• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
யாரென்று தெரியாத அவள்


பெரும் வலியை சுமந்தபடி தன் கார் அருகில் சென்று நின்றான் டேவிட்.

தன் கையிலிருந்த சட்டையை அணிந்து கொள்ள முடியாமல் காரை திறந்து இருக்கையின் மீது வைத்தான்.

யாரோ ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை தொட்ட சட்டையை கூட தன் தேகத்தில் அணிந்து கொள்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

பெரும்பாலும் அவன் கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளை மட்டுமே பார்த்து வளர்ந்ததினாலோ என்னவோ அவனுக்கு பெண்மை என்பது மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒன்று.

அப்படி இருக்க காதல் காமம் என்ற அற்ப உணர்வுகளுக்கெல்லாம் அவன் மனதில் இடமே இல்லை.

அதன் காரணத்தினாலயே எந்த பெண்ணும் அவனின் மன எல்லைகோடுகளை இதுவரை தகர்த்ததும் இல்லை.

ஆனால் இன்று அவனுக்கு வந்திருக்கும் சோதனையோ வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

பார்க்க கூடாத நிலையில் ஒரு பெண்ணை பார்த்தும் அவளை தன் கரத்தில் தூக்கி சுமந்ததும் ஏற்கனவே ஒருவித அசௌகர்யமான உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது.

அந்த எண்ணங்களில் இருந்து மீண்டு வருவதே சிரமமெனும் போது, ஒரு பெண்ணை கெடுத்துவிட்டதாக சொல்லப்படும் பழியை ஏற்குமளவுக்கான மனோதிடம் அவனுக்கில்லை.

ஒரு பெண்ணுக்கு மானம் எந்தளவுக்கு பெரியதோ அந்தளவுக்கு ஆண்களுக்கு கண்ணியம் என்பது.

அதை விட்டுகொடுத்திர முடியுமா?

மருத்துவமனையில் வெளியே நின்றிருந்த தன் காரின் முன்கண்ணாடியில் சிதறியிருந்த அவளின் இரத்தத்தை துடைத்தான்.

சற்று கடினமாய் இருந்தாலும் அந்த கரை மெல்ல மறைந்து போனது.

ஆனால் அவன் மனதில் படிந்துவிட்ட கரையை இப்பிறவியில் மறைந்து போகுமா?

அவன் நிலைமையோ விளக்கில் மாட்டிய விட்டில்பூச்சியின் கதி!

நல்லவன் என்ற அடையாளத்தை தூக்கி எறிந்தாலும், அவன் மனசாட்சி அவனிடம் எழுப்பும் கேள்விகளை தவிர்க்கமுடியவில்லை.

அவனின் மனசாட்சி அவனை அணுஅணுவாய் சித்ரவதை செய்து கொண்டிருந்தது

இத்தகைய வேதனைக்கு பதிலாய் பலரைப் போல அவனும் மனசாட்சியையும் தூக்கி எறிந்துவிடலாம்.

ஆனால் டேவிடால் என்றுமே அது முடியாதே!

அவனின் ஒவ்வொரு செல்லிலும் அன்பு என்ற ஒற்றை வார்த்தை ஆழப்பதிந்திருந்தது.

அந்த அன்பே அவன் பின்பற்றும் அறமாய் இருக்க, இன்னுமும் அவனால் அந்த மருத்துவமனையை விட்டு அகல முடியவில்லை.

அந்தப் பெண் உயிர் பிழைத்துவிட்டால் என்ற தகவலை கேட்டுவிட மாட்டோமா என்ற சிறு நப்பாசைதான்! .

அந்த சமயத்தில் அவசரமாய் ஒரு நர்ஸ் அவனை நோக்கி ஓடிவந்தாள்.

"சார்... உங்களை எங்கெல்லாம் தேடிறது... சீக்கிரம் வாங்க... டாக்டர் உங்களை கூப்பிட்டாங்க"

அந்த நர்ஸின் பதட்டம் அவனுக்குள் அச்சத்தை தோற்றுவித்தது.

"நர்ஸ்" என்று அவன் அழைப்பதை கவனியாமல் அந்த பெண் சென்றுவிட ஒரு விபரீத எண்ணம் உதித்தது அவனுக்கு.

