• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இசை நிகழ்ச்சி


அவன் செவியில் ஓயாமல் அந்த கவிதை ஒலித்துக் கொண்டே இருந்தது. அதுவும் அவளின் குரலில்...

பாரதியின் விரல்நுனியில் உதித்த வரியின் மாயமா அல்லது தேமதுரமாய் இனித்த அவளின் குரலின் மாயமா? !

ஒரு பெண்ணை பார்த்து ஈர்ப்பு வருவது இயல்பு. அவளின் குரலிலும் பேசிய விதத்திலும் கூட ஈர்ப்பு வருமா!

அப்போது அவனுக்கு வள்ளுவனின் குரல் ஒன்று நினைவுக்கு வந்தது.

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள."

ஒரு பெண்ணால் மட்டுமே ஐந்து புலன்களுக்கும் இன்பம் நல்க முடியுமாம்.

வள்ளுவர் அனுபவமபூர்வமாய் உணர்ந்தே எழுதியிருப்பார் போல.

கடைசியாய் அவள் சொன்னதை நினைவுப்படுத்திப் பார்த்தான்.

'உங்களை மாதிரி ஒருத்தரா இருந்தா காதலிக்கலாமே!'

அந்த வார்த்தைகள்தான் அவளை பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டிற்று. அவள் அழைத்த எண்ணை வைத்தே அவளிடம் பேசிவிடலாம். மனம் ஏனோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது
தவறும் கூட. ஆனால் அந்த குரலையும் அவள் பேசியதையும் மறக்கவும் முடியவில்லை.

அவன் அலுவலகம் முழுக்க 'சாக்ஷி சாக்ஷி சாக்ஷி' என்று அவள் பெயரே ஒலித்துக் கொண்டிருந்தது.

ரேடியோ ஸ்கை அலுவலகத்தின் அப்போதைய ஹாட் டாபிக் சாக்ஷிதான் !

அந்தளவுக்கு மகிழ் தன் அலுவலகம் முழுக்க அவளை பற்றியே பேசினான்.

அவளை பார்க்க வேண்டும். மீண்டும் அவள் குரலைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் நாளடைவில் அவனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது.

ஒவ்வொரு முறை அவன் நிகழ்ச்சி தொகுக்கும் போதும், மீண்டும் அவள் தன்னிடம் பேசமாட்டாளா? என்ற எதிர்பார்போடு தொடங்கி ஏமாற்றமாய் முடிந்தது அவனுக்கு.

அனுபவத்திராத பார்க்காத விஷயங்களிலில்தான் ஈர்ப்பும் ஆர்வமும் அதிகம் என்ற அவனின் வார்த்தையே அவனுக்குள் எதிரொலித்தது.

அவளை பார்த்துவிட்டால் இந்த ஈர்ப்பும் ஆர்வமும் அடங்கிவிடலாம் என்று தோன்றியது.

அதே நேரத்தில் அவனை சுற்றியிருந்த நண்பர்களும் அந்த முடிவிற்கு தூண்டுதலாய் அமைந்திருந்தனர்.

கொஞ்சம் ரசனையோடும் அளவிடமுடியாத கற்பனைகளோடும் அவளை தேடும் முயற்சியில் தீவிரமாய் இறங்கினான் மகிழ்.

சென்னையில் நிகழும் அத்தனை கச்சேரிகளின் பட்டியலும் ரேடியோ ஸ்கையில் குவிந்திருந்தது.

சுலபமான தேடலாக இல்லையெனினும் அது சுவராஸ்மாகத்தான் இருந்தது.

அவனுடைய அலுவலகத் தோழி ஷாலினி நேரடியாக இதுப்பற்றி அவனிடம் கேட்டுவிட்டாள்.

"யாரு என்னன்னு தெரியாத அந்த பொண்ணுக்காக இவ்வளவு சீன் தேவையா? ஜஸ்ட் லீவ் திஸ் மேட்டர்.. மகிழ்" என்றாள் ஷாலினி.

