• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 06

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love:
bepannaah003.jpg
வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு வீட்டின் வாயிலில் நின்று ஷூவை கழட்டி கொண்டு நின்ற கணேஷ் திடீரென கேட்ட
"அம்மா...." என்ற அலறலில் கால்கள் தடுமாற தடாரென கீழே விழுந்தான்.


சமையலறைக்குள் இருந்து சத்தம் கேட்டு அவசரமாக ஓடி வந்த வித்யா கணேஷ் இருந்த கோலத்தைப் பார்த்து வாய் விட்டு சிரிக்க அவரை முறைத்து பார்த்து கொண்டே தட்டு தடுமாறி எழுந்து நின்றவன்
"பெத்த புள்ள கீழே விழுந்து கிடக்குறானேனு தூக்கி விடாம இப்படி சிரிக்குறியே என்னை பெத்த தெய்வமே......நல்லா சிரி....இது எல்லாத்துக்கும் காரணம் அவ தானே....எங்க அவ????" என்றவாறு கோபமாக காலை பிடித்து கொண்டு நொண்டிக் கொண்டே வீட்டினுள் நுழைந்த கணேஷ் சரோஜாவின் முன்னால் சென்று நின்றான்.


கண்களை இறுக மூடிக் கொண்டு கையில் இருந்த புத்தகத்தை தன்னோடு சேர்த்து அணைத்தவாறு சாய்வு நாற்காலியில் தூங்கி கொண்டிருந்தவளைப் பார்த்த கணேஷ் வித்யாவின் புறம் திரும்பி
"ஒண்ணு கனவு கண்டு அடுத்தவங்க மேல விழுந்து சாகடிக்குறா....இல்லேனா கனவு கண்டு சத்தம் போட்டு அடுத்தவங்கள விழ வச்சு சாகடிக்குறா....இதை இப்படியே விடக்கூடாது.....இவளை டாக்டர் கிட்ட காமிங்க....இல்லேனா..." என்றவன் அருகில் மேஜை மேல் இருந்த காஃபி டம்ளரை தூக்க


பதட்டத்துடன் அவனருகில் வந்த வித்யா
"டேய் காஃபி ரொம்ப சூடா இருக்குடா.....அவ ஏதோ தெரியாம இப்படி எல்லாம் பண்ணிட்டா....அதுக்காக சூடான காஃபியை கூடப் பிறந்த அக்கா மேல கொட்டுவியா????" என்று கேட்கவும்


அவரை விசித்திரமாக பார்த்த கணேஷ்
"நான் எப்போ அப்படி சொன்னேன்??? இந்த காஃபியை குடிச்சுட்டே என்ன பண்ணலாம்னு யோசிக்க வந்தேன்...." என்று கூற வித்யா தன் தலையில் அடித்துக் கொண்டார்.


"ஒரு வீட்ல ஒரு பிள்ளையாவது புத்திசாலித்தனமாக இருக்கும்னு பார்த்தா இங்க இரண்டும் இரண்டு ரகமாகலே இருக்கு....." என்று வித்யா கூறவும்


அவரை பார்த்து
"உஸ்ஸ்ஸ்ஸ்...சத்தம் போடாதே ம்மா.....உன் சீமந்த புத்திரிக்கு இரு வேட்டு வைக்குறேன்...." என்ற கணேஷ் சமையலறைக்குள் நுழைந்தான்.


"அவன் வர்றதுக்குள்ள இவளை எழுப்பிடணும்...." என நினைத்து கொண்ட வித்யா சரோஜாவின் அருகில் செல்ல போக


சமையலறைக்குள் இருந்து எட்டிப் பார்த்த கணேஷ்
"அம்மா....டென் ஸ்டப் பின்னாடி போ....அவளை என்கிட்ட இருந்து இன்னைக்கு யாராலயும் காப்பாற்ற முடியாது...." என்று கூற வித்யா சரோஜாவைப் பாவமாக பார்த்தார்.