அவள் இறந்திருப்பாளா ?

இந்த எண்ணம் அவனை கலவரப்படுத்த அவசர அவசரமாய் மருத்துவமனைக்குள் சென்றான்.

அந்த பெண் மருத்துவர் அவனுக்காகவே காத்திருப்பது போல் நின்றிருக்க... அவன் மனமெல்லாம் திகலடைந்தது.

"எங்க போனிங்க மிஸ்டர். டேவிட் ?" என்று அவர் கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் மலங்கமலங்க விழித்தான்.

அதை பொருட்படுத்தாமல் அந்த பெண் மருத்துவர்! "சரி அதை விடுங்க... பேஷண்ட் ரொம்ப ஸ்ரீயஸா இருக்காங்க... எங்களால முடிஞ்சளவுக்கு முயற்சி பண்ணி பார்த்துட்டும்... நோ யூஸ்... பட் அவங்க ஏதோ சொல்ல நினைக்கிறாங்க... என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியல... போலீஸும் இன்னும் வரல... நீங்க வேண்ணா என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்டு பாருங்களேன்" என்றார்.

அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. யாரென்றே தெரியாத பெண்ணிடம் எதை கேட்பது? என்ன பேசுவது? இந்த நிலையில் அந்த பெண்ணை எப்படி எதிர்கொள்வது?

ஆயிரமாயிரம் சிந்தனைகள் அவன் மனதில் எழும்பியது.

"ப்ளீஸ் போங்க... டீலே பண்ணாதீங்க" என்றார்.

தாமதிக்காமல் அவள் இருந்த சிகிச்சை அறைக்குள் நுழைந்தான்.

மன்னிப்பு கேட்காவாது அந்த பெண்ணை சந்திக்க கிடைத்த வாய்ப்பை பயண்படுத்திக் கொள்ள எண்ணியவன் அப்போதுதான் அவள் முகத்தை பார்த்தான்.

தலையில் பெரிதாய் கட்டுப்போட்டிருக்க, முகம் அத்தனை பொலிவாய் காட்சியளித்தது.

அழகின் அத்தனை அம்சமும் பொருந்திய முகம் அது.

விழியில்லாமல் அழகை மட்டும் தந்து அவள் விதியை இப்படி எழுதிய இறைவன் மீது கோபம் வந்தது.

அவள் உதடுகள் அசைவின்றிருக்க அவள் இறக்கும் தருவாயில் இருக்கிறால் என்பதை அவளின் அசைவற்ற தேகம் உணர்த்த, மனம் நொந்து போனவன் அவளுக்கு அருகாமையில் மண்டியிட்டு
கரங்களை குவித்தபடி அவளுக்காக கண்ணீரோடு பிராத்திக்க தொடங்கினான்,

'பரலோகத்தை காக்கும் எங்கள் பரமப்பிதாவே! இந்த பெண்ணை இரட்சிப்பீராக ...' என்று மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணின் கரம் அவன் கூப்பிய கரங்களைப் பற்றிக் கொண்டன.

அதிர்ச்சியில் ஊமையாகி அவளை நோக்கினான்.

அவனின் குரல் அந்த பெண்ணின் செவியை எட்டியிருக்கும் போல.

அந்த ஓலியின் மார்க்கமாய் அவன் கரத்தை பற்றிக் கொண்டிருக்கிறாள்.

அப்போதைக்கான ஆறுதலும் துணையும் அவளுக்கு தேவைப்பட்டிருக்கலாம். அதை கொடுக்க யத்தனித்தவன் அவளின் இளகுவான கரத்தை தன் கரத்திற்குள் சேர்த்துக் கொண்டான்.

அவள் அருகாமையில் சென்று "உங்களுக்கு ஏதாச்சும் சொல்லனுமா?" என்று கேட்க "ஹ்ம்ம்ம்" என்றவள் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றாள்.

அந்த நிலையிலும் அவளுக்கு தான் சொல்வதை கேட்டு உணர முடிகிறதா என்ற வியப்பில் ஆழ்ந்தவன் "சொல்லுங்க" என்றான்.

