• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 4
விமான நிலையத்தின் உள்ளே நுழைந்த கயல்விழி, அவளின் அன்னையின் பக்கம் திரும்பி, “அம்மா நீங்க கிளம்புங்க..” என்று அன்னையிடம் சொன்னவள்,
“அப்பா அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் டெல்லி போயிட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்..” என்று சொல்ல,
“பார்த்து பத்திரமாக இருக்க வேண்டும் உன்னோட மீட்டிங் நல்ல படியாக முடித்துக்கொண்டு நேராக வந்துவிடும்மா..” என்று அமுதா அவளிடம் சொல்ல,
“அமுதா அவள் ஒன்னும் சின்னப்பெண் கிடையாது.. அவளுக்கு எல்லாம் தெரியும்..” என்று மனைவிக்கு சொன்னவர்,
“கயல் கொஞ்சம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும்..” என்று சொல்ல சரி என்று மட்டுமே கயல் தலை ஆட்டினாள்..
ஆனால் அவளின் விழிகள் மற்ற ஒரு முக்கியமான நபரின் வரவை எதிர்பார்த்து விமான நிலையம் முழுவதிலும் வலம் வந்தது.. ஆனால் அவள் எதிர்ப்பார்த்த நபர் மட்டும் கண்ணிலே படவே இல்லை..
“சரிம்மா செக்கிங் முடிந்து பத்திரமாகப் போ.. டெல்லி போய்விட்டு மறக்காமல் எனக்கு போன் பண்ணும்மா..” என்று கயலிடம் சொன்னவர், மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற கயல் அந்த இடத்தை தனது பார்வையால் சலித்து எடுத்தாள்..
ஆனாலும் அவள் தேடலில் பலன் பூஜ்யமே..! அவள் இதுவரை அவளின் அக்காவிடம் சொல்லாமல் எந்த காரியமும் செய்ததே இல்லை.. ஆனால் இன்று தான் அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தாள்..
அவள் அங்கே இல்லை என்று அறிந்த மறுநொடி, தனது அலைபேசியை எடுத்தவள் மதுவிற்கு அழைத்தாள்.. ஆனால் அவளின் அக்கா அந்த அழைப்பை எடுக்கவே இல்லை..
‘நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.. தயவுசெய்து பிறகு முயற்சிக்கவும்..’ என்று அவளின் அழைப்பிற்கு பதில் வந்தது..
ஆனால் அதை ஒரு முயற்சியில் விட்டுவிட்டால் அவள் பெயர் கயல்விழி அல்லவே..! தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தாள்..
அவள் எந்த இடத்தில் நிற்கிறாள்.. அவளைச் சுற்றி என்ன நடக்கிறது..?! மற்றவர்கள் கண்ணிற்கு தான் ஒரு காட்சி பொருளாகப் படுகிறோம் என்ற கவலை எல்லாம் அவளுக்கு இல்லை..
அவளுக்கு இப்பொழுது தேவை அவளின் அக்கா மட்டுமே..! வெறி பிடித்தவள் போல அலைபேசியை அழைத்துக் கொண்டிருந்த கயல்விழியின் அருகில் வந்தான் ஜீவானந்தம் என்கிற ஜீவா
“கயல்..?!” என்று ஜீவா அழைக்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஜீவா அவளுக்கு என்மேல் என்னடா கோபம்..?! நான் அவளை முழுவதுமாகத் தானே புரிந்து வைத்திருக்கிறேன்..?!” என்று கண்களில் கண்ணீர் வழிய அவள் கேட்க,
அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன்,“கயல் என்ன கயல் இப்படி பண்ணுகிறாய்..? கண்ணை முதலில் துடை..” என்று அவன் கண்டிக்க,
“டேய் நானே என் அக்காவைப் பார்க்க முடியலை என்ற கடுப்பில் இருக்கிறேன்.. நீயும் வந்து அட்வைஸ் பண்ணாதே.. உன்னோட அட்வைஸ் கேட்க நான் தயாராக இல்லை..” என்று அவளின் மொத்தக் கோபத்தை அவனிடம் காட்ட,
‘நீயெல்லாம் ஒரு பொண்ணு என்று பேசவந்தேன் பாரு.. என்னை என் காலில் இருப்பதைக் கலட்டி நானே தலை தலையாய் அடித்துக் கொள்ள வேண்டும்..’ என்று மனதிற்குள் புலம்பினான் ஜீவா
“நீ வருகிறாயோ இல்லையோ இப்பொழுது பிளைட் கிளம்பிவிடும்..” என்று சொன்ன ஜீவா உள்ளே செல்ல தன்னுடைய வலது காலைக் குழந்தை போல உதறிக்கொண்ட கயல் அவனைப் பின்தொடர்ந்தாள்.. அவள் சிறிய பெண்போல பண்ணுவதைப் பார்த்து ஜீவாவிற்கு சிரிப்புதான் வந்தது..!