"முடியல ஷாலு... அவ கிட்ட நான் பேசி ஒன் மன்த் ஆயிடுச்சு... அதுக்கப்புறம் எவ்வளோ ஷோஸ்ல எத்தனையோ நேயர்கள்கிட்ட பேசிட்டேன்... ஆனா அவ வாய்ஸ்... அவ கூட பேசினதை என்னால மறக்கவே முடியல... ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது... அவ வாய்ஸ்ல ஏதோ மேஜிக் இருக்குனு தோணுது" என்றவனின் முகத்தில் வெளிப்பட்ட தவிப்பை ஷாலினி உற்றுக் கவனித்தாள்.

அவன் அவளை பற்றிப் பேசும் போதெல்லாம் ஏதோ விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறான் என்றே எண்ணியிருந்தாள்.

ஆனால் இத்தனை ஆழமாய் அவனுக்குள் அவள் பதிந்திருப்பாள் என்பதை ஷாலினியால் நம்பவேமுடியவில்லை.

அருகாமையில் இருந்தும் தான் அவன் மனதை ஈர்க்காமல் போனதன் காரணம் என்ன?

இந்த கேள்வி அவள் மனதை துளைத்தெடுத்தது.

மகிழை பார்த்த முதல் நாளிலயே ஷாலினிக்கு அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.

அவன் பேசினாலோ கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ற வசீகரம்.

என்னதான் ஒருவன் ஆண் அழகனாய் இருந்தாலும் அவனோடு பொருந்தும் ஆண்மை நிறைந்த குரல்நயம் அவனை இன்னும் ஆளுமையோடு காட்டுமே !

அதோடு அல்லாமல் அவன் கண்ணியமாய் பழகும் விதமும் கலகலப்பாய் பேசும் விதமும் என எல்லாப் பெண்களையும் அவன் கவரும் குணவியல்பு கொண்டவன்.

அந்த அலுவலகத்தின் கண்ணன் என்று கூட சொல்லலாம். அங்கே இருந்த எல்லாப் பெண்களுக்கும் அவன் மீது ஈர்ப்பு!

ஆனால் அவன் பழகியவிதத்தில் ஷாலினிக்கு எப்போது அவன் மீதான ஈர்ப்பு காதலாய் உருவெடுத்தது என்று அவளுக்தே தெரிந்திருக்கவில்லை.

ஆனால் ஏனோ காதலை சொல்ல முடியாமல் தயங்கியிருந்தாள். அவனுடனான நட்புறவு பறிப் போய்விடுமோ என்ற பயம்.

ஆனால் ஒரே ஒரு முறை பேசிவிட்டு யாரென்றே தெரியாத பெண் அவள் காதலனை தட்டிப் பறிக்கப் பார்க்கிறாள்.

பார்க்காமலே சாக்ஷி என்ற பெண்ணின் மீதும் அந்த பெயரின் மீதும் அதீத வெறுப்பு ஏற்பட்டிருந்தது ஷாலினிக்கு!

இத்தனை விதமான யோசனையில் ஆழ்ந்திருந்த ஷாலினியின் தோள்களை பிடித்து உலுக்கினான் மகிழ்.

"என்னாச்சு ஷாலு ?"

அவனை நிமிர்ந்து பார்த்து சுதாரித்தவள் "நத்திங்.." என்றாள்.

யோசனையோடு அவளை பார்த்தவன் பின் இயல்பு நிலைக்கு திரும்பி
அவளிடம் தன் கையிலிருந்த டிக்ட்ஸை காண்பித்தான்.

"என்ன மகிழ் இது ?" என்று வியப்பாக அவள் கேட்க

"கச்சேரி டிக்ட்ஸ்... ஆனிதா ராமக்கிருஷ்ணன் கச்சேரி... சாக்ஷின்னு ஒரு பொண்ணு இந்த கச்சேரில வீணை வாசிக்கிறதா நம்ம சரண் விசாரிச்சி டிக்ட்ஸ் வாங்கிட்டு வந்து தந்தான்"

ஷாலுவிற்கு இதை கேட்டு இடியே விழுந்தது தலையில். சரண் மட்டும் இப்போது கையில் சிக்கினால் அதோகதிதான். மனதிற்குள்ளேயே அவனை வறுத்து எடுத்தபடி மீண்டும் மௌனமானாள்.