அவள் உதடுகள் எதையோ முனுமுனுத்தன.

புரிந்து கொள்ள இயலாமல் அவள் உதட்டருகே தன் செவியை வைத்து கேட்டவனுக்கு, லேசாய் அவள் சொல்வதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதிர்ந்து போனான்.

உயிர் துறுக்கும் நிலையில் அவளுக்கு உயிர் வாழ ஆசையா ?!

"ஐ வான்ட் டூ லிவ்... ஸேவ் மீ"

இப்படிதான் அவளின் அந்த மெல்லிய உதடுகள் முனகிக் கொண்டிருந்தன.

என்ன சொல்வான் அவளிடம் ?

அவன் விழிகள் வடித்த கண்ணீர் அவள் கன்னத்தில் விழ, அந்த சமயம் அறைக்குள் தடலடியாய் காக்கி உடையில் ஒருவர் நுழைந்தார்.

அவரை பார்த்த கணம் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

அவரின் பார்வை பிணைந்திருந்த அவர்களின் கரங்கள் மீது விழுந்தது.

அதனை உணர்ந்தவன் அவள் கரத்தை விடுவிக்க யத்தனிக்க அவள் விடவில்லையே.

அழுத்தமாய் அவன் விரல்ளை பற்றி இருந்தது அவளின் மிருதுவான கரம்.

அவனை நோக்கி "ஆர் யூ மிஸ்டர். டேவிட் ?" என்று கேட்டார்.

அவனும் தயக்கத்தோடு "ஹ்ம்ம்" என்றான்.

"ஐம் இன்ஸ்பெக்டர் வேணுகோபால்... இப்பதான் மிஸ்டர். ராஜன் கால் பண்ணாரு... எல்லா விஷயத்தையும் சொன்னாரு.. நீங்க உடனடியா இங்கிருந்து கிளம்பு... நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோம்" என்று சொன்னார்.

ராஜன் அவன் தந்தையின் காரியதரிசி...

ஒருப்பக்கம் நிம்மதி ஏற்பட்டாலும் இன்னொரு புறம் இது தவறென்று அவன் மனம் அவனை நிந்தித்தது.

மீண்டும் அவர் "சார் கிளம்புங்க" என்றார்.

அவனோ அந்த பெண்ணின் பிடி விலகாததை பார்த்து தயங்கி நிற்க, இன்ஸ்பெக்டர் அவசரமாய் அவர்களின் கரத்தை பிரித்துவிட்டு "ப்ளீஸ் போங்க சார்... இல்லாட்டி பெரிய பிரச்சனை வந்திரும்" என்றதும்

அவன் தவிப்போடு "இந்த பொண்ணை காப்பாத்தனும்" என்றான்.

"அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்லி அவன் தோள்ளை பற்றி அறைக்கு வெளியே அழைத்து செல்ல, அந்த பெண்ணை பார்த்தபடியே வெளியேறினான்.

ஏனோ அவளை விட்டுப்பிரிய முடியாத ஓர் உணர்வும் தவிப்பும் அவனுக்குள்...

ஆனால் அவர் அவன் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் அவனை கார் வரை அழைத்துவந்து இருக்கையில் அமர வைத்தார்.

அதோடு அல்லாது காரை எடுக்க சொல்லியும் பணித்தார்.

அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல்,
அவன் காரை செலுத்தவும், அந்த மருத்துவமனை விட்டு சீறி பாய்ந்து வெளியேறியது அந்த பெராஃர்ரி கார்!

ஸ்டியரிங்கில் ஒட்டியிருந்த இரத்தக்கரை,
பின் இருக்கை முழுவதும் படிந்திருந்த அவளின் குருதி என அவனின் காரில் திரும்பிய இடமெல்லாம் அந்த பெண்ணின் நினைவு!

யாரென்று தெரியாத அவள்?

அவள் வாழ்வில் யார் இத்தனை பெரிய கொடுமையை இழைத்திருப்பார்கள்.

இந்த கேள்விகளோடு காரை ஓட்டி வந்தவன், பிரமாண்டமே அதுதானோ என்ற பிரமிக்க வைக்கும் அவனின் பங்களாவிற்குள் நுழைந்தான்.

