• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 22
வானம் மெல்ல சிவக்க, இனிதான ஒரு விடியலைத் தேடி வானில் பறந்து சென்றது பறவைகள் தங்களின் இன்னிசை இசையுடன்! எங்கிருந்தோ வந்த கருங்குயிலின் கானம் மதுவிற்கு விழிப்பைக் கொடுக்க,
அவள் எப்பொழுதும் போல மகளின் முகத்தில் கண்விழிக்க, அவளின் மகளோ அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் மார்பில் துயில் கொண்டிருக்க அவளின் நெற்றியில் இதழ் பதித்து எழுந்தாள்..
அவளின் மனதில் நிம்மதி நிலை கொண்டு நிற்க, நேற்று செய்ய இருந்த காரியம் அவளின் மனதில் படமாக ஓட, மகளை அணைத்துக் கொண்டாள் மதுமிதா..
‘என்ன முட்டாள் தனமான காரியம் செய்ய இருந்தேன்.. நேற்று அவன் மட்டும் வரவில்லை என்றால்..?!’ என்ற கேள்வியில் அவளின் நெஞ்சம் ஜில் என்றது..
மார்பில் படுத்திருந்த அபூர்வாவின் முகம் பார்த்தவள், ‘உன்னை விட்டுவிட்டு நான் எங்கே செல்வேன் கண்ணம்மா.. என்னோட உயிர் உன்னோட பாசத்திலும் அவனது காதலிலும் கட்டுப்பட்டு கிடக்கிறது..’ என்றவள் மகளை அருகில் படுக்க வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தவள், குளித்து முடித்து பூஜை அறைக்குள் சென்றாள்..
தெய்வங்களின் மத்தியில் தெய்வமாக மாறிய மூன்று ஜீவன்கள் புன்னகை முகத்துடன் இருந்தவர்களின் முகம் பார்த்தவள், எப்பொழுது அவளது மனதில் தோன்றும் கேள்வியை மறுபடியும் எழுந்தது..
‘என்னோட வாழ்க்கையில் என்ன நடக்கிறது..?! ரோஹித்தை நான் காதலித்தேன்.. அது என்னோட தவற..? இல்ல அவரை நினைத்த மனதில் வேறு ஒருவரை நினைக்க முடியாமல் மதுரைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றது என்னோட தவற..? அங்கே உங்களுடன் நட்புக்கு கொண்டது என்னோட தவற..? இல்ல நீங்க மூவரும் இறந்த பின்னரும் அபூர்வாவிற்காக நான் வாழ நினைத்து தவற..? என்னோட பெற்றோரே என்னை நம்பாமல் போனது தவற..? இல்ல என்னோட விதியா..?’ என்று மனதில் அந்த புகைப்படத்தில் இருந்த மூவரையும் பார்த்து கேட்டாள்..
அந்த புகைப்படத்தில் இருந்தவர்களால் அவளைப் பார்த்து புன்னகைக்க மட்டும் முடிந்தது.. அந்த புன்னகை பார்த்து,
‘அபூர்வா தான் என்னோட வாழ்க்கை என்று வாழ ஆரமித்த பிறகு தனது மொத்த காதலின் சின்னமாக என் முன் அதே காதலுடன் வந்து நிற்கும் ரோஹித்.. அவனை நான் ஏற்றுக்கொண்டால் என்னோட காதல் வெற்றி அடைத்துவிடும்.. என்னோட காத்திருப்பு கைகூடிவிடும்.. ஆனால் அபூர்வாவை ஏற்றுக்கொள்ள அவனால் முடியுமா..?’ என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் பெருகியது..
