• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2௦
மாலை பொழுது மெல்ல மெல்ல மாறி இரவின் இருள் சூழ, நிலவின் ஒளியை மறைத்து கொண்டு வானில் கார் மேகங்கள் சூழ்ந்துக்கொள்ள அந்த இரவு பொழுதில் ரோஹித்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரோஹித் வீட்டில் இருந்த அனைவரும்..
மாலை பொழுதில் இருந்து ரோஹித்தைக் காணாமல் கீர்த்தி ஒரே யோசனையில் இருக்க அவளின் மனது மட்டும் ரஞ்சித் மேல் இருந்தது..
அவனிற்கு மனதில் பெரிய குழப்பம் சூழ்ந்து தலையைக் கைகளில் தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்க, கயல்விழி ஜீவாவை அழைத்துவர வெளியே சென்றிருக்க, காமாட்சி அபூர்வாவிற்கு சாதம் ஓட்டிக்கொண்டிருக்க, அவர்களையெல்லாம் ஒரு பார்வைப் பார்த்த கீர்த்தி..
“தாத்தா இங்கே என்ன நடக்குது கயல்விழி யார் என்று எனக்கு சொல்லவே இல்லையே..?” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டாள் கீர்த்தி..
“உன்னிடம் யாருமே சொல்லவில்லையா..? கயல்விழி மதுவின் தங்கை..” என்று சொன்னவர் அவளைப் பார்த்து புன்னகை செய்தார்..
“அது சரிங்க தாத்தா இங்கே எங்கே என்ன பிரச்சனை நடக்கிறது..?” என்று மெல்ல அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுக்க, அவர் அவளின் முகத்தை அர்த்தத்துடன் பார்த்தார்..
“இங்கே வாடா..” என்று அவளை அருகில் அழைக்க அவளும் பயத்துடன் அருகில் சென்று அமர, “மதுமிதா ரோஹித் காதலித்த பெண் என்பதும், அவளிடம் வளரும் அபூர்வா சக்திவேல் குழந்தை என்று எனக்கு தெரியும் கண்ணா..” என்று இடியை அவளின் தலையில் இறக்கியவர், அவள் பதில் சொல்ல துணிவு இல்லாமல் அமைதியாக அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டிருந்தாள்..
அவர் சொன்னதை கேட்டு நிமிர்ந்தவனின் மனதில் சூழ்ந்திருந்த குழப்ப மேகங்கள் விலகிச் செல்ல, ‘உனக்கு முன்னாடியே எனக்கு ரோஹித்தைத் தெரியும்..’ என்று சொன்னதின் அர்த்தம் இப்பொழுது அவனுக்கு புரிந்தது..
‘ரோஹித் மட்டும் தான் எதுவும் தெரியாமல் இருக்கிறனா..?! இல்லை அவனது அப்பா, அம்மாவிற்கும் உண்மை தெரியாதா..?! அபூர்வா இங்கே இருக்கிறாள் என்றால் அவளின் பெற்றோர் எங்கே..?! மதுமிதா இந்த குழந்தையை வளர்க்க காரணம் என்ன..?!’ மனதில் ஆயிரம் கேள்விகள் புடைசூழ அமைதியாக அமர்ந்திருந்தாள் கீர்த்தி..
“என்னம்மா பேச வார்த்தைகள் இல்லையா..? இந்த உண்மை இன்னமும் மதுவிற்கு தெரியாது.. அவளிற்கு உண்மை தெரிந்தால் அவளுடன் சேர்த்து அபூர்வாவையும் நாங்க இழக்க வேண்டும் கீர்த்தி..” என்று காமாட்சி கண்ணீரோடு சொல்ல கீர்த்திக்கும் கண்கள் கலங்கியது..
சின்ன வயது என்பதால் அபூர்வாவிற்கு இவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல் டிவியில் சொட்ட பீம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளிற்கு சாதம் ஒட்டிய காமாட்சி அவளிற்கு வாயைத் துடைத்துவிட்டு கையில் இருந்த கிண்ணத்தை சிங்கிள் போட்டார்..