"டேய்...அவ உன் அக்காடா....அவ வேணும்னு அப்படி பண்ணலடா.....கனவுல எதையோ பார்த்து பயந்துருக்கா.....முதல்ல அவளை எழுப்பலாம்.....அதற்கு அப்புறம் என்ன வேணா பண்ணிக்கலாம்.....பாவம் டா அவ......" என்று வித்யா கெஞ்சலாக கூறவும்


அவரை பார்த்து புன்னகத்து கொண்ட கணேஷ்
"இது ஜஸ்ட் பார் ஃபன் மா....டோன்ட் வொர்ரி....." என்றவாறே கையில் ஒரு பெரிய பக்கெட் ஒன்றை தூக்கி கொண்டு வந்தான்.


"என்னடா இது???" என வித்யா பதட்டமாக கேட்கவும்


அவரின் வாயை தன் ஒற்றை கையால் மூடிய கணேஷ்
"மெதுவாக பேசும்மா....அவ எந்திரிச்சுடப் போறா....எத்தனை நாள் என் தூக்கத்தை கெடுத்துருப்பா...அது தான் ஒரு சின்ன கிஃப்ட்.....அடிக்குற வெயிலுக்கு சும்மா கூலா இருக்குறதுக்காக பிரிட்ஜில் இருந்த எல்லா ஐஸையும் போட்டு உருவாக்குன கூல் வாட்டர்....." என்று கூற அதிர்ச்சியாக அவனைப் பார்த்த வித்யா கோபமாக அவன் கைகளை தட்டி விட்டார்.


"சொன்னா கேளு கணேஷ்....இதெல்லாம் சரி இல்ல...."


"சும்மா போம்மா.....இன்னைக்கு சரோஜா காலியாக போறா....." என்றவாறே தன் கையில் இருந்த பக்கெட்டை கணேஷ் தூக்கவும்


"அய்யோ....அம்மா....." என்றவாறு பதட்டத்துடன் சரோஜா எழும்பவும் சரியாக இருந்தது.


சரோஜா எழுந்த வேகத்தில் அவளது கை தட்டுப்பட்டு கணேஷின் கையில் இருந்த பக்கெட் அவனது பக்கமாகவே சரிய அதிலிருந்த ஒட்டுமொத்த நீரும் கணேஷின் மேல் கொட்டியது.


கணேஷைப் பார்த்து வித்யா சத்தமாக சிரிக்க தூக்க கலக்கத்தில் எழுந்து நின்ற சரோஜா முதலில் ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு கணேஷைைைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.


"நான் அப்போவே சொன்னேன் கேட்டியா??? இதற்கு தான் பெரியவங்க சொல்றத கேட்கணும்னு சொல்றது....." என்று விட்டு வித்யா பக்கெட்டை எடுத்து கொண்டு சென்று விட


சிரித்துக் கொண்டே கணேஷின் அருகில் வந்த சரோஜா
"என்ன தம்பி என்னாச்சு??? எனக்கு வைக்க வந்த ஆப்பு உனக்கு திரும்பிடுச்சா....நல்ல வேளை சரியான நேரத்தில் அஜய் வந்தாரு.....இல்லேனா இந்த தண்ணீர் அபிஷேகம் எனக்கு நடந்துருக்கும்.....தாங்க்ஸ் ஃபார் அஜய் ஸார்....." என்று கூற


அவளை புரியாமல் பார்த்த கணேஷ்
"அஜயா??? அது யாரு???" என்று கேட்டான்.


"அய்யய்யோ அவசரப்பட்டு உளறிட்டோமோ......" என்று தன் தலையில் தட்டி கொண்ட சரோஜா


"அஜயா??? அப்படினா யாரு???" எனக் கேட்டாள்.


"ஏய்.....ஒழுங்காக உண்மையை சொல்லிடு....இல்லேனா அம்மா கிட்ட சொல்லிடுவேன்....." என கணேஷ் மிரட்டலாக கூறவும்
வேகமாக அவனருகில் வந்து அவனது வாயை மூடிய சரோஜா அவனை அவளது அறைக்குள் இழுத்து சென்றாள்.