‘தாயே ஆகாமல் தாயாக மாறினேன் என்னோட அபூர்வாவிற்காக..! என்னோட மொத்த பாசத்தையும் அவளின் மீது கொட்டி வளர்த்தேன்.. இப்பொழுது என்னோட ரோஹித்தை ஏற்கவும் முடியாமல் அபூர்வாவின் மீது வைத்த பாசத்தை உடைக்கவும் முடியாமல் சாக நினைத்தவளையும் சாகவும் முடியாமல் இருக்கும் ஒரு முடவனின் நிலை யாருக்கும் வரக்கூடாது!’ என்று மனதில் இருப்பதை எல்லாம் கொட்டியவள்
‘எனக்கு இருவரும் இரண்டு கண்கள்! ரோஹித் வேண்டும்.. அபூர்வாவும் வேண்டும்.. என்னால் ஒருவரை ஒருவருக்காக விட்டுக்கொடுக்க முடியாது..’ என்று மனதில் நினைத்தவள் ஒரு நிமிர்வுடன்,
‘இதுவரை நான் நினைத்தது நடக்கவில்லை.. என்ன நடந்தாலும் நான் ஏற்க தயார்.. ஆனால் என்னோட மகள் வாழ்க்கைக்கு எந்த தீங்கும் வராமல் நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும்..’ என்று மனதாரப் பிராத்தனை செய்தவள்,
பூஜை அறையை விட்டு வெளியே வர குளித்து முடித்து தயாராக இருந்தால் கயல்விழி..! அவலைப் பார்த்து புன்னகை செய்தவள்,
“என்ன கயல் எங்கே இவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறாய்..? இதுதான் நீ இரண்டு நாள் தங்கும் அழகா..?!” என்று புன்னகையோடு கேட்க, அவளை கண்களால் அளந்தாள் கயல்விழி..
மஞ்சள் வண்ண காட்டன் புடவையில் நேர்த்தியாக கட்டிக்கொண்டு தலைக்கு குளித்த படியால் தலையை பின்னல் இடாமல் ஒரு சின்ன கிளிப் மூலம் கொஞ்ச முடியை அடக்கியவள் கூந்தலை விரிய விட்டு முகத்தில் ஒரு போட்டு மட்டும் வைத்துக் கொண்டு இருந்தவளின் முகத்திற்கு அழகு சேர்த்து அவள் அணிந்திருந்த ஜிமிக்கியும், ஒற்றைக்கல் மூக்குத்தியும்..!
தனது தமக்கையின் அழகில், ‘ரோஹித் மாம்ஸ் எதுக்கு அக்காவை இன்னமும் சுற்றி வரீங்க என்று எனக்கு இப்பொழுதானே புரிகிறது.. இவள் போல அமைதியான அழகு யாருக்கு கிடைக்கும்..?’ என்று மனதில் நினைத்தவள் சிலையென நின்றிருந்தாள்..!
தங்கை தன்னைப் பார்த்து சிலை என்று நிற்பதைப் பார்த்து, “அம்மன் விக்ரகத்தை நாளை காலையில் கோவிலில் பிரதிஷ்டி செய்துவிடலாமா கயல்!” என்று தங்கையைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்டிச் சிரித்தாள் மதுமிதா..
அவளின் முகத்தில் இருந்த தெளிவும், அவளின் குறும்பு கண்சிமிட்டலும் கயல்விழியை உயிர்பிக்க, அவளின் அருகில் சென்று கட்டிக் கொண்டாள் கயல்விழி..
“என்னடி காலையில் ஒரே ட்ரிம்ல இருக்கிறாய்..? என்ன வீட்டில் திருமணம் ஏற்பாடு ஏதாவது நடக்கிறதா..?” என்று விளையாட்டாகக் கேட்டாள் மதுமிதா..
அவளிற்கு தெரியாமல் எத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறது என்று அவளிற்கே தெரியாது.. ஆனால் அவளின் கணிப்பு சரியாக இருந்தது..!
அவளிடமிருந்து விலகியவள் தலையைக் குனிந்துக் கொண்டு, “யெஸ் ஜீவா வீட்டில் இருந்து என்னை பெண் கேட்டு வந்திருக்காங்க அக்கா..” என்று சொன்ன தங்கையைப் பார்த்து சந்தோசம் அடைந்தவள்,
“ஐயோ என்னோட கயல்விழி பெரிய பொண்ணு ஆகிட்டா! அவளுக்கு கூட அடக்கம் என்றால் என்ன என்று தெரிகிறது..” என்று தங்கையைக் கிண்டல் செய்தாள் மதுமிதா..
“அக்கா..” என்று சிணுங்கியவளைப் பார்த்து அழகாக புன்னகை செய்தவள், “உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க..?” என்று கேட்டாள்.. அவள் கேட்டதின் அர்த்தம் கயல்விழி கவனிக்கவில்லை..
அவளோ,“அப்பா, அம்மா இருவரும் என்னிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி இருக்காங்க.” என்று சொன்னவளைப் பார்த்து மதுமிதா வெறுமையாக சிரிக்க அவளின் சிரிப்பில் முதலில் இருந்த உயிர்ப்பு இல்லை...