“மதுவும் எங்களை விட்டு பிரிய கூடாது.. அபூர்வாவும் எங்களை விட்டு பிரிய கூடாது.. ஆனால் அவளின் மேல் ஏற்பட்ட கரையை போக்க வேண்டும்.. அவளை அவதூறாகப் பேசிய அனைவரும் அவளை மதிக்க வேண்டும்..” என்று அவளின் வாழ்க்கையை மனதில் வைத்து பேசினார்கள் பெரியவர்கள் இருவரும்!
“அதுக்கு அவளுக்கு திருமணம் தான் நடக்க வேண்டும் தாத்தா..” என்று கூறினான் ரஞ்சித்.. அவனின் மொழிக் கேட்டு நிமிர்ந்தார் சிவரத்தினம்..
“அவள் அதுக்கு சம்மதம் சொன்னால் அடுத்த முகூர்த்ததில் திருமணம் நடக்கும் ஆனால் அவள்தான் வேண்டாம்.. நான் இப்படியே இருக்கிறேன் என்று அடம் பிடிக்கிறாள்..” என்று சொல்ல,
“அவள் ரோஹித்தையும் வேண்டாம் என்கிறாளா..?!” என்று கேட்டான் ரஞ்சித்.. அவனது மனதில், ‘காதலித்தவனை வேண்டாம் என்று ஏன் சொல்கிறாள்..?!’ என்று யோசிக்க ஆரமித்தான்..
“என்னோட பேரன்கள் என்னை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருந்தாலும் கூட அவர்களின் விருப்பத்தை நான் அறிவேன்..” என்று சொல்ல, அவளின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது..
‘எனக்கும் இந்த மாதிரி ஒரு உறவு இல்லாமல் தனிமரமாக இருக்கிறேனே..!’ என்று மனதில் நினைக்க, அவளை அரவணைத்துக் கொண்டது சிவரத்தினத்தின் அன்பு கரங்கள்..
அவள் அதில் ஒரு பாதுகாப்பை உணர்ந்து கொள்ள கண்களில் கண்ணீர் சூழ அவரின் தோள்களில் சாய்ந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் கண்களுக்கு, அரவணைப்பு இல்லாத ஒரு ஆதரவு அற்ற ஒரு நான்கு வயது குழந்தை போலவே தெரிந்தாள்..
அவளை குழந்தை போல பார்த்தவன் கண்களுக்கு அவனின் சஞ்சனா தான் அவனின் கண்முன்னே தோன்றியது போல இருந்தது.. அவனது மனதில் ஒரு சிறிய சஞ்சலம் வந்தது..
“ரஞ்சித் உனக்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை.. கயல்விழியை எனக்கு எப்படி தெரியும்..?! என்று தானே யோசிக்கிறாய்..? நான் எங்கே இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்னோட பாதுகாப்பு வளையம் இருக்கும்..” என்று சொல்ல அவரின் அருகில் வந்து அவரின் மறுபக்கம் அமர்ந்துக் கொண்டான் ரஞ்சித்..
“மதுவும், அபூர்வாவும் உங்களோட பாதுகாப்பில் இருப்பது நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் தாத்தா..” என்று கண்கலங்க, அவன் கண்ணீர் அவளின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது..
இவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து காமாட்சி இடமிருந்து சிவரத்தினம் செல்லை வாங்கிக் கொண்டு அவர்களின் எதிரே வந்த அபூர்வா,
“பாட்டி நீங்க தாத்தாவின் பின்னாடி நில்லுங்க..” என்று கட்டளையிட அவளின் கட்டளைக்கிணங்க கணவரின் பின்னோடு வந்து நின்றார் காமாட்சி..