"ஏ ஷாலு... என்ன பிரச்சனை உனக்கு... நான் பேசிட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பேட்டரி காலியான போஃன் மாதிரி தானே ஆஃபாயிடிற... என்ன விஷயமாயிருந்தாலும் வாயை திறந்த சொல்லித் தொலை... எதுக்கு இப்படி மைன்ட் வாய்லயே பேசிட்டிருக்க ?!" அவள் முகம் பாவனையாலும் மௌனத்தாலும் எரிச்சலாக கேட்டவனை அப்பாவியை பார்த்தவள்,

"அதில்ல மகிழ் ? நீ தேடிற சாக்ஷி அந்த பொண்ணாதான் இருக்குமான்னு யோசிச்சிட்டிரூந்தேன்"

"அதை வாய் திறந்த சொல்லி இருக்கலாம் இல்ல... இதுல என்ன உனக்கு மைன்ட் வாய்ஸ் ?" என்றவன் சற்று நிதானித்து "நீ கேட்கிறதிலயும் பாயின்ட் இருக்கு... ஆனா நான் அந்த பொண்ணுக்கிட்ட பேசினா கண்டிப்பா கண்டுபிடிச்சிருவேன்... அவ வாய்ஸ் நல்லா எனக்கு ஞாபகம் இருக்கு... " என்று அவன் சொல்லி முடிக்க அவள் உள்ளுக்குள் காயப்பட்டு நின்றாள்.

ஆனால் அவனிடம் அதனை காண்பித்து கொள்ளவில்லை.

பொறுமையாய் அவன் முகத்தை ஏறிட்டவள் "நான் கேட்கிறனேன்னு தப்பா எடுத்துக்காதே மகிழ்... நீ அவளை லவ் பன்றியா ?!" என்றதும்

மகிழ் இயல்பாய் புன்னகையித்து
"சே... இல்ல... ஜஸ்ட் ஒரு க்யூர்யாஸிட்டி... அவளை பார்க்கனும் அவ்வளவுதான்" என்றான்.

"அவ்வளவுதானா ??"

"ஹ்ம்ம்ம்" என்று தோள்களை குலுக்கினான். ஷாலினியின் மனதின் பாரம் முற்றிலுமாய் இறங்கியது.

அவன் தெளிவாகத்தான் இருக்கிறான்.

தான்தான் குழம்புகிறோம் என்று எண்ணியவள் நிம்மதியடைந்து "ஒகே... போய் பார்த்துட்டு வா... குட் லக்" என்றாள்.

"என்ன விளையாடிறியா? நீயும் என் கூட வர" என்றான் அதிகாரமாக!

"நானா?" என்று விழிகள் அகல விரிய ஷாலினி பார்க்க மகிழ் தீர்க்கமாய்

"எஸ்... நாளைக்கு ஈவினிங் பைஃவ் ஓ க்ளார்க்... உன் வீட்டிலயே வந்தே பிக்அப் பண்ணிக்கிறேன்... ரெடியா இரு" என்று சொல்லியபடி வெளியேறியவன் மீண்டும் கதவருகில் நின்று "ஷாலு மறந்திராதே ... நாளைக்கு ஈவனிங்" என்றான்.

"ஹ்ம்ம்" என்று ஆர்வமாய் தலையை அசைத்தாள்.

அவனுடன் வெளியே செல்லப் போகிறோம் என்று அவள் மனம் குதுகலித்திருந்தது.

நாளைய அந்த சந்திப்பு அவள் மகிழ் மீது கொண்ட காதலின் ஆணிவேறையே அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்த்திருப்பாளா? !

********
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அந்த பெரிய அரங்கிற்குள் இருவரும் நுழையும் போதே நேரம் கடந்திருந்தது.

ஷாலினியும் மகிழும் தத்தம் அவர்களின் இருக்கையை தேடி அமர்ந்தனர். இருக்கை சற்று பின் தள்ளியிருக்க மேடையில் அமர்ந்திருப்பவளை எப்படி பார்ப்பது என்று ஏக்கமாய் அமர்ந்திருந்தான்.