கயல்விழி அப்பொழுதுதான் கவனித்தால், ‘உன்னோட வீட்டில் என்ன சொன்னாங்க..’ என்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்து நிமிர்ந்து பார்த்தவள்,
“அக்கா நீயும் அந்த குடும்பத்தில் ஒருத்திதான்..” என்று அவள் சொல்ல, அவளைப் பார்த்து கசப்பான புன்னகை ஒன்றை உதிர்த்தாள் மதுமிதா..
“குடும்பத்தில் உண்மையான அர்த்தம் தெரியுமா கயல் உனக்கு..?” என்று கேட்டவள் தங்கையின் முகத்தை நோக்க, அவள் குழப்பத்தில் நின்றிருந்தாள்..
“நான் தப்பே செய்திருந்தாலும் ஒரு கட்டத்தில் என்னோட மகள், அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டாள் என்று நம்புவது தான், நம்பி ஏற்றுக்கொள்வதுதான் குடும்பம்..” என்று சொன்னவள்
“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று பழமொழி உண்டு! என்னோட வாழ்க்கையில் பிள்ளை மனம் தான் பித்து, பெத்த மனம் கல்லாகத் தான் இருக்கிறது..” என்றவள் கயலின் முகம் பார்த்து,
“அக்கா இப்படியே பேசிட்டு உன்னோட கல்யாணத்திற்கு வரமாட்டேன் என்று மட்டும் நினைக்காதே.. நான் வருவேன் என்னை என்ன பேசினாலும், திட்டினாலும், அவமானப்படுத்தினாலும் உன்னோட திருமணத்திற்கு நான் கண்டிப்பாக வருவேன்..” என்று சொல்லிக்கொண்டிருக்க
“நாங்கள் உள்ளே வரலாமா..?!” என்று கோரஸாகக் குரல் கேட்க, அக்கா, தங்கை இருவரும் வாசலைப் பார்க்க, ரஞ்சித், கீர்த்தி, ஜீவா மூவரும் வாசலில் நின்றிருந்தனர்..
“வாங்க..” என்று புன்னகையுடன் அழைத்தவள், மூவரும் உள்ளே வர, அவர்கள் உள்ளே வர அவர்களின் பின்னோடு வீட்டிற்குள் வந்தனர் காமாட்சி, சிவரத்தினம் இருவரும்...!
அதுவரை இருவரும் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மறந்தவளாக, “அப்பா, அம்மா உள்ளே வாங்க..” என்று மதுமிதா அழைக்க, ‘இவள் யாரைச் சொல்கிறாள்..?’ என்ற கேள்வியில் வாசலைப் பார்த்தவர்கள்,
“அவர்களைத் தாத்தா – பாட்டி என்று கூப்பிடனும்..” என்று கயல்விழி சிரிப்புடன் சொல்ல, “என்னம்மோ தெரியல கயல்விழி இவங்களை நான் அப்படி கூப்பிட எனக்கும் ஆசைதான்! ஆனால் என்னை முழுவதும் புரிந்து வைத்திருப்பதால் எனக்கு அப்பா, அம்மா என்றுதான் கூப்பிட வருகிறது..” என்று சொல்ல,
“இனிமேல் மாத்திக்கணும் மதுமிதா..” என்று கண்டிப்புடன் சொன்னார் காமாட்சி, மற்றவர்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்க,
“சரிம்மா நான் மாற்றிக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “திரும்பவும் அம்மாவா..?!” இவள் திருந்தவே மாட்டாள்..” என்று திட்டினாள் கயல்விழி..
“சரிங்க பாட்டி நான் இனிமேல் அப்படியே கூப்பிடுகிறேன் பாட்டிம்மா..” என்றவள், “எல்லோரு இருங்க நான்..” என்று திரும்பியவளை, “இல்ல மதுமிதா எதுவும் வேண்டாம்.. நாங்க மதுரை போகிறோம்..” என்று சொல்ல, அதுவரையில் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து, இருள் சூழ்ந்தது அவளின் முகத்தில்!
அவள் முகத்தை வைத்தே மனதை படித்தவர், “என்னோட மகளும், மருமகனும் துணியெடுக்க மதுரை வராங்க.. நாங்களும் சென்றால் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று போகிறோம்..” என்று சொன்னவர், “அபூர்வாவை எங்களோடு அனுப்பும்மா.. எங்களுக்கு அவளை விட்டுவிட்டு செல்ல மனமே இல்லை..” என்று கேட்கவும்,
“தாத்தா நீங்க இருவரும் இல்லை என்றால் அவளை என்னால் சமாளிக்கவே முடியாது! அதுவே நான் இல்லை என்றாலும் அபூவை நீங்க இருவரும் சமாளித்து விடுவீர்கள்..” என்று சொன்னவள்,
“அதுக்கு என்ன தாத்தா நீங்க தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்.. அவள் எழுந்ததும் கூப்பிட்டுட்டு போங்க..” என்று சந்தோசமாகச் சொன்னவள்,
அறைக்குள் செல்ல திரும்ப, “அம்மா..” என்று அழைத்தவண்ணம் எழுந்து வந்தாள் அபூர்வா..