“ஸ்மைல் பிளீஸ்..!” என்று அவர்களை போட்டோ எடுத்தாள் அபூர்வா.. அதில் அனைவரின் முகமும் மலந்திருக்க, ரஞ்சித் – கீர்த்தி இணைந்த முதல் புகைப்படமாக சிவரத்தினம் செல்லில் பதிவானது அழகிய புகைப்படம்! இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் கயல்விழியும், ஜீவாவும்..!
“சூப்பர் போஸ் தாத்தா..” என்று அவர்களைப் பாராட்ட, “தாங்க்ஸ் செல்லம்..!” என்று கோரஸாகச் சொன்னவர்கள் இருவரும் உள்ளே வருவதைப் பார்த்து காமாட்சி,
“இருவருக்கும் ரொம்ப நல்ல ஜோடி பொருத்தம்..!” என்று சொல்ல அப்பொழுதுதான் இருவரையும் திரும்பிப் பார்த்த கீர்த்தி, ‘ரொம்ப நல்ல ஜோடி..’ என்று மனதில் நினைத்தவள்,
“தாத்தா இவரு யாரு தாத்தா.. புது புது கேரக்டர் இன்றோ கொடுத்தா நான் எப்படி கண்டு பிடிப்பது..?” என்று அழுவது போல கேட்ட கீர்த்தியிடம் சிவரத்தினம்,
“உனக்கு மட்டும் இல்ல கீர்த்திமா.. எனக்கும் இவரு யார் என்று தெரியவில்லை.. நம்மளோட நிலையை விடவும் உன்னோட பாட்டியின் நிலையை நினைத்து பாரும்மா..” என்று அவரும் அழுகுரலில் சொல்ல, காமாட்சியைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஐயோ பாவம் தாத்தா பாட்டி..!” என்று அவளும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவர்கள் அருகில் இருந்த ரஞ்சித்,
“நல்ல தாத்தா! நல்ல பேத்தி!” என்று சர்டிபிகேட் கொடுத்தான் ரஞ்சித்!
“ஹலோ இஞ்சி இந்த கீர்த்தி பற்றி உனக்கு தெரியாது.. என்னோட இன்னொரு முகம் பற்றி ரோஹித் இடம் கேட்டுப் பாரு..” என்று மிரட்ட,
“நீ மட்டும் தான் என்னோட பெயரை கொலை செய்யாமல் இருந்தாய்.. இப்பொழுது நீயுமா..?” என்று அவனின் தலையைக் கைகளில் தாங்கியதைப் பார்த்து கலகலப்பாக சிரிக்க ஆரமித்தாள் கீர்த்தி..
அவளின் முகத்தில் புன்னகையைப் பார்த்த ரஞ்சித், ‘உன்னை பார்க்கும் போது எல்லாம் என்னோட சஞ்சனா முகம் என் கண்முன் வந்து போகும் காரணம் தான் என்ன..?’ என்று அவனின் மனதிடம் அவனே கேட்டுக் கொண்டான்..
அவனின் பார்வை தன் மேல் படிவத்தைக் கவனித்த கீர்த்தி, ‘என்ன..?!’ என்று அவனைப் பார்த்து ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்த ‘ஒன்றுமில்லை!’ என்று தலையசைத்தான் ரஞ்சித்..!
இவர்களின் மனதில் இவர்களே அறியாமல் ஒரு அழகிய புரிதல் அழகாக மலர்ந்தது..! புரிதல் காதலின் முதல் படி அந்த படியில் விழிகளைத் துணையாகக் கொண்டு காதல் களத்தில் காலடி பதித்தனர் ரஞ்சித் – கீர்த்தி இருவரும்!
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“தித்தப்பா..” என்று உற்சாக குரல் கொடுத்தவண்ணம் அவர்களை நோக்கி ஓடிய அபூக்குட்டி மூலமாக, ஜீவா யார் என்று அறிந்துக் கொண்டனர் வீட்டில் இருந்தவர்கள்!