காரிலிருந்து இறங்கிய மறுகணமே சாவியை தூக்கியெறிந்துவிட்டு தன் படுக்கையறை நோக்கி விரைந்தவன், குளியலறைக்குள் நுழைந்து ஷவரை திறந்து விட்டு தண்ணீரில் முழுவதுமாய் நனையத் தொடங்கினான்.

அவனின் உடலில் பாய்ந்த நீர் அவனின் தேகத்தில் படிந்திருந்த அவளின் செங்குருதியை நீக்கிவிட்டது.

ஆனால் அவன் மனதில் ஆழப்பதிந்த அந்த சம்பவத்தின் நினைவுகளை !
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இலட்சியம்

ரொம்பவும் குறுகலான தெருவில் அமைந்திருந்த அந்த சிறு வீடு.

சையத் அந்த சிறிய தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ ஒரு படக்காட்சியை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சாஜி தன் மகனுக்காக தோசையை சுட்டுக்
வைத்துக் கொண்டிருக்க அவனும் கணக்கு வழக்கின்றி உண்டுக் கொண்டிருந்தான்.


ஒரு முழு ஆடே அவன் தட்டைச் சுற்றி தவமிருக்க, அவன் பார்வையோ டிவியில் லயித்திருந்தது.

சாஜி தோசையை அவன் தட்டில் வைத்தபடி "டீ.வியையே பார்த்தது போதும்... சாப்பிடு சையத்" என்று பரிவாய் சொன்ன தாயை நிமிர்ந்தும் நோக்காமல் "சாப்பிட்டிட்டுதானே இருக்காங்க... நீ போ" என்றான் அலட்சியமாக!

அவர் மகனின் வார்த்தையில் அலுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவன் தன் பார்வையை தொலைக்காட்சியை விட்டு எடுப்பதாக இல்லை. அதே நேரத்தில் சாப்பிடுவதை நிறுத்துவதாகவும் இல்லை.

ஏனெனில் அவன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது இரண்டே விஷயம்தான். ஒன்று சினமா. இன்னொன்று தன் அம்மாவின் சமையல். அதுவும் அவனுக்கு அசைவம் உண்பதில் அலாதியான பிரியம் வேறு.

இரண்டிற்குமே அவன் அடிமை என்றே சொல்ல வேண்டும். இரண்டின் மீதும் அலாதியான காதல்.

அவன்தான் சையத் !

சையத் என்றால் ஆளுமை. அத்தகைய ஆளுமை அவன் பெயரில் மட்டுமில்லை. அவனின் எண்ணத்திலும் செயலிலும் கூட இருந்தது.

சாதாரண ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன்தான்.

ஆனால் உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சினிமா என்ற கனவுலகின் விண்மீன்களுக்கு வலை வீசுபவன்...

அந்த நிழலுலகில் நிஜ அங்கிகாரத்திற்காக போராடும் போராளி.

அவனின் கூர்மையான விழிகள் கட்டுடலான தேகம் அவன் உயரமும் உருவமைப்பும் கம்பீரமும் பார்க்க அவன் கதாநாயகன் போலவே இருப்பான்..

ஆனால் அவன் எண்ணம் போலியான முகப்பூச்சுகள் பூசிக் கொள்ளும் நாயகன் வேடமல்ல !

பின்னாடி நின்று நாயகனையும் இயக்கிடும் நிஜ நாயகனாக !

இயக்குனராக வேண்டுமென்ற அவனின் எண்ணத்திற்கேற்ப திறமையும் வல்லமையும் அவனிடம் நிரம்பவே இருந்தது.

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப்பெறின்'


தெய்வப் புலவரின் வாக்குப் போல் எத்தனை இடையூறுகள் வரினும் தான் எண்ணியதில் உறுதியாய் நின்று அதனை சாதிக்கும் முயற்சியில் முழு முனைப்போடு இயங்கி கொண்டிருந்தான்.

இத்தகையவன் தற்சமயம் சேனலை மாற்றியப்படி எதையோ ஆர்வமாய் தேடிக் கொண்டிருக்க, அவன் கரத்திலிருந்து ரிமோட்டை அதிகாரமாய் பறித்தார் அவனின் தந்தை கரீம்.