"டேய் ஸ்பீக்கர் வாயா..கொஞ்சம் அமைதியாக இருடா...அம்மா காதில் இது விழுந்தா அவ்வளவு தான்....அந்த
ஆளு தான் எனக்கு ஆக்சிடெண்ட்டும் பண்ணாருனு தெரிஞ்சா அம்மா அவங்களை சும்மா விட மாட்டாங்க....." என சரோஜா கூறவும்


தன் வாயின் மேல் இருந்த சரோஜாவின் கையை எடுத்து விட்ட கணேஷ்
"ஆக்சிடெண்ட் பண்ணதும் அந்த ஆள்னா வேற என்ன எல்லாம் பணணாரு ஆளு??? அந்த ஆளு ஏன் உன் கனவில் வரணும்??? என்ன நடக்குது இங்க???" என்று கேட்க தன் தலையில் கை வைத்து கொண்ட சரோஜா கணேஷைப் பரிதாபமாக பார்த்தாள்.


காலையில் அஜயைப் பார்த்தது, அவனிடம் பேசியது, அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது அவனிடம் கோபமாக பேசியது, அதன் பிறகு ராஜஷேகர் தன்னிடம் ஆக்சிடெண்ட் பற்றி கூறியது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சரோஜா கூறவும் அமைதியாக அவள் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த கணேஷ்
"ஏ.சி.பி னா தப்பு பண்ணா நீ தட்டி கேட்க மாட்டியா??? அந்த ஆளு ஆக்சிடெண்ட் பண்ணதால தானே அன்னைக்கு அவ்வளவு பிரச்சினை நடந்துச்சு....ஆக்சிடெண்ட் பண்ணது அந்த ஆளு தான்னு தெரிஞ்சதுமே அங்கேயே வச்சு அவங்களை லெப்ட் அன்ட் ரைட் வாங்காம பேசாமல் வந்திருக்க....உன் வாய் எல்லாம் என் கிட்டயும், அம்மா கிட்டயும் தானா???" என்று கேட்க சரோஜா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.


"அது சரி இன்னைக்கு அஜய் வந்து காப்பாற்றுனதா சொன்ன....அது என்ன புது கதை????" என கணேஷ் கேட்கவும்


சுற்றும் முற்றும் பார்த்த சரோஜா மெல்லிய குரலில் கணேஷின் காதில்
"இன்னைக்கு நான் கண்ட கனவுல என்னை வந்து அவர் காப்பாற்றுனாரு....." என்று கூற கணேஷ் அவளை விநோதமாக பார்த்தான்.


"நான் நடந்ததை சொல்லுறேன் கேளு.....நான் புக் படிச்சுட்டு இருக்கும் போது என் போனை தேடுனேனா அதை காணோம்....வீட்ல எங்க தேடியும் கிடைக்கல.....அப்போ தான் வர்ற வழியில் நான் ஸ்கூட்டரில் ஸிலிப் ஆகி விழுந்தது ஞாபகம் வந்துச்சா உடனே அங்கே போனேன்....அங்கே போய் பார்த்தா என் போன் அந்த பேய் பங்களா பக்கம் கிடந்துச்சு...சரின்னு தைரியமாக போய் என் போனை எடுத்துட்டு திரும்புறேன்.....எதிர்ல அஜய்....பயத்தில் அம்மானு கத்திட்டு மயக்கம் போட்டுட்டேன்.....
மயக்கம் தெளிஞ்சு பார்த்தா அந்த பங்களாவுக்கு உள்ள நான் இருக்கேன்....அந்த வீடு மொத்தமும் கல்யாண வீடு மாதிரி அலங்காரம் பண்ணி இருக்கு.....என்னடா நடக்குது இங்கனு யோசிச்சுட்டு திரும்புனா எனக்கு பக்கத்தில் அஜய் மாப்பிள்ளை கோலத்தில் இருக்காரு.....சுற்றி பார்த்தா எல்லோரும் கல்யாணத்துக்கு தயாராக இருக்காங்க....அப்போ அஜய் என் கழுத்தில் தாலி கட்டா வந்தாரா நான் சட்டுன்னு அவர் கையை தட்டி விட்டுட்டு எழுந்து நின்னு கண்ணைத் திறந்தேனா.....பக்கத்தில் நீ தண்ணீர்ல நனைஞ்ச காக்கா மாதிரி நின்ன....." என்று விட்டு சரோஜா சிரிக்கவும்


அவளது தலையில் தட்டிய கணேஷ்
"நான் உனக்கு காக்காவா???" என்று கேட்க சரோஜா தன் வாயை மூடிக்கொண்டு சிரித்த வண்ணம் ஆமென தலையாட்டினாள்.