ஜீவா அவளுடன் வேலை செய்யும் கம்பெனியில் அவனும் அவளுடன்தான் பணிபுரிகிறான்.. இப்பொழுது கம்பெனி மீட்டிங் விஷயமாக இருவரும் செல்கின்றனர்..
ஜீவாவிற்கு கயல் என்றாலே ஒரு விருப்பம்.. எது பற்றியும் கவலை கிடையாது.. தான் நினைக்கும் ஒன்றை நொடியில் சாதிப்பவள் அதுவும் அடம் என்ற பெயரில்..!
அவளை ஏன் பிடித்தது..?! எதுக்கு பிடித்தது..?! என்ற கேள்விகளுக்கு அவனிடம் பதில் கிடையாது..
எப்பொழுதும் சிரித்தவண்ணம் இருப்பவள், அவளின் அக்கா மதுவை நினைத்தால் மட்டுமே அவளின் கண்களில் கண்ணீர் வரும்!
ஆனால் ஜீவா இன்னும் மதுவைப் பார்த்தே கிடையாது.. அவளின் பெயரைத் தவிர எதுவும் தெரியாது.. ஆனால் அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று மட்டும் ஜீவா அடிக்கடி நினைப்பது உண்டு.. காரணம் இந்த கயல்விழிதான்..
இப்படி சின்ன சின்ன விஷயத்தில் கயலை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் வழக்கமாக பயன்படுத்தும் வாக்கியம் தான், ‘எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு..’ என்பதேயாகும்!
அவளின் அக்கா திருமணத்திற்கு ஓகே சொன்னால் மட்டும் போதும் கயல்விழியைத் தூக்கிச் செல்லும் முயற்சியில் இருக்கிறான் ஜீவா..!
கயல்விழியை அனுப்பிவிட்டு வந்த அவளின் அன்னை அமுதாவிற்கு அவளின் மூத்த மகள் நினைவே வந்தது..
“ஒருத்தியை மதுரை அனுப்பி வைத்து அவள் செய்த காரியம் இன்னும் என்னோட மனதில் மாறாத ரணமாகவே இருக்கிறது.. இவள் இப்போ டெல்லி செல்கிறாள்..” என்று அமுதா ஆரமிக்கும் போதே,
அவரைத் தடுத்த சேகர், “அமுதா அவளைப் பற்றி பேசாதே.. அவள் செத்து போய் இரண்டு வருடம் ஆகிவிட்டது..” என்று உக்கிரமான கோபத்தில் சொன்னவர்,
தங்களின் காரை நோக்கிச் செல்ல கணவனின் கோபம் அறிந்த அமுதா அவரைப் பின்தொடர்ந்தார்.. தங்களின் காரில் ஏறி அமர்ந்த இருவரும், தங்களின் வீடு நோக்கிப் பயணம் செய்தனர்..
இங்கே இவர்களின் பயணம் எந்தவிதமான தடங்களும் இன்றி வீடு வந்து சேர, தஞ்சை வந்தவர்கள் பஸ் நிலையம் தாண்டி பிரிந்த மண் ரோட்டில் உள்ளே செல்ல, பசுமையான மரங்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்றது...
அதை வேடிக்கை பார்த்த வண்ணம் சுற்றி தெரிந்த விளைநிலங்களும் அந்த நெல் வயலுக்கு நடுவில் ஒற்றைக் காலில் நிற்கும் வெள்ளை நாரைகளும், காட்டு வேலை செய்யும் மனிதர்களையும் வேடிக்கைப் பார்க்க கீர்த்திக்கு மிகவும் பிடித்திருந்தது...