பறித்ததோடு அல்லாமல் ஆவேசம் பொங்க "நல்லா சாப்பாடிறா... அதான் சம்பாதிச்சி கொட்ட நான் இருக்கேன் இல்ல... " என்றார்.

சாஜி சமையலறையில் இருந்து அவசரமாய் ஓடிவந்து "அப்புறமா பேசிக்கலாம்... என்னைக்கோ ஒரு நாள்தானே பையன் வீட்டுக்கு வர்றான்... அவன் சாப்படட்டுமே..." என்று சொல்லவும் அவர் முகம் எரிமலையாய் மாறியிருந்தது.

அசிஸ்டன்ட் டைரக்டராக பணிப்புரிவதால் அவனுக்கு வீடு தங்க நேரமேது.

அப்படி அபூர்வமாய் பார்க்கும் மகனிடம் தன் ஆதங்கத்தை கொட்டக் கூடாதா? !!!

கரீமின் பார்வையின் அர்த்தம் அதுதான்.
அந்த தெருவில் உள்ள பெரிய மட்டன் ஸ்டாலுக்கு முதலாளி.


அவனுக்கு பிறகாய் வீட்டில் இன்னும் இரண்டு பிள்ளைகள்.

ஆஷிக், அஃப்சானா என இரட்டை குழந்தைகள்.

இருவரும் அவனை விட பத்து வயது சிறியவர்கள்.

வயது கடந்த திருமணம் என்பதால் கரீம் ரொம்பவும் தளர்ந்து முதுமையின் தாக்கத்தில் இருந்தார்.

தன் பாரத்தை மகன் இறக்கி வைப்பானா என்ற அவரின் ஆசை நிராசையாய் போனது.

சையத் கனவு லட்சியமென்று சொல்லி சினமாவின் பின்னாடி ஓடத் தொடங்கினான்.

சினிமா துறையில் கனவுகளோடு போகும் பலர் காணாமல் போவதே அதிகம். லட்சத்தில் ஒன்றுதான் அந்த நட்சத்திர வானத்தை எட்டிப்பிடித்து ஜொலிக்க முடியும். இவனும் அனேகர்களில் ஒருவனாய் தொலைந்து போய்விடுவானோ என்ற அச்சம்தான் அவருக்கு!

ஆனால் அவனுக்கு அந்த அச்சமில்லை. ஒரு நாள் அந்த மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திர உலகில் தானுமே ஒரு நட்சத்திரமாய் மின்னுவோம் என்ற உறுதியான நம்பிக்கையோடு இருந்தான்.

அவனுக்கு அது வெறும் கனவல்ல! பெரும் லட்சியம்.

அதனால் அப்பாவின் வசைப்பாட்டுகளை காதில் வாங்காமல் ரிமோட் போனால் என்னவென்று, டீவியின் ஸ்விட்ச்களை அழுத்தி தனக்கு வேண்டிய சேனல்களை மாற்றிக் கொண்டிருக்க, அவரின் கோபம் இன்னும் அதிகரித்தது.

அவர் சீற்றத்தோடு டீவி ரிமோட்டை அவன் மேலேயே வீசினார்.

அவனுக்குமே கோபம் வர திரும்பி முறைத்தவனை வெறுப்போடு பார்த்தவர்

"முறைடா... முறை... எப்படி முறைக்கிறான் பாரு... உன்னை எல்லாம் பெத்ததுக்கு" என்று உணர்ச்சி பொங்க கத்தி தலையில் அடித்துக் கொள்ள சாஜி அவர் அருகில் வந்து தடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

சையத் அதனை பொருட்படுத்தாமல் அந்த சிதறியிருந்த ரிமோட்டின் பாகங்களை சேர்த்து இணைத்து டீவியை மாற்ற முயற்சிக்க அது செயல்பட மாட்டேன் என்று அடம்பிடித்தது.

சாஜிக்கும் அவனின் செயல் கோபத்தை ஏற்படுத்திட "ஏ சையத் ... வாபா பேசிறது உன் காதில விழல... " உரக்க கேட்டார்.