“ஜீவா கயல்விழியை காதலர்கள் தாத்தா.. ஆனால் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் மதுவைப் பார்க்க வந்திருக்கின்றனர்..” என்று ரஞ்சித் புன்னகையுடன் சொல்ல, ஜீவாவை நோக்கி ஓடி வந்த அபூர்வாவைத் தூக்கிச் சுற்றிய ஜீவா,
“குட்டிம்மாக்கு சித்தப்பா நிறைய பொம்மை வாங்கிட்டு வந்திருக்கிறேன்..” என்று அவளிடம் சிறிய பொம்மைகள் அடங்கிய பெட்டியைக் காட்டினான்..
“தித்தப்பா என்றால் தித்தப்பா தான்.. ஆனால் அம்மா சொன்னால் நான் வாங்கிக் கொள்கிறேன்..” என்று அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு சொன்ன அபூர்வாவைப் பார்த்து,
“எனக்கு மட்டும் தலையேழுத்து போல, வளர்ந்த குரங்கு ஒன்று அக்கா புராணம் பாடி ஔவையாரின் மறுபிறவி என்று என்னை நினைக்க வைக்கிறது என்றால் இந்த சின்ன வாண்டு அம்மா புராணம் பாடி சித்திக்கு மறுபிறவி நான்தான் என்று எனக்கு உணர்த்துகிறாள்..” என்று அவன் சொல்ல அவன் கூறியதைக் கேட்ட ரஞ்சித்,
“டேய் என்னோட குட்டிம்மா உனக்கு வாண்டா..?” என்று அவனும் கோபம் போல நடிக்க, அங்கே அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரிக்க ஆரமித்தனர்..
“தித்தப்பா..!” அபூர்வா பல்லைக் கடிக்க, கயல்விழி அவனின் தலையில் கொட்டினாள்.. “ஸ்ஸ் லூசே எதுக்குடி இப்படி கொட்டுகிறாய்..?” என்று அவன் தலையைத் தேய்த்துக் கொள்ள, இதைப் பார்த்து கொஞ்சம் அடங்கிய சிரிப்பலை மீண்டும் தொடர்ந்தது..
கீர்த்தியின் செல் அடிக்க அதை எடுக்க சென்ற கீர்த்தி திரையில் ஒளிர்ந்த என்னைப் பார்த்து செல்லை எடுத்தவள்,
“தாத்தா என்னோட தோழி அமெரிக்காவில் இருந்து போன் செய்கிறாள் நான் பேசிவிட்டு வருகிறேன்..” என்று செல்லை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்
“என்ன தாத்தா ரோஹித் இன்னும் காணவில்லை..?!” என்று கேட்க, “அவனை எதுக்கு நீ தேடுகிறாய்..?” என்று கேட்டான் ரஞ்சித்..
“ஆமா ரோஹித் யார் கயல்விழி..?!” என்று இருவருக்கும் இடையில் புகுந்து கேள்விக் கேட்டான் ஜீவா.. அவனை கோபத்துடன் பார்த்தாள் கயல்விழி..
“ரோஹித் என்னோட அக்காவின் காதலன்..!” என்று கோபத்துடன் மெல்ல கூறியவளிடம், “இப்பொழுது எங்கே இருக்கிறார்..?!” என்று அடுத்த கேள்வியை கேட்டவனை எரிப்பது போல பார்த்தாள் கயல்விழி!
‘இந்த சிடுமூஞ்சியைக் கட்டிக்கொண்டு நான் என்ன பாடு படப்போகிறேனோ..?! அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்!’ என்று மனதிற்குள் ரன்னிங் கமென்ட் கொடுத்தான் ஜீவா..