அவன் எண்ணம் புரிந்தவளாய் "கச்சேரி முடிந்ததும் மீட் பண்ணி பேசிட்டு போலாம்... டோன்ட் வொர்ரி" என்று சொல்லி தன் கரத்தை அவன் கரம் மீது வைத்தாள்.

நட்பு ரீதியான தொடுகை என்று அவன் இயல்பாக எடுத்துக் கொண்டாலும், ஷாலினி காதல் உணர்வோடுதான் அவன் கரத்தை பற்றியிருந்தாள்.

அந்த அரங்கம் முழுக்கவும் கர்நாடக இசையின் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தீட்சணயமான ஒரு குரல் பாட்டிசைத்துக் கொண்டிருக்க அந்தப் பாடலின் பின்னிருந்து மீட்டப்பட்ட வீணையின் நாதம் உணர்வில் கலந்த உயிரை வருடிச் சென்றது.

ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் மீட்டப்படும் வீணையின் இசையே கேட்க அதன் தாளக்கதியில் மகிழ் தன்னிலை மறந்துகிடந்தான்.

இசை நிகழ்ச்சி முடியும் வரை அவன் விழிகள் திறக்கப்படாமல் அதனோடு இயைந்திருந்தன.

முடிவுற்ற பிறகும் சிலிர்ப்போடு மெய்மறந்திருந்தவனை ஷாலினி "மகிழ்" என்று அழைத்து இயல்பு நிலைக்கு இழுத்து வந்தாள்.

இயந்திரத்தனமான நம் வாழ்க்கயை இசையால் மட்டுமே நம்மை உயிரோட்டமாய் வைத்திருக்க முடியும். அத்தகைய இசைகளோடு தினமும் தன் நாட்களை கடப்பவன் எனினும் இந்த இசை அவனுக்கு ரொம்பவும் புதிது.

கொட்டும் அருவியில் நீராடி விட்டு வந்ததை போல தெளிவுப் பெற்ற மனதோடு விழிகளை திறந்தவனிடம் "கச்சேரி முடிஞ்சிடுச்சு" என்று ஷாலினி அறிவுறுத்தினாள்.

சட்டென மீண்டெழுந்தவன் சாக்ஷியை பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு, அரங்கத்திலிருந்து வெளியேறிய இசை நிகழ்ச்சி கலைஞர்களை காண ஓடினான்.

ஏதோ ஒரு உணர்வு சொல்லிற்று. அந்த வீணையை மீட்டியவள் அதே சாக்ஷிதான் என்று.

அவள் குரலில் மட்டுமல்ல... அவள் விரலிலும் ஏதோ மாயம் இருக்கிறது.

அங்கே நின்றிருந்த ஒரு இசைக்கலைஞரிடம் சாக்ஷியை பற்றி விசாரிக்க, அவர் முன்னே சென்றிருந்த இரு பெண்களை சுட்டிக்காட்டினார்.

அந்த இருபெண்களில் ஒருத்தி உயரமாய் சிவப்பு நிற பட்டு சேலையில் சென்றுக் கொண்டிருக்க அவன் செல்வதற்கு முன்னே ஷாலினி அவன் கரத்தை பற்றிக் கொண்டாள்.

"நான் முதல்ல போய் பேச்சுக் கொடுக்கிறேன்... நீ பொறுமையா இரு" என்றாள்.

"ஷாலு" என்று தவிப்பில் கிடந்தவனை விடாமல் மேலும்

"ரொம்ப முக்கியமான விஷயம்... நீதான் மகிழ்... அவளை நீ தேடி வந்திருக்கன்னு தெரிய வேண்டாம்... சும்மா நார்மலா பேசிற மாதிரி பேசிட்டு போயிடுவோம்" என்றாள்.

ஷாலினி சொன்னதை எல்லாம் கேட்டு மகிழின் மனதிலிருந்து ஆர்வமும் உற்சாகமும் குன்றிப் போனது.

அவன் நடையின் வேகம் குறைய ஷாலினி முன்னேறிச் சென்று "சாக்ஷி" என்றழைக்க அந்த இருப்பெண்களும் அந்த அழைப்பை ஏற்று திரும்பினர்.