அவன் திரும்பியும் அவர்களை நோக்காமல் "இதெல்லாம் புதுசாவா நடக்குது... நீ போய் தோசை எடுத்துட்டு வாம்மா" என்றான் அலட்சியமாக.

கரீமின் மனம் குமுறியது.

"போ சாஜி... சாருக்கு போய் தோசை சுட்டு எடுத்துட்டு வா... அவர்தான் இந்த வீட்டுக்கு சாம்பாதிச்சி கொட்டிறாரு இல்ல..." என்றார்.

அவனோ துளியும் கவலையின்றி ரிமோட்டை தட்டி வேலை செய்வித்து,
சேனலை மாற்றிய போது தீடீரென்று ஒரு முகம் அவனை கடந்து செல்ல, மீண்டும் அந்த சேனலை திருப்பினான்.


ஜே நீயூஸில் மும்முரமாய் நம் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் அணிவகுத்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து ஒளிப்பரப்பான செய்திதான் சையத்தை ஈர்த்தது.

பார்வையிழந்த பெண் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணம்.

இதை கேட்ட மறுகணமே அவன் தந்தையும் தாயும் கூட மகன் மீதான கோபத்தை மறந்து அந்த பெண்ணிற்காக உச்சுக் கொட்டி பரிதாபப்பட்டனர்.

ஆனால் சையத் அந்த செய்தியை கேட்கவில்லை. அந்த முகத்தை மட்டுமே பார்த்தான்.

யாரென்றே அறிந்திராத அந்த பெண்ணின் முகத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு!

இரும்பினை ஈர்க்கும் காந்தம் போல அவனை அந்த முகம் ஈர்த்துவிட்டு கண நேரத்தில் மறைந்து போனது.

சில காட்சிகளும் சில நிகழ்வுகளும் காரணக்காரியமில்லாமல் நம் மனதில் பதிவாகும். அப்படி அந்த முகம் அவனுக்குள் பதிவானது.

மூவருமே சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்துவிட குற்றவாளியைப் போல பார்க்கும் தன் தந்தையையும் தாயையும் நிமிர்ந்து பார்த்தவன் "அடுத்த வாரம் எங்க டைராக்டரோட படம் ரீலாஸாகப் போகுது... என் பேரும் அந்த பெரிய் ஸ்கிரீனில வரும்... அசிஸ்டன்ட் டைரக்டர்னு" என்றான்.

கரீம் கோபத்தோடு "ஆமாம்... ஒரு மூலையில உன் பேர் வரப் போகுது.. அதை போய் பெரிய விஷயமா பேசிட்டிருக்கியா... அதனால தம்புடி பிரோஜனம் உண்டா உனக்கு"

"என்ன பேசிறீங்க வாபா? நான் மட்டும் சினிமாவில பெரிய டைரக்டராயிட்டா பணமெல்லாம் ஒரு விஷயமே இல்ல"

"அல்லாவோட விருப்பமும் அதுவாயிருந்தா சந்தோஷம்தான்... ஆனா அப்படி நடக்காது... நீ நிதர்சனத்தை புரிஞ்சிக்கிட்டு நம்ம பிழைப்பை பார்க்கிற வழியை பாரு"

"மாட்டேன் வாபா... நான் டைராக்டர் ஆவேன்... அதுதான் என்னோட இலட்சியம்"

"அப்படின்னா இந்த வீட்டில இனி நீ இருக்கவே கூடாது"

"என்ன சொல்றீங்க" சாஜி அதிர்ந்து கணவனை நோக்க அவர் விழிகளோ அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு கண்ணீரை ஊற்றிய் பெருகிற்று. க

"நம்ம யாரை பத்தியும் அவனுக்கு கவலையில்லையாம் சாஜி... அவனுக்கு அவன் லட்சியம்தான் பெரிசுன்னு சொல்றேன்... என்னால இனிமே அவன் பாரத்தை சேர்த்து தூக்கி சுமக்க முடியாது... அவனை முதல்ல இங்கிருந்து போ சொல்லு... நான் இருக்கிறவரைக்கும் உங்களை எல்லாம் பார்த்துப்பேன்... அப்புறம் அந்த அல்லா உங்களுக்கு வழிக்காட்டுவாரு" என்று விரக்தியோடு பேச

"என்ன இப்படியெல்லாம் பேசிறீங்க..." என்று சாஜி கண்கலங்கி அழத் தொடங்கினார்.