“நீங்க பேசியது காதில் விழுந்து விட்டது போல..?” என்று சொன்னவள் சிரிக்க முயன்று தோற்றவளாக மகளைத் தயார் செய்ய, கயலில் அருகில் வந்த ஜீவா,
“அப்பா போன் செய்தார் கயல்.. நம் இருவரும் இங்கே வந்திருப்பது என்னோட சொந்தக்காரர் யாரோ பார்த்து அப்பாவிற்கு சொல்லிவிட்டார்.. அவரும், அம்மாவும் உன்னை பெண் கேட்டு உங்க வீட்டிற்கு போன போதுதான், அவங்களுக்கும் பத்திரிக்கை கொடுக்கபட்டது..” என்று விவரம் சொல்ல,
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஜீவா - கயல்விழி இருவரும் பேசுவதை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்த கீர்த்தியின் தலையில் நறுக்கென்று கொட்டினான் ரஞ்சித்..
அவன் கொட்டியதும், “ஸ்ஸ்ஸ்..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவள், “டேய் எதுக்குடா இப்படி கொட்டினாய்..?!” என்று கேட்டாள்..
“அவங்க இருவரும் பேசுவதைப் பார்த்து ஆஆ என்று பார்த்துக்கொண்டு இருக்கிறாய்..?” என்று கேட்டவனின் அருகில் குனிந்து,
“அது இல்ல ரஞ்சித் எங்க ஊரில் லவ் என்றதும் லிப் டூ லிப் கிஸ் அடிப்பதைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள்..” என்று சொன்னவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் ரஞ்சித்..
அவனது பார்வையின் பொருள் உணர்ந்த கீர்த்தி, “எனக்கு என்று ஒரு வரைமுறை வைத்து வளர்ந்தவள்..” என்ற வாக்கியத்தையும் சேர்த்துச் சொன்னாள்..
அவளின் முகத்தைப் பார்த்தவன், ‘நான் உன்னை விளக்கம் கேட்டேனா..?’ என்று விழிகளில் வினாவினான்..
‘நீ கேட்கவில்லை என்றாலும் சொல்வது என்னோட கடமை..’ என்று அவனுக்கு விழிகளால் பதில் கொடுத்தவள்,
“அங்கே இருக்கும் காதலுக்கு இங்கே இருக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்ன என்று பட்டியல் போட்டுக் கொண்டிருந்தேன்..” என்று அவள் சிரிக்காமல் சொல்ல,
“இப்பொழுது இந்த பட்டியல் ரொம்ப முக்கியம்..” என்று சொன்னவன் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டவன்,
“உன்னோட அமெரிக்கா குறும்பை எல்லாம் அங்கே வைத்துக்கொள் கீர்த்தி.. இங்கே வேண்டாம்..” என்று எச்சரிக்கைச் செய்தான் ரஞ்சித்..
“உன்னோட எச்சரிக்கையை நீயே வைத்துக்கொள்..” என்று அவனிடம் சொன்னவள், “ஐயோ எத்தனை வித்தியாசம் என்பதை மறந்துவிட்டேன்..” என்று அவள் தலையில் அடித்துக்கொள்ள சிரிப்பை அடக்க நினைத்தவன் சிரித்தே விட்டான்..
அவன் மனம் விட்டு சிரிப்பதை எதர்ச்சியாக பார்த்த மதுமிதா, “இவன் இப்படி சிரித்து பார்த்து எத்தனை நாள் ஆகிறது..” என்று வாய்விட்டு கூறியவள், அபூர்வாவை தயார் செய்தாள்..
“அம்மா நம்ம எங்கே போகிறோம்..?!” என்று கேட்டவளுக்கு,
“நீ தாத்தா, பாட்டி எல்லோரும் கோவிலுக்கு போறீங்க செல்லம்.. அம்மா மட்டும் வரமாட்டேன்.. நீங்க ரொம்ப நல்ல பிள்ளையாம்.. சேட்டை செய்யாமல், பாட்டி, தாத்தாவை தொந்தரவு செய்யாமல் அவங்களோடு போய்ட்டு வருவீங்களாம்..” என்று சொன்னாள்
“ம்ம் சரிங்க அம்மா..” என்று சொன்னவள், அன்னையின் கன்னத்தில் இதழ் பதிக்க மகளின் கன்னத்திலும் இதழ் பதித்தாள் மதுமிதா..