"அதெல்லாம் இருக்கட்டும்...நிஜமாகவே இது கனவு தானா??? இல்லை உன் ஆழ் மனசுல இருக்குற ஆசைகளா???" என கணேஷ் கேட்க
சிரித்து கொண்டு நின்ற சரோஜா சட்டென்று தன் சிரிப்பு மறைய கோபமாக அவனை முறைத்து பார்த்தாள்.


"உன் கிட்ட போய் சொன்னேன் பாரு....கனவு கண்டா அது கனவாக போயிடும்....அதை பற்றி ஆராய கூடாது....வந்துட்டான் பெரிய சைண்டிஸ்ட் மாதிரி ஆராய்ச்சி பண்ணுறதுக்கு.....ஆழ் மனசு ஆழம் கெட்ட மனசுனு வசனம் பேசிகிட்டு....அந்த தண்ணீரை மொத்தமாக உன் தலையில் கொட்டி இருக்கணும்.....ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு....இன்னொரு வாட்டி இப்படி லூசு தனமாக உளறிட்டு வா உன்னை கவனிச்சுக்குறேன்.....ஆசையாம் ஆசை மண்ணாங்கட்டி...." என முணுமுணுத்துக் கொண்டே சரோஜா சென்று விட அவள் கண்ட கனவு பலிக்கும் நாள் அவளை நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை அவள் அந்த கணம் அறிந்திருக்கவில்லை.


ராஜஷேகர் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக கனகாவை அழைத்து அவர் முன்னால் அமரச் செய்து விட்டு காலையில் சரோஜாவுடன் அஜய் பேசி கொண்டு நின்றதைப் பார்த்ததைக் கூறவும் கனகா அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் அவரை பார்த்தார்.


"உண்மையாகவே அஜய் அந்த பொண்ணு கூட பேசிட்டு நின்னானா???" என்று கனகா சந்தேகமாக கேட்கவும்


அவரை பார்த்து சிரித்துக் கொண்ட ராஜஷேகர்
"நானும் நம்ம பையன் தானா இதுனு ஒரு செக்கன் ஷாக் ஆகிட்டேன்....சரி என்ன விஷயம்னு அவன் கிட்டயே கேட்டா வார்த்தைக்கு வார்த்தை சரோஜா சரோஜானே பேச்சு போகுது....அப்போ தான் புரிஞ்சது நம்ம பையனுக்கு லைட்டா சரோஜா மேல ஒரு எண்ணம் இருக்குதுனு....அதைப் பற்றி யோசிச்சுட்டு வரும் போது தான் தரகரும் போன் பண்ணாரு....சரோஜாவுக்கும் வரன் தான் பார்த்துட்டு இருக்காங்களாம்....அப்பா இல்ல....ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாராம்....அம்மாவும், தம்பியும் தான்.....தம்பி ஷாப்ட்வேர் எஞ்சினியர்....அப்புறம் அவங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் பொண்ணு கூட நல்ல தங்கமான பொண்ணுனு தரகர் சொன்னாரு.....நான் வீட்டுக்கு வந்து உன் கிட்ட பேசிட்டு சொல்றதா
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சொன்னேன்...." என்று கூற கனகா சந்தோஷமாக தன் கண்களை ஒரு முறை மூடி திறந்து கொண்டார்.


"எனக்கு என்னவோ இந்த சம்பந்தம் சரியாக அமையும்னு தோணுதுங்க....அஜய் வரட்டும் அவன் கிட்ட பேசிட்டு எப்போ பொண்ணு பார்க்க போகலாம்னு சொல்லலாம்...." என்று கனகா சொல்லவும் அஜய் வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.