அந்த வீட்டை நோக்கி செல்ல வெளியே சுற்றியும் தோட்டம், உள்ளே செல்ல மண்வழிப்பாதை, அந்த வீட்டை சுற்றியும் இருந்த ஆறடி மதில் சுவர், உள்ளே சென்றதும் காரை நிறுத்த ஒரு இடம்! அந்த வீட்டின் முன்னே பலவகையான பூச்செடிகள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தது! காரில் இருந்து முன்னே இறங்கிய கல்யாணி, ஆரத்திக் கரைத்துவர உள்ளே செல்ல,
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வீடு வாசலில் நின்ற ரோஹித் தனது வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்க, “ஏய் ரோஹித் இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..” என்று கீர்த்தி சந்தோசமாகச் சொல்ல, காரை விட்டு இறங்கினாள்..
கார் வந்து நின்றதும் அங்கே கூடிய ஊர் மக்கள், கீர்த்தி அணிந்திருந்த ஜீன்ஸ், டாப் இரண்டையும் பார்த்துவிட்டு, “டேய் பெரியவன் தான் தாய் தகப்பனிடம் சொல்லாமல் திருமணம் செய்துக் கொண்டான்.. இவன் சொல்லாமலே வெளிநாட்டில் இருந்து பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துவிட்டான்..” என்று ஒருவர் சொல்ல,
அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி, “ரோஹித் அந்த பெருசை கம்முன்னு இருக்க சொல்லு.. நான் பேச ஆரமித்தால் அப்புறம் என்ன நடக்கும் என்று உனக்கே தெரியும்..” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கூறியவள், ரோஹித் அவர் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்து, அவன் கண்டுக் கொள்ளாமல் இருக்க,
“ஐயா பெரியவரே எனக்கு தமிழ் நல்ல பேசவும் தெரியும் எழுதவும் தெரியும்.. அதனால் நீங்க சொல்வது எனக்கு நல்ல புரியும்.. கொஞ்சம் நீங்க யோசித்துப் பேசுங்க..” என்று அவரைப் பார்த்து நக்கலாகக் கூறிய கீர்த்தி,
“ஒரு பொண்ணு உங்க ஊருக்கு வந்தால் இப்படித்தான் வரவேற்பு கிடைக்குமா..?! நல்ல வரவேற்பு..” என்று சொல்ல அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர்..
“கீர்த்தி கொஞ்சம் பேசாமல் இரு..!” என்று ரோஹித் அவளைக் கண்டிக்க, அவளோ அவனை முறைத்தாள்..
“டேய் மாணிக்கம் யாருடா இந்த பொண்ணு..?” என்று பெரியவர் கேட்க, “அவள் ரோஹித்தின் தோழி இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள்..” என்று மாணிக்கம் அவருக்கு விளக்கம் கொடுத்தார்.
அதற்குள் கல்யாணி ஆரத்தி தட்டுடன் வந்து மகனுக்கும், மகளுக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்
சரவணன் அவளின் கேள்வியையும் அவளின் துணிச்சலையும் கண்டு கொஞ்சம் பிரமித்து, ‘சரியான வாயாடி போல, போட்டால் பாரு ஒரே போடாகா! அம்மாடியோ இவளிடம் கொஞ்சம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும்..’ என்று மனதில் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்..
ரோஹித்துடன் கீர்த்தி வருகிறாள் என்று முதலிலேயே தெரிந்த காரணத்தால் மாடியில் அவளுக்கு என்று தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்திருந்தனர் ரோஹித்தின் பெற்றோர்..!
வீட்டிற்குள் நுழைந்த கீர்த்தி வீட்டை நுணுக்கமாக பார்க்க ஆரமித்தாள்.. அந்த வீட்டில் உள்ளே நுழைந்தவுடன் முதலில் சமையல் அறை, அதற்கு பக்கத்தில் டைனிங் ஹால், அதைக் கடந்து உள்ளே சென்றால் சாமி ரூம், அதற்கு பக்கத்தில் ஹால், ஹாலைத் தாண்டி மாணிக்கம், கல்யாணி இருவரின் படுக்கை அறை, பக்கத்திலேயே விருந்தினர் அறை இருந்தது
மேலே மாடியில் ரோஹித்தின் அறை, அதற்கு பக்கத்திலேயே புத்தகம் அடுக்க தனியாகவே ஒரு அறை.. மற்றும் இன்னும் இரண்டு மூன்று விருந்தினர் அறையும் இருந்தது..