அவர்களில் ஒருத்தி இயல்பான பாணியில் சுடிதார் அணிந்திருக்க, அவளருகில் சிவப்பு நிற சேலையில் நின்றிருந்தவள்தான் சாக்ஷி என்று கணித்தனர்.

பெண்களின் இயல்பான உயரத்தை மிஞ்சிய உயரம். அழகின் அத்தனை அம்சமும் நிறைந்த அந்த முகத்தின் வசிகரத்தை பார்த்து ஷாலினி அசந்து நிற்க மகிழ் அவளின் காதோரம் "பேசு ஷாலு" என்றான்.

ஷாலினியும் புன்னகை ததும்ப "நீங்கதான் மிஸ். சாக்ஷியா? " என்று கேள்வியோடு தொடங்க

சாக்ஷி தன் தோழி மாயாவின் புறம் திரும்பி குழப்பமாய் யாரென்று கேட்டாள்.

அவள் "தெரியலையே" என்று சொல்லிவிட்டு ஷாலினியிடம் "நீங்க யாரு ?" என்று கேள்வி எழுப்பினாள்.

ஷாலினி ஆர்வமாய் "அது... அவங்க வாசிப்புக்கு நானும் என் ப்ரண்டும் பேஃன்ஸாயிட்டோம்... அவ்வளவு நல்லாயிருந்துச்சு" என்றதும்

மகிழும் தன் தோழியோடு சேர்ந்து "ஆமாம்... உங்க மியூசிக் அப்படியே மெஸ்மரைஸ் பண்ணிடுச்சுங்க... இட்ஸ் அ கிரேட் பீஃலிங்... ரொம்ப நல்லா இருந்துச்சு" என்றான்.

அடுத்த கணமே சாக்ஷியின் முகமெல்லாம் பொலிவுற "ஏ... நீங்க ஆர் ஜே மகிழ்தானே" என்று கேட்டாள்.

ஷாலினியின் முகம் வியப்பாய் மாற, அப்போது மகிழின் முகம் குழப்பமாய் பார்த்தது.

சாக்ஷியின் பார்வை அவனை நேர்கொண்டு பார்க்கவில்லை என்பதுதான் அந்த குழப்பம்.

அருகில் நின்றிருந்த அவள் தோழியிடம் அவன் சமிஞ்சையால் அவள் பார்வையை பற்றி கேட்க மாயாவும் அவன் கேள்வி புரிந்து ஆமோதித்தாள். இதனை ஷாலினியும் உணர்ந்துக் கொள்ள , இருவரும் அதிர்ச்சியில் நின்றனர்.

அவர்களின் மனநிலையை உணர்ந்திராத சாக்ஷி "நான் தப்பா கேட்டிட்டேனா நீங்க மகிழ் இல்லையா? !" என்று கேட்கவும் அவன் சற்று நிதானித்து "எப்படி கண்டுபிடிச்சீங்க" என்று கேட்கவும் "அப்போ நீங்கதான் மகிழா ?" என்று கேட்டு கன்னங்களில் குழி விழ குழந்தைத்தனமாய் புன்னகைத்தாள்.

"ஆமாம் நான் மகிழ்தான்" என்றதும்

மாயா திகைப்பாய் பார்த்தபடி "நிஜமாவா... என்னால நம்பவே முடியல... உங்க ஷோஸ் எல்லாம் சாக்ஷி மிஸ் பண்ணாம கேட்பா... எங்களையும் கேட்க சொல்லி டார்ச்சர் பண்ணுவ" என்றதும் தோழியின் கரத்தை கிள்ளினாள் சாக்ஷி.

"பொய் சொல்றா... எங்க ஹோம்ல இருக்கிற எல்லோருக்குமே உங்க ஷோஸ்னா ரொம்ப பிடிக்கும் மகிழ் சார்... ரொம்ப நல்லா நடத்திறீங்க... ஐ லவ் இட்"

அந்த இருதோழிகள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்க, அவனோ அவள் பார்வையற்றவள் என்பதை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் நின்றிருந்தான்.