"என்ன பலமான மாநாடு ஒண்ணு நடக்குது போல...." என அஜய் கேட்கவும்


அவனை பார்த்து புன்னகத்து கொண்ட கனகா
"எல்லாம் நல்ல விஷயம் தான் இல்லையாங்க???" என்று ராஜஷேகரைப் பார்த்து கேட்க அவரும் புன்னகையோடு ஆமென தலை அசைத்தார்.


"என்ன இரண்டு பேரும் சஸ்பெண்ஸாகவே பேசுறீங்க???" என்றவாறே அவர்கள் முன்னால் வந்து அமர்ந்த அஜயின் அருகில் வந்து அமர்ந்த கனகா


"உனக்கு ஒரு சர்ப்பரைஸ்.....உங்க அப்பாவே அது என்னனு சொல்லுவாரு....." என்று விட்டு ராஜஷேகரைப் பார்க்க
"நல்ல மாட்டி விட்ட போ...." என்ற ராஜஷேகர் அஜயை பார்த்து


"சரோஜாவைப் பற்றி நீ என்ன நினைக்குற???" என்று கேட்டார்.


"சரோஜாவா??? எந்த சரோஜா???" என்று குழப்பமாக அஜய் கேட்கவும்


அதிர்ச்சியாக அவனையும், ராஜஷேகரையும் பார்த்த கனகா
"என்னங்க இவன் இப்படி கேட்குறான்???" என தவிப்போடு வினவினார்.


"என்ன அஜய் விளையாடுறியா??? சரோஜா யாருனு உனக்கு தெரியாதா??? காலையில் கூட நீ அந்த பொண்ணு கூட பேசிட்டு இருந்தலே...." என்று ராஜஷேகர் கூறவும்


சிறிது நேரம் யோசித்து பார்த்த அஜய் ஞாபகம் வந்தவனாக
"ஓஹ்....உங்க ஆபீஸ் எம்ப்ளாயீ சரோஜாவா??? அந்த பொண்ண பற்றி என் கிட்ட எதுக்கு கேட்குறீங்க???? உங்க ஆபீஸ் எம்ப்ளாயீஸ் பற்றி உங்களுக்கு தெரியாதா???" என அஜய் கேட்க


கனகா
"சுத்தம்....." என்றவாறு தலையில் கை வைத்து கொண்டு இருந்தார்.


"அம்மா எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்ணுறாங்க??? அப்பா என்ன நடக்குது இங்க ஒழுங்காக சொல்லுங்க...." என்று அதட்டலாக கூறவும்


அவனை கோபமாக முறைத்து பார்த்த கனகா
"எதுக்குடா அவர் மேல பாயுற??? நான் தான் நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவும் அந்த பொண்ண பற்றி பேசிட்டு இருக்குறத கேட்டு அந்த பொண்ண பற்றி விசாரிக்க சொன்னேன்....அது மட்டுமில்லாம நீ இன்னைக்கு அந்த பொண்ணு கூட பேசிட்டு இருந்தத பற்றி உங்க அப்பா சொல்லவும் என் பையனுக்கும் மனசுல காதல் வந்துடுச்சோனு சந்தோஷமாக அந்த பொண்ண பார்க்க போறத பற்றி உன் கிட்ட பேசலாம்னு நினைச்சோம்.....ஆனா உன் பேச்சை பார்த்தா இந்த ஜென்மத்தில் உன் கல்யாணம் நடக்கும்னு எனக்கு தோணல...." என்று கூறவும் அஜய் அவர் கூறியதைக் கேட்டு வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்கினான்.