அவளின் கண்களில் இருந்து வெளிப்பட்ட அனலைக் கண்டு, “தாத்தா அனல் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது இல்ல..?” என்றவர் அவரைப் பார்த்து குறும்பாக புன்னகை செய்ய,
அவனின் குறும்பைக் கண்டுகொண்டவர், “சரியான அனல் ரஞ்சித்.. அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டதா..?” என்று இருவரும் சீரிசாக பேசிக்கொள்ள,
“மழைக்காலத்தில் அக்னி நட்சத்திரமா..? என்னங்க உங்களுக்கு என்ன லூசா..?!” என்று கேட்டார் காமாட்சி, ‘ஐயோ!’ என்று சிவரத்தினம் தலையில் அடித்துக்கொள்ள அதுவரை சிரிப்பை அடக்க போராடியவன், சத்தமாக சிரித்துவிட்டான்..
அவன் சிரிப்பதைப் பார்த்து கயல்விழி திரும்பிப் பார்க்க, காமாட்சி மட்டும் இருவரையும் பார்த்து, “நான் என்ன தப்பாக கேட்டுவிட்டேன்..?!” என்று கேட்டார்..
“அம்மா தாயே! நீ எதுவும் தப்பாகவே கேட்கவில்லை.. நாங்க தான் லூசு போல பேசுகிறோம்.. நீ போய் சமையலை பாரும்மா.. பேரபிள்ளை எல்லாம் வந்திருக்காங்க..” என்று அவர் கையெடுத்து கும்பிட,
“தாத்தா நீங்களா இது..?” என்று கேட்டுவிட்டு அபூர்வா சிரித்தாள்.. ரஞ்சித் வயிற்றைப் பிடித்துக்கொண்டு மீண்டும் சிரிக்க ஆரமிக்க, அவனின் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்தவனை அதிசயத்தைப் பார்த்து போல பார்த்தாள் கயல்விழி..
அவளின் பார்வையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்த ஜீவா, “ரஞ்சித் சிரிக்கவே மாட்டாரா..?!” என்று கேட்டதற்கு, “சஞ்சனா இருந்தவரையில் இவர் சிரிக்காமல் இருந்ததே இல்லை.. ஆனால் அவர் போன பிறகு அண்ணா சிரிப்பதே இல்லை..” என்று கண்கலங்க கூறினாள் கயல்விழி..
ஜீவாவும் ரஞ்சித் தன்னை மீறி சிரிப்பதைப் பார்த்து சந்தோசம் கொண்டான்.. இந்த உலகத்தில் மற்றவர் அழுவதைப் பார்த்து அவர்களின் கண்ணீர் மூல சந்தோசமாக இருப்பார்கள்..
ஆனால் இவர்கள் மற்றவர் மனம் விட்டு சிரிப்பதை பார்த்து சந்தோசம் கொள்கின்றனர்.. இவர்கள் போல ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தால் அனாதை என்கின்ற எண்ணமே வராது மற்றவரின் மனதில்!
புன்னகை என்பது வாழ்க்கை நமக்கு கொடுத்த சிறந்த நோய் தீர்க்கும் மருந்து.. அதை நாம் உட்கொள்ள மற்றவர்களை வருத்துவதைக் காட்டிலும் மனம் மகிழ சிரிக்க வைத்து பார்க்கலாம்..! [அதுதான் இங்கே நடக்கிறது..!]
வீட்டை விட்டு வெளியே வந்த கீர்த்தி செல்லை எடுத்தவள், “ரோஹித் நீ எங்கே இருக்கிறாய்..?!” என்று கேட்டாள்..
“......................” அமைதியாக இருக்க, அவனின் அமைதியைக் கண்டு கீர்த்தி..
“ரோஹித் நீ மதுவின் வீட்டில் இருக்கிறாயா..?!” என்ற கேள்வியுடன் மதுவின் வீட்டை நோக்கி நடந்தாள்..
“...................” அவன் அமைதியாகவே இருக்க, அங்கேதான் இருக்கிறான் என்று உறுதி செய்துக் கொண்டு மதுவின் வீட்டின் வாசலிற்கு வந்தவளின் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள கதவுகள் உடைந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்..