சாக்ஷி நிறுத்தாமல் "நான் கூட உங்ககிட்ட ஒரு தடவை பேசியிருக்கேன்... லாஸ்ட் மன்த் நடத்தினிங்களே... அந்த லவ்வர்ஸ் டே ஷோ... வீணையடி நீ எனக்கு கவிதை.. ஞாபகம் இருக்கா ?" என்று கேட்கவும் மகிழின் முகத்தில் புன்னகை அரும்பியது.
மறந்தால்தான் அவன் ஞாபகப்படுத்திக் கொள்ள...

மாயா தன் தோழியிடம் "அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்... எவ்வளவு பேரோட பேசிறாரு" என்றாள்.

"ஆமாம் இல்ல" என்று தன் தோழி சொன்னதை ஏற்ற சாக்ஷியின் முகம் அப்போது வெளிப்படுத்திய ஏமாற்றத்தை அவன் கூர்ந்து கவனித்தான்.

அவளின் முகம் உணர்ச்சி பெட்டகம்தான். அவளின் மனஉணர்வுகளையும் எண்ணங்களையும் அப்படியே அப்பட்டமாய் பிரதிபலித்தது.

சாக்ஷி அந்த ஏமாற்றத்தை தனக்குள் மறைத்துக் கொண்டவள் அவனிடம் "என்ன மகிழ் சார்.. படபடவென பேசுவீங்க.. இப்போ எதுவும் பேசும் அமைதியா இருக்கீங்க" என்று கேட்டாள்.

"உங்க ம்யூசிக்கை கேட்டதிலிருந்து எனக்கு பேச வார்த்தையே வரல சாக்ஷி... ஐ பிகேம் டம்ப்..." என்றான் மகிழ்.

"நீங்க என்னை போய் புகழ்ந்திட்டிருக்கீங்க... பாட்டு பாடினது அனிதா மேடம்தான்... நீங்க நியாயமா அவங்களைதான் பாராட்டனும்"

"அந்த குரலுக்கே உயிர் கொடுத்தது நீங்கதான் சாக்ஷி... அதாவது உங்க வீணையும் அதை மீட்டின உங்க விரலும்தான்"

இந்த புகழ்ச்சியை எப்படி எடுத்து கொள்வது என்று புரியாத நாண உணர்வு.. அதுவும் மகிழ் குரலில் கேட்கும் போது அவள் திக்குமுக்காடிதான் போனாள்...

அவனிடம் "ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைத்தட்டலும்தான் பெரிய ஊக்கம்... இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷம் இருக்கு மகிழ் சார்... அதுவும் நீங்க புகழும் போது எனக்கு அப்படியே பறக்கிற மாதிரி உணர்வுதான்.. தேங்க் யூ ஸோ மச்" என்றாள்

அப்போது மாயா அவள் கரத்தை பற்றி "டைமாச்சு சாக்ஷி கிளம்பலாமா ?" என்று மெலிதாய் கேட்க

ஷாலினிக்கு இப்போதுதான் மனம் நிம்மதிபெற்றது.

அவளும் மகிழிடம் "போலாம் மகிழ்" என்றாள்.

ஆனால் மகிழுக்கு சாக்ஷிக்கும் ஏனோ அந்த பிரிவை ஏற்க முடியாத தவிப்பு

இருந்தாலும் வேறு வழியின்றி சாக்ஷி "இப்போ நாங்க கிளம்பிறோம்... இன்னொரு சமயம் பேச வாய்ப்பு கிடைச்சா நிறைய பேசுவோம்" என்றாள்.

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

ஷாலு மட்டும் புன்னகையோடு "நாங்களும் புறப்படிறோம்...நீங்க சொல்ற மாதிரி இன்னொரு தடவை மீட் பண்ண முடிஞ்சா... பார்க்கலாம்" என்றாள்.

இரு தோழிகளும் தங்கள் வழியே திரும்பி நடக்க மகிழ் "சாக்ஷி" என்று குரல் கொடுத்து அவர்களை நிற்க செய்தான்.

