கிட்டு வந்தேன்" என்றான். அந்தப் புத்தகத்தை மூவரும் பிரித்தனர்.

1857 அவர்கள் கண் முன்னால் விரிந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Hei ini flash backa sis beautifully narrated sis antha mahimai pathi. superb
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,552
Reaction score
7,766
Location
Coimbatore
சூப்பர் நல்லா சூடுபிடித்துள்ளது
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top