கீர்த்தியின் பக்கம் திரும்பிய கல்யாணி, “நீ மேலே உள்ள விருந்தினர் அறையில் தாங்கிக்கொள் கீர்த்திம்மா..” என்று சொல்ல
“சரிம்மா..” என்று சொன்னவள் அவளின் உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்
“ரோஹித் நீயும் போய் குளித்துவிட்டு ரெஸ்ட் எடுப்பா..” என்று மாணிக்கம் சொல்ல, அவரின் முகத்தை ஒரு அழுத்தத்துடன் பார்த்தான் ரோஹித்
அப்பொழுதான் வீட்டின் உள்ளே நுழைந்த சரவணன், அவனின் பார்வைக்கண்டு அப்படியே நிற்க, “அப்பா அண்ணா எங்கே..? அவன் எங்கே இருக்கிறான்..?” என்று மெதுவாக ஆனால் அழுத்தமாகக் கேட்டான்
அவனின் கேள்வியில் அவனின் தந்தை மாணிக்கம், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்க, கல்யாணி கண்ணீர் வடித்தார்.. இந்த கேள்வியை இவனிடம் எதிர்பார்த்த சரவணனும் அமைதியாகவே இருந்தான்..
“அவன் இங்கே இல்லை ரோஹித்.. அவன் எங்களுக்கே தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டான்..” என்று அவர் கூற
“அப்பா அவனுக்கு தான் தன்னோட வாழ்க்கை முக்கியம் என்று திருமணம் செய்துக் கொண்டான்.. நீங்கள் ஏன் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை..?” என்று தந்தை நோக்கி அடுத்த கேள்வியைக் கேட்டான்
“நான் ஒன்றும் காதலுக்கு எதிரி கிடையாது ரோஹித்! அதை முதலில் நீ தெரிந்துக்கொள்.. அவன் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. அவன் எங்களிடம் சொல்லியிருந்தால் கண்டிப்பாக அந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்திருக்க மாட்டோமா..?” என்று ஆதங்கத்துடன் கேட்டார்..
அவரின் கேள்வியில் இருந்த நியாயம் அவனின் மனதிற்கும் புரிந்தது.. அவனின் மனம், ‘அவன் எந்த நேரத்தில் பின் விளைவைப் பற்றி யோசித்திருக்கிறான்..?’ என்றே கேட்டது
“சரிப்பா அவன் தப்பே செய்திருந்தாலும் இப்படித்தான் அவனை ஒதுக்கி வைப்பதா..? அவனை அழைத்துவர வேண்டியது தானே..?” என்று கேட்டான் ரோஹித்
“ஏன் அவன் இருக்கும் இடம் உனக்கு தெரிந்தால் அழைத்து வா.. நாங்கள் வேண்டாம் என்று சொல்லவே இல்லையே..” என்று கல்யாணி கணவனை முந்திக்கொண்டு மகனுக்கு பதில் கொடுத்தார்
இவர்களின் உரையாடலைக் கேட்ட சரவணன், ‘அவனை அழைத்துவர முடியாதே.. அவன் இந்த பூலோகம் விட்டு மேல் லோகம் சென்றே இரண்டு வருடம் ஆகிவிட்டதே..!’ என்று அவனின் மனம் ஊமையாக அழுதது
“சரிம்மா நான் அவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப்பிடித்து உங்களின் கையில் ஒப்படைக்கிறேன்..” என்று சொன்னவன் மாடியின் படிகளில் ஏறியவன்,
“அம்மா நான் தாத்தா – பாட்டி இருவரையும் சென்று பார்த்துவரவா..?” என்று கேட்டான்
“ம்ம் சரிப்பா.. அப்படி போகும் போது கீர்த்தியையும் உடன் அழைத்துச் செல்.. அவள் அங்கே இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்க்கட்டும்..” என்று சொல்ல
“ம்ம் சரிம்மா.. இரண்டு நாள் இங்கே இருக்கிறேன்.. அப்புறம் நான், கீர்த்தி இருவரும் குற்றாலம் செல்கிறோம்.. பாட்டி தாத்தாவிடம் சொல்லாதீங்க.. சப்ரைஸ் ஆக இருக்கட்டும்..” என்று சொல்லி புன்னகை சிந்தியவன் அவனின் அறைக்கு சென்றான்
மாணிக்கம் அவரின் வேலையைப் பார்க்க செல்ல, கல்யாணி சமைக்க சென்றார்.. சரவணன் யோசனையுடன் நின்றிருந்தான்..