சையத் எங்கே தன் மனவுறுதி இவர்களின் கண்ணீரில் கரைந்து தன் இலட்சியத்தை தொலைத்துவிடுவோமோ என அஞ்சியவன் அவசரமாக எழுந்து தன் கைகளை அலம்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

"சையத்" என்று சாஜி மகனை கண்ணீரோடு அழைத்தார்.

அவனோ திரும்பாமலே "நான் போறேன் மா...அப்படி நான் திரும்பி வந்தேன்னா... சினிமாவில பெரிய டைரக்ட்ரானா பின்னாடிதான் வருவேன்... இல்லன்னா வரவே மாட்டேன்"

"சையத்" என்றவரிடம்

"இனிமே என் பாரத்தை யாரும் சுமக்க வேண்டும்" என்றவன் துளியளவும் தயங்காமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

வெளியே விளையாடும் தன் தம்பி தங்கையை பார்த்த போது, லேசாய் கண்ணீர் அவன் விழிகளை நனைத்தது.

விரைவிலேயே தன் இலட்சியத்தை அடைந்துவிட்டு வீடு திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

சையத்தை பொறுத்தவரை குடும்பத்திற்கு நல்லவனாய் இருப்பதை விடவும் உலகமே போற்றும் வல்லவனாய் இருக்க வேண்டும்.

தன் தந்தை சொன்ன நிதர்சனத்தை உடைத்து வெற்றிப் பெற்று காட்டவேண்டும் என்று உறுதியோடு தன் இலட்சிய பயணத்தை தொடர்ந்தான்.

ஹாய் மக்களே,

இன்னும் தேடல் போட்டி நாள் கெடூ ஒன்றரை மாதமே இருக்க, அதற்குள்ளாக இந்த கதையை முடிக்க வேண்டும். உங்கள் துணையும் கருத்துமே என்னை அதிவேகமாய் நகர்த்தி செல்லும். So like and comment போட மறந்திராதீங்க.

முதல் அத்தியாயத்திற்கான உங்கள் கருத்துக்களுக்கு என் நன்றி... நன்றி

நாயகன் யாரென்று இன்னும் இருவேறு கதாபாத்திரங்கள் வந்தப் பின் முடிவெடுத்து கொள்ளலாம். View attachment 910
 




Last edited:

Preethu

இணை அமைச்சர்
Joined
Apr 18, 2018
Messages
662
Reaction score
841
Location
Chennai
David's part is really good. . But I felt sayed part a bit boring
 




banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Antha ponu sona words unarvupoorvama irunthuchu antha scene enala imagine pana mudinjuthu..awesome writting..??
 




Laya

மண்டலாதிபதி
Joined
Jan 22, 2018
Messages
248
Reaction score
406
Location
Chennai
Enna iru veru kathapathirama ? innum oruthar varuvarunula ninaichen ? OK OK pakkalam ... Devid mananilai romba azhaga solli irukigada ...
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

அந்தப் பார்வை தெரியாத பெண் தான் இந்த உலகை விட்டுப் போகப்போகிறேன் என்று தெரிந்தும் எதற்காக டேவிட்டிடம் தன்னை காப்பாற்றும்படி கேட்டார்,இது சாதாரண ஒரு நிகழ்வா அல்லது இதையிட்டு பின்பு நிகழ்வுகள் ஏதாவது நடக்கப்போகின்றதா,அதே மாதிரிதான் சையத்திற்கு அந்த முகம் எதனால் அப்படி மனதில் பதிந்துபோனது,பின்னாளில் இவர்கள் மூவரும் எங்கேயோ ஒரு புள்ளியில் சந்திக்கப் போகின்றார்களா.

நன்றி
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Sooper sis....iru konangal la story pogudhu. Syed Ku andha ponnu face register aiduchu.enna connection future ellam vara pogudho.david really paavam.andha ponnu avankitta save me nu sonnappa he feels so guilty.... tolerate pannave mudila. waiting 4 entry of new characters sis.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top