"இப்போ என்ன ஆச்சுனு இப்படி சிரிக்குற???" என்று ராஜஷேகர் கேட்கவும்


தன் சிரிப்பை சிரமப்பட்டு நிறுத்திய அஜய்
"அப்பா ஏன்பா இப்படி??? அய்யோ....அம்மா நீ கூட யோசிக்காம.....அந்த பொண்ணு தெரிஞ்ச பொண்ணுனு பேசுனா அதற்கிடையில் எவ்வளவு தூரம் யோசிச்சுட்டீங்க.....ஏன் அந்த சரோஜா இல்லேனா ஊரு, உலகத்தில் வேற பொண்ணே இல்லையா??? என்னவோ இந்த உலகத்தில் அவ மட்டும் தான் பொண்ணு மாதிரி பேசுறீங்க.....அம்மா நான் உன் கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன்.....நீங்க பார்க்குற பொண்ண தான் நான் கட்டிப்பேன்னு....அப்புறம் என்ன??? ஆனா ஒரு விஷயம் அந்த சரோஜா மட்டும் வேணாம்....பொண்ணா அது சரியான ரவுடி....அடாவடி.....அவளை தவிர வேற யார வேணா பாருங்க....சரியா???" என்று விட்டு சென்று விட ராஜஷேகரும், கனகாவும் அதிர்ச்சியாக நடந்து செல்லும் அஜயையே பார்த்து கொண்டு நின்றனர்.


"என்னங்க இது??? இந்த பையன் இப்படி சொல்லிட்டு போறான்??? அந்த பொண்ணு நல்ல பொண்ணுனு தானே சொன்னிங்க....." என்று கனகா கூற


"அது தான் எனக்கும் புரியல.....நல்லா தானே இரண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க....என்ன நடக்குதுனு எனக்குனா புரியல.....நீ எதையும் யோசிச்சு உன்னை கஷ்டப்படுத்திக்காதே....தரகர் கிட்ட சொல்லி வேற இடம் பார்க்கலாம்...." என்று ராஜஷேகர் கூற சரியென்று தலை அசைத்த கனகா தன் மீதமிருந்த வேலைகளை பார்க்க சென்றார்.


அறைக்குள் வந்த அஜய் கோபமாக தன் கையில் இருந்த தொப்பியை கட்டிலில் வீசி விட்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடக்க தொடங்கினான்.


"அந்த வாயாடியை என் தலையில் கட்டப் பார்க்குறாங்களா??? என்ன நினைச்சுட்டு இருக்காங்க இவங்க.....ஒரு பொண்ணு கூட கொஞ்ச நேரம் பேசுனா உடனே லவ் வந்துருமா??? ஊர்ல எந்த பொண்ணு மேல லவ் வந்தாலும் கடவுள் காப்பாற்றணும் அவ மேல மட்டும் லவ் வந்துடவே கூடாது....வந்துடவே கூடாது என்ன வரவே வராது....சரோஜாவாம் சரோஜா சரியான சவுண்ட் சரோஜா....சவுண்ட் சரோஜானாலும் கொஞ்சம் நல்லா பேசுவாங்க....யப்பா சாமி என்ன வாய் அவளுக்கு???? அவளை கட்டிக்கப் போறவன் உண்மையிலேயே தியாகி தான்....என்ன பார்க்க நல்லா இருக்கா....பேசுனா கேட்டுட்டு இருக்கலாம்....ஆனா அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்குறதா?? நோ நெவர்......" என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்ட அஜய் டவலோடு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.


அந்த பரிதாபத்திற்குரிய தியாகி தான் தான் என்பதை அறியாமல் சந்தோஷமாக அஜய் குளித்து கொண்டு இருக்க மறுபுறம் சரோஜா ஆழ்ந்து உறங்கிக்
கொண்டிருந்தாள்.


அடுத்த நாள் காலை மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் மப்பும் மந்தாரமுமாக விடிந்தது.
வீட்டு வேலைகள் செய்வதில் கனகா ஈடுபட்டு கொண்டிருந்தாலும் ஏனோ அவர் மனது ஒரு நிலையில் இல்லை.


ஜாக்கிங் முடித்து விட்டு வீட்டினுள் ராஜஷேகரும், அஜயும் நுழைவதை பார்த்ததும் உடனே தன் சிந்தனைகளில் இருந்து வெளி வந்த கனகா சிறிது நேரத்தில் சுடச்சுட காஃபி எடுத்துக் கொண்டு வந்தார்.


தன் தாயின் முக வாட்டத்தைப் பார்த்து கவலை கொண்ட அஜய் தன் கையில் இருந்த காஃபி கப்பை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு கனகாவின் கை பிடித்து தன் அருகில் அமரச் செய்தான்.