அவளை தயார் செய்வதற்குள் இங்கே சமையல் வேலை வெகுவிரைவாக நடந்தது.. ஜீவா, ரஞ்சித் இருவரும் காய்கறிகள் நறுக்க, கயல்விழி, கீர்த்தி இருவரும் சமையலறைக்குள் புகுந்தனர்..
ஜீவா வெங்காயத்தை கையில் வைத்துக் கொண்டு, “ரஞ்சித் இந்த வீட்டுப்பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்பவர்கள் கையில் வெங்காயத்தை கொடுத்தால் கதை கந்தல்..!” என்று சொல்லியபடியே கண்களை துடைத்துக்கொண்டு வெங்காயம் உரித்தான்..
“அதுதான் உன்னோட கையில் வெங்காயத்தை கொடுத்திருக்கிறாள் கயல்விழி..” என்று ரஞ்சித் சிரிப்புடன் சொன்னான்..
அவன் சொன்னதை உள்ளிருந்து கேட்டவள், “இஞ்சி அண்ணா நீங்க எப்படி சரியாக கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்டவள் வேலையைத் தொடர,
“அக்கா தங்கை இருவரும் மாப்பிள்ளை செலக்சன் இப்படித்தான் செய்வீங்க என்று தெரியும்..” என்று அவளுக்கு பதில் கொடுத்தவன்,
“ஜீவா என்ன கண்ணெல்லாம் கலங்குது..!” என்று சிரிப்புடன் கேட்டவனைப் பார்த்து முறைத்த ஜீவா,
“இந்த பொண்ணுங்களுக்கு இதுவே வேலையாக போய்விட்டது.. பசங்களை கண்கலங்க வைப்பதில் இவங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை..” என்று கண்களைப் பாவமாக துடைத்தான்.. அவன் செய்கை பார்த்து சிரித்தான் ரஞ்சித்,
“ஏய் என்ன நக்கலா..?” என்று உள்ளிருந்து கேட்டது கயலின் குரல்..
“பசங்களுக்கு பேச்சு உரிமையும் தடை செய்யப்படுகிறது ஜீவா..” என்று காய்களை நறுக்கியவண்ணம் கூறியவனை முறைத்தாள் கீர்த்தி..
அவன் அமைதியாக காயை நறுக்க, “என்ன ரஞ்சித் உங்களுக்கும் பேச்சு உரிமை போய்விட்டதா..?!” என்று நக்கலாகக் கேட்டான் ஜீவா..
“எல்லாம் என்னோட நேரம்!” என்று தலையில் அடித்துக் கொண்டான் ரஞ்சித்.. சமையல் வேலை முடிந்ததும் அபூர்வாவை அழைத்து வந்தவள்,
“அடப்பாவிகளா..?! என்னோட கிச்சனையும் ஆக்குபை பண்ணிட்டீங்களா..?” என்று கேட்டவள் அனைவரையும் அமரவைத்து பரிமாற, அனைவரும் சாப்பிட்டுவிட்டுப் பெரியவர்கள் மற்றும் அபூர்வா மூவரும் மதுரை செல்ல, சிறியவர்கள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லிவிட்டு ஒரு ஜோடி சென்னை செல்ல, ஒரு ஜோடி தஞ்சாவூர் சென்றது..!
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

ஏதோ பிளான் பண்ணி மதுவை மட்டும் விட்டு செல்வது போல இருக்குமா
இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமா தன் சொந்த பிள்ளையை நம்பாமல் கெளரவத்தையே மதிப்பவர்கள்.....
பாவம் மது
இனி மது தன் பெற்றவங்களை ஏற்றுக் கொள்வளா
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hi Sandhiya - I just finished reading all the updates. Very nice story.
Best wishes to you.
thanks sister for your wish & comment ;):)
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஏதோ பிளான் பண்ணி மதுவை மட்டும் விட்டு செல்வது போல இருக்குமா
இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமா தன் சொந்த பிள்ளையை நம்பாமல் கெளரவத்தையே மதிப்பவர்கள்.....
பாவம் மது
இனி மது தன் பெற்றவங்களை ஏற்றுக் கொள்வளா
theriya niranjana sister.. thanks for your comment
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top