ஷாலினி அவன் கரத்தை பிடித்து "என்ன மகிழ் ?" என்று கேட்கும் போதே மாயாவும் சாக்ஷியும் அவன் புறம் திரும்பினர்.

ஷாலினியின் கையை விலக்கிவிட்டு அவன் முன்னேற,

சாக்ஷி புன்முறுவலோடு "என்ன மகிழ் சார்?" என்று கேட்டாள்.

அவன் "சாக்ஷி" என்று சொல்லி லேசாய் தயங்க "சொல்லுங்க" என்றாள்.

"அது... நான் உங்களை தேடிதான் இங்க வந்தேன்" என்றான்.

மாயா அவனை புரியாமல் பார்க்க சாக்ஷி குழப்பத்தோடு "என்னை தேடி வந்தீங்களா ? எதுக்கு? " என்று கேள்வி எழுப்ப

"இந்த வீணை நாயகி எப்படி இருப்பீங்கன்னு பார்க்கலாம்னு"

சாக்ஷியால் அவன் எண்ணத்தை கணிக்க முடியாமல் நிற்க

அவன் புன்முறுவலோடு "என்னை மாதிரி ஒருத்தர் கிடைச்சா காதலிக்கலாமேன்னு கேட்டீங்களே சாக்ஷி... ஏன் என்னை மாதிரி ஒருத்தர்... உங்களை தேடி இந்த மகிழே வந்திருக்கேன்... காதலிக்கலாமா ?!" என்று கேட்க

சாக்ஷி அதிர்வோடு நின்றாள்.

மாயா அவன் பரிகசிக்கிறானோ என்று எண்ணி "அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லிட்டா மகிழ் சார்... ப்ளீஸ் தப்பா எடுத்துக்க வேண்டாம்... நான் வேணா அவளுக்கு பதிலா மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று சொல்லவும் சாக்ஷி மௌனமாய் நின்றிருந்தாள்.

அவன் அந்த இருதோழிகளையும் நோக்கி "ஏன் மன்னிப்பு கேட்கனும்... மனசில பட்டதை சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கு... அதே போல என் மனசுல பட்டதை சொல்ல எனக்கும் உரிமை இருக்கு...?" என்றதும் என்ன பேசுவதென்றே புரியாமல் இருவரும் நிற்க அவனே மேலும் தொடர்ந்தான்.

"உங்க முடிவை நீங்க பொறுமையா யோசிச்சி சொல்லுங்க சாக்ஷி... நீங்க என்னோட ஷோவுக்கே கால் பண்ணி சொன்னாலும் சரி... இல்லன்னா என் பெர்ஸன்ல் நம்பருக்கு கால் பண்ணாலும் சரி..." என்று சொல்லி தன் தொலைப்பேசி எண்ணை அவளின் மனதில் பதியுமாறு ஒவ்வொரு எண்ணாய் உரைத்தான்.

சாக்ஷி தன் மௌனத்தை கலைக்காமல் அழுத்தமாகவே நின்றாள்.

மகிழ் "நான் கிளம்பிறேன் சாக்ஷி" என்றவன் அவளின் தோழியின் புறம் திரும்பி "உங்க பேர்?" என்று கேட்க அவள் "மாயா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

"ஒகே மாயா... சீ யூ..." என்றவன் ஷாலினியின் புறம் திரும்பி போகலாம் என தலையசைத்துவிட்டு முன்னேறிச் சென்றவன், தன் தோழியின் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீரை கவனிக்க தவறினான்.

அவன் மனமோ முழுமையாய் சாக்ஷியின் மீதான காதலில் அல்லவா திளைத்திருந்தது.

ஷாலினிக்கு நடந்தவற்றை எதுவும் விளங்கவில்லை.

வெறும் க்யூரியாஸிட்டி என்று சொல்லிவிட்டு இப்போது அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில் காதலிக்கிறேன் என்று சொல்வானேன்? அதுவும் பார்வைற்றவள் என்று தெரிந்தும் சொன்னதை ஷாலினியால் ஏற்கவே முடியவில்லை.

அவளின் மனம் அடங்காத கொந்தளப்பில் கிடக்க, அதுபற்றிய எந்த விவாதமும் செய்யாமல் அவனுடன் மௌனமாய் புறப்பட்டாள்.