"அஜய் என்னடா பண்ணுற??? எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு...." என்று கனகா கூற


அவர் கைகளை எடுத்து மெதுவாக வருடிக் கொடுத்தவன்
"அம்மா....உன் மனசுல என்ன ஓடிட்டு இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்....இப்போ என்ன நான் அந்த சரோஜாவை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படி தானே....சரி பண்ணிக்குறேன் போதுமா???" என்று கேட்க


அவசரமாக இல்லை என தலை அசைத்த கனகா
"நான் அப்படி எதுவும் சொல்லல அஜய்....அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அவ்வளவு தான்....இது உன் வாழ்க்கை....யாரு உனக்கு வாழ்க்கை முழுவதும் கூட வந்தா சரியாக இருக்கும்னு உனக்கு தோணுதோ அவங்கள தான் நீ தெரிவு செய்யணும்....அதை விட்டுட்டு இப்படி லூசு தனமாக பேசாம போய் ஸ்டேஷனுக்கு போக ரெடி ஆகு...." என்று விட்டு எழும்ப போக அவரை எழும்ப விடாமல் மீண்டும் அஜய் மீண்டும் அமரச் செய்தான்.


"நான் நைட் பூரா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்துருக்கேன்மா....நம்ம பர்ஸ்ட் போய் அந்த பொண்ண பார்க்கலாம்....எல்லாம் சரி வந்தா மேல பேசலாம் சரியா???" என அஜய் கேட்கவும்


கண்கள் கலங்க அவனைப் பார்த்து புன்னகத்த கனகா
"நிஜமாக தான் சொல்லுறியா அஜய்???" என்று கேட்டார்.


"காட் பிராமிஸ்....நீங்க அவங்க வீட்டுக்கு நாளைக்கு ஈவ்னிங் வர்றதா இன்பார்ம் பண்ணுங்க.....இப்போ சந்தோஷமாக சிரிச்சுட்டே வேலையை பாருங்க....." என்று விட்டு அஜய் சென்று விட கனகா புன்னகையோடு ராஜஷேகரைப் பார்த்து சிரித்து விட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றார்.


ராஜஷேகரோ யோசனையோடு வேலைக்கு செல்வதற்காக தயாராகி வந்த அஜயை பார்த்து கொண்டு இருக்க அஜய் அவரைப் பார்த்து
"என்னப்பா யோசனை???" என்று கேட்டான்.


"ஆஹ்....அது...ஒண்ணும் இல்ல....அது....அஜய்....உண்மையாகவே உன் முழு மனசோட தான் அந்த பொண்ண பார்க்க சம்மதிச்சியா???" என ராஜஷேகர் கேட்கவும்


அதிர்ச்சியான தன் முகத்தை உடனே சரி செய்து கொண்ட அஜய்
"என்னப்பா இப்படி கேட்குறீங்க??? எனக்கு பரிபூரண சம்மதம்...." என்று கூற


"அப்படியா???" என ஆச்சரியமாக கேட்டார் ராஜஷேகர்.


"அய்யோ அப்பா நான் உண்மையை தான் சொல்லுறேன்....நீங்க நம்புனா நம்புங்க.....அப்புறம் எனக்கு லேட் ஆச்சு....நான் வரேன்....அம்மா நான் போயிட்டு வரேன்...." என்றவன் சிறு நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட


"அஜய் சாப்பிட்டு போடா....." என்ற கனகாவின் அழைப்பு காற்றோடு கரைந்து போனது.


"என்ன தான் அவசரமோ......" என்று விட்டு கனகா சென்று விட ராஜஷேகர் புருவங்கள் முடிச்சிட யோசனையோடு அஜயையே பார்த்து கொண்டு நின்றார்.......
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
சரோஜா கணேஷ் சேட்டைய பார்த்து வயிறு வலி வர அளவுக்கு சிரிச்சா ஆச்சு.
சரோஜாவை திட்டிக் கொண்டே நல்லா வர்ணிக்கிற ஒரே ஆல் அஜய் யா தான் இருக்கும்.
அது எப்படி மேரேஜுக்கு சம்மதம் சொன்னன் நைட்ல அப்படி என்ன நடந்திருக்கும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top