அவனின் அறைக்குள் நுழைந்தவுடன், அந்த அறையில் இருந்த அவனின் அலைமாரியை திறந்து அதில் ஒரு போட்டோவை எடுத்தான்
அந்த போட்டோவில் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள் மதுமிதா.. அந்த போட்டோவை தனது நெஞ்சோடு வைத்து அணைத்துக் கொண்டவன்,
“இந்த உலகத்தில் எங்கே சென்றாலும் உன்னை நேசித்த இந்த நெஞ்சம் மட்டும் வேறு யாரையும் நேசிக்க விடுவதே இல்லை..” என்று சொன்னவன்,
“ஏழுவருடம் போராடி போராடி அந்த போராட்டத்தில் தோற்று திரும்பவும் வந்திருக்கிறேன்.. என்னைப் போலவே நீயும் எனக்காகவே காத்திருப்பாய் என்ற நம்பிக்கையில்..!”
“நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு நான் கொடுத்த தண்டனை காலம் முடிந்தது.. நான் உன்னை தேடி வருவேன்..” என்று சொல்ல அவனின் கண்கள் அவனின் கட்டுப்பாடுகளை மீறிக் கலங்கியது
அதேநேரம் வாசலில் நிழலாட, அங்கே திரும்பிப் பார்த்தான் ரோஹித், அங்கே சரவணன் நின்றுக்கொண்டு இருந்தான்
தனது கண்களில் இருந்த கண்ணீரை அவன் காணாமல் மறைத்தவன், “வா சரவணா..” என்று அழைத்தான்
“நான் வருவது இருக்கட்டும் கையில் என்னடா வைத்திருக்கிறாய்..?!” என்று கேட்டான் சரவணன்
“உன்னிடம் சொல்ல முடியாது சரவணா! நான் கண்டிப்பாக ஒருநாள் சொல்கிறேன் அதுவரை இந்த விஷயம் பற்றி என்னிடம் கேட்காதே..” என்று அவனுக்கு பதில் கொடுத்தான்
“சரிடா இங்கே என்னடா நடக்கிறது..? அண்ணனுக்கு திருமணம் நடந்தது உனக்கு தெரியுமா..? நீ மதுரையில் தானே இருந்தாய்..? நீ எப்பொழுது இங்கே வந்தாய்..? நீ காதலித்த சஞ்சனா எங்கே..?” என்று அவனிடம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்தான் ரோஹித்
“இந்த கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது ரோஹித்..” என்று சொன்னவன், ‘காலம் யாருக்கு எங்கே என்ன வைத்திருகிறது என்று யார் கண்டார்..?’ என்று மனதில் நினைத்தவன்
“நீ திரும்பவும் அமேரிக்கா போக போகிறாயா..?” என்று மட்டும் கேட்டான் சரவணன்
“இல்லடா நான் இங்கேதான் இருக்க போகிறேன்..” என்று சொன்னவன், “நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட உன்னிடம் பதில் இல்லை என்று நீ சொல்வது பொய் என்று எனக்கு நல்லாவே தெரியும் சரவணா.. நானே இதற்கு உண்டான பதில்களைக் கண்டுபிடிக்கிறேன்..” என்று கூறிய ரோஹித் குளிக்க சென்றான்
அவன் செல்வதற்கு முன்னால் அந்த போட்டோவை எடுத்து பத்திரமாக வைத்தான்..
 




banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
rohith anna death??madhu parents vitu thaniya iruka??saravan lover enga??sekiram next epi update panunga
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top