*********
சாக்ஷியின் நினைப்பில் இருந்து மகிழால் விடுபடவே முடியவில்லை.

அவள் இல்லையென்பதை முழுமையாய் அவன் மனதால் ஏற்கவும் முடியவில்லை.

அவளின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தவன் சட்டென்று சாக்ஷியின் தோழி மாயாவை பற்றி எண்ணிக் கொண்டான.

இருவரும் ஒர் கருவில் ஜனித்திருக்கவில்லை. மற்றபடி ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகள் போல எப்போதும் ஒன்றாகவே இருந்தனர்.

மாயாவுக்கும் சாக்ஷியின் மரணம் பேரிழப்பாய் இருக்கும் என்றெண்ணி வருந்தமுற்ற அதே நேரத்தில் சாக்ஷியின் விபத்து குறித்து மாயாவால் மட்டுமே சரியாக சொல்ல முடியும் என்று எண்ணம் தோன்ற, அவளை பார்க்க அவசரமாய் புறப்பட்டான்.

அவன் சகோதிரி எழிலோ அவனை வெளியே செல்ல அனுமதியாமல் எங்கே ஏதென்று ஆயிரம் கேள்விகள் கேட்டு குடைந்தெடுத்தாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவன் விரக்தியில் ஏதேனும் தவறாய் செய்து கொள்வானோ என்ற முன்னெச்சரிக்கை கொண்டே அவள் அப்படி நடந்து கொள்ள, எப்படியோ சாதுர்யமாய் சகோதிரியை சமாளித்துவிட்டு மகிழ்
சாரதா இல்லத்தை வந்தடைந்தான்.


அந்த இல்லமே சாக்ஷியின்
இறப்பால் சோகத்தில் மூழ்கியிருந்தது.


அவன் வேதனையோடும் வலியோடும் அந்த இல்லத்தை பார்வையிட்டபடி நடந்து வந்தான்.

அவன் வந்துக் கொண்டிருப்பதை மாயாவின் விழிகள் கண்டுக்கொள்ள, அவளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ரௌத்திரமாய் எழ ஆரம்பித்தது.

அவனை நோக்கி சீற்றமாய் வந்தவள் அவனின் சட்டையை பிடித்து உலுக்கியபடி "சாக்ஷியை என்ன பண்ணிங்க மகிழ்? " என்று அழுகையோடு கேட்க,

அவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான்.

ஹாய் மக்களே,

போன அத்தியாயத்தில் உங்களின் கருத்துக்கும் ஆதரவிற்கும் என்னை உளமார்ந்த நன்றி.

எப்படி என்னவென்று புரியாத இந்த கதையின் ஓட்டம் மெல்ல மெல்ல உங்களுக்கு புலப்படும். கதாநாயகன் அல்லது நாயகிதான் கதையை நகர்த்தி செல்ல வேண்டுமா என்ன ?

இந்த கதைகளம் அதன் போக்கில் பயணிக்கும். நாமும் சேர்ந்து பயணிப்போம்.

அழுத்தமான சோகமான கதை என்று எண்ணாமல் இயல்புதன்மையோடு பயணிக்கும் கதை இது என்றெண்ணி படியுங்கள்.

இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களில் கதையின் போக்கே மாறும்.

மறவாமல் லைக்ஸ் மற்றும் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Shalini View attachment 936
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
மோனிஷா டியர்
 




Last edited:

Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Thnq moni mam for a great epi(y)(y)romba arumaiyana ud:love:waiting for the next twist:p
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Nice ud moni dear konjam suspense oda poguthu but very interesting aduthu enna appadinu oru avala thunduthu seekiram adutha ud oda vanga pa waiting eagerly
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

சாக்ஷி மகிழை தேடி வந்தாரா,வந்த இடத்தில் இப்படி ஒரு கோர நிகழ்வு நடந்து விட்டதா,அதனால்தான் மாயா மகிழிடம் அப்படி கேட்கின்றாரா,மகிழுங்கள் தெரியாதா சாக்ஷி தன்னைத்தேடி வந்தது.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top