அவள் அதிர்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைய அவள் வருவதைக் கவனித்தவன், “ஸ்ஸ்ஸ்..!” என்று எச்சரிக்கை செய்ய பயந்தே போனாள் கீர்த்தி..
அவனின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த மதுவைப் பார்த்து மனம் நிம்மதி அடைய, ‘என்னடா மது உன்னோட மடியில் படுத்து தூங்குகிறாள்..?!’ என்று சைகையில் கேட்டாள் கீர்த்தி..
‘அதெல்லாம் பிறகு சொல்கிறேன்..’ என்று செய்கை செய்தவன், ‘நீ இங்கேயே இரு கீர்த்தி நான் மதுவை படுக்க வைத்துவிட்டு வருகிறேன் என்று சைகையில் சொல்ல,
பக்கத்து சோபாவில் இருந்த தலையணையை எடுத்து வைத்தவன் அவளின் தலையை அதற்கு மாற்றிவிட்டு மெல்ல எழுந்தவன், குழந்தை போல உறங்குபவளை புன்னகையோடு பார்த்தவன்,
“உன்னோட காத்திருப்புக்கும், பொறுமைக்கு பரிசு காத்திருக்கிறது கண்ணம்மா காலத்தின் கைகளில்!” என்று சொன்னவன் கீர்த்தியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்..
“ரோஹித் என்னடா கதவு எல்லாம் உடைந்து கிடக்கிறது.. மது உன்னோட மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் நான் ஒரு நிமிஷம் பயந்தே போனேன் தெரியுமா..? அவளுக்கு என்ன பிரச்சனையோ என்று!” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளைப் பார்த்தவன்,
“இன்னும் ஒரு நிமிஷம் லேட்டாக வந்திருந்தேன் என்றால் மதுமிதா இறந்திருப்பாள் கீர்த்தி..” என்று கண்களில் கண்ணீர் தேங்க கூறியவனை பார்த்தவள்,
“என்னடா சொல்கிறாய்..?! மதுமிதா ரொம்ப தைரியமானவள் அவள் அப்படி செய்ய மாட்டாள்..” என்று அவள் பதட்டத்துடன் சொல்ல,
“அவளோட பலவீனம் என்னோட காதல்.. வெறும் பார்வையில் மட்டும் பத்து வருடம் காத்திருந்தவள்.. என்னோட ஒற்றைக் கேள்வியில் தற்கொலை அளவிற்கு சென்றிருக்கிறாள் என்றால் அவள் மனம் எத்தனை காயங்களை சுமந்திருக்கும்..?” என்று கேட்டவன்,
“நான் முடிவே பண்ணிவிட்டேன் கீர்த்தி.. அவளை இனிமேல் தனியாக விட்டால் அவளே ஏதாவது தவறான முடிவை எடுத்துவிடுவாள்..” என்று சொல்ல,
“சோ, என்ன செய்ய போகிறாய் ரோஹித்..?” என்று கேட்டாள் கீர்த்தி.. அவளிடம் எல்லாவற்றையும் சொன்னவன், “எனக்கு எல்லா உண்மையும் தெரிய வேண்டும் கீர்த்தி அதுவும் அவளாக சொல்ல வேண்டும்..” என்று சொன்னவன்,
அடுத்து நடக்க வேண்டியதைப் பட்டியலிட்டு சொல்ல, கீர்த்தியும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.. ரோஹித் திட்டம் தான் என்ன..?! இவர்கள் போட்ட திட்டம் வெற்றி பெறுமா..?!
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

கல்யாணம் நடக்கும் தானே
மது பெற்றோர் புரிஞ்சுப்பாங்களா
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
apoorva rohit anna ponnunu solliteenga parents enge:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:madhuvuku theriyatha sakthi rohit anna endru.........:rolleyes::rolleyes::rolleyes::rolleyes: nice epi sis
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top